Category: jana nayagan

  • விஜய் ரசிகர்களுக்காக வெளியானது ராவண மவன்டா பாடல் வீடியோ!

    விஜய் ரசிகர்களுக்காக வெளியானது ராவண மவன்டா பாடல் வீடியோ!

    நடிகரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் நடித்து கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் ‘ஜன நாயகன்’. இதை ‘சதுரங்க வேட்டை’ வினோத் தான் இயக்கினார்.

    ஒன்றா, ரெண்டா இப்படம் பல விதமான பிரச்சனைகளை கடந்து தான் வெளியானது. விஜய்யின் கடைசி படமான இதற்கு இப்படி நடந்து விட்டதே என்று ரசிகர்கள் ரொம்ப ஃபீல் பண்ணார்கள்.

    படம் முழுமையாக ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. வசூலும் குறைவு தான். அனிருத் இசையில் பாடல்கள் எல்லாமே தரம் தான்.

    தற்போது, இந்த படத்தில் இடம்பெற்ற ‘ராவண மவன்டா’ பாடல் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர். இதனால் விஜய்யின் ஃபேன்ஸ் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளார்கள். 

  • முதல் நாளே ஜன நாயகனை பின்னுக்கு தள்ளிய விஸ்வநாத் & சன்ஸ்!

    முதல் நாளே ஜன நாயகனை பின்னுக்கு தள்ளிய விஸ்வநாத் & சன்ஸ்!

    சூர்யா நடித்த புதிய படம் தான் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. இப்படம் நேற்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உலகமெங்கும் வெளியானது.

    இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இதன் முதல் நாள் வசூல் உலக அளவில் ரூ.27.51 கோடியாம்.

    சூர்யாவுக்கு தமிழ்நாட்டை போல் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அங்கு இப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் செய்த முதல் நாள் வசூல் ரூ.6.75 கோடியாம்.

    இந்த ஆண்டு (2026) ஜூலை 23-ஆம் தேதி வெளியான ‘தளபதி’ விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தின் தெலுங்கு வெர்ஷன் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் செய்த முதல் நாள் வசூல் ரூ.4.25 கோடி மட்டுமே தான். இதன் மூலம் சூர்யாவுக்கு தான் டோலிவுட்டில் அதிக மாஸ் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

  • ஒரு பேரே வரலாறு பாடல் வீடியோவை வெளியிட்ட ஜன நாயகன் டீம்!

    ஒரு பேரே வரலாறு பாடல் வீடியோவை வெளியிட்ட ஜன நாயகன் டீம்!

    ‘தளபதி’ விஜய் தான் இப்போது தமிழ்நாட்டின் CM-ஆக இருக்கிறார். அரசியலுக்காக சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டார்.

    இவர் கதாநாயகனாக நடித்துள்ள கடைசி படமான ‘ஜன நாயகன்’ சமீபத்தில் தான் திரைக்கு வந்தது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இதில் தளபதிக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வலம் வந்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்போது, இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஒரு பேரே வரலாறு’ பாடலின் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். 

  • Jana Nayagan Box Office : இதுவரை பாக்ஸ் ஆபிஸில் ஜன நாயகன் செய்த வசூல்?

    Jana Nayagan Box Office : இதுவரை பாக்ஸ் ஆபிஸில் ஜன நாயகன் செய்த வசூல்?

    16 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. கர்நாடகாவில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’, சூர்யாவின் ‘கருப்பு’ போன்ற தமிழ் படங்களை விநியோகம் செய்தது வெங்கட்.கே.நாராயணாவின் ‘KVN புரொடக்ஷன்ஸ்’ தான்.

    இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் படம் தான் ‘ஜன நாயகன்’. இதில் கதாநாயகனாக ‘தளபதி’ விஜய் நடித்திருக்கிறார். 

    தெலுங்கில் ஹிட்டான ‘பகவந்த் கேசரி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இதை ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். இதில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து டூயட் பாடி ஆடியிருக்கிறார் பூஜா ஹெக்டே.

    இதற்கு இசையமைத்திருப்பது அனிருத் தான். கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளிவந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை உலக அளவில் ரூ.310.03 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • ரிலீஸானது ஜன நாயகன் படத்தின் தளபதி கச்சேரி பாடல் வீடியோ!

    ரிலீஸானது ஜன நாயகன் படத்தின் தளபதி கச்சேரி பாடல் வீடியோ!

    தமிழ்நாடு முதலமைச்சர் ஆக இருப்பவர் ஜோசப் விஜய். இவரது சினிமா கரியரில் கடைசி படமாக உருவானது ‘ஜன நாயகன்’.

    கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான இந்த படத்தில் பூஜா ஹெக்டே தான் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர்களுடன் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் நடித்திருந்தனர். 

    ஹெச்.வினோத் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் ஏமாற்றத்தை தந்தது. இருப்பினும் இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல்கள் அனைத்துமே ஆல்ரெடி வைரல் ஹிட்.

    தற்போது, இப்படத்தில் இடம்பெற்ற ‘தளபதி கச்சேரி’ பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர். இதனால் விஜய்யின் ரசிகர்கள் செம்ம ஹேப்பியாகி ஆட்டம் போட்டு வருகிறார்கள்.

  • Jana Nayagan Box Office : 325 கோடிய நெருங்க கூட ஜன நாயகனுக்கு வாய்ப்பு இல்ல!

    Jana Nayagan Box Office : 325 கோடிய நெருங்க கூட ஜன நாயகனுக்கு வாய்ப்பு இல்ல!

    15 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. ‘தளபதி’ விஜய்க்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

    இருப்பினும் அரசியல் என்ட்ரியால் ‘ஜன நாயகன்’ தான் கடைசி படம் என்று அவர் எடுத்த முடிவால் ரசிகர்களுக்கு பெரிய வருத்தம் உண்டு. ஏனெனில், அந்த அளவுக்கு அவர் திரையில் வந்த படங்களை அவர்கள் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள்.

    தற்போதைய தமிழ்நாட்டின் CM-ஆக இருக்கும் விஜய்யின் ‘ஜன நாயகன்’ கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி ஏகப்பட்ட சிக்கல்களை தாண்டி தான் ரிலீஸ் ஆனது.

    ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் பாசிட்டிவ் கேரக்டர்களில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன், கெளதம் வாசுதேவ் மேனன், நெகட்டிவ் கேரக்டர்களில் பிரகாஷ் ராஜ், பாபி தியோல், சுனில், பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது, இப்படம் கடந்த 15 நாட்களில் உலக அளவில் ரூ.308.67 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

  • Jana Nayagan Box Office : 2 வாரம் ஆகியும் ஜன நாயகன் வசூல் இவ்ளோதானா?

    Jana Nayagan Box Office : 2 வாரம் ஆகியும் ஜன நாயகன் வசூல் இவ்ளோதானா?

    2 வாரத்தில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. ‘தி கோட்’ படத்துக்கு பிறகு விஜய்யின் 69-வது படத்துக்காக ரசிகர்கள் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

    அவர்களுக்காக கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி உலகமெங்கும் பல திரையரங்குகளில் ‘ஜன நாயகன்’ வெளியானது. இந்த படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு’ போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார்.

    இதில் தளபதியுடன் சேர்ந்து மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கெளதம் மேனன், ஏ.எல்.அழகப்பன், ஶ்ரீமன், ஶ்ரீநாத், நரேன், பிரியாமணி, சுனில், மதன் கௌரி, மோனிஷா பிளெஸ்ஸி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

    இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தது. தற்போது, இந்த படம் கடந்த 14 நாட்களில் உலக அளவில் ரூ.306.31 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

  • ஜன நாயகன் வினோத் அடைந்திருக்கும் உச்சம் மகத்தானது – இரா.சரவணன்!

    ஜன நாயகன் வினோத் அடைந்திருக்கும் உச்சம் மகத்தானது – இரா.சரவணன்!

    இயக்குநர் ஹெச்.வினோத் – நடிகரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ‘தளபதி’ விஜய் காம்பினேஷனில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரைக்கு வந்த படம் ‘ஜன நாயகன்’. ஹெச்.வினோத் குறித்து தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருபவர் இவரது நண்பரும், பிரபல இயக்குநருமான இரா.சரவணன்.

    ‘ஜன நாயகன்’ படத்தின் கதை விவாதத்திலும் கலந்து கொண்ட இவருடைய இன்றைய பதிவில் “‘துணிவு’ படம் ரிலீஸான நாளில் இயக்குநர் ஹெச்.வினோத் எதுகுறித்த சலனமும் இல்லாமல், சபரிமலையில் பாய் விரித்துத் தூங்கிய காட்சியைச் சட்டெனப் புகைப்படம் எடுத்தேன். எதையுமே சட்டை செய்யாத அவருடைய மனநிலை குறித்து அந்தப் புகைப்படத்துடன் அப்போது நான் எழுதிய பதிவு பெரும் கவனத்தைப் பெற்றது. 

    ‘ஜனநாயகன்’ கதை விவாதம் முடிந்த நாளில் ஒரு பாறை மீது வினோத் படுத்துத் தூங்கிய காட்சியையும் அவருக்குத் தெரியாமல்தான் புகைப்படம் எடுத்தேன். ‘ஜனநாயகன்’ ரிலீஸான நாளில் அந்தப் புகைப்படத்துடன் எதையுமே மண்டைக்கு ஏற்றிக்கொள்ளாத அவருடைய மனநிலையைப் பதிவிட்டிருந்தேன். அடுத்த அரை மணி நேரத்திற்குள் பதறிப்போய் போன் பண்ணி, “தயவுசெஞ்சு அதை ரிமூவ் பண்ணிடு” என்றார் வினோத். “நீங்க தூங்குற வீடியோவே என்னிடம் இருக்கு. இதை ரிமூவ் பண்ணச் சொன்னீங்கன்னா, அந்த வீடியோவை அப்லோட் பண்ணிடுவேன்” எனச் சிரித்தேன். போனை வைத்துவிட்டார். 

    கோரைப் பாயிலும், மலையிலும் வினோத் படுத்துத் தூங்கும் புகைப்படங்களை நான் எடுக்கக் காரணம், அந்தத் தூக்கத்தில் தெரிந்த நிம்மதி. நல்ல தூக்கத்திற்காக அவர் ஏங்கிய நாட்களை நான் கவனித்திருக்கிறேன். 

    சினிமா பண்ணுவதற்கு முன்னரே வினோத் எனக்கு நல்ல பழக்கம். “குடிசையா இருந்தாலும் சரி, கொசுக்கடி இல்லாத வீட்ல வாழ்ந்துட்டா போதும்” என்பார் அடிக்கடி. கோயம்பேடு மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கொசுக்கடியால் படாதபாடு பட்ட அவருடைய அனுபவம் அப்படிப்பட்டது. இன்று வினோத் அடைந்திருக்கும் உச்சம் மகத்தானது. 

    சமீபத்தில் கலாட்டா சேனலில் ‘ஜனநாயகன்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடிய நாளில் வினோத்தின் நெருங்கிய நண்பனாக என்னை அழைத்திருந்தார்கள். நாங்கள் இருவரும் பேசிச் சிரிப்பது போன்ற புகைப்படத்தை திரையில் காட்டி பேசிக்கொள்ளச் சொன்னார்கள். “நாங்க ரெண்டு பேரும் பேசுறதை நீங்க ஒளிபரப்ப முடியாதே…” என்றார் வினோத். பிறகு வினோத்தை நான் பேட்டி எடுக்கும் வகையில் கேள்வி கேட்க ஏற்பாடானது. சட்டெனக் கேட்டேன்…

    “கொசுக்களே இல்லாத தேசத்தில்கூட உங்களால் இப்போது குடிபோக முடியும். ஆனால், கொசுக்கடி காலத்தில்கூட நிம்மதியாகத் தூங்கிய நீங்கள், இப்போ நிம்மதியா தூங்குறீங்களா?” என்றேன். நொடியும் தாமதிக்காமல், “இல்லை” என்றார் வினோத்!” என்று கூறியுள்ளார்.

  • Jana Nayagan Box Office : 13-வது நாளில் வெறும் 2.39 கோடி வசூலித்த ஜன நாயகன்!

    Jana Nayagan Box Office : 13-வது நாளில் வெறும் 2.39 கோடி வசூலித்த ஜன நாயகன்!

    13 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. ‘பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பகவதி, கில்லி, போக்கிரி, துப்பாக்கி, கத்தி’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தன்னுடைய திரையுலக வாழ்வில் ‘தளபதி’ விஜய் ரசிகர்களுக்காக கொடுத்திருக்கிறார். 

    இப்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் ஆக இருக்கும் விஜய், கடைசியாக தனது 69-வது படத்துடன் சினிமா கரியருக்கு குட் பை சொல்லிவிட முடிவெடுத்து விட்டார். இந்த ‘தளபதி 69’ தான் ‘ஜன நாயகன்’.

    பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர், அதுவும் அரசியல் என்ட்ரி என இப்போதைய மாஸுக்கு ஒரு நல்ல கதையை டிக் அடிக்காமல் கடைசி படத்தை விஜய் மிஸ் பண்ணி விட்டார் என்பதே பல ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. 

    ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். தற்போது, இப்படம் கடந்த 13 நாட்களில் உலக அளவில் ரூ.303.74 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Jana Nayagan Box Office : ஒரு வழியா 300 கோடி கிளப்பில் இணைந்த ஜன நாயகன்!

    Jana Nayagan Box Office : ஒரு வழியா 300 கோடி கிளப்பில் இணைந்த ஜன நாயகன்!

    12 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் பெரும் போராட்டம். முடித்த படத்தை தியேட்டருக்கு கொண்டு வருவதற்கு அதைவிட பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

    எல்லாம் தாண்டி தியேட்டரில் ரிலீஸ் செய்தால், படம் நன்றாக இருந்தால் தானே கல்லா கட்ட முடியும். இதில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் பார்த்து விட்டது ‘ஜன நாயகன்’.

    கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி வெளி வந்த இந்த படம் தான் தமிழக முதல்வரும், நடிகருமான ‘தளபதி’ விஜய்-க்கு கடைசி படம். தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு’ ஆகிய படங்களை இயக்கிய வினோத் தான் இதை இயக்கியிருக்கிறார்.

    படத்தின் ரிசல்ட் உலகத்துக்கே தெரியும், விஜய்-க்காக மட்டுமே ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று பார்க்கிறார்கள். ஒரு வழியாக கடந்த 12 நாட்களில் உலக அளவில் ரூ.301.35 கோடி வசூல் செய்து விட்டது.