Category: reviews

  • Ram And Leela Box Office : ராம் அண்ட் லீலாவின் 2வது நாள் வசூல் இவ்ளோதானா?

    Ram And Leela Box Office : ராம் அண்ட் லீலாவின் 2வது நாள் வசூல் இவ்ளோதானா?

    2 நாட்களில் ‘ராம் அண்ட் லீலா’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் தான் ரியோ ராஜ் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

    இதையடுத்து சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். இவர் நடிப்பில் தயாராகி உள்ள புதிய படம் தான் ‘ராம் அண்ட் லீலா’.

    இப்படம் நேற்று முன்தினம் தியேட்டர்களில் வெளியானது. ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக வர்திகா நடித்துள்ளாராம்.

    இதற்கு வரும் விமர்சனங்கள் கொஞ்சம் நெகட்டிவ்வாக தான் இருக்கிறது. தற்போது, இப்படம் கடந்த 2 நாட்களில் உலக அளவில் ரூ.59 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

  • வயசு வித்தியாசம் பிரச்னை.. 2வது கல்யாண பாதிப்பு.. சூர்யாவோட விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம் இதோ!

    வயசு வித்தியாசம் பிரச்னை.. 2வது கல்யாண பாதிப்பு.. சூர்யாவோட விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம் இதோ!

     

    சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், ராஜீவ் மேனன், நாசர், காளி வெங்கட், பவானிஸ்ரீ, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    வாரிசு படம் போல குடும்ப ரசிகர்களை டார்கெட் செய்து சூர்யா நடித்துள்ள இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வாரிசு படத்தை போல கிரிஞ்சாக இல்லாமல் எதிர்பார்த்த அளவுக்கு ஃபீல் குட் படமாகவே வந்துள்ளது.

    துப்பாக்கிச் சுடும் வீரராக விஸ்வநாத் கதாபாத்திரத்தில் அப்படியே அந்த கதாபாத்திரத்தின் எண்ண ஓட்டம், விஸ்வநாத் திருமணத்தை வெறுப்பது ஏன்? கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்தாலும் குடும்ப பந்தயத்தில் இணைய முடியாமல் அவரை எது தடுக்கிறது.

    வாரிசுக்காக அவர் பார்த்த ஒரு வேலையால் அவருக்கும் மமிதா பைஜுவுக்கும் இடையே ஏற்படும் ஒரு உறவு? ஆனால், ரொம்ப ஒட்டாத அப்புறம் வருத்தப்படுவ என அட்வைஸ் சொல்லி மமிதா பைஜுவை அனுப்பி விடுவது என பொறுப்புள்ள ரிச் மேன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார் சூர்யா.

    visawantha and sons

    மரியம் ஜார்ஜ் வரும் அந்த டிவி இண்டர்வியூ சீன் சூர்யா மீது மமிதா பைஜுவுக்கு காதலை வரவைக்கும் காட்சி எல்லாம் ரசிக்கவும் சூர்யாவுக்கு இப்படியொரு சூப்பரான படத்தைக் கொடுத்து விட்டாரே வெங்கி அட்லூரி என்றும் கைதட்ட வைக்கிறது.

    சூர்யா, மமிதா பைஜுவை தாண்டி இந்த படத்தை அதிகம் தாங்கிப் பிடிப்பது நடிகை ராதிகா சரத்குமார் தான். அசால்ட்டாக அவர் வரும் காட்சிகளில் எல்லாம் மொத்த பேரையும் தனது நடிப்பால் காலி செய்து ரசிகர்களை மகிழ்விக்கிறார். 

    2வது பாதியில் அவர் இல்லாதது தான் படத்திற்கு பெரிய குறையாகவே மாறிவிடுகிறது. அப்பாவாக நடித்துள்ள ராஜீவ் மேனன் நடிகை ரவீனா டாண்டனை 2வது திருமணம் செய்துக் கொள்வதால் தான் திருமணத்தையே சூர்யா வெறுக்கிறார் என்பது போன்ற காரணங்கள் ரொம்பவே வலிமையுடன் சொல்லப்பட்டுள்ளது.

    ஆனால், முதல் பாதி படத்துக்கும் 2வது பாதி படத்துக்கும் மார்க் போட வேண்டும் என்றால் முதல் பாதி 80 மார்க்கையும் 2வது பாதி 50 மார்க்குடன் ஜஸ்ட் பாஸ் ஆகிறது.

    குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று இந்த வாரம் பார்க்க ஒரு தரமான படத்தையே சூர்யா கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் இந்த படம் சிறப்பாகவே ஓடும் என்றே தோன்றுகிறது. சூர்யா ரசிகர்களை தாண்டி பொது மக்களையும் நிச்சயம் இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் கவரும்.

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – குட் பாய்!
    ரேட்டிங் – 3.75

  • லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அசத்தினாரா?.. டிசி படம் எப்படி இருக்கு?.. ஹானஸ்ட் விமர்சனம்!..

    லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அசத்தினாரா?.. டிசி படம் எப்படி இருக்கு?.. ஹானஸ்ட் விமர்சனம்!..

    அருண் மாதேஸ்வரன் படங்கள் என்றாலே ஸ்லோமோஷனில் தூங்க வைத்து நகரும் திரைக்கதையை பார்த்து பார்த்து இந்த முறையும் அப்படி ஒரு படத்தை தான் பார்க்கப் போகிறோம் என முன் முடிவுடன் தியேட்டருக்கு பெரிய ஹைப் இல்லாமல் போய் அமர்ந்த விமர்சகர்களையே தம்பி இது லோகேஷ் கனகராஜ் படம்ப்பா என தட்டி எழுப்பிவிட்டனர்.

    இந்த படத்தில் உள்ள விறுவிறுப்பில் ஒரு பாதியாவது ரஜினிகாந்த் நடித்த மல்டி ஸ்டாரர் படமான கூலி படத்தில் இருந்தால் அந்த படம் அசால்ட்டாக 1000 கோடி வசூல் செய்திருக்கும். அனிருத் ஜெயிலர் 2வுக்கு முன்னதாக டிசி படத்திலேயே தனது பெரிய சம்பவத்தை செய்து சாய் அபயங்கரிடம் இருந்து ரசிகர்களை சற்றே காப்பாற்றியுள்ளார்.

    பார்வதியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி வாம்மா மின்னல் என்பது போல வந்த வேகத்தில் செத்துப் போகிறார். பார்வதியை பறிகொடுத்த தேவதாஸ் சந்திராவுடன் சேர்ந்தாரா? இல்லையா? என்பதை ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ரா ஆக்‌ஷன் படமாக அருண் மாதேஸ்வரன் கொடுத்துள்ளார். 

    அனிருத் இசைக்காகவே 200 ரூபாய் கொடுத்து தியேட்டருக்குப் போய் இந்த டிசி படத்தை பார்க்கலாம். 2 மணி நேரம் 27 நிமிடமும் பட்டாசு தான்.

    டிசி – பிளாக்பஸ்டர்!

    ரேட்டிங் – 3.75

  • கட்டா குஸ்தி 2 பிளாக்பஸ்டர்!.. விஷ்ணு விஷால் வின் பண்ணிட்டார்!.. டிவிட்டர் விமர்சனம்!..

    கட்டா குஸ்தி 2 பிளாக்பஸ்டர்!.. விஷ்ணு விஷால் வின் பண்ணிட்டார்!.. டிவிட்டர் விமர்சனம்!..

    விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்து ஏற்கனவே வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் விஷ்ணு விஷாலுக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த நிலையில்தான் இன்று இந்த படத்தின் இரண்டாம் பாகம் உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய செல்லா ஐய்யாவு இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.

    படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். காமெடி, ஸ்போர்ட்ஸ் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் எல்லாம் கலந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படத்திற்கு சீன் கோல்டன் இசையமைத்திருக்கிறார்..

    twitt

    இந்த படம் இன்று காலை தியேட்டரில் வெளியாகும் நிலையில் நேற்று இரவு சில முக்கிய ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்களிடம் படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘விஷ்ணு விஷால் மீண்டும் செய்து காட்டியிருக்கிறார்.. கண்டிப்பாக இந்த படம் மற்றொரு பிளாக் பாஸ்டர்.. நல்ல ஒரு பொழுதுபோக்கு திரைப்படம்.. படம் குடும்பத்தின் மதிப்புகளையும் பேசுகிறது.. கருணாஸின் காமெடி செம ஃபன்’ என பதிவிட்டிருக்கிறார்..

    twitt

    மற்றொருவர் ‘கட்டா குஸ்தி 2 வின்னர்.. பக்கா கமர்சியல் ஃபேமிலி பொழுதுபோக்கு திரைப்படம்.. முதல் பாதி இரண்டாம் பாதி இரண்டுமே சூப்பர்.. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் கருணாஸின் காமெடிகள் சிரிக்க வைக்கிறது.. குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சிறுமியும் சூப்பர்.. படத்தில் முதல்வர் விஜய் பற்றிய ரெஃப்ரன்ஸ் வருகிறது.. தியேட்டரில் விசில் பறக்கும்.. கேமியோ ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது ..படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அடுத்த பாகத்திற்கு லீட் வைக்கிறார்கள்.. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்..படம் பார்த்தவர்கள் இப்படி பாசிட்டிவான விமர்சனங்களை சொல்லி வருவதால் கட்டாகுஸ்தி 2 கண்டிப்பாக விஷ்ணு விஷாலுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என கணிக்கப்படுகிறது..

  • பீரியடு பிலிம்னுட்டு இப்படியா எடுப்பாங்க? கர படத்தை வறுத்தெடுத்த புளூசட்டைமாறன்!

    பீரியடு பிலிம்னுட்டு இப்படியா எடுப்பாங்க? கர படத்தை வறுத்தெடுத்த புளூசட்டைமாறன்!

    விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் கர. தனுஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதை இதுதான். 90களில் ஈராக், குவைத் போர் நடந்தது. இந்த சமயத்தில் இன்டர்நேஷனல் மில்டரி போய் போரை முடித்து வைத்தார்கள். அந்தக் காலகட்டத்தில் நடக்குற கதை. அப்போ பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நடக்குற மாதிரி கதை சொல்லப்பட்டுள்ளது. ஹீரோ தனுஷ் திருட்டு வேலையில் இறங்கி மாட்டிக் கொள்கிறார். அதிகாரியை அடித்துவிட்டு தப்பி விடுகிறார். காதலியை அழைத்து ஆந்திரா போய் ஒரு ஓட்டலில் வேலை செய்கிறார்.

    கொஞ்சநாளில் அவருக்கே சலிப்பு வருகிறது. நாமே ஒரு தொழில் செய்யலாம்னு நினைத்து ஊரில் ஒரு ஓட்டல் வைக்கலாம்னு வர்றாரு. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுல இவரது டிராக்டர் ஓடாம இருக்கு. வங்கியில் டியூ கட்ட வேண்டி இருக்கு. சொத்தை அடமானம் வைத்துதான் கடன் வாங்கி இருக்காங்க. அதனால் சொத்தை வங்கி ஜப்தி செய்கிறது. பெரிய தொகை தேவைப்படுகிறது. அப்போ தான் சொத்தை மீட்க முடியும். அதனால ஹீரோ மறுபடியும் கொள்ளை அடிக்கிறார்.

    இப்போ அதே அதிகாரி மீண்டும் பிடிக்கிறார். அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை. இது ஒரு பீரியட் பிலிம். கதைக்கு சுவாரசியமான திரைக்கதை இல்லை. வங்கி கொள்ளை அடிப்பதுதான் கதை. வங்கியைக் கொள்ளை தான் அடிக்கப் போறாங்கன்னு உயர் அதிகாரிக்குத் தெரிந்தபிறகும் அவரது நடவடிக்கை பெரிதாக இல்லை. சின்ன விவசாயிகள் கூட வீட்டு வீட்டுக்கு டிராக்டர் வாங்கி வைப்பது எல்லாம் அபத்தம். வங்கி அதிகாரின்னா வசூல் பண்ணித்தானே ஆகணும். அவரைக் கெட்டவனா காட்டுறாங்க.

    கந்து வட்டிக்காரன் மாதிரி காட்டுறாங்க. சூரஜ் வெஞ்சனமூர்த்தி சிரிப்பு போலீஸ் அதிகாரியாகத் தான் காட்டுறாங்க. வில்லன் மாதிரி இல்லை. படம் டெட் ஸ்லோவா இருக்கு. படத்தைப் பார்க்க போக முக்கிய காரணம் தனுஷைத் தாண்டி போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவோட படம். நல்லா இருக்கும்னு நினைச்சா இது விறுவிறுப்பு இல்லாம எப்படா முடியும்கற மாதிரி இருந்தது. ரொம்ப போராகிப் போச்சு என்கிறார் பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன்.

  • கர படம் தரம்!.. சூப்பர் வில்லேஜ் திரில்லர்!.. கன்பார்ம் ஹிட்!.. டிவிட்டர் விமர்சனம்..

    கர படம் தரம்!.. சூப்பர் வில்லேஜ் திரில்லர்!.. கன்பார்ம் ஹிட்!.. டிவிட்டர் விமர்சனம்..

    போர்த்தொழில் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இன்று ரிலிஸாகியுள்ள திரைப்படம் கர. இப்படத்தின் முதல் காட்சி முடிந்துவிட்ட நிலையில், படம் பார்த்த பலரும் படம் எப்படி இருக்குது என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வருகிறது.
    படம் பார்த்த எல்லோருமே படம் நன்றாக இருப்பதாகவும்,ஒரு நல்ல வில்லேஜ் திரில்லராக கர திரைப்படம் உருவாகியிருப்பதாகவும், தனுஷ் சிறப்பாக நடித்திருப்பதாகவும், விக்னேஷ் ராஜா சிறப்பாக இயக்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள்..

    இப்படம் பார்த்த ஒருவர் டிவிட்டர் பக்கத்தில் ’Intense rural heist thriller படமாக கர உருவாகியிருக்கிறது. தனுஷ் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், மமித பைஜூ ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள், ஜிவி பிரகாஷ் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். விஸ்வல் அனைத்துமே நன்றாக இருக்கிறாது. முதல் 15 நிமிட காட்சி மிகவும் சிறப்பு.. அடுத்து படம் ஒரு எமோஷனல் கதைக்கு செல்கிறது.. அதன்பின் படம் திரில்லருக்கு மாறுகிறது. இடைவேளை காட்சி மிகவும் சிறப்பு..

    படத்தின் இரண்டாம் பாதி என்கேஜாக செல்கிறது. வழக்கம்போல் தனுஷ் படத்தை தனது தோளில் தூக்கி சுமந்திருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் சுராஜ் வஞ்சரமுடு, ஜெயராம் ஆகியோர் ஸ்கோர் செய்கிறார்கள். மிக்கி மௌஸ் கேமில் வருவது போல தனுசை துரத்தும் போலீஸ் கதை நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அங்கங்கே காமெடி காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. ஜிவி பிரகாஷின் பின்னணி இசை தரம்.. ஆர்ட் டைரக்சன் சிறப்பாக இருக்கிறது.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

    மற்றொருவரோ ‘ முதல் 15 நிமிட காட்சி, இடைவேளையில் வரும் கொள்ளை காட்சி, கிளைமாக்ஸுக்கு முன் வரும் காட்சி தியேட்டரில் பிளாஸ்டாக இருக்கிறது. வழக்கம்போல் தனுஷ் அசத்தியிருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங், சண்டை காட்சிகள் எல்லாமே தரமாக இருக்கிறது படம் வின்னர்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.

    கர படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதால் இந்த படம் கண்டிப்பாக தனுஷ் ரசிகர்களை கவர்வதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

  • ரெண்டு ஜெய்சங்கர் படத்தையாவது பார்த்து கதை எழுத வேண்டியதுதானே…! மிஸ்டர் எக்ஸை வறுத்த புளூசட்டை மாறன்

    ரெண்டு ஜெய்சங்கர் படத்தையாவது பார்த்து கதை எழுத வேண்டியதுதானே…! மிஸ்டர் எக்ஸை வறுத்த புளூசட்டை மாறன்

    மனு ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் மிஸ்டர் எக்ஸ். இந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தை பிரபல யூடியூபர் புளூசட்டை மாறன் இப்படி சொல்கிறார்.

    இது ஒரு ஸ்பை திரில்லர் படம். படத்தோட ஆரம்பத்துல ஹீரோ ரா ஏஜென்ட்டா வாராரு. ஜி20 மாநாடு சென்னையில் நடக்குது. இந்தியாவுல நியூக்ளியர் டிவைஸ ஒரு ஏஜென்ட் பாதுகாத்து வர்றாரு. அவரையும், அந்த டிவைஸையும் கடத்திக் கொண்டு போய் வெளிநாட்டுல வச்சிடுறாங்க.

    இந்த ஏஜென்டையும், டிவைஸையும் பாதுகாப்பா கொண்டு வரணும்னு ஒரு வேலையை ஹீரோக்கிட்ட கொடுக்குறாங்க. அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை. முதல் பாதியில் நிறைய கேரக்டர்கள். ஓரளவு ஓகே. 2வது பாதியில சஸ்பென்ஸ் மேல சஸ்பென்ஸ் வச்சி, டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் வச்சி கதையைவே குழப்பிட்டாங்க. அதிலும் மெய்னா தங்கச்சி கேரக்டரைக் கொண்டு வந்து காட்டுனதுக்கு பிறகு பல்லை இளிச்சிடுது சஸ்பென்ஸ்.

    படம் ஆரம்பிச்சதுல இருந்து கடைசி வரைக்கும் டுவிஸ்ட் வைக்கிறேன் பாருன்னு கடைசில ஒரு டுவிஸ்ட் வைக்கிறாங்க. அது தேவையே இல்லாத டுவிஸ்ட். இந்த மாதிரி படங்களை எல்லாம் பார்த்துட்டு நாம வெளியே வரும்போது நம்முடைய ராணுவ வீரர்கள் தியாகம் பண்ணி இருக்கணும். இந்த மாதிரி ஏஜென்ட்டுகள், உளவாளிகள் எல்லாம் எவ்ளோ உயிரைக் கொடுத்து நம்மைக் காப்பாத்திருப்பாங்க அப்படிங்கற சந்தோஷத்தோட, திருப்தியோட வரணும். ஆனா இவங்க என்ன பண்ணிருப்பாங்கன்னா நம்ம ஏஜென்ட் எல்லாரையுமே டபுள் ஏஜென்ட் மாதிரி காட்டுறாங்க. அவங்களைப் பார்த்து பயப்படுற மாதிரி படம் எடுத்து வச்சிருக்காங்க.

    இவங்க ஹாலிவுட் மாதிரி ஸ்பை திரில்லர் படம் எடுக்கப் போறேன்னு கிளம்புனது எல்லாம் தப்பு கிடையாது. அது ரொம்ப ஈசியான வழி. நிறைய படம் ரெஃப்ரன்ஸ் இருக்கு. அதைப் பார்த்து ஒழுங்கா ஒரு கதையை எழுதி இருக்கலாம். குறைஞ்சது ரெண்டு ஜெய்சங்கர் படத்தையாவது பார்த்து கதை எழுதி இருக்கலாம். இவங்க போட்டு குழப்பி சாகடிச்சிட்டாங்க. இந்தப் படத்துக்கு எல்லாம் ஹீரோக்கு எதுக்கு பெரிய ஃபேமிலி பேக்ரவுண்டு ஸ்டோரி?

    வில்லனுக்கு எதுக்கு பிளாஷ்பேக்.? இது மாதிரி தேவையில்லாத விஷயத்தை எல்லாம் படத்துல வச்சி கடுப்பேத்தி விட்டாங்க. ஹீரோயிசம் பண்றேங்கற பேருல ஒரு சாகசம் பண்றாரு. சி4 பாம் நிலத்துல வெடிச்சா பெரிய சேதம் வரும்னு அதைக் கையிலே எடுத்துப் போய் நடுக்கடல்ல வெடிக்க வைக்காரு. அது பயங்கரமா வெடிக்கும். வெடிச்சி அடுத்த செகண்டே ஹீரோ உசுரோட வர்றாரு.

    எப்படிடா தப்பிச்சி வந்தாருன்னு பார்த்தா அவரு அண்டர்வேர்ல்டு ஸ்பெஷலிஸ்ட். தண்ணிக்குள்ள தம் கட்டி நீச்சல் அடிச்சி வருவாரு. திரைக்கதையில கோட்டை விட்டுட்டாங்க. படத்துல நிறைய கிரின்ச் சீனையா வச்சி படத்தையே காலி பண்ணிட்டாங்க. படம் முழுக்க வயிறு முட்ட பொங்கலைத் தின்னுட்டு உட்கார்ந்து பார்த்த மாதிரியே இருந்துச்சு என்கிறார் புளூசட்டை மாறன்.

  • மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்.. ஆர்யாவுக்கும், கெளதம் ராம் கார்த்திக்கும் மறுபடியும் பல்பு தான்!..

    மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்.. ஆர்யாவுக்கும், கெளதம் ராம் கார்த்திக்கும் மறுபடியும் பல்பு தான்!..

    அபிஷன் ஜீவிந்த், கென் கருணாஸ் எல்லாம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நிலையில், ஆர்யா, கெளதம் கார்த்திக்கு எல்லாம் என்ன ஆனது இப்படியொரு இடியாப்ப சிக்கல் கதையை தேடி நடித்து டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

    விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகனை வைத்து எஃப்ஐஆர் திரைப்படத்தை எடுத்த மனு ஆனந்த் அந்த படத்தை விட சூப்பர் படத்தைக் கொடுக்கிறேன் என தனது பேட்டியில் துரந்தர் எல்லாம் கொண்டு வந்து ரிலீஸுக்கு முன்பாக பேசினார்.

    ஆனால், படத்தை பார்த்தவுடன் இதுக்காக இவ்ளோ பில்டப் என்றும் இதுக்கு லெஜண்ட் சரவணா நடித்த லீடர் படமே ஸ்பை த்ரில்லர் படத்தை எப்படி எடுக்கணும்னு பாடம் நடத்தும் போல இருக்கே என ரசிகர்கள் தியேட்டரிலேயே கத்தத் தொடங்கி விட்டனர்.

    இடியாப்ப சிக்கல் கதை: நாட்டையே காப்பாற்றும் மிஸ்டர் எக்ஸ் ஆனால், அது ஆர்யாவும் இல்லை, கெளதம் கார்த்திக்கும் இல்லை என்கிற இடத்திலேயே இருவருக்கும் விபூதி அடித்துவிட்டு இயக்குநர் புதுசாக செட்டாகாத டோப்பாவை மாட்டி சரத்குமாரை ஹீரோவாக ஆரம்பத்தில் காட்டிவிட்டார். அப்புறம் அதே சரத்குமார் தான் ஆர்யாவின் அப்பா, இந்தியாவையும் உங்க அப்பாவையும் காப்பத்துறது தான் உன்னோட மிஷன் இம்பாசிபிள் என மஞ்சு வாரியர் மிஷனை தூக்கி தாலி கட்டி குடும்ப வாழ்க்கை நடத்த திட்டமிட்ட ஆர்யாவிடம் கொடுக்க, அவருக்கு வில்லனாக கெளதம் கார்த்திக் ரைசா வில்சன் உடன் ஜோடி போட்டு குதிக்க, கடைசியில் டைரக்டர் மெயின் வில்லனே நான் தான் என வச்ச ட்விஸ்ட்டை பார்த்து விட்டு ஆளவிடுங்கடா சாமி என தெறித்து ஓட ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.

    ஆர்யா, கெளதம் கார்த்திக்கு மீண்டும் பல்பு தான்: இப்படித்தான் ஆர்யா கேப்டன் படத்தில் நடித்தார். ஹாலிவுட் தரத்தில் படம் எடுக்கிறேன் என பிரடேட்டர்களை எல்லாம் கொண்டு வந்து உப்புமா படத்தைக் கொடுத்து காண்டாக்கினர். அதே வகையில் தான் இந்த படமும் கதை நல்லா இருந்தாலும் திரைக்கதை, உருவாக்கப்பட்ட விதம் எல்லாம் படு மோசம்.

    பிரதமர் மோடிக்கிட்ட பேசிட்டு இருந்துட்டே அடுத்த 10 நிமிஷத்துல கல்பாக்கம் அனல் மின் நிலையத்துக்கு வந்து கிளைமேக்ஸில் மஞ்சு வாரியர் சண்டை போடுறது எல்லாம் காமெடியின் உச்சம். இந்தியாவின் உளவுத்துறையை பெருமைப்படுத்துறோம்னு படம் எடுப்பாங்க பார்த்தால், ட்ரோல் பண்ணி வச்சிருக்காங்க. சரத்குமாருக்காக படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

    ரேட்டிங்: 2.5/5.

  • துரந்தர் மாதிரி இல்லை… ஆனால் ட்ரை செய்திருக்காங்க…Mr X பப்ளிக் விமர்சனம்

    துரந்தர் மாதிரி இல்லை… ஆனால் ட்ரை செய்திருக்காங்க…Mr X பப்ளிக் விமர்சனம்

    ஆர்யா, கௌதம் கார்த்திக்,மஜ்சு வாரியர் மர்றும் சரத்குமார் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் மிஸ்டர் எக்ஸ். FIR வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் மனு ஆனந்தின் இரண்டாவது படமிது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று இப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து மக்கள் கூறுகையில், இனி ஆர்யவை ஆர்யா அலி அம்சா மசாரி என்றுதான் கூப்பிட வேண்டும். ஆர்யா ரா ஏஜெண்டாக இப்படத்தில் நடித்துள்ளார். படம் நன்றாக உள்ளது. நியூக்ளியர் வெப்பனை வெடிக்கவிடாமல் தடுப்பதுதான் படத்தின் கதையே. துரந்தர் மாதிரி இருக்குமா என்று கேட்டல் அப்படி இல்லை . ஆனால் ட்ரை செய்துள்ளார்கள்.படம் நன்றாக உள்ளது. குறிப்பாக மஞ்சு வாரியர், சைரா வில்சன் வேடங்கள் நன்றாக உள்ளது. ஆர்யா, கௌதம் கார்த்திக் மிரட்டுயுள்ளார்கள். ஒரு மாஸ் ஹீரோ நடித்திருந்தால் நிச்சயம் 500 கோடி வசூல் வந்திருக்கும் என்றார்.

    மற்றொரு ரசிகர் கூறுகையில், தமிழில் ஒரு நல்ல முயற்சி, கிளைமேக்ஸ் ட்விஸ்ட் நன்றாக உள்ளது என்று கூறியுள்ளார். மொத்தட்ய்ஹ்தில் இந்த படத்தின் விமர்சனங்கள் பாசிடிவாக வருவதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர்.

  • LIK: படம் எப்படா முடியும்… காட்டு மொக்கையாக இருந்தாலும்…புளுசட்டை மாறனின் LIK விமர்சனம்

    LIK: படம் எப்படா முடியும்… காட்டு மொக்கையாக இருந்தாலும்…புளுசட்டை மாறனின் LIK விமர்சனம்

    தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துவரும் பிரதீப் ரங்க நாதன் நடிப்பில் நேற்று வெளியான படம் LIK . விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2040ல் காதலை தீர்மானிக்கும் ஒரு ஆப் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் எப்படி எல்லாம் ஆதிக்கம் செய்கிறது . அதிலிருந்து அந்த ஹீரோ மீண்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் ஒன்லைன் ஆகும். நல்ல கதையை இன்னும் கொஞ்சம் பெருகேற்றி திரைக்கதை அமைத்திருந்தால் படம் பெரிய வெற்றியை பெற்றிருக்கும் என்பது பலரது கருத்து. படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாளில் நல்ல வசூலையே பெற்றுள்ளது.

    இந்த நிலையில் பிரபல விமர்சகர் புளுசட்டை மாறன் LIK படம் குறித்த விமர்சனத்தை தனது சேனலில் வெளிட்டுள்ளார். அதில் கதையாக பார்த்தால் இது வித்யாசமான கதைதான். ஆனால் அந்த கதையை இவங்களே நம்பவும் இல்லை, அந்த கதைக்கான முடிவை தேடி போகவுமில்லை. கதைபடி மகனை ஆர்கானிக்கா வளர்கிற அப்பா, அப்டேடடா வளர்கிற அம்மா இதில் எது சரி என்பதைதான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இந்த கதையை ஒரு ஹீரோ வில்லன் கதையா கொண்டு போய்டாங்க. இதுதான் இந்த படத்தின் பெரிய பிரச்சனை.

    சரி அதைதான் சரியாக செய்தார்களா என்றால் அதுவும் இல்லை. திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. பல காட்சிகள் இப்படிதான் இருக்கும் என்பதை நாம் முன்கூட்டியே யூகிக்கும் படிதான் உள்ளது காட்சிக அமைப்புகள். காமெடி காட்சிகளும் ஒர்கவுட் ஆகவில்லை. படத்தின் பல காட்சிகள் மேம்போக்காகவே சொல்லியதால் படத்தில் ஒன்றி பார்க்க முடியவில்லை. படம் எப்படா முடியும் என்றே தோன்றியது. இவ்வளவு காட்டு மொக்கையா இருந்தாலும் படத்தை ஓரளவிற்காவது பார்க்க வைப்பது ரவிவர்மன் கேமராவும், மற்றும் சிஜி ஒர்க் தான்.

    இந்த படம் இவ்வளவு காட்டு மொக்கையா இருக்கும் என்பதில் எங்களுக்கு எவ்வித அதிர்ச்சியும் இல்லை. இந்த படம் ட்யூட் படத்திற்கு முன் வரவேண்டியது. ஆனால் படம் எடுத்த்வர்கள் படத்தை பார்த்திருப்பார்கள் அல்லவா. என்ன லட்சனத்தில் வந்திருக்கு என்று. அதனால பாதுகாப்பாக ஏப்ரல் விடுமுறை காலம் மட்டுமின்றி வேறு எந்த படங்களும் போட்டிக்கு இல்லை என்பதால் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். மொத்ததில் படம் ஆடியன்ஸை கனெக்ட் செய்யவே இல்லை என்று கூறியுள்ளார்.