Category: reviews

  • Pookie Review: காதலும் மோதலும் கலந்த பூக்கி- விமர்சனம்

    Pookie Review: காதலும் மோதலும் கலந்த பூக்கி- விமர்சனம்

    விஜய் ஆண்டனியின் தயாரிப்பில், கணேஷ் சந்திரா இயக்கத்தில் இளமைத் துள்ளலுடன் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘பூக்கி’. அஜய் தீஷன், தனுஷா எனப் புதிய முகங்களுடன் பாண்டியராஜன், விவேக் பிரசன்னா போன்ற அனுபவ நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

    ஆறு ஆண்டுகளாகத் தீவிரமாகக் காதலித்து வரும் கைலாஷ் (அஜய் தீஷன்) மற்றும் ஆழி (தனுஷா), ஒருவரையொருவர் செல்லமாக ‘பூக்கி’ என அழைத்துக்கொள்கிறார்கள். ஒரு பயணத்தின் போது இருவருக்கும் இடையே வெடிக்கும் மோதல், கைகலப்பாக மாறுகிறது. இதைச் சுற்றியுள்ளவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்க, ஈகோ முட்டி மோதி இருவரும் பிரிகிறார்கள்.

    இந்தத் தற்காலிகப் பிரிவுக்குப் பின், அவர்கள் இருவரும் வாழ்க்கையில் முன்னேறிச் சென்றார்களா அல்லது பழைய நினைவுகளில் சிக்கித் தவித்தார்களா? என்பதே இப்படத்தின் கலகலப்பான திரைக்கதை.

    இப்படத்திற்கு இசையமைத்து, எடிட்டிங் செய்ததோடு மட்டுமல்லாமல், ஒரு பாடலுக்கு நடனமாடியும், இடைவேளையில் ரசிகர்களுடன் உரையாடியும் ‘கேமியோ’ பாத்திரத்தில் அப்ளாஸ் வாங்குகிறார் விஜய் ஆண்டனி. படம் முழுவதும் நடிகர் சிம்புவின் பழைய பேட்டி வீடியோக்கள் கதையோட்டத்திற்கு ஏற்பப் பயன்படுத்தப்பட்டுள்ளது ஒரு புதுமையான முயற்சி. இது திரையரங்கில் சிரிப்பலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

    இன்றைய காலத்து காதலர்களுக்கே உரிய அந்தத் தவிப்பையும், குழப்பத்தையும் அஜய் தீஷன் மற்றும் தனுஷா மிக நேர்த்தியாகப் பிரதிபலித்துள்ளனர்.ஆனால் படத்தின் நீளம் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையைச் சோதிக்கிறது. எடிட்டிங்கில் இன்னும் சில காட்சிகளைக் குறைத்திருந்தால் படம் கூடுதல் வேகத்தைப் பெற்றிருக்கும்.

    பிரதான காதலைத் தாண்டி அரசியல், மோசடிச் சாமியார்கள் எனப் பல விஷயங்களைத் தொட முயன்றதில், படத்தின் மையக்கரு சிதறுவது போலத் தெரிகிறது.
    சிம்புவின் வீடியோக்கள் மற்றும் ஏஐ காட்சிகள் சில இடங்களில் சுவாரஸ்யமாக இருந்தாலும், அவை திரும்பத் திரும்ப வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது.
    தேவையற்ற காட்சிகளைத் தவிர்த்துப் பார்த்தால், இன்றைய தலைமுறை காதலர்களின் மனநிலையைத் திரையில் பார்க்க விரும்புபவர்களுக்கு ‘பூக்கி’ ஒரு நல்ல சாய்ஸ். குறிப்பாக இந்த காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு ஏற்ற ஒரு ‘கலர்ஃபுல்’ பொழுதுபோக்குத் திரைப்படம் இது.

  • Sweetie Naughty Crazy Review: இளைஞர்களை கவர்ந்ததா ஸ்வீட்டி நாட்டி கிரேஸி – விமர்சனம்

    Sweetie Naughty Crazy Review: இளைஞர்களை கவர்ந்ததா ஸ்வீட்டி நாட்டி கிரேஸி – விமர்சனம்

    அடல்ட் காமெடி ஜானரில் இன்றைய உறவுமுறைச் சிக்கல்களை மையமாக வைத்து ஒரு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டிருக்கிறது ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’.

    கதைக் களம்

    கல்லூரித் தோழர்களான த்ரிகுண் மற்றும் ஸ்ரீ ஜீத்தா கோஷ் ஆகியோரின் நட்பு காதலாக மலர்கிறது. ஒரு கட்டத்தில் த்ரிகுண் தனது கடந்த கால அந்தரங்க உறவுகளைப் பற்றி (வயதில் மூத்த பெண்களுடனான தொடர்பு குறித்து) வெளிப்படையாகக் கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், காதலனை நல்வழிப்படுத்த எண்ணி அவரைத் திருமணம் செய்து கொள்கிறார் நாயகி.

    திருமணத்திற்குப் பின், தனது மனைவியின் குடும்பத்தைச் சந்திக்க ஆவலுடன் கோத்தகிரி செல்லும் நாயகனுக்கு அங்கு ஒரு ‘மெகா அதிர்ச்சி’ காத்திருக்கிறது. மனைவியின் அக்கா (இனியா) மற்றும் அம்மா (ராதா) ஆகியோரைப் பார்த்ததும் த்ரிகுண் ஏன் நிலைகுலைந்து போகிறார்? அந்தச் சிக்கல்களில் இருந்து அவர் எப்படித் தப்பினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    த்ரிகுண்: இப்படிப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய மற்றும் சங்கடமான சூழல்களைக் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கத் தனித் துணிச்சல் வேண்டும். அதைச் சிறப்பாகக் செய்துள்ளார் த்ரிகுண்.

    ஸ்ரீ ஜீத்தா கோஷ்: காதலனின் தவறுகளை மன்னித்து, அவரிடம் அன்பு காட்டும் ஒரு நவீன காலத் துணையாக ரசிகர்களைக் கவர்கிறார். இப்படி தவறை மன்னிக்கும் மனைவி நமக்கு கிடைபாளா என்று ஏங்க வைக்கிறார்.

    இனியா & ராதா: நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றும் இனியா, கவர்ச்சியிலும் நடிப்பிலும் அதிரடி காட்டியுள்ளார். ‘சுந்தரா டிராவல்ஸ்’ ராதா, இதில் ‘ஆண்டி’ கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.

    மற்றும் தம்பி ராமையா, சத்யன், ஆலி, ரவி மரியா என ஒரு பெரிய நகைச்சுவை பட்டாளமே இருந்தாலும், படத்தின் கதைக்களம் ‘காமம்’ சார்ந்தே நகர்வதால் இவர்களது நகைச்சுவை பெரிதாக எடுபடவில்லை.

    ஒளிப்பதிவு சி.விஜய், இசை அருணகிரி. ராஜசேகர்.ஜி என்பவர் இயக்கியுள்ளார். உறவுமுறைகளைச் சிதைக்கும் வகையிலான ஒரு கதைக் கருவைத் தேர்ந்தெடுத்தாலும், அதை ஆபாசத்தின் எல்லைக்குச் செல்லாமல் நகைச்சுவை கலந்து வழங்க முயன்றிருக்கிறார்.
    உறவுமுறைகளில் வக்கிரம் இருப்பதாகத் தோன்றினாலும், அதை ஒரு பொழுதுபோக்குத் திரைப்படமாக மாற்றுவதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.

    பாசிட்டிவ்:

    *விறுவிறுப்பான திரைக்கதை.

    • இளைஞர்களைக் கவரும் வசனங்கள் மற்றும் கவர்ச்சி.

    நெகட்டிவ்:

    • உறவுமுறைகளைச் சித்தரித்துள்ள விதம் சிலருக்கு அதிருப்தியைத் தரலாம்.

    முடிவாக: ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’ – தேவையற்ற விவாதங்களை தவிர்த்துவிட்டு , ஒரு அடல்ட் காமெடித் திரைப்படமாகப் பார்த்தால் இளைஞர்களுக்கு இது ஒரு ‘கலர்ஃபுல்’ விருந்து.

  • அழகி.. ஆட்டோகிராப்.. 96 வரிசையில் With Love. கொண்டாடும் விமர்சகர்கள்!…

    அழகி.. ஆட்டோகிராப்.. 96 வரிசையில் With Love. கொண்டாடும் விமர்சகர்கள்!…

    என்னதான் பெரிய நடிகர்கள் நடித்து ஆக்சன் படமாக வெளியாகி 1000 கோடி வசூலை அள்ளினாலும் அந்த படங்கள் மனசுக்கு நெருக்கமாக மாறாது.. ஆனால், மனதை வருடி சென்ற காதல் கதைகள் எப்போதும் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றிருக்கும். அப்படிப்பட்ட திரைப்படங்கள் அரிதாகவே வரும். அப்படி வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் வித் லவ்.

    டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை இயக்கி பாராட்டைப் பெற்ற அபிஷன் ஜீவிந்த் With Love படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.. அவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மதன் இயக்கியிருக்கிறார். மேலும் ரஜினியின் மகள் சௌந்தர்யா இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.. இந்த திரைப்படம் வருகிற 6ம் தேதி ரிலீஸாகவுள்ளது.அதேநேரம் நேற்று இந்த படத்தின் சிறப்பு காட்சி முக்கிய பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.. அதை பார்த்த பலரும் சமூகவலைதளங்களில் படத்தை பற்றி பாசிட்டிவாக பதிவிட்டு வருகிறார்கள்.

    கதாநாயகியை பெண் பார்ப்பதற்காக அபிஷன் ஜீவிந்த் போகிறார்.. அதன்பின் இருவரும் சந்தித்து பேசிக் கொள்கிறார்கள்.. அப்படி பேசிக்கொள்ளும்போது அவர்களின் பழைய காதல் பற்றி பேச்சு போகிறது.. அதன்பின் அவர்கள் இருவரும் ஒரு முடிவெடுக்கிறார்கள்.. அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.. அதை அவ்வளவு சுவாரசியமாக இயக்குனர் சொல்லியிருக்கிறார்..

    ஒரு சூப்பர் ஃபீல்குட் சினிமா.. அழகி, ஆட்டோகிராப், 96 பட வரிசையில் இந்த படமும் மனதை கவர்கிறது.. கண்டிப்பாக இந்த படம் சூப்பர் ஹிட் என்றெல்லாம் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

    சினிமா அப்டேட்டுகளை தொடர்ந்து கொடுத்து வரும் வலைப்பேச்சு யூடியூப் சேனலிலும் இந்த படத்தை பற்றி சிலாகித்து பேசியிருக்கிறார்கள். அபிஷன் ஜீவிந்துக்கும், இயக்குனர் மதனுக்கும் இது முதல் படம் போலவே தெரியவில்லை. அனஸ்வரா ராஜன் அசத்தலாக நடித்திருக்கிறார்.. சின்ன சின்ன முகபாவனைகளிலும் அசத்துகிறார். இந்த படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களின் பழைய காதலை நினைத்துக் கொள்வார்கள்.. குறிப்பாக இந்த படம் பார்க்கும்போது அனைவரும் பள்ளி காலத்திற்கு சென்று விடுவார்கள்..

    அறிமுக இயக்குனர் மதன் படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார். பின்னணி இசையும், பாடல்களும் சிறப்பு.. சமீப காலமாகவே மினிமம் பட்ஜெட்டில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி, சிறை வரிசையில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் படமாக வித் லவ் இருக்கும்’ என்றெல்லாம் அதில் பேசியிருக்கிறார்கள்..

  • karuppu pulsar review: தினேஷுக்கு கை கொடுத்ததா கருப்பு பல்சர் – விமர்சனம்

    karuppu pulsar review: தினேஷுக்கு கை கொடுத்ததா கருப்பு பல்சர் – விமர்சனம்

    ‘லப்பர் பந்து’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நடிகர் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘கருப்பு பல்சர்’. யஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் முரளி கிருஷ்ணன் தயாரிப்பில், இயக்குநர் முரளி கிரிஷ் எஸ் ஒரு வித்யாசமான ‘ஹாரர்-த்ரில்லர்’ முயற்சியை கையில் எடுத்திருக்கிறார்.

    கதை:

    சென்னையில் வாட்டர் பியூரிஃபையர் சர்வீஸ் செய்து வரும் நாயகன் தினேஷ், மேட்ரிமோனி மூலம் அறிமுகமாகும் ரேஷ்மா வெங்கடேஷிடம் காதலில் விழுகிறார். தன்னிடம் இருப்பது சாதாரண மோபட் (XL) தான் என்றாலும், காதலியை கவர தன்னிடம் ‘கருப்பு பல்சர்’ இருப்பதாக ஒரு சின்னப் பொய் சொல்கிறார். அந்தப் பொய்யை நிஜமாக்க அவர் ஒரு பழைய கருப்பு பல்சர் பைக்கை வாங்க, அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது ஆட்டம். அந்த பைக்கோடு சேர்ந்து வரும் அமானுஷ்யங்களும், அதன் பின்னணியில் இருக்கும் ரத்தமும் கண்ணீரும் கலந்த பிளாஷ்பேக்கும் தான் படத்தின் மீதிக்கதை.

    தினேஷின் பலமே எதார்த்தமான நடிப்புதான். இந்தப் படத்திலும் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனின் பயம், பதற்றம் மற்றும் காதலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகிக்கு கதையில் பெரிய பங்கில்லை என்றாலும் அவருடைய காட்சிகளில் நன்றாகவே செய்திருக்குறார்.

    மன்சூர் அலிகான், சரவண சுப்பையா மற்றும் கலையரசன் ஆகியோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாகவே செய்துள்ளார்கள். பேய் படங்கள் என்றாலே பங்களா, தோட்டம் என்ற டெம்ப்ளேட்டை உடைத்து, ஒரு பைக்கை மையமாக வைத்து ஹாரர் கதையை நகர்த்திய இயக்குநரின் முயற்சி பாராட்டத்தக்கது. இன்பாவின் பின்னணி இசை த்ரில்லர் காட்சிகளுக்கு பலம் சேர்க்கிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படம் நிச்சயம் கவனிக்கதக்க வகையில் இருந்திருக்கும். மொத்ததில் கருப்பு பல்சர் ஒருமுறை பார்க்கலாம்

    சினிரிப்போர்டர்ஸ் ரேட்டிங்: 3/5

     

  • Baby girl review: நிவின் பாலிக்கு கை கொடுத்ததா?- பேபி கேர்ள் விமர்சனம்

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான நிவின் பாலி நடிப்பில் வெளியாகியுள்ள படம் பேபி கேர்ள்.அருண் வர்மா இயக்கியுள்ள இந்த படத்தில் நிவின் பாலியுடன் ஜெய் பீம் புகழ் லிஜோ மோல், சங்கீத் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். . திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவமனையில் இருந்து, பிறந்து மூன்று நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை காணாமல் போவதும் அதனை தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களுமே படத்தின் கதை. ஆரம்பம் முதல் இறுதி வரை புலனாய்வு திரில்லராக உருவாகியுள்ளது இப்படம்.

    சர்வம் மயா படத்தின் வெற்றிக்கு பிறகு நிவின் பாலி நடிக்கும் படம் என்பதால்,இப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்தது என்பதே உண்மை. நிவின் தனக்கான வேடத்தை சிறப்பாக செய்துள்ளார். அவருக்கு இப்படம் சிறந்த கம்பேக் என்று கேரள ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதேபோல், லிஜோ மோலின் நடிப்பும் அற்புதமாக உள்ளது. சாம் சி.எஸ்-ன் இசை த்ரில்லர் படத்திற்குத் தேவையான பதற்றத்தை அதிகரிக்கிறது.

    படத்தின் முதல் பாதியில் அதாவது இடைவேளை வரை அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பில் செல்கிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் தொய்வாகவே உள்ளது. ஆனாலும் குறைகளை தவிர்த்து பார்த்தால் இப்படம் திரில்லர் பட ரசிகர்களுக்கு செம ரீட்டாகவே உள்ளது.

    கேரளாவை பொருத்தவரை இப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்களை அடுத்து வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று கேரள திரையுலகில் பேசப்படுகிறது.

  • hotspot 2 much: ஒர்கவுட் ஆனதா டார்க் ஹியூமர்? ஹாட் ஸ்பாட் 2 மச் – திரை விமர்சனம்

    hotspot 2 much: ஒர்கவுட் ஆனதா டார்க் ஹியூமர்? ஹாட் ஸ்பாட் 2 மச் – திரை விமர்சனம்

    ஹாட் ஸ்பாட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹாட் ஸ்பாட் 2 மச் படம் இன்று வெளியாகியுள்ளது. முதல் பாகத்தைப் போலவே, இதுவும் ஒரு ஆந்தாலஜி பாணித் திரைப்படம். ஒரு இளம் பெண் இயக்குநர் ஒரு தயாரிப்பாளரிடம் மூன்று வெவ்வேறு கதைகளைக் கூறுவது போலத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

    இரண்டு முன்னணி நடிகர்களின் (விஜய் – அஜித் போன்ற அடையாளங்கள்) ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்வதால் ஏற்படும் விபரீதங்கள் மற்றும் அதன் பின்னால் இருக்கும் அரசியலைப் பேசுகிறது. பிரபலமான நடிகர்களின் வெறித்தனமான ரசிகர்களின் உறவினர்களை கடத்திச் செல்லும் எம்.எஸ். பாஸ்கர், அவர்கள் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மிரட்டுகிறார். அவர் விதித்த அந்த நிபந்தனைகள் என்ன? உறவினர்கள் நிலை என்ன என்பதே முதல் கதை.

    வெளிநாட்டிலிருந்து திரும்பும் மகள் (சஞ்சனா திவாரி) அணியும் நவீன ஆடைகளுக்கும், அதை எதிர்க்கும் தந்தைக்கும் (தம்பி ராமையா) இடையிலான ‘சுதந்திரம் மற்றும் கலாச்சாரம்’ சார்ந்த மோதலே இரண்டாவது கதை.

    2025-ம் ஆண்டில் அதாவது நிகழ்காலத்தில் வாழும் அஸ்வின் குமாருக்கு, 2050-ல் வாழும் பவானிஸ்ரீயுடன் காதல் உருவாகிறது. டைம் டிராவல் மூலம் அஸ்வின் குமாரை சந்திக்கும் பவானிஸ்ரீக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. அதில் ஏற்படும் சிக்கலே மூன்றாவது கதை.

    நடிகர், நடிகைகள்:

    பிரியா பவானி சங்கர்,எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, அஸ்வின் குமார்,ரக்சன் மற்றும் ஆதித்யா பாஸ்கர், பவானி ஸ்ரீ சஞ்சனா திவாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இதில் எம்.எஸ்.பாஸ்கர் தன் அனுபவ மிக்க நடிப்பால் கவர்கிறார். அஸ்வின் குமார் – பவானிஸ்ரீ காட்சிகள் கலகலப்பாக நகர்கிறது. இளம் பெண் இயகுனராக பிரியா பவானி சங்கர் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.சதீஷ் ரகுநாதனின் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. தயாரிப்பு: விஷ்ணு விஷால்

    படத்தினை விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். டார்க் ஹியூமர் நன்றாகவே ஒர்கவுட் ஆகியுள்ளது. முதல் பாகம் போன்று சுவாரஸ்யம் இல்லவிட்டாலும் நல்ல காமெடியாக ஜனரஞ்சகமாக கொடுத்திருக்கிறார்.

  • mayabimbam review: மாயபிம்பம்- விமர்சனம்

    mayabimbam review: மாயபிம்பம்- விமர்சனம்

    Selfstart Productions நிறுவனம் சார்பில், கே ஜே சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கு படம் மாயபிம்பம்.சிறிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பலரது கவனத்தை ஈர்த்துள்ளது

    நான்கு நண்பர்களின் வாழ்க்கையில் நிகழும் ஒரு தவறான புரிதல் எவ்வாறு பெரிய மாற்றங்களை உருவாக்குகிறது என்பதுதான் இப்படத்தின் மையக்கரு. ஆகாஷ், மருத்துவக் கல்லூரி மாணவர். ஜானகி, மருத்துவ மனை ஒன்றில் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால், அதை ஆகாஷ் மற்றும் ஜானகி வேறு வேறு ஒரு கோணத்திலும் பார்க்கின்றனர். ஆகாஷ் சொல்லும் ஒரு பொய்யினால் ஏற்படு பிரச்சனையே மாயபிம்பம் படத்தின் கதை.

    நாயகியாக நடித்திருக்கும் ஜனகி முதல் படத்திலேயே ஸ்கோர் செய்திருக்கிறார். நம் பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் இருப்பதால் எளிதில் மனதில் ஒட்டிக்கொள்கிறார். நாய்கனாக நடித்திருக்கும் ஆகாஷ் தனது நடிப்பில் குறை வைக்கவில்லை. நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.

    நந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. காதல் கதையாக இருந்தாலும், அதை புதிய கண்ணோட்டத்தில் சொல்ல முயன்ற இயக்குனர் அதில் ஓரளவிற்கு வெற்றியும்பெற்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

  • Jananayagan First Review: இந்த பொங்கல் செம கலெக்சன் மா…. இதோ வந்துருச்சில்ல முதல் விமர்சனம்

    Jananayagan First Review: இந்த பொங்கல் செம கலெக்சன் மா…. இதோ வந்துருச்சில்ல முதல் விமர்சனம்

    இந்த பொங்கல் விஜய் ரசிகர்களுக்கு கொண்ட்டட்டம்தான். காரணம் விஜய் நடிப்பில் வெளியாக் இருக்கும் ஜனநாயகன்தான். ச்னிமாவை விட்டு அரசியலுக்கு சென்ற விஜய்க்கு இது கடைசி படம். இதனால் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்க காத்திருக்கின்றன.

    விஜய், பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கியிருக்கிறார். அன்ருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ஹிட்டானது நாம் அறிந்ததே.

    விஜய் கடைசிபடம் என்பதால் படம் எப்படி இருக்கும் என பலரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் முதல் விமர்சனத்தை பிரபல திரையரங்க உரிமையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அதில், இந்த படத்தை பார்த்த சிலர் படம் நன்றாக வந்துள்ளதாகவும்,இந்த பொங்கல் நமக்கு நமக்கு செம கலெக்சன் மா என்று பகிர்ந்துள்ளார்.

    https://twitter.com/BaraniDharanSM/status/2003903195190645246
  • சிறை விமர்சனம் : வழக்கமான பஞ்ச்ல் முடித்த புளுசட்டை மாறன்

    சிறை விமர்சனம் : வழக்கமான பஞ்ச்ல் முடித்த புளுசட்டை மாறன்

    விக்ரம் பிரபு நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் சிறை. இப்படம் வெளிவருவதற்கு முன்பே பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது இந்த படத்தை விஜய் நடிப்பில் வெளியான லியோ, மாஸ்டர் படங்களை தயாரித்த லலித்குமார் தயாரிப்பது மட்டும் தனது மகனை படத்தில் இன்னொரு நாயகனாக அறிமுகப்படுத்தி இருக்கிறார் இந்த படத்தை சுரேஷ் ராஜகுமாரி என்ற இயக்குனர் இயக்கியுள்ளார். இது அவருக்கு முதல் படம். இவர் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

    இந்த நிலையில் இப்படம் குறித்துபுளுசட்டை மாறன் தனது youtube சேனனில் இப்படத்தின் விமர்சனத்தை இன்று வெளியிட்டுள்ளார் அதில் படம் மிக அருமையாக வந்துள்ளதாகவும் விக்ரம் பிரபு மட்டுமின்றி படத்தில் நடித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். போலிஸரின் ரகசிய வார்த்தைகல் கோர்ட் சீன் எல்லாம் மிகவும் நேர்த்தியாக உள்ளது. படத்தில் மெல்லிய மத அரசியல் உள்ளது. அதனை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு நன்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.

    பொதுவாக புளுசட்டை மாறன் தனது விமர்சனத்தில் இறுதியில் படங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி முடிப்பார். சிறை விமர்சனத்திலும் அவ்வாறே செய்துள்ளார். இந்த படத்தில் காதல் காட்சிகள் படத்தில் ஒட்டாமல் இருக்கிறது. அதனை மட்டும் இன்னும் கவனமாக எடுத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். ஆனாலும் படம் நன்றாகவே உள்ளது என்று கூறியுள்ளார்.

  • Sigma: ஜேசன் சஞ்சய் சும்மா மிரட்டுறாரே!… எப்படி இருக்கு சிக்மா டீசர் வீடியோ?!..

    Sigma: ஜேசன் சஞ்சய் சும்மா மிரட்டுறாரே!… எப்படி இருக்கு சிக்மா டீசர் வீடியோ?!..

    ரசிகர்களால் தளபதி என்ன கொண்டாடப்படும் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் அப்பாவை போல நடிகராவார் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் இயக்குனராக களமிறங்கி எல்லோருக்கும் டிவிஸ்ட் கொடுத்திருக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சந்தீப் கிஷனை ஹீரோவாக வைத்து சிக்மா என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ஜேசன். இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

    ஜோசப் சஞ்சய் இதுவரை எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்யவில்லை. சுயம்புவாக சினிமாவை கற்றுக்கொண்டு வந்திருக்கிறார். இந்நிலையில்தான் சிக்மாவின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த டீசர் விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

    நிலம், நீர், காற்று மற்றும் பணம் இவர்களின் மதிப்பு கூட ஏறிக்கொண்டே போகிறது. ஆனால் மனிதர்களும், மனித உறவுகளின் மதிப்பும் மாறாமல் இருக்கிறது என டீசரில் வசனம் வருகிறது. இதை பார்க்கும்போது ஒரு நல்ல கருத்தை அடிப்படையாக வைத்து படத்தை ஜேசன் சஞ்சய் உருவாக்கியிருப்பது புரிகிறது. தமனின் பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது.

    ஜென்சி ரசிகர்களுக்கு பிடிக்கும்படியான காதல் மற்றும் ஆக்சன் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக சம்பத் நடித்திருக்கிறார். மேலும் நடன இயக்குனர் ராஜ் சுந்தரமும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தைப் பார்க்கும்போது பிரச்சனைகளை பார்த்து ஒதுங்கிச் செல்லும் ஒரு சராசரி இளைஞனாக இல்லாமல் ஏதோ ஒன்று மாற்ற நினைக்கும் ஒரு இளைஞனின் கதாபாத்திரமாகவே சந்தீப் கிஷனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருப்பது புரிகிறது.

    எனவே கண்டிப்பாக சிக்மா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும், ஜேசன் சஞ்சய் இயக்குனராகவும் வெற்றி பெறுவார் என கணிக்கப்படுகிறது. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

    https://www.youtube.com/watch?v=s9X3AIpYTT4&feature=youtu.be