Tag: Kubera

  • ‘குபேரா’ வின்டேஜ் வெர்ஷன பார்த்திருக்கீங்களா? புளூசட்டை மாறன் செம கலாய்

    இன்று தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் , நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் குபேரா. கடந்த 2021 ஆம் ஆண்டே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்போதுதான் படம் ரிலீஸாகியிருக்கிறது. படப்பிடிப்பில் சில தொய்வு ஏற்படவே இவ்வளவு நாள் காலதாமதமாகிவிட்டது.

    தோழா படத்திற்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் நாகர்ஜூனா. அடுத்ததாக ரஜினியுடன் கூலி படத்திலும் நடித்திருக்கிறார். இன்னொரு பக்கம் ராஷ்மிகாவும் மெல்ல மெல்ல கோலிவுட்டில் ராணியாக மாற பார்க்கிறார். அவருக்கு என இங்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் பாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள். அவருடைய எக்ஸ்பிரஷனுக்காகவே ஏராளமான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    முதன்முறையாக தனுஷும் ராஷ்மிகாவும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். படம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனத்தையே பெற்று வருகிறது. படத்தில் பிச்சைக்காரனாக தனுஷ் நடித்திருக்கிறார். இன்னொரு பக்கம் நாகர்ஜூனா மிகப்பெரிய தொழிலதிபராக நடித்திருக்கிறார். அவருடைய சூழ்ச்சி வலையில் சிக்கி எப்படி விடுபடுகிறாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.

    படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் நாகர்ஜூனா. படம் பார்த்தவர்கள் நாகர்ஜூனாவின் நடிப்பு பிரம்மாதம் என கூறி வருகிறார்கள். வழக்கம் போல் தனுஷும் நடிப்பில் பட்டையை கிளப்பிவிட்டார் என்றும் சொல்லி வருகிறார்கள். எந்தவொரு பெரிய படம் ரிலீஸானாலும் புளூ சட்டை மாறன் அந்தப் படத்தை பற்றி என்ன கமெண்ட் அடிக்கிறார் என்பதுதான் பல பேரின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

    அந்த வகையில் குபேரா படத்தையும் கிண்டல் செய்துபோஸ்டரை வெளியிட்டிருக்கிறார் புளூசட்டை மாறன். குபேரா படத்தின் வின்டேஜ் வெர்ஷன் இதுதான் என முத்து படத்தில் அப்பா ரஜினி ஒரு அழுக்கு டிரஸுடன் தலை முழுவதும் முடியுடன் வந்து சன்னியாசி மாதிரி வருவார்.இதுதான் குபேராவின் வின்டேஜ் வெர்ஷன் என பதிவிட்டிருக்கிறார்.

  • விஜய் அந்த விஷயத்துல உஷாரா ஆகிட்டாரு… தனுஷ் எப்படி கோட்டை விட்டாரு?

    தனுஷ் சமீபத்தில் குபேர டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஒரு செங்கலைக் கூட பிடுங்க முடியாதுன்னு சொன்னார். அதுக்கு என்ன அர்த்தம்? அந்த செங்கலை யார் உருவுனதுன்னு பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சொல்கிறார். என்னன்னு பாருங்க.

    தனுஷ் ஒரு செங்கலைக் கூட உருவ முடியாதுன்னு பேசினார். அதுக்கு அர்த்தம் என்னன்னா என்னை வந்து கீழே இழுத்துற முடியாது. நான் மேல் நோக்கிப் போய்க்கிட்டே இருப்பேன். என்னோட தன்னம்பிக்கை அப்படியானதுன்னு சொல்ல வர்றாரு. என்னோட ரசிகர்கள் தீப்பந்தமா வந்து எனக்கு வழி காட்டுறாங்க. கண்ணுக்குத் தெரியாத கரம் வந்து என்னைக் கைபிடிச்சிக் கூட்டிட்டுப் போகுதுன்னு எல்லாம் சொன்னாரு. ஆனா செங்கலை உருவுனது யாருங்கற கேள்விதான் பயங்கரமா இருக்கு.

    செங்கலை உருவுறதுக்கு முயற்சி பண்ணி இருந்தா தானே அந்த வார்த்தையைப் பயன்படுத்திருக்க முடியும்? அந்த செங்கலை உருவுனதுதான் இவங்க எல்லாம்னு நயன்தாரா, சிவகார்த்திகேயன், சுசித்ராவை எல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

    தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைந்து குபேரா என்ற படத்தில் நடித்தார். இதோட நீளம்தான் பெரிசா இருந்தது. நிறைய விஷயங்களை இதுல சொல்றாங்க. ஒரு ஹீரோ தொடர்ந்து தோத்துக்கிட்டு இருக்குறதை விரும்ப மாட்டோம். முக்கியமா தமிழ் சினிமா ஹீரோ ஜெயிக்கணும். இன்டர்வலுக்குப் பிறகாவது அடிச்சி நொறுக்குனா தான் நாம ரசிப்போம்.

    ஆனா குபேரா படம் அப்படி அமையல. பிற மாநில இயக்குனர்களைப் பார்த்து அஞ்சக்கூடிய சூழலை சேகர் கம்முலா உருவாக்கி விட்டார். கமல் வித விதமா நடிச்சி ஒரு ஃபார்முலாவை உருவாக்கிட்டாரு. அவர் சப்பாணியா நடிச்சாலும் ஏத்துக்க முடியும். சகலகலா வல்லவனா நடிச்சாலும் ஏத்துக்க முடியும். நடிப்பைத் தாண்டி ஒரு ஹீரோயிசம் இங்கே இருக்கணும். நடிப்பு என்பது அழுது புளியறது மட்டுமல்ல. தெலுங்கு இயக்குனருக்கு தமிழர்களின் ரசனை எப்படி புரியாமப்போச்சுன்னு தெரியல. உண்மையிலேயே தனுஷின் செங்கலை உருவுனது சேகர் கம்முலா தான்.

    வாரிசு படத்தை வம்சிங்கற தெலுங்கு இயக்குனர் எடுத்தாரு. ஆனா படம் அவரு நினைச்ச மாதிரி இல்லை. டிவி சீரியல் மாதிரி இருக்குன்னு படத்துலயே விஜய் சொல்வாரு. அதுக்கு அப்புறம் கோபிசந்த் என்ற தெலுங்கு இயக்குனரை வைத்துப் படம் எடுக்கச் சொன்னாங்க. விஜய் உஷாராகி தமிழ் பட இயக்குனர்களை வைத்தே எடுத்துக்குறேன்னு சொல்லிட்டாராம். அந்த வகையில தனுஷ் ஏன் கோட்டை விட்டாருன்னு தெரியல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • ஒரு செங்கல கூட உருவ முடியாதுனு சொன்னீங்க தனுஷ்! மொத்தத்தையும் உருவிட்டாரே நாகர்ஜூனா

    தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் குபேரா. தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா ,ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் குபேரா.. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் படம் உருவானது. அதன் பிறகு கன்னடம் மலையாளம் ஹிந்தி என மூன்று மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

    சமீபகாலமாக தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தது. அதனால் அவருக்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்பட்ட நிலையில் பல விருதுகளை அள்ளி குவித்த சேகர் கம்முலா இயக்குனருடன் அவர் இணைகிறார் என்று தெரிந்ததும் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். அவர் நடித்த வாத்தி, நானே வருவேன் ராயன் போன்ற திரைப்படங்கள் எல்லாம் ஓரளவு வரவேற்பை பெற்றது.

    கடைசியாக அவர் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும் மோசமான தோல்வியை தழுவியது. அதனால் கண்டிப்பாக ஒரு வெற்றியை கொடுத்து ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தனுஷ் சேகர் கம்முலா உடன் இணைந்தார். ஏற்கனவே வாத்தி என்ற நேரடி தெலுங்கு படத்திலும் நடித்திருந்தார் தனுஷ். இரண்டாவதாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கும் திரைப்படம் தான் குபேரா.

    ஆனால் இந்த படமும் கலவையான விமர்சனத்தை தான் பெற்று வருகிறது. மோசமான திரைக்கதை இரண்டாம் பாதி மிகவும் ஸ்லோவாக இருக்கிறது என பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தனுஷின் நடிப்புதான் படத்தை ஓரளவுக்கு காப்பாற்றி இருப்பதாகவும் கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சோசியல் மீடியாக்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது .

    படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு நாகார்ஜுனா பேசிய ஒரு கருத்து என்னவெனில் இது நாகார்ஜுனா படமோ தனுஷ் படமோ ராஷ்மிகா மந்தனாவின் படமோ கிடையாது. சேகர் கம்முலாவின் படம் என குறிப்பிட்டிருந்தார். ரிலீசுக்கு பின்பு இன்று அவர் பேசும் பொழுது இந்த படத்தில் ஹீரோவாக நான் கருதப்பட்டேன். தீபக் என்ற கேரக்டரை சுற்றியே தான் படம் நகருகிறது.

    kubera

    kubera

    ஆரம்பத்திலிருந்து படம் முடியும் வரை தீபக் கேரக்டரை மையப்படுத்தி தான் படம் சுற்றிக்கொண்டு வந்தது. அதனால் குபேரா படத்தின் ஹீரோ நான் என எனக்கு தோன்றியது என்று ஒரு பேட்டியில் பேசுகிறார் நாகர்ஜுனா. உடனே அந்த கிளிப்பிங்ஸை எடுத்து நம்மூர் ஆட்கள் அது எப்படி எல்லா கிரெடிட்சையும் அவரே எடுத்துக்கொள்ள முடியும். படத்தில் தனுஷின் ஆத்மார்த்தமான நடிப்பு அவருடைய பெர்பாமன்ஸ் எந்த அளவுக்கு படத்தை உயர்த்தியது என அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்கையில் நாகார்ஜுனா இப்படி பேசலாமா என அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

  • குப்புற கவுத்திய குபேரா!.. குட் பேட் அக்லி பக்கம் கூட நிக்கல!.. பிரபலம் படாருன்னு சொல்லிட்டாரே!..

    கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில் ஏமாற்றியதன் விளைவு தான் தனுஷின் குபேரா படத்தை பார்க்க ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டாமல் இருக்க காரணம் என திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டியளித்துள்ளார்.

    இந்த ஆண்டு வெளியான படங்கள் தொடர்ந்து பொங்கல் பண்டிகையில் இருந்தே சொதப்பி வந்தன. அஜித் குமாரின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் எல்லாம் வீண் முயற்சி ஆகிப்போனது. ஆனால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி படம் மட்டுமே தியேட்டர் ஓனர்களுக்கு இந்த ஆண்டு இதுவரை நல்ல வருமானத்தையும் லாபத்தையும் பெற்றுத் தந்தது எனக் கூறியுள்ளார்.

    சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்கியராஜ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் தமிழ் படமா? அல்லது தெலுங்கு படமா? என்கிற குழப்பமே அந்த படத்துக்கு பெரிதாக ஓபனிங் வராததற்கு காரணம் என்கிறார்.

    விக்ரம் திரைப்படம் வெளியான போது, மல்டி ஸ்டாரர் படங்களை ரசிகர்கள் விரும்புவதாக கூறிய திருப்பூர் சுப்பிரமணியம் தக் லைஃப் படத்தை பார்க்க ரசிகர்கள் ஏன் ஆர்வம் காட்டவில்லை என்றும் குபேரா படத்துக்கு கூட்டமே வராதது ஏன் என்கிற கேள்விக்கு, இந்தியா முழுவதும் உள்ள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் ஒன்றாக திரண்டு நடித்தாலும், கன்டென்ட் நல்லா இல்லை என்றால் படம் ஓடாது.

    லப்பர் பந்து, வாழை, டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து பெரிய நடிகர்கள் நடித்தால் தான் தமிழ் சினிமா செழிக்கும் எனக் கூறியுள்ளார்.

  • தெலுங்கு இயக்குனர்களுடன் இணைந்து பல்ப் வாங்கும் தமிழ் ஹீரோஸ்… லிஸ்ட்டில் இவருமா?

    Telugu: தெலுங்கில் பிசியாக இருக்கும் இயக்குனர்களுடன் இணைந்து தமிழ் நடிகர்கள் நடிக்கும் எல்லா படமும் சுமாராகவே இருக்கிறது. இந்த லிஸ்ட்டின் படங்கள் அடங்கிய தொகுப்புகள்.

    பொதுவாகவே தமிழ் படங்களுக்கு எல்லா மொழிகளிலுமே வரவேற்பு அதிகம். அந்த வகையில் தமிழ் ஹீரோக்களை மற்ற மொழி இயக்குனர்கள் அடிக்கடி தங்கள் படங்களில் புக் செய்வது வழக்கம் தான். ஆனால் தமிழின் ஹிட் அடித்த ஹீரோக்கள் கூட தெலுங்கு பக்கம் அடி வாங்குகின்றனர்.

    தமிழில் சூப்பர் படம் கொடுக்கும் நடிகர்கள் தெலுங்கில் நடிக்கும் போது மோசமான தோல்வியை தழுவுகின்றனர். அந்த வகையில் கார்த்தி மற்றும் நாகர்ஜூனா நடித்த திரைப்படம் தோழா. வம்சி படிப்பள்ளி இயக்கிய இப்படம் தெலுங்கில் சிறந்த படமாக ஹிட்டானாலும் தமிழில் சொற்ப வசூல் மட்டுமே குவித்தது.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம். தெலுங்கு இயக்குனரான அனுதீப் இயக்கிய இப்படம் தமிழில் பிரதானமாக வெளிவந்தாலும் வசூலில் பெரிய அடி வாங்கியது. 40 கோடி கூட வசூல் செய்யாமல் விமர்சன ரீதியாகவும் தோல்வியில் முடிந்தது.

    பிரபல நடிகர் விஜய் நடிப்பில் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவான வாரிசு திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்தாலும் அவரின் நேரடி தமிழ் இயக்குனர்களின் படங்கள் பெற்ற வசூலை பெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

    தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான திரைப்படம் வாத்தி. இப்படத்தின் மொத்த வசூலே 100 கோடி என்பதாக கூறப்படுகிறது. ஆனால் பொதுவாக தனுஷின் நேரடி தமிழ் படங்கள் இதை விட அதிகமான வசூலை குவிக்கும்.

    அந்த லிஸ்ட்டில் மீண்டும் நேரடி தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா தெலுங்கில் நல்ல வசூலை குவித்து வந்தாலும் தமிழில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால் தெலுங்கு இயக்குனர்களுடன் தமிழ் நடிகர்கள் கை கோர்க்கும் படங்கள் தோல்வி வரிசையையே பிடிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

  • தொடர்ந்து 3 படங்கள்!. ஹிட் பட இயக்குனர்களுடன் கைகோர்க்கும் தனுஷ்!.. பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?!…

    Actor dhanush: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ், அண்ணன் செல்வராகவனிடம் சினிமா கற்றவர் இவர். துவக்கத்திலேயே 3 தொடர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். பல இயக்குனர்களின் படங்களிலும் நடித்து தன்னை மெருக்கேற்றிக்கொண்டார். குறிப்பாக வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்த படங்கள் தனுஷு ஒரு முழு நடிகராக மாற்றியது.

    மேலும், தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்து தனுஷ் ஒரு பேன் இண்டியா நடிகராக மாறியிருக்கிறார். இதுவரை மூன்று நேரடியான ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். இந்திய சினிமாவில் தனுஷ் ஒரு முக்கிய நடிகராக மாறியிருக்கிறார்.

    சமீபகாலமாகவே தனுஷின் படங்கள் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. ஒருபக்கம், இயக்குனராகவும் தனுஷ் கலக்கி வருகிறார். அவர் இயக்கி நடித்த ராயன் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், அவரின் சகோதரி மகன் பவிஷை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கினார்.

    அந்த படத்திற்கு பின் இட்லி கடை என்கிற படத்தை துவங்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்றவேலைகள் நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் நடிகராகவும் பிஸியாக இருக்கிறார் தனுஷ். சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான குபேரா படம் 100 கோடி வசூலை பெற்றிருக்கிறது. இந்த படத்திற்காக தனுஷுக்கு தேசிய விருது கிடைக்கும் எனவும் சொல்கிறார்கள்.

    இந்நிலையில், வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருக்கிறார். அடுத்து, மாரி செல்வராஜின் இயக்கதில் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை 2 என கமிட் ஆகியுள்ளார். இந்த 3 படங்களின் பட்ஜெட்டும் 350 கோடியை தாண்டும் என்கிறார்கள்.

  • கண்ணப்பா படத்துக்கு பெரிய வில்லனே தனுஷ் தானாம்!.. குபேரா வெற்றியால் வசூலில் டல் அடிக்குதாம்!..

    விஷ்ணு மஞ்சு சொந்த காசு போட்டு பிரபாஸ் போல பான் இந்தியா ஸ்டாராக மாற எடுத்த படம் தான் கண்ணப்பா. இந்த படத்தில் அக்‌ஷய் குமார், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், சரத்குமார், அப்பா மோகன்பாபு என அனைவரையும் கூட்டு சேர்ந்துக் கொண்டு நடித்திருக்கிறார்.

    படத்தின் முதல் பாதி கங்குவா படம் போலவும் 2வது பாதி தான் பக்திப் படமாக மாறுகிறது. ஆனாலும், படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து வருவதை பார்த்து படக்குழுவே ஷாக் ஆகிவிட்டனர்.

    முன்னதாக எச்சரிக்கை எல்லாம் விடுத்தது எல்லாம் தேவையற்ற வேலை என படக்குழுவே நினைத்திருப்பார்கள். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு தெலுங்கு மற்றும் இந்தியில் பெரிதாக தேறவில்லையாம்.

    தமிழ்நாட்டில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கண்ணப்பா படத்துக்கான ஷோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விஜய் ஆண்டனியின் மார்கன், விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் என பல படங்கள் வரிசை கட்டியுள்ள நிலையில், இங்கேயும் வசூல் வரவில்லையாம்.

    தெலுங்கில் எப்படியிருந்தாலும் படத்தை ஓட்டிவிடலாம் என நினைத்த விஷ்ணு மஞ்சுவுக்கு பெரிய வில்லனாக மாறியிருப்பதே தனுஷின் குபேரா படம் தான் என்கின்றனர். முதல் நாளில் 20 கோடிக்கும் மேல் வசூல் வரும் என எதிர்பார்த்த படக்குழுவுக்கு 9 கோடி தான் வந்தது வயித்துல புளியை கரைத்திருக்கிறது.

    சனிக்கிழமை இதுவரை 3.5 கோடி வரை தான் வசூல் வந்திருக்கிறதாக கூறப்படுகிறது. நைட் ஷோவுடன் சேர்த்தாலும் 5 கோடி ரூபாய் வசூலை தாண்டுவது சிரமம் தான் என்கின்றனர். 200 கோடி பட்ஜெட் என்றெல்லாம் சொல்றாங்க. முதல் நாளே 40 கோடிக்கு மேல் வசூல் செய்தாலோ, அல்லது 2வது நாளில் இருந்து வசூல் அதிகரித்தாலோ தான் லாபம் வரும் என்கின்றனர். சன் டே வசூல் அதிகரித்தால் மட்டுமே கண்ணப்பாவை காப்பாற்ற முடியும் என்கின்றனர். அந்த சிவபெருமான் தான் அருள் புரிய வேண்டும்.

  • தனுஷின் குபேரா டீசர் எப்படி இருக்கு?.. நாகார்ஜுனாவை அடிக்குற சீன் செம!.. சரஸ்வதி சபதமா இருக்குமோ?

    சரஸ்வதி சபதம் படத்தில் கல்வியா? செல்வமா? வீரமா? என நாரதர் பாட்டுப் பாட ஊமையான சிவாஜி பாட்டுப் பாடும் புலவராக மாறிவிடுவார். கோழையான ஜெமினி கணேசன் வீரமான தளபதியாக மாறிவிடுவார். பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த கே.ஆர். விஜயா கழுத்தில் யானை மாலை போட அவர் ராணியாகி விடுவார்.

    அதுபோல பிச்சைக்காரனாக இருக்கும் தனுஷை செல்வந்தனாக நாகார்ஜுனா மாற்ற அதன் பின்னர் என்ன என்ன பிரச்னை எல்லாம் நடக்கிறது என்கிற கதையில் தான் குபேரா படம் உருவாகி உள்ளது டீசரை பார்த்தாலே தெரிகிறது.

    சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் குபேரா திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 20ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியாகிறது.

    இன்று வெளியான டீசரில் நாகார்ஜுனாவின் காட்சிகள் எல்லாம் மிரட்டலாக இருக்க, அதன் பின்னர் தனுஷை பிச்சைக்காரனாக காட்டும் இடங்களிலும், அவருக்கு கோட் மாட்டி விட்டு நாகார்ஜுனா பெரிய சிக்கலில் கோர்த்து விடப் பார்ப்பதும், ஒரு கட்டத்தில் நாகார்ஜுனாவையே தனுஷ் அடிக்க பாயும் காட்சிகள் என டீசர் முழுக்கவே எமோஷனல் காட்சிகள் பாடல்களின் வழியே கனெக்ட் செய்யப்பட்டு இருப்பது சூப்பர்.

    இந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ஃபிளாப் ஆன நிலையில், குபேரா படம் தனுஷுக்கு பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரி ஹர வீர மல்லு படம் வெளியாகும் நிலையில், இந்த படம் தள்ளிப் போகும் என கிசுகிசுக்கள் கிளம்பினாலும் படக்குழு ஜூன் 20 படத்தை வெளியிட உறுதியாக உள்ளனர்.

  • அஜித்தால் தனுசுக்கு ஏற்பட்ட சிக்கல்.. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடின்ற மாதிரில்ல இருக்கு!

    நடிகர் தனுஷ்: தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நடிகர்களை ஒருவராக வலம் வருகின்றார் நடிகர் தனுஷ். தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். ஒரு பக்கம் மற்ற இயக்குனர்களின் படங்கள், மற்றொருபுறம் தனது இயக்கம் என இரண்டிலும் சரிவர கவனம் செலுத்தி வருகின்றார். இவர் கடைசியாக ராயன் என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார்.

    இந்த திரைப்படத்தை முடித்த கையோடு நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இட்லி கடை என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார்.

    இந்த படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருக்கின்றது. இதற்கிடையில் நடிகர் தனுஷ் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இப்படி அடுத்தடுத்த திரைப்படங்கள் இந்த ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பிலும் இயக்கத்திலும் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷுக்கு ஒரு புதிய பிரச்சனை வந்திருக்கின்றது. அதுவும் நடிகர் அஜித்தின் திரைப்படங்களால் தான்.

    நடிகர் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறி வந்தார்கள். ஆனால் திடீரென்று படம் பொங்கல் ரேசிலிருந்து விலகியது. தற்போது விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி மாதம் கடைசியில் அல்லது பிப்ரவரி மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

    ஒருவேளை விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியானால் அது தனுஷுக்கு சிக்கலாக அமையும். ஏனென்றால் அவர் இயங்கி இருக்கும் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் திரைப்படம் பிப்ரவரி மாதம் தான் வெளியாகின்றது. அது மட்டும் இல்லாமல் குபேரா திரைப்படத்தையும் பிப்ரவரி மாதம் தான் வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக ஒரு புறம் தகவல் வெளியாகி இருக்கின்றது.

    விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியானால் தனுஷின் குபேரா திரைப்படம் அடி வாங்கும். இதனால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படும் என்று கூறப்படுகின்றது. இப்படி ஒரு புறம் இருக்க தனுஷ் தற்போது நடித்து வரும் இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் மாதம் அதாவது தமிழ் புத்தாண்டை குறிவைத்து ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது.

    இதற்கிடையில் ஏப்ரல் மாதம் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்துடன் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியானால் நிச்சயம் இட்லி கடை திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படும். இதனால் மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கின்றார் நடிகர் தனுஷ். விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்ற இரண்டு திரைப்படத்தின் ரிலீஸ் என்பதை பொருத்து தனது படங்களின் ரிலீஸ் தேதியை அவர் மாற்றலாம் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.

  • முண்டா பனியனில் முழுசா காட்டி மூடு ஏத்தும் ராஷ்மிகா!.. அடிக்கடி இப்படி தாராளம் காட்டுங்க!..

    நடிகை ராஷ்மிகா மந்தனா செல்ஃபி எடுப்பதில் ரோம்பவே ஷை டைப்பாம். அப்படி சொல்லிவிட்டு அவர் வெளியிட்டுள்ள செல்ஃபி போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி போனது தான் மிச்சம். அந்தளவுக்கு முண்டா பனியன் அணிந்து கொண்டு கவர்ச்சி செல்ஃபியை வெளியிட்டுள்ளார்.

    கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் சமீப காலமாக பிசியான நடிகையாக மாறிவிட்டார். நேஷனல் கிரஷ் என ராஷ்மிகா மந்தனாவை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தென்னிந்திய நடிகைகளை பின்னுக்குத்தள்ளும் விதமாக 43 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயராக கொண்டுள்ளார்.

    கடந்த ஆண்டு வெளியான அனிமல் திரைப்படம் இந்தியில் ராஷ்மிகா மந்தனாவுக்கு அடுத்ததாக சல்மான் கான் ஜோடியாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்கந்தர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

    ஏற்கனவே தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தை தொடர்ந்து புஷ்பா 2 படத்திலும் ஸ்ரீவள்ளியாக நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடனமாடிய சூடான தீ பாடல் சமீபத்தில் வெளியாகி 100 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்தது. ஸ்ரேயா கோஷல் அந்த பாடலை பாடியிருந்தார்.

    சமீபத்தில் சேகர் கமூலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா நடித்து வரும் குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனா பணத்திற்கு எந்தளவுக்கு ஆசைப்படுபவர் என்பதை காட்டும் விதமாக ஒரு வீடியோ வெளியானது.

    இப்படி இந்திய சினிமாவில் அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா முண்டா பனியனை அணிந்துக் கொண்டு செம க்ளோஸ் அப்பில் செல்ஃபி புள்ளையாக மாறி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

    அடிக்கடி இப்படி ரசிகர்களுக்கு போட்டோக்களை கூச்சமில்லாமல் வெளியிடுங்க தலைவி என ராஷ்மிகா மந்தனா ரசிகர்கள் நேயர் விருப்பத்தை வைத்து வருகின்றனர்.