Tag: kamalhasan

  • வேறலெவல் லுக்கில் உலக நாயகன்!.. இந்தியன் 3 கெட்டப் இதுதான்!.. லீக்கான டிரெய்லர் வீடியோ!…

    லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கி கமல்ஹாசன் நடித்திருக்கும் திரைப்படம்தான் இந்தியன் 2. 1996ம் வருடம் வெளியாகி ஹிட் அடித்த இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக 28 வருடங்கள் கழித்து இப்படம் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் 750 தியேட்டர்களிலும், உலகமெங்கும் 5 ஆயிரம் தியேட்டர்களிலும் இப்படம் வெளியாகி இருக்கிறது.

    முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தியன் 2 படத்தில் கமலுடன் சித்தார்த், ரகுல் ப்ரீத்சிங், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர் என பலரும் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் தமிழகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை களையெடுக்கும் சேனாதிபதி இந்தியன் 2-வில் பேன் இண்டியா அளவில் இந்தியா முழுவதும் களையெடுக்கிறார்.

    28 வருடங்கள் கழித்து 2ம் பாகம் வெளியானாலும் 3ம் பாகம் இன்னும் 6 மாதங்களில் வெளியாகவுள்ளது. இந்தியன் தாத்தா சேனாதிபதியுடைய அப்பாவின் வரலாறு, வெள்ளையர்களை எதிர்த்து அவர் போட்ட சண்டை என கதை போகிறது. இந்தியன் 2-வில் நடிக்க இந்தியன் 3-தான் காரணம் என கமலே சொல்லி இருக்கிறார் எனில் அது எப்படிப்பட்ட வேடம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

    உண்மையில் இந்தியன் 3 எடுக்கும் எண்ணம் ஷங்கருக்கு இல்லை. ஆனால், இந்தியன் 2 எடுக்கும்போது கதை போன விதம் அடுத்த பாகத்திற்கு அவரை இழுத்து சென்றுவிட்டது என்றுதால் சொல்ல வேண்டும். இந்தியன் 2 வுக்கான கதைதான் இந்தியன் 3-ஆக மாறியது. அதன்பின் இந்தியன் 2-வுக்கு வேறு கதை எழுதி இயக்கினார் ஷங்கர் என சொல்கிறார்கள்.

    லைக்கா நிறுவனம் அதிக பொருட்செலவில் இந்தியன் 2-வை உருவாக்கி இருக்கிறது. ஒருகட்டத்தில் நிதிநெருக்கடியை சமாளிக்க முடியாமல் லைக்கா திணறியபோது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரிக்க முன் வந்தது. இதனால்தான் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 டேக் ஆப் ஆனது.

    இந்தியன் 2 படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில் இப்படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்தின் சில காட்சிகளை முன்னோட்டமாக காட்டி இருக்கிறார்கள். இந்நிலையில், இது தொடர்பான வீடியோவும் வெளியாகி இருக்கிறது. காஜல் அகர்வாலும், கமலும் ஆக்ரோஷத்துடன் சண்டை போடும் காட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கிறது.

  • தரலோக்கலா உருவாகும் தக்லைப்!.. வேறலெவல் வெறித்தனம் காட்டும் மணிரத்னம்!.. என்னப்பா சொல்றீங்க!..

    தமிழ் சினிமாவில் எலைட் இயக்குனராக பார்க்கப்படுபவர் இயக்குனர் மணிரத்னம். அதாவது இவரின் படங்கள் மெத்த படித்த மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே பிடிக்கும் என ஒரு பொதுவான கருத்து உண்டு. அதாவது, சென்னை போன்ற பெரிய நகரங்களில் வசிக்கும் ரசிகர்களுக்கு மட்டுமே மணிரத்னம் படம் பிடிக்கும் என சொல்வார்கள்.

    அவரும் இதுவரை ஒரு கிராம கதையை படமாக எடுத்தது இல்லை. அவரின் படங்களில் ஏழைகள் கூட எலைட் மனிதர்கள் போலவே பேசுவார்கள். அதைத்தான் நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால், தக் லைப் படத்தை அவர் இதுவரை இல்லாத அளவுக்கு தரலோக்கலாக உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

    இதையும் படிங்க: மீண்டும் சேனாதிபதி எண்ட்ரி… இந்தியன்2 படத்தின் கதை இவருக்கு தானா? இணையத்தில் லீக்…

    தக் லைப் திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் படம் எனவும், கமலை இதற்கு முன் இப்படி பார்த்திருக்க முடியாது எனவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. பொன்னியின் செல்வன் சூப்பர் ஹிட்டுக்கு பின் மணிரத்னம் இயக்கும் படம் இது. அதோடு, நாயகன் படத்திற்கு பின், அதாவது 37 வருடங்களுக்கு பின் மணிரத்னமும் – கமலும் இணைந்திருக்கும் படம் இது.

    எனவே, இந்த படத்தின் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் என பலரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அவர்கள் விலகிவிட்டனர். குறிப்பாக, சிம்பு வந்ததாலேயே ஜெயம் ரவி இப்படத்திலிருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.

    இதையும் படிங்க: விஜய் செய்த வேலை!.. போட்டோவை பகிர்ந்த எஸ்.ஏ.சி!.. முழு அரசியல்வாதியாகவே மாறிட்டாரு!..

    அதோடு, குறைவான சம்பளம் என்பதால் ஜெயம் ரவி விலகிவிட்டார் எனவும் ஒரு செய்தி இருக்கிறது. இப்படி இரண்டு பேரும் விலகிவிட்டதால் கமல்ஹாசன் மற்றும் சிம்புவை சுற்றியே கதை நடப்பது போல கதையை மாற்றிவிட்டார் மணிரத்னம். இந்த படத்தில் கமலின் மகனாக சிம்பு நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    இந்நிலையில், பக்கா லோக்கல் கேங்ஸ்டராக இப்படத்தை உருவாக்கி வருகிறாராம் மணிரத்னம். எனவே, வழக்கமான மணிரத்னம் படம் என எதிர்பார்த்து போகும் ரசிகர்களுக்கு இப்படம் கண்டிப்பாக சர்ப்பரைஸாக இருக்கும் என சொல்கிறது படக்குழு.

  • கமல் கேட்ட அந்தக் கேள்வி… ராமானுஜம் சொன்ன பதில்… பாலுமகேந்திரா எடுத்த முயற்சி

    திரையுலகின் தந்தை டி.ராமானுஜம் அவர்களின் நூற்றாண்டு விழாவில் பாரதிராஜா, கமல், பாக்கியராஜ், ஆர்.கே.செல்வமணி உள்பட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் கலந்து கொண்ட சித்ரா லட்சுமணன், கமல் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

    டி.ஆர்.சாரைப் பொருத்தவரை என் மனதுக்கு நெருக்கமானவர். என் மேல மிகப்பெரிய பாசம் கொண்டவர் என்கிறார் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். இந்த விழாவில் அவர் பேசியது இதுதான். எனது திரைப்படத்தின் 100வது நாள் விழா எந்த விழாவாக இருந்தாலும் அவர் தான் தலைவர். கமலின் பிறந்த நாள் விழாவும், சூரசம்ஹாரம் படத்தின் 100வது நாள் விழாவும் 7.11.1988ல் கலைவாணர் அரங்கில் நடந்தது.

    இதையும் படிங்க… இனிமே அவர் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது… திடீரென விஜயகாந்துக்காக பேசிய சூப்பர்ஸ்டார்…

    அந்த விழாவுக்குத் தலைமை தாங்கியவர் டிஆர் தான். அதே போல நானும் சகோதரரும் இணைந்து தயாரித்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் 100வது நாள் விழா வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கலந்து கொண்டார். அந்த விழாவிற்குத் தலைமை தாங்கியவரும் டிஆர் தான்.

    சினிமா உலகில் எப்போது எந்தப் பிரச்சனைகள் என்றாலும் அதைக் கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமல் அணுகினார். எல்லா பிரச்சனைகளையும் உடனுக்குடன் அப்போது முதல் அமைச்சர் எம்ஜிஆர் ஆனாலும், ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி. உடனடியாகத் தொடர்பு கொண்டு தீர்த்து வைத்து விடுவார்’ என அவர் தெரிவித்துள்ளார்.

    DR1
    DR1

    முதலில் கமல் சினிமாவுக்குள் நுழையும்போது டெக்னீசியனாக ஆவதுதான் கௌரவம் என நினைத்தாராம். நடிக்க வரவில்லை என்றார். அதன்பிறகு ஒரு சில வேடங்கள் கிடைத்தது. நடித்தேன் என்றார். என்றாலும் பாலுமகேந்திரா முதல் படம் எடுக்கப் போகிறார் என்றார் கமல். அவர் மலையாளத்தில் எடுத்த படங்களின் பிரேம் எல்லாம் தியேட்டரில் மாறிப் போயிடும். சண்டை போடறதுக்காக டிஆர். அவர்களைப் போய்ப் பார்ப்பேன். சார் என்ன இது.. பிரமாதமா இன்டர்நேஷனல் லெவல்ல பிரேமிங் வச்சிருக்காரு.

    அதெல்லாம் மாறிப்போயிட்டு.. ஒவ்வொரு தியேட்டர்லயும் ஒவ்வொரு மாதிரி புரொஜெக்ஷன் பண்றாங்கன்னு டிஆர் அவர்களிடம் கேட்பேன். அதுக்குத் தான் நாங்க எல்லாரும் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம். அதுக்குக் கொஞ்சம் டைம் ஆகும் என்றார். அதை நான் பாலுமகேந்திராவிடம் சொன்னேன். அதற்கு அவர் என்ன பண்ணினார்னா அவர் தனியாக ஒரு பிரேமைத் தயார் செய்தார். அதை எந்தத் தியேட்டரில் போட்டாலும் மாறாது. இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

  • அன்பே சிவம் படத்தால எனக்கு நிறைய நல்லது நடந்திருக்கு!.. இப்ப சொல்றேன்!.. சுந்தர்.சி நெகிழ்ச்சி!..

    சினிமாவில் இரண்டு வகையான படங்கள் உண்டு. ஒன்று கலைப்படங்கள். அதாவது சிறந்த கதை, நடிப்பு என விமர்சகர்களால் கொண்டாடப்படும். நல்ல சினிமாவை விரும்பும் ரசிகர்களால் அந்த படங்கள் பேசப்படும். ஆனால், தியேட்டரில் கூட்டம் இருக்காது. தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும். அதேநேரம், உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் போன்ற படங்கள் இதில் விதிவிலக்கு.

    இரண்டாவது, காதல், குடும்ப செண்டிமெண்ட், காமெடி, சண்டைக்காட்சிகள் நிறைந்த மசாலா திரைப்படங்கள். நல்ல சினிமா விரும்பிகளுக்கு இப்படங்கள் பிடிக்காது. ஆனால், தியேட்டரில் கூட்டம் இருக்கும். தயாரிப்பாளருக்கும் நல்ல லாபத்தை கொடுக்கும். இதில் முதல் வகையை சேர்ந்த கலைப்படம்தான் கமல் – மாதவன் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான அன்பே சிவம் திரைப்படம்.

    இதையும் படிங்க: தளபதி பட விழாவில் இளையராஜா செய்த வேலை!.. ரஜினி அவரை ஒதுக்க காரணமாக இருந்த சம்பவம்!…

    இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை கமல் எழுத காமெடி படங்களை இயக்கிவந்த சுந்தர் சி இப்படத்தை இயக்கி இருந்தார். ஆனால், இந்த படத்திற்கு தியேட்டரில் கூட்டம் இல்லை. தயாரிப்பாளருக்கு நஷ்டமே ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், இப்போது வரை இப்படத்தை பலரும் கொண்டாடுகின்றனர்.

    இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சுந்தர் சி ‘அன்பே சிவம் எனது சினிமா வாழ்வில் முக்கியமான படம். அப்படம் வெற்றியை பெறவில்லை. ஆனால், எனக்கு பல நல்லது நடந்திருக்கிறது. இப்படத்தை முடித்தபின் கமல் என்னிடம் ‘நாம் ஒரு நல்ல படம் பண்ணி இருக்கிறோம். நல்லதே நடக்கும் என சொன்னார்’ அவர் சொன்ன படியே நடந்தது.

    என் மகளை பள்ளியில் சேர்க்க நானும், என் மனைவி குஷ்புவும் சென்றோம். அது ஒரு பெரிய பள்ளி. கடைசி நேரத்தில் போனதால் சீட் இல்லை என சொல்லிவிட்டார்கள். ஆனால், ‘சம்பிரதாயத்துக்காக பிரின்சிபலை சந்தித்து பேசிவிட்டு செல்லுங்கள். அடுத்த வருடம் சீட் கிடைக்கும்’ என சொன்னார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. ஆனால், குஷ்பு என்னை அழைத்துகொண்டு போனார்.

    இதையும் படிங்க: அண்ணாமலை படத்திற்கு மாஸ் பிஜிஎம்… தேவாவை திட்டிய ரஜினி ரசிகர்கள்… என்ன நடந்ததுன்னு தெரியுமா?

    அந்த பிரின்சிபில் ஒரு வட மாநிலத்தை சேர்ந்தவர். எங்கள் இருவரையும் யாரென்றே அவருக்கு தெரியவில்லை. நாங்கள் சினிமா பிரபலம் என அவருக்கு சொல்லி இருந்ததால் சினிமாவை பற்றி பேச துவங்கினார். சமீபத்தில் ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஐயர்’ என்கிற படம் பார்த்தேன். அதுபோல ஏன் தமிழ் சினிமாவில் படங்கள் வருவதில்லை. அன்பே சிவம் என்கிற ஒரு தமிழ் படம் பார்த்தேன். அற்புதமாக இருந்தது என சொல்ல, அருகிலிருந்த குஷ்பு ‘மேம் அப்படத்தின் இயக்குனர் இவர்தான்’ என சொல்ல அவருக்கோ ஆச்சர்யம்.

    ‘நீங்களா அன்பே சிவம் படத்தின் இயக்குனர்?.. உங்களுக்கு சீட் இல்லை என யார் சொன்னது?’ என சொல்லி உடனே என் பொண்ணுக்கு சீட் கொடுத்தார். அப்போதுதான் கமல் சார் என்னிடம் சொன்னதை நினைத்து பார்த்தேன். அதோடு, கற்றறிந்த சபைகளுக்கு நான் போகும்போதெல்லாம் என்னை பெருமைப்படுத்துவது அன்பே சிவம் படம்தான். அந்த வகையில் அப்படம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல்தான்’ என நெகிழ்ச்சியுடன் சொன்னார் சுந்தர் சி.

  • பதினாறு வயதினிலே படம் நடிக்கும்போது காதல் வசப்பட்ட கமல்!. நடிகர் சொன்ன சீக்ரெட்…

    நடிகர், பத்திரிக்கையாளர், பத்திரிக்கை தொடர்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், ஊடகவியலாளர் என பல முகங்களை கொண்டவர்தான் சித்ரா லட்சுமணன். இவர் சமீபத்தில் ஊடகத்தில் பேசும் கமலுடனான அவரின் நட்பு, அனுபவம் மற்றும் பதினாறு வயதினிலே படம் தொடர்பாக நமக்கு தெரியாத பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார்.

    1975ம் வருடம் சுமார் 10 படங்களில் நடித்து முடித்திருந்தார் கமல்ஹாசன். அதில் அந்தரங்கம், ஆயிரத்தில் ஒருத்தி, சினிமா பைத்தியம், மாலை சூடவா போன்ற படங்களுக்கு நான்தான் பத்திரிக்கை தொடர்பாளனாக இருந்தேன். இதில் ஆயிரத்தில் ஒருத்தி படத்தில் கமலின் சம்பளம் தொடர்பாகவும் பேசி அவரை ஒப்பந்தம் செய்ததும் நான்தான்.

    இதையும் படிங்க: இந்த படத்துல கமல் வேண்டாம்!.. தூக்கி போடுங்க!.. இயக்குனருக்கு வந்த நெருக்கடி…

    அந்த படத்தில் கமல் வாங்கிய சம்பளம் 15 ஆயிரம். 1976ம் வருடம் கமல் நடிப்பில் வெளிவந்த படம்தான் அதிர்ஷ்டம் அழைக்கிறது. அந்த படத்தை இயக்கியவர் ஜெகன்நாதன். அவரிடம் உதவியாளாராக இருந்தவர்தான் பாரதிராஜா. அந்த படம் உருவானபோதே இதுதான் என் கடைசிப்படம். இனிமேல் இயக்கம்தான் என முடிவு செய்துவிட்டார் பாரதிராஜா.

    chithra

    அப்படி அவர் உருவாக்கிய படம்தான் பதினாறு வயதினிலே. கமலுக்கு பாரதிராஜா ஏற்கனவே அறிமுகம். அவரை பொறுத்தவரை புதிதாக வரும் திறமைசாலிகளை சுலபமாக கண்டுபிடித்துவிடுவார். எனவே, அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் நடிக்க கமல் கேட்ட சம்பளம் 30 ஆயிரம். அதை கொடுக்க பாரதிராஜாவும், தயாரிப்பாளரும் ஒப்புகொண்டார்கள்.

    இதையும் படிங்க: கமல்-ஹெச்.வினோத் படத்தின் கதை முக்கிய பிரபலத்தின் பயோபிக்காம்!.. ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட்…

    இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் அருகே நடந்தது. எனவே, ரயிலில் அங்கு சென்று ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தோம். இப்போது போல அப்போது செல்போன் வசதி இல்லை. நாங்கள் தங்கி இருக்கும் இடத்திலிருந்து அரை மணி நேரம் நடந்து சென்று ட்ரங்கால் பேச வேண்டும். தொலைப்பேசி எண்ணை கொடுத்துவிட்டு அரைமணி நேரம் காத்திருக்க வேண்டும். கமலும் அப்படி காத்திருப்பார்.

    vani

    அப்போது ஹிந்தி நடிகை ரேகாவை கமல் காதலிப்பதாக வதந்தி இருந்தது. எனவே, நானும் அவரிடம் கமல்தான் பேசுகிறார் என நினைத்தேன். ஆனால், ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தில் அவருடன் ஒரு பாடலில் நடித்த வாணி கணபதியைத்தான் காதலிக்கிறார் என கமல் என்னிடம் சொன்னார். பதினாறு வயதினிலே படம் வெளியான அடுத்த வரும் அவர் வாணி கணபதியை திருமணமும் செய்து கொண்டார்’ என சித்ரா லட்சுமணன் கூறினார்.

    இதையும் படிங்க: இரவு 12 மணிக்கு கதவை தட்டிய தயாரிப்பாளர்!.. உடனே நடிக்க ஒப்புக்கொண்ட கமல்!. அட அந்த படமா?!..

  • கமல் ரத்த வாந்தி எடுத்தான்.. பாரதிராஜா சொன்ன அதிர்ச்சி சம்பவம்…

    Kamalhaasan: நடிகர் கமலுக்கு சினிமா மீது எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். தன்னை ஏவி மெய்யப்ப செட்டியாரிடம் அழைத்து சென்றவர் அவரை அறிமுகம் செய்துவைக்கவில்லை என 5 வயதிலேயே கோபித்துகொண்டவர்தான் அவர். அதோடு, களத்தூர் கண்ணம்மா படப்பிடிப்பு நடக்கும்போது ஏவிஎம் பிரிவ்யூ தியேட்டரில் ஆங்கில படங்களை பார்த்து அதுபோலவே நடித்துக்காட்டுவாராம்.

    நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தபோது படப்பிடிப்பு முடிந்தவுடன் எல்லோரும் ஊர் சுற்ற போய்விட்டால் கமல்ஹாசன் மட்டும் எதாவது தியேட்டருக்கு போய் ஆங்கில படங்களை பார்த்துக்கொண்டிருப்பாராம். கமலை பொறுத்தவரை அவருக்கு எல்லாமே சினிமாதான்.

    இதையும் படிங்க: சூர்யா மட்டுமில்ல.. கமலிடம் வாட்ச் கிப்ட் வாங்கிய வேற 3 நடிகர்கள் இருக்காங்க!.. வாங்க பார்ப்போம்…

    அதற்காக கடுமையாக உழைத்து தன்னை தகுதியானவராகவும் கமல் மாற்றிக்கொண்டார். அதோடு, தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்துசெல்ல வேண்டும் என்கிற ஆசையும் கமலுக்கு இருக்கிறது. இதற்காக பல பரிசோதனை முயற்சிகளை கமல் செய்து பார்த்திருக்கிறார். பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மகாநதி, குருதிப்புனல், ஹேராம், விருமாண்டி, தசாவதாரம் என பல படங்களை சொல்லலாம்.

    kamal

    பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல் நடித்த பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், ஒரு கதையின் டைரி ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் எப்போதும் இருக்கும். சமீபத்தில் கமலை பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய பாரதிராஜா அவரை பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    இதையும் படிங்க: டி.ஆர்.பி-யில் டாப்பில் இருக்கும் 5 சீரியல்கள்!.. நீச்சல் அடிக்க முடியாம தவிக்கும் எதிர்நீச்சல்

    நான் உதவி இயக்குனராக இருக்கும்போது கமல் எனக்கு பழக்கம். அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வோம். ‘சபையில் நான் நடந்தால் எல்லோரின் பார்வையும் என் மீது இருக்க வேண்டும். அந்த இடத்தை அடைவதுதான் என் லட்சியம்’ என என்னிடம் அடிக்கடி சொல்லுவான். அதை நிரூபித்தும் காட்டினான்.

    pathinaru

    அதற்காக கடுமையாக உழைத்தான். ஒருநாள் ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்தான். நான்தான் அவனை வீட்டில் கொண்டுபோய் விட்டேன். ஒருநாள் ‘பதினாறு வயதினிலே’ படத்தில் நடிக்க முடியுமா எனக்கேட்டேன். அவரின் அண்ணன் சாருஹாசனிடம் கதை சொல்ல சொன்னான். அவருக்கு பிடித்துவிட்டது. கமலுடம் நடிக்க சம்மதித்தான். என்னிடம் அவன் கதையே கேட்கவில்லை. படப்பிடிப்பில் சப்பாணி எப்படி இருப்பானோ அப்படி தன்னை மாற்றிக்கொண்டு நடித்தான். எனக்கு நண்பனகாவும் மாறிப்போனான். அவன் ஒரு மகா கலைஞன்’ என பாரதிராஜா கூறினார்.

    இதையும் படிங்க: நடிகைக்கு நள்ளிரவில் கால் செய்து அழைத்த தனுஷ்!… விவாகாரத்து செய்து துரத்திய கணவர்!…