Tag: vijaysethupathi

  • BB Tamil 9: விஜய்சேதுபதி பண்ணது ரொம்ப தப்பு! வெளியே வந்ததும் குமுறிய பிக்பாஸ் பிரபலம்

    தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக பேசப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. 9வது சீசனில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீசன் முடியும் தருவாயில் சென்று கொண்டிருக்கின்றது. இன்னும் 6 போட்டியாளர்களே உள்ள நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற வகையில் கடும் போட்டியே நிலவி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் வீட்டிற்குள் செலிபிரிட்டி ரவுண்டாக ஏற்கனவே வெளியே போன போட்டியாளர்கள் உள்ளே வர வழைக்கப்பட்டிருக்கின்றனர்.

    அவர்கள் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர். கடந்த வாரம் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பார்வதியும் கம்ருதீனும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதை பற்றி வெளியே விவாதங்களும் நடந்து வருகின்றனர். ஆனால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டத்தை பலரும் வரவேற்றிருக்கின்றனர். கடந்த வாரம் தான் மாஸ் காட்டிவிட்டார் விஜய்சேதுபதி என ரசிகர்கள் குதூகலித்தனர்.

    இந்த நிலையில் போட்டியாளர் அமித் வெளியே போனது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவர் வெளியே வந்ததும் பிக்பாஸ் குறித்து தன்னுடைய அனுபவங்களை பேட்டியில் கூறி வருகின்றனர். அப்போது விஜய்சேதுபதி செய்தது ரொம்ப தப்பா இருந்தது என அமித் கூறியிருக்கிறார். அதாவது அமித் கேப்டனாக இருந்த சமயம் நல்ல கேப்டன்சிதான் என போட்டியாளர்கள் அனைவரும் கூறினார்கள்.

    விக்ரம் பேசும் போது கூட அடுத்த வாரம் கேப்டன்சிக்கு போட்டி இல்லைன்னா நீதான் அடுத்த வாரமும் கேப்டன் என்று விக்ரம் சொன்னதாக அமித் கூறினார். இப்படி இருக்கும் போது அந்த வாரத்தில் எனக்கு எதிராக மற்ற போட்டியாளர்களை சாட்சியாக நிக்க வைத்தார் விஜய்சேதுபதி. அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் விஜய்சேதுபதி செய்தது எனக்கு மிகவும் தப்பா இருந்தது என அமித் கூறினார்.

    சில சமயங்களில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது பிக்பாஸில் நடக்காது. குறிப்பாக இதை கண்டிப்பாக விஜய்சேதுபதி தட்டி கேட்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் எதுவுமே அவர் கேட்கமாட்டார். இதுதான் சில சமயங்களில் ரசிகர்கள் விஜய்சேதுபதி மீது கடுப்படைய காரணம்.

  • சீக்ரெட்டை அம்பலப்படுத்திய விஜய்சேதுபதி! இதெல்லாம் மறைக்க வேண்டிய விஷயமா?

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் துணை நடிகராக பல படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தில் இருந்து தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றார். இவருடைய ஹியூமர் மக்களுக்கு மிகவும் பிடித்து போனது.

    அதன் பிறகு பேட்ட திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். அந்த படத்தில் அவரின் வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு தொடர்ந்து வில்லனாகவே அவர் பல படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு ஹிந்தி என பிற மொழி படங்களிலும் வில்லனாக அவர் நடித்து வந்தார். இதற்கிடையில் மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன். ஹீரோவாகவே நடிப்பேன் என உறுதியாக இருந்தார்.

    இந்த நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இன்னொரு பக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பிஸியாக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. போட்டியாளர்களை பந்தாடி வருகிறார் விஜய் சேதுபதி. வாரா வாரம் அவருடைய புதிய கெட்டப்பும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் அவர் வித்தியாசமான கெட்டப்பில் வந்தார். அதை நெட்டிசன்கள் கிண்டலாகவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். ஆனால் அந்த கெட்டப்பில் ஒரு சீக்ரெட் ஒளிந்திருக்கிறது. அந்த கெட்டப்பை பார்த்ததும் ஜெயிலர் 2 படத்திற்காக அவருடைய புது கெட்டப்பா என்று அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு புதிய படத்திற்கான கெட்டப் என்று தெரிய வந்திருக்கிறது.

    அந்த படத்தை அட்லீ தயாரிக்கிறார். பாலாஜி தரணிதரன் அந்த கெட்டப்பை வெளியில் தெரியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என சீக்ரெட்டாக வைத்திருந்தாராம். ஆனால் பிக் பாஸில் வாராவாரம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதால் பரவாயில்லை என சொல்லி கொண்டதன் பேரில் அந்த நியூ கெட்டப்பில் கடந்த வாரம் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார் விஜய் சேதுபதி.

  • அப்படி மட்டும் நடிக்காத.. நடிகருக்கு அட்வைஸ் செஞ்ச விஜய்சேதுபதி! கடைசில அவரே வச்ச ஆப்பு

    தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர். தற்போது அவருடைய நடிப்பில் தலைவன் தலைவி திரைப்படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. அந்த படம் ஜூலை 25ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக சமீபத்தில் பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தின் தலைப்பு அழகான தூய தமிழில் இருப்பதோடு மட்டுமல்லாமல் படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பெயர்களையும் தமிழில் தான் வைத்திருக்கிறார்கள்.

    விஜய் சேதுபதிக்கு இந்த படத்தில் ஆகாச வீரன் என்றும் அவருக்கு ஜோடியாக நடித்த நித்யா மேனனுக்கு பேரரசி என்றும் கேரக்டர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கும் விஜய் சேதுபதி அடுத்து அவருடைய மகனையும் இப்போது களத்தில் இறக்கி இருக்கிறார். அவருடைய மகன் நடிப்பில் பீனிக்ஸ் என்ற திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் விஜய் சேதுபதியை பற்றி பிரபல நடிகர் டேவிட் சாலமன் ராஜா ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார்.

    இவர் பல சீரியல்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்தவர் .அதில் மிகவும் பிரபலமானார் .அந்த ஒரு பிரபலத்தால் வெள்ளி திரையிலும் நடிக்க வந்தார் டேவிட். பெரும்பாலான படங்களில் இவரை போலீசாகத்தான் நாம் பார்த்திருப்போம் .முதலில் விஜய் சேதுபதி சங்கு தலைவன் என்ற படத்தில் நடிக்க இருந்தாராம் .அந்தப் படத்தில் இவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் படம் அப்படியே டிராப் ஆகிவிட்டதாம்.

    அதன் பிறகு கிருமி என்ற படத்தில் டேவிட் நடித்திருக்கிறார். அதனை அடுத்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தில் நடிப்பதற்கும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிருமி படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் டேவிட். அதை அறிந்த விஜய் சேதுபதி ‘போலீஸ் கேரக்டர் கொடுத்தால் இனிமேல் நடிக்காத, அப்புறம் கடைசி வரைக்கும் போலீசாகவே தான் நடிப்பாய்’ என ஒரு நல்ல அட்வைஸை கொடுத்தாராம்.

    david

    david

    அதன் பிறகு தான் ஆரஞ்சு மிட்டாய் படத்தில் விஜய் சேதுபதி அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் .ஆனால் அந்தப் படத்தில் ஒரு ஜெயிலர் கதாபாத்திரம். அதில் யாரை நடிக்க வைக்கலாம் என தேடிக்கொண்டிருக்க விஜய் சேதுபதி தான் டேவிட் பெயரை கூறியிருக்கிறார். உடனே டேவிட் ‘அவர்தான் என்னை போலீஸ் கேரக்டரில் நடிக்க வேண்டாம் என சொன்னார். திரும்பவும் ஏன் போலீஸ் கதாபாத்திரத்திற்கு என்னை அழைத்தார் ’ என அந்த படத்தின் இயக்குனரிடம் கேட்டாராம். அதற்கு அந்த இயக்குனர் நீ போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை போலீசாகவே இருக்கிறாய். அதனால் தான் அவர் உன்னை ரெகமெண்ட் செய்திருக்கிறார் என அந்த இயக்குனர் கூறினாராம்.

  • படமே ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள இப்படி பண்றாங்களே.. விஜய்சேதுபதி மகனை இப்படி பண்ணலாமா?

    தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக கருதப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கி இன்று ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கிறார். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு ஹிந்தி என மற்ற மொழிகளிலும் இவருக்கு என ஒரு தனி மரியாதையே இருக்கிறது. ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் தனி கவனம் பெற்ற விஜய் சேதுபதி வில்லனாகவும் தன்னுடைய பங்களிப்பை ஆற்றினார். கமல் ரஜினி என மிகப் பெரிய ஆளுமைகளுக்கு வில்லனாக நடித்து தனக்கென ஒரு தனி இடம் பிடித்துக் கொண்டார்.

    தற்போது மீண்டும் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் ஹீரோவாக நடித்து மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் மகாராஜா. அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதியும் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்து வெளியாக கூடிய திரைப்படம் பீனிக்ஸ். இந்த படம் வரும் ஜூலை நான்காம் தேதி திரைக்கி வரவிருக்கின்றது. இதனுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு சூர்யா விஜய் சேதுபதியை வாழ்த்தினார்கள். அப்போது விஜய் சேதுபதியும் தன் மகனுக்காக கலந்து கொண்டு அவருடைய கருத்துக்களையும் பகிர்ந்து இருந்தார் .இந்த நிலையில் சூர்யா விஜய் சேதுபதி பேசிய ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை எடுத்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் .விஜய் சேதுபதியை டேக் செய்து சூர்யா சேதுபதியின் பாடி லாங்குவேஜ் பார்க்கவே நன்றாக இல்லை. அவர் பேசும் விதமும் யாரையும் ஈர்க்கவில்லை.

    நீ சினிமாவில் நடித்து பெயர் சம்பாதித்து வருகிற பணத்தை சூர்யா சேதுபதிக்கு கொடுத்து வேற துறையிலாவது அவரைப் போகச் சொல்லுங்கள் .சினிமா ஃபீல்டு அவருக்கு செட் ஆகாது என கடுமையாக விமர்சித்து இருக்கின்றனர். இதுபோன்ற இந்த நெகட்டிவ் விமர்சனங்கள் தான் படம் ரிலீஸ் ஆன பிறகு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஒருவரை உருவ கேலி செய்வதற்கு முன் அவரின் திறமை என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

    surya

    surya

    சூர்யா சேதுபதிக்கு இதுதான் முதல் திரைப்படம் .அதுவும் ஹீரோவாக நடிக்கும் முதல் திரைப்படம். திரையில் அவர் எப்படிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை கூட பார்க்காமல் விழாவில் அவர் பேசியதை வைத்து நெட்டிசன்கள் இவ்வாறு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • மிஷ்கினாலே அதுதான்.. ‘டிரெயின்’ படத்துக்காக இப்படி பண்ணிட்டாரே? எல்லாம் VJS சொன்னதால

    மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் திரைப்படம் டிரெயின். இந்தப் படம் ஒரு டார்க் திரில்லர் படமாக உருவாகி வருகின்றது. கடந்த ஜனவரி மாதம்தான் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்தில் ஸ்ருதிஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் என பல நடிகர்கள் நடித்துள்ளனர். விஜய்சேதுபதியை வைத்து மிஷ்கின் ஒரு படம் எடுக்க போகிறார் என்ற தகவல் வெளியானதுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஏனெனில் ஆரம்பகாலங்களில் வாய்ப்புக்காக விஜய்சேதுபதி மிஷ்கினை அணுகியபோது நடிப்பு வரவில்லை என்று சொல்லி வெளியே அனுப்பியவர் மிஷ்கின். இதை மிஷ்கினே ஒரு மேடையில் கூறியிருக்கிறார். ஆனால் காலம் எவ்வளவு மாற்றத்தை கொண்டது என்பதற்கு இதுவே ஒரு மிகச்சிறந்த உதாரணம். இந்த நிலையில் டிரெயின் படத்தை பற்றி மிஷ்கின் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

    அதாவது டிரெயின் பற்றி படம் எடுக்க வேண்டும் என நீண்ட நாளாக நினைத்துக் கொண்டிருந்தாராம் மிஷ்கின். அப்படி உருவான படம் தான் டிரெயின். ஆனால் முதலில் இது 5 மணி நேர கதையாக உருவானது. அதனால் இரண்டு பாகமாக எடுக்க வேண்டிய சூழ் நிலை உருவானது. ஆனால் அந்த இரண்டு பாகங்களையும் இப்போது ஒரே பாகமாக அந்த இரண்டரை மணி நேரத்தில் கொடுக்கப் போவதாக மிஷ்கின் கூறியிருக்கிறார்.

    அவரை பொறுத்தவரைக்கும் மிஷ்கின் ஒன்னு நினைத்தால் யாருக்காகவும் காம்ப்ரமைஸ் ஆகமாட்டார். ஆனால் இந்த விஷயத்தில் எப்படி காம்ப்ரமைஸ் ஆனார் என்று தெரியவில்லை. மேலும் நந்தலாலா படத்தின் போதே அந்தக் கதை கலைப்புலி எஸ். தாணுவுக்கு பிடிக்கவில்லையாம்.

    இப்போதான் தெரிந்ததாம் ஏன் தாணுவுக்கு பிடிக்கவில்லை என்று. முழுக்க முழுக்க ஒரு சினிமாவை வியாபாரமாகவும் பார்க்க வேண்டும். கலை ரீதியாகவும் பார்க்க வேண்டும். வெறும் கலை ரீதியாக மட்டும் நான் பண்ண மாட்டேன் என தாணு கூறினாராம். ,மேலும் அவர் கூறும் போது ‘பணம் நாங்கள் வெளியில் வாங்கித்தான் பண்ணுகிறோம். படம் எங்களுக்கு லாபம் சம்பாதித்து தர வேண்டும்’

    ‘அது என் கம்பெனிக்கு நல்ல பேரை கொடுக்கணும். உனக்கும் அது நல்ல படமாக இருக்க வேண்டும். விஜய் சேதுபதிக்கும் நல்ல படமாக இருக்க வேண்டும்’ என்று கூறினாராம். விஜய் சேதுபதி சொன்னது என்னவெனில் ‘சார் நீங்கள் கொஞ்சம் டார்க்கா எடுப்பீங்க.கொஞ்சம் ரிஸ்காகவும் இருக்கும். நான் இப்போதான் கொஞ்சம் வளர்ந்து வந்துக்கிட்டு இருக்கேன். ஹீரோவாக ஒரு நல்ல அந்தஸ்துக்கு வந்துக்கிட்டு இருக்கேன். அது மிஸ்ஸாகாம பார்த்துக்கோங்க’ என கூறினாராம்.

    train

    train

    அதனால் இந்த இரண்டுமே எனக்கு மிக முக்கியம். ஒரு தயாரிப்பாளர் பணம் போடுகிறார் என்றால் என்னுடைய இடத்தில் இருந்து மட்டும் நான் பார்க்க கூடாது என்பதை நான் புரிந்து கொண்டேன். அதனால் இந்தப் படத்துக்காக முதன் முறையாக நான் காம்ப்ரைஸ் ஆனேன் என மிஷ்கின் கூறினார்.

  • அந்த ஒரு விஷயம்.. சும்மா பெல்ட்ட எடுத்து அடிச்சு.. விஜய்சேதுபதி பற்றி மகன் பகீர்

    தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. இவருடைய மகன் சூர்யா சேதுபதி அடுத்து ஹீரோவாக நடித்த ஃபீனிக்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தை பற்றி புரோமோட் செய்வதற்காக சூர்யா சேதுபதி யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். சூர்யா சேதுபதி தன் தந்தை விஜய்சேதுபதியுடன் சிந்துபாத் என்ற படத்தில் நடித்தார்.

    அதன் பிறகு ஹீரோவாக ஃபீனிக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் கங்குவா படத்தின் போதே ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால் சில பல காரணங்களால் ஃபீனிக்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது. வரும் ஜூலை மாதம் 4 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. இந்தப் படத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியிருக்கிறார்.

    இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாம் சி.எஸ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய பல முயற்சிகள் எடுத்த நிலையில் ஒரு வழியாக ஜூலை மாதம் படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சூர்யா சேதுபதி பேசும் போது அவர் ஒரு சமயம் நான் வேறு. என் அப்பா வேறு என்ற வகையில் பேசியிருந்தார்.

    vijaysethupathi

    vijaysethupathi

    ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. நான் சொல்ல வந்ததே வேறு. அதனால் இனி பேசும் போது மிகவும் ஜாக்கிரதையாகத்தான் பேசுகிறேன் என்றும் தெரிவித்தார். விஜய்சேதுபதி மகாராஜா படம் சமயத்தில் ‘என் மகள் மேல் நான் கையே வைத்ததில்லை.ஆனால் மகனை அடிச்சிருக்கிறேன்’ என கூறியிருந்தார். இதை பற்றி சூர்யா சேதுபதியிடம் கேட்ட போது ஏன் விஜய்சேதுபதி அடித்தார் என்பதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

    15 வருடத்திற்கு முன் சூர்யா சேதுபதி ஜிம்முக்கு போகவில்லை. கராத்தே கற்றுக் கொள்ள ஆர்வமில்லை என்ற இரு காரணங்களுக்காக விஜய்சேதுபதியிடம் அடி வாங்கினாராம். அடித்தாலும் செமையா அடிப்பார். பெல்ட்ட வச்சு எல்லாம் அடிச்சிருக்காரு. அவர் அடிக்கும் போது அம்மா தடுக்கவே மாட்டாங்க. அந்தளவுக்கு அடி வெளுப்பார் என சூர்யா சேதுபதி கூறினார். ஆனால் இப்போ அப்படிலாம் கிடையாது என்றும் சூர்யா சேதுபதி கூறினார்.

  • விஜய் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்!.. விஜய் சேதுபதி மகன் சொன்ன விஷயம்!.. ஜன நாயகன் அப்டேட் வேற!..

    விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள பீனிக்ஸ் வீழான் திரைப்படம் வருகின்ற ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது அப்பா வேற நான் வேற என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பேட்டியாளர்களை சந்தித்த சூர்யா அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

    இயக்குனர் அனல் அரசு ஜவான் படத்தில் ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதிக்கும் சண்டைக்காட்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் போது தான் சூர்யாவை பார்த்ததாகவும், தான் எழுதியுள்ள கதைக்கு அவர் சரியாக இருப்பார் என நினைத்து விஜய் சேதுபதியிடம் கேட்டதும் சூர்யாவிடம் விருப்பத்தை கேட்டு அனுப்பி வைத்தார். மேலும், சூர்யாவின் ஈடுபாடும் கடுமையான உழைப்பும் அவரை உயர்ந்த இடத்திற்கு கொண்டு போகும் என பேசியுள்ளார்.

    இந்த படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி சூர்யா சேதுபதியிடம் கேட்ட போது, அவர் ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது பின்பு இப்படி ஒரு இயக்குநருடன் படம் பண்ணப்போறோம் என்ற சந்தோஷம், சண்டைக்காட்சி அதிகமாக உள்ள படம் என்பதும், இயக்குனர் என் மேல் வைத்த நம்பிக்கை தனக்கு ஒரு தைரியத்தை கொடுத்ததாகவும் கூறினார்.

    ஆரம்பத்தில் சர்சையில் சிக்கியதால் தனது பெயரை சூர்யாவிலிருந்து சூர்யா சேதுபதியாக மாற்றியதற்கு காரணம் நான் ஒரு நோக்கத்தில் சொன்னேன் அது என்னை சுற்றிவுள்ளவர்களுக்கு புரிந்தது. ஆனால், மற்றவர்கள் அதை தப்பாக எடுத்துக்கொண்டனர். அதற்கு பதில் சொல்லவே முடியாது அத அப்படியே விட்டுடலாம் என பேசியுள்ளார்.

    விஜய் சேதுபதி படத்தை பார்த்து சூர்யாவை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார். சூர்யாவிற்கு தன் அப்பாவை பார்த்து தான் நடிக்கும் ஆசை வந்ததாகவும், மேலும்,விஜய் மற்றும் சிம்புவின் ரசிகன் எனவும் பேசியிருந்தார்.

    இயக்குனர் அனல் அரசு இது வரை விஜய்யுடன் 10 படங்கள் பணிப்புரிந்துள்ளதாகவும் அவர் கடைசியாக நடிக்கும் படத்திற்கு தன்னை அழைத்துள்ளார்.எல்லா படத்தையும் விட ஜனநாயகன் படத்தில் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் சண்டைக்காட்சிகள் அமைந்திருக்கும் எனவும் அப்டேட் கொடுத்துள்ளார்.

  • அட்டகாசமான தமிழ்பெயர்கள்.. டீசரில் அசத்திய ‘தலைவன் தலைவி’.. ஒன்னு மட்டும் லீக் ஆயிருக்கு

    விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். முற்றிலும் கிராமத்து பின்னணியில் இந்த படம் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருக்கிறது.

    இந்த நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியாகி இருக்கிறது. படம் ஜூலை 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அந்த டீசரிலேயே அறிவித்திருக்கிறார்கள். அந்த டீசரில் படத்தில் நடித்த நடிகர்கள் அவர்களுடைய கதாபாத்திரங்களின் பெயர்கள் என வரிசைப்படுத்தி இருக்கின்றனர். இந்தப் படத்தின் டைட்டிலை பொறுத்த வரைக்கும் முற்றிலுமாக ஒரு தூய தமிழில் தான் தலைப்பு வைத்திருக்கிறது.

    அதைப்போல அந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகளின் கதாபாத்திரங்களின் பெயர்களும் தூய தமிழில்தான் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை வேறு எந்த படத்திலும் இப்படி வைத்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயர் ஆகாச வீரன், நித்யா மேனன் கதாபாத்திரத்தின் பெயர் பேரரசி, யோகி பாபு கதாபாத்திரத்தின் பெயர் சித்திரை ,சரவணன் கதாபாத்திரத்தின் பெயர் செம்பையா.

    ஆர்கே சுரேஷ் கதாபாத்திரத்தின் பெயர் பொற்செல்வன், காளி வெங்கட் கதாபாத்திரத்தின் பெயர் அமரசிகாமணி, மைனாவின் கதாபாத்திரத்தின் பெயர் நயினாவதி, தீபா கதாபாத்திரத்தின் பெயர் பொட்டு, ரோஷினி ஹரிப்ரியன் கதாபாத்திரத்தின் பெயர் ராகவர்த்தினி என ஒட்டுமொத்த கதாபாத்திரங்களின் பெயர்களும் தமிழிலேயே வைக்கப்பட்டிருக்கிறது.

    nithya

    nithya

    படத்தில் விஜய் சேதுபதி ஹோட்டல் வைத்து நடத்திக் கொண்டிருக்கும் ஒரு கேரக்டராக நடித்திருக்கிறார். அந்த ஹோட்டலின் பெயர் ராகவர்த்தினி ஹோட்டல் என அந்த டீசரில் சொல்லப்பட்டிருக்கிறது. உடனே இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் இந்த டீசரிலிருந்து ஒன்னு மட்டும் தெரியுது. இதில் ரோஷினி ஹரிப்ரியன் விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடித்திருக்கிறார் என்று. ஏனெனில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் தான் ராகவர்த்தினி. அதனால் அவரது தங்கையை சுற்றி அமையும் ஒரு கதையாக இந்த படம் இருக்கலாம் என தெரிகிறது.

  • நான் எதுக்கு அவரோட போட்டி போடணும்? அது முடியாது.. விஜய்சேதுபதி சொன்ன அந்த பிரபலம்

    தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. துணை நடிகராக தன்னுடைய சினிமா கெரியரை ஆரம்பித்த இவர் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதிலிருந்து தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் தன்னம்பிக்கையான பேச்சாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்றார்.

    தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வந்த விஜய் சேதுபதி பேட்ட திரைப்படத்திற்கு பிறகு வில்லன் அவதாரம் எடுத்தார். ரஜினிக்கு வில்லனாக நடித்து மாஸ் காட்டினார். அதைத் தொடர்ந்து அவர் வில்லனாகவே நடித்து வந்தார். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு மலையாளம் ஹிந்தி என பிற மொழிகளிலும் வில்லனாக நடித்து இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகராக மாறினார்.

    அதனால் இவரை தொடர்ந்து வில்லனாகவே நடிக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் முன் வந்தன. விஜய் அஜித் சிவகார்த்திகேயன் தனுஷ் இவர்களுக்கு இணையாக பார்க்கப்பட்ட ஒரு ஹீரோ விஜய் சேதுபதி. இப்படி வில்லனாகவே எத்தனை காலம் நடிக்க என நினைத்து மீண்டும் மகாராஜா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் பெரிய அளவில் ஹிட்டானது. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இப்போது மீண்டும் ஹீரோவாகவே பல படங்களில் நடித்து வருகிறார்.

    அந்த வகையில் ஏஸ் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் விஜய் சேதுபதி. அந்த படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் சேதுபதி கூலிங் கிளாஸ் அணிந்து வந்தார். பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கும் வரை அந்த கூலிங் கிளாஸை அவர் கழட்டவே இல்லை.

    இதை கவனித்த ஒரு நிருபர் விஜய் சேதுபதியிடம் முதல் முறையாக கூலிங் கிளாஸ் அணிந்து மேடையில் உட்கார்ந்து இருக்கிறீர்கள். மிஸ்கினுக்கு போட்டியாக இருக்க போகிறீர்களா என்ற ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு விஜய் சேதுபதி அவருடன் போட்டி போடவே முடியாது. அவர் அலுவலகத்தில் போய் பார்த்தால் படுக்கையில் படுத்து இருக்கிறாரா அல்லது புத்தகத்தில் படித்திருக்கிறாரா என்பதே தெரியாது.

    mysskin

    mysskin

    அந்த அளவுக்கு அவருடைய அறை முழுவதும் புத்தகங்கள் நிரம்பி வழிகின்றன. ஏகப்பட்ட புத்தகங்களை படித்த ஒரு மாமனிதர். எந்த கேள்வியை கேட்டாலும் அதற்கு அசராமல் பதிலளிக்க கூடியவர். சினிமா மீது மிகப்பெரிய பேஷன் கொண்டவர். அவருடைய பேச்சில் சில பல குறைபாடு இருக்கலாம். ஆனால் எண்ணத்தில் சிறந்த எண்ணமுடையவர் மிஷ்கின் என அவரைப் பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தார் விஜய் சேதுபதி.

  • ஏஸ் படத்துல சிவகார்த்திகேயன் ரெஃபரன்ஸ் நான் வைக்கல!.. தக் லைஃப் பதில் கொடுத்த விஜய் சேதுபதி!..

    எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினிகாந்த் – கமல்ஹாசன், விஜய் – அஜித், தனுஷ் – சிம்பு மாதிரி சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி போட்டி சினிமாவை உருவாக்க பலரும் ஆரம்பத்தில் இருந்து முயற்சி செய்தாலும் இருவரும் இதுவரை தொடர்ந்து ஒற்றுமையாகவே நடிக்கின்றனர். தங்கள் படங்களில் மாற்றி மாற்றி ரெஃபரன்ஸ்களையும் உதவிகளையும் செய்து கொள்கின்றனர்.

    மாவீரன் படத்தில் விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவர் பெரிய பலமாக அமைந்தது. இந்நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள ஏஸ் படத்தில் சிவகார்த்திகேயன் ரெஃபரன்ஸ் வைத்தது குறித்த கேள்விக்கு இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி அந்த ரெஃபரன்ஸை தான் வைக்கவில்லை என பேசியுள்ளார்.

    ஆறுமுக குமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் விஜய் சேதுபதி, ருக்மினி வசந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஏஸ் திரைப்படம் அடுத்த வாரம் 23ம் தேதி வெளியாகிறது. விஜய் சேதுபதிக்கு கடைசியாக கடந்த ஆண்டு வெளியான 50வது படமான மகாராஜா படம் ரொம்ப நாள் கழித்து வெற்றிப் படமாக மாறியது.

    மீண்டும் ஏஸ் படத்தின் மூலம் வெற்றியை ருசிப்பாரா? அல்லது பழையபடி தோல்வியை சந்திப்பாரா என்பதெல்லாம் படம் வெளியான உடனே பட்டவர்த்தனமாகிவிடும். சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் ஹீரோயினாக நடித்த ருக்மினி வசந்த் தான் இந்த படத்திலும் ஹீரோயின். கன்னடத்தில் இருந்து கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார்.

    சிவகார்த்திகேயன் ரெஃபரன்ஸ் டிரைலரில் இடம்பெற்ற நிலையில், பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி அது யோகி பாபுவோட டைமிங். சிவா மட்டுமில்லை இன்னும் இரண்டு ஹீரோ பெயர்களை கூட வரும். அந்த ஐடியா என்னோடது இல்லை என வெளிப்படையாக பேசியுள்ளார்.

    எப்படி இருந்தாலும் அந்த பெயர் வேண்டாம் என விஜய் சேதுபதி மறுத்து இருந்தால் நிச்சயம் இடம்பெற்றிருக்காது. டிரைலரில் வரும் அளவுக்கு சிவகார்த்திகேயனுக்கு விஜய் சேதுபதி முக்கியத்துவம் கொடுத்துள்ள விஷயம் நல்ல விஷயம் என்கின்றனர்.