Author: சிவா

  • விஜய் பத்தி தப்பா பேசிய நடிகர்!. படத்திலிருந்து தூக்கிய அஜித்!.. அந்த நடிகர் அவரா?….

    விஜய் பத்தி தப்பா பேசிய நடிகர்!. படத்திலிருந்து தூக்கிய அஜித்!.. அந்த நடிகர் அவரா?….

    நடிகர் அஜித்தும், விஜயும் சமகாலத்தில் சினிமாவில் வளர்ந்தவர்கள்தான். இருவருமே துவக்கத்தில் காதல் படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறி மாஸ் ஹீரோவாக மாறியவர்கள். எம்ஜிஆருக்கு சிவாஜி போல, ரஜினிக்கு கமலை போல, விஜய்க்கு போட்டி நடிகராக அஜித் இருந்தார்.

    அதனால்தான், இருவரின் ரசிகர்களும் அடிக்கடி மோதிக் கொண்டார்கள்.
    அதேநேரம் அஜித்துக்கும், விஜய்க்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. இப்போதும் அது தொடர்கிறது. விஜய் அரசியல் கட்சி துவங்கிய போது முதல் ஆளாக திரையுலகில் இருந்து அஜித் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து சொன்னதாக சொல்லப்படுகிறது. மேலும், ஒரு பேட்டியில் கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே காரணமில்லை என அஜித் கூறினார்.

    அதேபோல் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் ‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் சொன்னதாக செய்திகள் வெளியான போது உடனே அதை மறுத்து செய்தி வெளியிட்டார். இதனால் விஜய் ரசிகர்களும் அஜித்தை கொண்டாட துவங்கிவிட்டனர். இந்நிலையில்தான் ஒரு முக்கிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது.

    அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் பிரபலமான நடிகர் குணச்சித்திர நடிகராக நடிக்கவிருந்தார். ஆனால் அந்த நடிகர் தொடர்ந்து விஜயை பற்றி நெகட்டிவாக பேசிக் கொண்டே இருந்தால் கடுப்பான அஜித் ஆதிக்கை அழைத்து ‘அவர் விஜயை பற்றி மிகவும் மோசமாக பேசுகிறார். படத்திலிருந்து அவரை தூக்கிடுங்க’ என சொல்லிவிட்டாராம்.

    இப்போது இதையும் விஜய் ரசிகர்கள்கொண்டாடி வருகிறார்கள்.. அந்த நடிகர் அனேகமாக பிரகாஷ்ராஜாக இருக்கலாம் என ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.தேர்தலுக்கு முன்பு திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பிரகாஷ்ராஜ் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

  • Kara: தனுஷோட சம்பளமாவது வருமா?.. 3வது நாளிலேயே படுத்துடுச்சே!. கர வசூல் இவ்ளோதானா?!..

    Kara: தனுஷோட சம்பளமாவது வருமா?.. 3வது நாளிலேயே படுத்துடுச்சே!. கர வசூல் இவ்ளோதானா?!..

    போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், சூரஜ் வெஞ்சரமுடு, ஜெயராம், பிருத்வி உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த ஏப்ரல் 30ம் தேதி வெளியான திரைப்படம் கர. கடந்த சில வருடங்களாகவே தனுஷ் சீரியசான படங்களில் நடித்து வரும் நிலையில் கர படமும் ஒரு சீரியசான படமாகவே வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

    இந்த படத்தில் தனுஷ் உட்பட அனைத்து நடிகர்களின் நடிப்பும் பாராட்டை பெற்றாலும் படத்தில் கதை என பெரிதாக ஒன்றுமில்லை என்பது பெரிய குறையாக இருக்கிறது. படத்தில் சொல்லப்படும் கதை ரசிகர்களால் ஏற்க முடியாததாக இருக்கிறது. இட்லி கடை படத்தை ஒட்டிய கதையாகவே இந்த படமும் இருக்கிறது. அதில் அப்பாவுக்காக மீண்டும் கிராமத்துக்கு வந்து ஹோட்டல் வைக்க தனுஷ் ஆசைப்படுவார். கர படமும் அப்படித்தான்..

    அதோடு படத்தின் முதல் பாதியில் பல அழுகாட்சி ட்சிகள் இடம் பெற்றிருந்தது ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை. முதல் நாள் இந்த திரைப்படம் 6.20 கோடியும், 2ம் நாள் 6.95 கோடியும், 3ம் நாளான நேற்று 5.20 கோடியும் இப்படம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு படத்திற்கு வரவேற்பு கிடைத்தால் வசூல் அதிகரிக்கும். ஆனால் மூன்றாவது நாளில் கர படத்தின் வசூல் குறைந்திருக்கிறது. எனவே கர திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட் அடிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது..

    தனுஷ் ஒரு படத்தில் நடிப்பதற்கு 50 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். கர படம் தியேட்டரில் இதை வசூல் செய்யுமா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

  • மணிரத்னத்தை நம்பி 2 மாசம் வேஸ்ட்!.. எல்லோருக்கும் போன் போடும் விஜய் சேதுபதி!….

    மணிரத்னத்தை நம்பி 2 மாசம் வேஸ்ட்!.. எல்லோருக்கும் போன் போடும் விஜய் சேதுபதி!….

    தனது இயல்பான நடிப்பில் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என சொல்லாமல் காமெடி, கேமியோ, வில்லன் என பலவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பவர் இவர். அதனால்தன் இவரை ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. மற்ற ஹீரோக்களை போல இப்படியெல்லாம் நடிக்க மாட்டேன் என எந்த கண்டிஷனும் போட மாட்டார்.

    பல படங்களில் வயதான தோற்றங்களிலும் நடித்திருக்கிறார்
    . கோலிவுட்டின் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுபவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என கலந்து கட்டி அடித்து வருகிறார். இவரின் முத்து என்கிற காட்டான் வெப் சீரியஸ் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில்தான் மணிரத்தினம் இயக்கவுள்ள புதிய படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடியாக விஜய் சேது நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவிருந்த நிலையில் திடீரென மணிரத்தினம் தரப்பிலிருந்து ஷூட்டிங் துவங்க இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என சொல்லிவிட்டார்களாம்..

    இந்த படத்திற்காக வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் இருந்தார் விஜய் சேதுபதி. தற்போது படத்தின் ஷூட்டிங் இரண்டு மாதங்கள் தள்ளிப் போவதால் இந்த இரண்டு மாத இடைவெளியில் வேறு ஏதாவது படத்தில் நடிக்கலாம் என நினைத்து யாருக்கு போனை போட்டாலும் சாதகமான பதில் இல்லையாம்.

    மகாராஜா 2 படத்தை துவங்கலாமா என நித்திலன் சாமிநாதனிடம் கேட்டால் கதையை எழுதி முடிக்க இன்னும் சில மாதங்களாகும் என்கிறாராம். அதேபோல் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். அந்த படத்தை துவங்கலாமா என்று கேட்டாலும் இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்கிறாராம்.. ’இரண்டு மாதம் வேஸ்ட்’ என புலம்பி வருகிறாராம் விஜய் சேதுபதி..

  • சியானுக்கு ஹிட் கொடுக்குமா துருவ நட்சத்திரம்?.. ரிலீஸ் தேதி குறிச்சாச்சி!..

    சியானுக்கு ஹிட் கொடுக்குமா துருவ நட்சத்திரம்?.. ரிலீஸ் தேதி குறிச்சாச்சி!..

    கௌதம் மேனன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்து உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம், சூர்யாவை வைக்க எடுக்க திட்டமிட்டு அவர் இந்த படத்திலிருந்து விலக சீயான் விக்ரமை வைத்து இந்த படத்தை இயக்கினார் கௌதம் மேனன். படம் முடிந்து ரிலீஸுக்கு ரெடியான நிலையில் கௌதம் மேனன் வாங்கிய சில கோடி கடன்களால் இந்த படத்தை வெளியிட முடியவில்லை. அவரும் பலமுறை முயன்றும் இந்த படம் இப்போது வரை ரிலீஸாகவில்லை.

    இந்நிலையில்தான், சமீபத்தில் இந்த படம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் துருவ நட்சத்திரம் படத்தை ஜூன் 15ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் இந்த படத்திற்கு இருந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

    இந்நிலையில் வருகிற 28ம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். ஒருபக்கம் படம் சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டிருந்தாலும் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள Spy Thriller படமாக துருவ நட்சத்திரம் உருவாகியிருப்பதால் கண்டிப்பாக இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என படக்குழு நம்புகிறது. அதோடு ஜெயிலர் பட வில்லன் வினாயகன் இந்த படத்தில் வில்லனாக கலக்கியிருக்கிறாராம். இந்த படம் வெளியானால் அவரும் ஒரு ரவுண்டு வருவார் என்கிறார்கள்..

    மொத்தத்தில் துருவ நட்சத்திரம் படம் சியான் விக்ரம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியும் கொடுத்துள்ளது. கடந்த பல வருடங்களாகவே விக்ரமுக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் அமையவில்லை. அந்த குறையை துருவ நட்சத்திரம் போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

  • Youth: கென் கருணாஸுக்கு இவ்ளோதான் சம்பளமா?!.. ஐயோ பாவம்..

    Youth: கென் கருணாஸுக்கு இவ்ளோதான் சம்பளமா?!.. ஐயோ பாவம்..

    தமிழில் காமெடி படங்களில் நடித்து தற்போது குணச்சித்திர நடிகராக மாறியிருக்கும் கருணாஸின் மகன் கென் கருணாஸ். அசுரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும் வெற்றி மாறன், தனுஷ் ஆகியோரிடம் உதவி இயக்குனராகவும் இவர் பணி புரிந்திருக்கிறார்.

    அந்த நம்பிக்கையில் ஒரு கதையை எழுதி யூத் என தலைப்பு வைத்து அவரே இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார். இந்த படத்தில் மீனாக்‌ஷி தினேஷ், பிரியான்ஷி யாதவ், சுரேஷ் வஞ்சரமுடு, தேவதர்ஷினி சுகுமாரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்..

    இந்த படத்தில் இடம் பெற்ற முட்டக்கலக்கி பாடல் படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. இந்த பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக ஜென்சி ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினார்கள் 5 கோடி செலவில் உருவான இந்த படம் உலகமெங்கும் 85 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில்தான், இந்த படத்திற்கு கென் கருணாஸுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே சம்பளம் பேசினார்களாம். அதோடு லாபத்தில் குறிப்பிட்ட சதவீத பங்கு என்கிற அடிப்படையில் அவருக்கு தற்போது இரண்டு கோடி மட்டுமே அதிகமாக கிடைக்கும் என்கிறார்கள். இதில் தயாரிப்பாளருக்கு மட்டுமே 30 கோடி லாபம் என்கிறார்கள்.

  • தம்பி உன்னை நம்பி நாடிருக்கு!.. விஜய் போட்டோவோடு பாடலை பகிர்ந்த இளையராஜா!..

    தம்பி உன்னை நம்பி நாடிருக்கு!.. விஜய் போட்டோவோடு பாடலை பகிர்ந்த இளையராஜா!..

    தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்ற விஜய் தற்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். விஜய் ஒரு முக்கியமான, பிரபல நடிகராக இருந்ததால் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என விஜய் நம்புகிறார். ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களின் ஆதரவும் தனது கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அவர் அரசியல் கட்சியை துவங்கி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அவர் வேட்பாளர்களை நியமித்தார்.

    நடந்து முடிந்த தேர்தலில் முதல் நிலை வாக்காளர்களும், நிறைய இளைஞர்களும் விஜய்க்கு வாக்களித்திருப்பதாக கணிக்கப்படுகிறது. ஏனெனில் இந்த முறை 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது.
    விஜய் அரசியலுக்கு வந்தது முதலே ஆளும்கட்சியான திமுகவை விமர்சித்து வருகிறார்.

    இதனால் விஜய்க்கு ஆதரவாக தமிழ் சினிமா பிரபலங்கள் யாரும் கருத்து சொல்லவில்லை. ஏனெனில் ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ளக்கூடாது.. அப்படி பகைத்துக் கொண்டால் கண்டிப்பாக தங்கள் படம் வெளியாவதற்கு பிரச்சினை செய்வார்கள் என்பது தெரிந்து பல முக்கிய மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார்கள்..

    இந்நிலையில்தான், இசையமைப்பாளர் இளையராஜா விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது போல தனது youtube சேனலில் ‘இது எங்கள் நீதி’ என்கிற படத்தில் இடம்பெற்ற ‘சின்னத்தம்பி உன்னை நம்பி நாடிருக்கு’ என்கிற பாடலை பகிர்ந்திருக்கிறார். அதுவும் விஜயின் போட்டோவோடு அந்த பாடலை பகிர்ந்திருக்கிறார். இந்த படம் விஜயின் அப்பா எஸ்.ஏ.சி இயக்கி 1988ல் வெளியானது. இந்த படத்தில் ராம்கி, ராதிகா ஆகியோர் நடித்திருந்தனர்.. அதோடு விஜயும் இந்த படத்தில் சிறுவனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

  • பால் கெட்டா தயிறு!.. தண்ணி ஊத்துனா மோறு!.. மன்சூர் அலிகான் சொன்ன உழைப்பாளர் தின வாழ்த்து!…

    பால் கெட்டா தயிறு!.. தண்ணி ஊத்துனா மோறு!.. மன்சூர் அலிகான் சொன்ன உழைப்பாளர் தின வாழ்த்து!…

    கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் வில்லனாக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். சினிமாவில் எந்த உடல்மொழி காட்டி நடிப்பாரோ அப்படித்தான் நிஜ வாழ்விலும். இன்னும் சொல்லப்போனால் நிஜ வாழ்வில் அவர் எப்படியோ அப்படியேதான் திரையிலும் பிரதிபலிக்கிறார் என்றும் கூட சொல்லலாம். அலட்டலான உடல் மொழி, நக்கலான பேச்சு என நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்களை கவர்பவர் இவர். துவக்கத்தில் பல படங்களில் வில்லனாக நடித்த அவர் ஒரு கட்டத்தில் காமெடி கலந்த வில்லனாக நடிக்க துவங்கினார். அது அவருக்கு கை கொடுத்தது..

    ஒருபக்கம் சினிமாவில் நடித்தாலும் ஒருபக்கம் சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்ட மனிதராகவும் மன்சூர் அலிகான் இருக்கிறார். இந்திய ஜனநாயகப் புலிகள் என்கிற அரசியல் கட்சியை துவங்கி பல தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட திருச்சியில் நான்கு தொகுதிகளில் அவரின் கட்சி போட்டியிட்டது. மன்சூர் அலிகான் லால்குடி தொகுதியில் போட்டியிட்டார்.

    ஒரு பக்கம் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி சிக்கலில் மாட்டிக் கொள்வார் மன்சூர் அலிகான். திரிஷாவை பற்றி ஒரு முறை இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்த அவர் மன்னிப்பு கேட்கும் வரை சென்றது..

    இந்நிலையில்தான், இன்று மே 1 உழைப்பாளிகள் தினம் என்பதால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘உழைக்கிறவன் ரோட்டில் கிடக்கிறான்.. சுரண்டரவன் ஓஹோன்னு இருக்கான்.. பால் கெட்டா தயிறு.. தண்ணி ஊத்துனா மோரு.. திராட்சை சக்தி.. கெட்டா அதிசக்தி ஒயின், உழைப்பாளியே நீ கெடவில்லை.. வீறு கொண்டு எழு.. எல்லோருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்’ என பதிவிட்டிருக்கிறார்..

  • கர படம் தரம்!.. சூப்பர் வில்லேஜ் திரில்லர்!.. கன்பார்ம் ஹிட்!.. டிவிட்டர் விமர்சனம்..

    கர படம் தரம்!.. சூப்பர் வில்லேஜ் திரில்லர்!.. கன்பார்ம் ஹிட்!.. டிவிட்டர் விமர்சனம்..

    போர்த்தொழில் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இன்று ரிலிஸாகியுள்ள திரைப்படம் கர. இப்படத்தின் முதல் காட்சி முடிந்துவிட்ட நிலையில், படம் பார்த்த பலரும் படம் எப்படி இருக்குது என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வருகிறது.
    படம் பார்த்த எல்லோருமே படம் நன்றாக இருப்பதாகவும்,ஒரு நல்ல வில்லேஜ் திரில்லராக கர திரைப்படம் உருவாகியிருப்பதாகவும், தனுஷ் சிறப்பாக நடித்திருப்பதாகவும், விக்னேஷ் ராஜா சிறப்பாக இயக்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள்..

    இப்படம் பார்த்த ஒருவர் டிவிட்டர் பக்கத்தில் ’Intense rural heist thriller படமாக கர உருவாகியிருக்கிறது. தனுஷ் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், மமித பைஜூ ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள், ஜிவி பிரகாஷ் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். விஸ்வல் அனைத்துமே நன்றாக இருக்கிறாது. முதல் 15 நிமிட காட்சி மிகவும் சிறப்பு.. அடுத்து படம் ஒரு எமோஷனல் கதைக்கு செல்கிறது.. அதன்பின் படம் திரில்லருக்கு மாறுகிறது. இடைவேளை காட்சி மிகவும் சிறப்பு..

    படத்தின் இரண்டாம் பாதி என்கேஜாக செல்கிறது. வழக்கம்போல் தனுஷ் படத்தை தனது தோளில் தூக்கி சுமந்திருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் சுராஜ் வஞ்சரமுடு, ஜெயராம் ஆகியோர் ஸ்கோர் செய்கிறார்கள். மிக்கி மௌஸ் கேமில் வருவது போல தனுசை துரத்தும் போலீஸ் கதை நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அங்கங்கே காமெடி காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை தரம்.. ஆர்ட் டைரக்சன் சிறப்பாக இருக்கிறது.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

    மற்றொருவரோ ‘ முதல் 15 நிமிட காட்சி, இடைவேளையில் வரும் கொள்ளை காட்சி, கிளைமாக்ஸுக்கு முன் வரும் காட்சி தியேட்டரில் பிளாஸ்டாக இருக்கிறது. வழக்கம்போல் தனுஷ் அசத்தியிருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங், சண்டை காட்சிகள் எல்லாமே தரமாக இருக்கிறது படம் வின்னர்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

    கர படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதால் இந்த படம் கண்டிப்பாக தனுஷ் ரசிகர்களை கவர்வதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

  • எலக்‌ஷன் ஃபீவரில் மக்கள்!.. கர படம் கரை ஏறுமா?!.. இது நடந்தாதான் உண்டு!..

    எலக்‌ஷன் ஃபீவரில் மக்கள்!.. கர படம் கரை ஏறுமா?!.. இது நடந்தாதான் உண்டு!..

    போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜூ, கே.எஸ் ரவிக்குமார், கருணாஸ் ஆகியோர்ட முக்கிய வேடத்தில் நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கர. என் பெயர் கர சாமி.. என்ன கரன்னு கூப்பிடுவாங்க என தனுஷ் பேசிய வசனம் ட்ரோலில் சிக்கியது.

    ஆனால் கர என பெயர் வைத்ததற்கான காரணத்தை இயக்குனர் கூறியிருந்தர். தனுஷ், மமிதா பைஜூ, விக்னேஷ் ராஜா ஆகியோர் இணைந்தாலே எதிர்பார்ப்பு எகிறிவிடும். ஆனால் கர படத்திற்கு சூழல் வேறுமாதிரி இருக்கிறது.. பிவிஆர் மற்றும் ஏஜிஎஸ் போன்ற முக்கிய மல்டி பிளஸ்களில் கூட டிக்கெட் எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகவில்லை என்கிறார்கள்.

    அதற்கு முக்கிய காரணம் தமிழக மக்கள் இப்போது எலக்சன் ஃபீவரில் இருக்கிறார்கள். அதாவது தேர்வுகள் முடிவுகள் என்னவாகும்? தேர்தலுக்கு பிந்தையை கணிப்பு என்ன? திமுக ஆட்சி அமைக்குமா இல்லை அதிமுக ஆட்சி அமைக்குமா? இல்லை விஜய் ஆட்சி அமைப்பாரா? அல்லது தனி பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படுமா? என அவர்கள் விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவேதான் இன்று வெளியான கர படத்தை பெரும்பாலான மக்கள் கவனிக்கவில்லை என சொல்லப்படுகிறது..

    இதையெல்லாம் படக்குழு யூகித்து சரியான புரமோஷன் செய்து நடத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்க வேண்டும் என்கிறார்கள். நாம் ஒரு தரமான படைப்பை உருவாக்கிவிட்டோம்.. கண்டிப்பாக மக்கள் இந்த படத்தை வெற்றி பெற வைப்பார்கள் என்று என்கிற நம்பிக்கையில் படைக்குழு இருக்கிறது.. கர படத்திற்கு டிக்கெட் விற்பனை மந்தமாக இருந்தாலும் அந்த படத்தின் மீது ஒரு நல்ல வைப் இருப்பதை மறுக்க முடியாது.

    எனவே, முதல் காட்சி பார்த்துவிட்டு தியேட்டரிலிருந்து ரசிகர்கள் வெளியே வந்து செல்லும் விமர்சனம் மற்றும் இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை சமூக வலைதளங்களில் பதிவிடுவதைப் பொறுத்து கர படம் கரை ஏறுமா என்பது தெரிந்துவிடும்.

  • எஸ்.கே. ஹீரோவாக நானும், இமானும்தான் காரணம்!. பாடலாசிரியர் சொன்ன பிளாஷ்பேக்…

    எஸ்.கே. ஹீரோவாக நானும், இமானும்தான் காரணம்!. பாடலாசிரியர் சொன்ன பிளாஷ்பேக்…

    சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து பிரபலமாகி முன்னணி நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன் .பாண்டியராஜ் இயக்கத்தில் மெரினா என்கிற படத்தில்தான் சிவகார்த்திகேயன் முதன்முதலாக அறிமுகமானார். அதன்பின் எழில் இயக்கிய மனம் கொத்தி பறவை என்கிற படத்தில் நடித்தார். ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. அதேபோல் அதன் பின் வெளிவந்த ரஜினி முருகன் படமும் சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது..

    அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் சிவகார்த்திகேயன் நடித்தார். சில படங்களை அவரை சொந்தமாகவும் தயாரித்தார். தற்போது 60 முதல் 70 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்திருக்கிறார். தற்போது தாய்க்கிழவி படத்தை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய கவிஞர் யுகபாரதி ‘மனம் கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயன் நடிச்சதுக்கு நானும் இசையமைப்பாளர் இமானும் ஒரு காரணம் என சிவகார்த்திகேயனுக்கே தெரியுமான்னு எங்களுக்கு தெரியல.. விஜய் டிவில காமெடி ஷோ பார்த்துட்டு இவர் நல்லா பண்றாருனு பேசிட்டு இருந்தோம்.. அப்ப எழில் சார் வந்தார்.. அவரும் அஞ்சு வருஷம் கேப்.. அவர் கிட்ட சிவகார்த்திகேயன் ஒரு பையன் நல்ல பண்றான்.. அவனை ஏன் நீங்க உங்க படத்துல நடிக்க வைக்கக் கூடாதுன்னு கேட்டோம்..

    அவர் ‘எனக்கும் அந்த பையன் பண்றது பிடிக்கும்.. பண்ணலாமே’ன்னு சொன்னார். அப்படி உருவான படம்தான் மனம் கொத்தி பறவை’ என சொல்லியிருக்கிறார். சிவகார்த்திகேயன் துவக்கத்தில் நடித்த படங்களின் வெற்றிக்கு இமானின் பாடல்கள் முக்கிய காரணமாக இருந்தார்.. ஆனால் ஏதோ ஒரு பிரச்சனை காரணமாக இருவரும் புரிந்து விட்டது குறிப்பிடத்தக்கது..