த்ரிஷாவுடன் ரோஜா பட ஹீரோயின் மதுபாலா!.. குஷ்பு மகள் திருமணத்தில் கலக்கல் போஸ்!..

Written by

in

, ,

நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவின் திருமண விழா சமீபத்தில் குடும்பத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

madu

அந்த வகையில், நடிகை த்ரிஷாவும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அவருடன் ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகை மதுபாலாவும் கலந்து கொண்டார்.

roja

திருமண விழாவில் த்ரிஷா மற்றும் மதுபாலா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இருவரும் பாரம்பரிய உடையில் புன்னகையுடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

roja

குறிப்பாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு மதுபாலாவை த்ரிஷாவுடன் ஒரே நிகழ்ச்சியில் பார்த்த ரசிகர்கள், “இரண்டு தலைமுறையின் அழகிய நடிகைகள் ஒரே ஃபிரேமில்”, “ரோஜா ஹீரோயின் இன்னும் அதே அழகில் இருக்கிறார்” என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

குஷ்புவின் குடும்ப விழாவில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், த்ரிஷா மற்றும் மதுபாலாவின் ஸ்டைலான தோற்றமும் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.