Tag: chiyan vikram

  • விஜய் சேதுபதி போனா சியான் விக்ரம்!.. ரூட்டை திருப்பிய 96 பட இயக்குனர்!..

    Director Prem: சில இயக்குனர்கள் சில படங்கள் எடுத்தாலே பேசப்படுவார்கள். தியாகராஜன் குமாரராஜா இதுவரை ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் என இரண்டு படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். ஆனால், அவர் முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுகிறார். அதுபோல்தான் 96 படம் எடுத்த பிரேம் குமார்.

    விஜய் சேதுபதி, திரிஷாவை வைத்து 96 படத்தை இயக்கினார். பள்ளியில் தன்னுடன் படிக்கும் மாணவியை காதலிக்கும் ஹீரோ பல வருடங்கள் ஆன பின்னரும் அவரையே நினைத்துகொண்டு திருமணம் செய்யாமல் இருப்பார். ஒருநாள் தனது பள்ளிக் காதலியை சந்திப்பார். அப்ப்போது அவருக்கு திருமணம் ஆகியிருக்கும். அந்த ஒருநாள் அவருடன் நேரம் செலவழிக்கவும் வாய்ப்பு கிடைக்கும். அதன்பின் அவர்களுக்குள் என்னவானது என்பதுதான் படத்தின் கதை.

    கதை சாதாரணமாக இருந்தாலும் அதை பிரேம் இயக்கியிருந்த விதம் பலருக்கும் தங்களின் பள்ளி கால காதலை நினைவுப்படுத்தியது. அழகிய கவிதை போன்ற காட்சிகளால் 96 ஒரு சூப்பர் ஃபீல் குட் படமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. எனவே, இந்த படம் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.

    இந்த படத்திற்கு பின் கார்த்தி – அரவிந்த்சாமியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கினார் பிரேம். சொந்த ஊரில் சிறு வயதில் தன்னுடன் விளையாடிய ஒரு சிறுவனை பின்னாளில் யாரென்றே தெரியாமல் ஒரு நாள் முக்க அவருடன் கழித்து அந்த அன்பை தாங்கிக்கொள்ள முடியாமல் ஒருவன் தவிக்கும் கதையை தஞ்சாவூர் பின்னணியில் மிகவும் அழகாக எடுத்திருந்தார் பிரேம்.

    கடந்த 10 வருடங்களில் தமிழ் சினிமாவில் வந்த முக்கியமான படம் என தெலுங்கு பட நடிகர் நானியே இப்படத்தை பாராட்டியிருந்தார். அடுத்து 96 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டார் பிரேம். கதையை எழுதி தயாரிப்பாளர் ஐசரி கணேசனிடம் போய் சொன்னார். கதை பிடித்துப்போக உடனே பிரேமுக்கு தங்க சங்கிலியெல்லாம் அணிவித்து பாராட்டினர் ஐசரி கணேஷ்.

    ஆனால், இந்த கதையில் நடிக்க முடியாது என விஜய் சேதுபதி மறுத்துவிட்டார். எனவே, டிராகன் பட நடிகர் பிரதீப் ரங்கநாதனிடம் இந்த கதையை சொன்னார் பிரேம். கதை பிடித்திருந்தாலும் ‘இவ்வவு நல்லவனாக என்னால் நடிக்க முடியாது. என் இமேஜுக்கு இது செட் ஆகாது’ என ஒதுங்கிக்கொண்டார் பிரதீப். எனவே, கடுப்பான பிரேம் அந்த கதையை தூக்கி ஒரமாக வைத்துவிட்டாராம்.

    வேறொரு கதையை உருவாக்கி அதை சியான் விக்ரமிடம் சொல்ல அவருக்கு அது பிடித்துப்போக இப்போது அந்த கதையை டெவலப் செய்து வருகிறார் பிரேம். எல்லாம் சரியாக அமைந்தால் பிரேம் இயக்கத்தில் விக்ரம் நடிப்பார் என்றே கணிக்கப்படுகிறது.

    ஒரு நல்ல கதையை நடிகர்கள் எப்படி மிஸ் பண்ணுகிறார்கள் என்பதற்க்கு இதுவே சாட்சி!..

  • வாங்கடா இன்னைக்கு முடிச்சிறேன்!.. ஆக்‌ஷன் தெறிக்கும் ‘வீர் தீர சூரன்’ டீசர் வீடியோ!…

    சேது திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சியான் விக்ரம். அதன்பின் தில், தூள், சாமி போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். ஒருபக்கம், பிதாமகன், காசி போன்ற நடிப்புக்கும், கெட்டப்புக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடித்தார்.

    அந்நியன், ஐ என வித்தியாசமான கதைகளில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தில் கடுமையான உழைப்பை கொடுத்தார் விக்ரம். கமலுக்கு பின் புதுப்புது கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் உடையவர் இவர். இப்போது வீர தீர சூரன் என்கிற படத்தில் நடித்திருக்கிறார்.

    இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சிந்துபாத், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கியுள்ளார். சித்தா படத்தில் அண்ணன் மகளுக்கும், சித்தப்பாவுக்கும் இடையே உள்ள உறவை காட்டியிருந்தார். ஆனால், வீர தீர சூரன் படத்தில் அதிரடி ஆக்சன கதையை கையில் எடுத்திருக்கிறார்.

    இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. வித்தியாசமாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார்கள். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை பார்க்கும்போது இது ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாக வீர் தீர சூரன் உருவாகியிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வீடியோ இப்போது வெளியாகியிருக்கிறது.

    ஒரு கோவில் திருவிழா நடக்கிறது. அங்கு வில்லன்களின் ஆட்கள் வருவது போலவும், விக்ரமை பிடிக்க எஸ்.ஜே.சூர்யா அங்கே காத்திருப்பது போலவும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருக்கிறது. டீசரை பார்க்கும் போது இது ஒரு பக்கா ஆக்சன் கேங்ஸ்டர் படமாக வீர தீர சூரன் உருவாகியிருப்பது புரிகிறது.

  • 2 நாட்களில் சம்பவம் செய்த வீர தீர சூரன்!.. சியானுக்கு இந்த படம் சூப்பர் ஹிட்டுதான்!…

    Veer Dheera Sooran: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். சேது படம் மூலம் அதிர்வலைகளை ஏற்படுத்தி பின்னர் தில், தூள், சாமி போன்ற கமர்சியல் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் இவர். சேது படத்திற்கு முன்பும் இவர் சில படங்களில் நடித்திருக்கிறார்.

    சேது படத்திற்கு முன்:

    ஆனால், அந்த படங்கள் விக்ரமுக்கு ஹிட் படங்களாக அமையவில்லை. மலையாளத்தில் ஹீரோவின் தம்பி உள்ளிட்ட சில கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்திருக்கிறார். சேது படத்திற்கு பின் கோலிவுட்டில் தொடர்ந்து நடிக்க துவங்கி முக்கியமான நடிகராக மாறினார்.

    அழகாக மட்டும் இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். காசி, பிதாமகன் போன்ற படங்கள் விக்ரம் எந்த மாதிரியான நடிகர் என்பதை ரசிகர்களுக்கு காட்டியது. ஷங்கர் இயக்கத்தில் இவர் நடித்த அந்நியன், ஐ போன்ற படங்களும் பேசப்பட்டது.

    வீர தீர சூரன்:

    தற்போது வீர தீர சூரன் என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தை அருண்குமார் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

    வீர தீர சூரன் பற்றி ஊடகமொன்றில் பேசிய அருண் ‘பொதுவாக ஒரு படத்தில் 60 காட்சிகள் இருக்க வேண்டும் என சொல்வார்கள். அதை இந்த படத்தில் உடைத்திருக்கிறேன். இந்த படத்தில் மொத்தமே 15 சீன்கள்தான் இருக்கும். ஒவ்வொன்றும் நீளமாக இருக்கும்’ என சொல்லி இருக்கிறார். இப்படம் 2 பாகங்களாக வெளிவரவுள்ளது. இதுவரை இல்லாத புதுமையாக 2ம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார்கள். இந்த படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானது.

    ஒரு கோடி பேர்:

    அதில் போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவுக்கும், விக்ரமுக்கும் இடையே இருக்கும் மோதல் பற்றிய காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த டீசர் வீடியோவை ஒரு கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். இந்த தகவலை பட நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

  • எஸ்.கே. பட இயக்குனரை தட்டி தூக்கிய சியான் விக்ரம்!.. இது வேறலெவல் காம்போ!….

    Actor vikram: சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக மாறியவர் சியான் விக்ரம். அதன்பின் தில், தூள், சாமி என கமர்ஷியல் படங்களில் நடித்து மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார். சாமி படத்தின் வெற்றிக்கு பின் இவர்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது.

    ஒருபக்கம் கமர்சியல் படங்கள், ஒரு பக்கம் நடிப்பு மற்றும் தோற்றத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வரும் நடிகர் இவர். காசி, பிதாமகன், அந்நியன், ஐ போன்ற படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அதிலும் ஐ படத்தில் உடலை ஏற்றியும், குறைத்தும் அதிர வைத்திருந்தார்.

    பிதாமகன் படத்திற்கு தேசிய விருதும் வாங்கினார். இத்தனைக்கும் அந்த படத்தில் இவருக்கு வசனமே இல்லை. உடல் மொழியை வெளிப்படுத்தியே நடித்திருந்தார். ஒருபக்கம் விக்ரமின் மகன் துருவும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்தார்.

    இப்போது மாரி செல்வராஜின் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மகன் சினிமாவுக்கு வந்துவிட்டாலும் அவருக்கும் சேர்த்து டஃப் கொடுத்து வருகிறார் சியான் விக்ரம், அருண்குமார் இயக்கத்தில் இவர் நடித்துள்ள வீர தீர சூரன் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்த படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஒரு பக்கா கேங்ஸ்டர் ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், விக்ரம் நடிக்கவுள்ள புதிய படம் தொடர்பான செய்திகள் வெளியே கசிந்திருக்கிறது.

    மண்டேலா திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மடோன் அஸ்வின். அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் படத்தை எடுத்தார். இந்த படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில், விக்ரமின் அடுத்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கணிக்கப்படுகிறது.

  • இது நடக்கும்போது சினிமால இருக்க மாட்டேன்!. பல வருடங்களுக்கு முன்பே சொன்ன விக்ரம்!…

    Chiyan Vikram: சினிமாவில் எப்படியாவது ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும் என பல வருடங்கள் போராடியவர் சியான் விக்ரம். மீரா, தந்து விட்டேன் என்னை என சில படங்களில் நடித்தார். ஆனால் அது கிளிக் ஆகவில்லை. மீரா படத்தின் பாடல்கள் ஹிட் ஆனதே தவிர படம் ஓடவில்லை. எனவே, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடிக்கப்போனார் விக்ரம்.

    மலையாளத்தில் சுரேஷ் கோபி உள்ளிட்ட பல நடிகர்களுக்கு தம்பியாக நடித்திருக்கிறார். ஆனால், தமிழில் பிரபலமான ஹீரோவாக மாற வேண்டும் என்கிற ஆசை அவரிடம் இருந்து வந்தது. அதோடு, வித்தியாசமான கெட்டப்புகளில், வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற தாகமும் அவருக்கு இருந்தது.

    ஆனால், சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பிரபுதேவா, பிரபாஸ், வினித் போன்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து வந்தார். அஜித்துடன் உல்லாசம் என்கிற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படமும் ஓடவில்லை. இடையில் பைக் விபத்தில் சிக்கி 3 வருடங்கள் படுக்கையில் இருந்தார். ‘இனிமேல் நீங்கள் நடக்கவே முடியாது’ என்று கூட மருத்துவர்கள் சொன்னார்கள்.

    ஆனால், தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து மீண்டு வந்தார் விக்ரம். இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் அவர் நடித்த சேது படம் அவர் ஆசைப்பட்டதை துவங்கி வைத்தது. அதன்பின் தில், தூள், சாமி என ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக விக்ரம் மாறியிருக்கிறார்.

    விக்ரமின் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்நிலையில், பல வருடங்களுக்கு முன்பே டிவி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த விக்ரம் ஒரு முக்கிய விஷயத்தை சொல்லியிருந்தார்.

    ஒவ்வொரு நாளும் கண்ணாடி பார்க்கும்போது என் முகம் புதிதாக தெரிய வேண்டும் என நினைப்பேன். சினிமாவிலும் நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களும் அப்படி அமைய வேண்டும் என்பதே என் ஆசை. அதனால்தான் காசி, பிதாமகன், சாமி போன்ற வித்தியாசமான வேடங்களில் நடித்தேன்.

    என் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ‘விக்ரம் ஒரே மாதிரி இருக்கிறார்.. நடிக்கிறார்’ என்கிற எண்ணம் வந்துவிடக்கூடாது. பல வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. எப்போது ‘எல்லா வேடத்திலும் நடித்துவிட்டோம். இனிமேல் நடிக்க வேஷமே இல்லை’ என்று என்னைக்கு எனக்கு தோன்றுகிறதோ அன்றைக்கு சினிமாவில் நான் இருக்க மாட்டேன்’ என சொல்லியிருக்கிறார்.

  • சம்பவத்துக்கு ரெடியான காளி.. இனி ‘NO’ பேக்கப்.. மாஸாக களமிறங்கும் வீர தீர சூரன்!..

    Veera Dheera Sooran: இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் சியான் விக்ரம், துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வீரதீரசூரன். சித்தா திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் அருண்குமார் இயக்கியிருக்கும் இது திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டு ரிலீசாக காத்திருக்கின்றது.

    இந்த திரைப்படத்தில் மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது பாகம் முதலில் வெளியாகின்றது. அதற்கு அடுத்ததாக முதல் பாகம் வெளியாக இருக்கின்றது. சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் இப்படி வெளியானது கிடையாது. இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள்.

    காரணம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் நடிகர் சியான் விக்ரம் கடைசியாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை.

    ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை கொடுத்து வந்தார்கள். ஆனால் நடிகர் சீயான் விக்ரம் இந்த திரைப்படத்தில் மிக மெனக்கட்டு நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் விக்ரம் இணைந்த திரைப்படம் வீரதீரசூரன். இந்த திரைப்படத்தில் காளி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இது ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரம் என கூறப்படுகின்றது.

    வீர தீர சூரன் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாவதற்கு திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அந்த சமயம் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருந்த காரணத்தால் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்திருந்தார்கள். ஆனால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை.

    இருப்பினும் கடைசி நேரத்தில் அவசரமாக படத்தை வெளியிட வேண்டாம் என்று யோசித்த படக்குழு தற்போது ரம்ஜான் பண்டிகைக்கு படத்தை வெளியிடுவதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள். அதன்படி இந்த திரைப்படம் வரும் மார்ச் 27ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கின்றது.

    அதே தினத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி செட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜீனி திரைப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. எந்த திரைப்படம் வந்தாலும் மார்ச் 27ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கு வீர தீர சூரன் படக்குழுவினர் முடிவு செய்கிறார்கள். இது விக்ரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கின்றது. தற்போது ஜீனி திரைப்படம் தள்ளிப்போவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

  • சியான் விக்ரமுக்கு ரூட் கிளியர்!.. அதிக தியேட்டர்களில் வெளியாகும் வீர தீர சூரன்!…

    Veera dheera sooran: நடிகர் சியான் விக்ரம் நடித்து உருவாகியுள்ள திரைப்படம்தான் வீர தீர சூரன். இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகவுள்ளது. புது முயற்சியாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார்கள். இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சிந்துபாத், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கிய அருண் இயக்கியுள்ளார்.

    வீர தீர சூரன் படத்தில் துஷரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் உருவாகி சில மாதங்கள் ஆகியும் இன்னமும் வெளியாகவில்லை. இப்போதெல்லாம் புதிய படங்களின் ரிலீஸ் தேதியை ஓடிடி நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன. படம் வெளியாகி 4 வாரங்களில் ஓடிடியில் படம் வெளியாக வேண்டும்.

    ஆனால், ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் படங்களில் ரிலீஸ் தேதியை வைத்து மற்ற படங்கள் ஓடிடியில் வெளியாகும். இதனால், சில மாதங்கள் புதிய படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்காமல் இருப்பார்கள். வீர தீர சூரன் ஓடிடியில் விற்கப்படாமல் இருந்ததே படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பதற்கு காரணம் என சொல்லப்பட்டது.

    தற்போது அது எல்லாம் சரியாகி மார்ச் 27ம் தேதி ரிலீஸ் என முடிவு செய்யப்பட்டது. அதேநேரம், இரண்டு புதிய படங்கள் வீர தீர சூரனுக்கு எமனாக வந்தன. லூசிபர் படத்தின் 2ம் பாகம் போல் உருவாகியுள்ள எம்புரான் படம் மார்ச் 27ம் தேதி ரிலீஸ் என்றார்கள். இந்த படம் வந்தால் கேரளாவில் அதிக தியேட்டர்கள் கிடைக்காது.

    அதேபோல், பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு படமும் அதே தேதியில் ரிலீஸ் என்றார்கள். அந்த படம் வந்தால் ஆந்திராவிலும், வெளிநாட்டிலும் தியேட்டர்கள் கிடைக்காது. எனவே, வீர தீரன் சூரன் மார்ச் 24ம் தேதி ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்கிற குழப்பம் நீடித்து வந்தது.

    ஆனால், அதிர்ஷ்டவசமாக எம்புரான் மற்றும் ஹரிஹர வீரமல்லு ஆகிய 2 படங்களும் மார்ச் 27ம் தேதி வெளியாகவில்லை. மேலும், அந்த தேதியில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் படம் எதுவும் தமிநாட்டில் வெளியாகவில்லை. எனவே, வீர தீர சூரனுக்கு எல்லா ரூட்டும் கிளியர் ஆகிவிட்டது. எனவே, வருகிற 27ம் தேதி வீர தீரன் சூரன் உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

  • வீர தீர சூரன் ரிலீஸ் தேதி குறிச்சாச்சி!.. தமிழ்நாட்டு உரிமை மட்டும் இவ்வளவு கோடியா?!…

    Veera Dheera Sooran: சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சியான் விக்ரம், ஒருபக்கம் தில், தூள், சாமி போன்ற மசாலா படங்களிலும் ஒரு பக்கம் பிதாமகன், காசி அந்நியன், ஐ போன்ற நடிப்புக்கும், தோற்றத்திற்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடித்து வரும் நடிகர் இவர்.

    கமலுக்கு பின் விதவிதமான கெட்டப்புகளில் நடிக்க ஆசைப்படும் நடிகர் இவர். ஐ படத்திற்காக விக்ரம் போட்ட உழைப்பு கோலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தியது. உடலின் எடையை பாதியாக குறைத்து சிரமப்பட்டு நடித்தார். ஆனாலும் இந்த படத்திற்கு விக்ரமுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

    இதையும் படிங்க: மஞ்சு வாரியர்னா இனிக்குது!.. உதவி இயக்குனருனா கசக்குதா!.. வெற்றிமாறனை கிழித்த அந்தணன்..!

    ஆனாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் அசத்தலான நடிப்பை கொடுத்திருந்தார். இந்த படத்திற்காக கண்டிப்பாக தேசிய விருதை அவர் வாங்குவார் என்றே கணிக்கலாம்.

    தற்போது வீர தீர சூரன் என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை அருண்குமார் இயக்கியிருக்கிறார். இந்த படம் விக்ரமின் 62வது திரைப்படமாகும். எஸ்.ஜே.சூர்யா, துஷரா விஜயன், சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

    veera dheera sooran
    veera dheera sooran

    இந்த படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. புது மாதிரியாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் உள்ளிட்ட டைட்டில் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இந்த படத்தை பொங்கலை முன்னிட்டு 2025ம் வருடம் ஜனவரி 10ம் தேதி வெளியிடலாம் என முடிவெடுத்துள்ளனர். இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை மினிமம் கேரண்டி அடிப்படையில் 21 கோடிக்கு ஃபைவ் ஸ்டார் செந்தில் வாங்கியிருக்கிறார்.

  • நான் நம்பும் ஒரே நடிகர் சியான் விக்ரம்!.. அட நம்ம கமலே இப்படி சொல்லிட்டரே!…

    Vikram kamal: சினிமாவில் போரடி மேலே வந்த நடிகர்களில் சியான் விக்ரம் முக்கியமானவர். பள்ளியில் படிக்கும்போதே ஆங்கில நாடகங்களில் நடித்தார். அப்போதே நடிப்பின் மீது அவருக்கு ஆர்வம் வந்துவிட்டது. கல்லூரி படிப்புக்குபின் சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஆனால், கிடைக்கவில்லை.

    மீரா உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால், அந்த படங்கள் தோல்வி அடைந்தது. அதன்பின் மலையாள சினிமா பக்கம் சென்று சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அப்பாஸ், வினித், பிரபுதேவா போன்ற நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.

    இதையும் படிங்க: மறக்குமா நெஞ்சம்! உசுரே!.. மனைவிக்காக உருகி பாட்டு பாடிய ஏ.ஆர் ரகுமான்?!… வைரலாகும் வீடியோ!…

    பாலா இயக்கத்தில் நடித்த சேது திரைப்படம் அவரின் சினிமா கேரியரை மாற்றியது. அதன்பின் தில், தூள், சாமி என ஹிட் படங்களை கொடுத்து டேக் ஆப் ஆகி முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். சாமி போன்ற மசாலா படங்களிலும், பிதாமகன் போன்ற நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிப்பார்.

    கமலை போல வித்தியாசமான கதாபாத்திரங்களில். தோற்றத்தில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் விக்ரம். அதனால்தான் காசி, பிதாமகன், அந்நியன், ஐ, கோப்ரா போன்ற படங்களில் நடித்தார். மணிரத்னத்தின் இயக்கத்தில் விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்த பொன்னியின் செல்வன் படம் சூப்பர் ஹிட் அடித்தது.

    vikram
    #image_title

    இப்போது, வீர தீர சூரன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அருண்குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில்தான் விக்ரமை பாராட்டி கமல் பேசியிருக்கிறார்.

    நல்ல நடிகருக்கு அடையாளம் தன்னுடைய இடத்தை பற்றி கவலைப்படாமல் கபடி ஆட்டத்தை போல மற்ற நடிகர்களை எப்போது காலை வாரலாம் என நினைக்காமல், மனதில் பதட்டமில்லாமல் நான் ஒரு நல்ல நடிகன், என்னோடு நடிக்கும் நடிகர்களும் நல்ல நடிகர்கள் என நான் நம்பக்கூடிய நடிகர் என்றால் அது விக்ரமாகவே இருக்க முடியும்’ என சொல்லி இருக்கிறார்.

    இதையும் படிங்க: Vijay TVK: விஜய் கட்சியில் இணைந்தாரா பிரபல நடிகை? வைரலாகும் வீடியோவைப் பாருங்க..!

  • அவ்ளோ பெரிய சம்பவக்காரனாடா நீ!.. கூஸ்பம்ஸ் ஏத்தும் வீர தீர சூரன் கிளிம்ப்ஸ் வீடியோ!…

    Veera dheera sooran: சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியவர் விக்ரம். அந்த ஒரு படமே அவருக்கு ரசிகர்களை கொண்டு வந்தது. அதன்பின் தில், தூள், சாமி என தொடர் ஹிட் படங்களை கொடுத்தார். ஒரு பக்கம் கமர்சிஷல் படங்களில் நடித்தாலும் கமலை போல நடிப்புக்கு தீனி போடும் வித்தியாசமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற தாகம் எப்போதும் விக்ரமுக்கு உண்டு.

    அதனால்தான் சினிமாவில் வளரும் சமயத்திலும் காசி போன்ற படங்களில் நடித்தார். அந்நியன், பிதாமகன், ஐ போன்ற படங்களை பார்த்தால் நடிப்பின் மீது அவருக்கு எவ்வளவு காதல் இருக்கிறது என்பது தெரியவரும். பிதாமகன் படத்திற்காக தேசிய விருதும் வாங்கினார் சியான் விக்ரம்.

    ஐ படத்தில் உடல் எடையை 50 சதவீதத்திற்கும் மேல் குறைத்து அதிர வைத்தார். ஆனால், அந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அதோடு, அவருக்கு அந்த படத்திற்கு விருதும் வழங்கப்படவில்லை. கமல் தசாவதாரம் படத்தில் செய்தது போல கோப்ரா படத்தில் விதவிதமான கெட்டப்புகளில் வந்து கலக்கினார் விக்ரம்.

    ஆனால், அந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. இப்போது சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும், சிந்துபாத், சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். 2 பாகங்களாக இப்படம் உருவாகி வரும் நிலையில் இதுவரை இல்லாத மாதிரி இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார்கள்.

    இந்த படத்தில் விக்ரமோடு எஸ்.ஜே.சூர்யா, துஷரா விஜயன் என பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் போல உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சில வீடியோக்கள் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை ஃபைவ் ஸ்டர் செந்தில் பெற்றிருக்கிறார். இவர் ஒரு பிரபல வினியோகஸ்தர்.

    இந்த தகவலை வெளியிட்டு அதோடு படத்தில் வரும் சில காட்சிகளையும் கிளிம்ப்ஸ் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ‘நீ எத்தனை சம்பவம்டா பண்ணி இருக்க?’ என போலீஸ் கேட்க விக்ரம் தனது ஒவ்வொரு விரலாக விட்டு எண்ணிக்கொண்டே இருப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. வீர தீர சூரன் படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.