Tag: kamalhasan

  • கமலுக்கு வாய்ப்பூட்டு போட்ட கர்நாடகா நீதிமன்றம்!.. அடுத்து அன்பறிவு படமும் அங்கே ரிலீஸ் ஆகுமா?..

    தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ்குமாரை அழைத்து வந்து அவரை தன்னோட சொந்தம் என்றும் கன்னட மொழியே தமிழில் இருந்து பிறந்தது தான் என உறவை வளர்க்கும் விதமாக கமல்ஹாசன் பேசியது, பெரும் பிரச்னையை கிளப்பியது.

    கன்னட மொழியை தமிழில் இருந்து பிறந்தது என்கிற கருத்தை கர்நாடகா ஏற்கவில்லை, கமல்ஹாசன் இப்படியெல்லாம் பேசி எங்களுடைய மக்களின் மனதை புண்படுத்த வேண்டாம் என எதிர்பாளர்கள் பேசியிருந்தாலே பிரச்னை பெரிதாக ஆகியிருக்காது.

    கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரது உருவ பொம்மைகளை எதிர்த்து தக் லைஃப் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்றும் ஏகப்பட்ட அலப்பறைகளை கிளப்பினர். கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று கிளாஸ் எடுத்தார் ஆனால், கடைசியில் வழக்கு கமல்ஹாசனுக்கு சாதகமாக படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து வந்தது.

    தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிடவில்லை என கமல் அறிவித்த நிலையில், அங்கே இருந்து வரவேண்டிய 20 கோடி ரூபாய் ராஜ்கமல் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால், படம் சரியாக இல்லாத நிலையில், டிசாஸ்டர் ஆகிவிட்டது.

    கன்னட சாகித்ய பரிஷத் அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம் கன்னட மொழி குறித்தும் கர்நாடகா கலாசாரம் உள்ளிட்டவை குறித்தும் இனிமேல் எந்தவித கருத்தையும் கமல்ஹாசன் கூறக்கூடாது என தடை விதித்துள்ளது.

    இதன் காரணமாக அடுத்து கமல்ஹாசன் நடித்து வரும் அன்பறிவு மாஸ்டர் படமும் கர்நாடகாவில் வெளியாகவிடாமல் போராட்டம் நடைபெறும் என தெரிகிறது. அனல் அரசு மாஸ்டர் இயக்கிய பீனிக்ஸ் படமே இப்படி இருக்கே அன்பறிவ் மாஸ்டர்கள் இணைந்து இயக்கி வரும் படத்திலும் தக் லைஃப் போல கடைசி வரை கமல் மட்டுமே சண்டை போட்டுக் கொண்டிருந்தால் படம் எடுபடுமா? என்பதும் டவுட்டாக உள்ளது.

  • படுத்துக்கிடந்த இந்தியன் 3ஐத் தூக்கி விட்ட ரஜினி…! 77ல் விட்டுக் கொடுத்த கமலை மறப்பாரா?

    கமல் வரும் 25ம் தேதி திமுக ஆதரவுடன் ராஜ்யசபா எம்பியாக பதவி ஏற்க உள்ளார். இதற்காக தன் நண்பர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். வேள்பாரி விழாவில் ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கரைப் புகழ்ந்து பேசினார். இந்தியன் 3 ஐ எடுப்பதற்காக ரஜினியே உள்ளே இறங்கி சுபாஷ்கரனிடம் பேசி உள்ளார். இந்தப் படத்துக்காக கமலும், ஷங்கரும் சம்பளம் வாங்கப்போறது இல்லையாம். ரஜினிகாந்த் இந்தியன் 3க்காக பேசி சுமூகமான தீர்வைத் தந்துள்ளார் என்றும் அதற்கு நன்றி சொல்வதற்குத் தான் கமல் தற்போது அவரை சந்தித்துள்ளதாகவும் கூறுகிறார்கள். ஒருவேளை இந்தியன் 3ல் கேமியோ ரோலில் ரஜினி நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.

    ரஜினியும் கமலும் 80களில் திரையுலகில் கோலோச்சிக் கொண்டு இருந்தனர். அவரது ரசிகர்களுக்குள் கடும் போட்டி இருந்தது. இருவரின் படங்களுக்கும் ஆரோக்கியமான போட்டி இருந்ததே தவிர பொறாமை கிடையாது. அதே நேரம் கமலும், ரஜினியும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். பஞ்சு அருணாசலம் ஒரு அருமையான கதையை எழுதினார்.

    அதில் ரஜினி, சிவக்குமாரை நடிக்க வைக்கலாம் என திட்டம் போட்டார். படத்தில் சம்பத் என்பது தியாகி கேரக்டர். அதில் ரஜினி நடிப்பதாக இருந்தது. இன்னொரு கேரக்டர் நாகராஜ். முதலில் நாகராஜ் கேரக்டரில் ரஜினியும், சம்பத் கேரக்டரில் சிவக்குமாரும் நடிப்பதாக இருந்தது. படத்தின் இயக்குனர் எஸ்பி.முத்துராமன். திடீர்னு பஞ்சு அருணாசலத்துக்கு ஒரு யோசனை வருது.

    ஆர்டரைத் திருப்பிப் போட்டா என்னன்னு நினைச்சிட்டாரு. ரஜினிக்கு சம்பத் கேரக்டரிலும், நாகராஜ் சிவக்குமார் கேரக்டரிலும் நடிக்க வைப்பதுன்னு முடிவு செய்தார். அவர்களிடம் போய் விவரம் சொன்னார். இது சரியா வருமான்னு சிவக்குமார் கேட்டார். அதற்கு பெரிய கதாசிரியர் பஞ்சு அருணாசலம் விளக்கம் சொன்னதும் சம்மதிக்கிறார்.

    அதே போல ரஜினியும் முதலில் தயங்கி பின் சம்மதிக்கிறார். படத்தில் நீளமான வசனத்தை ரஜினிக்குப் படித்துக் காட்டியதும் ஒன்றும் பேசாமல் செட்டை விட்டு வெளியே போய்விட்டாராம். அதன்பிறகு ரஜினி ஏவிஎம் வாசலில் வைக்கப்பட்டுள்ள ஏவிஎம் லோகோவில் உள்ள முயற்சி திருவினையாக்கும் என்ற வாசகத்தைப் பார்த்து விட்டு மீண்டும் செட்டுக்கு வருகிறார்.

    அங்கு இது நான் நடிக்க வேண்டிய கேரக்டர் இல்லை. கமல் நடிக்க வேண்டியதுன்னு சொல்கிறார். அதற்கு எஸ்.பி.முத்துராமனும், பஞ்சு அருணாசலமும் கமல் இதுமாதிரி நிறைய நடிச்சிட்டாரு. இதுல நீங்க நடிச்சா நல்லாருக்கும்னு சொல்லி ஆர்வத்தை உண்டாக்கினர். நீண்ட டயலாக்கை உங்களால் எவ்வளவு பேச முடியுமோ பேசுங்க. அப்புறம் கட் பண்ணி சேர்த்துக்கலாம்னு சொன்னதும் அவர் சம்மதித்தார். அதுதான் புவனா ஒரு கேள்விக்குறி. சுமித்ராவின் நடிப்பும் அட்டகாசம்தான்.

    படம் சக்கை போடு போட்டது. அந்த வகையில் ரஜினிக்கு நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்த படம்னா அது இதுதான். அன்று முதல் பஞ்சு அருணாசலம் எப்போ கூப்பிட்டாலும் உடனே வீடு தேடி போவார் ரஜினி. அதே போல ஆண்டுதோறும் தீபாவளிக்கு முதல் நாள் எஸ்பி.முத்துராமனைத் தேடி வேட்டி சேலை பழம் எல்லாம் கொடுத்து அவரிடம் ஆசி வாங்கி வருவார்.

    ஆனால் இந்தப் படம் முதலில் மகரிஷி எழுதிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. முதலில் கமலுக்கு இதைச் சொல்ல அவர் ஆர்.சி.சக்தியிடம் ஓகே சொல்லவில்லை. இது படிக்கத்தான் நல்லாருக்கும். சினிமாவுக்கு செட்டாகாதுன்னு கமல் சொல்லி விட்டாராம். அதே நேரம் பஞ்சு அருணாசலமும் அதே நாவலைத் தழுவி எடுத்த படம்தான் இந்த புவனா ஒரு கேள்விக்குறி. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

  • தமிழ் மீதான பற்று கிடையாது.. கமல் பிடிவாதத்துக்கு உண்மையான காரணம் இதுதானா?

    கமல்ஹாசனுக்கு திடீர் பிடிவாதம் எப்படி? கன்னடமா? தமிழா? என்ற கேள்வி வரும் பொழுது எனக்கு அந்த 12 கோடி போனாலும் பரவாயில்லை. நான் தமிழுக்காக நிற்கிறேன் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்னார். இதைப்பற்றி வலைப்பேச்சு பிஸ்மி கூறும் பொழுது இது தமிழுக்காக நிற்பதாக எடுத்துக்க முடியாது. கமலை கூர்ந்து கவனிக்கும் போது தெரியும்.

    தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பிரச்சினையை பற்றி பேசும்பொழுது ஒரு தமிழனாக தன்னை அடையாளப்படுத்திப்பார். இன்னொரு பக்கம் தன்னை ஒரு இந்தியனாகவும் காட்டிக் கொள்வார். அதனால் எப்பொழுதுமே தமிழ் தேசியம் கொள்கை மீது நம்பிக்கை கொண்டவர்கள் தன்னை ஒரு இந்தியனாக அடையாளப்படுத்திக்க மாட்டார்கள். கமலை பொருத்தவரைக்கும் அந்த இடத்திற்கு ஏற்றவாறு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்.

    உதாரணமாக கேரளாவில் ஏதாவது ஒரு விழாவுக்கு போனால் நான் ஒரு பாதி மலையாளி என்பார். கர்நாடகாவுக்கு போனால் நான் கண்டனாக இருக்க பெருமைப்படுகிறேன் என்று கூறுவார். அந்த மக்களோடு கனெக்ட் ஆவதற்கான உத்தி தான் அது. நானும் உங்களை மாதிரி தான் என்பதைப் போல அவருடைய நிலைப்பாடு இருக்கும். இவர் போகும் இடம் எல்லாம் பேசுவதை வைத்து நான் புரிந்து கொண்டது என்னவெனில் கமலுக்கு தமிழ் பற்று இருந்தாலும் சீமான் போன்றவர்களுக்கு இருப்பதைப் போல ஒரு பற்று கமலுக்கு கிடையாது.

    கமல் அவருடைய கருத்துக்களுக்கு பின்வாங்க மாட்டேன். மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறுவது தமிழ் மீதான பற்று கிடையாது. தன்னுடைய ஈகோவை அது பாதிக்கிறது என்பது மாதிரியாக அவர் நினைக்கிறார். இதைப்பற்றி கமல் தரப்பில் விசாரிக்கும் பொழுது இன்று இதற்காக மன்னிப்பு கேட்டோம் என்றால் எதிர்காலத்தில் எல்லாத்துக்கும் யார் வேண்டுமானாலும் மன்னிப்பு கேளுங்கள் என்பது மாதிரி ஒரு விஷயத்தை தூக்கி கொண்டு வருவார்கள்.

    அதனால் இந்த விஷயத்தில் அவர் பிடிவாதமாக இருக்கிறார் என கூறினார்கள். இன்னொரு காரணம் அவர் ராஜ்ய சபா எம்பியாக போகும் நிலையில் மன்னிப்பு கேட்பது என்பது பொலிட்டிக்கல் ரீதியாக அவருக்கு ஒரு பின்னடைவை கொடுக்கும் என்று நான் நினைக்கிறேன். அதனால் இதுதான் காரணமாக இருக்கலாம் என பிஸ்மி கூறி இருக்கிறார்.

  • பார்டரில் பஞ்சதந்திரம் பார்த்துட்டுதான் தூங்குவேன்!.. நடிகரிடம் சொன்ன ராணுவ வீரர்!..

    Panchatanthiram: கமல் சீரியஸான நடிகராக இருந்தாலும் பல காமெடி படங்களிலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறர். அப்படி அவர் காமெடி செய்த எல்லா படங்களிலும் வசனம் எழுதியவர் கிரேஸி மோகன்தான். கமல் – கிரேஸி மோகன் கூட்டணியில் மைக்கேல் மதன காமராஜன், தெனாலி, அவ்வை சண்முகி, காதலா காதலா, பம்மல் கே சம்மந்தம், பஞ்ச சந்திரம் போன்ற படங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்தது.

    கிரேஸி மோகன் எழுதிய வசனங்களை கமல் மிகவும் சரியான டைமிங்கில் உச்சரித்த்து அசத்துவார். அதுவும், காதலா கதலா படத்தில் கமல் பேசும் வசனங்கள் புரிந்து சிரிப்பதற்குள் அடுத்த வசனத்தை பேசி திணறடிப்பார்கள். படம் முழுக்க தொடர்ந்து காமெடி வசனங்களை பேசிக்கொண்டே இருப்பார்கள்.

    அதேபோல், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல், ஜெயராம், யோகி சேது, ஸ்ரீமன், ரம்யா கிருஷ்னன், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்து 2002ம் வருடம் வெளியான பஞ்ச சந்தந்திரம் படம் தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடி படமாக இருக்கிறது. இந்த படத்தின் துவக்கம் முதல் இறுதிவரை சிரிக்க வைத்திருப்பார்கள் பலருக்கு ஃபேவரைட்டாக இப்படம் இப்போதும் இருக்கிறது.

    இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய நடிகர் ஜெயராம் ‘ஒரு படத்திற்காக காஷ்மீருக்காக சென்றிருந்தேன். அந்த படத்தில் துப்பாக்கியால் சுடுவது போல காட்சிகளை எடுக்க வேண்டியிருந்தது. எனவே, டம்மி துப்பாக்கிகளை எடுத்து சென்றோம். ஒரு வேனில் நான் சென்று கொண்டிருந்தபோது ராணுவ வீரர்கள் எங்களை சூழ்ந்தனர். அது தடை செய்யப்பட்ட பகுதி என என்பது எனக்கு தெரியாது.

    நீங்கள் யார்?.. இது என்ன துப்பாக்கி?.. என துப்பாக்கி முனையில் விசாரித்தனர். சினிமா ஷூட்டிங் என சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. அந்த ட்ரூப்பில் தமிழ் தெரிந்த ஒரு ராணுவ வீரர் இருந்தார். அவர் என்னை பார்த்துவிட்டு நிலைமையை சமாளித்தார். அதன்பின் என்னை தனியே அழைத்துக்கொண்டு போய் பேசினார்.

    ஒரு மலை உச்சியை காட்டி அதில்தான் எனக்கு வேலை. தினமும் 15 மணி நேரங்களுக்கு மேல் பாதுகாப்பு பணியில் இருப்பேன். ஒவ்வொரு நாளும் நீங்கள் நடித்த பஞ்சதந்திரம் படம் பார்த்து சிரித்துவிட்டுதான் தூங்குவேன். வேலை பளுவை அதுதான் குறைக்கிறது என சொன்னார். அது எனக்கு பெருமையாக இருந்தது. பஞ்சதந்திரம் போன்ற ஒரு படத்திற்காக கிரேஸி மோகன் சாருக்கு நன்றி சொல்கிறேன்’ என நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

  • நீங்க வரலாற்று ஆய்வாளரா?!.. என்ன ஆதாரம்?!.. கமல்ஹாசனுக்கு நீதிமன்றம் கேள்வி!..

    Thug life kamal: மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள தக் லைப் பட புரமோஷன் விழாவில் கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார் கலந்துகொண்டார். அவரை பற்றி பேசிய கமல் ‘தமிழில் இருந்து உருவான மொழிதான் கன்னடம்’ என பேசினார். இதற்கு கர்நாடகாவில் சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதுபோன்ற பிரச்சனைகளை ஊதி பெருசாக்கும் சில கன்னட அமைப்புகள் ‘கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லை படம் கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்’ என கொந்தளித்தார்கள். ஆனால், கமலோ ‘நான் சொன்னது அன்பின் வெளிப்பாடுத்தான். மன்னிப்பு கேட்க முடியாது. மொழி வல்லுனர்கள் என்ன சொன்னார்களோ அதைத்தான் நான் சொன்னேன்’ என கமல் கூறியிருந்தார்.

    கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், கன்னட நடிகர் சிவ்ராஜ்குமார் கமலுக்கு ஆதரவாக பேசியிருந்தார். கமல் மன்னிப்பு கேட்காத நிலையில் தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியாகாது என்றே எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்குமாறு கமலின் ராஜகமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி பல கேள்விகளை எழுப்பினார். கமல் என்ன வரலாற்று ஆய்வாளரா இல்லை மொழியியல் வல்லுனரா? என அவர் கேட்டார்.

    மேலும், தமிழில் இருந்துதான் கன்னட மொழி உருவானது என்பதற்கு என்ன ஆதாரம்?. 300 கோடி செலவில் படமெடுத்திருப்பதாக சொல்லும் நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது?.. நீங்கள் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். கமல் பேச்சால் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு மற்றும் அமைதியின்மை ஏற்பட்டிருக்கிறது கமல்ஹாசனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் மக்களின் உணர்வை புண்படுத்தக்கூடாது. நானே படம் பார்க்க என நினைத்தேன். இந்த பிரச்சனையால் பார்க்க முடியாது’ என நீதிபதி ராம பிரசன்னா கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று மதியம் 2.30க்கு வெளியாகவுள்ளது.

  • லப்பர் பந்து நடிகை மட்டுமில்ல!.. குஷ்பு மகளும் ‘தக் லைஃப்’ படத்துல வொர்க் பண்ணியிருக்காராம்!..

    இயக்குனர் சுந்தர். சி மற்றும் குஷ்புவின் இளைய மகள் அனந்திதா சுந்தர் இன்று மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக் லைஃப் படத்தில் பணியாற்றியுள்ளதாக நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுந்தர்.சி “முறை மாமன்” திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம் , அன்பே சிவம் , வின்னர் , கலகலப்பு , அரண்மனை, மத கஜ ராஜா போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இயக்குவதையடுத்து நடிப்பு மற்றும் தயாரிப்பிலும் ஈடுப்பட்டு வருகின்றார்.

    சுந்தர்.சி நடிகை குஷ்புவை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திகா என இரு மகள்கள் உண்டு. இதில் இளைய மகள் அனந்திகா மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஒரு தாயாக மகளின் பெயர் உதவி இயக்குனராக டைட்டிலில் பார்ப்பது ரொம்ப பெருமையா இருக்கு, காலில் எலும்பு முறிவு காரணமாக அவளால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. அவள் சிறிது காலம் உதவி இயக்குனராக இருந்திருந்தாலும் அவள் சேகரித்த அறிவும், மணி சாரிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்களும் அவளுடைய வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். இந்த அனுபவம் மிகவும் சிறப்பானது, அவளது பெயரை தவறவிடாமல் படத்தின் டைட்டிலிலும் பகிர்ந்த உங்கள் பெரிய மனதிற்கு மிக்க நன்றி என நடிகை குஷ்பு பதிவிட்டிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

    லப்பர் பந்து பட நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் தக் லைஃப் படத்தில் உதவி இயக்குனராகவும் நடிகையாகவும் பணியாற்றியுள்ளார்.

  • நயன்தாரா கிரேட் எஸ்கேப்!.. கமல்ஹாசனுக்கு ஹாட்ரிக் தோல்வியை கொடுத்த த்ரிஷா!.. ‘டல் லைஃப்’

    கமல்ஹாசன் உடன் இதுவரை ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்காமல் தொடர்ந்து தவிர்த்து வருகிறார் நயன்தாரா. மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கிடைத்தால் நடிப்பேன் என நயன்தாரா விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

    கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து பணியாற்றும் தக் லைஃப் படத்தில் முதலில் நயன்தாரா தான் ஹீரோயின் என்றெல்லாம் கூறப்பட்டன. ஆனால், இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான், ரவி மோகன் உள்ளிட்ட நடிகர்கள் கம்பியை நீட்ட, சிம்பு உள்ளே வருகிறார் என்றதுமே நயன்தாரா நடிக்க மறுத்து விட்டதாக கூறப்பட்டது.

    ஆனால், உண்மையாகவே படத்தின் கதையை கேட்ட பின்னர், தான் நயன்தாரா இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்து நம்ம பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என நினைத்திருப்பார் என சமூக வலைதளத்தில் தற்போது நயன்தாரா ரசிகர்கள் த்ரிஷாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.

    நடிகை த்ரிஷாவுக்கும் கமல்ஹாசனுக்கும் செட்டே ஆகாது என்று தான் தெரிகிறது. இதுவரை அவருடன் இணைந்து நடித்த 3 படங்களும் படுதோல்வியையே சந்தித்துள்ளன. கமல்ஹாசன் உடன் முதன் முதலில் 2010ம் ஆண்டு த்ரிஷா இணைந்து மன்மதன் அம்பு படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் ஃபிளாப் படம் தான்.

    அதன் பின்னர், 2015ல் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா நடித்த தூங்காவனம் படமும் தோல்விப் படமாகவே மாறியது. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வந்த த்ரிஷா மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் இணைந்த நிலையில், அதை மட்டுமே நோட் செய்த ரசிகர்கள் த்ரிஷாவுக்கும் கமலுக்கும் செட்டே ஆகாது என்றும் கமலுக்கு ஹாட்ரிக் தோல்வியை தற்போது தக் லைஃப் படத்தின் மூலம் த்ரிஷா கொடுத்து அதை நிரூபித்து விட்டார் என்கின்றனர்.

  • கமலை முழுசா நம்பிய ஜெய்சங்கர்! அவருக்கே அது ஆப்பா முடிஞ்சுடுச்சு..

    கமல் எந்த ஒரு விஷயத்திற்கு ஆதரவு கொடுத்தாலும் அந்த விஷயம் உருப்படாமலேயே போய்விடும் என பிரபல சினிமா தயாரிப்பாளர் கே ராஜன் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபலமாக அறியப்படும் தயாரிப்பாளர் கே ராஜன். ஒவ்வொரு பட விழாவின் போதும் தயாரிப்பாளர்களுக்காக எப்போதுமே குரல் கொடுப்பவர்.

    அதே நேரம் பெரிய நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை பற்றி கடுமையாக விமர்சித்து பேசுபவர். அவருடைய இந்த பேச்சுக்காகவே அனைவரும் காத்திருப்பார்கள். அந்த அளவுக்கு பெரிய நடிகர் என்று கூட பார்க்காமல் அனைவரையுமே பாரபட்சமில்லாமல் கடுமையாக விமர்சிப்பார் கே ராஜன். அந்த வகையில் ஜெய்சங்கர் விஷயத்தில் கமல் செய்த ஒரு பெரிய தவறு என்ன என்பதை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

    ஜெய்சங்கர் வண்டிக்காரன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது மிகவும் பீக்கில் இருந்தார் ஜெய்சங்கர். அந்த நேரத்தில்தான் வண்ணாரப்பேட்டையில் காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியை நான் ஆரம்பித்திருந்தேன். அந்த பள்ளியின் திறப்பு விழாவிற்கு ஜெய்சங்கரை அழைத்தேன். அதன் பிறகு பள்ளிக்கூடம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது.

    அதை பார்த்த ஜெய்சங்கர் தனக்கும் அப்படி ஒரு பள்ளிக்கூடத்தை கட்ட வேண்டும் என ஆசைப்பட்டு என்னிடம் வந்து கேட்டார். வளசரவாக்கத்தில் ஒரு பள்ளிக்கூடத்தை கட்டலாம் என முடிவு செய்திருப்பதாக ஜெய்சங்கர் கூறினார். ஆரம்பத்தில் எல்கேஜி யுகேஜி முதல் வகுப்பு இதை மட்டும் ஆரம்பியுங்கள். போகப் போக மீதி கட்டிடத்தை கட்டிவிடலாம் என்று ஐடியா கொடுத்தேன். அதேபோல ஜெய்சங்கரும் செய்தார்.

    அந்த பள்ளி திறப்பு விழாவிற்கு கமலை அழைக்கலாம் என்ற ஒரு முடிவை ஜெய்சங்கர் என்னிடம் வந்து கூறினார். அப்போது நான் வேண்டாம் என சொன்னேன். இந்த விஷயத்திற்கு எல்லாம் ஏன் கமல் என கேட்டேன் .அதற்கு ஜெய்சங்கர் என்னுடைய நல்ல நண்பர் .அதனால் தான் எனக் கூறினார். அவர் சொன்னதை போல கமல்தான் அந்த பள்ளிக்கூடத்தை திறந்து வைத்தார் .

    krajan

    அவர் திறந்து சரியாக இரண்டு வருடத்தில் அந்த பள்ளியையே மூட வேண்டிய நிலைமையை ஆகிவிட்டது .அதனால் தான் சொல்கிறேன் கமல் எந்த விஷயத்திற்கு ஆதரவு கொடுத்தாலோ அல்லது ஒரு விஷயத்தை ஆரம்பித்தாலோ அது வந்து நல்லபடியாக முடியாது என கே ராஜன் கூறினார். இதை வைத்து நெட்டிசன்கள் வழக்கம் போல அவர்களுடைய கருத்துக்களை பதிய ஆரம்பித்து விட்டனர் .இப்பொழுது தான் திமுகவுக்கு ஆதரவாக அவர்களுடன் இணைந்து இருக்கிறார். அப்போ வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு அழிவு காலம் தானோ என கிண்டலாக கமெண்ட்களை கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

  • அவசரப்பட்ட விண்வெளி நாயகன்!.. இப்போ தக் லைஃப் ஆடியோ லாஞ்ச் எப்போ தெரியுமா?..

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் 1987ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தை பல இயக்குநர்களை வைத்து கமல்ஹாசன் உருவாக்கினார் என ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் வெடித்தன. நாயகன் படம் கமல்ஹாசனுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தாலும் அதன் பிறகு அவர் பல வருடங்களாக மணிரத்னம் இயக்கத்தில் இணையவில்லை.

    தக் லைஃப் படத்தின் மூலம் மீண்டும் இருவரும் இணைய காரணம் என்ன? என்றும் இத்தனை ஆண்டுகள் ஏன் பிரிவு என்கிற கேள்விக்கு பல கதைகள் பேசுவோம், ஆனால், முடிவு பண்ண மாட்டோம். இதை முடிவு பண்ணினோம், படத்தையும் பண்ணிவிட்டோம் என கமல்ஹாசன் தக் லைஃப் பதில் அளித்திருந்தார்.

    ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த வாரம் மே 16ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடத்த கமல்ஹாசன் திட்டமிட்டு இருந்தார். ஆனால், திடீரென இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் நிலவிய உடனே நாடு தான் முக்கியம் என மே 16ம் தேதி ஆடியோ வெளியீட்டு விழாவை ரத்து செய்தார்.

    இந்நிலையில், தற்போது வரும் மே 17ம் தேதி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை ரசிகர்களுடன் சேர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளார் கமல்ஹாசன். அதன் பிறகு இசை வெளியீட்டு விழாவை வரும் மே 24ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடத்த முடிவு செய்துள்ளார்.

    இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து முதன் முறையாக சிம்பு நடிக்கிறார். மேலும், த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜூன் 5ம் தேதி திட்டமிட்டபடி படம் வெளியாகவுள்ள நிலையில், மே 17ம் தேதி முதல் தக் லைஃப் டீம் சூறாவளி ப்ரோமோஷனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

  • இதுக்குத்தான் நயன்தாரா எஸ்கேப்பா!.. தாத்தா ஆகணும்னு சொல்லிட்டு பண்ற வேலையை பார்த்தீங்களா!..

    நாயகன் படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து மணிரத்னத்துடன் கமல்ஹாசன் இணைந்துள்ள படம் தான் தக் லைஃப். படத்தின் டிரைலர் வெளியான நிலையில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு வாயில் ரத்தம் வரும் அளவுக்கு ஒருவரை ஒருவர் கொலை வெறியுடன் தாக்கிக் கொள்கின்றனர். விஜய், மோகன்லால் நடித்த ஜில்லா படத்தின் உல்டா ரீமேக்கா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    இது ஒரு பக்கம் இருந்தாலும், படத்தில் ரசிகர்களை கவர்ந்த விஷயம் என்றால் விருமாண்டி படத்துக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அபிராமியுடன் கமல்ஹாசன் இணைந்துள்ள நிலையில், பச்செக்கென கொடுக்கும் அந்த லிப் லாக் முத்தமும் படத்தின் வியாபாரத்திற்காக அதனை டிரைலரில் வைத்த விதமும் தான்.

    மணிரத்னம் இயக்கத்தில் இதுவரை நயன்தாரா நடிக்கவே இல்லை. த்ரிஷா ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து விட்டார். ஜோதிகா கூட செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார். கமல்ஹாசன், மணிரத்னம் படத்தில் முதலில் நயன்தாரா கமிட் ஆவதாக இருந்தது. ஆனால், இப்படியொரு கதாபாத்திரம் என்பதை கேட்டுத்தான் அவர் நோ சொல்லியிருப்பார் என தற்போது நயன்தாரா ரசிகர்கள் த்ரிஷாவை கலாய்த்து வருகின்றனர்.

    ஸ்ருதிஹாசன் திருமணம் செய்யாமல் பாய் ஃபிரெண்டுகளை மாற்றி வரும் நிலையில், மேடையிலேயே மகள் மனசு வச்சிருந்தா இன்னேரம் தாத்தா ஆகியிருப்பேன் என்றார். இந்த வயதிலும் முத்தக் காட்சிகள் மற்றும் ஒன்றுக்கு 2 ஹீரோயின்கள் என விண்வெளி நாயகன் விளையாடி இருக்காரே. ஜூன் 5ம் தேதி வெளியாகும் தக் லைஃப் வெற்றி பெறுவது உறுதி என கமல்ஹாசன் ரசிகர்கள் டிரைலரை ஒரு பக்கம் வைரலாக்கினாலும், ரஜினிகாந்த் ரசிகர்கள் கமல்ஹாசனின் மன்மத லீலைகளை வைரலாக்கி கழுவி ஊற்றி வருகின்றனர்.