Category: jana nayagan

  • Jana Nayagan Box Office : 3 நாட்களில் விஜய்யின் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

    Jana Nayagan Box Office : 3 நாட்களில் விஜய்யின் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

    3 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடித்திருக்கும் படம் தான் ‘ஜன நாயகன்’.

    சமீபத்தில், தமிழக முதல்வராக பதிவியேற்ற விஜய்யின் கடைசி படம் இதுதானாம். இது கடந்த ஜூலை 23-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது.

    இதில் முக்கிய வேடங்களில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், நரேன், பிரியாமணி நடித்திருக்கிறார்கள். ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு அனிருத் தான் இசையமைத்திருக்கிறார்.

    விஜய்யின் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி லைக்ஸ் போட்டு வருகிறார்கள். தற்போது, இந்த படம் கடந்த 3 நாட்களில் உலக அளவில் ரூ.171.84 கோடி வசூல் செய்துள்ளதாம்.

  • லியோ, தி கோட்’ படங்களின் முதல் 2 நாட்களின் வசூலையாவது முறியடித்ததா ‘ஜன நாயகன்’?

    லியோ, தி கோட்’ படங்களின் முதல் 2 நாட்களின் வசூலையாவது முறியடித்ததா ‘ஜன நாயகன்’?

    வசூலில் யார் மாஸ் என்று மற்ற நடிகர்களுடன் போட்டி போடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் தனது முந்தைய படங்களின் சாதனையை முறியடித்து அடுத்த கட்டத்துக்கு சென்றோமா? என்று பார்க்க வேண்டும். அந்த வகையில் ‘தளபதி’ விஜய் நடிப்பில் வெளியான கடைசி மூன்று படங்களின் முதல் 2 நாட்களின் வசூல் நிலவரப்படி எந்த படம் டாப்புன்னு பார்ப்போம்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘லியோ’ படம் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படம் முதல் 2 நாட்களில் உலக அளவில் ரூ.210.21 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது.

    வெங்கட் பிரபு இயக்கிய ‘தி கிரேட்டஸ்ட ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) படம் 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படம் முதல் 2 நாட்களில் உலக அளவில் ரூ.153.94 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

    ஹெச்.வினோத் இயக்கிய ‘ஜன நாயகன்’ படம் நேற்று முன் தினம் (ஜூலை 23-ஆம் தேதி) தான் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இது கடந்த 2 நாட்களில் உலக அளவில் ரூ.112.50 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

  • ஆந்திரா & தெலுங்கானாவில் கெத்து காட்டியது விஜய்யின் ஜன நாயகனா? சூர்யாவின் கருப்பா?

    ஆந்திரா & தெலுங்கானாவில் கெத்து காட்டியது விஜய்யின் ஜன நாயகனா? சூர்யாவின் கருப்பா?

    தெலுங்கு ஹீரோக்களின் எல்லா படங்களும் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் வெளியாகாது. பிரபாஸ், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்த படங்களுக்கு மட்டும் இது சமீபகாலமாக நடந்து வருகிறது.

    ஆனால், ஆந்திரா & தெலுங்கானாவில் டாப் தமிழ் ஹீரோக்களின் படங்கள் எல்லாமே தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகும். ‘தளபதி’ விஜய் மற்றும் ‘The One’ சூர்யா ஆகிய இருவருக்குமே அங்கு நல்ல மார்கெட் உள்ளது.

    அதேபோல், மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் நேற்று முன் தினம் (ஜூலை 23) தான் வெளி வந்தது. கடந்த 2 நாட்களில் ஆந்திரா & தெலுங்கானாவில் மட்டும் ரூ.6.25 கோடி வசூல் செய்துள்ளது.

    சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் கடந்த மே மாதம் 15-ஆம் தேதி வெளி வந்தது. இது ஆந்திரா & தெலுங்கானாவில் முதல் 2 நாட்களில் ரூ.7.50 கோடி வசூலித்ததாம். இதன் மூலம் சூர்யா தான் அங்கு கெத்து என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

  • ஜன நாயகனுக்கு 13 கோடி வாங்கிய அனிருத் இப்போது கேட்கும் சம்பளம் இவ்ளோவா?

    ஜன நாயகனுக்கு 13 கோடி வாங்கிய அனிருத் இப்போது கேட்கும் சம்பளம் இவ்ளோவா?

    தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருபவர் அனிருத் ரவிச்சந்தர் தான். தனுஷின் ‘3’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் இசையில் கடைசியாக வெளியான படம் ‘ஜன நாயகன்’.

    ஹெச்.வினோத் இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய் தான் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம் ரூ.13 கோடியாம்.

    இப்போது ரஜினியின் ‘ஜெயிலர் 2, தர்மன், KHxRK Reunion படம்’, லோகேஷ் கனகராஜின் ‘டிசி’, சிம்புவின் ‘அரசன்’ மற்றும் தெலுங்கு மொழியில் நான்கு படங்கள், ஹிந்தியில் ஒரு படம் என அனிருத் பிஸியாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், இவர் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. எவ்ளோ என்று விசாரிக்கையில், அனிருத் சமீபத்தில் ஒப்பந்தமான ஒரு புதிய படத்துக்கு ரூ.28 கோடி சம்பளம் கேட்டிருக்கிறாராம்.

  • ‘ஜன நாயகன்’ இடைவேளையில் சூப்பரான ப்ரோமோவால் ரசிகர்களை ஈர்க்கும் கார்த்தியின் ‘சர்தார் 2’!

    ‘ஜன நாயகன்’ இடைவேளையில் சூப்பரான ப்ரோமோவால் ரசிகர்களை ஈர்க்கும் கார்த்தியின் ‘சர்தார் 2’!

    விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படம் ‘தளபதி’-யின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    PVR INOX திரையரங்குகளில் ‘ஜன நாயகன்’ படத்தின் இடைவேளையின் போது ‘சர்தார் 2’ படத்தின் சூப்பரான ப்ரோமோ திரையிடப்படுகிறது. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறது.

    இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்துள்ளார். அதுவும் அப்பா, மகன் என டபுள் ஆக்ஷனில். இதை இயக்கியிருப்பது ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் தான்.

    முதல் பார்ட்டில் சங்கி பாண்டே வில்லனாக நடித்திருந்தார். பார்ட் 2-வின் வில்லன் எஸ்.ஜே.சூர்யாவாம். இந்த படத்தை செப்டம்பர் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

  • “‘ஜன நாயகன்’ இயக்குநர் ஹெச்.வினோத் எவராலும் சலனப்படுத்த முடியாத சக்தி” – ‘நந்தன்’ இரா.சரவணன்!

    “‘ஜன நாயகன்’ இயக்குநர் ஹெச்.வினோத் எவராலும் சலனப்படுத்த முடியாத சக்தி” – ‘நந்தன்’ இரா.சரவணன்!

    சினிமாவில் படிப்படியாக முன்னேறி சாதிப்பவர்கள் பலருக்கு முன் உதாரணமாக இருப்பார்கள். இந்த வகையைச் சேர்ந்த ஒரு சினிமா இயக்குநர் தான் ஹெச்.வினோத்.

    முதலில் சின்ன பட்ஜெட்டில் நட்டியை வைத்து ‘சதுரங்க வேட்டை’ என்ற படத்தை எடுத்து யார் இந்த இயக்குநர்? என ஆச்சர்யப்பட வைத்தார். பின், கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை கொடுத்து தான் ஒரு தரமான இயக்குநர் என்று நிரூபித்தார்.

    அதன் பிறகு டாப் ஹீரோவான அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு’ என மூன்று படங்களை பண்ணிவிட்டு, இப்போது முன்னணி நடிகரும், தமிழ்நாட்டின் முதல்வருமான விஜய்யை வைத்து ‘ஜன நாயகன்’ படத்தை எடுத்திருக்கிறார். விஜய்யின் கடைசி படமான இது நேற்று முன் தினம் (ஜூலை 23) தான் ரிலீஸ் ஆனது.

    Thunivu

    இயக்குநர் ஹெச்.வினோத்தின் நெருங்கிய நண்பரும், சசிகுமாரின் ‘நந்தன்’ பட இயக்குநருமான இரா.சரவணன் கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “வினோத் என்கிற அரக்கன்! அஜீத் சாரின் ‘துணிவு’ ரிலீஸான நேரம். இயக்குநர் வினோத்துடன் சபரிமலையில் இருந்தோம்.

    நல்ல கூட்டம் என்பதால், அருகே ஓர் அறை எடுத்துத் தங்கினோம். ‘துணிவு’ படம் குறித்த ரிசல்ட் பாஸிடிவ்வாக வந்தாலும், விமர்சனம் குறித்து தெரிந்துகொள்ள அவ்வளவு ஆவல். சபரிமலையில் கவரேஜ் கிடைக்கவில்லை. ‘திங்க் மியூஸிக்’ சந்தோஷ் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் என கவரேஜ் தேடி ஓடிக்கொண்டு இருந்தோம். ‘படம் பக்கா…’ என விமர்சனங்கள் வர, அறைக்கு ஓடி வந்தேன். கையைத் தலையணை போல் வைத்துக்கொண்டு, கால் நீட்டித் தூங்கிக் கொண்டிருந்தார் வினோத். 

    H vinoth

    “யோவ் நீயெல்லாம் மனுஷனாய்யா…” என எழுப்பினேன். நல்ல உறக்கத்தில் இருந்த வினோத் சலித்தபடி நிமிர்ந்தார். “படத்தைக் கழுவிக் கழுவி ஊத்துறாங்க… நீங்க தூங்கிட்டு இருக்கீங்க?”. “ஊத்தட்டும் விடுய்யா…” என்றபடி மீண்டும் படுத்துக் கொண்டார். “ஐயோ, நண்பா… படம் சூப்பர்னு கொண்டாடுறாங்க…” என்றேன். 

    “சரிய்யா…” – எழாமலே பதில் சொல்லித் தூக்கத்தைத் தொடர்ந்தார். ‘திங்க் மியூஸிக்’ சந்தோஷ் வந்து ஆளைப் புரட்ட, அப்போதும் வேண்டா வெறுப்பாகத்தான் எழுந்தார். “நாம செய்ய வேண்டிய வேலையைச் செஞ்சுட்டோம். படம் நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் இனி நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது. வாழ்த்தினாலும் வறுத்தாலும் ஏத்துக்கத்தான் வேணும்…” என்றார். அறிவில், தெளிவில் அப்படியோர் அரக்கன் வினோத். எவராலும் சலனப்படுத்த முடியாத சக்தி. ‘நல்லதும் கெட்டதும் நமக்குள்தான்’ என்று இயங்குகிற அபூர்வன்” என்று பதிவிட்டிருந்தார்.

  • Jana Nayagan Box Office : 2 நாட்களில் விஜய்யின் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

    Jana Nayagan Box Office : 2 நாட்களில் விஜய்யின் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

    2 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த ‘தளபதி’ விஜய் தான் இப்போது தமிழ்நாட்டின் CM.

    அரசியலில் நுழையும்போதே ‘ஜன நாயகன்’ தான் கடைசி படம் என்று சொல்லி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து விட்டார் ‘தளபதி’. இருப்பினும் தியேட்டருக்கு சென்று இவரின் கடைசி படத்தை பார்த்து கொண்டாட வேண்டும் என்று நினைத்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் கடந்த 6 மாதங்களாக வெயிட் பண்ண வைத்து விட்டது சென்சார் குழு.

    ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படம் பல பிரச்சனைகளை தாண்டி ஒருவழியாக நேற்று முன் தினம் (ஜூலை 23-ஆம் தேதி) உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இதில் விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

    இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், கடைசியாக ஒரு முறை விஜய்யை திரையில் பார்த்து ரசிக்க வேண்டும் என்று தான் அனைத்து ரசிகர்களும் நினைக்கிறார்கள். தற்போது, இந்த படம் கடந்த 2 நாட்களில் உலக அளவில் ரூ.112.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

  • தமிழ்நாட்டில் முதல் நாளே அதிக வசூல் செய்தது ஜன நாயகனா? இல்ல ரஜினி, அஜித் படங்களா?

    தமிழ்நாட்டில் முதல் நாளே அதிக வசூல் செய்தது ஜன நாயகனா? இல்ல ரஜினி, அஜித் படங்களா?

    கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘தளபதி’ விஜய், ‘தல’ அஜித் ஆகியோரின் நடிப்பில் கடைசியாக வெளி வந்த படங்களின் முதல் நாள் வசூலை (தமிழ்நாட்டில் மட்டும்) வைத்து யாருக்கு அதிக மாஸ் என்று பார்ப்போம்.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘கூலி’ படம் கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியானது. இது தான் முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.29 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது.

    இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியானது. இது முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.28.50 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

    இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் நேற்று (ஜூலை 23-ஆம் தேதி) வெளியானது. இது முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.26 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

  • கேரளாவில் மாஸ் காட்டிய தளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’!

    கேரளாவில் மாஸ் காட்டிய தளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’!

    தமிழ்நாட்டில் ‘தளபதி’ விஜய்-க்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அதேபோல் தான் கேரளாவிலும். விஜய் நடித்திருக்கும் புதிய படம் ‘ஜன நாயகன்’.

    இப்படம் நேற்று (ஜூலை 23) தான் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியிருக்கும் விஜய்யின் கடைசி படம் இது என்பதால், அங்கையும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

    இதனால் கேரளா பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டியுள்ளார் ‘தளபதி’. கேரளாவில் இந்த படத்தை விநியோகம் செய்த ‘SSR எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் எக்ஸ் தளத்தில் இதன் முதல் நாள் வசூல் ரூ.5.80 கோடி (கேரளாவில் மட்டும்) என்று அறிவித்திருக்கிறது.

    ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.

  • அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ முதல் நாள் வசூலை முறியடித்த விஜய்யின் ‘ஜன நாயகன்’!

    அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ முதல் நாள் வசூலை முறியடித்த விஜய்யின் ‘ஜன நாயகன்’!

    ‘தளபதி’ விஜய்யின் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும், அந்த படம் :தல’ அஜித்தின் முந்தைய படத்தின் வசூலை முறியடித்து விட்டதா? என்று விஜய் ரசிகர்கள் பார்ப்பது உண்டு.

    நேற்று விஜய் நடித்துள்ள புதிய படமான ‘ஜன நாயகன்’ வெளியானது. ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இந்த படம் தான் ‘தளபதி’யின் சினிமா கேரியரில் கடைசி படமாம்.

    ஏனெனில், தமிழ்நாடு முதலமைச்சராக பிஸியாக இருக்கும் விஜய், இனிமே படங்களில் நடிக்கப்போவதில்லை என்று முடிவெடுத்து விட்டார். ‘KVN புரொடக்ஷன்ஸ்’ அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்த படத்தின் நேற்றைய வசூல் உலக அளவில் ரூ.78.27 கோடியாம்.

    ஆனால், அஜித்தின் முந்தைய படமான ‘குட் பேட் அக்லி’-யின் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.51.20 கோடி தானாம். இதனால் விஜய்யின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளார்கள்.