Tag: latestcinemanews

  • அப்படி மட்டும் நடிக்காத.. நடிகருக்கு அட்வைஸ் செஞ்ச விஜய்சேதுபதி! கடைசில அவரே வச்ச ஆப்பு

    தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர். தற்போது அவருடைய நடிப்பில் தலைவன் தலைவி திரைப்படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. அந்த படம் ஜூலை 25ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக சமீபத்தில் பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். படத்தின் டீசர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தின் தலைப்பு அழகான தூய தமிழில் இருப்பதோடு மட்டுமல்லாமல் படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களின் பெயர்களையும் தமிழில் தான் வைத்திருக்கிறார்கள்.

    விஜய் சேதுபதிக்கு இந்த படத்தில் ஆகாச வீரன் என்றும் அவருக்கு ஜோடியாக நடித்த நித்யா மேனனுக்கு பேரரசி என்றும் கேரக்டர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கும் விஜய் சேதுபதி அடுத்து அவருடைய மகனையும் இப்போது களத்தில் இறக்கி இருக்கிறார். அவருடைய மகன் நடிப்பில் பீனிக்ஸ் என்ற திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் விஜய் சேதுபதியை பற்றி பிரபல நடிகர் டேவிட் சாலமன் ராஜா ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார்.

    இவர் பல சீரியல்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்தவர் .அதில் மிகவும் பிரபலமானார் .அந்த ஒரு பிரபலத்தால் வெள்ளி திரையிலும் நடிக்க வந்தார் டேவிட். பெரும்பாலான படங்களில் இவரை போலீசாகத்தான் நாம் பார்த்திருப்போம் .முதலில் விஜய் சேதுபதி சங்கு தலைவன் என்ற படத்தில் நடிக்க இருந்தாராம் .அந்தப் படத்தில் இவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் படம் அப்படியே டிராப் ஆகிவிட்டதாம்.

    அதன் பிறகு கிருமி என்ற படத்தில் டேவிட் நடித்திருக்கிறார். அதனை அடுத்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தில் நடிப்பதற்கும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிருமி படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் டேவிட். அதை அறிந்த விஜய் சேதுபதி ‘போலீஸ் கேரக்டர் கொடுத்தால் இனிமேல் நடிக்காத, அப்புறம் கடைசி வரைக்கும் போலீசாகவே தான் நடிப்பாய்’ என ஒரு நல்ல அட்வைஸை கொடுத்தாராம்.

    david

    david

    அதன் பிறகு தான் ஆரஞ்சு மிட்டாய் படத்தில் விஜய் சேதுபதி அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் .ஆனால் அந்தப் படத்தில் ஒரு ஜெயிலர் கதாபாத்திரம். அதில் யாரை நடிக்க வைக்கலாம் என தேடிக்கொண்டிருக்க விஜய் சேதுபதி தான் டேவிட் பெயரை கூறியிருக்கிறார். உடனே டேவிட் ‘அவர்தான் என்னை போலீஸ் கேரக்டரில் நடிக்க வேண்டாம் என சொன்னார். திரும்பவும் ஏன் போலீஸ் கதாபாத்திரத்திற்கு என்னை அழைத்தார் ’ என அந்த படத்தின் இயக்குனரிடம் கேட்டாராம். அதற்கு அந்த இயக்குனர் நீ போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை போலீசாகவே இருக்கிறாய். அதனால் தான் அவர் உன்னை ரெகமெண்ட் செய்திருக்கிறார் என அந்த இயக்குனர் கூறினாராம்.

  • தப்பா எழுதுனாங்க.. உடனே விஜய் பண்ண விஷயம்! வனிதாவுக்காக இப்படிலாமா?

    விஜயும் வனிதா விஜயகுமாரும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். விஜயை பற்றி பல விஷயங்களை வனிதா விஜயகுமார் பேட்டிகளில் கூறியிருக்கிறார். இருவரும் சேர்ந்து சந்திரலேகா என்ற படத்தில் நடித்திருந்தனர். அதில் விஜய்க்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்திருப்பார். அந்த படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி லவ் எல்லாமே பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.

    குறிப்பாக அந்த படத்தில் அமைந்த அல்லாஹ் உன் ஆணைப்படி பாடல் இன்றுவரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலாக இருக்கிறது. ஆனால் அதன் பிறகு விஜயுடன் சேர்ந்து வனிதா விஜயகுமார் நடிக்கவே இல்லை என்பதை குறிப்பிடத்தக்கது .அவருடைய ரூட் வேறு மாதிரியாக சென்றது. அது அவரை ஹீரோயினாக இந்த சினிமா உலகில் நிலைத்திருக்க விடவில்லை .

    இந்த நிலையில் விஜய்யை பற்றி ஒரு சுவாரசியமான தகவலை பேட்டியில் கூறியிருக்கிறார் வனிதா விஜயகுமார். சந்திரலேகா படத்தில் நடிக்கும் போதே ராஜ்கிரணுடன் வனிதா விஜயகுமார் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது வனிதா விஜயகுமாருக்கு 15 வயது தான் இருக்குமாம். ராஜ்கிரணுக்கு 40 வயதுக்கு மேல் இருக்குமாம். ஆனால் இருவரையும் சேர்த்து வைத்து அப்போதைய பத்திரிகைகளில் கிசுகிசுக்களாக வெளியாகியிருக்கிறது.

    அதைப் பார்த்து வனிதா விஜயகுமார் சந்திரலேகா படப்பிடிப்பில் மிகவும் அப்செட்டில் உட்கார்ந்து இருந்தாராம். அதுவும் அழுது கொண்டே இருந்தாராம். அருகில் விஜய் அதை பார்த்துக் கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் இப்போ உனக்கு என்னதான் பிரச்சனை என்று கேட்டாராம். அதற்கு வனிதாவை விஜயக்குமார் ஒன்றும் இல்லை என சொல்ல இப்போ சொல்ல போறியா இல்லையா என கேட்டிருக்கிறார்.

    அதன் பிறகு தான் வனிதா விஜயகுமார் எதற்காக அழுதேன் என்பதை தெரிவித்து இருக்கிறார் .உடனே விஜய் உன்னை பற்றி எழுதவில்லை என்றால் தான் நீ இந்த சினிமாவில் இல்லை என்று அர்த்தம். உன்னைப் பற்றி எழுதுகிறார்கள் என்றால் நீ இன்னும் இந்த சினிமாவில் இருக்கிறாய் என்ற அர்த்தம். எழுத எழுத தான் நீ பாப்புலர் ஆகி கொண்டே இருப்பாய். அதனால் எந்த ஒரு விமர்சனத்திற்காகவும் நீ கவலைப்படாதே.

    vaintha

    vaintha

    அடுத்தடுத்த வேலைகளை பார்த்துக் கொண்டே இரு என கூறினாராம் விஜய். இதை அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் வனிதா விஜயகுமார். இப்போது வனிதா விஜயகுமார் ஹீரோயின் ஆக மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் என்ற படத்தில் ராபர்ட்டுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்கியதும் அவர்தான். தயாரித்தது அவருடைய மகள் ஜோவிகா விஜயகுமார்.

  • அவர்தான் ஹீரோ.. அவர் இல்லாம எப்படி? கூலி இசை வெளியீட்டு விழாவில் இப்படி ஒரு சிக்கலா?

    லோகேஷ் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகக்கூடிய திரைப்படம் கூலி. படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கின்றது. படத்தில் ரஜினியுடன் இணைந்து அமீர் கான், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா என எண்ணற்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர், நீண்ட நாளுக்கு பிறகு ரஜினியும் சத்யராஜும் இந்த படத்தில் இணைந்திருப்பது ஒரு கூடுதல் ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    நாகர்ஜுனா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. சுருதிஹாசனுக்கு ஒரு வெயிட்டான கதாபாத்திரம் என்றும் சொல்கிறார்கள். ஆக மொத்தம் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. படத்திற்கு இசை அனிருத். வழக்கம் போல ரஜினியின் படம் என்றால் அவர் மியூசிக்கில் தூள் கிளப்பி விடுவார். அதுமட்டுமல்ல பிஜிஎம் ரஜினி படத்திற்கு என ஸ்பெஷல் ஆகவே இருக்கும்.

    அப்படித்தான் இந்த படத்தில் அமைந்த சிக்கிடு பாடலும் ஒட்டுமொத்த ரசிகர்களிடம் நல்ல ஒரு ரெஸ்பான்ஸ் பெற்றிருக்கிறது. அந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்து கொடுத்துள்ளார். இது ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி இருக்கிறது. அதனால் படத்தை எதிர்பார்த்து ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய ஒரு தகவல் கிடைத்துள்ளது .

    கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவை இந்த மாதம் 26 அல்லது 27 ஆகிய தேதிகளில் நேரு ஸ்டேடியத்தில் நடத்தலாம் என திட்டமிட்டு இருக்கிறார்களாம் .ஆனால் 26 ஆம் தேதி தான் அனிருத்தின் இசை கச்சேரி சென்னையில் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. உலகளாவிய இசை கச்சேரியை நடத்தி விட்டு அதன் நிறைவு பகுதியை சென்னையில் நடத்த அனிருத் திட்டமிட்டு இருக்கிறாராம்.

    அதனால் அவர் இல்லாமல் எப்படி கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவார்கள் என்ற வகையிலும் ஒரு பக்கம் ஆலோசித்து வருகிறார்கள். அதனால் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கலாம் என சொல்லப்படுகிறது. எப்படியும் ஒரு படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தின் ரிலீஸ் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகத்தான் இசை வெளியீட்டு விழா நடத்துவது வழக்கம். அப்படித்தான் இந்த படத்திற்கும் இருக்கும் என சொல்லப்படுகிறது.

  • சிவாஜி புரடெக்‌ஷனில் அஜித்தா? ஏற்கனவே பட்டது போதாதா? கண்டிசன் பேரில் நடிக்கும் தல

    நேற்று சமூக வலைதளங்களில் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படம் பற்றிய செய்தி தான் வைரலானது. அதாவது அந்த படத்திற்காக அஜித் 180 கோடி சம்பளம் கேட்பதாகவும் அதை கொடுப்பதற்கு எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் முன்வரவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே தான் அந்தப் படத்தை ஏற்கனவே தயாரிக்க இருந்த ஐசரி கணேஷும் அந்த முடிவிலிருந்து பின்வாங்கி விட்டதாகவும் சொல்லப்பட்டது.

    ஆனால் உண்மையில் அஜித்தின் சம்பளம் மட்டுமே அதற்கு காரணம் இல்லை என இன்று தகவல் கிடைத்துள்ளது. அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் அஜித் படத்தை தயாரிக்க முன் வராததற்கு காரணம் அஜித் சில கண்டிஷன்கள் போட்டிருக்கிறாராம். அந்த கண்டிஷனாலதான் தயாரிப்பு நிறுவனங்கள் அவருடைய படத்தை தயாரிக்க முன்வர தயங்குகிறார்கள் என தெரியவந்துள்ளது.

    அதில் முதல் கண்டிஷன் அஜித் தனக்கு முன்பணமாக பெரும் தொகையை எதிர்பார்க்கிறாராம். வழக்கமாக 50 சதவீதம் அட்வான்ஸ் தொகையை பெற்றுக்கொண்டு மீதி 50 சதவீதம் தொகையை மாதம் 5 கோடி என்ற அளவில் அவர் சம்பளமாக பெற்றுக்கொள்வார். ஆனால் இந்தப் படத்தில் ஒரு பெரும் தொகையை முன்பணமாக கேட்கிறாராம். மீதி தொகையை போஸ்ட் டேட்டட் செக்காக அதை முன்னாடியே கொடுத்து விடும்படி கேட்கிறாராம்.

    குறிப்பிட்ட தேதியில் அந்த செக்கை ஹானர் பண்ண முடியவில்லை என்றால் அது கிரிமினல் வழக்காக முடிந்துவிடும். அந்த ஒரு பயத்தினால் கூட தயாரிப்பு நிறுவனங்கள் படத்தை தயாரிக்க முன் வருவதற்கு தயங்குவதாக சொல்கிறார்கள். அடுத்த கண்டிஷன் என்னவெனில் மொத்த பணத்தையும் ஷூட்டிங் முடிவதற்குள் கொடுத்து விட வேண்டுமாம் .சில பேர் ஷூட்டிங் சமயத்தில் பாதி பணத்தை வாங்கிக் கொண்டு டப்பிங் முடிந்த பிறகு தான் மீதி பணத்தையும் வாங்குவார்கள்.

    ஆனால் அஜித் மொத்த பணத்தையும் ஷூட்டிங் முடிந்ததும் கொடுத்து விட வேண்டும் என கேட்கிறாராம். இந்த கண்டிஷன்களால் தான் தயாரிப்பு நிறுவனங்கள் தயங்குவதாக தெரிகிறது. இதில் ஆதிக்கும் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு வேளை எந்த தயாரிப்பு நிறுவனங்களும் இந்த படத்தை தயாரிக்க முன்வரவில்லை என்றால் அது அஜித் போன்ற பெரிய நடிகருக்கு தான் அவமானமாக இருக்கும்.

    இதை மனதில் வைத்துக் கொண்ட ஆதிக் தனது மாமனார் பிரபுவின் சிவாஜி ப்ரொடக்ஷன் மூலமாக இந்த படத்தை தயாரிக்கலாமா என யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அஜித்தை வைத்து சிவாஜி ஃபிலிம்ஸ் அசல் என்ற படத்தை எடுத்தார்கள். ஆனால் அந்தப் படம் அவர்களுக்கு எதிர்பார்த்த வசூலை பெற்று தரவில்லை .இருந்தாலும் ஆதிக் இதைப்பற்றி தனது மாமனார் வீட்டில் பேசி படத்தை தயாரிக்க அனுமதி வாங்குவார் என கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகின்றது.

  • சினிமாவில் நான் மதிக்கிற ரெண்டே நடிகர்! அப்போ ரஜினி? இப்படி சொல்லிட்டாரே சிவக்குமார்?

    தமிழ் சினிமாவில் சிவகுமாருக்கு என ஒரு முக்கிய பங்களிப்பு இருக்கிறது. பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார் .நடிகராக ஒரு பக்கம் இருந்தாலும் நல்ல ஓவியராகவும் சிவகுமார் அறியப்படுகிறார். காக்கும் கரங்கள் திரைப்படத்தின் மூலம் 1965 ஆம் ஆண்டு தனது திரை வாழ்க்கையை தொடங்கிய சிவக்குமார் அதிலிருந்து ஒரு பன்முக நடிகராக மாறினார்.

    வித விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருடைய நடிப்பில் முக்கிய படமாக பார்க்கப்பட்டது ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி போன்ற திரைப்படங்கள். ஆரம்பத்தில் இவர் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கி படிப்படியாக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1970களில் தான் அவருடைய வெற்றி பயணம் தொடங்கியது .

    நல்ல குணசித்திர நடிகராகவும் அறியப்படுகிறார் சிவக்குமார். காக்கும் கரங்கள், கந்தன் கருணை, உயர்ந்த மனிதன் ,ரோசாப்பூ ரவிக்கைக்காரி ,சிந்து பைரவி போன்ற திரைப்படங்கள் அவருடைய திரை வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர் தனது சினிமா அனுபவங்களையும் வாழ்க்கையில் எதிர் நோக்கிய அனுபவங்களையும் ஒரு டைரியில் எழுதி வைத்துள்ளார் .

    மேடை நாடகங்களிலும் நடித்துள்ள சிவக்குமார் இப்போது பல மேடைகளில் தனது பேச்சாற்றலால் அனைவருக்கும் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கூறி வருகிறார் .சிறந்த மேடை பேச்சாளரும் கூட. இந்த நிலையில் ரஜினி கமல் பற்றி ஒரு பேட்டியில் சிவக்குமார் கூறியது வைரலாகி வருகின்றது. சிவகுமாரும் கமலும் நெருங்கிய நண்பர்களாம். ஒரு சமயம் கமல் சிவக்குமாரிடம் இனிமேல் ரசிகர் மன்றம் எல்லாம் வேண்டாம் என சொல்லி இருக்கிறார்.

    kamal

    kamal

    ஆனால் அவர் அந்த சமயமே ஒரு வளர்த்து வரும் நடிகராக இருந்ததனால் அதை தடுக்க முடியவில்லை .நான் இந்த திரையுலகில் மதிக்கிற இரண்டே நடிகர்கள் சிவாஜியும் கமலும் தான். அவங்க போட்ட உழைப்பு அவங்க காட்டிய வெரைட்டி இங்கு யாருமே பண்ணவில்லை .ரஜினியும் எம்ஜிஆரும் இருக்கிறார்கள் .அவர்கள் வேறு .அவர்கள் இரண்டு பேரும் பாப்புலர் ஹீரோக்கள். அதனால் மக்கள் அவர்களை கொண்டாடினார்கள். அதற்காக அவர்களை நான் கையெடுத்து கும்பிடுகிறேன். ஆனால் நடிப்பு துறையில் இவர்கள் காட்டிய வெரைட்டி வேறு யாரும் காட்டியதில்லை என கமலையும் சிவாஜியையும் பற்றி சிவக்குமார் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

  • என்னது 20 பாடலா? ‘பறந்து போ’ படத்தின் சீக்ரெட்டை அம்பலப்படுத்திய மாரி செல்வராஜ்

    இயக்குனர் ராமின் உதவியாளர்தான் மாரிசெல்வராஜ். அதனால் தன் குருவின் பறந்து போ படத்தை நாம் புரோமோட் செய்யாமல் வேறு யார் செய்வார் என்பதற்காக அந்தப் படத்தை ஏற்கெனவே பார்த்துவிட்டு மாரிசெல்வராஜ் அவருடைய அனுபவங்களை கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்தப் படத்தை பார்த்தவர்கள் சிலர் மாரிசெல்வராஜிடம் அவரவர் அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்களாம். அதையும் கூறியிருக்கிறார். இதோ அவர் கூறியது:

    பறந்து போ படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சொன்னது என்னவெனில் இயக்குனர் ராமை பற்றி ஏற்கனவே தீர்மானித்து படம் பார்க்க சில பேர் போய் இருப்பார்கள். ஏனெனில் கற்றது தமிழ் ,தரமணி, பேரன்பு போன்ற ராம் இயக்கிய திரைப்படங்கள் வலியுடன் எமோஷனலை வெளிப்படுத்திய படங்களாக இருந்திருக்கும் .பறந்து போ படத்தை பார்க்கும் போது பெரிய சர்ப்ரைஸ் ஆக இருந்தது என படம் பார்த்தவர்கள் சொன்னார்கள்.

    ராமிடமிருந்து இவ்வளவு ஈஸியான ஒரு எதார்த்தமான வாழ்க்கையை வெளிப்படுத்தும் படத்தை இயக்குவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இயக்குனர் ராமை பொருத்தவரைக்கும் அவரிடம் பேச வேண்டும் என்றால் நிறைய நாம் தெரிந்து இருக்க வேண்டும். படங்களை பற்றி பேச வேண்டும் என்றால் ஏற்கனவே நாம் நிறைய படங்களை பற்றி தெரிந்திருக்க வேண்டும். அப்படி எல்லா விஷயங்களும் அறிந்தவர் தான் .இப்படி சொன்னவர்கள் அனைவருமே வாழ்க்கையை மிகவும் எளிமையாக கொண்டாட்டமாக உறவுகளை அன்பை இவ்வளவு எளிமையாக ராம் படத்தில் சொன்னார் என்பதை பார்க்கவே எங்களுக்கு சர்ப்ரைஸ் ஆக இருந்தது என்று படம் பார்த்தவர்கள் கூறினார்கள் .

    அந்த அளவுக்கு படம் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ரொம்ப நாள் கழித்து மனசு நிறைவாக இருக்கிறது .ராம் சந்தோஷமாக எடுத்த படமா என்று அனைவருமே என்னிடம் கேட்டார்கள். இந்த படத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் அப்படியே அலைய விட்டிருக்கிறார் .அதுவும் சந்தோஷமாக அலைய விட்டிருக்கிறார். இதற்கு முந்தைய படங்களை பார்க்கும் பொழுது பறந்து போ படத்தில் 20 பாடல்கள் இருக்கிறது.

    பாடலை ஒவ்வொரு சூழ்நிலையிலும் பயன்படுத்தியிருக்கிறார். அன்றாட வாழ்க்கையில் நாம் மாடிப்படி ஏறி இறங்கும் போது ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே போய் இருப்போம். குளிக்கும்போது ஏதாவது ஒரு பாடலை பாடிக்கொண்டே குளிப்போம், தூங்கும் போதும் ஒரு பாடலை பாடிவிட்டு அதன் பிறகு தூங்குவோம். இப்படி நமது அன்றாட வாழ்க்கையில் நாம் எந்தெந்த சூழ்நிலையில் பாடலை பாடுகிறோமோ அதை அப்படியே இந்த படத்திலும் காட்டி இருக்கிறார் ராம் என மாரி செல்வராஜ் அந்த பேட்டியில் கூறுகிறார்.

  • படமே ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள இப்படி பண்றாங்களே.. விஜய்சேதுபதி மகனை இப்படி பண்ணலாமா?

    தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக கருதப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கி இன்று ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கிறார். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு ஹிந்தி என மற்ற மொழிகளிலும் இவருக்கு என ஒரு தனி மரியாதையே இருக்கிறது. ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் தனி கவனம் பெற்ற விஜய் சேதுபதி வில்லனாகவும் தன்னுடைய பங்களிப்பை ஆற்றினார். கமல் ரஜினி என மிகப் பெரிய ஆளுமைகளுக்கு வில்லனாக நடித்து தனக்கென ஒரு தனி இடம் பிடித்துக் கொண்டார்.

    தற்போது மீண்டும் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் ஹீரோவாக நடித்து மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் மகாராஜா. அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதியும் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்து வெளியாக கூடிய திரைப்படம் பீனிக்ஸ். இந்த படம் வரும் ஜூலை நான்காம் தேதி திரைக்கி வரவிருக்கின்றது. இதனுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு சூர்யா விஜய் சேதுபதியை வாழ்த்தினார்கள். அப்போது விஜய் சேதுபதியும் தன் மகனுக்காக கலந்து கொண்டு அவருடைய கருத்துக்களையும் பகிர்ந்து இருந்தார் .இந்த நிலையில் சூர்யா விஜய் சேதுபதி பேசிய ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை எடுத்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் .விஜய் சேதுபதியை டேக் செய்து சூர்யா சேதுபதியின் பாடி லாங்குவேஜ் பார்க்கவே நன்றாக இல்லை. அவர் பேசும் விதமும் யாரையும் ஈர்க்கவில்லை.

    நீ சினிமாவில் நடித்து பெயர் சம்பாதித்து வருகிற பணத்தை சூர்யா சேதுபதிக்கு கொடுத்து வேற துறையிலாவது அவரைப் போகச் சொல்லுங்கள் .சினிமா ஃபீல்டு அவருக்கு செட் ஆகாது என கடுமையாக விமர்சித்து இருக்கின்றனர். இதுபோன்ற இந்த நெகட்டிவ் விமர்சனங்கள் தான் படம் ரிலீஸ் ஆன பிறகு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஒருவரை உருவ கேலி செய்வதற்கு முன் அவரின் திறமை என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

    surya

    surya

    சூர்யா சேதுபதிக்கு இதுதான் முதல் திரைப்படம் .அதுவும் ஹீரோவாக நடிக்கும் முதல் திரைப்படம். திரையில் அவர் எப்படிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை கூட பார்க்காமல் விழாவில் அவர் பேசியதை வைத்து நெட்டிசன்கள் இவ்வாறு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • முன்னணி நடிகர்களின் படங்கள் பிளாப் ஆகுதே… ஆங்கருக்கு சாட்டையடி பதில் கொடுத்த பிரபலம்

    கன்டன்ட் தான் முக்கியம்னு எல்லாருக்கும் தெரியும். அப்படி தெரிந்தும் முன்னணி நடிகர்களோட படங்கள் படுதோல்வி அடைய என்ன காரணம்னு யூடியூப் சேனல் ஒன்றில் ஆங்கர் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் என்ன பதில் சொல்கிறார்னு பார்க்கலாமா…

    முன்னணி நடிகர்கள் மக்கள் ரசிப்பாங்கன்னு நினைச்சித்தான் படம் எடுக்கிறாங்க. அது மக்களுக்குப் பிடிக்கிறது இல்ல. இது அவங்க தவறுன்னு சொல்ல முடியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும் என்று பதில் அளித்தார் சுப்பிரமணியம். உடனே அத்தனை ஆண்டுகாலமாக சினிமாவில் இருக்கிறார்கள். மக்கள் எதை ரசிப்பார்கள்னு முன்னணி நட்சத்திரங்களுக்குத் தெரியாதா என கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டார் அந்த ஆங்கர். அதற்கு திருப்பூர் சுப்பிரமணியம் சாட்டையடி பதில் கொடுத்தார். என்னன்னு பாருங்க.

    சினிமா தோன்றின காலம் தொட்டு தியாகராஜ பாகவதர் ஹிதாஸ் மாதிரியான சூப்பர்ஹிட் படங்களை எடுத்தார். அதே நேரம் கடைசியாக பவளக்கொடி படத்தையும் கொடுத்தார். அது தோல்வி. அப்போ அந்தக் காலத்துல இருந்தே தெரியாமலா எடுக்குறாங்க? இப்படி ஒவ்வொருத்தரையும் உதாரணமா சொல்லலாம்.

    எம்ஜிஆர் கதை தேர்வுல ரொம்ப கெட்டிக்காரர். ஆனா அவரே பீக்ல இருந்த காலகட்டத்துல நீரும் நெருப்பும், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என தோல்விப்படங்களைக் கொடுத்தார். அதே மாதிரி தான் சிவாஜி பீக்ல இருக்கும்போது தர்மம் எங்கே?, சித்ரா பௌர்ணமி மாதிரியான படங்கள்ல நடிச்சாரு.

    Thirupur Subramaniyam

    Thirupur Subramaniyam

    அப்படின்னா அவருக்குக் கதை தேர்வு சரியில்லன்னு அர்த்தமா? ரஜினி கூட ராகவேந்திரா படம் எடுத்தாரு. சுத்தமா போகல. கோச்சடையான், வேட்டையன் போகல. விஜய்க்கு பைரவா போகல. அஜித்துக்கு கிரீடம் போகல. இப்படி நிறைய சொல்லலாம்.

    கதாநாயகர்கள் மட்டுமல்ல. டைரக்டர், தயாரிப்பாளரும் கதை தேர்வை முடிவு பண்றாங்க. இப்ப சமீபகாலமாகத் தான் கதாநாயகர்கள் கதை தேர்வு செய்றாங்க என்று சொல்கிறார். மீண்டும் மீண்டும் அந்த ஆங்கர் இந்தக் கதையை மக்கள் ஏத்துப்பாங்கன்னு படம் எடுக்குறவங்களுக்குத் தெரியாதான்னு கேட்கிறார்.

    அதைத்தானே சொல்றேன். காலம் காலமாக இப்படித்தான் நடக்குது. தெரிஞ்சா யாராவது எடுப்பாங்களா? மதகஜராஜாவை யாருமே நம்பல. ஆனா 12 வருஷம் கழிச்சி ஹிட்டாகலயா? பொற்காலம், காதல் கோட்டை ஜெயிக்கும்னு நானே எதிர்பார்க்கல. அதனால மக்களோட ரசனையைப் புரிஞ்சி எடுக்க முடியாதுன்னு பதிலடி கொடுத்தார் திருப்பூர் சுப்பிரமணியம்.

  • கண்ணதாசனை விட ஒரு படி மேல போன வாலி… அப்படி என்னதான் நடந்தது?

    தமிழ்த்திரை உலகில் கவியரசர் என்றாலே நம் நினைவுக்கு வருபவர் கண்ணதாசன்தான். அவருடைய பாடல்கள் அத்தனையும் தேன் சிந்தும் ரகங்கள். அவருக்கு இணையாக ஒரு காலகட்டத்தில் வளர்ந்து வந்தவர் கவிஞர் வாலி. இவரை வாலிபக் கவிஞர் என்று அழைத்தனர். அந்த அளவு பல தலைமுறைகளாக இளம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் காதல் ரசம் சொட்டும் பாடல்களை எழுதித் தள்ளினார்.

    அந்த வகையில் ஒரு விஷயத்தில் கண்ணதாசனை விட வாலி ஒரு படி மேல் போய்விட்டார் என்றே சொல்லலாம். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அந்தக்காலத்தில் ரொம்பவே பிரபலமானது. அந்த நிறுவனத்தின் படங்கள் என்றாலே அதில் ஒரு தனித்தன்மை இருக்கும். படமும் ஹிட்டாகும்.

    கண்ணதாசனுக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரத்துக்கும் நல்ல நட்பு உண்டு. அதனால் அவர்கள் தயாரிக்கும் படத்துக்கு சம்பளம் குறித்து எதுவும் பேசமாட்டாராம். அவர்கள் தருவதை வாங்கிக் கொள்வாராம். அதே நேரம் வாலியிடம் ஒரு சமயம் அந்த நிறுவனத்திடமிருந்து 1964ல் பாடல் எழுத அழைப்பு வந்ததாம்.

    அப்போது அந்த நிறுவனம் கொடுக்கும் சம்பளம் வாலிக்கு குறைவாக இருக்கவே அவர் மறுத்து விட்டாராம். சம்பளம் இவ்வளவு தந்தால்தான் பாடல் எழுதுவேன் என கோரிக்கை வைத்துள்ளார் வாலி. அதைக் கேட்டதும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அவரைப் போகச் சொல்லுங்கள் என்று திருப்பி அனுப்பி வைத்து விட்டார்களாம்.

    அதன்பிறகு சென்னை திரும்பிய வாலிக்கு மீண்டும் ஒரு வாரம் கழித்து அதே நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்ததாம். அப்போது அவரைத் தொடர்பு கொண்டவர் அர்த்தநாரி. இவர் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரத்துக்கு வலது கையாக இருந்தவர். இவர் வாலியிடம் நீங்கள் கேட்ட தொகையை தருவதற்கு நிறுவனம் சம்மதித்து விட்டது.

    ஆனால் மொத்த பாடல்களையும் எழுதிவிட்டுத் தான் சென்னை திரும்ப வேண்டும். அதுவரை சேலத்தில்தான் தங்கி இருக்க வேண்டும் என்றார். இன்முகத்தோடு அவர் சொன்னதால் வாலி சம்மதித்தார். அதன்பிறகு பாடல் எழுதி முடித்ததும் உங்க பாஸை நான் பார்க்கணும்னு வாலி அர்த்தநாரியிடம் சொன்னாராம்.

    அதற்கு ஏற்பாடு செய்ய வாலி சுந்தரத்தைப் பார்த்துள்ளார். அவருடைய தோற்றத்தைப் பார்த்ததும் அவர் மேல் வாலிக்கு ஒரு மரியாதை ஏற்பட்டது. வாலி தன்னோட சம்பள டிமாண்டுக்காக வருத்தப்பட்டாராம். அதற்கு சுந்தரம் பரவாயில்லை என்று சொல்லி இருக்கிறார். தொடர்ந்து அந்த நிறுவனத்தின் 3 படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பும் வாலிக்குக் கிடைத்துள்ளது.

  • சிவக்குமார் ஒன்னும் செத்துப் போயிட மாட்டான்! டி.ஆருடன் இப்படியொரு கசப்பான சம்பவமா?

    தமிழ் சினிமாவில் ஒரு பன்முக கலைஞராக திகழ்ந்து வருபவர் டி ராஜேந்தர். இசையமைப்பாளராக பாடல் ஆசிரியராக தயாரிப்பாளராக கதை ஆசிரியராக என இவர் இயக்கிய படங்களுக்கு இவர் தான் எல்லாமுமாக இருந்திருக்கிறார். ஒரு நடிகராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களை இயக்கி அதில் இசையும் அமைத்து இருக்கிறார் டி ராஜேந்தர். அது மட்டுமல்ல படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். திரைப்படங்களில் வித்தியாசமான கதை திரைக்கதை வசனம் மற்றும் பாடல்களுக்காக இவர் மிகவும் பாப்புலர் ஆனவர். 80கள் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நபராக இருந்தார் டி ராஜேந்தர்.

    அவர் இயக்கிய பல திரைப்படங்கள் காதல் திரைப்படங்களாகவே அமைந்திருக்கின்றன. அதுவும் ஒருதலை காதலை மையப்படுத்தி இவருடைய படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக அண்ணன் தங்கை பாசத்தை இவருடைய எல்லா படங்களிலும் நாம் பார்க்க முடியும். சினிமாவில் கொடிகட்டி பறந்த டி ராஜேந்தர் அதன் பிறகு அரசியலுக்கு காலடி எடுத்து வைத்தார்.

    திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார் டி ராஜேந்தர் .சென்னை பூங்கரநகர் தொகுதியில் போட்டியிட்டு அதில் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு திமுகவிலிருந்து விலகி தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து அதன் தலைவராகவும் இருந்துள்ளார். தனித்துவமான நடிப்பு இசை பாடல் வசனங்களுக்காக மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற கலைஞராக இருந்திருக்கிறார் டி ராஜேந்தர். அவருடைய திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் காதலியை தொடாமல் நடிப்பது மாதிரி தான் ஹீரோவின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கும் .

    அதுபோல அவர் ஹீரோவாக நடித்த படங்களிலும் எந்த ஒரு நடிகையையும் தொட்டு பேசி அவர் நடித்ததே கிடையாது. அந்த அளவுக்கு ஒரு கண்ணியமான நடிகரும் கூட .இப்படிப்பட்ட டி ராஜேந்தரனுடன் தனக்கு பல கசப்பான அனுபவங்கள் நடந்திருக்கின்றன என சிவக்குமார் கூறியிருக்கிறார். டி ராஜேந்தரை பற்றி அவர் கூறும் பொழுது கே. கோபாலகிருஷ்ணனுக்கு பிறகு ஸ்கிரிப்ட் கையில் எடுக்காமல் படங்களை இயக்குவதில் சிறந்த ஒரு இயக்குனர் டி ராஜேந்தர் .அந்த வகையில் அவர் மீது எனக்கு நல்ல ஒரு மரியாதை இருக்கிறது.

    ஆனால் அவர் படம் ஆரம்பிக்கும் போது நீங்க தான் ஹீரோ என சொன்னார். அதன் பிறகு படம் முடிவதற்குள் தந்தைக்க்கோர் கீதம் படத்தில் அவருக்கு புகழ் வந்த பிறகு அவருடைய கேரக்டரை தூக்கி வைத்தும் என்னுடைய கேரக்டரை டம்மியாக வைத்தும் எடுத்து விட்டார். ஹீரோவுக்கான ரோல் இடைவேளைக்கு அப்புறம் வருகிற மாதிரி அமைந்துவிட்டது. அந்த அளவுக்கு கதையை மாற்றி விட்டார். எனக்கு ரசிகர்களும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கிடையாது. படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது.

    sivakumar

    sivakumar

    அப்போது ஒரு பெண் ரசிகை என்னிடம் வந்து அழுது கொண்டே கூறினார். அதாவது நீங்கள் ஹீரோவாக இருந்தாலும் உங்களுடைய கேரக்டர் இடைவேளைக்குப் பிறகுதான் வருகிறது என அழுது கொண்டே கூறினார் .அப்போது சிவக்குமார் ஒன்னும் செத்து விட மாட்டான். தைரியமாக இரு என அதை எல்லாம் தாண்டி வந்து விட்டேன். இந்த மாதிரி சில கசப்பான சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது .ஆனால் அவர் ஒரு பெரிய மேதை. அவரே கதை வசனம் எழுதுவார். டைரக்ட் பண்ணுவார். மியூசிக் போடுவார் நடிப்பார் எல்லாவற்றிலும் தனிப்பட்ட முறையில் அவர் ஒரு மேதை தான் என சிவக்குமார் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.