Category: home

  • அமெரிக்காவில் விஜய் பட ஹீரோயினுக்கு கிடைத்த கெளரவம்!.. ஆன்ட்டி ரொம்பவே ஹேப்பி!..

    அமெரிக்காவில் விஜய் பட ஹீரோயினுக்கு கிடைத்த கெளரவம்!.. ஆன்ட்டி ரொம்பவே ஹேப்பி!..

    நடிகை பூஜா ஹெக்டே சுதந்திர தினத்தன்று நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். மேலும், தன்னை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்ட சான்றிதழையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

    ph

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 44-வது ஆண்டாக நடைபெற்ற இந்திய தின அணிவகுப்பில் பூஜா ஹெக்டே மற்றும் நடிகர் அதிவி சேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இந்த அணிவகுப்பில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    pooja

    பூஜா ஹேக்டே பகிர்ந்துள்ள பதிவில், நியூயார்க் நகரையும், அங்கு நடைபெறவுள்ள சிறப்புக் கொண்டாட்டத்தையும் எதிர்கொள்ளத் தயாராகிவிட்டேன் என்னைச் சிறப்பித்த நியூயார்க் நகரத்தின் பொது வழக்கறிஞர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். கிடைத்த இந்த அன்பிற்குப் பிறகு, மிகுந்த பணிவுடனும் நன்றியுணர்வுடனும், அதே சமயம் புதிய உற்சாகத்துடனும் மீண்டும் எனது பணிகளைத் தொடங்கத் தயாராக உள்ளேன். இது வெறும் ஆரம்பம் தான் இனி முன்னேற்றப் பாதையில் மட்டுமே பயணிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

    hegde

    மேலும், தற்போது பூஜா ஹெக்டே விஜய்யுடன் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜூலை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ZEE5 ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 21 முதல் வெளியாக உள்ளது. இதற்கிடையே ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 4’ திரைப்படத்திலும் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

    ph

    தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் பூஜா ஹெக்டே, தற்போது இந்த நிகழ்வில் ரசிகர்களை சந்தித்த பூஜா ஹெக்டே, அவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார். நியூயார்க்கில் இந்திய சமூகத்தின் முன்னிலையில் கவுரவிக்கப்பட்டது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • லைட் வெயிட் பேபியாக மாறிய நிவேதா தாமஸ்!.. வேறமாறி டிரான்ஸ்பர்மேஷன்!..

    லைட் வெயிட் பேபியாக மாறிய நிவேதா தாமஸ்!.. வேறமாறி டிரான்ஸ்பர்மேஷன்!..

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் தமிழில் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்த நிவேதா தாமஸ்,  தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் டிரான்ஸ்ஃபர்மேஷன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    nt

    இந்த புகைப்படங்களுடன் நிவேதா தாமஸ், ஆம்ஸ்டர்டாம் நகரின் தெருக்களில் நடந்து சென்றபோது ஒரு பூக்கடையை கடந்து சென்றதாகவும், அங்கிருந்த பூக்களின் வாசனை தோட்டம் போல இருந்ததால் நின்று ரசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அப்போது அங்கிருந்த ஒரு பூங்கொத்தின் நிறங்கள் தனது அம்மாவின் 32 ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் புடவையை நினைவுபடுத்தியதாக நிவேதா தெரிவித்துள்ளார். அந்த தருணத்தில் தான் உடலளவில் ஆம்ஸ்டர்டாமில் இருந்தாலும், மனதளவில் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் வீட்டில் இருக்கும் அலமாரிக்குள் இருந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    nt

    மேலும், சில விஷயங்கள் நம்மை வேறு சில நினைவுகளுடன் எவ்வளவு அழகாக இணைத்துவிடுகின்றன என்பதை நினைத்துப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது என்றும் நிவேதா குறிப்பிட்டுள்ளார்.

    nt

    ‘தர்பார்’ படத்திற்குப் பிறகு நிவேதா பெரும்பாலும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள இந்த பட்டுப்புடவை அணிந்து புதிய லுக்கில் உள்ள புகைப்படங்கள் தமிழ் படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • ரஜினிகாந்த் படமே கிடைத்தாலும்!.. இன்ஸ்டா ரசிகர்களை பட்டினிப்போடாத ராஷி கண்ணா!..

    ரஜினிகாந்த் படமே கிடைத்தாலும்!.. இன்ஸ்டா ரசிகர்களை பட்டினிப்போடாத ராஷி கண்ணா!..

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தர்மன் படத்தில் நடித்து வரும் நடிகை ராஷி கண்ணா, தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

    rk

    ராஷி கண்ணா, ‘மெட்ராஸ் கஃபே’ எனும் இந்தி திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  மேலும், தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் பிரபலமான ராஷி கண்ணா, அடங்கமறு, அரண்மணை 3 மற்றும் 4, துக்ளக் தர்பார், திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    rk

    அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘தர்மன்’ திரைப்படத்தில் செம டிரெண்டியான ரோல் என்பதால் தான் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி குயினாக மாறி வருகிறார் என்கின்றனர். இப்படம் 2027-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியிலும் ராஷி கண்ணாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஃபர்ஸி 2, லுக்கே உள்ளிட்ட இந்தி வெப்சீரிஸ்களிலும் அவர் நடிக்கவுள்ளார்.

    rk

    ஜெயிலர் படத்தில் தமன்னா காவாலா பாடலுக்கு படு கவர்ச்சியாக நடனமாடியிருந்தார். அதே போல அரண்மனை 4 படத்தில் தமன்னாவுடன் இணைந்து ராஷி கண்ணா அச்சச்சோ பாடலுக்கு எக்குத்தப்பாக ஆட்டம் போட்டார். இந்நிலையில், தர்மன் படத்திலும் ராஷி கண்ணாவின் கிளாமர் டான்ஸ் கன்ஃபார்ம் என்கின்றனர்.

  • இந்த ஆண்டு சூர்யாவோட ஆண்டு!.. அடுத்த 150 கோடி படமாக மாறிய விஸ்வநாத் அண்ட் சன்ஸ்!..

    இந்த ஆண்டு சூர்யாவோட ஆண்டு!.. அடுத்த 150 கோடி படமாக மாறிய விஸ்வநாத் அண்ட் சன்ஸ்!..

    நடிகர் சூர்யாவின் நடிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து நல்ல வசூலை குவித்து வருகிறது. படம் வெளியான 4 நாட்களிலேயே ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், ரவீணா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குடும்பம், காதல் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

    vass

    சூர்யாவின் முந்தைய படமான ‘கருப்பு’ பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய அந்த திரைப்படம் உலகளவில் ரூ.300 கோடியை கடந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் தற்போது ரூ.150 கோடியை கடந்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘கருப்பு’ படத்தின் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

    இதே வேகத்தில் தொடர்ந்து படம் வசூல் செய்தால் ரூ.250 கோடி வரை வசூலிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் ‘கருப்பு’ படத்தின் வசூலை முறியடிப்பது இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது. இருப்பினும் சூர்யாவின் தொடர்ச்சியான வெற்றிப் பயணத்தில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மற்றொரு முக்கியமான படமாக மாறியுள்ளது.

  • ஹேப்பி பர்த்டே வீரன்!.. தனுஷ் அக்கா மகனுக்கு அட்டாக்கர் டீம் கொடுத்த ஹைப்பை பாருங்க!..

    ஹேப்பி பர்த்டே வீரன்!.. தனுஷ் அக்கா மகனுக்கு அட்டாக்கர் டீம் கொடுத்த ஹைப்பை பாருங்க!..

    நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவர் நடித்து வரும் ‘அட்டாக்கர்’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பவிஷ், சட்டை இல்லாமல் சேற்றில் வாலிபால் விளையாவது போல் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, Happy Birthday Veeran எனக் குறிப்பிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

    அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம் எழுதி இயக்கும் ‘அட்டாக்கர்’ திரைப்படத்தில் பவிஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகர்-இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பு தம்பதியின் மகள் அவந்திகா சுந்தர் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் அவந்திகா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

    pavish

    தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பவிஷ். அதனைத் தொடர்ந்து பவிஷின் அடுத்த படமாக ‘லவ் ஓ லவ்’ படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

    பவிஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள ‘அட்டாக்கர்’ போஸ்டர், அவரது புதிய தோற்றத்தை வெளிப்படுத்தியிருப்பதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக வாலிபால் பின்னணியில் உருவாகும் இந்தப் படம் பவிஷின் திரைப்பயணத்தில் எந்த அளவுக்கு முக்கியமான படமாக அமையும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • முதலமைச்சர் அம்மாவே இந்த பிக் பாஸ் பிரபலத்தோட வீட்டுக்கு போயிருக்காங்களே!.. என்ன விசேஷம்!..

    முதலமைச்சர் அம்மாவே இந்த பிக் பாஸ் பிரபலத்தோட வீட்டுக்கு போயிருக்காங்களே!.. என்ன விசேஷம்!..

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சுஜா வருணி, தனது வீட்டில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்ற பிரபலங்களின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் நடிகை விசித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள சுஜா வருணி, தொடர்ந்து நடைபெறும் கொண்டாட்டங்கள், அழகான தருணங்கள் மற்றும் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பாசிட்டிவ் வைபையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும், நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் இணைந்து கொண்டாடி, அன்பும் வாழ்த்துகளும் பெற்றது தனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    sv

    இந்த பூஜை நிகழ்வில் கலந்து கொண்ட அனிதா அக்காவை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள சுஜா, அவர் வெளிப்புற அழகை மட்டுமின்றி மனதளவிலும் மிகவும் அழகானவர் என்றும், அன்பான விருந்தோம்பலுடன் அனைவரையும் வரவேற்று இந்தக் கொண்டாட்டத்தை சிறப்பானதாக மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். அவரது ஆசீர்வாதம் தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும் சுஜா கூறியுள்ளார்.

    ss

    அதேபோல், ஷோபா சந்திரசேகர் தங்களுக்கு அளித்த எதிர்பாராத அன்பான சந்திப்பு குறித்தும் சுஜா வருணி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். விமானப் பயணத்தின் போது தங்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கத்தை ஷோபா சந்திரசேகர் இன்னும் நினைவில் வைத்திருப்பதாகவும், இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் தனது மகனுக்கு தொடர்ந்து அன்பையும் ஆசீர்வாதங்களையும் வழங்கி வருவதாகவும் சுஜா குறிப்பிட்டுள்ளார்.

    ssv

    ஒரு தாயாக இதுபோன்ற சிறிய தருணங்கள் தனக்கு மிகவும் விலைமதிப்பற்றவை என்றும், சில நினைவுகள் புகைப்படங்களில் மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் இதயத்தில் நிலைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • யோகி பாபுவுக்கு முருகர் சிலையை பரிசளித்த கவர்ச்சி நடிகை சஞ்சனா!.. இப்படியொரு ஆசையா?..

    யோகி பாபுவுக்கு முருகர் சிலையை பரிசளித்த கவர்ச்சி நடிகை சஞ்சனா!.. இப்படியொரு ஆசையா?..

    நடிகை சஞ்சனா நடிகர் யோகிபாபுவிற்கு முருகர் சிலையை பரிசளித்துள்ள நிலையில் அவர் குடும்பத்தினரிடமிருந்து தனக்கு கிடைத்த அன்பு மற்றும் ஆசீர்வாதம் குறித்து நடிகை சஞ்சனா சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

    இதுகுறித்து சஞ்சனா வெளியிட்டுள்ள பதிவில், “மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும், நன்றியுணர்வுடனும் இருக்கிறேன். சுதந்திர தினத்தின் புனிதமான நாளில், யோகிபாபு சாரின் மாமியாரிடமிருந்து அழகிய வளையல்களைப் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரது அன்பு, ஆசீர்வாதம் மற்றும் எதிர்காலத்தில் எனக்கு அன்பான, கனிவான மற்றும் சிறந்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்ற அவரது மனமார்ந்த அந்தப் பரிசு அமைந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    yb

     தொடர்ந்து, “யோகிபாபு சாரின் மனைவியிடமிருந்து புனிதமான கணபதி பப்பா மாலையையும் பெற்றேன். எனக்கு அது மிகுந்த முக்கியத்துவம் கொண்ட பரிசாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஷ்ராவண மாதத்தை முன்னிட்டு 16 திங்கட்கிழமைகள் விரதம் இருந்து வருவதாகவும் சஞ்சனா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் யோகிபாபுவின் குடும்பத்தினரின் ஆசீர்வாதம் கிடைத்தது ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

    sy

    தனக்கு கிடைத்த இந்த விலைமதிப்பற்ற பரிசுகளை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என்று கூறியுள்ள சஞ்சனா, “விநாயகர் மற்றும் சிவபெருமான் எனக்கு நல்ல வாழ்க்கைத் துணையை சீக்கிரமே அமைத்துக் கொடுப்பார்கள் என நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

  • சுதந்திர தினத்தன்று பர்த்டே!.. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஷாம்பைனை இப்படி பொங்க வைக்கிறாரே!..

    சுதந்திர தினத்தன்று பர்த்டே!.. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஷாம்பைனை இப்படி பொங்க வைக்கிறாரே!..

    ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிரது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்ந்த அர்ஜுன், கொண்டாட்டத்தின் போது ஒரு ஷாம்பெயின் பாட்டிலைத் திறக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    இதனிடையே, அர்ஜுனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிளாஸ்ட்’ திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அர்ஜுனுடன் அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும், குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.76 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. 

    இவ்வாறு தனது திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து குடும்பத்துடன் பிறந்தநாளையும் கொண்டாடியுள்ள அர்ஜுனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வரும் நிலையில், திரையுலகினரும் ரசிகர்களும் அர்ஜுனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • சிக்மா ரிலீஸ் தேதி அறிவிப்பு!.. இந்த தடவை மிஸ்ஸே ஆகாது!..

    சிக்மா ரிலீஸ் தேதி அறிவிப்பு!.. இந்த தடவை மிஸ்ஸே ஆகாது!..

    ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் முன்னதாக ஜூலை 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு புதிய ரிலீஸ் தேதிக்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சுந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், சிவ பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேப்பி, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தமன் S இசையமைத்துள்ளார். 

    sk

    இதனிடையே, ஜேசன் சஞ்சய்யின் முதல் படமாக ‘சிக்மா’ உருவாகியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய்யின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, இயக்குநராக ஜேசன் சஞ்சய் தனது முதல் படத்தில் என்ன மாதிரியான கதை மற்றும் மேக்கிங்கை கொடுத்திருக்கிறார் என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    ரிலீஸ் தேதி தற்போது அக்டோபர் 2 என உறுதி செய்யப்பட்டுள்ளதால், படத்தின் டிரெய்லர், பாடல்கள் மற்றும் அடுத்தடுத்த புரமோஷன் பணிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ‘சிக்மா’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

  • அனிருத் – காவ்யா மாறன் திருமணம் இந்த தேதியிலா!

    அனிருத் – காவ்யா மாறன் திருமணம் இந்த தேதியிலா!

    ராக் ஸ்டார் அனிருத், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுடன் காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் அதை உருதிப்படுத்தும் வகையில் தற்போது அவர்களின் கல்யாண தேதி கசிந்துள்ளது.

    இதற்கிடையே, அனிருத்தின் சினிமா பயணம் தொடர்ந்து வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. ‘3’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர்,பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து இந்திய அளவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

    குறிப்பாக, தற்போது வெளியாகியுள்ள ‘DC’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. அதேபோல் ‘ஜெயிலர் 2’ ,அரசன், தி பாரடைஸ் போன்ற படத்திற்காக அனிருத் உருவாக்கியுள்ள இசை மீதும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

    இவ்வாறு சினிமாவில் அடுத்தடுத்து பெரிய படங்களை கையில் வைத்திருக்கும் அனிருத் குறித்து,  தற்போது அவரது திருமணம் தொடர்பான தகவல்களும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.  இந்நிலையில், அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, 2026 நவம்பர் 10-ம் தேதி கிரீஸ் நாட்டில் டெஸ்டினேஷன் வெட்டிங் நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.