Category: jana nayagan

  • விஜய்யின் ‘ஜன நாயகன்’ டிக்கெட் புக்கிங்கில் புது விஷயத்தை செய்யப்போகும் ‘கமலா சினிமாஸ்’!

    விஜய்யின் ‘ஜன நாயகன்’ டிக்கெட் புக்கிங்கில் புது விஷயத்தை செய்யப்போகும் ‘கமலா சினிமாஸ்’!

    தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வந்த ‘தளபதி’ விஜய்யின் 69-வது படம் தான் ‘ஜன நாயகன்’. இப்போது தமிழக முதலமைச்சராக இருக்கும் விஜய்யின் கடைசி படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இந்த படம் நாளை (ஜூலை 23-ஆம் தேதி) உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது. ஆல்ரெடி எல்லா திரையரங்குகளிலும் முதல் நாளுக்கான டிக்கெட் புக்கிங் ஓப்பன் பண்ணி விட்டார்கள்.

    இந்நிலையில், சென்னையில் உள்ள ‘கமலா சினிமாஸ்’-ன் ஓனர் விஷ்ணு கமல் ‘ஜன நாயகன்’ புக்கிங்கில் ஒரு புதிய விஷயத்தை செய்யப்போகிறார். வழக்கமாக முதல் ஒரு வாரத்துக்கு தான் புது படங்களுக்கான புக்கிங்கை ஓப்பன் பண்ணுவார்கள்.

    ஆனால், விஷ்ணு கமல் இந்த படத்தின் 25-வது நாள் கொண்டாட்டத்திற்காக ப்ளான் பண்ணி இப்பவே வருகிற ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கான புக்கிங்கையும் தனது கமலா சினிமாஸில் ஓப்பன் பண்ணப்போகிறாராம்.

  • விஜய்யின் ‘ஜன நாயகன்’-க்கு ட்ரோன் மூலம் புரொமோஷன் செய்த KVN!

    விஜய்யின் ‘ஜன நாயகன்’-க்கு ட்ரோன் மூலம் புரொமோஷன் செய்த KVN!

    தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘பகவந்த் கேசரி’. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் ‘ஜன நாயகன்’.

    இதில் ஹீரோவாக தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் நடித்துள்ளார். இவருக்கு தகுந்தாற்போல் ஒரிஜினல் கதையில் சில மாற்றங்களை செய்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஹெச்.வினோத்.

    என்னதான் ஒரு பெரிய படமாகவே இருந்தாலும், அதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு புதுவிதமாக புரொமோஷன் செய்ய வேண்டும். அது தான் ரசிகர்களை ஈர்த்து தியேட்டருக்குள் வரவழைக்கும்.

    அப்படி நாளை (ஜூலை 23-ஆம் தேதி) ரிலீஸ் ஆகும் ‘ஜன நாயகன்’ படத்திற்காக இதன் தயாரிப்பு நிறுவனமான ‘KVN புரொடக்ஷன்ஸ்’ புது விதமான புரொமோஷனை செய்திருக்கிறது. பறக்கும் ட்ரோனில் LED ஸ்க்ரீன் மூலம் படத்தின் வெவ்வேறு போஸ்டர்களை திரையிட்டு அசத்தியிருக்கிறார்கள்.

  • விஜய்யின் ‘ஜன நாயகன்’-ல் நடித்தவர்கள் & பணியாற்றியவர்கள் வாங்கிய சம்பளம்?

    விஜய்யின் ‘ஜன நாயகன்’-ல் நடித்தவர்கள் & பணியாற்றியவர்கள் வாங்கிய சம்பளம்?

    தமிழ்நாட்டின் முதலமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடித்துள்ள படம் ‘ஜன நாயகன்’. சினிமா கேரியரில் ‘தளபதி’-யின் கடைசி படம் இதுவே.

    ஆகையால், இவரின் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் வருத்தம் தான். இன்னொரு பக்கம் நாளை (ஜூலை 23-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகப்போகும் இந்த படத்தின் முதல் நாள் முதல் ஷோவை பார்க்க டிக்கெட் எடுத்து கையில் வைத்திருக்கிறார்கள்.

    Jana nayagan cast

    கடைசியாக விஜய்யை பெரிய திரையில் பார்த்து கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். தற்போது, இப்படத்தில் நடித்தவர்கள் மற்றும் பணியாற்றியவர்கள் வாங்கிய சம்பளம் எவ்ளோ?-ன்னு பார்ப்போம்.

    ஹீரோ விஜய்க்கு ரூ.220 கோடியாம். இதை இயக்கியிருக்கும் இயக்குநர் ஹெச்.வினோத்திற்கு ரூ.25 கோடியாம். தளபதிக்கு ஜோடியாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவுக்கு ரூ.3 கோடியாம். விஜய்யின் வளர்ப்பு மகளாக நடித்திருக்கும் மமிதா பைஜுவிற்கு ரூ.60 லட்சமாம். 

    H Vinoth anirudh

    வில்லனாக நடித்திருக்கும் பாபி தியோலுக்கு ரூ.3 கோடியாம். சூப்பரான பாடல்களை கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு ரூ.13 கோடியாம். இதர நடிகர்கள் மற்றும் டெக்னிஷியன்களின் மொத்த சம்பளம் ரூ.8 கோடியாம்.

  • டிராப்பானதா தனுஷ் – ‘ஜன நாயகன்’ இயக்குநர் ஹெச்.வினோத் படம்?

    டிராப்பானதா தனுஷ் – ‘ஜன நாயகன்’ இயக்குநர் ஹெச்.வினோத் படம்?

    நடிகர் தனுஷ் இப்போது ராஜ்குமார் பெரியசாமியின் ‘ஓம்’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப்போகும் ‘தமிழ் முருகன்’ படத்தின் அறிவிப்பு வந்தது.

    இதுபோக இன்னும் சில படங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு தனுஷின் லைன் அப்பில் இருக்கிறது. இந்த லிஸ்ட்டில் இல்லாத ஒன்று, ஹெச்.வினோத் படம் தான்.

    இதை ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோ’ தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அறிவிப்பு வராமலே இருந்தது. இன்று இதற்கு ஒரு முடிவு தெரிந்திருக்கிறது.

    அதிக பட்ஜெட் காரணமாக இப்படம் டிராப்பாகி விட்டதாம். ஹெச்.வினோத் தமிழக முதல்வர் விஜய்யை வைத்து இயக்கியிருக்கும் ‘ஜன நாயகன்’ வருகிற ஜூலை 23-ஆம் தேதி வெளியாகப்போவது குறிப்பிடத்தக்கது.

  • விஜய் ரூட்டில் செல்ல மறுத்த ரஜினி… இதுதான் காரணமா?

    விஜய் ரூட்டில் செல்ல மறுத்த ரஜினி… இதுதான் காரணமா?

    கோலிவுட்டின் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தை முதல் பாகத்தை இயக்கிய நெல்சன் தான் இயக்கி கொண்டிருக்கிறார். படத்தை வருகிற அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி திரைக்கு கொண்டு வரப்போகிறார்கள்.

    சமீபத்தில், ஒரு மாஸான ப்ரோமோ வெளி வந்து தலைவரின் ரசிகர்களை குஷி படுத்தியது. இந்த ப்ரோமோவில் அனிருத் இசையில் உருவான தீம் மியூசிக் ஹைலைட்டாக இருந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைத்து பிரம்மாண்டமாக நடத்த இதன் தயாரிப்பு நிறுவனமான ‘சன் பிக்சர்ஸ்’ திட்டமிட்டு வருவதாக சொல்லப்பட்டது. ஆல்ரெடி தமிழ்நாடு முதலமைச்சரும், நடிகருமான விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷனும் அங்கே நடந்தது குறிப்பிடத்தக்கது.

    Jana Nayagan Jailer 2

    இதனால் இப்போது ‘ஜெயிலர் 2’ ஆடியோ ரிலீஸை மலேசியாவில் நடத்த ரஜினி விரும்பவில்லையாம். ஏனெனில், விஜய் அங்கு சென்றதால் தான் ரஜினியும் அதே ரூட்டில் செல்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பார்கள் என்பதால் நோ சொல்லிவிட்டாராம்.