Tag: vijayakanth

  • நான் சொல்ற சம்பளத்துல நீங்க நடிப்பீங்களா?!.. விஜயகாந்திடம் எகிறிய வடிவேலு..

    Vijayakanth vadivelu: விஜயகாந்துக்கும் வடிவேலுவுக்கும் இருந்த பிரச்சனை என்ன என்பதும், விஜயகாந்தை வடிவேலு எப்படியெல்லாம் அரசியல் பிரச்சாரத்திலும், மேடைகளிலும் விமர்சித்தார் என்பதையும் மக்கள் பார்த்துள்ளனர். அப்போது முதலே வடிவேலுவுக்கு ஏழரையும் துவங்கியது. 4 வருடங்கள அவரை திரையுலகம் ஒதுக்கி வைத்தது.

    விஜயகாந்தை எதிரியாக வடிவேலுதான் பார்த்தாரே தவிர விஜயகாந்த் வடிவேலுவை அப்படி பார்க்கவில்லை. அதுதான் அவரின் பக்குவம். தன்னை மோசமாக வடிவேலு திட்டியபோதும் அவரை பற்றி மேடைகளில் எதுவும் பேசவேண்டாம் என தனது கட்சிகாரார்களிடம் சொல்லியவர்தான் விஜயகாந்த். அதோடு, அவர் நடிக்காமல் இருந்தபோது ‘வடிவேலு ஒரு நல்ல நடிகன். அவர் கண்டிப்பாக தொடர்ந்து நடிக்க வேண்டும்’ என சொன்னவர்தான் விஜயகாந்த்.

    இதையும் படிங்க: விஜயகாந்துக்கு ‘புரட்சிக் கலைஞர்’ பட்டம் எப்படி வந்தது தெரியுமா?!.. ஒரு சுவாரஸ்ய தகவல்…

    ஆனால், அந்த பக்குவம் எல்லாம் வடிவேலுவுக்கு இல்லை. கடைசி வரைக்கும் விஜயகாந்தின் மீது வன்மத்துடனேயே இருந்தார். வடிவேலுவின் வீட்டின் முன்பு விஜயகாந்தின் கட்சிக்காரர் ஒருவர் காரை நிறுத்த, இதில் கடுப்பான வடிவேலு அவர்களிடம் சண்டைக்கு போக அது பிரச்சனையில் முடிந்தது. இதுதான் காரணம் என பலரும் நினைப்பார்கள்.

    vadivelu

    ஆனால், அதற்கு முன்பே விஜயகாந்தை பிடிக்காதவராகத்தான் வடிவேலு இருந்துள்ளார். மணிரத்தினத்தின் அண்ணனின் நிறுவனமான ஜிவி பிலிஸ் பல வருடங்களுக்கு பின் சினிமாவை எடுக்க நினைத்து உருவான படம்தான் சொக்கத்தங்கம். பாக்கியராஜ் இயக்கிய அப்படத்தில் காமெடிக்கு முதலில் நடிக்கவிருந்தவர் வடிவேலு. அப்போது வடிவேலு பீக்கில் இருந்தார். எனவே, அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என பாக்கியராஜும், விஜயகாந்தும் நினைத்தனர்.

    இதையும் படிங்க: மீண்டும் திரையில் விஜயகாந்த்!.. விரைவில் வெளியாகும் ஊமை விழிகள் 2.. குட் நியூஸ் சொன்ன இயக்குனர்…

    ஆனால், விஜயகாந்தை விட அதிக சம்பளத்தை கேட்டுள்ளார் வடிவேலு. இதுகேட்டு தயாரிப்பு நிறுவனமே அதிர்ச்சி அடைந்தது. இந்த விவகாரத்தை அவர்கள் விஜயகாந்திடம் சொல்லிவிட்டார்கள். சில நாட்களில் மதுரை விமான நிலையத்தில் வடிவேலும், விஜயகாந்தும் சந்தித்துக்கொண்டனர். அப்போது விஜயகாந்த் ‘ஜிவி பிலிம்ஸ் ஒரு பெரிய நிறுவனம். கொஞ்சம் சம்பளத்தை குறைத்து கொண்டு இதில் நடி’ என சொல்லியிருக்கிறார்.

    அப்போது வடிவேலு ‘அப்படியா.. நான் ஒரு படம் சொல்றேன்.. அதுல நான் சொல்ற சம்பளத்தை வாங்கிகிட்டு நீங்க நடிக்கிறீங்களா?’ என கேட்டிருக்கிறார். விஜயகாந்த் நினைத்திருந்தால் அதே இடத்தில் அவரை பளார் என ஒன்று விட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. இவருக்கு நம்மோடு நடிக்க விருப்பமில்லை என்பதை புரிந்துகொண்டு அவரை கடந்து சென்றுவிட்டார். அதன்பின் சொக்கத்தங்கம் படத்தில் கவுண்டமணியும், செந்திலும் நடித்தனர்.

    விஜயகாந்த் மனதில் எப்போதும் வன்மம் இருந்ததே இல்லை. எல்லோருக்கும் நன்மை செய்ய நினைக்கும் விஜயகாந்துக்கும் அது எப்போதும் வராது. கடைசிவரை தலைக்கணத்தையும், வன்மத்தையும் சுமந்து கொண்டு அலைந்த வடிவேலுவோ இப்போதுவரை எல்லோரிடம் திட்டு வாங்கி கொண்டு இருக்கிறார்.

    இதையும் படிங்க: சூர்யாவின் திருமணத்திற்கு வர மறுத்த விஜயகாந்த்! படத்துல நடிச்சுக் கொடுத்தவரு ஏன் வரலனு தெரியுமா?

  • விஜயகாந்தின் பட வாய்ப்பை தட்டி பறிக்க நினைத்த நடிகர்!.. அது மட்டும் நடந்திருந்தா!…

    Vijayakanth: பொதுவாக எல்லா துறைகளிலும் போட்டி, பொறமைகள் இருந்தாலும் திரையுலகில் அது மிகவும் அதிகம். சினிமா பின்னணி இல்லாமல் வரும் நடிகர்களை வளரவே விடமாட்டார்கள். எந்த அளவுக்கு முட்டுக்கட்டை போட முடியுமோ போடுவார்கள். அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அது எல்லாவற்றையும் செய்வார்கள்.

    ஏனெனில், பிரபலமான சினிமா நடிகர் எனில் பணம், புகழ் என இரண்டும் கிடைக்கும். அதற்காகத்தான் சினிமாத்துறையில் நீடிக்க பலரும் போராடி வருகிறார்கள். வாய்ப்பு கிடைத்து சில படங்களில் நடித்தாலும் நல்ல மனிதர்களின் ஆதரவு இல்லாமல் சினிமாவில் வளர முடியாது. அஜித், விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றவர்களெல்லாம் இப்படி மற்றவர்களால் வளர்ந்தவர்கள்தான்.

    இதையும் படிங்க: கலைஞர் 100 விழாவை டீலில் விடும் நடிகர்கள்!.. முழிபிதுங்கும் திரையுலகம்!. இதெல்லாம் தேவையா பாஸ்!..

    விஜயகாந்த் சினிமாவில் நடிக்க முயற்சி எடுத்தபோது அவர் சந்திக்காத அவமானம் இல்லை. பலவகைகளிலும் அவரை அசிங்கப்படுத்தினார்கள். குறிப்பாக நிறத்தை காட்டியே பலரும் இழிவு படுத்தினர். ஒரு சில படங்களில் நடித்த பின்னரும் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

    vijayakanth

    விஜயகாந்தை ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்து ஒரிரு நாள் மட்டும் நடிக்க வைத்துவிட்டு ‘அவருக்கு நடிப்பு வரவில்லை’ என சொல்லி படத்திலிருந்து அவரை தூக்கினார்கள். சரிதா போன்ற சில நடிகைகளிடம் சென்று ‘உங்களுடன் நடிக்கமாட்டேன் என விஜயகாந்த் சொல்லி விட்டார்’ என சொல்லிவிட்டனர். எனவே, அவர்களும் விஜயகாந்துடன் நடிக்க மறுத்தனர். இந்த சதியெல்லாம் பின்னர்தான் விஜயகாந்துக்கே தெரியவந்தது.

    இதையும் படிங்க: பலகோடி மதிப்புள்ள சொத்தை ஏழைகளுக்கு தானமாக கொடுத்த விஜயகாந்த்!.. அந்த மனசுதான் கடவுள்!..

    விஜயகாந்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்திய திரைப்படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. இப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். இந்த பட வேலைகள் துவங்கியதும் ஒரு தலை ராகம் படத்தில் நடித்த நடிகர் ‘இந்த படத்தில் நான்தான் நடிப்பேன்’ என சொல்லியிருகிறார். ஆனால், ஒரு தமிழன்தான் இப்படத்தில் நடிக்க வேண்டும் என இப்படத்தின் தயாரிப்பாளர் சொல்லிவிட விஜயகாந்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இதை விஜயகாந்தே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

    இப்படி பல தடைகளை தாண்டித்தான் விஜயகாந்த் சினிமாவில் முன்னேறி வந்தார். அவர் பெரிய ஹீரோ ஆனபின் பல தயாரிப்பாளர்களும் அவரை தேடி வந்தனர். அவருடன் நடிக்க மாட்டேன் என சொன்ன நடிகைகளும் அவருடன் நடிக்க ஆசைப்பட்டனர் என்பதுதான் சினிமா வரலாறு.

    இதையும் படிங்க: குழந்தைக்காக ஷூட்டிங்கை நிறுத்திய விஜயகாந்த்!.. நடிகர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்..

  • ஒரு படத்தின் ரிலீஸுக்காக அதிகாரி காலில் நெடுஞ்சாணாக விழுந்த விஜயகாந்த்… அவர் மனசுக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?

    Vijayakanth: தமிழ் சினிமாவில் மட்டுமல்லா நிறைய நடிகர்கள் தங்கள் வேலை நடிப்பது மட்டும் தான். ரிலீஸ் ஆனா எனக்கு என்ன? என்ற ரீதியில் உலா வருவதை பார்க்க முடிகிறது. இதில் ரொம்பவே மாறுப்பட்டவர் விஜயகாந்த். அவர் செய்த ஒரு சம்பவம் தற்போது வெளியாகி இருக்கிறது.

    கர்ம வள்ளல் விஜயகாந்த் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு நிறைய நல்லது செய்து இருக்கிறார். அப்போ அவரை நம்பியவர்களுக்கு எப்படி இருந்து இருப்பார். ஒரு வருடத்தில் 18 படம் வரை நடித்த பெருமை அவரையே சேரும். அதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர்கள் அவர் மீது வைத்த நம்பிக்கை.

    இதையும் படிங்க: இந்த பட்ஜெட்டுக்கு இப்படினா? 50கோடி கொடுத்தா தமிழில் ஒரு பாகுபாலியை காட்டிருவாங்க – சிவகார்த்திகேயன் பாராட்டிய படம்

    அப்படி தன்னை நம்பிய தயாரிப்பாளர்களுக்கு கஷ்டம் வருவதை ஏற்றுக்கொள்ள மாட்டார். இப்படி தான் ஒருமுறை ஊமை விழிகள் திரைப்படம் சென்சாரில் சிக்கி நிற்கிறது. அந்த படத்தின் இயக்குனர் அரவிந்த் ராஜ், ஒளிப்பதிவாளர் ரமேஷ் குமார், வசனம் ஆபாவாணன். இவர்கள் மூவருமே திரைப்பட கல்லூரியில் இருந்து சினிமாவுக்கு வந்தனர். அவர்களின் முதல் படம் என்பதால் விஜயகாந்த் ஆரம்பத்தில் இருந்து துணை இருந்தாராம்.

    அவர்களுக்கு திருப்தியாக எத்தனை ரீ டேக் போனாலும் அசராமல் நடித்து கொடுத்தாராம். படம் முடிந்து சென்சாருக்கு போனால் சான்றிதழ் கொடுக்கப்படாமல் இழுத்தடிக்க பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர்கள் மனம் வைத்து ரிலீஸ் செய்ய விட்டால் தான் படம் வெளியாகும் என்ற நிலை இருந்தது. அந்நடுவர் குழு தலைவரைக் கண்டு இறுதி வேண்டுகோள் வைக்கலாம் என படக்குழு செல்ல முடிவு எடுக்கப்படுகிறது.

    இதையும் படிங்க: இந்த வருசத்தோட மிகப்பெரிய உருட்டு இதுவா தான் இருக்கும்..! நிக்சன் நீங்களாம் திருந்த வாய்ப்பே இல்ல..!

    ஒரு நடிகராக அவர் போகாமல் ரிலீஸுக்கு துணை நின்றார். இதை பார்த்த யாரும் யோசிப்பார்களா? அந்த நடுவரே மனம் வைத்து படத்தினை உடனே ரிலீஸ் செய்ய வேலைகளையும் செய்து கொடுத்தார். பல நாட்கள் கழித்து ரிலீஸ் ஆன ஊமை விழிகள் இன்னமும் ட்ரெண்ட் செட்டர் படம் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த படத்தினை தொடர்ந்து தான் திரைப்பட கல்லூரியில் இருந்து பலர் சினிமாவுக்கு வந்தனர்.

  • விஜயகாந்த் சாப்பாடுதான போட்டு இருக்காருனு யோசிச்சீங்கனா இத படிங்க.. சிலிர்க்கும்!..

    Vijayakanth: விஜயகாந்தின் இறப்புக்கு பின்னர் இன்னமும் அவர் குறித்து நிறைய தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கிறது. அவர் பசிச்சவங்களுக்கு சாப்பாடு தானே போட்டாருனு நினைச்சா அதான் இல்லை. அவரு செஞ்ச இன்னும் நல்ல குணம் எவ்வளோ இருக்கு. அது குறித்த நிறைய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    நடிகர் அருண் பாண்டியன் ஒரு படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்தார். அப்போது எனக்கு இயக்கும் ஆசை இருப்பதாக கூறி இருந்தாராம். உடனே விஜயகாந்த் செய் அருண், நான் நடித்து தரேன் என அவரே சொல்லி இருக்கிறார். அதுப்போலவே, அருண் பாண்டியன் தயாரித்து, நடித்து, இயக்கிய தேவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்தார்.

    இதையும் படிங்க: மாடர்ன் உடையில் ஸ்ருதியின் அராஜகம்..! தவித்து போய் நிற்கும் விஜயா.. கடுப்பில் அண்ணாமலை..!

    நகைச்சுவை நடிகரான எஸ்.எஸ்.சந்திரன் தயாரிக்க ஆசைப்பட்ட படத்தினை ராம நாராயணன் இயக்கி கொடுத்தார். இதில் பிடிவாதமாக விஜயகாந்த் வந்து சின்ன வேடத்தில் நடித்து கொடுத்தார். அதற்கு ஒற்றை பைசா கூட சம்பளம் வாங்கவே இல்லை. எங்கள் குரல் என்ற அந்த படத்துக்கு டி.ஆர் இசையமைத்தார்.

    கலைஞரின் மருமகன் அமிர்தம் ரொம்ப நாள் கழித்து மீண்டும் இயக்க ஆசைப்பட்டு விஜயகாந்திடம் தான் கதை சொன்னார். உடனே ஓகே செய்து விஜயகாந்த் நடித்த அந்த படம் சிறையில் பூத்த சின்ன மலர். இதில் பானுப்ரியா நடித்து தயாரித்து இருந்தார்.

    இதையும் படிங்க: பாக்கியாவையே அழ வச்சிட்டீங்களே மக்கா..! பிரச்னை மேல பிரச்னையா? அடுத்தது இனியா தானா?

    இதையெல்லாம் அவர் படக்கதைக்காக பார்த்ததை விட விஜயகாந்த் கேட்டால் ஒப்புக்கொள்வார் என நம்பி வந்தவர்களை ஏமாற்ற விரும்பாலும் அவர் நடித்து கொடுத்த படங்களே அதிகம். நடிகைகள் பெரும்பாலும் அப்போதைய காலத்தில் தயாரிப்பாளர் ஆகினால் அவர்களின் முதல் சாய்ஸ் விஜயகாந்த் தான் என்பதில் சந்தேகமில்லை. 

  • பலகோடி மதிப்புள்ள சொத்தை ஏழைகளுக்கு தானமாக கொடுத்த விஜயகாந்த்!.. அந்த மனசுதான் கடவுள்!..

    Vijayakanth: வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி.. மக்களின் மனதில் நின்றவர் யார்?.. என்கிற கண்ணதாசனின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் வெகு சிலர் மட்டுமே. காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், சிவாஜி, அப்துல் கலாம், பின்னணி பாடகர் எஸ்.பி., நகைச்சுவை நடிகர் விவேக், மயில்சாமி, பின்னணி பாடகர் பாலசுப்பிரமணியம் என வெகு சிலரின் இறப்பு மட்டுமே மக்களை அதிகம் பாதித்தது.

    இதில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது குரலால் மக்களின் மனதில் இடம்பிடித்தார் என்றால் மற்ற அனைவரும் மக்களின் நலன் பற்றி யோசித்தவர்கள். மயில்சாமி தன்னால் முடிந்த உதவிகளை எல்லோருக்கும் செய்து வந்தவர். அவரை பற்றி கேள்விப்பட்டே மக்களுக்கு அவர் மீது அன்பு ஏற்பட்டது.

    இதையும் படிங்க: அம்மாடியோவ் இவ்ளோ சொத்துக்களுக்கு அதிபதியா கேப்டன்? கேட்டா வாயடைச்சு போய்டுவீங்க

    அந்தவகையில் விஜயகாந்தின் மரணம் மக்களை பாதித்தது எனில் அது அவரின் எளிமையான மற்றும் மற்றவர்களுக்கு உதவிய அவரின் குணம்தான். விஜயகாந்த் தான் சம்பாதித்த பணத்தில் மட்டுமல்ல, அவரின் எதிர்காலத்திற்காக அவரின் அப்பா வாங்கி வைத்திருந்த சொத்தையும் மக்களுக்கே கொடுத்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. அதை எப்போதும் எங்கேயும் அவர் சொல்லிக்கொண்டதும் இல்லை.

    திருப்பரங்குன்றம் பெரிய ஆலங்குளம் எனும் இடத்தில் கிருஷ்ணன் என்பவரிடம் விஜயகாந்தின் அப்பா அழகர் சாமி 7 ஏக்கர் நிலத்தை மகனின் எதிர்காலத்திற்காக வாங்கினார். விஜயகாந்த் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்ததும் அந்த இடத்தை ஏழைகளுக்கு அரசு மூலம் தானமாக கொடுக்க முடிவு செய்தார்.

    இதையும் படிங்க: மீண்டும் திரையில் விஜயகாந்த்!.. விரைவில் வெளியாகும் ஊமை விழிகள் 2.. குட் நியூஸ் சொன்ன இயக்குனர்…

    1998ம் வருடம் அந்த இடம் மாவட்ட கலெக்டர் மூலமாக ஏழைகளுக்கு கொடுக்கப்பட்டது. அதன் இன்றைய மதிப்பு 21 கோடியாகும். அந்த இடத்தில் குடியிருக்கும் சோனைமுத்து, துரைப்பாண்டி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இந்த இடத்தை எங்களுக்கு கொடுத்தார். அதில்தான் நாங்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம்.

    அவர் இப்போது மறைந்துவிட்டாலும் அவர் எங்களுக்கு இருப்பிடம் கொடுத்த வாழ்வளித்த கடவுளாகவே காட்சி அளிக்கிறார்’ என மிகழும் நெகிழ்ச்சியுடன் பேசினர். இப்படி வெளியே தெரியாமல் விஜயகாந்த் பலருக்கும் உதவி இருக்கிறார். பலரை படிக்கவும் வைத்திருக்கிறார். இதைப்பற்றியெல்லாம் எங்கேயும், எப்போதும் அவர் பெருமையாக பேசிக்கொண்டதே இல்லை’ என்பது குறிப்பிடத்தக்கது.

    image

  • குழந்தைக்காக ஷூட்டிங்கை நிறுத்திய விஜயகாந்த்!.. நடிகர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்..

    Vijayakanth: நடிகர் விஜயகாந்த் ஒரு நடிகராக மட்டும் இருந்திருந்தால் இந்த அளவுக்கு புகழ் அடைந்திருக்க மாட்டார். சினிமா துவங்கியது முதல் எத்தனையோ நடிகர்களை இந்த திரையுலகமும், ரசிகர்களும் பார்த்திருக்கிறார்கள். ஆனால், எல்லோர் மனதிலும் சிம்மாசனம் போட்டு எத்தனை பேர் அமர்ந்தார்கள் என்பதுதான் வரலாறு.

    அப்படி பார்த்தால் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பின் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் விஜயகாந்த் என்றே சொல்லலாம். அதற்கு காரணம் பாகுபாடு பார்க்காமல் எல்லோரிடமும் பழகிய விதம், சக மனிதனுக்காக துடிக்கும் அந்த மனசு, தன் முன்னால் யாரும் பசியோடு இருக்கக் கூடாது, யாரும் அவமானப்படக்கூடாது என நினைக்கும் அந்த உயர்ந்த எண்ணம், மற்றவர்களுக்கு உதவும் குணம், எல்லோரிடமும் சகஜமாக, எளிமையாக பேசும் அவரின் சுபாவம் ஆகியவைத்தான்.

    இதையும் படிங்க: கே. ராஜனிடம் கோபப்பட்டு கத்திய விஜயகாந்த்!.. அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்!…

    கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் ஆக்டிவாக இல்லாமல் இருந்து வந்தார். அதோடு, பேச முடியாமலும், நடக்க முடியாமலும் இருந்து வந்தார். சில சமயம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட உணர முடியாமலும் இருந்தார்.

    கடந்த 28ம் தேதி அவர் மறைந்தார். அவர் இறந்தபின்னர் திரையுலகை சேர்ந்த பலரும் அவருடன் பணிபுரிந்த அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். சத்ரியன், ஏழை ஜாதி ஆகிய படங்களில் அவருடன் நடித்த வின்சண்ட் ராய் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ஏழை ஜாதி படத்தில் ஒரு காட்சியில் சைதாப்பேட்டை பாலத்தை அவர் கடந்து செல்வது போல காட்சி. அது மதிய வெயில் நேரம். அப்போது ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே படப்பிடிப்பை நிறுத்த சொன்னார். விசாரித்ததில் அது ஒரு துணை நடிகையின் குழந்தை. அந்த பெண்ணை அழைத்து ‘வெயில்ல எதுக்குமா குழந்தையோடு வந்தீங்க?’ என கேட்டார்.

    இதையும் படிங்க: இதுவும் திருட்டு ஆடு தானா!.. ஓடிடியில் இருந்து உருவிட்டாராம் வெங்கட் பிரபு!.. விஜய் படம் இவரோட கதையா?

    350 கொடுப்பதாக சொன்னார்கள் அதனால் வந்தேன் சார் என அப்பெண் சொல்ல, உடனே புரடெக்‌ஷன் மேனேஜரை அழைத்து ‘இந்த பொண்ணுக்கு தினமும் 1000 ரூபாய் கொடுங்கள்’ என்றார். மேலும் அவரின் கைப்பையில் இருந்த பையில் இருந்த பிஸ்கட், ஜூஸ் ஆகியவற்றை அந்த பெண்ணுக்கு கொடுக்க சொன்னார். இந்த அம்மாவ நிழல் இருக்க இடமா பாத்து தங்க வை’ என சொல்ல்விட்டு படப்பிடிப்பை மீண்டும் நடத்த சொன்னார்.

    viincent

    படப்பிடிப்பின்போது துணை நடிகர்கள், நடிகைகள் என யாருக்கேனும் பிரச்சனை எனில் உடனே படப்பிடிப்பை நிறுத்திவிடுவார். அவர்களின் பிரச்சனையை சரி செய்த பின்னரே மீண்டும் நடிப்பார். சினிமாவில் எந்த நடிகரும் இப்படி இருக்க மாட்டார்கள்’ என வின்செண்ட் ராய் கூறியிருந்தார்.