Tag: Ilayaraja

  • உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்ல… இளையராஜாவுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து!

    ராக தேவன் இசைஞானி இளையராஜாவின் 82வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஜூன் 3ம் தேதி பிறந்த இளையராஜா, கலைஞர் கருணாநிதி மீது கொண்ட பற்று காரணமாக அவருடைய பிறந்தநாளை ஒரு நாள் முன்பு கொண்டாடும் பழக்கத்தை கடைபிடிக்கத் தொடங்கி பல வருடங்களாக ஜூன் 2ம் தேதியே கொண்டாடி வருகிறார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் 7,000-க்கும் மேற்பட்ட பாடல்களையும், 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ள இளையராஜாவின் இசை, உணர்வுகளை ஆழமாகத் தொட்டு பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் பிரபலமாக உள்ளன.

    இளையராஜா ’அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரது பின்னணி இசை திரைப்படங்களுக்கு உயிரூட்டும் வகையில் அமைந்துள்ளது. பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற இந்திய அரசின் விருதுகள், 5 முறை தேசிய விருது , பல மாநில அரசு விருதுகள் மற்றும் திரைப்படத் துறை விருதுகள் என பல விருதுகளை வென்று குவித்துள்ளார்.

    கமல்ஹாசன் மற்றும் இளையராஜா இணைந்து பணியாற்ற தொடங்கிய முதல் படம் 16 வயதினிலே. அதை தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள், குணா, தேவர் மகன், ஹே ராம், விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் இணைந்து பல அழகான தமிழ் பாடல்களை தமிழ் சினிமா ரசிகர்களின் காதில் தேன் போல பாய வைத்துள்ளனர். 16 வயதினிலே படத்தில் தொடங்கிய நட்பு இன்றும் இவர்கள் இடையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும், கமல், இளையராஜாவின் இசையை “திரையிசைச் சகாப்தம்” என்று ஒரு நிகழ்ச்சியின் போது புகழ்ந்துள்ளார்.

    இந்நிலையில் 82வது பிறந்த நாளை கொண்டாடி வரும் இசைஞானி இளையராஜாவிற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்ல, அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவு ஒன்றை பதிவிட்டு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

  • ஒரு வாரம் தூங்காம!.. பேச வார்த்தையே வரல!. இளையராஜா ஃபீல் ஆயிட்டாரே!..

    Ilayaraja: அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கி தமிழ் சினிமாவில் கிராமத்திய இசையை புகுத்தி ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தவர் இளையராஜா. கிராமத்திய இசை மட்டுமின்றி மேற்கத்திய மற்றும் கர்நாடக இசையையும் தன்னால் செய்ய முடியும் என பலருக்கும் காட்டியவர் இவர்.

    80களில் வெளியான 90 சதவீத படங்களுக்கு இளையராஜாதான் இசை. ரஜினி, கமல், மோகன், ராமராஜன், விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்கள் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இவர். அதனால்தான் இவரை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கடவுளாக பார்த்தார்கள்.

    இளையராஜா கோபக்காரர், தலைக்கணம் உடையவர் என பலரும் அவரை விமர்சிப்பது உண்டு. ஆனால், அதற்கெல்லாம் அவர் பதில் சொல்வது இல்லை. ‘நான் நிறைய சாதித்திருக்கிறேன். எனக்குதான் தலைக்கணம் இருக்கணும். சும்மா இருக்கும் நீ என்னை பற்றி பேசி காலத்தை வீணாக்குகிறாய்’ என ஊடகம் ஒன்றில் பேசினார்.

    இளையராஜாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்களின் மனக்காயங்களுக்கு அவரின் பாடல்கள்தான் ஆறுதலாக இருப்பதாக அவர்கள் தொடர்ந்து செல்லி வருகிறார்கள். இளையராஜாவின் பாடல்கள் இல்லையென்றால் பலருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் என்று சொல்வர்களும் இருக்கிறார்கள்.

    அப்படிப்பட்ட இளையராஜா இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடினார். ஒவ்வொரு வருடமும் அவரின் பிறந்தநாளினின் போது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரின் ஸ்டுடியோவுக்கு ரசிகர்கள் பலரும் நேரில் வந்து அவருக்கு வாழ்த்து சொல்வார்கள். அதுபோல இந்த வருடம் பலரும் வந்து அவர்களுக்கு வாழ்த்து சொன்னார்கள். அவர்கள் கொடுத்த அன்பளிப்புகளையும் இளையராஜா பெற்றுகொண்டார்.

    அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா ‘இவங்களையெல்லாம் பார்த்தா எனக்கு வாய் அடைச்சி போகுது. வார்த்தையே வரல. அடேங்கப்பா இவ்வளவு தூரம் வராங்களே. கடவுள் நம் மீது எவ்வளவு கருணை வைத்திருக்கிறார் என தோன்றுகிறது. என் மீது எவ்வளவு அன்பு இருந்தால் இவங்க சிரமங்களை பார்க்காமல் பஸ்ஸிலும், டிரெய்ன்லயும், ஆட்டோவிலும் தூங்காம வந்திருப்பாங்க. என்னை பார்க்கிறது சாதாரண விஷயம்தான் . ஆனால், அவரை பார்க்க போகிறோம் என ஒரு வாரம் தூங்காமல் இருப்பவர்கள் எல்லாம் இருக்காங்க. அவங்களுகெல்லாம் நான் எப்படி வாழ்த்து சொறது. அந்த வார்த்தையே கிடையாது. நன்றி. வணக்கம்’ என நெகிழ்ந்து பேசினார்.

  • இது கஷ்டமா இருக்கேன்னு நீங்களே ஃபீல் பண்ண பாட்டு எது?!.. இளையராஜா சொன்ன பதில்!..

    Ilayaraja: தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்கிற ஆசையில் தனது சகோதரர்களுடன் சென்னை வந்து வாய்ப்பு தேடிய இவர். வாய்ப்பு தேடுவதற்கு முன் சில இசையமைப்பாளர்களிடம் இளையராஜா வேலையும் செய்திருக்கிறார்.

    ஒருபக்கம் சிலரிடம் சினிமா இசையையும் கற்றுக்கொண்டார். இனிமேல் இசையமைக்கலாம் என்கிற நம்பிக்கை வந்த பின்னரே அவர் வாய்ப்பு தேடினார். அப்போது எம்.எஸ்.விஸ்வநாதன் பல படங்களுக்கும் இசையமைத்துகொண்டிருந்தார். எனவே, புதிதாக ஒருவரை நம்பி எப்படி இசையமைக்க வாய்ப்பை கொடுக்க முடியும்?. பாடல்கள் சரியாக அமையாமல் படம் தோல்வி அடைந்தால் என்னாவது? என்கிற பயத்தில் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ராஜாவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

    அப்போது பிரபல தயாரிப்பாளரும், கதாசிரியராகவும் இருந்த பஞ்சு அருணாச்சலம்தான் ராஜாவை நம்பி வாய்ப்பு கொடுத்தார். அப்படி ராஜா இசையமைத்த அன்னக்கிளி திரைப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் இளையராஜாவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது.

    80களில் தமிழ் சினிமாவே இளையராஜாவின் இசையை நம்பி இருந்தது. அவர் பாட்டு போட்டால் படம் ஹிட் என்கிற நிலையும் உருவானது. அதோடு, பின்னணி இசையிலும் அசத்தினார் ராஜா. அவரின் பாடல்கள் பலரின் மனக்காயங்களுக்கும் மருந்தாகவும், ஆறுதலாகவும் மாறியது. 70,80களில் பிறந்தவர்கள் இப்போதும் ராஜாவின் தீவிர ரசிகர்களாகவே இருக்கிறார்கள்.

    அப்படிப்பட்ட இளையராஜா சமீபத்தில் தனது 82வது வயது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் தீவிர ரசிகர்கள் பலரும் நேரில் வந்து அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். அப்போது சில ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு இளையராஜாவும் பதில் கூறினார். ஒரு ரசிகை ‘நீங்கள் உருவாக்கிய பல பாடல்களை பாட பாடகர்கள் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், பாடலை உருவாக்கும்போதே ‘இந்த பாடல் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே’ என ஏதேனும் ஒரு பாடல் உங்களை யோசிக்க வைத்திருக்கிறதா?’ எனக்கேட்டார். அதற்கு ‘அப்படி எதுவுமில்லை’ என வெறும் சைகையாலே பதில் சொன்னார் இளையராஜா.

  • மரியாதையே இல்லையா!.. இளையராஜாவை தொடர்ந்து காப்பிரைட்ஸை கையில் எடுக்கும் வைரமுத்து..

    கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற படைப்பின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் வைரமுத்து. அந்த படைப்புக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இதுவரை 7500 பாடல்களை எழுதியிருக்கிறார். 39 நூல்களை படைத்திருக்கிறார். சிறந்த பாடலுக்கான தேசிய விருதை 7 முறை பெற்ற ஒரே பாடலாசிரியர் இவர்தான். தமிழ் நாட்டு அரசின் 6 விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

    இந்த நிலையில் என் அனுமதியில்லாமல் என்னுடைய பாடல்வரிகளை இந்த தமிழ் திரையுலகம் பயன்படுத்தி வருகிறது என ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார் வைரமுத்து. இதுவரை இளையராஜாதான் தன்னுடைய அனுமதியில்லாமல் அவருடைய இசையை பயன்படுத்தி வருகிறார்கள் என காப்பிரைட்ஸ் பிரச்சினையை கொண்டு வந்தார். இப்போது வைரமுத்துவும் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.

    என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்திரையுலகம் திரைப்படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக் கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை. சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை. காணும் இடங்களில் கேட்டதுமில்லை.

    செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன். ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள்? என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது. ஆனால் என்னை ஒரு வார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா? என்று வைரமுத்து கூறியிருக்கிறார். அவர் சில குறிப்பிட்ட பாடல் வரிகளை கோடிட்டு இதெல்லாம் இப்போது படத் தலைப்புகளாக வந்துள்ளன என தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

    பொன்மாலைப்பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊர தெரிஞ்சுக்கிட்டேன்,பனிவிழும் மலர்வனம், வெள்ளைப்புறா ஒன்று,பூவே பூச்சூடவா, ஈரமான ரோஜாவே,மௌன ராகம், கண்ணாளனே, நீ தானே என் பொன் வசந்தம் என இன்னும் எத்தனையோ பாடல் வரிகள் இருக்கின்றன என கூறியிருக்கிறார் வைரமுத்து.

  • இசையமைப்பாளராக மாறிய இளையராஜா பேரன்!.. தமிழ் சினிமாவிலும் சீக்கிரம் கலக்கப் போகிறார்!..

    இளையராஜா திரைத்துறையில் உள்ள தனது இசைப் பயணத்தில் 1,523 திரைப்படங்களுக்கு இசையமைத்து, 8,600 பாடல்களை உருவாக்கி, 20,000 கச்சேரிகளில் பங்கேற்று இசை உலகில் கடவுளாகவே வாழ்ந்து வருகிறார். மேலும், தமிழர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து அவரது தம்பி மற்றும் மகன்கள் இசை துறையில் அசத்தி வரும் நிலையில் அவரது பேரனும் தற்போது இசையமைப்பாளராக உருவாகி உள்ளார்.

    இளையராஜாவிற்கு பாவலர் வரதராஜன் மற்றும் கங்கை அமரன் என இரு சகோதரர்களும் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளனர். மேலும், இளையராஜா, ஜீவா என்பவரை மணந்துக்கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் பவதாரிணி. இவரது மகன்கள் இருவரும் இசையமைப்பாளராகவும், மகள் பவதாரிணி பின்னணிப் பாடகியாகவும் பணியாற்றியுள்ளார். இளையராஜாவின் மகள் பவதாரிணி கடந்த ஆண்டு புற்றுநோயால் காலமானார்.

    இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜாவின் மகன் யத்தீஸ்வர் தீவிர சிவனின் பக்தர் என்பதால் அடிக்கடி திருவண்ணாமலை சென்று தரிசனம் செய்து வருவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் ’ஓம் நமச்சிவாய’ எனும் பக்தி ஆல்பத்தை திருவண்ணாமலையில் இன்று வெளியிட்டுள்ளார். மேலும், பத்திரிக்கையாளர்களை சந்தித்த யத்தீஸ்வர் இசையமைப்பாளராக விரும்புவதாகவும், நல்ல வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருப்பதாகவ்வும் கூறியுள்ளார்.

    இளையராஜாவின் பேரன் கூடிய சீக்கிரமே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக கலக்கப் போகிறார் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

  • இந்த இடத்துல பாட்டு வரணும்!.. கமலுக்கே சொல்லிக்கொடுத்த இளையராஜா!.. அட அந்த பாட்டா!..

    Ilayaraja: 4 வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருபவர் கமல். டீன் ஏஜில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பாலச்சந்தர் மூலம் பட்டை தீட்டப்பட்டு சினிமாவில் ஜொலித்தவர். ஆரம்பத்தில் காதல் படங்களில் நடித்தாலும் மாற்று சினிமா மீது எப்போதும் ஆர்வம் கொண்டவராகவே கமல் இருக்கிறார். அதனால்தான் சினிமாவில் பல பரிசோதனை முயற்சிகளை இவர் செய்து பார்த்திருக்கிறார்.

    அவற்றில் சில வெற்றிகளும், பல தோல்விகளும் அடங்கியிருக்கிறது. அவரின் குருதிப்புனல், ஹேராம், உத்தம வில்லன் போன்ற படங்கள் ஓடவில்லை. இதில் ஹேராம் படத்தை கமல் எழுதி, தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். காந்தி சுட்டு கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் கதையை எழுதியிருந்தார் கமல்.

    இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக ராணி முகர்ஜி, வசுந்த்ரா தாஸ், கவிஞர் வாலி, அதுல் குல்கர்ணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு முதலில் வேறொருவர் இசையமைத்தார். ஆனால், கமலுக்கு ஏதோ திருப்தி இல்லை. எனவே, இளையராஜாவிடம் சென்று இசையமைக்குமாறு கேட்டார். இத்தனைக்கும் பாடல்களுக்கான காட்சிகளை எல்லாம் கமல் எடுத்து முடித்திருந்தார். எனவே, எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு ஏற்றவாறு பாடல்களை போட்டு கொடுத்தார் இளையராஜா. அதிலும், ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ படல் அற்புதமான மெலடியாக இருந்தது.

    இந்நிலையில், ஒரு இசைக்கச்சேரியில் இளையராஜா பேசும்போது இந்த படம் பற்றி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார். இந்த படத்தில் சில காட்சிகளுக்கு பின்னணி இசை அமைக்குமாறு என்னிடம் கமல் சொன்னார். எனக்கோ அந்த இடத்தில் ஒரு பாடல் வரவேண்டும் என தோன்றியது. இதை கமலிடம் சொன்ன போது ‘திரைக்கதையில் இந்த இடத்தில் பாடல் இல்லை. பேக்ரவுண்டு மியூசிக் மட்டும் போடுங்கள்’ என்றார்.

    ‘இந்த இடத்தில் பாட்டு இருக்கு’ என நான் குரலை உயர்த்தி சொன்னதும் ‘சரி என்னவோ செய்யுங்கள்’ என சொன்னார். அப்படி நான் போட்ட பாட்டுதான் ‘இசையில் தொடங்குதம்மா’. இந்த பாடலை ரிக்கார்டிங் செய்யும் போது கமல் டென்ஷனாக இருந்தார். இது சரியா வருமா என்பது போல குறுக்கும், மறுக்கும் நடந்துகொண்டே இருந்தார். அதன்பின் பாடலை கேட்டவுடன் ‘திரைக்கதையில் இந்த இடத்துல பாட்டு இருக்கு. இல்லனா உங்களுக்கு எப்படி தெரியும்?’ என கேட்டார்’ என இளையராஜா பகிர்ந்து கொண்டார்.

  • நானும் ராஜாவும் விடிய விடிய குடிப்போம்!. ஆனா திடீர்னு ஒருநாள்!.. ரஜினி சொன்ன பிளாஷ்பேக்!

    அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. அவரின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக முன்னணி இசையமைப்பாளராக மாறினார். 80களில் ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் எல்லா படங்களுக்கும் அவர்தான் இசையமைப்பாளர்.

    தங்களின் படம் ஹிட் ஆக வேண்டுமெனில் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்பதில் ரஜினி, கமல், மோகன் போன்றவர்கள் உறுதியாக இருந்தனர். இளையராஜா திறமையான இசையமைப்பாளர் மட்டுமில்லை. மிகவும் விரைவாக பாடல்களுக்கான மெட்டை உருவாக்கக் கூடியவர். குணா படத்தின் பாடல்களுக்கு அவர் எடுத்துக்கொண்டது 2 மணி நேரம்தான். சின்னத்தம்பியில் 10 பாடல்களுக்கு அவர் எடுத்துக்கொண்டது 45 நிமிடம்தான்.

    சினிமாவில் இளையராஜாவுக்கும், ரஜினிக்கும் இடையே ஒரு மரியாதை கொண்ட நட்பு இருக்கிறது. 80,90களில் ரஜினியின் எல்லா படங்களுக்கும் இளையராஜாதான் இசை. ரஜினிக்கு பல அற்புதமான பாடல்களை கொடுத்திருக்கிறார் இளையராஜா. ஆனால், பாட்ஷா படத்தில் சம்பளம் விஷயத்தில் இளையராஜா கோபப்பட அந்த படத்திற்கு தேவா இசையமைத்தார்.

    அந்த படம் ஹிட் அடிக்கவே ரஜினி தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் என மாறிவிட்டார். கடந்த 30 வருடங்களாக ரஜினியின் எந்த படத்திற்கும் இளையராஜா இசையமைக்கவில்லை. அதேநேரம் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர மரியாதையும், அன்பும் அப்படியே இருக்கிறது. நேரம் கிடைக்கும்போது ரஜினி இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு சென்று அவரை சந்திப்பதும் உண்டு.

    இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு அமிதாப்பச்சனுடன் நடந்த ஒரு உரையாடலில் பேசிய ரஜினி ‘நானும் இளையராஜாவும் விடிய விடிய குடித்த நாட்கள் உண்டு. ஆனால், திடீரென ஒரு நாள் அவர் ஆன்மிகத்தில் தன்னை முழுமையாக செலுத்தி மொத்தமாக மாற்றிக்கொண்டார். அவரின் உடை, பேச்சு எல்லாம் மாறிவிட்டது. ராஜா சார் என அழைத்த நான் ‘சாமி’ என அழைக்க துவங்கிவிட்டேன்’ என பேசியிருக்கிறார்.

    இளையராஜா எப்போது ஆன்மிகத்தில் பற்று கொண்டவராக மாறினாரோ அப்போது முதலே வெள்ளை நிற உடையை மட்டுமே அணிந்து வருகிறார். அவரிடம் எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களையும் அவர் கண்டு கொள்வது இல்லை. ‘வாழ்கையில் ஒன்றுமே சாதிக்காத நீ சாதித்த என்னை திட்டுகிறாய்’ என்பதுதான் அவரின் தத்துவமாக இருக்கிறது.

  • ராயல்டி கேட்கும் இளையராஜா!.. ரூட்டை வேறு பக்கம் திருப்பிய இயக்குனர்கள்!…

    தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. 70களின் இறுதியில் அன்னக்கிளி திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதுவரை வெஸ்டர்ன் இசைகளை கேட்டு வந்த ரசிகர்களுக்கு கிராமத்திய இசையை கொடுத்து விருந்து வைத்தார் ராஜா.

    80களில் வெளியான 90 சதவீத படங்களுக்கு ராஜாதான் இசை. அப்போது முன்னணி ஹீரோக்களாக இருந்த கமல், ரஜினி, மோகன் என பலருக்கும் ராஜாதான் இசையமைத்தார். ராஜா வந்த பின்னரே தமிழகத்தில் ஆடியோ கேசட்டுகள் அதிகம் விற்பனை ஆனது. 90களில் ரஹ்மான், தேவா போன்ற புது இசையமைப்பாளர்கள் வந்தபின் ராஜா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து போனது.

    ஆனாலும், இப்போதும் இளையராஜா தொடர்ந்து இசையமைத்து கொண்டுதான் இருக்கிறார். அந்த பாடல்களும் ஹிட் அடித்து வருகிறது. ஒருபக்கம், அவரின் ஹிட் பாடல்களை இப்போதும் சில இயக்குனர்கள் தங்களின் படங்களில் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் எல்லோருக்கும் இளையராஜா ராயல்டி கேட்டு நோட்டீஸ் அனுப்பி வருகிறார்.

    அந்த பாடல்களின் உரிமையை பட தயாரிப்பாளர் ஆடியோ நிறுவனத்திடம் கொடுத்துவிட்டார். அந்த நிறுவனத்திடம் நாங்கள் அனுமதி வாங்கிவிட்டோம் என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது. ஆனால், அந்த பாடலை உருவாக்கியவன் என்கிற முறையில் என்னிடமும் அனுமதி வாங்க வேண்டும் என்பது ராஜாவின் வாதமாக இருக்கிறது.

    மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தில் கண்மணி அன்போடு காதலன் பாடல் பயன்படுத்தப்பட்டதற்கும் ராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், கூலி பட டீசரில் பயன்படுத்தப்பட்ட ‘வா வா பக்கம் வா’, குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தப்பட்ட 3 பாடல்கள் என எல்லாவற்றுக்கும் ராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இது தொடர்கதையாகிவிட்டது.

    எனவே, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தவே இயக்குனர்கள் தயங்குகிறார்களாம். படத்தில் தேவைப்பட்டால் தேவா, வித்யாசாகர், பரத்வாஜ், சிற்பி,எஸ்.ஏ.ராஜ்குமார் போன்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற முடிவுக்கு பலரும் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் கூட டூரிஸ்ட் பேமிலி படத்தில் தனது மம்பட்டியான் பாடல் பயன்படுத்தப்பட்டதற்கு இசையமைப்பாளர் தமன் மகிழ்ச்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • கல்யாணத்துக்கு இளையராஜா போட்ட கண்டிஷன்!. டெரர் பீஸா இருப்பார் போலயே!….

    Ilayaraja: இளையராஜா எப்படிப்பட்ட சுபாவம் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். மற்ற நேரத்தில் கொஞ்சம் ஜாலியாக பேசினாலும் வேலை என வந்துவிட்டால் மிகவும் கண்டிப்பாக இருப்பார். அவரது மனம், உடல் என எல்லாமே இயங்குவது இசையில்தான். எப்போதும் அவரின் மூளை இசையை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பதால்தான் அவரால் இப்படிப்பட்ட பாடல்களை கொடுக்க முடிந்தது.

    இளையராஜா பற்றி அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு அவரை பற்றி தெரியும். கமல் கூட ஒருமுறை ‘இளையராஜா கரடு முரடானவர் என சிலர் சொல்வார்கள். சிலரோ அவர் பலாப்பழம் போல. மேலே முள். உள்ளே இனிப்பு என்பார்கள். என்னைக்கேட்டால் மேலே, உள்ளே என அவர் முழுக்க இனிப்புதான். உன் நாக்கில் முள்ளிருந்தால் என்ன செய்ய முடியும்’ என்பதுதான் என் கருத்து’ என பேசியிருந்தார்.

    இளையராஜா காசு விஷயத்தில் கறார் பேர் வழி என பலரும் சொல்வர்கள். சம்பள விஷயத்தில் கோபப்பட்டுதான் பாட்ஷா படத்தில் ரஜினியுடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. அதனால்தான் அப்படத்திற்கு தேவா இசையமைத்தார். அந்த படத்திற்கு பின் அவர் ரஜினிக்கு இளையராஜா இசையமைக்கவே இல்லை. அதேநேரம், சம்பளமே வாங்காமல் அவர் பல படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது.

    அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி கூட அவர் பதில் சொல்வது இல்லை. நான் முழுக்க ஆன்மிகம் மற்றும் இசை என மூழ்கிவிட்டேன். என்னைப்பற்றி வரும் விமர்சனங்களை நான் கண்டு கொள்வது இல்லை. நான் சாதித்து காட்டியிருக்கிறேன். அதனால், எனக்குதான் தலைக்கணம் இருக்கத்தான் செய்யும். எதையுமே சாதிக்காத நீ என்னை பற்றி பேசுகிறாய் என பதில் சொன்னவர் இளையராஜா.

    இந்நிலையில், உங்கள் மனைவி பற்றி சொல்லுங்கள் என ஊடகம் ஒன்றில் கேட்டதற்கு ‘ என் மனைவி என் உறவுக்காரர். என் அக்கா மகள். எங்கள் இருவரின் ஜாதகத்தையும் பார்த்துவிட்டு இந்த பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என என் பெற்றோர்கள் முடிவு செய்தனர். சென்னையிலிருந்து என்னை கிளம்பி வர சொன்னார்கள்.

    சென்னையில் என்னை பீச்சுக்கு கூட்டிக்கொண்டு போ, பார்க்குக்கு கூட்டிட்டு போ.. தியேட்டருக்கு கூட்டிட்டு போய் என்றெல்லாம் ஜீவா என்னை கேட்டால் அடுத்த பஸ்ஸிலேயே கூட்டி வந்து இங்கு விட்டுவிடுவேன் என கண்டிஷன் போட்டேன். நான் இப்படி சொல்கிறேன் என பயமுறுத்தித்தான் ஜீவாவை எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஒரு மனைவியாக தனது கடமையை அவர் சரியாக செய்துவிட்டார்’ என பேசியிருந்தார்.

  • இந்த பாட்ட நீ பாடக்கூடாது!.. இளையராஜாவிடம் கோபம் காட்டிய பஞ்சு அருணாச்சலம்!…

    Ilayaraja: சொந்த ஊரில் பாவலர் பிரதர்ஸ் என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தவர்தான் இளையராஜா. அவர், அவரின் தம்பி அமரன், அண்ணன் பாஸ்கர் ஆகிய மூவரும் இந்த இசைக்குழுவில் முக்கியமானவர்கள். சிறு வயது முதலே இளையராஜாவுக்கு இசையில் ஆர்வம் இருந்தது. கிடைக்கும் பொருட்களில் தட்டி தட்டி இசையை உருவாக்கி வந்தார்.

    வளர்ந்ததும் சகோதர்களுடன் சேர்ந்து கம்யூனிச மேடைகளில் பாடி வந்தார்கள். பெரும்பாலும் சினிமா பாடல்களை பாடுவார்கள். சில சமயம் இளையராஜா தனது சொந்த டியூனை வைத்தும் பாடல்களை பாடுவார். யாராவது ‘இது எந்த படத்தின் பாடல்?’ எனக்கேட்டால் ‘இது புதிய படத்தின் பாடல். படம் இன்னும் வெளிவரவில்லை’ என பொய் சொல்லிவிடுவாராம். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

    அதன்பின் இசையமைப்பாளர் ஆகும் ஆசையில் சென்னை சென்று வாய்ப்பு தேடினார் இளையராஜா. சில இசையமைப்பாளர்களிடம் வேலை செய்து கொண்டே வயலின், கிடார், கீ போர்ட் போன்ற இசைக்கருவிகளை கற்றுக்கொள்ளும் வகுப்புகளுக்கும் போனார். ஒருகட்டத்தில் இனிமேல் நம்மால் இசையமைக்க முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு வந்தது.

    பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் சென்று வாயப்பு கேட்டார். ஆனால், ராஜாவை யாரும் நம்பவில்லை. அப்போது பிரபல தயாரிப்பாளர், கதாசிரியர் மற்றும் பாடலாசிரியராக இருந்த பஞ்சு அருணாச்சலத்தை சந்தித்து வாய்ப்பு கேட்டார். இசைக்கருவி எதுவுமில்லாமல் அவர் அமர்ந்திருந்த மேசையிலேயே கைகளால் தட்டி பாடல்களை பாடிக்காட்டினார்.

    ராஜாவின் மீது நம்பிக்கை வைத்த பஞ்சு அருணாச்சலம் தான் கதை எழுதி தயாரித்த அன்னக்கிளி படத்தில் ராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதோடு, அவரின் பெயரை இளையராஜா எனவும் மாற்றினார். தன் மீது நம்பிக்கை வைத்து தன்னை அறிமுகம் செய்து வைத்தவர் என்பதால் ராஜாவுக்கு பஞ்சு அருணாச்சலம் மீது எப்போதும் அன்பும், மரியாதையும் உண்டு.

    ராஜாவின் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டவராக பஞ்சு அருணாச்சலமும் இருந்தார். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்ல முடியும். புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் ‘ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்ல ஆள.. ஒரு ராணியும் இல்லை ஆள’ என்கிற பாடல் வரும். அந்த பாடலை இளையராஜாவே பாடியிருந்தார். அதன்பின் பஞ்சு அருணாச்சலத்திடம் அந்த பாடலை போட்டு காட்டினார் இளையராஜா.

    அந்த பாடல் வரிகளை கேட்ட அவர் ‘என்ன ராஜா?.. பாடல் முழுக்க நெகட்டிவாக இருக்கிறது. முழுக்க அறச்சொல்லாக இருக்கிறது. நீ ராஜா.. உனக்கு யாருமில்லை என நீயே சொல்வது போல இருக்கிறது.. இந்த பாடலை நீ பாடியிருக்கக் கூடாது. வேறு பாடகரை வைத்து மீண்டும் ரிக்கார்டிங் செய்’ என சொல்லியிருக்கிறார். எனவே, எஸ்.பி.பியை வைத்து மீண்டும் அந்த பாடலை ரிக்கார்டிங் செய்தார் இளையராஜா.