Category: reviews

  • பிரதீப் ரங்கநாதனின் LIK படம் எப்படி இருக்கு?.. ஹானஸ்ட் விமர்சனம் இதோ!

    பிரதீப் ரங்கநாதனின் LIK படம் எப்படி இருக்கு?.. ஹானஸ்ட் விமர்சனம் இதோ!

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், மிஸ்கின், கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, மாளவிகா, ஆனந்த்ராஜ், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் இன்று ஒருவழியாக வெளியான நிலையில், தாறுமாறாக உள்ளதா? அல்லது பிரதீப் ரங்கநாதனின் அடுத்த கிரிஞ்ச் குடோனா என்பது குறித்த விமர்சனத்தை தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

    விக்னேஷ் சிவன் மொக்கை பீஸ் என அஜித் நினைத்து ஒதுங்கிய நிலையில், விடாமுயற்சி எனும் படத்தை மகிழ் திருமேனியை வைத்து எடுத்துக் கொடுத்து ரசிகர்களை அழ வைத்தது தான் மிச்சம். கண்டிப்பாக அஜித் குமார் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தால் குட் பேட் அக்லி படத்தை விட ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருப்பார் என்றே தெரிகிறது.

    டிராகன் படம் அளவுக்கு எல்ஐகே இல்லை என்றாலும் டியூட் படத்தை விட ரொம்பவே பெட்டராக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்

    என்னதான் உலக நாயகன் கமல்ஹாசன் ஹேராம், ஆளவந்தான், விருமாண்டி என படம் பண்ணினாலும் பாக்ஸ் ஆபீஸில் ஓடியது ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா தான். அதே பாணியை தான் பிரதீப் ரங்கநாதனும் பிடித்துள்ளார். ரஜினிகாந்தை தொடர்ந்து விஜய், சிவகார்த்திகேயன் என பலரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் கவரும் படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் பக்காவாக சேர் போட்டு அமர்ந்துவிட்டார்.

    சிவகார்த்திகேயனும் கொஞ்சம் ரூட்டை மாற்றி நடுவில் புரட்சி கருத்தை எல்லாம் பேசி போர் அடித்து வரும் நிலையில், ஜென் ஸி கிட்ஸ்களை கவரும் விதமாக லேசான கருத்துடன் ஜாலியான படத்தை லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலும் பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளார்.

    சீமான் வரும் காட்சிகள், எஸ்.ஜே. சூர்யா வரும் காட்சிகள் எல்லாமே தியேட்டரே தெறிக்கும் காட்சிகளாக எங்கேயும் காம்ப்ரமைஸ் பண்ணாமல் விக்னேஷ் சிவன் இயக்கிய விதம் சிறப்பு.

    LIK ஆப் மூலம் இன்னார்க்கு இன்னார் என்பதை கண்டு பிடிக்கும் லவ் மீட்டரை எஸ்.ஜே. சூர்யா அறிமுகப்படுத்த பிரதீப் ரங்கநாதன் – கீர்த்தி ஷெட்டி காதலை அது பிரிக்கிறது. ஆப்பை விட மனித இதயத்துக்கு வேல்யூ அதிகம் என்பதை ஹீரோ நிரூபிப்பதே படத்தின் கதை.

    பிரதீப் ரங்கநாதன் படத்தை ஜாலியாக குழந்தைகள் என்ஜாய் செய்யும் விதமாக விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தாலும், கெளரி கிஷன் உடனான லிப் லாக் காட்சி மற்றும் ஹீரோயின் அசிங்கமாக பேசும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

    எல்ஐகே ரேட்டிங்: 3.25/5.

  • kalidas 2 Review:  காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

    kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

    பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது. முதல் பாகம் போலவே க்ரைம் மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்ததா என்பதை இங்கே பார்ப்போம்.

    தனது கடந்த கால கசப்பான நிகழ்வுகளின் அழுத்தத்திலிருந்து இன்னும் முழுமையாக வெளிவராத போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் (பரத்) ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. இந்த மர்மமான கொலையை விசாரிக்கத் தொடங்குகிறார் .அஜய் கார்த்தி தான் குற்றவாளி என்று நிரூபிக்க பவானி ஸ்ரீ போராடிகொண்டிருக்கும் நிலையில் அதே அடுக்குமாடி குடியிருப்பில் மேலும் ஒரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழக்கிறார். இதனால், குடியிருப்பு வாசிகளிடத்தில் பயம் அதிகரிக்கிறது. இந்த மர்ம மரணங்களின் பின்னணி என்ன ?, இதற்கு பின்னணியில் இருக்கும் உண்மையான குற்றவாளி யார் ? சவாலான இந்த வழக்கில் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து காளிதாஸ் குற்றவாளியை எப்படி நெருங்குகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

    சூப்பர் ஹீரோ பில்டப்கள் இல்லாமல், தொடர் மன அழுத்தங்களை எதிர்கொள்ளும் ஒரு யதார்த்தமான போலீஸ் அதிகாரியாக பரத் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தோல்விகளைத் தாண்டி உண்மையை நோக்கி நகரும் அவரது நிதானமான உடல்மொழி படத்திற்கு மிகப்பெரிய பலம். நிச்சயம் பரத்திற்கு இந்த படம் நல ரீ எண்ட்ரீயாகவே அமைந்துள்ளது.

    ஒரு பக்கா த்ரில்லர் படத்திற்குத் தேவையான விறுவிறுப்பை முதல் பாதி முழுவதும் தக்க வைத்துள்ளார் இயக்குநர் ஸ்ரீ செந்தில் தேவையற்ற பாடல்களோ, திணிப்புகளோ இல்லாமல் நேரடியாக கதைக்குச் சென்றிருப்பது சிறப்பு. இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறூப்பு முதல் பாதியிலும் இருந்திருந்தால் நிச்சயம் படம்ன் இன்னும்பெரிய வெற்றியை பெற்றிருக்கும். ஆனாலும் கிளைமாக்ஸ் யாரும் எளிதில் யூகிக்க முடியாத வகையில் இருப்பது

    சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. அறிமுக நடிகர் அஜய் கார்த்தி தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார். பவானி ஸ்ரீயின் நடிப்பு கதையின் தீவிரத்தைக் கூட்டுகிறது. பிரகாஷ் ராஜ் மற்றும் கிஷோர் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கேமியோ வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பூவே உனக்காக சங்கீதா இபடத்தில் நடித்துள்ளார். அவரது பாத்திரமும் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ‘காளிதாஸ் 2’ முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை எந்த இடத்திலும் சிதைக்காமல், ரசிகர்களை சீட் நுனியில் அமர வைக்கும் சுவாரஸ்யமான படமாக இது உள்ளது.

  • ஜி.வி.பிரகாஷ்லாம் இல்லையாம்… ஹீரோ ஜார்ஜ் மரியானாம்! ஹேப்பிராஜைக் கலாய்த்த புளூசட்டைமாறன்!

    ஜி.வி.பிரகாஷ்லாம் இல்லையாம்… ஹீரோ ஜார்ஜ் மரியானாம்! ஹேப்பிராஜைக் கலாய்த்த புளூசட்டைமாறன்!

    ஹேப்பிராஜ் படத்தை இயக்குனர் மரியராஜா இளஞ்செழியன் இயக்கியுள்ளார். நேற்று வெளியான இந்தப் படத்தின் விமர்சனம் குறித்து பிரபல யூடியூபர் புளூசட்டைமாறன் என்ன சொல்றாருன்னு பாருங்க.

    ஹீரோ ஒரு பொண்ணுக்கிட்ட லவ்வ சொல்றாரு. அந்தப் பொண்ணு உன்னை லவ் பண்ண முடியாது. கல்யாணமும் பண்ண முடியாதுன்னு சொல்லிடுது. காரணம் ஹீரோவோட அப்பா தானாம். அவர் ஒரு பள்ளியில ஹெச்எம்மா இருக்காரு. அவருக்குக் குதிரை மூட்டைன்னு பட்டப்பேரு வச்சிருக்காங்க.

    இப்போ அந்தப் பொண்ணு சொல்லுது. உன்னை சின்ன குதிரை மூட்டைன்னு சொல்றாங்க. நான் உன்னைக் கட்டிக்கிட்டா குதிரை மூட்டையோட மருமகள்இ சின்ன குதிரை மூட்டையோட பொண்டாட்டின்னு சொல்வாங்க. இது எனக்கு அவமானமா இருக்கும்னு சொல்லி காதலை நிராகரிக்குது.

    இனி இந்த ஊருல நாம இருக்கக்கூடாது. வெளியூருக்குப் போய் நல்ல பொண்ணா பார்த்துக் கட்டலாம்னு போறாரு. போற இடத்துல அங்க ஒரு பொண்ணை செட்டப் பண்ணிடுறாரு. கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ணும்போது அங்கே குதிரை மூட்டை பிரச்சனை மாதிரி இன்னொரு பிரச்சனை வருது. கல்யாணமே நின்னு போகுது. அதுக்கு அப்புறம் என்னாச்சுங்கறதுதான் கதை.

    இந்தக் கதையை ரெண்டரை மணி நேரம் எடுத்து வச்சிருக்காங்க. கதை நல்ல கதைதான். அதை முதல்ல கொஞ்சம் எடுத்து வச்சிட்டு கடைசியில டச் பண்றாங்க. இடையில ரெண்டு மணி நேரம் கொலையா கொல்றாங்க. கடைசியில கொஞ்சம் நல்லாருக்கு. அந்தக் கடைசி கொஞ்ச நேரத்துக்காக உசுர எல்லாம் விட முடியாது. இவங்க எடுத்துக்கிட்ட கதையை இவங்களுக்கே புரியாம எடுத்து வச்சிருக்காங்க.

    மையக்கதை நல்லா தான் இருக்கு. அதைக் காமெடியா சொல்றேன்னு பயங்கரமா எரிச்சல் பண்ணிட்டாங்க. இந்தப் படத்தோட ஹீரோ ஜிவி.பிரகாஷ் கிடையாது. ஜார்ஜ் மரியான்தான். அவர் கடைசி கொஞ்ச நேரத்தை எடுத்துக்குறாரு. கடைசி கொஞ்ச நேரத்துக்காக இந்தரெண்டு மணி நேரம் படம் பார்க்க உங்க பாடி தாங்குமான்னு மட்டும் பார்த்துக்கோங்க என்று செம கலாய் கலாய்த்துள்ளார் புளூசட்டை மாறன்.

  • பர்ஸ்ட் ஆஃப் சுமார்தான் ஆனால் செகண்ட் ஆஃப் …யூத் படம் குறித்து புளு சட்டை மாறன் விமர்சனம்

    பர்ஸ்ட் ஆஃப் சுமார்தான் ஆனால் செகண்ட் ஆஃப் …யூத் படம் குறித்து புளு சட்டை மாறன் விமர்சனம்

    பார்வதா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் கருப்பையா சி.ராம் மற்றும் சுலோச்சனா குமார் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள படம் யூத். அசுரன் படம் மூலம் அறிமுகம் ஆன கென் கருணாஸ் இயக்கி நடித்திருக்கும் இந்த படத்தில் அவருடன் னிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் ஆகியோரும், முக்கியக் கதாபாத்திரங்களில் தேவதர்ஷினி மற்றும் மலையாள முன்னணி நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு ஆகியோரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

    படத்தின் முதல் நாள் வசூல் கிட்டதட்ட ரூ.3 கோடிக்கு மேல் வசூல் ஆனது பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் நல்ல வசூலை குவிக்கும் என்று சினிமா ஆர்வலர்கள் கூறுகிறார்கள்

    இந்த நிலையில் யூத் படம் குறித்து புளு சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் விமர்சனம் வெளியிட்டுள்ளார். அதில் படத்தின் முதல் பகுதி சுமாராகத்தான் உள்ளது. குறிப்பாக கதையின் நிறைய இடங்களில் இவர்களுக்கு ஏற்றார் வளைச்சு வளைச்சு எடுத்திருக்கிறர்கள். இடைவேளை சீன் இவர்களுக்கு ஏற்றார்போல கம்போசிங் செய்திருக்கிறார்கள். ஆனால் இரண்டாம் பாதி நன்றாகவே உள்ளது. லவ், படிப்பு மேமிலி என கலந்து கொடுத்திருப்பதால் இறுதி வரை நன்றாகவே உள்ளது. முதல் படத்திலேயே கென் கருணாஸ் ஒரு ஹீரோவாகவும் இயக்குனராக வெற்றி பெற்றிருக்கிறார். சிம்பு மாதிரி விரல் வித்தையெல்லாம் காட்டி குரங்கு சேட்டை எல்லாம் செய்கிறார். இந்த படம் ஓகே ரகம்தான். தாராளமாக மேமிலியுடன் பார்க்கலாம் என்று தனது விமர்சனத்தில் புளுசட்டை மாறன் கூறியுள்ளார்.

  • துரந்தர் 2: மிரண்டுபோன ராம் கோபால் வர்மா: முதல் விமர்சனம் இதோ

    துரந்தர் 2: மிரண்டுபோன ராம் கோபால் வர்மா: முதல் விமர்சனம் இதோ

    ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் துரந்தர் 2. ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள இந்தப் படம் பான்-இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், இந்திய சினிமாவின் முன்னணி மற்றும் சர்ச்சைக்குரிய இயக்குநரான ராம் கோபால் வர்மா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு முதல் விமர்சனத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அவர் கூறியிருப்பதாவது:

    “நேற்றிரவு #Dhurandhar2 திரைப்படத்தைப் பார்த்தேன். இது ஷோலே படத்தைப் போல 100 மடங்கு பிரம்மாண்டமானது. இனி ‘இயக்குநர்’ என்ற வார்த்தையே ஆதித்யா தார் பெயரில்தான் தொடங்கும். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் கிறிஸ்டோபர் நோலன் போன்ற ஹாலிவுட் ஜாம்பவான்கள் கூட, தாங்கள் செய்து கொண்டிருக்கும் அத்தனை வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு, Dhurandhar 2 படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்ப்பதுதான் புத்திசாலித்தனமானது என்று கூறியுள்ளார்.

    ராம்கோபால் வர்மவின் இந்த விமர்சனத்தை அடுத்து படம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.

  • வாயா என் கர சாமி!.. கர படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வீடியோ எப்படி இருக்கு?..

    வாயா என் கர சாமி!.. கர படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வீடியோ எப்படி இருக்கு?..

    தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ்.. கொஞ்சம் கூட இடைவெளி விடாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நடிகர் இவர்.. இட்லி கடை திரைப்படத்திற்கு பின் போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்கிற படத்தில் நடிக்கத் தொடங்கினார் தனுஷ்.. இந்த படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம், சுராஜ் வெஞ்சுரமுடு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்திருக்கிறது..

    கர படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘வாயா என் கர சாமி’ என்கிற இந்த பாடலை அருண் ராஜாகாமராஜ் எழுத அந்தோணி தாசன் பாடியிருக்கிறார். சோளக்காட்டுக்குள் முகத்தை மூடிக்கொண்டு கையில் அருவாளோடு தனுஷ் செல்வது போலவும் அவருக்கு பின்னால் போலீஸ்காரர்கள் துரத்துவது போலவும் அவர்களை தனுஷ் தாக்குவது போலவும் இந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது..

    இந்த வீடியோவை பார்த்த தனுஷ் ரசிகர்கள் ‘அடுத்த அசுரன் லோடிங்’ என பதிவிட்டு வருகிறார்கள்.. இந்த பாடலை பார்க்கும்போது கண்டிப்பாக அதிரடி ஆக்சன் கலந்த ஒரு கிராமத்து திரில்லர் கதையாக கர படம் உருவாகியிருக்கும் என கணிக்கப்படுகிறது.. ஏப்ரல் 30ம் தேதி கர திரைப்படம் வெளியாகவுள்ளது.

  • Aazhi movie review: தாய்கிழவியை வென்றாரா ஆழி? – விமர்சனம் இதோ

    Aazhi movie review: தாய்கிழவியை வென்றாரா ஆழி? – விமர்சனம் இதோ

    கடலோர மக்களின் வாழ்வியலோடு, நிழலுலகக் குற்றங்களையும் கலந்து ஒரு ‘த்ரில்லர்’ கதையைத் தர முயன்றிருக்கிறது ஆழி. தந்தை-மகள் பாசம் மற்றும் காதல் என்று ஒரு நல்ல கதை கையில் இருந்தும், அது திரையில் எப்படி எடுபட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

    கதைச் சுருக்கம்

    மீன்பிடி படகு மெக்கானிக்காக வலம் வரும் சரத்குமாருக்கு ஒரு இருண்ட பக்கமும் உண்டு. ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் அவர், தன் ஒரே மகள் தேவிகா சதீஷின் காதலுக்குத் தடையாக நிற்கிறார். காதலன் இந்திரஜித் ஜெகஜித்தை ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று தீர்த்துக்கட்ட நினைக்கும் சரத்குமாரிடமிருந்து, அந்தப் பயங்கரமான சூழலில் இருந்து காதலன் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் விறுவிறுப்பான மீதிக்கதை.

    சரத்குமார் ஹீரோ மற்றும் வில்லன் என இரு பரிமாணங்களை பிரதிபலிக்கிறார். ஆனால் ஏற்கெனவே இவரை இந்த வேடங்களில் பார்த்ததால் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இளம் நாயகன வரும் இந்திரஜித் ஜெகஜித் நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தினால் நல்லது. இளம் நாயகியாக நடித்துள்ள தேவிகா சதீஷ் அழகாக உள்ளார். ஓரளவிற்கு வேடத்தை புரிந்து நடித்துள்ளார்.

    ரசூல்பூக்குட்டியின் ஒலிப்பதிவு சொல்லிகொள்ளும்படி இல்லை. இசை ஜாஸி கிப்ட். பாடல்கள் சொல்லிகொள்ளும்படி இல்லை. முதல்பாதியைவிட இரண்டாம் பாதியால்தான் படம் ஓரளவிற்கு தப்பி உள்ளது.

    மொத்தத்தில் ஆழி திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார் இயக்குனர்.

  • ரசிகர்களை கவர்ந்ததா சமுத்திரகனியின் தடயம் – முழு விமர்சனம்

    ரசிகர்களை கவர்ந்ததா சமுத்திரகனியின் தடயம் – முழு விமர்சனம்

    ZEE5 தளத்தில் இன்று (பிப்ரவரி 27, 2026) வெளியாகியுள்ள சமுத்திரக்கனியின் முதல் வெப் சீரிஸ் ‘தடயம்’. இந்தத் தொடர் குறித்த விமர்சனம் இதோ…

    கதைக் கரு

    1999-ம் ஆண்டு தமிழகம் – ஆந்திரா எல்லைப் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் நடக்கும் மர்மமான கொலைகளைத் துப்பறியும் சப்-இன்ஸ்பெக்டர் அதியமானாக (சமுத்திரக்கனி) கதையின் நாயகன் வருகிறார். பல கொலைகள் நடந்தும், அதில் கொலையாளி விட்டுச் செல்லும் தடயங்கள் (திருமண சின்னங்கள் திருடப்படுவது) குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அவருடன் இன்ஸ்பெக்டர் லட்சுமியாக (ஷிவதா) இணைகிறார். இந்தத் தொடர் மர்மத்தின் பின்னணியை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதைத் திரைக்கதையாகக் கொண்டுள்ளது.

    சமுத்திரக்கனியின் நடிப்பு:

    வழக்கமான உபதேச வசனங்கள் இல்லாமல், ஒரு முதிர்ச்சியான போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி மிக இயல்பாக நடித்துள்ளார். அவரது உடல்மொழி மற்றும் அமைதியான பார்வை கதாபாத்திரத்திற்குப் பலம் சேர்க்கிறது. 1999-ம் ஆண்டின் பின்னணியை ( போன், அந்த காலத்து போலீஸ் வாகனங்கள்) உருவாக்குவதில் கலை இயக்குனர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இயக்கம் நவீன்குமார் பழனிவேல். முதல் படத்திலேயே வெற்றியை பெற்றுள்ளார்.

    பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

    வழக்கமாக் வெப்சீரிஸ்கள் மிக நீண்ட எபிசோடுகளை கொண்டிருக்கும். ஆனால் இப்படம் நீண்ட எபிசோடுகள் இல்லாமல், சுருக்கமான காட்சிகளுடன் நகர்வது தொடரை சலிப்பின்றிப் பார்க்க வைக்கிறது. கொலைகளுக்கான காரணம் சொல்லப்படும் விதம் சற்று பலவீனமாக உள்ளது. மேலும் வில்லனை படத்தின் இடையிலேயே காட்டிவிடுதால் சுவாரஸ்யம் சற்றே குறைகிறது.

    தடயம் சமுத்திரக்கனி மற்றும் ஷிவதாவின் நடிப்பிற்காக ஒருமுறை தாராளமாகப் பார்க்கலாம். விறுவிறுப்பான த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு, ஆனால் திரைக்கதையில் இன்னும் அதிக திருப்பங்களை எதிர்பார்த்தவர்களுக்கு இது சற்றே ஏமாற்றத்தைத் தரலாம்.

    ரேட்டிங்: 3.5/5

  • தாய்கிழவி விமர்சனம்: கிடைக்கிற கேப்பில் எஸ்கேவை வாரிவிட்ட ப்ளுசட்டை மாறன்

    தாய்கிழவி விமர்சனம்: கிடைக்கிற கேப்பில் எஸ்கேவை வாரிவிட்ட ப்ளுசட்டை மாறன்

    ராதிகா சரத்குமார் நடிப்பில் சிவகுமார் முருகேசன் என்ற புதிய இயக்குனர் இயக்கியத்தில் இன்று வெளியாகிறது தாய்கிழவி. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகும் இப்படத்தின் முதல் ப்ரமோ வெளியானபோதே படம் சூப்பர்ஹிட் ஆகும் என்று கணிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவருமே படத்தை கொண்டாடியுள்ளனர்.

    இந்த நிலையில் தாய்கிழவி படத்தின் விமர்சனத்தை பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், கடந்த 10 நாட்களாக பார்த்தால் சோசியல் மீடியாவில் ஒரே கூவலக இருந்தது. தாய் கிழவி படம் அப்படி இருக்கிறது இப்படி இருக்கிறது சூப்பராக இருக்கிறது என்று. கொஞ்சம் உற்று கவனித்தால் இந்தப் படத்தை நம்ம திடீர் தளபதி (சிவகார்த்திகேயன்) வழங்குகிறார் என இருந்தது. அவர் உள்ளே நுழைந்தாலே அதில் ஒரு ஸ்கேம் இருக்கும்.

    அவர் நினைத்தால் சோஷியல் இல்லாததை இருக்கும் என்றும் இருப்பதை இல்லாதது மாதிரியும் செய்ய முடியும்.ஏன் என்றால் அவர் சோசிய மீடியாவில் ஒரு டான் ஆகிவிட்டார். உங்களுக்கே தெரியும் எவ்வளவு பெரிய விசயத்தை பூசி மெழுகிருக்காருனு. அப்படி ஏதோ ஒரு ஸ்கேம் செய்து சிக்க வைக்கப்போறாங்களோ என்ற பயம் இருந்தது. அதேபோல் படத்தின் ப்ரோமோஷனை பார்த்தால் ஒரு தண்டட்டி கிழவி கூலிங் கிளாஸ் போட்டு சுருட்டு பிடிக்குது. நாட்டியான பாட்டியாக இருக்குமோ; இதனிடம் சென்று மாட்டிக்கொள்ள வேண்டுமோ என இருந்தது. படம் ஆரம்பித்து முதல் பாதியில் இலக்கு இல்லாமல் போனது. பாட்டி கேரக்டரை கொஞ்ச நேரத்திலேயே படுக்க வைத்துவிட்டார்கள். அது நிம்மதியான இருந்தது.

    இரண்டாம் பாதியில் சிறிது நேரம் கழித்து கதையே புரட்டி போடுகிற மாதிரி ஒரு சீன் வந்தது.பெண்ணுரிமை பற்றி பெரியார் சொன்ன விசயத்தை வழ வழவென்று இழுக்காமல் சிறிய காட்சியில் அழகாக சொல்லிருப்பது படத்தின் கதையின் கலரையே மாற்றிவிட்டது. மொத்ததில் இந்த படத்தை பெண்கள் நிச்சயம் பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

  • Thai kizhavi First Review: வயிறே புண்ணாகிவிட்டது…தாய்கிழவி படத்தின் முதல் விமர்சனம்

    Thai kizhavi First Review: வயிறே புண்ணாகிவிட்டது…தாய்கிழவி படத்தின் முதல் விமர்சனம்

    நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தாய் கிழவி’

    பவுனுத்தாயி என்ற வயதான பெண் கதாபாத்திரத்திற்காக அவர் சுமார் 4.5 மணி நேரம் மேக்கப் போட்டு நடித்துள்ளார். இதற்காக கேரளாவிலிருந்து வினீஷ் என்ற ஒப்பனை கலைஞர் வரவழைக்கப்பட்டார். படத்தின் டீஸர் வெளியானபோதே படம் மீதான எத்ரிபார்ப்பு அதிகரித்தது. சமீபத்தில் இப்படத்தை பார்த்த கமல்ஹாசன் அனைவரையும் பாராட்டி தள்ளினார்.

    வருகிற 27ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பிரத்யேக காட்சியை பார்த்த திரையரங்க உரிமையாளரின் விமர்சனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
    தனது டுவிட்டர் பக்கத்தி அவர் கூறியபோது, கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த நகைச்சுவை படமாக இது இருக்கும், ரொம்ப நாட்களுக்கு பிறகு வயிறு வலிக்க வலிக்க சிரித்து பார்த்த படம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ராதிகாவின் நடிப்புக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கண்டிப்பாக திரையரங்கில் பார்க்க வேண்டிய படம் இது என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இதனை பார்க்கையில் தாய்கிழவி நிச்சயம் வெற்றிபெறும் என்பது உறுதியாகியுள்ளது.

    https://twitter.com/vasutheatre/status/2025569104871231904