Author: சிவா

  • பிளாக்பஸ்டர் 2023: டாப் 5 அதிக வசூலை பெற்ற தமிழ் படங்கள்!..

    Top 5 movies: தமிழ் திரையுலகில் ஒவ்வொரு வருடமும் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் உருவாகி வருகிறது. ஆனால், அந்த எல்லா படங்களும் நல்ல வசூலை பெறுகிறதா என்றால் இல்லை. ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய ஹீரோக்களை நம்பி ரூ.150 கோடி பட்ஜெட்டுக்கும் மேல் திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

    ஆனால், அதுவும் சில நேரங்களில் சறுக்கி விடுகிறது. சில சமயம் சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் உருவாகி எதிர்பார்க்க முடியாத அளவுக்கு பிளாக் பஸ்டர் அடிக்கும். இதற்கு பெரிய உதாரணமாக ‘லவ் டுடே’ படத்தை சொல்ல முடியும். 2023ம் வருடம் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த டாப் 5 வசூலை பெற்ற படங்கள் பற்றி பார்ப்போம்.

    இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் வெளியான சூப்பர்ஹிட் த்ரில்லர் படங்கள் – ஒரு பார்வை

    இதில் முதலிடத்தை ரஜினியின் ஜெயிலர் படம் பிடித்துள்ளது. சில ஏமாற்றங்களை கொடுத்த ரஜினி நெல்சனின் இயக்கத்தில் சொல்லி அடித்த திரைப்படம்தான் ஜெயிலர். இப்படம் ரூ.605 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது. இதற்கு மேல் முழு வசூலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கவில்லை. இப்படத்தம் ரூ.700 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

    jailer
    jailer

    அடுத்து, இரண்டாவது இடத்தை விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் பிடித்துள்ளது. இந்த படம் ரூ.503 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்த படத்திற்கு இருந்த எதிர்பார்ப்புக்கு ஆயிரம் கோடி வசூலை இப்படம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இப்படத்தின் திரைக்கதை, குறிப்பாக இரண்டாம் பாதி ரசிகர்களை கவரவில்லை. அதனால், வசூல் குறைந்துவிட்டது.

    இதையும் படிங்க: எம்ஜிஆர், சிவாஜிக்கே டஃப் கொடுத்த அந்த கட் அவுட்.. இப்படி எல்லாமா நடந்துச்சு…

    3வது இடத்தை மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெற்றுள்ளது. இப்படம் ரூ.343 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. அதேநேரம், பொன்னியின் செல்வன் 2 படம் முதல் பாகத்தை விட கொஞ்சம் குறைவான வசூலை பெற்றதாக சொல்லப்படுகிறது.

    Varisu vs Thunivu

    4வது இடத்தை விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் பெற்றதாக சொல்லப்படுகிறது. இப்படம் ரூ.302 கோடியை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. அடுத்து 5வது இடத்தில் அஜித்தின் துணிவு படம் பெற்றுள்ளது. இப்படம் 201 கோடி வசூலை பெற்றதாக சொல்லப்படுகிறது. மொத்தத்தில் டாப் 5 இடங்களில் விஜய் 2 இடங்களை பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: இரட்டை விஜய்: தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இதோ.. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?..

  • இரட்டை விஜய்: தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இதோ.. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?..

    GOAT: லியோ படத்திற்கு பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடித்து வருவது எல்லோருக்கும் தெரியும். இந்த படத்தை விஜயின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனமே இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என பல நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பங்காளாதேஷ், சவுத் ஆப்பிரிக்கா என பல நாடுகளிலும் நடந்து வருகிறது. அதோடு, ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயை மிகவும் இளமையாகவும் காட்டவுள்ளனர். இதற்காக அமெரிக்காவெல்லாம் சென்று தொழில் நுட்ப வல்லுனர்களோடு பேசியுள்ளனர்.

    இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் வெளியான சூப்பர்ஹிட் த்ரில்லர் படங்கள் – ஒரு பார்வை

    ஒருபக்கம் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் தலைப்பை இதுவரை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனவே, தளபதி 68 என்றே எல்லோரும் அழைத்து வந்தனர். ஆனாலும், இப்படத்திற்கு கோட் (GOAT) என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், படக்குழு அதை மறுத்தது.

    இந்நிலையில்தான் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இன்று இரவு உலகம் முழுவதும் புது வருடத்தை வரவேற்பதால் விஜய் ரசிகர்களுக்கு இப்படத்தின் தலைப்பு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இப்படத்தின் தலைப்பு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளிவந்த செய்தி போலவே இப்படத்திற்கு கோட் என்றே தலைபு வைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு விஜய் முகம் இடம் பெற்றுள்ளது. ஒன்று வயதானவர் போலவும், ஒன்று சிறு வயது விஜய் போலவும் வடிவமைத்துள்ளனர்.

    goat

  • 2023ல் இந்திய அளவில் அதிக வசூலை குவித்த டாப் 10 திரைப்படங்கள்!.. கெத்து காட்டும் ‘ஜெயிலர்’..

    Top 10 movies: ஒவ்வொரு வருடமும் இந்திய அளவில் பல திரைப்படங்கள் வெளியாகிறது. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியானாலும் எல்லா படங்களும் வெற்றி அடைவதில்லை. பெரிய நடிகர்களின் படங்கள் அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. ஆனால், அதே அளவில் வசூலை பெற்றால் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும்.

    பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் மண்ணை கவ்வினால் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும். இது, கோலிவுட், பாலிவுட் என எல்லோருக்கும் பொருந்தும். அதேபோல், சிறிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு படம் நல்ல வசூலை பெற்றால் அது தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுப்பதோடு மட்டுமில்லாமல் திரைத்துறையையும் வாழவைக்கும்.

    Love Today
    Love Today

    பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் ரூ.8 கோடியில்தான் உருவானது. ஆனால், 80 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. ஒரு சினிமாவின் லாபம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு பெரிய நடிகருக்கு ரூ.100 கோடி சம்பளம் கொடுத்து, சினிமாவை 50 கோடியில் எடுத்து, மொத்தம் ரூ.150 கோடியில் உருவான அந்த திரைப்படம் பெரிய லாபத்தை கொடுக்கவில்லை எனில் அதில் என்ன லாபம் இருக்கிறது.

    அப்படி 2023ம் வருடம் வெளியாகி அதிக லாபம் பெற்ற திரைப்படங்களை பற்றி காண்போம். இதில் முதலிடத்தில் இருப்பது ஷாருக்கான்தான். அவர் நடிப்பில் வெளியான ஜவான் படம் ரூ.1150 கோடியும், பதான் திரைப்படம் ரூ.1050 கோடியும் வசூலை பெற்றது. இப்படி முதல் இரண்டு இடத்தை ஷாருக்கான் படங்கள் பெற்றது.

    அடுத்து முறையே அனிமல் திரைப்படம் ரூ.880 கோடியும், கதர் 2 படம் ரூ.690 கோடியும், ஜெயிலர் படம் ரூ.605 கோடியும், லியோ படம் ரூ.593 கோடியும், சலார் திரைப்படம் ரூ.500 கோடியும், டைகர் 3 படம் ரூ.466 கோடியும், பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் ரூ.410 கோடியும், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படம் ரூ.355 கோடியும் வசூலை பெற்றது.

    மொத்தத்தில் டாப் 10-ல் ஏழு திரைப்படங்கள் ஹிந்தி திரைப்படங்களாகும், ஜெயிலரும், லியோவும் தமிழ் படங்கள், சலார் திரைப்படம் மட்டும் கன்னடத்தில் உருவானது. ஆனாலும், இந்த 3 படங்களும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது. லியோ படம் மட்டும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை 100 சதவீதம் பூர்த்தி செய்திருந்தால் கண்டிப்பாக ரூ.1000 கோடி வசூலை அப்படம் பெற்றிருக்கும் என சினிமா பத்திரிக்கையாளர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: 2023- இல் அதிக சம்பளம் வாங்கும் ஐந்து நடிகர்கள்!.. அடேங்கப்பா லிஸ்ட்ல இவரு இருக்காரா!..