Tag: Vijay

  • ஏங்க வெங்கட் பிரபுக்கு இந்த பழக்கமே இல்ல!… அப்புறம் எப்படி? கோட்டும் காப்பி தான்!

    Venkat Prabhu: பலநாட்களாக வெங்கட் பிரபு ஆசைப்பட்ட வாய்ப்பு தான் கோட். விஜய் நடிக்கும் இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. ஆனால் இந்த படம் ஜெமினி மேன் படத்தின் காப்பி தான் என சுத்திக்கொண்டு இருக்கும் சர்ச்சைக்கு திரை விமர்சகர் பிஸ்மி பதில் அளித்துள்ளார்.

    லியோ படத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் தான் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தினை வெங்கட் பிரபு சயின்ஸ் பிக்‌ஷன் படமாக எடுக்கிறார். விஜய் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். சினேகா, லைலா, பிரசாந்த், பிரபு தேவா என முன்னணி நட்சத்திர கூட்டம்.

    இதையும் படிங்க: திடீரென தனுஷ் படத்தை இயக்க இதான் காரணமாம்!.. அடங்க… நீங்க வெவரம் தானுங்கோ!

    மைக் மோகன், எஸ்.ஜே.சூர்யா என வலுவான வில்லன்கள் இருப்பதால் இப்படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இப்படம் ஹாலிவுட்டில் வில் ஸ்மித் நடித்த ஜெமினிமேன் படம் தான் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கட் பிரபுவிடம் கேட்ட போது பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என நக்கலடித்தார்.

    தற்போது இதுகுறித்து பேசி இருக்கும் பிஸ்மி, பொதுவாக புக் படிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் திறனே இருக்காது. அப்போ புக் படிக்காத வெங்கட் பிரபு தனியாக சிந்தித்து எடுப்பாரா? வெளிநாட்டு படங்களை பார்த்து அதன் இன்ஸ்பிரேஷனில் தான் படத்தினை எடுப்பார்.

    இதையும் படிங்க: பிரேமலதாதான் பொண்ணு!. ஜோசியத்தை வச்சி கேப்டனை நம்ப வச்ச குடும்பத்தினர்…

    மாநாடு படமே எ டே என்ற படத்தின் காப்பி தான். கிட்டதட்ட கோட்டும் நம்ம கல்சருக்கு ஏற்ற போல மாற்றி எடுக்கப்படும். முயற்சி வித்தியாசமாக இருந்தாலும் கூட அது சொந்த கதையாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். காப்பி அடித்து எடுத்தால் நல்லா இருக்காது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

  • விஜயகாந்தை பார்க்க அனுமதி கேட்டாரா விஜய்?.. சண்டைக்கு நிற்கும் இருதரப்பு!… உண்மை என்ன தெரியுமா?

    Vijay vs Vijayakanth: கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு வந்த விஜய் மீது செருப்பை வீசி துரோகி என முழக்கமிட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த பிரச்னை குறித்து தற்போது மேலும் சில தகவல்களும் வெளியாகி இருக்கிறது. அதுகுறித்து பிரபல திரை விமர்சகர் பிஸ்மி தெரிவித்து இருக்கிறார்.

    விஜயை வளர்த்து விட்டது கண்டிப்பாக கேப்டன் விஜயகாந்த் தான். அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது விஜய நேராக பார்க்கவே இல்லை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அப்போ விஜய் தரப்பில் இருந்து வந்த தகவலின்படி நாங்க அவரை பார்க்க நேரம் கேட்டோம்.

    இதையும் படிங்க: புலமைப்பித்தன் போட்ட வார்த்தையை மாற்ற வைத்த எம்ஜிஆர்… என்ன நடந்ததுன்னு தெரியுமா?

    ஆனால் எங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவே இல்லை என்றனர். தற்போது விஜயகாந்தின் மேனேஜர் என ஒருவர் அளித்துள்ள பேட்டியில் விஜயகாந்தை பார்க்க விஜய் அனுமதி கேட்கவே இல்லை எனக் கூறி இருந்தார். விஜயகாந்த் 10 வருடமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவருக்கு மேனேஜரா?

    சரி விஜய் தரப்பு சொன்னதை பார்ப்பதற்கு முன்னர், எஸ்.ஏ.சி விஜயகாந்துக்கு கொடுத்த இரங்கல் பதிவில் கூட விஜியை பார்க்க இரண்டு வருடமாக கேட்டு வருகிறேன். எனக்கு அனுமதியே தரப்படவில்லை என்றார். விஜய்காந்தின் நெருங்கிய நண்பர்களான ராதாரவி, வாகை சந்திரசேகர் கூட இதை சொல்லி இருக்கின்றனர்.

    இதையும் படிங்க: அயலானுக்கு பேட்டி வேணுமா? அப்போ இந்த கண்டிஷன் கன்பார்ம்.. சிவகார்த்திகேயனின் தில்லாலங்கடி!

    அப்படி பார்க்கும் போது விஜய் தரப்பு சொல்வது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் இப்போது ஏன் மாற்றி பேசுகிறார்கள் எனத் தெரியவே இல்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பிரச்னை ஒருபுறமிருக்க மற்ற நடிகர்களை போல இல்லாமல் அவர் நேராக வந்தார். வந்து தன்னுடைய அஞ்சலியை செலுத்தியவருக்கு இப்படி ஒரு அவமரியாதை செய்தது நியாயமா?

    நடிகர் சங்கம் செய்யும் இரங்கல் நிகழ்வுக்கு விஜய் இதனால் வருவது சிக்கல் ஆகுமா என பல கேள்விகள் எழுந்து இருக்கிறது. ஆனாலும் கூட விஜயின் கோட் ஷூட்டிங் இந்த மாதம் சென்னையில் நடக்க இருக்கிறது. அதனால் விஜயகாந்தின் இரங்கல் நிகழ்வில் கண்டிப்பாக விஜய் பங்கேற்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

  • பழைய குப்பைகளை கிளறும் விஜய், ரஜினி ரசிகர்கள்.. ஜகபதி பாபு சொன்ன கீர்த்தி சுரேஷ் மேட்டர் வைரல்!..

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என வலம் வரும் ரஜினிகாந்த், விஜய், அஜித் பற்றிய வீடியோக்களை அவர்களது ரசிகர்களே தோன்றி எடுத்து எந்தளவுக்கு குப்பையை கிளறி டேமேஜ் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு டோட்டல் டேமேஜ் செய்து வருகின்றனர்.

    இளைஞர்களிடம் சோஷியல் மீடியா கிடைத்தால் அதை வைத்து உருப்படியான விஷயத்தை செய்து சம்பாதிப்பது எப்படி என்பதை சிலர் யோசித்து செய்து வரும் நிலையில், பலர் தங்கள் நேரத்தை காவு கொடுத்து எக்ஸ் தளம் சம்பாதிக்கவும் நடிகர்கள் பாக்ஸ் ஆபிஸில் மொக்கை படங்களை கொடுத்து வசூல் சக்கரவரத்தி பட்டம் வாங்கவுமே பயன்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: ‘பெரியண்ணா’ படத்தில் சூர்யாவுக்கு பதில் கேப்டன் சிபாரிசு செய்த நடிகர் யார் தெரியுமா? அட இவரா?

    துபாயில் அஜித் டான்ஸ் ஆடும் வீடியோவை ஷேர் செய்து கேப்டன் விஜயகாந்துக்கு ஒரு இரங்கல் கூட தெரியவில்லை எப்படி ஆட்டம் போடுறாரு என விஜய் ரசிகர்கள் வெறுப்பேற்ற கீர்த்தி சுரேஷ் ஆடியோவை வெளியிட்டு விஜய்யை அஜித் ரசிகர்கள் அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

    விஜய் வீடியோக்களை ரஜினி ரசிகர்களும் ஷேர் செய்து வரும் நிலையில், பதிலுக்கு விஜய் ரசிகர்கள் அண்ணாத்த படத்தின் போது ஜகபதி பாபு அளித்த பேட்டியில் ஒரு சின்ன க்ளிப்பிங்கை கட் செய்து ரஜினியை டேமேஜ் செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: கல்லை தண்ணில போடலாமா? மீனு செத்துருமே… இதற்கா வரி விலக்கு மறுப்பாங்க… அதுவும் பிரபல நடிகருக்கு!..

    சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா மற்றும் ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் அண்ணாத்த. ஆனால், அந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக மாறியது.

    அந்த படத்தின் ரிலீஸ் சமயத்தில் ஜகபதி பாபு அளித்த பேட்டியில், கீர்த்தி சுரேஷை நான் தங்கையாகத் தான் நினைத்து பழகி வருகிறேன். அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது ரஜினி ஒரு முறை இவர் பொம்பளைங்க விஷயத்துல வீக், இவர் கிட்ட பேசாதன்னு சொன்னார். சரிங்க ரஜினி எனக்கு உங்களை பத்தி எல்லாம் தெரியும். நானும் சொல்லட்டா என கேட்க, அவர் அய்யய்யோ வேண்டாம் என சிரித்துவிட்டு போனார் என ரஜினிகாந்த் பம்மிய மேட்டரை எப்படி சொல்லியிருக்காரு பாருங்க ஜகபதி பாபு என விஜய் ரசிகர்கள் கேவலமான ஹாஷ்டேக்குகளை எல்லாம் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

     

  • அது மட்டும் நடந்தா செம ஃபயரா இருக்குமே!.. The GOAT படத்தில் யுவன் சங்கர் ராஜா செய்யப் போகும் சம்பவம்!..

    தளபதி 68 படத்துக்கு The Greatest of All Time என முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே வெங்கட் பிரபு டைட்டில் வைத்துள்ளார். இந்த படத்துக்கு ஹாலிவுட் பாடகர்களை வைத்து யுவன் சங்கர் ராஜா பாடல்களை உருவாக்குவார் என்று பார்த்தால், அதற்கும் மேல் ஒரு சம்பவத்தை பண்ணப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாக்‌ஷி சவுத்ரி, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய்யின் யங் மற்றும் ஓல்டர் வெர்ஷன் எப்படி இருக்கும் என ஃபர்ஸ்ட் லுக் மூலம் தெரிந்து விட்டது.

    இதையும் படிங்க: பிரியங்கா மோகனோட அந்த 20 நிமிஷ ஃபூட்டேஜை காணோம்!.. கதறி அழும் படக்குழு.. கடைசி நேரத்தில் என்ன ஆச்சு?

    ஆனால், மற்ற நடிகர்கள் தோற்றம், என்ன மாதிரியான லுக்கில் நடிக்கப் போறாங்க என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் நடிகர் விஜய்யையும் இளையராஜாவையும் ஒன்றாக இணைந்து பாட வைத்து தூள் கிளப்ப உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே முதல் பாடல் ஷூட் செய்யப்பட்டு முடிந்த நிலையில், அந்த பாடலுக்குத்தான் இருவரும் இணைந்து பாடியுள்ளார்களா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் தற்போது அதிகளவில் எழுப்பி வருகின்றனர்.

    இதையும் படிங்க: அஜித் படத்தில் கமல் செய்த உதவி! அதான் வொர்க் அவுட் ஆயிருக்கு – ஆண்டவர் செஞ்ச மாயம்தானா அது?

    லியோ படத்திலேயே வித்தியாசமான விஜய்யை பார்த்த ரசிகர்கள் இனிமேல் வரப்போகும் படங்களில் எல்லாம் மாறுபட்ட விஜய்யைத் தான் காணப் போகின்றனர் என்பது கன்ஃபார்ம் ஆகி விட்டது.

    தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என டைட்டில் வைத்துள்ள நிலையில், இசைத்துறையின் GOAT இளையாராஜா பாடல் இல்லாமல் இருந்தால் எப்படி என வெங்கட் பிரபு தனது பெரியப்பாவையும் களமிறக்கி உள்ளார் என்றும் கூறுகின்றனர்.

  • இதுவும் திருட்டு ஆடு தானா!.. ஓடிடியில் இருந்து உருவிட்டாராம் வெங்கட் பிரபு!.. விஜய் படம் இவரோட கதையா?

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 68வது படத்துக்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழில் போஸ்டர் கூட வெளியாகாமல் ஒன்லி இங்கிலீஷ் கார துரை போல விஜய் படத்துக்கு The Greatest of All Time என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவை சேர்ந்த சரியான திருட்டு கேடியின் கதை தான் இந்தப் படமே என புதுசாக போஸ்டரை பார்த்தே உருட்ட ஆரம்பித்து விட்டனர்.

    1971ம் ஆண்டு விமானத்தை கடத்தி அமெரிக்காவிடம் பல கோடி பணத்தை வாங்கிக் கொண்டு பயணிகளை விடுவித்து விட்டு மீண்டும் விமானத்தை பறக்கச் சொல்லி பாராசூட்டில் கட்டிக் கொண்டு கொள்ளையடித்து மாயமான டி.பி. கூப்பர் என்பவரின் கதையைத் தான் விஜய்யை வைத்து வெங்கட் பிரபு கிண்டிக் கொண்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எஃப்.பி.ஐ அதிகாரிகளுக்கே கடைசி வரை தண்ணிக் காட்டிய கூப்பர் இது வரை என்ன ஆனார் என்றும் அவர் கொள்ளையடித்த பணம் என்ன ஆனதும் என்றும் தெரியவே இல்லையாம்.

    இதையும் படிங்க:என்னம்மா ஒன் சைடு காத்து வாங்குது!.. ரெடின் கிங்ஸ்லியுடன் செம ரொமான்ஸ்.. சங்கீதாவை பார்த்தீங்களா!..

    ஆஜித்துக்கு கிண்டிய மங்காத்தா படம் போல ஒரு படமும் சிம்புவுக்கு பண்ண மாநாடு படம் போல ஒரு படமும் கேட்ட விஜய்க்கும் இரண்டு படங்களையும் மிக்ஸ் செய்த மாதிரி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இடம்பெற்றுள்ள ஐ எம் கூப்பர் ஆவணப்படத்தில் இருந்து ஆட்டையைப் போட்டு வெங்கட் பிரபு இந்த படத்தை பண்ணி வருவதாக கூறுகின்றனர்.

    அதெல்லாம் இல்லைங்க இது கன்ஃபார்மா வில் ஸ்மித் ஜீனை வைத்து அவருக்கு எதிராக உருவாக்கப்பட்ட எதிரி அவருடைய யங் வெர்ஷனான இன்னொரு வில் ஸ்மித் என டபுள் ஆக்‌ஷனில் நடித்திருக்கும் ஜெமினி மேன் தான் என இன்னொரு உருட்டையும் உருட்டி வருகின்றனர். கோட் டைட்டில் லீக்கானதை போலவும் லியோ ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படம் தான் என ஏற்கனவே கசிந்தது போல இந்த படத்தின் உண்மை கதையும் விரைவில் வெளியாகி விடும்.

    இதையும் படிங்க: அழ ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்!.. புத்தாண்டுக்கு ஒரு அப்டேட் கூட இல்லையே.. ரொம்ப பாவம்ப்பா!..

  • அழ ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்!.. புத்தாண்டுக்கு ஒரு அப்டேட் கூட இல்லையே.. ரொம்ப பாவம்ப்பா!..

    விஜயகாந்த் மறைவு காரணமாக புத்தாண்டுக்கு விஜய்யின் 68வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வராது என்றெல்லாம் நினைத்துக் கொண்டு விஜய் ரசிகர்களே நெல்லையில் தளபதியை பார்த்ததே நியூ இயர் ட்ரீட் தான் என கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் கேட்காமலே அவர்களை சந்தோஷப்படுத்த ஷார்ப்பா 6 மணிக்கே கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.

    வெறும் GOAT என டைட்டில் டிசைன் செய்தால் கிண்டல் அதிகளவில் இருக்கும் என நினைத்த படக்குழுவினர் முழு அர்த்தத்தையும் டைட்டிலில் வைத்து விட்டனர். The Greatest of All Time என டைட்டில் வைக்கப்பட்ட அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களை புத்தாண்டை கொண்டாடி வரும் நிலையில்,  அஜித் ரசிகர்கள் பாவம் #WeNeedVidaaMuyarchiUpdate டிரெண்ட் செய்து அழுது கொண்டிருக்கின்றனர் என விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: மஞ்சத்தண்ணிய ஊத்துங்கடா!.. அருவாளுடன் ரெடியான வெங்கட் பிரபு.. ஆடு ஓடுமா? புளூ சட்டை சேட்டை!..

    ஜெயிலர், லியோ, கோட் என முன்னணி நடிகர்கள் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் அஜித் தொடர்ந்து வெளிநாட்டில் ஷூட்டிங் செய்தாலும் தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் காரணமாக வலிமை, துணிவு, விடாமுயற்சி என தமிழில் தலைப்பு வைத்து வருகின்றார் என அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் மனதை தேற்றிக் கொண்டாலும் ரசிகர்கள் கொண்டாட ஒரு சின்ன அப்டேட்டையாவது இயக்குநர் மகிழ் திருமேனி அல்லது தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டால் ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள்.

    அட்லீஸ்ட் அந்த ஆன்போர்ட் அறிவிப்பையாவது வெளியிடலாமே என ஏற்கனவே லீக்கான திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜுன், ஆரவ் அப்டேட்டையாவது அதிகாரப்பூர்வமாக கேட்டு வருகின்றனர். ஆனால், துணிவு போல வெறித்தனமான ஒரு படத்தை அஜித் தனது ரசிகர்களுக்காக அதிரடியாக உருவாக்கி வருகிறார். பொங்கலுக்கு ஃபர்ஸ்ட் லுக் வர வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

    இதையும் படிங்க: சிக்கலில் இருந்து தப்பிக்க மாற்றி அமைக்கப்பட்ட எம்ஜிஆரின் சூப்பர்ஹிட் பாடல்… என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?

  • மஞ்சத்தண்ணிய ஊத்துங்கடா!.. அருவாளுடன் ரெடியான வெங்கட் பிரபு.. ஆடு ஓடுமா? புளூ சட்டை சேட்டை!..

    நடிகர் விஜய் டபுள் ஆக்‌ஷனில் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்கிற டைட்டிலை வெங்கட் பிரபு வைத்து தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். வாரிசு ஃபர்ஸ்ட் லுக், லியோ ஃபர்ஸ்ட் லுக் எல்லாம் வெளியாகும் போது வெறித்தனமாக இருந்தது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தாலே ஒரு வித மரண பீதி ஏற்படுகிறதே ஏன் தெரியலையே என ரசிகர்களே ஹைப் ஆகாத என அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளனர்.

    மங்காத்தா படத்தை அஜித்துக்கு கொடுத்த வெங்கட் பிரபு, மாநாடு படத்தின் மூலம் சிம்புவுக்கு கம்பேக் கொடுத்திருந்தார். இந்நிலையில் அடுத்து விஜய்யை இயக்கி வரும் வெங்கட் பிரபு A Venkat Prabhu Hero என்று குறிப்பிட்டுள்ள நிலையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் சுருக்கமாக ஆல்ரெடி லீக்கான GOAT டைட்டிலைத் தான் வைத்துள்ளார்.

    இதையும் படிங்க: சிக்கலில் இருந்து தப்பிக்க மாற்றி அமைக்கப்பட்ட எம்ஜிஆரின் சூப்பர்ஹிட் பாடல்… என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?

    பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் சிஜிக்காக பெரும் செலவை வெங்கட் பிரபு செய்து வருகிறார்.

    இதுவரை காட்டாத அளவுக்கு விஜய்யை இளமையாக காட்ட உள்ளாராம். ஆனால், கோட் தான் டைட்டில் என்று தெரிந்ததும் ஆடு சிக்கிடுச்சு என பலரும் மஞ்சத்தண்ணியை ஊற்றி வெங்கட் பிரபு அருக்க ரெடியாகி விட்டார் என போட்டோ மீம் போட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: இரட்டை விஜய்: தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இதோ.. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?..

    ப்ளூ சட்டை மாறன் இந்த ஆண்டின் இறுதி ட்ரோலாக ”குருவி, சுறா, பைரவா, புலி, பீஸ்ட், லியோ… எதுவும் ஓடல. ஆடு… ஓடுமா?” என கேள்வி எழுப்பி உள்ளார். அனைத்து தியேட்டர்களிலும் ஜெயிலர் மற்றும் லியோ அதிகமாக ஓடிய நிலையில், லியோ ஓடலன்னு எப்படி சொல்வீங்க என விஜய் ரசிகர்கள் விழுந்து கடித்து வருகின்றனர்.