Tag: Ilayaraja

  • எனக்கு போட்ட பாட்ட ரஜினிக்கு கொடுத்துட்டாரு!… இளையராஜா மீது கோபப்பட்ட பாக்யராஜ்!..

    எனக்கு போட்ட பாட்ட ரஜினிக்கு கொடுத்துட்டாரு!… இளையராஜா மீது கோபப்பட்ட பாக்யராஜ்!..

    திரைத்துறையில் இளையராஜாவை பகைத்துக் கொண்ட சிலரில் பாக்யராஜ் முக்கியமானவர். அது என்னவோ!.. துவக்கத்திலிருந்தே அவர்கள் இருவருக்கும் இடையே செட் ஆகவில்லை.. பாரதிராஜாவிடம் பாக்யராஜ் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது பாடல் தொடர்பான பணிக்கு பாரதிராஜா பாக்யராஜை அனுப்பிய போது அதற்காக கோபப்பட்டவர் இளையராஜா. ஒருகட்டத்தில் பாக்யராஜ் இயக்குனராகி வெற்றிகளை கொடுக்க அவரின் திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்தார்..

    ஆனால், இளையராஜா நடந்துகொள்ளும் விதம் பாக்யராஜுக்கு பிடிக்கவில்லை.. எனவே ஒரு படத்தில் அவரின் தம்பி கங்கை அமரனை இசையமைக்க வைத்தார். இது இளையராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அடுத்த படத்திற்கு பாக்கியராஜ் இளையராஜாவை அணுகிய போது ‘அதான் கங்கை அமரன் இருக்கானே. அவனிடமே போங்க’ என்று சொல்லிவிட்டார் இளையராஜா. அதனால்தான் பாக்யராஜ் இயக்கிய சில படங்களுக்கு இளையராஜா இசை அமைக்கவில்லை.. மாறாக சந்திரபோஸ் உள்ளிட்ட சிலர் இசையமைத்தனர்..

    ஒருகட்டத்தில் ‘இளையராஜா இல்லையென்றால் பாட்டு போட முடியாதா?.. நானே இசையமைக்கிறேன்’ என சொல்லி இசையைக் கற்றுக் கொண்டு தான் இயக்கிய 5 படங்களுக்கு பாக்யராஜே இசையமைத்தார். இந்நிலையில், இளையராஜா கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ் ‘நான் என்ன கேட்கிறானோ அதற்கு 110 சதவீதம் எனக்கு பாடல்களை கொடுத்து விடுவார் இளையராஜா. அதேநேரம் எனக்காக போட்ட இரண்டு பாடல்களை அவர் ரஜினிக்கு கொடுத்து விட்டார்..

    ராசுக்குட்டி படத்திற்கு பாடல்கள் உருவாக்கியபோது மேலும், இரண்டு பாடல்களை கொடுத்தார் இளையராஜா. அதை படத்தில் வைக்க இடமில்லை என்பதால்.. இந்த 2 பாடல்களையும் யாருக்கும் கொடுத்து விடாதீர்கள்.. அடுத்த படத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என அவரிடம் சொல்லியிருந்தேன்.
    ஒருநாள் ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு சென்றபோது அந்த பாடல் பாடிக்கொண்டிருந்தது.. அதுதான் எஜமான் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்’ என்கிற பாடல். அதேபோல் அந்த படத்தில் வந்த ‘நிலவே முகம் காட்டு’ என்கிற பாடலும் இளையராஜா எனக்காக் உருவாக்கியது. அனால், அதையும், எஜமான் படத்திற்கு கொடுத்துவிட்டார்..

    அந்த இரண்டு பாடல்களையும் பொள்ளாச்சியில் உள்ள எனது தோட்டத்தில் நானும் இளையராஜாவும் உருவாக்கினோம் எனவே எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது.. எப்படி கொடுத்தார் என்று எனக்கு தெரியவில்லை என்றார் பாகியராஜ். அதற்கு அருகிலிருந்த இளையராஜா ‘இதில் என்ன ஆச்சரியப்பட வேண்டியிருக்கு.. அந்த இரண்டு பாடல்களையும் அவர்களுக்கு கொடுத்து விட்டேன்’ என்று சொல்லி சிரித்தார்.

  • 8 ராசி இல்ல.. 7 பாட்டு போதும்!.. எல்லா பாட்டும் ஹிட்!.. இளையராஜா செய்த சம்பவம்..

    8 ராசி இல்ல.. 7 பாட்டு போதும்!.. எல்லா பாட்டும் ஹிட்!.. இளையராஜா செய்த சம்பவம்..

    80, 90களில் இளையராஜாவை இசையமைத்து சூப்பர் ஹிட் அடித்த பல பாடல்கள் இப்போதும் 70,80களில் பிறந்த ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் அப்படி பல வருடங்கள் கழித்தும் ரசிகர்கள் சிலாகித்து ரசிக்கும் இளையராஜாவின் அந்த பாடல்கள் எல்லாம் மிகவும் குறைவான நேரங்களில் அவர் இசையமைத்தது என்பது பலருக்கும் தெரியாது.. பல திரைப்படங்களுக்கு அனைத்து பாடல்களையும் அரை மணி நேரத்தில் இளையராஜா போட்டு கொடுத்திருக்கிறார்..

    கமலின் குணா, பிரபுவின் சின்னத்தம்பி உள்ளிட்ட பல திரைப்படங்களுக்குமான பாடல்கள் எல்லாமே இளையராஜா அரை மணி நேரத்தில் உருவாக்கினார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்… அதாவது ஒரு பாடலுக்கு மெட்டமைக்க் அதிகபட்சம் ஐந்து நிமிடம்தான்..

    இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கே.ஆர் ஈரமான ரோஜாவே திரைப்படத்தை நான் இயக்கியபோது அந்த படத்துக்கான பாடல்களை உருவாக்க இளையராஜாவிடம் சென்றபோது அரை மணி நேரத்தில் 8 பாடல்களை போட்டுக் கொடுத்தார்.. எனக்கு 8ம் நம்பர் ராசி இல்லை என்று சொல்லி 7 பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்தேன். அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.. அந்த பாடலுக்கு ஏற்றது போல படமும் சரியாக அமைந்தது..

    அதேபோல் நான் தயாரித்த சின்னப்பூவே மெல்லப்பேசு படத்திலும் காட்சிகளுக்கு ஏற்றார் போல் பாடல்கள் போடவில்லை.. பாடல்களுக்காகவே கதையை உருவாக்கினோம்’ என சொல்லியிருக்கிறார்..

  • இளையராஜாவுக்கு அவ்ளோ திமிரு இருந்தா!.. விஜயகாந்த் படத்தில் நடந்த சம்பவம்!…

    இளையராஜாவுக்கு அவ்ளோ திமிரு இருந்தா!.. விஜயகாந்த் படத்தில் நடந்த சம்பவம்!…

    அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா.. அந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட். இளையராஜாவின் மண்வாசனை மிக்க பாடல்கள் கிராமங்களிலும் ஒலித்தது. எந்த ஒரு கதை என்றாலும், கதாபாத்திரம் என்றாலும் அதற்கு உயிர் கொடுத்தார் இளையராஜா.. மனித உணர்வுகளை அவரின் பாடல்கள் அழகாக பிரதிபலித்தது. அதனால்தான் அவருக்கு அவ்வளவு ரசிகர்கள் உருவானார்கள்..

    80களில் இளையராஜாவின் இசையை நம்பியே பல திரைப்படங்கள் உருவானது.. பல திரைப்படங்களின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை அவ்வளவு முக்கியமான ஒன்றாக இருந்தது.. எனவே அவரிடம் பாடலில் வாங்குவதற்காக பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவர்களின் ஸ்டுடியோ முன் தவம் கிடந்தார்கள்.. அவர் ஒரு கடவுளை போல பார்க்கப்பட்டார்..

    பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு என்ன கதையோ அதை இயக்குனர் சொல்வார்.. அந்த கதைக்கு ஏற்ப 4 அல்லது 5 பாடல்களை இளையராஜா உருவாக்கி கொடுப்பார்.. ஆனால் சில சமயம் இளையராஜா சில பாடல்களை உருவாக்கி அந்த பாடல்களை இயக்குனர்களுக்கு கொடுத்து திரைப்படங்களில் பயன்படுத்த சொல்லியதும் நடந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள்..

    இளையராஜா 6 பாடல்களுக்கான டியூன்களை உருவாக்கினார்.. இந்த ஆறு பாடல்களையும் ஒரே படத்தில் ஒரு இயக்குனர் பயன்படுத்தினால் மட்டுமே இந்த பாடல்களை கொடுப்பேன் என சொல்லிவிட்டார்.. இளையராஜாவை சினிமாவில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் கூட அதில் சில பாடல்களை கேட்டும் இளையராஜா கொடுக்கவில்லை..

    இளையராஜாவுக்கு மிகவும் நெருக்கமான இயக்குனர் பாலுமகேந்திரா அதில் இரண்டு பாடல்களை மட்டும் கேட்டார்.. முடியாது என மறுத்துவிட்டார். ஆனால் அந்த சவாலை இருக்க ஆர்.சுந்தர்ராஜன் ஏற்றுக்கொண்டார். அந்த 6 பாடல்களுக்கும் பொருந்துவது போல ஒரு கதையை உருவாக்கினார். அப்படி உருவான வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததோடு, விஜயகாந்துக்கும் ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இப்போது வரை 70,80 கிட்ஸ்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.

    vaithegi

    இந்த அனுபவம் பற்றி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ஆர்.சுந்தர்ராஜன் ‘இளையராஜாவுக்கு ஒரு தொழில் திமிர் இருந்ததது. திமிரு இருந்தால்தான் அவர் நல்ல கலைஞன். ஒரு இயக்குனராக என் திமிரை காட்ட வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் அவர் சொன்னதற்கு ஒப்புக்கொண்டு வைதேகி காத்திருந்தாள் படத்தை இயக்கினேன்’ என சொல்லியிருக்கிறார்.,

  • இளையராஜாவுக்கு தெரியாம முழு படத்தையே எடுத்த ராஜ்கிரண்!… என் ராசாவின் மனசிலே உருவான கதை!…

    இளையராஜாவுக்கு தெரியாம முழு படத்தையே எடுத்த ராஜ்கிரண்!… என் ராசாவின் மனசிலே உருவான கதை!…

    கோலிவுட்டில் விநியோகஸ்தராக வலம் வந்த ராஜ்கிரண் ராமராஜனை வைத்து இரண்டு திரைப்படங்களை தயாரித்தார்.. மூன்றாவதாக கஸ்தூரி ராஜா இயக்கத்தில் என் ராசாவின் மனசிலே படத்தை எடுக்க திட்டமிட்டார். ஆனால், ராமராஜன் நடிக்காததால் அவரே ஹீரோவாக நடிக்கவும் முடிவெடுத்தார். இது தொடர்பாக ராஜ்கிரண் இளையராஜாவிடம் பேசியபோது ‘உனக்கு எதற்கு இந்த வேலை.. வேற யாராவது வச்சி எடு’ என்று சொல்லி அனுப்பிவிட்டாராம்.

    அதிர்ச்சியான ராஜ்கிரன் இளையராஜாவின் குரு ஜி.கே வெங்கடேசிடம் சென்று இதுபற்றி சொல்லியிருக்கிறார். அப்போது அவர் ‘நீ படத்தை எடுத்து முடி.. இளையராஜாகிட்ட கடைசியா சொல்லிக்கலாம்’ என சொல்ல அவர் கொடுத்த தைரியத்தில் முழு படத்தையும் எடுத்து முடித்து விட்டார் ராஜ்கிரண்..

    நான்கு மாதங்களுக்குபின் ராஜ்கிரண் இளையராஜாவை சந்தித்த போது ‘என்னாச்சி?. படத்தை பத்தி பேசிட்டு போனியே’ என கேட்டிருக்கிறார். ‘படத்தை எடுத்து முடிச்சிட்டேன்’ என ராஜ்கிரண் சொல்ல ஷாக்கான இளையராஜா ‘படத்தை எடுத்துட்டியா?.. யாரு ஹீரோ?’ என்று கேட்டிருக்கிறார்.. ‘நான்தான்’ என ராஜ்கிரண் சொல்லிவிட்டு, படத்தை நீங்கள் பார்க்க வேண்டும்’ என சொல்ல படத்தை பார்த்திருக்கிறார் இளையராஜா.

    படத்தை பார்த்து விட்டு இந்த படத்தை பாவலர் கிரியேசன்ஸ் (இளையராஜாவின் தயாரிப்பு நிறுவனம்) பேனரில் வெளியிடுவோம்.. இந்த படத்திற்கு பாடல்கள் தேவையில்லை.. பாடல்கள் வைத்தால் அது படத்தை கெடுத்து விடும்’ என்று இளையராஜா கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜ்கிரண் ‘உங்கள் மியூசிக்தான் இந்த படத்துக்கு உயிர்னு நினைச்சிட்டுருக்கேன்’ என்று சொல்ல வேறு வழியில்லாமல் ராஜ்கிரண் அந்த படத்திற்கு பாடல்களை போட்டு கொடுத்திருக்கிறார்..

    அப்படி வெளியான என் ராசாவின் மனசிலே திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.. அதோடு கோலிவுட்டில் ராஜ்கிரண் ஒரு முக்கிய நடிகராகவும் மாறினார். சில படங்களில் ஹீரோவாக நடித்த ராஜ்கிரண் ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறியது குறிப்பிடத்தக்கது.

  • கள்ளக்காதல் சிட்டுக்குருவி… மெட்டு போட்ட இளையராஜா… வைரமுத்து அடித்த கோல்!

    கள்ளக்காதல் சிட்டுக்குருவி… மெட்டு போட்ட இளையராஜா… வைரமுத்து அடித்த கோல்!

    திரைக்கதை மன்னன் பாக்கியராஜ் தமிழ்சினிமா உலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். அவரது படங்கள் எல்லாமே ரசிக்கும் விதத்தில் இருக்கும். அப்படித்தான் இந்தப் படம். பேரு சின்னவீடு. கேட்கும்போதே இது அந்த மாதிரியான படமான்னு தோணும். ஆனா கதை அதுதான். ஆபாசம், அருவருப்பு, விரசம் இல்லாமல் சொல்ல வேண்டிய கருத்தை நச்சென்று திரைக்கதையால் சொல்லி இருப்பார் பாக்கியராஜ். படத்திற்கு இசை அமைத்தவர் இளையராஜா. பாடல்கள் எல்லாம் சூப்பர். அந்த வகையில் படத்தில் இடம்பெற்ற சிட்டுக்குருவி வெட்கப்படுது என்ற பாடல் உருவானது எப்படி? வாங்க பார்க்கலாம்.

    ரெண்டு சிட்டுக்குருவி பறக்குது. இந்த ரெண்டும் கள்ளக்காதல் சிட்டுக்குருவி. கள்ளக்காதலர்கள் என்ன பண்ணுவாங்கன்னா நேரா போக மாட்டாங்க. ஆள் இருக்கையில ஒதுங்கி ஒதுங்கிப் போவாங்க. கள்ளக்காதலர்கள் எப்படி போவாங்கன்னு இளையராஜா ஒரு மெட்டுப் போட்டுருப்பாரு. அது என்ன பாட்டுன்னா… சின்ன வீடு திரைப்படம். இதுல வரக்கூடிய ”தரத தத்தத் தத்த தரதத் தத்த தத்த தரதத் தத்த…” என்று ஆரம்பிக்கும் இந்த மெட்டு.

    போகும்போதே மொத்த மெட்டும் இப்படித்தான் இருக்கும். இதைக் கொண்டு போய் கவிப்பேரரசு வைரமுத்துக்கிட்ட கொடுத்துருக்காங்க. அவர் சொல்லிருக்காரு. இது சிட்டுக்குருவி பறக்குதுக்கான மெட்டான்னு. அப்போ இவரு மனசுல வச்சி ஒரு மெட்டைப் போட்டா, ஒரு பாடலாசிரியரோட நுட்பத்தைக் கவனிச்சிப் பாருங்க. மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

  • இளையராஜாவுக்கு ஞானம் வந்ததுக்கு காரணமே என் சமையல்தான்!. கங்கை அமரன் ராக்ஸ்!…

    இளையராஜாவுக்கு ஞானம் வந்ததுக்கு காரணமே என் சமையல்தான்!. கங்கை அமரன் ராக்ஸ்!…

    அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க தொடங்கி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் இளையராஜா. 80களில் இவரின் பாடல் ஒலிக்காத குக்கிராங்கள் கூட தமிழ்நாட்டில் இல்லை. அப்போது வெளியான 90 சதவீத திரைப்படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்தார்.

    இளையராஜா படத்திற்கு இசையமைக்க சம்மதித்துவிட்டால் அந்த படம் வெற்றி என்கிற நிலைதான் அப்போது இருந்தது. எனவே ஹீரோவை தேர்ந்தெடுப்பதற்கு முன்பே தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இளையராஜாவிடம் பேசி இசையமைக்க சம்மதம் வாங்கிவிடுவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக இளையராஜா இருந்தார்.

    இப்போதும் 70, 80களில் பிறந்தவர்ளுக்கு இளையராஜாவின் பாடல்கள்தான் ஃபேவரைட்., கார் பயணங்களில் இன்னமும் அவரின் பாடல்களைத்தான் கேட்கிறார்கள். சினிமாவில் இசையமைப்பாளராகும் ஆசையில் இளையராஜா சென்னை வந்தபோது பாடலாசிரியர் ஆகவேண்டும் என்கிற ஆசையில் அவருடனே வந்தவர்தான் அவரின் தம்பி கங்கை அமரன். இவரும் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர் என பல அவதாரங்களை எடுத்திருக்கிறார்..

    இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய கங்கை அமரன் ‘நாங்க அப்போ சினிமாவில் வாசிக்கவில்லை.. லைட் மியூசிக்கில் வாசிச்சிக்கிட்டு இருந்தோம். நான் ரூம்ல ரசம் வைப்போம். அதை குடிக்கிறதுக்காகவே எஸ்.பி.பி ரூமுக்கு வருவான். என் ரசத்தை குடிச்சிட்டு சூப்பரா இருக்குடான்னு சொல்லுவான். என்னோட ரசத்த குடிச்சதனாலதான் உன் வாய்ஸ் நல்லாருக்குன்னு சொல்லுவேன்.. அதே மாதிரி இளையராஜாவுக்கு எப்படி இவ்வளவு ஞானம் வந்தது? நான் வச்ச சாம்பார், ரசத்த சாப்பிடதாலதான்’ என பேசியிருக்கிறார்.

  • Ilayaraja: அந்த ஒரு வசனத்திற்காக இசையமைக்க மறுத்த இளையராஜா

    Ilayaraja: அந்த ஒரு வசனத்திற்காக இசையமைக்க மறுத்த இளையராஜா

    தமிழ் சினிமாவி 80களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் ஆர்.சுந்தர்ராஜன். முதல் படமான பயணங்கள் முடிவதில்லை சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து அப்போதைய முன்னணி நடிகர்கள் பலரும் இவருடன் படம் பண்ண காத்திருந்தனர்.

    தொடர்ந்து விஜயகாந்துடன் வைதேகி காத்திருந்தால், அம்மன் கோவில் கிழக்காலே, என் ஆசை மச்சான், ரஜினியுடன் ராஜாதி ராஜா என அவரது பல படங்கள் சூப்பர்ஹிட்.

    ஆர்.சுந்தர்ராஜன் சத்யராஜூடன் இணைந்து திருமதி பழனிச்சாமி என்ற படத்தினை இயக்கினார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகின. ஆனல் இந்த படத்தின் துவக்கத்தில் இளையராஜா இப்படடத்திற்கு இசையமைக்க மறுத்தாராம். அதற்கான காரணத்தை இயக்குனர் கூறியபோது, திருமதி பழனிசாமி படத்தில் 1000 கோவில் கட்டுவதை விட, 10000 பேருக்கு சாப்பாடு போடுவதை விட ஒருத்தனை படிக்க வைப்பது அதிக புண்ணியம் என்று வசனம் வைத்தேன். ஆனால் இளையராஜா தற்கு சம்மதிக்கவில்லை. கடவுள் இல்லாமல் எல்லோரும் வந்துவிட்டார்களா என்று கேட்டு படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று மறுத்தார். பிறகு அந்த வசனத்தை மாற்றி வைத்த பினே இளையராஜா சம்மதித்தார் என்று கூறினார்.

  • இளையராஜாவையே மொத்தமாக மாற்றிய பாக்யராஜ்!… செம பிளாஷ்பேக்!…

    அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கியவர் இளையராஜா. 80களில் இவரின் இசைக்கொடிதான் கோலிவுட்டில் பறந்தது. அப்போது வெளியான 90 சதவீத படங்களுக்கு இவர்தான் இசை. இளையராஜாவின் இசையை நம்பியே அப்போது பல படங்களும் உருவாகியது. ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், ராமராஜன், சத்யராஜ், பிரபு என 80, 90களில் முக்கிய நடிகர்களாக இருந்த எல்லோருமே தங்களது படங்களின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையை நம்பியிருந்தார்கள்.

    இளையராஜா ஒரு விஷயத்தில் முடிவெடுத்து விட்டால் அதை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டார்.. அதேபோல் அவரின் சுபாவத்தையும் யாராலும் மாற்ற முடியாது. அவ்வளவு பிடிவாதம் கொண்டவர் அவர். அதனாலேயே பல விமர்சனங்களை அவர் சந்தித்திருக்கிறார். இந்நிலையில் பாக்யராஜ் தன்னை மாற்றியதாக இளையராஜாவை ஒரு நிகழ்ச்சி ஒன்றில் சொல்லியிருக்கிறார்..

    ‘ஒருமுறை பாரதிராஜா கதை சொல்ல முடியாமல் போக பாக்யராஜ் கதை சொல்ல வருவான் என என்னிடம் சொன்னார்.. நான் ‘ஏன்இப்படி கண்டவர்களையெல்லாம் கதை சொல்ல வைக்கிற?’ என்று கேட்டேன்.. ஆனால் பாக்யராஜ் வந்து கதையை சொன்ன போது அசந்து போனேன். எனது வாழ்க்கையில் ஒருவர் கதை சொல்வதைப் பார்த்து நான் மிகவும் வியந்தவர்களில் பாக்யராஜ் ஒருவர்.

    ‘யாருக்கு என்ன திறமை இருக்கும் என்பதை தீர்மானிக்க நான் யார்?’ என்ற கேள்வி அப்போது எனக்கு எழுந்தது.. அப்போதிலிருந்து புதிய இயக்குனர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு படம் பண்ணுவது என முடிவெடுத்தேன்.. நான் இந்த முடிவை எடுக்க பாக்யராஜ்தான் காரணம்.. எனக்கு பாடம் கற்பித்தவர் அவர்’ என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் இளையராஜா..

  • சரக்கடிச்சிட்டு நைட்டு வருவானுங்க!.. வெங்கட் பிரபு, பிரேம்ஜி அலப்பறைகளை சொல்லும் கங்கை அமரன்..

    இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இளையராஜா இசையில் சாதிக்க வேண்டும் என சொந்த ஊரிலிருந்து கிளம்பி சென்னை கிளம்பிய போது பாடலாசிரியர் ஆகவேண்டும் என்கிற ஆசையில் அவருடனே வந்தவர்தான் கங்கை அமரன். இளையராஜா இசையமைப்பாளரான பின் அவரின் இசையில் தொடர்ந்து பாடல்களை எழுதி வந்தார் கங்கை அமரன்.

    ஒருகட்டத்தில் கங்கை அமரன் தனியாக இசையமைக்க தொடங்கினார்.. அப்படி அவர் இசையமைத்த பல திரைப்படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது.. அதோடு நிறுத்தி விடாமல் இயக்குனர் அவதாரம் எடுத்து கரகாட்டக்காரன் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கினார் கங்கை அமரன்.

    கங்கை அமரனுகு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரண்டு மகன்கள் உண்டு. அதில் வெங்கட் பிரபு இயக்குனராகிவிட பிரேம்ஜி நடிகராக மாறினார். வெங்கட் பிரபு பல படங்களை இயக்கியிருந்தாலும் அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா, விஜயை வைத்து இயக்கிய கோட், சிம்புவை வைத்து இயக்கிய மாநாடு போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

    வெங்கட் பிரபுவுக்கும், பிரேம்ஜிக்கும் அடிக்கடி பார்ட்டிக்கு போகும் பழக்கம் உண்டு. ஏனெனில், வெங்கட்பிரபுவின் நண்பர் கூட்டமும் பெரியது. இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய கங்கை அமரன் ‘என்னோட நண்பர்கள் வெளிநாட்டிலிருந்து வரும்போது எனக்கு சரக்கு பாட்டில் வாங்கிட்டு வருவாங்க.. அதை நான் என்னுடைய ரூமில் வைத்து விடுவேன்.. பசங்க வீட்ல ஒண்ணா இருக்கும் போது பாட்ட்டிக்கு போவாங்க.. டேய் உங்களுக்கு எது வேணுமோ எடுத்துட்டு போங்கன்னு சொல்லுவேன்.. இதெல்லாம் வேணாம்பான்னு சொல்லிட்டு போயிடுவாங்க..

    குடிச்சிட்டு நைட்டு 11 மணிக்கு பீர் வாசனை வரக்கூடாதுன்னு என் ரூம் ஜன்னல் வழியா ‘டாடி தூங்கிட்டியா’ன்னு கேட்பானுங்க.. அதாவது வந்துட்டோம்னு அட்டனன்ஸ் போடுறாங்களாம்.. அப்படிப்பட்ட பிள்ளைங்க.. அப்படிப்பட்ட அப்பா’ என ஓப்பனாக பேசியிருக்கிறார்.

  • வனிதா அக்காவுக்கு ஆப்படிச்சிட்டாரே இளையராஜா!.. மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டருக்கு வந்த சிக்கல்!…

    Ilayaraja: இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை அனுமதியின்றி திரைப்படங்களில் பயன்படுத்தி வருவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறார். இதற்கு முன் மஞ்சுமெல் பாய்ஸ், கூலி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் அவரின் பாடல்களை பயன்படுத்தியதற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

    தனது பாடல்களை பயன்படுத்த தன்னுடைய அனுமதி வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். சிலர் மட்டுமே அதை செய்கிறார்கள். பலரும் பாடல்களுக்கான உரிமையை வைத்திருக்கும் ஆடியோ நிறுவனங்களிடம் என்.ஓ.சி வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால், படைப்புத்திறன் சொத்து அடிப்படையில் இளையராஜா உரிமை கோருகிறார்.

    இதை சமூகவலைத்தளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இளையராஜா காசு ஆசை பிடித்தவர் என்பது போல சித்திரிக்கிறார்கள். ஆனால், தன்னுடைய பாடலை அனுமதி பெறாமல் வியாபார ரீதியாக பயன்படுத்தி காசு சம்பாதிப்பதை எதிர்த்தே இளையராஜா நீதிமன்றம் செல்கிறார்.

    வனிதா விஜயகுமார் நடித்துள்ள திரைப்படம் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தை வனிதாவின் மகன் ஜோவிகா இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் வனிதாவே கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கான புரமோஷனை கடந்த சில நாட்களாகவே வனிதா செய்து வந்தார். எங்களுக்கு ஆதரவு கொடுங்கள், மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்திருக்கிறோம் என செய்தியாளர்கள் வனிதாவும், அவரின் மகளும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த படம் இன்று காலை தமிழகத்தில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், இந்த படத்தில் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம் பெற்ற ‘ராத்திரி சிவராத்திரி’ என்ற தனது பாடல் இடம் பெற்றுள்ளதை எதிர்த்து இளையரஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு வருகிற 13ம் தேதி விசாரணைக்கு வருகிறது.