Author: சிவா

  • சிம்புவை அசிங்கப்படுத்தி வெளியே அனுப்பிய புரட்யூசர்!. காசு வாங்கினா இப்டிதான்!…

    சிம்புவை அசிங்கப்படுத்தி வெளியே அனுப்பிய புரட்யூசர்!. காசு வாங்கினா இப்டிதான்!…

    வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூன்று படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டார் சிம்பு. அதில் முதல் படமாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படம் உருவானது. அடுத்து, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்குனர் கோகுலின் இயக்கத்தில் கொரோனா குமாரு என்கிற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் சிம்பு. ஆனால் என்ன காரணமோ நடிக்கவில்லை. இந்த படத்திற்காக சில கோடி செலவு செய்து போடப்பட்ட செட் வீணாய்ப்போனது. அதன்பின் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிக்கவில்லை.

    தனது நிறுவனத்துக்கு நடித்துக் கொடுக்கும்படி ஐசரி கணேஷ் கேட்டும் சிம்பு கண்டுகொள்ளவில்லை.. அதோடு வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி தரவில்லை. இதையடுத்து ஐசரி கணேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றத்தில் வாங்கியதை விட குறைவான தொகையை சொன்னார் சிம்பு. இத்தனைக்கும் சிம்புவுக்கு தனது வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் கொடுத்தவர் ஐசரி கணேஷ்..

    இதையடுத்து சிம்பு படம் வெளியானாலே பிரச்சனை செய்தார் ஐசரி கணேஷ். தற்போது வெற்றிமாறன் படத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. கண்டிப்பாக இந்த படம் வெளியாகும் போதும் அவர் பிரச்சனை செய்வார் என்பதால் கலைப்புலி தாணுவும், வெற்றிமாறனும் ஐசரி கணேஷை நேரில் சந்தித்து சமாதானம் பேசினார்கள்.. சிம்புவுக்கு கொடுத்த அட்வான்ஸ், அதற்கான வட்டி, செட்டுக்கான நஷ்ட ஈடு என எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 10 கோடிக்குக்ம் மேல் தரவேண்டும் என்று சொன்னார் ஐசரி கணேஷ்.

    isari ganesh

    கலைப்புலி தாணுவும், வெற்றிமாறனும் சிம்புவிடமிருந்து ஏழரை கோடி உங்களுக்கு வாங்கி கொடுத்து விடுகிறோம் என சொல்லி விட்டு வந்து விட்டார்கள். ஆனால் சிம்பு இதுவரை எதுவும் கொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையை முடித்து விடலாம் என முடிவெடுத்த சிம்பு ஐசரி கணேஷை தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவரிடம் பேச ஐசரி கணேஷ் விரும்பவில்லை. சமீபத்தில் திடீரென ஐசரி கணேஷின் அலுவலகத்திற்கு நேராக சென்றிருக்கிறார் சிம்பு..

    மேலும் நான் 5 கோடி கொடுத்து விடுகிறேன்.. இந்த பிரச்சினையை முடித்து விடுங்கள் என சிம்பு சொல்ல கோபமடைந்த ஐசரி கணேஷ் ‘தாணுவும், வெற்றிமாறனும் என்கிட்ட பேசி நீங்க ஏழரை கோடி கொடுக்கிறதா சொல்லிட்டாங்க.. மறுபடி நீங்க வந்து புதுசா ஒன்னு சொல்லாதீங்க.. இனிமே உங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நான் அவங்ககிட்ட பணத்தை வாங்கிக்கிறேன்.. நீங்க கிளம்புங்க’ என்ன சொல்லி விரட்டாத குறையாக சிம்புவை அங்கிருந்து அனுப்பி விட்டாராம்.

    சிம்பு பல தயாரிப்பாளர்களிடம் இப்படி பணம் தொடர்பான பிரச்சனைகளை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!. சிம்பு பணத்தை கொடுக்காவிட்டால் அரசன் படம் வெளியாகும்போது ஐசரி கணேஷ் பஞ்சாயத்து கிளப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Karuppu: காசே வாங்காம சம்பவம் பண்ணிய சிம்பு!.. சூர்யா அனுப்பிய காஸ்ட்லி கிஃப்ட்!..

    Karuppu: காசே வாங்காம சம்பவம் பண்ணிய சிம்பு!.. சூர்யா அனுப்பிய காஸ்ட்லி கிஃப்ட்!..

    நடிகர் சிம்புவுக்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரு குணம் உண்டு. தாங்கள் நடிக்கும் படங்கள் மட்டுமில்லாமல் நட்புக்காக மற்ற நடிகர்கள் உதவி கேட்டால் அதை செய்து கொடுப்பார்கள். விஜய் சேதுபதி ஒரு சில காட்சிகளில் வந்து நடித்து கொடுப்பார். சிம்பு பாடல்களை பாடி கொடுப்பார்.

    அல்லது இரண்டு பேருமே கேமியோ வேடத்தில் நடிப்பார்கள். அதேபோல், தான் நடிக்காத பல திரைப்படங்களில் பாடலை பாடி கொடுத்திருக்கிறார் சிம்பு. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் படத்தில் கூட ஒரு லவ் பிரேக்கப் பாடலை சிம்பு பாடியிருந்தார்,,

    இந்நிலைய்ல், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தில் வரும் ஓப்பனிங் பாடலி சிம்பு பாடியிருப்பதை தெரிய வந்திருக்கிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். எனவே இந்த பாடலை கம்போஸ் செய்த போது சிம்பு பாடினால் பொருத்தமாக இருக்கும் என நினைத்த சாய் அபயங்கர் சிம்புவை அணுகியிருக்கிறார்.

    மறுப்பேச்சு பேசாமல் வந்து பாடலை சூப்பராக பாடிக் கொடுத்தாராம் சிம்பு. இதில் முக்கிய விஷயம் விஷயம் என்னவென்றால் அந்த பாடலை பாடியதற்காக சிம்பு எந்த சம்பளமும் வாங்க வில்லையாம். பாடலைக் கேட்டு நெகழ்ந்து போன அப்படத்தின் ஹீரோ சூர்யா சிம்புவுக்கு ஒரு காஸ்ட்லி கிப்ட்டை பரிசாக அனுப்பினாராம்..

  • அமரன் ஓடுனாலும் ஓடுச்சி!.. தோனியை புகழ்ந்த எஸ்.கேவை கலாய்க்கும் புளூசட்ட மாறன்…

    அமரன் ஓடுனாலும் ஓடுச்சி!.. தோனியை புகழ்ந்த எஸ்.கேவை கலாய்க்கும் புளூசட்ட மாறன்…

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரீயூனியன் நிகழ்ச்சி நேற்று சென்னை சேப்பாக் மைதானத்தில் நடந்தது. இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக ஏ.ஆர்.ரகுமான், சிவகார்த்திகேயன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

    அந்த மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் ‘தோனி சார் உங்களை டிவியில் பார்த்திருக்கிறேன்.. மைதானத்தில் பார்த்திருக்கிறேன்.. ஆனால் இப்போதுதான் உங்களை நேரில் அருகில் பார்க்கிறேன்.. எனக்கு நடுக்கமாக இருக்கிறது.. நான் உங்களைப் போல நான் கூலான நபர் இல்லை. உங்கள் தலைமை பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும்..

    சிஎஸ்கே என்பது எமோஷன். நான் மைதானத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தூரம் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கிறேன். தோனி சார் பேட்டிங் செய்ய வரும்போது எழும் விசில் சத்தம் எனது வீட்டில் கேட்கும்’ என்று பேசியிருந்தார்.

    இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டமாறன் இந்த செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ‘அமரன் படம் ஓடினாலும் ஓடுச்சு.. அரசியல். இலக்கியம், ஆன்மீகம், வில்லுப்பாட்டு, விளையாட்டு.. என எங்க திரும்பினாலும் திடீர் தளபதி சலங்கை கட்டி ஆடுகிறார். 25 கிலோமீட்டர் அப்பு.. 25 கிலோமீட்டர்’ என்று அவரின் பாணியிலேயே அவரை கலாய்த்துள்ளார்.

  • தயாரிப்பு நிறுவனம் துவங்கிய அஜித்!.. சைலண்டா சம்பவம் பண்ணிய AK!..

    தயாரிப்பு நிறுவனம் துவங்கிய அஜித்!.. சைலண்டா சம்பவம் பண்ணிய AK!..

    தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் அஜித் குமார். துவக்கத்தில் சாக்லேட் பாயாக காதல் படங்களில் நடித்துவந்த அஜித் ஒரு கட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறி பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாக மாறினார். விஜய்க்கு அடுத்து இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. விஜய் எப்போது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தாரோ அப்போது முதலே அவருக்கு போட்டி நடிகராக அஜித் வலம் வந்தார்.

    ஒருபக்கம் சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்ளுவது, பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது, துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது என அஜித்துக்கு பிடிச்ச விஷயங்கள் நிறைய இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து கார் ரேஸ் போட்டியில் அஜித்தின் டீம் கலந்து கொண்டு வருகிறது. இதற்காக பெரும்பாலும் வெளிநாட்டில்தான் இருக்கிறார். இந்நிலையில்தான் அஜித் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது..

    அஜித் 185 கோடி சம்பளம் கேட்பதால் அவரின் புதிய படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாலும் முன்வரவில்லை. இந்த நிலையில் அஜித் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதும் தான் நடிக்க போகும் படத்தை தானே தயாரிக்க போகிறாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அஜித் துவங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் Ajith Sports Service Company. இது சினிமா தயாரிப்புக்காக அல்ல.,

    அஜித்குமார் கடந்த சில மாதங்களாகவே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கார் ரேஸ் தொடர்பான டாக்குமென்டரி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை இந்த தயாரிப்பு நிறுவனம்தான் வெளியிடுகிறது.. அதற்காகவே அஜித் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியிருக்கிறார். இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கும் அஜித் எந்த காலத்திலும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கமாட்டார். அஜித் புத்திசாலி’ என சிரிக்கிறது கோலிவுட் வட்டாரம்.

  • துரந்தர் 2 படம் எப்படி இருக்கு?!. ரஜினி கொடுத்த ரியாக்‌ஷன்!.. செம வீடியோ..

    துரந்தர் 2 படம் எப்படி இருக்கு?!. ரஜினி கொடுத்த ரியாக்‌ஷன்!.. செம வீடியோ..

    ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான துரந்தர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ஒரு உளவாளி தொடர்பான கதை இது. முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இந்த படத்தின் இரண்டாம் பாகம் துரந்தர் தி ரிரெஞ்ச் என்கிற பெயரில் உலகமெங்கும் வெளியானது..

    கடந்த 20ம் தேதி இந்த படம் தமிழில் வெளியானது. இந்த படத்துக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருக்கிறது. இத்தனைக்கும் இந்த படம் நான்கு மணி நேரம் நீளம் கொண்டது. இந்த படத்தை ஏற்கனவே இயக்குனர்கள் ஷங்கர், ராஜமவுலி போன்றவர்கள் பாராட்டி பேசியிருந்தனர்..

    படம் வெளியாகி நான்கு நாட்களில் உலகமெங்கும் இப்படம் 600 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் 400 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. இந்த படத்தை தமிழ் திரைப்பட பிரபலங்கள் பலரும் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை நேற்று பார்த்தார்.

    அதன்பின் படம் பார்த்துவிட்டு வெளியேறும் போது ‘படம் எப்படி இருக்கிறது?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘படம் சூப்பராக இருக்கிறது’ என சைகை செய்துவிட்டு சென்றார் ரஜினி.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..

  • என் சம்பளத்துல பிடிச்சி அவருக்கு கொடுங்க!.. காமெடி நடிகருக்காக சூர்யா செய்த சம்பவம்!..

    என் சம்பளத்துல பிடிச்சி அவருக்கு கொடுங்க!.. காமெடி நடிகருக்காக சூர்யா செய்த சம்பவம்!..

    கோலிவுட்டில் கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்தவர் சிங்கம் புலி. சொந்த ஊர் மதுரை. பாரதிராஜா, இளையராஜா ஆகியோரை பார்த்து சினிமாவுக்கு வந்தவர் இவர்.
    நிறைய திரைப்படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார். குறிப்பாக இயக்குனர்கள் சுந்தர் சி, பாலா ஆகியோரின் நிறைய படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.

    கண்ணன் வருவான், ரேணிகுண்டா உள்ளிட்ட சில படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அஜித்தை வைத்து ரெட், சூர்யாவை வைத்து மாயாவி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சிங்கம்புலி சூர்யாவை பற்றி ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார்..

    ஒருநாள் சூர்யா சார் என்னை அழைத்து ‘நான் ஏவிஎம் நிறுவனத்திற்கு ஒரு படம் செய்யப்போகிறேன்.. மலையாளத்தில் வெளிவந்த குஞ்சு குன்னன் படத்தின் தமிழ் ரீமேக் இது. இந்த படத்துக்கு நீங்கள் வசனம் எழுதினால் நான் நடிக்கிறேன்’ என்று சொன்னார். உடனே ஏவிஎம் நிறுவனத்திற்கு போனேன்.. ஒரு சேரை கட்டி ‘உட்காருங்கள்.. முரட்டுக்காளை படம் பற்றி பேச வரும்போது ரஜினி சார் இங்கேதான் அமர்ந்திருந்தார்’ என சொன்னார்கள். எனக்கு பெருமையாக இருந்தது..

    ‘உங்களுக்கு என்ன சம்பளம்?’ என்று கேட்டார்கள்.. நான் யோசித்து சொல்கிறேன் என்றேன்.. ‘இல்லை இல்லை.. இப்போது அதை முடித்து விடுவோம்.. வேலையை துவங்க வேண்டும்.. சொல்லுங்கள்’ என்றார்கள்.. அவர்கள் என்ன சம்பளம் கொடுப்பார்களோ அதற்கு மேல் மூணு லட்சம் வைத்து சொன்னேன்.. உடனே ‘அதை கொடுத்து விடுங்கள்’ என்றார்கள்..

    எனக்கு ஆச்சரியமாக இருந்தது.. அதன் பிறகு அங்கு பணி புரியும் ஒருவரிடம் ‘நான் அதிக சம்பளம் கேட்டேன். உடனே ஒத்துக்கொண்டார்களே எப்படி?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘
    சூர்யா சார் ஏற்கனவே ‘நீங்கள் என்ன சம்பளம் கொடுப்பீர்களோ அதை கொடுங்கள்.. அதற்கு மேல் அவர் கேட்கும் தொகையை என் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளுங்கள்’ என சொல்லிட்டார்’ என சொன்னார்.

    நான் சூர்யாவிடம் ‘நீங்கள் ஏன் எனக்கு சம்பளம் கொடுக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். ‘நான்தானே கொடுக்க வேண்டும்.. அதனால் என்ன’ என்றார்.. அப்படிப்பட்ட ஒரு மனிதர்தான் சூர்யா’ என சிங்கம் புலி சொல்லியிருக்கிறார். சிங்கம் புலி சொன்ன அந்த திரைப்படம் பேரழகன். ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா, ஜோதிகா நடித்த இந்த படத்தில் சிங்கம் புலி வசனம் எழுதியிருந்தார்.

  • ரஜினி சார்கிட்ட அதை எதிர்பாக்கவே இல்ல!… தளபதி நடிகர் நெகிழ்ச்சி!…

    ரஜினி சார்கிட்ட அதை எதிர்பாக்கவே இல்ல!… தளபதி நடிகர் நெகிழ்ச்சி!…

    மலையாள நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் மனோஜ் கே.ஜெயன். நடிகை ஊர்வசி இவரைத்தான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டார்கள். மனோஜ் கே. ஜெயன் தமிழில் தளபதி, தூள், திருமலை, திருப்பாச்சி, திமிரு, வில்லு, பில்லா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் முக்கிய நடிகராக வலம் வருகிறார்..

    சமீபத்தில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய மனோஜ் கே.ஜெயன் ரஜினி பற்றிய ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். ‘ரஜினி சாரின் சிவாஜி படம் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது அருகில் என்னுடைய படம் ஒன்று ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தது. என்னுடைய டிரைவர் ‘ரஜினி சாரை போய் பார்த்து பேசுங்கள்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

    எனக்கோ தயக்கமாக இருந்தது.. ஏனெனில் எப்போதோ தளபதி படத்தில் அவருடன் இரண்டு காட்சிகளில் நடித்தேன். அதை அவர் ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பாரா? எனக்கு மரியாதை கொடுப்பாரா? என்கிற தயக்கம் இருந்தது. ஆனால் டிரைவர் பல முறை சொன்னதால் அவரை சந்திக்கப் போனேன்..

    என்ன பார்த்ததும் ஷங்கர் சார் ‘வாங்க சார்’ என்று பேசினார்.. ‘ரஜினி சாரை பார்க்கலாம்னு வந்தேன்’. ‘அதற்கு உள்ளே போய் பாருங்க’.. என்று சொன்னர். ஒரு ரூமுக்குள் ரஜினி சார், விவேக், கனல் கண்ணன் மூவரும் அமர்ந்து ஒரு காட்சியை டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தார்கள்.. எனக்கு தயக்கமாக இருந்தது..

    எனக்கும் ரஜினி சார் அமைந்திருக்கும் இடத்திற்கும் பத்து முதல் 15 அடி தூரம் இருக்கும். ரஜினி சார் என்னை பார்த்தவுடன் உடனே எழுந்து நின்று கையை தலைக்கு மேலே தூக்கி எனக்கு வணக்கம் சொல்லி வரவேற்றார். அப்படி ஒரு சிறந்த மனிதர் அவர்.. எனக்கு அப்படி ஒரு வரவேற்பு கொடுப்பார் என எதிர்பார்க்கவே இல்லை..

    அருகில் சென்றதும் ‘என்னை ஞாபகம் இருக்கா சார்?’ என்று கேட்டேன். ‘என்ன இப்படி கேட்டீங்க.. நம்ம தளபதி படத்துல மைசூர்ல ஒன்னா நடிச்சோமே.. மறந்துடுவேனா.. தூள் படம் பார்த்தேன் சூப்பர்’ என்று என்னிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்.. அப்படி ஒரு நடிகரை சினிமாவில் பார்ப்பது மிகவும் கடினம்’ என்றார் மனோஜ். கெ.ஜெயன்.

  • 500 கோடி வசூலை தாண்டிய துரந்தர் 2!.. கலெக்‌ஷன் சும்மா அள்ளுது!.

    500 கோடி வசூலை தாண்டிய துரந்தர் 2!.. கலெக்‌ஷன் சும்மா அள்ளுது!.

    பாலிவுட்டில் ரன்வீர் சிங், மாதவன் அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான துரந்தர் திரைப்படம் உலகம் முழுவதும் 1350 கோடிக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை ஆதித்யா தார் என்பவர் இயக்கியிருந்தார்.

    தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகம் துரந்தர் தி ரிவென்ச் என்கிற பெயரில் மார்ச் 19ம் தேதி வெளியானது. முதல் பாகம் சூப்பர் ஹிட் என்பதால் இரண்டாவது பாகத்திற்கும் ரசிகர்களிடம் உலகமெங்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.. அதே நேரம் 19ம் தேதி இந்த படம் தமிழ் வெளியாகவில்லை. இதனால் ரசிகரக்ள் ஏமாற்றமடைந்தனர். ஆனாலும், அடுத்தநாள் துரந்த 2ம்பாகம் தமிழில் வெளியானது.

    துரந்தர் 2 படம் முதல் நாளே உலகம் முழுவதும் 230 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. தற்போது படம் வெளியாகி 3 நாட்களில் இப்படம் உலகம் முழுதும் 500 கோடி வசூலை தாண்டி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர், ராஜமௌலி, அல்லு அர்ஜுன், விஜய தேவரகொண்டா உள்ளிட்ட பல திரைப்பட பிரபங்கள் பாராட்டு கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

  • எதுவும் பேசாம அமைதியா இரு!.. ஹெச்.வினோத்தின் கையை கட்டிப்போட்ட விஜய்!.

    எதுவும் பேசாம அமைதியா இரு!.. ஹெச்.வினோத்தின் கையை கட்டிப்போட்ட விஜய்!.

    ஒருபக்கம் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை வாரியத்தில் சிக்கியிருக்கிறது. ஒருபக்கம் விஜய் கரூர், நாமக்கல் ஆகிய இடங்களுக்கு சென்றபோது அங்கு அவரை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தை ஜனநாயகன் படத்திற்காக படக்குழு பயன்படுத்திக் கொண்டது என சிலர் புகார் சொன்னார்கள்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை பகிர்ந்து இதுதான் படக்குழு, இதுதான் கேமரா, இந்த இடத்தில் வைத்துதான் படத்திற்காக ஷூட் செய்தார்கள் என்றெல்லாம் பலரும் பதிவிட்டார்கள். குறிப்பாக சவுக்கு சங்கர், நக்கீரன் கோபால் போன்ற பத்திரிகையாளர்களும் இந்த கருத்தை சொல்ல பலரும் அதை நம்ப துவங்கி விட்டனர்..

    ஆனால், தவெ இதை மறுத்துள்ளது. செய்தியாளன் இதுபற்றி கருத்துதெரிவித்த அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார் ‘சில அரசியல் புரோக்கர்கள் காழ்புணர்ச்சி காரணமாக சொல்லும் கருத்துக்களை மக்கள் நம்ப வேண்டாம்.. அடிப்படை அறிவு கூட இல்லாமல் இப்படியெல்லாம் பேசுகிறார்கள்’ எனக் கூறியிருந்தார்.

    ஒருபக்கம் இந்த விஷயம் ஹெச்.வினோத்தையும் டென்ஷன் ஆக்கியிருக்கிறதாம். இப்படி எல்லாம் பேசுகிறார்களே.. இதைப் பற்றி கண்டிப்பாக நாம் விளக்கம் கொடுக்க வேண்டும் என நினைத்து விஜயை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.. அப்போது அவரிடம் விஜய் ‘நீங்கள் எதுவும் பேசாதீர்கள்.. இது முழுக்க முழுக்க அரசியல்.. நீங்கள் நிறைய படங்களை எடுக்க வேண்டும்.. இதற்குள் நீங்கள் வராதீர்கள்.. இந்த பிரச்சனை அதுவாக சரியாகும்’ என்று சொல்லி அவரை அமைதிப்படுத்தி விட்டாராம்..

    ஆனால் ஹெச்.வினோத்தை பேச விஜய் அனுமதிக்க வேண்டும். ஏனெனில், இது விஜய்க்கு மட்டுமில்லை. ஹெச்.வினோத்துக்கும் கெட்ட பெயர்தான்.. மக்கள் அவரையும் சேர்த்து தப்பாக பேசுவார்கள்’ என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..

  • விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததுக்கு காரணமே நான்தான்!… தயாரிப்பாளர் பேட்டி!..

    விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததுக்கு காரணமே நான்தான்!… தயாரிப்பாளர் பேட்டி!..

    நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்ஜிஆருக்கு பின் மக்களிடம் ஆதரவு பெற்ற ஒரே நடிகர் விஜயகாந்த் என சொல்லலாம். எம்ஜிஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்களில் விஜயகாந்த் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர் வரைக்கும் சென்றார். தமிழ்நாட்டுக்கு அவர் முதலமைச்சராக வாய்ப்பும் இருந்தது. ஆனால், திட்டமிட்டு அவருக்கு எதிராக வைக்கப்பட்ட மோசமான விமர்சனங்கள் மற்றும் அவரின் உடல்நிலை காரணமாக அது நடக்காமல் போய்விட்டது.

    விஜயகாந்துடன் நெருக்கமாக பழகியவரும், தயாரிப்பாளருமான காஜா மொய்தின் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார். விஜயகாந்த் சார் அரசியலுக்கு வர நானும் ஒரு முக்கிய காரணம்.. கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக மலேசியா சென்றிருந்தபோது அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்..

    அப்போது ‘நீங்கள் அரசியல் கட்சி துவங்குங்கள்’ என சொன்னேன். அதற்கு அவர் ‘நமக்கு இருக்கும் டென்ஷனுக்கு அதெல்லாம் செய்ய முடியுமா?’ என்று கேட்டார். ‘கண்டிப்பாக உங்களால் முடியும்.. மக்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள்’ என்று சொன்னேன். அதன் பின்னர்தான் அவர் அரசியல் கட்சி தொடங்கும் வேலைகளில் இறங்கினார்..

    மதுரையில் அப்படி ஒரு பிரமாண்ட மாநாடு நடந்தது.. இப்போது இத்தனை லட்சம் பேர் வந்தார்கள்.. அத்தனை லட்சம் பேர் வந்தார்கள் என சொல்கிறார்கள். ஆனால் அந்த மாநாட்டுக்கு வந்த கூட்டம் எண்ணவே முடியாது.. ஒரு தலைவர் வாழும் போது மதிக்கப்படுவதை விட அவர் இறந்த பிறகு அவருக்காக மக்கள் எவ்வளவு கூட்டம் வருகிறது என்பதை பார்க்க வேண்டும்.

    அப்படி எம்ஜிஆருக்கு பின் விஜயகாந்த் சாருக்குதான் அதிக கூட்டம் வந்தது.. அவர் மலேசியா வந்தபோது அப்படி ஒரு வரவேற்பை நான் கொடுத்தேன். மலேசிய அரசிடம் அனுமதி வாங்கி இரண்டு சைரன் பைக்குகள் மற்றும் 20 பென்ஸ் காரில் அவரை 60 கிலோ மீட்டர் மரியாதையாக அழைத்து சென்றேன்.. அதைப்பார்த்து விஜயகாந்த்தை மிரண்டு போய்விட்டார்.. அதற்கெல்லாம் அவர் மயங்கும் நபர் இல்லை. ஆனால், நமக்காக இதை செய்தானே என என்னிடம் பாசமாக பழகுவார்’ என காஜா மொய்தீன் கூறியிருக்கிறார்.