Tag: chiyan vikram

  • சியானுக்கு ஹிட் கொடுக்குமா துருவ நட்சத்திரம்?.. ரிலீஸ் தேதி குறிச்சாச்சி!..

    சியானுக்கு ஹிட் கொடுக்குமா துருவ நட்சத்திரம்?.. ரிலீஸ் தேதி குறிச்சாச்சி!..

    கௌதம் மேனன் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்து உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம், சூர்யாவை வைக்க எடுக்க திட்டமிட்டு அவர் இந்த படத்திலிருந்து விலக சீயான் விக்ரமை வைத்து இந்த படத்தை இயக்கினார் கௌதம் மேனன். படம் முடிந்து ரிலீஸுக்கு ரெடியான நிலையில் கௌதம் மேனன் வாங்கிய சில கோடி கடன்களால் இந்த படத்தை வெளியிட முடியவில்லை. அவரும் பலமுறை முயன்றும் இந்த படம் இப்போது வரை ரிலீஸாகவில்லை.

    இந்நிலையில்தான், சமீபத்தில் இந்த படம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் துருவ நட்சத்திரம் படத்தை ஜூன் 15ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் இந்த படத்திற்கு இருந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

    இந்நிலையில் வருகிற 28ம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். ஒருபக்கம் படம் சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டிருந்தாலும் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள Spy Thriller படமாக துருவ நட்சத்திரம் உருவாகியிருப்பதால் கண்டிப்பாக இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என படக்குழு நம்புகிறது. அதோடு ஜெயிலர் பட வில்லன் வினாயகன் இந்த படத்தில் வில்லனாக கலக்கியிருக்கிறாராம். இந்த படம் வெளியானால் அவரும் ஒரு ரவுண்டு வருவார் என்கிறார்கள்..

    மொத்தத்தில் துருவ நட்சத்திரம் படம் சியான் விக்ரம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியும் கொடுத்துள்ளது. கடந்த பல வருடங்களாகவே விக்ரமுக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் அமையவில்லை. அந்த குறையை துருவ நட்சத்திரம் போக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

  • விக்ரமுக்கு காது கேட்காது!.. தட்டி தட்டி பேசி நடிக்க வைப்பேன்!.. பாலா பகீர்!…

    விக்ரமுக்கு காது கேட்காது!.. தட்டி தட்டி பேசி நடிக்க வைப்பேன்!.. பாலா பகீர்!…

    தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய உழைப்பையும் திறமையும் மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்த வெகு சிலரில் விக்ரமும் ஒருவர். துவக்கத்தில் விக்ரம் நடித்த சில படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தபோதுதான் பாலா இயக்குனராக அறிமுகமான சேது பட வாய்ப்பு அவருக்கு கிடைத்தது..

    சேது பட வாய்ப்பு கூட விக்ரமுக்கு நேரடியாக கிடைக்கவில்லை.. விக்னேஷ், முரளி என பலரிடமும் கதை சொல்லி அது நடக்காமல் கடைசியாக விக்ரம் வந்தார். படத்தின் கதையை புரிந்து கொண்ட விக்ரம் இந்த படம் தன்னுடைய வாழ்க்கையை மாற்றும் என நம்பினார்.. அந்த படத்தின் இரண்டாம் பாதியில் மனநலம் பாதிக்கப்பட்டவராக அவர் கொடுத்த நடிப்பும், உடலை வருத்தி அவர் கொடுத்த உழைப்பும் ரசிகர்களை உருக்கியது.. அதனால்தான் அந்த படம் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், ஒரு பேட்டியில் பேசிய இயக்குனர் பாலா ‘சேது படம் பண்ணும் போது படத்தோட கிளைமாக்ஸ் காட்சியில் ஒல்லியா தெரியுனும்னு விக்ரம் 20 நாள் டயட் இருந்தார்.. வெறும் நீராகாரம் மட்டும்தான் சாப்பிட்டார்.. ஒரு சித்த வைத்திய சாலை காட்சி ஒன்று வரும்.. அவரை படுக்க வைத்து வைத்தியம் பண்ற மாதிரி ஒரு சீன்.. சாப்பிடாம இருந்ததால காது அடைச்சுக்கும். பேசினாலும் கேட்காது.. நான் தட்டி தட்டி ‘கேக்குதா? கேக்குதா? சொல்றது புரியுதா’ என்று கேட்டு கேட்டு நடிக்க வைச்சேன்.. அப்படி கஷ்டப்பட்டுதான் அந்த படத்தில் விக்ரம் நடிச்சார்’ என சொல்லியிருக்கிறார்.

  • சைலண்ட்டா சம்பவம் பண்ணும் சியான் விக்ரம்!.. 4 படமும் வேறலெவல்ல இருக்குமாம்!…

    சேது திரைப்படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகர் விக்ரம். அந்த படத்திற்கு முன்பே அவர் சில படங்களில் நடித்திருந்தாலும் அது அவருக்கு கை கொடுக்கவில்லை. அதேநேரம் சேது திரைப்படம் அவருக்கு ரசிகர்களை உருவாக்கியது. அதன்பின் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக சீயான் விக்ரம் மாறினார்.. அவர் நடிப்பில் வெளிவந்த தில், தூள், சாமி போன்ற படங்கள் வசூலை அள்ளியது..

    அதேநேரம் கடந்த பல வருடங்களாகவே விக்ரமுக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் அமையவில்லை.. அவர் கடைசியாக எப்போது ஹிட் படம் கொடுத்தார் என்பது ரசிகர்களுக்கே மறந்து விட்டது. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2025ம் வருடம் மார்ச் மாதம் வெளியான வீர தீர சூரன் திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. அதேபோல், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த தங்கலான் படத்தில் விக்ரம் சிறப்பாக நடித்திருந்தும் படம் ரசிகர்களுக்கு புரியவில்லை. அதன்பின் இப்போது வரை விக்ரமின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை..

    இந்நிலையில், தனது இஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சியான் விக்ரம் ‘சில நேரங்களில் அமைதி என்பது நம்மை தயார்படுத்திக்கொள்ளும் காலம்.. என்னை ஈர்க்கும் கதைகள் வருவதற்காக நான் ஒரு வருடம் காத்திருந்தேன்.. நான் மிகவும் மதிக்கும் இயக்குனர்களுடன் நான்கு படங்களில் நடிக்கவுள்ளேன்.. அவை ஒவ்வொன்றும் மாறுபட்ட கதைகள்’ என கூறியிருக்கிறார்..

  • வேள்பாரி படத்துக்கு நடிகர்களை டிக் அடித்த ஷங்கர்!.. ஆனா ஒரு கண்டிஷன்!…

    தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஷங்கர். ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் போன்ற படங்களை இயக்கி இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறினார். பாலிவுட், டோலிவுட் நடிகர்கள் கூட ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டனர். மணிரத்தினத்திற்கு பின் ஐஸ்வர்யா நடிக்க ஒப்புக்கொண்டது ஷங்கரின் இயக்கத்தில்தான்.

    அதேநேரம் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ஷங்கர் கடந்த சில வருடங்களாக கொடுத்த தொடர் தோல்விகளால் பின்னுக்கு தள்ளப்பட்டார். அவர் இயக்கி வெளியான இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. அதோடு, தயாரிப்பாளருக்கும் பல கோடி நஷ்டம். கேம் சேஞ்சர் படம் வெளியாகி சரியாக ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனாலும் ஷங்கரின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.

    ஒருபக்கம், வேள்பாரி நாவலை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டார் ஷங்கர். ஆனால் பட்ஜெட் அதிகம் என்பதால் அவருக்கு தமிழ்நாட்டில் தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை. எனவே மும்பை பக்கம் சென்று தயாரிப்பாளரை தேடி வந்தார். இறுதியில், பிரபல விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் பென்மீடியா ஸ்டுடியோஸ் நிறுவனம் ஷங்கரின் வேள்பாரியை தயாரிக்க முன்வந்திருக்கிறது.

    அதேநேரம், எவ்வளவு நாள் ஷூட்டிங், எவ்வளவு பட்ஜெட் என்பதை தெளிவாக சொன்னால் மட்டுமே தயாரிப்போம் என சொல்லிவிட்டதால் தற்போது அதற்கான வேலைகளில் ஷங்கர் இறங்கியிருக்கிறார். ஒருபக்கம் இந்த படத்தில் நடிக்க சியான் விக்ரம் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரை டிக் அடித்திருக்கிறாராம் ஷங்கர். ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் சீயான் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தாலும். ரன்வீர் சிங் ஹிந்தியில் பல சரித்திரக் கதைகளில் நடித்திருந்தாலும் அவர்கள் இருவரையும் ஷங்கர் தேர்ந்தெடுப்பதாக தெரிகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

  • நடிகர்கள் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்கலாமா?!.. ரிஸ்க் எடுக்கும் ஐசரி கணேஷ்!..

    Chiyan vikram 63: ஒரு படம் ஹிட் ஆனாலே நடிகர்கள் தங்களின் சம்பளத்தை 3 மடங்கு ஏற்றிவிட காரணமாக இருப்பதே தயாரிப்பாளர்கள்தான் என சொல்வார்கள். 5 கோடி சம்பளம் வாங்கும் ஒரு நடிகரின் படம் ஓடிவிட்டால் உடனே உங்களுக்கு 20 கோடி தருகிறேன் என ஒரு தயாரிப்பாளர் வருகிறார். 15 கோடி சேர்த்து கிடைப்பதால் நடிகர்களும் கால்ஷிட் கொடுக்கிறார்கள்.

    அதேநேரம், படம் ஓடினால் சம்பளத்தை ஏற்றும் நடிகர்கள் படம் தோல்வி அடைந்தால் சம்பளத்தை குறைப்பதில்லை. அதே சம்பளத்தையே கேட்கிறார்கள். தமிழ் சினிமாவை பொறுத்தவரை மார்கெட் உள்ள நடிகர்கள் என்றால் அது 10 பேரை கூட தாண்டாது. இந்த 10 நடிகர்களைத்தான் எல்லா தயாரிப்பாளர்களும் நம்பி இருக்கிறார்கள்.

    அதனால்தான் ஒவ்வொரு நடிகரும் 4 படங்களை கமிட் செய்து வைத்துக்கொள்கிறார்கள். தனுஷ், அஜித், சிவகார்த்திகேயன், சிம்பு என எல்லோரிடமும் 4 படங்கள் இருக்கிறது. அந்த தயாரிப்பாளர்களிடம் சில கோடிகள் அட்வான்சையும் வாங்கி வைத்துக்கொள்வார்கள். ஒரு தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு வருடக்கணக்கில் கால்ஷீட் கொடுக்கமாட்டார்கள்.

    அந்த நடிகர் கால்ஷீட் கொடுக்கும்வரை அந்த தயாரிப்பாளர் காத்திருக்க வேண்டும். இதுதான் இன்றைய தமிழ் சினிமா நிலை. 60களில் தயாரிப்பாளர்களின் கையில் இருந்த சினிமா இப்போது நடிகர்களின் கைக்கு மாறியிருக்கிறது. நடிகர்கள் சொல்வதே சட்டமாகிவிட்டது. சியான் விக்ரமை பொறுத்தவரை கடந்த பல வருடங்களாகவே அவர் ஹிட் படங்களை கொடுக்கவில்லை. ஆனால், சம்பளம் 50 கோடி கேட்கிறார். இத்தனைக்கும் கடைசியாக வெளியான வீர தீர சூரன் படமும் ஓடவில்லை.

    அவரின் 63வது படத்தை மாவீரன் பட இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்குவதாக இருந்தது. ஆனால், விக்ரம் கேட்ட சம்பளத்தை கொடுக்க முடியாது என தயாரிப்பாளர் சொல்லிவிட்டார். ஒருபக்கம் நடிகர்கள் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் கொடுக்கிறார். எனவே, அவரின் தயாரிப்பில் விக்ரம் நடிக்க அப்படத்தை 96 இயக்குனர் பிரேம் இயக்கவுள்ளார்.

    ஏற்கனவே சிம்பு, ஆர்.ஜே.பாலாஜி போன்றவர்களுக்கு சம்பளத்தை அள்ளி கொடுத்தார் ஐசரி கணேஷ். மேலும், தனுஷ், நயன்தாரா ஆகியோரை வைத்து படங்களை தயாரித்து வருகிறார். வீர தீர சூரன் படம் ஓடவில்லை என்பதால் இந்த படம் ரிலீஸாகும்போது பஞ்சாயத்து இருக்கும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

  • அஜித் லுக்குக்கு மாறிட்டாரே சியான் விக்ரம்!.. புது பட அப்டேட்டும் சொல்லிட்டாங்க!…

    Vikram: ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் சேது படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் விக்ரம். இந்த படத்திலிருந்துதான் ரசிகர்கள் இவரை சியான் விக்ரம் என அழைத்தனர். அதன்பின் தில், தூள், சாமி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னனி நடிகர்களில் ஒருவராக மாறினார்.

    அலட்டிக்கொள்ளாமல் ஒரு தனி ஸ்டைலில் நடிப்பது விக்ரமின் பாணி. அது ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. சாமி படத்தின் வெற்றி இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதன்பின் பல ஆக்சன் படங்களில் நடித்தார். ஒருபக்கம் காசி போன்ற படங்களிலும் நடித்து தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்துக்காட்டினார்.

    அதேநேரம், கமலே பாராட்டும் சிறந்த நடிகராக இருந்தும் விக்ரமுக்கு சரியான படங்கள் அமையவில்லை. கடந்த பல வருடங்களாகவே அவருக்கு ஹிட் படம் அமையவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் நடித்த பொன்னியின் செல்வன் மட்டுமே சூப்பர் ஹிட் அடித்தது. அதில் ஜெயம் ரவி உள்ளிட்ட சிலரும் நடித்திருந்தனர்.

    விக்ரம் நடிப்பில் வெளிவந்த வீர தீர சூரன் படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், தயாரிப்பாளர் செய்த தவறால் படம் தாமதமாக வெளியானது. அதுவே படத்தின் வெற்றியையும் பாதித்தது. படம் வெளியாகி 3 மாதங்கள் ஆகியும் விக்ரமின் புதுப்பட அப்டேட் வெளியாகாமல் இருந்தது. பல இயக்குனர்களிடமும் கதை கேட்டு வந்தார்.

    இந்நிலையில், 96 பட இயக்குனர் பிரேம் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளது. ஐசரி கணேஷுடன் அஜித் போல சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விக்ரம் நிற்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. விக்ரம் இதுவரை இப்படி வெளியே வந்தது இல்லை. இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.

  • இனிமே விஜய் சேதுபதியை நம்பி யூஸ் இல்ல!.. சியான் விக்ரமிடம் போன இயக்குனர்!..

    Director Prem: 96 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். பள்ளியில் ராம், ஜானு இருவரிடம் ஏற்படும் காதல், காலத்தின் ஓட்டத்தில் ஜானு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட ராமோ சிங்கிளாக இருக்கிறார்.

    ரீயூனிட்டில் இருவரும் சந்திக்க நேர்கிறது. ராம் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதை கேட்டு உடையும் ஜானு அவருடன் ஒரு நாள் பயணிக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே என்ன நேர்கிறது என்பதுதான் படத்தின் கதை. பள்ளி கால காதலை மிகவும் அழகாக காட்டியிருந்தார் பிரேம். இந்த படம் பலருக்கும் தங்களின் பால்ய காதலை நினைவுப்படுத்தியது.

    இந்த படத்திற்கு பின் கார்த்தி, அரவிந்த்சாமியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கினார் பிரேம். இதுவும் ஒரு ஃபீல் குட் படமாகவே வெளிவந்தது. உறவின் அருமையை இப்படம் பேசியது. உறவுக்கார திருமணத்தில் கலந்துகொள்ள சொந்த ஊருக்கு செல்லும் அரவிந்த்சாமி சிறு வயதில் பழகிய உறவுக்கார சிறுவனை யாரென்றே தெரியாமல் அவனுடன் ஒருநாள் தங்குகிறார். அவனின் அன்பை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் தவிக்கும் தவிப்புதான் படத்தின் கதை. இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த படத்திற்கு பின் 96 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ராம் ஆசைப்பட்டார். அதற்கான முழுக் கதையையும் எழுதி விஜய் சேதுபதியிடம் கொடுத்தார். கதை நன்றாக இருந்தாலும் பிரேமை காக்க வைத்தார் விஜய் சேதுபதி. மெய்யழகன் வெளியாகி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகிவிட்டது.

    எனவே, இனிமேலும் விஜய் சேதுபதியை நம்பி பலனில்லை என முடிவெடுத்த பிரேம் சியான் விக்ரமிடம் ஒரு கதை சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறார். விரைவில் இப்படம் துவங்கவுள்ளதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

  • அடுத்த அஜித் வந்துட்டாரு!.. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சியான் விக்ரம்.. போட்டோஸ் செம வைரல்!…

    Chiyan Vikram: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருப்பவர் விக்ரம். நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதுவும் கமலை போல வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்க வேண்டும் என்கிற வெறி எப்போதும் விக்ரமுக்கு உண்டு. அதுதான் அவரை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

    ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கத்தில் சேது படத்தில் அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி ஸ்கோர் செய்தார். படத்தின் இரண்டாம் பாதியில் விக்ரம் காட்டிய நடிப்பும், அர்ப்பணிப்பும் ரசிகர்களை அழ வைத்தது. அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்களை பாதித்தது.

    அதன்பின் தில், தூள், சாமி என கமர்ஷியல் படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். லோக்கலாகவும் நடிப்பார். ரிச் லுக்கில் செம ஸ்டைலாகவும் நடிப்பார். அதுதான் விக்ரமின் பெரிய பிளஸ். காசி போன்ற படங்களில் கண் தெரியாதவராகவும் நடித்திருந்தார். பிதாமகன் படத்தில் விக்ரம் நடித்த வேடத்தை இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் செய்தது இல்லை. அந்த படத்திற்காக தேசிய விருது வாங்கினார்.

    கடந்த சில வருடங்களாக் விக்ரமுக்கு சரியான ஹிட் படம் அமையவில்லை. அவரும் தொடர்ந்து பல படங்களிலும் நடித்துப்பார்த்தார். அவர் சிறப்பாக நடித்தாலும் படம் ஹிட் அடிப்பது இல்லை. அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த வீர தீர சூரன் படமும் ஓடவில்லை. தற்போது 96 பட இயக்குனர் பிரேம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது விக்ரமின் 63வது திரைப்படமாகும். விரைவில் ஷூட்டிங் துவங்கவுள்ளது.

    இந்நிலையில், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் விக்ரமின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரேம் படத்தில் இப்படி ஒரு லுக்கில் வருகிறாரா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

  • வாங்கின அடி அப்படி… முரட்டு கூட்டணியில் சீயான் விக்ரம்.. இந்த முறை தப்பிப்பாரா..?

    Chiyan vikram : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். படத்திற்கு படம் தன்னை வருத்தி வித்தியாசமான தோற்றத்துடன் மக்களை மகிழ்விக்கும் உன்னத கலைஞன் சியான் விக்ரம். தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் இவரின் படங்கள் காலத்துக்கும் தனி அடையாளத்தை கொண்டிருக்கும். ஏதோ வந்தோம்.. கடமைக்கு நடித்தோம்.. சும்மா நாலு ஃபைட்.. நாலு சாங் என்று இவரின் படங்கள் இருக்காது.

    வித்தியாசமான கதை அம்சங்கள் கொண்டு அதில் தனது முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களை தனது அசுரத்தனமான நடிப்பால் கட்டிப்போட்டு என்டர்டைன் செய்வதில் வல்லவர் சியான். அப்படி தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்கள் நடிக்க தயங்கும் கதைகளை செலக்ட் செய்து அசால்டாக நடித்துக் கொடுப்பார். அப்படி நடிக்கும் சில படங்கள் இவருக்கு பெயரைப் பற்றிக் கொடுத்தாலும் அது வணிகரீதியாக எந்த ஒரு லாபத்தை கொடுப்பதில்லை.

    விக்ரம் நடிப்பில் வெளியான கடைசி ஹிட் படம் இது என்று அவரது ரசிகர்களிடம் கேட்டால் அவர்களே நீண்ட நாட்கள் யோசிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி அவர் கடைசியாக ஹிட் படம் கொடுத்து நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டது. விக்ரம் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது புதுமை இருந்தாலும் அது வணிக ரீதியாக வெற்றியடைய தவறி வருகிறது. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ”வீர தீரன் சூரன்” திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ஓரளவுக்கு டீசன்ட்டான வெற்றியை பதிவு செய்திருந்தது.

    தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வரும் விக்ரம் அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் கூட்டணி போட்டுள்ளார். பட்ட அடியில் புத்தி தெளிந்து கதை தேர்வில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அடுத்து தேசிய விருது இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கவிருக்கிறார். இது அவரின் 63வது திரைப்படமாகும்.

    எப்படியாவது இந்த முறை ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ள சீயான் விக்ரமை இந்த இளம் இயக்குனர்கள் கரை சேர்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

  • ராஜமவுலி படத்தில் நடிக்கும் சியான் விக்ரம்?!. எல்லாத்துக்கும் ஐடி ரெய்டுதான் காரணம்!….

    Chiyan Vikram: சியான் விக்ரமுக்கு இது போதாத காலம் போல. சூர்யாவை போலவே இவரின் படங்களும் தியேட்டரில் வெளியாகி ஹிட் அடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. விக்ரமின் படம் எப்போது தியேட்டரில் நல்ல வசூலை பெற்றது என்பது யாருக்குமே நினைவில் இல்லை. அவரும் பல கதைகளை கேட்டு அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து நடித்து பார்க்கிறார். ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

    அருண்குமார் இயக்கத்தில் நடித்த வீர தீர சூரன் படமும் ஊத்திக்கொண்டது. இந்த படத்திற்காக தனது சம்பளத்தில் 9 கோடியை விட்டுக்கொடுத்தார் விக்ரம். ஏனெனில், படத்தின் ரிலீஸின் போது ஓடிடி உரிமை காரணமாக நீதிமன்றத்தில் சில நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்து பஞ்சாயத்து ஆகிவிட்டது. எனவே, காலையில் வெளியாக வேண்டிய படம் மாலைதான் வெளியானது. இதுவே படத்தின் வசூலை கடுமையாக பாதித்தது.

    படம் ஹிட் என சியான் விக்ரம் வீடியோவெல்லாம் போட்டாலும் 3 நாட்களில் தியேட்டரில் காத்து வாங்கியது. இந்த படத்திற்கு பின் மண்டேலா,மாவீரன் போன்ற படங்களை இயக்கிய மடோனே அஸ்வின் இயக்கத்தில் நடிக்க சியான் விக்ரம் ஒப்புக்கொண்டிருந்தார். இந்த படத்தில் நடிக்க 50 கோடி சம்பளம் பேசியிருந்தார் விக்ரம்.

    ஆனால், வீர தீர சூரன் பட ரிசல்ட்டுக்கு பின் அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என தயாரிப்பாளர் சொல்ல 40 கோடிக்கு விக்ரம் ஒத்துகொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த படம் டேக் ஆப் ஆகுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், இப்போது நடந்துவரும் ஐடி ரெய்டில் சிக்கியுள்ள ஒருவர்தான் இந்த படத்திற்கு பைனான்ஸ் செய்வதாக இருந்தது. அவர் இப்போது ஐடி ரெய்டுக்கு பயந்து வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்.

    எனவே, ஷூட்டிங் இன்னமும் துவங்கப்படவில்லை. படம் டிராப் ஆகவும் அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் மகேஷ்பாபுவை வைத்து எஸ்.ராஜமவுலி இயக்கி வரும் புதிய படத்தில் ஒரு நெகட்டிவ் வேடத்தில் நடிக்க சியான் விக்ரமை கேட்டிருக்கிறார்கள். அதோடு, விக்ரம் கேட்ட சம்பளத்தையும் அவர் கொடுப்பதாக சொல்லிவிட்டனர்.

    மடோனே அஸ்வின் படம் சந்தேகமாக இருப்பதால் ராஜமவுலி படத்தில் விக்ரம் நடிக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், ராஜமவுலி வருடக்கணக்கில் படமெடுப்பவர். எனவே, அதிக நாட்கள் கால்ஷீட் கேட்பார். எனவே, சியான் விக்ரம் என்ன முடிவெடுப்பார் என தெரியவில்லை. அவரும் சூர்யாவை போலவே ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட வேண்டும் என போராடிக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர் நினைத்தது போல எதுவும் நடிக்கவில்லை’ என்றே சொல்ல வேண்டும்.