Tag: latestcinemanews

  • செல்லம் இப்படி ஒரு அப்டேட்டத்தான் எதிர்பார்த்தோம்! ‘விடாமுயற்சி’ பற்றி படத்தில் நடித்த நடிகர் சொன்ன சீக்ரெட்

    அஜித்தின் நடிப்பில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடந்து வருகிறது. ஒன்றரை வருடங்களை கடந்தும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது .இருந்தாலும் இந்த வருடம் விடாமுயற்சி படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்து விட வேண்டும் என்ற சூழ்நிலையில் ஒட்டுமொத்த படக் குழுவும் இருக்கிறார்கள்.

    அறுபது சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் மீதம் 40% படப்பிடிப்பு இருக்க இப்பொழுதுதான் அந்த படப்பிடிப்பில் சூடு பிடித்திருக்கிறது. அஜித் த்ரிஷா அர்ஜுன் ஆரவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் என வெளியாகி ரசிகர்களை ஒருவித உற்சாகத்தில் வைத்திருக்கிறார்கள் விடாமுயற்சி படத்தின் படக்குழு.

    இந்த நிலையில் விடாமுயற்சி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் பிரபல குணச்சித்திர நடிகர் ஜீவா ரவி. பல படங்களில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜீவா ரவி மகிழ்திருமேனி இயக்கிய அனைத்து படங்களிலும் இவரின் பயணம் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

    அந்த வகையில் விடாமுயற்சி படத்திலும் இவர் நடித்திருக்கிறாராம். இந்த ஜூலை மாத இறுதியில் தான் இவருடைய காட்சி படமாக்கப்படும் என்று ஒரு பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் விடாமுயற்சி படத்தை பற்றியும் ஒரு சில தகவல்களை அவர் கூறியிருக்கிறார்.

    இந்த படத்தில் அஜித் யங் அஜித்தாகவும் நடித்து இருக்கிறாராம் . மங்காத்தாவில் அஜித்துக்கும் அர்ஜுனுக்கும் இடையே இருக்கும் அந்த காம்போ மாதிரி இந்த படத்தில் இருக்காது. அதைவிட வித்தியாசமான ஒரு காம்போவில் தான் இவர்கள் நடித்திருக்கிறார்கள். எல்லா தரப்பு பெண் ரசிகர்களுக்கும் பிடித்தமான கதாபாத்திரத்தில் அஜித் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

    அஜித்தும் திருமேனியும் இணையும் காம்போ என்பது மிகவும் சுவாரசியமான ஒரு காம்போவாக இருக்கும். படத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார்கள் என ஜீவா ரவி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

  • 46 வருஷத்துக்கு முன்பே வசூல் மன்னன்டா! 5 லட்சத்துக்கு விற்று 50 லட்சம் வசூல் செய்த ரஜினி படம்

    தமிழ் சினிமாவில் இன்று ஒரு வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோலிவுட்டில் தனக்கான ஒரு அந்தஸ்தை பெற்று பெரிய உச்ச நடிகராக இருக்கிறார். இன்றைய சூழலில் இவர் நடித்து வெளியாகும் படங்கள் குறைந்தபட்சம் 500 கோடிக்கும் மேலாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

    இவரின் நடிப்பில் கடைசியாக வெளியாகி பெரிய சாதனை படைத்த படமாக அமைந்தது ஜெய்லர் திரைப்படம். இந்தப் படம் 700 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. அடுத்ததாக இவரின் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.

    இருந்தாலும் லோகேஷுடன் இணைந்து கூலி திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினியின் இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் ரஜினியை பொறுத்தவரைக்கும் இப்போது மட்டும் அவர் வசூல் மன்னன் இல்லை. அந்த காலத்திலேயே பெரிய வசூல் மன்னனாகவே இருந்திருக்கிறார்.

    இதை பற்றி வி.சி.குகநாதன் ஒரு பத்திரிக்கையில் எழுதியிருக்கிறார். அதாவது விஜயகுமார் ஹீரோவாகவும் ரஜினி வில்லனாகவும் நடித்த படம் மாங்குடி மைனர். இந்தப் படத்திற்கு கதை , திரைக்கதை, வசனம் எல்லாமே வி.சி.குகநாதன்தானாம். எம்ஜிஆர் புகழைப்பாடும் படமாக இந்தப் படம் இருக்குமாம். கே.என்.சுப்பையா இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை தனக்கு கொடுக்கும் படி கேட்டாராம்.

    அந்த நேரத்தில் ஃபைனான்ஸ் தாமதம் ஆனதால் சுப்பையா கேட்டதை நல்வாய்ப்பாக எடுத்துக் கொண்டு நஷ்டமானாலும் பரவாயில்லை எனக் கருதி 5 லட்சத்திற்கு அந்தப் படத்தின் காப்பியை கொடுத்திருக்கிறார் குகநாதன். ஆனால் அந்தப் படம் 50 லட்சம் வசூல் சாதனையை பெற்றதாம். கிட்டத்தட்ட 46 வருடத்திற்கு முன்பே பெரும் வசூல் மன்னனாக இருந்திருக்கிறார் ரஜினி என அந்த செய்தியை பார்த்து பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • ‘இந்தியனை’ ஏன் இந்துஸ்தானினு ஹிந்தியில் ரிலீஸ் செஞ்சாங்க தெரியுமா? அதுக்கு காரணம் கேப்டன்தானாம்

    மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. 7 வருடங்களை கடந்து சமீபத்தில் தான் இந்த படம் வெளியாகி இருக்கிறது.

    இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் வெற்றி இந்தியன் 2 படத்தில் எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்திருந்தது. ஆனால் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பையும் இந்தியன் 2 திரைப்படம் சுக்கு நூராக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    ஷங்கரின் இயக்கத்தில் இப்படி ஒரு படத்தை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்று பல பேர் கூறி வருவதை நாம் பார்த்து வருகிறோம். தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகி இருக்கும் இந்த படம் ஹிந்தியில் ஹிந்துஸ்தானி என்ற பெயரில் ரிலீஸாகி இருக்கிறது. இந்தியன் படத்தின் முதல் பாகமும் மூன்று மொழிகளில் தான் வெளியானது.

    அப்பவும் ஹிந்தியில் ஹிந்துஸ்தானி என்ற பெயரில் தான் வெளியானது. இந்தியன் என்பது ஒரு பொதுவான பெயர். ஹிந்தியில் ஏன் இந்தியன் என்ற பெயரிலேயே வெளியாகவில்லை என்பதற்கான காரணம் தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றது.

    தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்தியன் என்ற பெயரில் தான் படம் வெளியானதாம். அதேபோல் ஹிந்திலும் இந்தியன் என்ற பெயரில் ரிலீஸ் செய்யலாம் என நினைத்தார்களாம். ஆனால் ஹிந்தியில் சன்னி தியோல் ஏற்கனவே இந்தியன் என்ற பெயரில் ஒரு படத்தை எடுக்கப் போவதாக அறிவித்திருந்தாராம்.

    அதன் காரணமாகவே தான் ஹிந்துஸ்தானி என்ற பெயரில் படம் ரிலீஸ் ஆகி இருக்கின்றது. தமிழில் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட்டான வல்லரசு திரைப்படத்தை தான் சன்னி தியோல் இந்தியன் பெயரில் எடுக்க நினைத்தாராம்.

  • சிவாஜி பற்றி கேட்ட கேள்விக்கு நெத்தியடியாய் எம்ஜிஆர் சொன்ன பதில்… திகைத்த நிருபர்!

    நடிகர், நடிகைகளைப் பொறுத்தவரை பத்திரிகையாளர் இக்கட்டான கேள்விகளைக் கேட்டுவிட்டால் அவர்களது பதில் மழுப்பலாக இருக்கும். அல்லது அதற்கு பதில் சொல்லாமல் எழுந்து சென்று விடுவர். ஆனால் அந்தக் காலத்தில் எம்ஜிஆர் தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கத்தில் எம்ஜிஆரை நோக்கி ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

    அந்தக் கேள்விக்கு எம்ஜிஆர் சொன்ன பதில் எல்லாமே பளிச் பளிச் சென்று இருந்தது. அப்படி ஒரு கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். அது இதுதான்.

    இனி மிகையான நடிப்புக்கு வரவேற்பு இருக்காது. இயற்கையான நடிப்புக்குத் தான் வரவேற்பு இருக்கும்னு பேசுனீங்களே, அந்தப் பேச்சு சிவாஜியைத் தாக்கி அமைந்த பேச்சு தானே என்று அந்த கேள்வி கேட்கப்பட்டது.

    ‘இயற்கையான நடிப்புக்குத் தான் எதிர்காலத்திலே வரவேற்பு இருக்கும்னு நான் குறிப்பிட்டா உடனடியா சிவாஜியை நான் தாக்கிப் பேசியதா நீங்க ஏன் நினைக்கிறீங்க?

    சிவாஜி மிகையாக நடிக்கிறதா நீங்க நினைக்கிறீங்களா? சிவாஜியோட நடிப்பை அப்படி ஏன் குறை சொல்றீங்க? சிவாஜி எந்தளவுக்கு உன்னதமான நடிகர்? இப்படி எல்லாம் பேசி சிவாஜிக்கு நீங்கள் களங்கம் விளைவிக்காதீர்கள்’ என்று அந்த நிருபரைப் பார்த்து எம்ஜிஆர் பதில் சொன்னாராம்.

    இன்னொரு நிருபர் கேட்ட கேள்வி இதுதான். ஒரு நடிகையை நீங்கள் ஒப்பந்தம் செய்து விட்டு வேறு எந்த கதாநாயகனுடனும் நடிக்கக்கூடாது என நிபந்தனை விதித்ததாகவும், இப்போ அந்த நடிகை நிபந்தனையை மீறி விட்டதாகவும் சொல்கிறார்களே… என எம்ஜிஆரைப் பார்த்துக் கேட்டாராம்.

    அதற்கு எம்ஜிஆர் ‘ஏன் சுற்றி வளைச்சிப் பேசறீங்க. மஞ்சுளா என்று நேரடியாகக் கேளுங்களேன். அவர் மற்ற நடிகரோடு நடிக்கலாம் என்று நான் தான் அவரை ஊக்குவித்தேன். என்னிடத்தில் பயிற்சி பெற்ற நடிகை மற்ற நடிகர்களுடன் நடித்தால் எனக்குத் தானே அது பெருமை’ என பதில் சொன்னாராம் புரட்சித்தலைவர்.

    மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.