Tag: kamalhasan

  • சுகர் பேபின்னு கலாய்க்கும் நெட்டிசன்கள்!.. த்ரிஷா என்ன கொண்டு வந்துருக்காரு பார்த்தீங்களா?

    நடிகை த்ரிஷா தான் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்து வரும் நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்துக்கொள்வது வழக்கம். மேலும், அவர் தற்போது பட்டாம்பூச்சிகளை டிசைனாக கொண்ட உடை அணிந்து ஒரு பட்டாம்பூச்சிப் போலிருக்கும் அழகான போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

    த்ரிஷா மாடலாக “மிஸ் சென்னை” பட்டம் வென்றவர். அதையடுத்து ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக அறிமுகமான இவர் 2002-ல் “மௌனம் பேசியதே” படத்தில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். மேலும், சாமி, கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா, 96 உள்ளிட்ட பல படங்கள் இவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது.

    நடிகை த்ரிஷா தொடர்ந்து தனது நடிப்பு மற்றும் இளமை தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தனது 40 வயதிலும் முன்னணி நடிகையாக திகழும் இவர் தென்னிந்திய சினிமாவில் “சவுத் குயின்” என்று அழைக்கப்படுகிறார். இந்த வருடம் மட்டும் கைவசம் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

    நடிகை த்ரிஷா நடிப்பில் இதுவரை வெளியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் இடையே பாராட்டுக்களை பெற்றுவந்த நிலையில் தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்தும் நடித்தும் வெளியாக உள்ள தக் லைஃப் படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் சிம்பு, அஷோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    த்ரிஷா சமீபத்தில் தனது செல்லப்பிராணியுடன் ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சி செய்யும் வீடியோ, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோ உள்ளிட்ட பல தருணங்களை ஷேர் செய்திருந்த நிலையில் தற்போது பட்டாம்பூச்சி டிசைன் கொண்ட உடை அணிந்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

  • தக் லைஃப் நாயகிகள் அபிராமி, திரிஷா… யாரு மூத்தவருன்னு தெரியுமா?

    மணிரத்னம் இயக்கத்தில் முதன் முறையாக கமல், சிம்பு காம்போ இணைகிறது. அதிலும் நாயகன் படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு அதாவது 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல், மணிரத்னம் காம்போ இணைகிறது. இதனால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. சமீபத்தில் வெளியான ஜிங்குச்சா பாடலும் அதில் கமலும், சிம்புவும் போட்ட ஆட்டமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

    தொடர்ந்து வெளியான டிரெய்லர் கூஸ்பம்ப்ஸைக் கிளப்பியுள்ளது. இதில் வில்லன் சிம்புதான் என்று தெரிந்து விட்டது. இருவரும் டான்ஸ் தான் ஆடுகிறார்கள் என்றால் ஃபைட்டிலும் தெறிக்கவிடுவார்கள் போல என இப்போதே ரசிகர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் படத்தில் வரும் நாயகிகள் குறித்துப் பார்ப்போமா…

    தக் லைஃப்ல கமலுக்குத் தான் திரிஷா, அபிராமி ஜோடி. சிம்புவுக்கு ஜோடியே கிடையாது. சிம்புவுக்குத் தான் திரிஷான்னு நாம நினைச்சோம். ஏன்னா அபிராமி தான் பெரியவங்க. வயசுல மூத்தவங்க. திரிஷா இளையவங்க. வயசுல சின்னவங்கன்னு நினைச்சோம்.

    ஆனா திரிஷாவும், அபிராமியும் 1983லதான் பிறந்துருக்காங்க. இன்னும் சொல்லணும்னா திரிஷா தான் மூத்தவங்க. அவங்க 1983ல மே மாதம் பிறந்துருக்காங்க. அபிராமி அதே ஆண்டுல ஜூலைல தான் பிறந்துருக்காங்க.

    சினிமாவில் சீனியர்னு பார்த்தா அது அபிராமி தான். தன்னோட பேரு திவ்யா தான். ஆனா கமலின் தீவிர ரசிகர். அவரது குணா படத்தில் அபிராமி என்ற கேரக்டர் தனக்குப் பிடித்துவிட்டதால் அந்தப் பேரையே சினிமாவுக்காகத் தனக்கு வைத்துக் கொண்டாராம். கமலுடன் 2004ல் விருமான்டி என்ற படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

    அதே போல கமலுடன் மன்மதன் அம்பு படத்தில் திரிஷா ஜோடியாக நடித்துள்ளார். சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பட்டையைக் கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வரை திருமணம் ஆகாமல் முரட்டு சிங்கிளாகவே திரிஷா இருக்கிறார்.

    5.6.2025ல் வெளிவரும் தக் லைஃப் படத்தில் அபிராமி, திரிஷா இருவரது அசாத்திய நடிப்பையும் கண்டுரசிக்கலாம்.

  • நாயகன் மாதிரியான கதையா? ‘தக் லைஃப்’ படத்தை பற்றி ஹிண்ட் கொடுத்த மணிரத்னம்

    நாயகன் படத்திற்கு பிறகு கமலும் மணிரத்னமும் இணைந்துள்ள படம் தக் லைஃப். இந்தப் படத்தில் கமலுடன் சேர்ந்து சிம்பு, திரிஷா, அசோக்செல்வன், அபிராமி என பல நடிகர்கள் நடித்துள்ளனர். கூடவே நாசரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். ஏஅர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிரத்னம் கமல் இணைகிறார்கள் என்ற செய்தி வெளியானதும் அனைவருமே இன்னொரு நாயகனா என்றுதான் கேட்க ஆரம்பித்தனர்.

    ஆனால் இதை பற்றி கமல் முன்பே நாயகன் படத்தில் நடித்த கமலும் அதை இயக்கிய மணிரத்னமும் இப்போது இல்லை என்று கூறியிருந்தார். படத்தின் டிரெய்லர், முதல் படம் இரண்டாவது பாடல் எல்லாம் வெளியாகி படத்திற்கான ஹைப்பை கூட்டியிருக்கிறது. இந்தப் படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியிருக்கிறது.

    பல யூடியூப் சேனல்களுக்கு தக் லைஃப் டீம் பேட்டி கொடுத்து வருகிறது. எவ்வளவு பெரிய லெஜெண்டாக இருந்தாலும் தன்னுடைய படத்தை தான் தான் நல்ல முறையில் கொண்டு போக வேண்டுமென்பதற்காக சலிக்காமல் பேட்டி கொடுத்து வருகிறார் கமல். இந்த பக்குவம் இன்னும் ரஜினிக்கோ விஜய்க்கோ அஜித்துக்கோ வரவில்லை. எதாவது ஒரு சேனலில் உட்கார்ந்து கொண்டு இவ்வளவு பெரிய நடிகர் பேட்டி கொடுத்ததை யாராவது பார்த்திருக்கிறோமா?

    அதுதான் கமல். சினிமாவிற்காக என்ன செய்ய சொன்னாலும் செய்யக் கூடியவர். இந்த நிலையில் ஆனந்த விகடன் பேட்டியில் தக் லைஃப் படத்தை பற்றி மணிரத்னம் கூறிய செய்தி வைரலாகிவருகின்றது. அவர் கூறியது என்னவெனில், நாயகன் மாதிரி இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணினோம். அதே ஜானரில் இருக்கலாம். ஆனால் அதையும் வேறுமாதிரி ஃபீல் பண்ணனும். நான் ஒரு ஐடியா வைத்திருந்தேன்.

    kamal

    kamal

    அதை கமல் சார்கிட்டே சொன்னபோது அது எக்ஸ்பென்ஸிவ் என சொன்னார். அதற்கு பிறகு அவர் ஒரு ஸ்கிரிப்ட் செய்திருந்தார். அதில் எனக்கு ஒரு விஷயம் பிடித்தது. அது நாயகனில் இருந்த ஒரு பொறின்னு சொல்லலாம் என மணிரத்னம் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

  • நடிப்பை விட எனக்குப் பிடிச்ச விஷயம் அதுதான்… கமல் அதிரடியா சொல்லிட்டாரே!

    மணிரத்னம், கமல், சிம்பு காம்போவில் அதிரடியாக விரைவில் வர உள்ள படம் தக் லைஃப். இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது ஜரூராக நடந்து வருகின்றன. இதையொட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு கமல் அளித்த பிரத்யேகப் பேட்டி இது. அதில் இருந்து அவர் உதிர்த்த ஒரு சில வார்த்தைகளைப் பார்ப்போம்.

    இன்னைக்கு வரைக்கும் ரிகர்சல் பண்ணித்தான் நடிச்சிக்கிட்டு இருக்கேன். ரிகர்சல் இல்லாம நான் பண்ணினதே கிடையாது. மணி சார் பர்ஸ்ட் படம் பண்றதுக்கு முன்னாடி இன்னைக்கு என்ன சூட்டிங் இருக்கான்னு கேட்பாரு. இல்ல இன்னைக்கு ரிகர்சல்னு சொல்வேன்.

    நான் வந்த போது ரிகர்சல் ஹால்னே இருந்தது. அப்போ எஸ்.ஏ.அசோகன், ஆனந்தன் சார் எல்லாம் கத்திச்சண்டை போட்டு ரிகர்சல் பண்ணுவாங்க. அதுக்கு அப்புறம் நான் ரிவர்ஸ்ல போனேன். சினிமாவுல இருந்து நாடகத்துக்குப் போனேன். சண்முகம் அண்ணாச்சி ஒரு மாசம் ரிகர்சல் நடத்துவாரு.

    எல்லாரும் உட்கார்ந்துருக்குறோம். டெஸ்க் போட்டுட்டு கணக்குப்பிள்ளை மாதிரி கீழே உட்கார்ந்துருப்பாரு. சுத்தி நாங்க இருப்போம். அவங்க அவங்க பாடத்தை எப்படி படிச்சிக்காட்டணுமோ அப்படி படிச்சிக் காட்டுவாரு. ஒவ்வொரு கேரக்டரா டீல் பண்ணுவாரு. முதல்ல ஃபுல்லா வேற யாராவது படிக்கச் சொல்வாரு.

    அப்புறம் மெய்ன் கேரக்டரைச் சொல்வாரு. அப்புறம் சின்ன கேரக்டரைச் சொல்வாரு. நாலாவது ஐந்தாவது நாள்ல இருந்து அவங்க அவங்க புத்தகத்தைப் பார்த்துப் படிக்கணும். 10வது நாள் புத்தகத்தை மூடிட்டுப் படிக்கணும். கரெக்டா எல்லாருமே பார்க்காம உட்கார்ந்து சொல்லிடுவோம். அந்த லெவல் வர்ற வரைக்கும் எங்களை நிக்க வைக்க மாட்டாரு. அப்புறம் நின்னு படிக்க வைப்பாரு. கடைசி 3 நாள் கிராண்ட் ரிகர்சல்.

    அதுக்காக ரெண்டு டிரஸ் தைச்சி வச்சிருப்போம். ஏன்னா ரிகர்சல்ல வியர்வையா வரும். அதனால அரங்கேற்றத்துக்கு புது டிரஸ் போடுவோம். அதுக்கு முன்னாடி 2 ஷோ வரும். அதுல உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் பார்ப்பாங்க. ரிகர்சல் வந்து எனக்கு சினிமா, ஆக்சுவல் ஆக்டிங்கை விட ரொம்ப பிடிக்கும். ஏன்னா இங்க தான் நான் கத்துக்க முடியும். அதனால இன்னைக்கும் ரிகர்சல் எடுத்துக்கிட்டு இருக்கேன்.

    சொல்லிக் கொடுக்குறதுல ஒரு சின்ன ட்ரிக் இருக்கு. சொல்லிக் கொடுக்கும்போதுதான் நாம கத்துக் கொடுக்க முடியும். அதனால தான் சிலர் 8ம் கிளாஸோடு நின்று விடுறாங்க. வாத்தியாராவே. சில பேரு புரொமோட் ஆகிப் போவாங்க. ஸ்டூடண்ட்ஸ்சும் அப்படித்தான் ரிகர்சல் இல்லாம நான் டைரக்டா நடிப்பேன்னு சொல்றது சில்லரைத்தனம் என்கிறார் புன்முறுவலுடன் கமல்ஹாசன்.

  • உண்மையான வில்லனே நான்தான்! ரஜினி இல்ல.. கமல் சொன்ன படம் எது தெரியுமா?

    தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் நடிக்க வந்த புதிதில் தமிழ், இந்தி என கிட்டத்தட்ட 16 படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். அந்த வகையில் இருவருமே கடைசியாக சேர்ந்து நடித்த படம் அக்னி சாட்சி. 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை கே பாலச்சந்தர் இயக்கியிருந்தார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து படங்களில் நடிக்கவே இல்லை. ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் பெரும்பாலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

    ஆனால் அதன் பிறகு வந்த எத்தனையோ இயக்குனர்கள் மீண்டும் ரஜினியையும் கமலையும் வைத்து ஒரு படத்தை எடுக்க வேண்டும் என எத்தனையோ வழிகளில் முயற்சி செய்தனர். அது நடக்கவே இல்லை. கடைசியாக நடிகர் சங்க கடனை அடைப்பதற்கு நடிகர் சங்கத்திலிருந்து ஒரு நாடகம் நடத்தவும் அதில் மீண்டும் ரஜினியும் கமலும் நடிப்பார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.

    ஏன் இயக்குனர் லோகேஷ் கூட ஒரு சமயம் கமல் மற்றும் ரஜினியை வைத்து படத்தை எடுக்க முயற்சித்தேன். முக்கியமாக கமல் தயாரிப்பில் ரஜினி நாயகனாக நடிப்பது என கிட்டத்தட்ட உறுதியானது. ஆனால் கொரோனாவால் திட்டம் கைவிடப்பட்டது. இவர்கள் இருவரையும் வயதான கேங்ஸ்டராக காட்டும் கதையாக அந்த படத்தை எடுக்க முயற்சித்தேன் அதன் பிறகு அப்படத்தை எடுப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருந்ததனால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அந்தப் படத்தை அப்படியே விட்டு விட்டேன் எனக் கூறி இருந்தார் லோகேஷ்.

    இதைப்பற்றி கமலும் ரஜினியும் கூறும் போது கூட வாய்ப்பு வந்தால் நாங்கள் நடிப்போம் என்று தான் இருவருமே சொல்லி வைத்தார் போல பதில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கமல் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. அந்தப் படத்தின் புரமோஷனுக்காக பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் கமல்.

    அப்போது ரஜினியை பற்றிய ஒரு கேள்விக்கு கமல் பதிலளித்திருக்கிறார். கமலிடம் ரஜினிகாந்த் நடித்த தளபதி, பாட்ஷா ,முள்ளும் மலரும் போன்ற படங்களில் எந்த படம் உங்களுக்கான ஃபேவரைட் திரைப்படம் என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கமல் என்னை பொறுத்த வரைக்கும் முள்ளும் மலரும் தான். ஏனெனில் நானும் ரஜினியும் முடிவெடுத்தது என்னவெனில் நீங்கள் முள்ளும் மலரும் திரைப்படம் மாதிரியே நடித்துவிட்டு போங்க. நான் பாட்ஷா மாதிரி போய் விடுகிறேன் என்று முடிவெடுத்தோம்.

    எல்லா படங்களும் நாங்கள் பண்ணி பார்த்திருக்கிறோம். ஆனால் முள்ளும் மலரும் ரஜினியை தான் பிடிக்கும். அதை போல அபூர்வ ராகங்கள் ரஜினியையும் பிடிக்கும். அந்தப் படத்தைப் பொறுத்த வரைக்கும் அதில் நான் தான் வில்லன். அபூர்வ ராகங்கள் படத்தில் நான் தான் அந்த காதலுக்கு இடையூறாக இருக்கிற அரவேக்காட்டு காதலன் நான்தான் என கமல் கூறியிருக்கிறார்.

  • பச்சைக்கிளி முத்துச்சரம் வாடை வருது பாய்!.. த்ரிஷாவின் சுகர் பேபி பாட்டு வொர்த்தா? வெத்தா?

    தக் லைப் படக்குழு மும்பையில் நடந்த ப்ரொமோஷன் விழாவில் பிஸியாக இருந்து வரும் நிலையில் இன்று செகண்ட் சிங்கிளான சுகர் பேபி பாடலை வெளியிட்டுள்ளனர். பச்சைக்கிளி முத்துச்சரத்தில் இடம்பெற்றுள்ள ஜோதிகாவின் ”உனக்குள் நானே” பாடலைப்போல இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

    ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்ற படம் தான் தக் லைஃப். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு தமிழ் கேங்ஸ்டர் ஆக்ஷன் டிராமாவாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும், இப்படத்தில் சிலம்பரசன், த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, நாசர், அலி ஃபாசல், பங்கஜ் திரிபாதி, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    தக் லைஃப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல் பாடலான “ஜிங்குச்சா” வெளியாகியதை தொடர்ந்து இன்று மாலை செகண்ட் சிங்கிளாக சுகர் பேபி பாடலை வெளியிட்டுள்ளனர். இது 1987-ல் வெளியான நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமாகும். இப்படம் கமல்ஹாசனின் 234-வது திரைப்படமாக வெளியாகவுள்ளது.

    படத்தின் டிஜிட்டல் உரிமம் 149.7 கோடி ரூபாய் அளவில் நெட்ஃப்ளிக்ஸுக்கு விற்கப்பட்டதாகவும், தெலுங்கு விநியோக உரிமை 20 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மற்ற படங்கள் 4 வாரங்களில் ஒடிடி தளத்தில் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் தக் லைப் படத்தை 8 வாரங்களுக்கு பிறகு வெளியிடுமாறு கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    வருகிற ஜூன் 5ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் தக் லைஃப் திரைப்படம் வெளியாக உள்ளது. கமல்ஹாசனின் “இந்தியன் 2” படத்தின் தோல்விக்குப் பிறகு, இப்படம் அவருக்கு மீண்டும் வெற்றியைத் தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மே 24ம் தேதி தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

    சுகர் பேபி பாடலில் த்ரிஷா தொப்புள் வரை காட்டி ”என்ன வேணும் உனக்கு.. கொட்டிக் கொட்டி கிடக்கு” என்று பாடினாலும் ”உனக்குள் நானே உருகும் இரவில்” என கெளதம் மேனன் இயக்கத்தில் சரத்குமாரின் சுகர் பேபியாக ஜோதிகா மாறி நடனமாடியது தான் ரசிகர்களுக்கு நினைவிக்கு வருகிறதாம். ஓடாத இந்தியன் 2 படத்தில் இடம்பெற்ற காலண்டர் கேர்ள்ஸ் பாடலையே அனிருத் இதை விட சிறப்பாக இசையமைத்திருந்தார் என்றும் ஏ.ஆர். ரஹ்மான் பாடல் போலவே இல்லை என்றும் விமர்சனங்கள் குவிகின்றன.

  • தக் லைஃப் ஹீரோவே நான் தான்!.. கமலுக்கே விபூதி அடித்த பிரபலம்!.. இப்படி அசிங்கப்படுத்திட்டாரே!..

    1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமாக தக் லைஃப் அமைந்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரு பான் இந்திய படமாக உருவாகியுள்ள இப்படத்தை பல இடங்களில் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.

    ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசனின் 234வது படமான இதில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் ஒரு தமிழ் கேங்ஸ்டர் ஆக்‌ஷன் டிராமாவாக இது உருவாகியுள்ளது.

    தக் லைஃப் படத்தில் மொத்த கால அளவு 2 மணி 45 நிமிடங்கள் இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் மாதம் 5ம் தேதி அன்று உலகளவிலுள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தக் லைஃப் டிஜிட்டல் உரிமத்தை பல கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ள நிலையில், இந்த படம் திரையரங்கு வெளியீட்டிற்கு 8 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இதுவரை வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், பேட்டி ஒன்றில் நீயா நானா கோபிநாத், மணி சாரும் கமல் சாரும் ஒரு காபி ஷாப்பில் ஒரு மணி நேரம் பேசனும், ஆனால் சினிமாவைப் பற்றி பேசக்கூடாதுன்னா என்ன பேசுவிங்க என்று கேட்டதற்கு மணிரத்னம் 58 நிமிடம் கமல் சார் பேசுவாரு நான் 2 நிமிஷம் வெரி குட் சொல்லி முடிச்சிடுவேன், 58 நிமிடத்திற்கு அவர் என்ன வேணாலும் பேசுவாரு சினிமா இல்லனா பரவாயில்ல வரலாறு, அறிவியல் எதை பற்றி வேண்டுமானாலும் பேசுவாரு அவருக்கு எல்லாமே தெரியும் நம்ப கவலையே படாமல் காபி குடிக்கலாம் என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

  • அன்புக்கு அப்பாலாஜி கேட்கமாட்டேன்!.. தக் லைஃப் காட்டிய விண்வெளி நாயகன்.. கர்நாடகாவில் ரிலீஸ் ஆகுமா?

    கமல் ஹாசன் தயாரித்து நடித்துள்ள தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷனில் அவர், ஈடுபட்டு வரும் நிலையில் சாய் ராம் கல்லூரியில் நடைபெற்ற தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தமிழிலிருந்து வந்தது தான் கன்னட மொழி என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. மேலும், அந்த சர்ச்சைக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பஞ்சாயத்து வெடித்த நிலையில், அதற்கு முடியாது என மறுத்துள்ளார்.

    கமல்ஹாசன் தனது ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மொழியைப் பற்றி பேசியது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், எனது உயிரும் குடும்பமும் தமிழ் மொழி. உங்கள் மொழியான கன்னடமும் தமிழில் இருந்து தோன்றியது, எனவே நீங்களும் இந்தக் குடும்பத்தில் அடங்குவீர்கள் என்று சிவராஜ்குமாரை பெருமைப்படுத்த கூறினார். கன்னட மொழியை தமிழில் இருந்து உருவானது என எப்படி கமல்ஹாசன் கூறலாம் என கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா, கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உள்ளது, கமல்ஹாசனுக்கு அது தெரியவில்லை எனக் கூறி அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். சில கன்னட அமைப்புகள் ‘தக் லைஃப்’ படத்தின் பேனர்களைக் கிழித்து, கர்நாடகாவில் படத்தைத் வெளியிடத் தடை விதிக்கக் கோரிக்கை வைத்தனர். மேலும், கர்நாடகவின் பாஜக தலைவர் விஜயேந்திரா கமல்ஹாசன் கன்னட மொழியை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கமல்ஹாசன், தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும், தனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், தமிழ் மற்றும் கன்னட மக்களை ஒரு குடும்பமாக ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் பேசியதாகவும் விளக்கமளித்தார். அன்புக்கு மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் திட்டவட்டமாக மறுத்த நிலையில், தக் லைஃப் திரைப்படத்துக்கு கர்நாடகாவில் சிக்கல் ஏற்படும் என்கின்றனர்.

  • என்ன எதையாவது செய்ய வேண்டாம்னு சொன்னா டபுளா செய்வேன்!.. த்ரிஷாவின் ‘தக் லைஃப்’ பார்த்தீங்களா?

    நடிகை த்ரிஷா தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்துக்கொண்டு வருவதால் அந்நிகழ்சிகளுக்கு அணியும் உடையில் தினமும் புகைப்படங்களை போஸ்ட் செய்து வருகிறார்.

    மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி உள்ளிட்டோருடன் த்ரிஷா நடித்துள்ள இந்தப் படம் ஜூன் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் த்ரிஷாவின் கதாப்பாத்திரம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், த்ரிஷா இந்த வருடம் அஜித்குமாருடன் இரண்டு படம், இப்போது தக் லைஃப் என தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

    தக் லைஃப் படத்திலிருந்து த்ரிஷா ஆடியுள்ள சுகர் பேபி பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இப்படத்தில் இன்னும் பல சர்ப்ரைசான விஷயங்கள் உள்ளன எனக் குறிப்பிட்டு ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளார். தனது 42 வயதிலும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக த்ரிஷா திகழ்கிறார்.

    சமீப காலமாக த்ரிஷா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இன்று த்ரிஷா தனது புதிய புகைப்படங்களை ஷேர் செய்து என்னை யாரவது எதையாவது செய்ய வேண்டாம் என சொன்னால் அதை நான் இரண்டு முறை செய்வது மட்டுமல்லாமல் அதை போட்டோக்களாகவும் வெளியிடுவேன் என பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

    த்ரிஷா தொடர்ந்து “என்ன வேணும் உனக்கு”, “டபுளா செய்வேன்” என தக் லைஃப் ட்வீட் போட்டு வரும் நிலையில், ஏகப்பட்ட கில்மா கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

  • கலெக்டர் ஆபிசில் நடந்த தரமான சம்பவம்!.. அந்த வகையில் இந்தியன் 2 படம் ஹிட்டுதான்!.

    ஷங்கரின் இயக்கத்தில் 1996ம் வருடம் வெளியான திரைப்படம்தான் இந்தியன். கமல் இரட்டை வேடத்திலும் சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி என பலரும் நடித்திருந்தனர். ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை களையெடுக்கும் இந்தியன் தாத்தாவாக கமல் அசத்தி இருந்தார்.

    மக்களின் கோபத்தை இப்படம் பிரதிபலித்திருந்ததால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை இப்படம் பெற்று ஹிட் அடித்தது. தமிழக அரசின் பல துறைகளிலும் உள்ள அலுவலகங்களில் அதிகாரிகள் எப்படி லஞ்சம் வாங்குகிறார்கள் என படம் போட்டு காட்டி இருந்தார் ஷங்கர். அவர்களை இந்தியன் தாத்தா குத்தி கொலை செய்வது போலவும் காட்சிகளை அமைத்திருந்தார்.

    ஆனால், இந்தியன் படம் வந்ததால் தமிழ்நாட்டில் லஞ்சம் ஒழிந்ததா என்றால் இல்லை. இந்தியா போன்ற மாநிலத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க முடியாது என்பதே நிதர்சனமாக இருக்கிறது. அதற்காக சினிமாவில் அதை காட்டாமல் இருக்க முடியுமா என யோசித்த ஷங்கர் இந்தியன் 2-வை கையில் எடுத்தார்.

    இந்த படத்தில் இந்தியாவின் பல ஊர்களிலும் மக்களின் பணத்தை ஆட்டையை போட்டு சம்பாதித்து பெரும் செல்வந்தர்களாக இருக்கும் பண முதலைகளை இந்தியன் தாத்தா களையெடுப்பது போல காட்சிகளை ஷங்கர் அமைத்திருந்தார். மேலும், ஒவ்வொரும் தன்னுடைய வீட்டில் இருக்கும் தவறுகளை தட்டி கேட்பதோடு, தப்பு செய்திருந்தால் தண்டிக்க வேண்டும் எனவும் கருத்து சொல்லப்பட்டிருந்தது.

    ஆனால், இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களே எழுந்தது. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் ‘இந்தியன் தாத்தா கதற விட்டாரு… படம் போர்… பெரிதாக ஒன்றுமிலை.. எதிர்பார்த்தது போல படம் இல்லை. படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது’ என கருத்து சொன்னார்கள். ஒருபக்கம் தியேட்டர்களிலும் கூட்டம் இல்லை. இது ஷங்கர் மற்றும் கமல் இருவரையுமே அப்செட் ஆக்கி இருக்கிறது,

    news

    இந்நிலையில், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு சுவற்றில் ‘மக்கள் கொடுக்கும் மனுவுக்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதம் செய்யாதீர்கள். மக்களின் குறைக்கு விரைவான நடவடிக்கை எடுங்கள். இப்படிக்கு இந்தியன் 2’ என எழுதப்பட்டிருந்தது. அதேபோல், வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தனது கணவரை அவரின் மனைவியே போலீசில் சிக்க வைத்திருக்கிறார்.

    இவை செய்தியாகவும் சில பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கிறது. வசூல் இல்லை என்றாலும் இது இந்தியன் 2 படத்தின் வெற்றியாகவே பார்க்கலாம் என சிலர் சொல்லி வருகிறார்கள்.