Tag: latestcinemanews

  • ‘ஜனநாயகன்’ படத்துல என் கேரக்டர்! பகவந்த் கேசரி படம்தானா? பிரியாமணி சொன்ன தகவல்

    விஜய் நடித்து அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் ஆக வெளிவர காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். எச். வினோத் இயக்கத்தில் விஜய் ,மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே என முன்னணி நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் தான் ஜன நாயகன். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார் .இது விஜய்க்கு கடைசி படம். படப்பிடிப்பை முடித்ததும் இப்போது முழு நேர அரசியல்வாதியாக மாறிக் கொண்டார் விஜய்.

    சமீபத்தில் கூட காவலாளி அஜித் குமார் வீட்டிற்கு சென்று அவருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வந்தார். கூடவே 2 லட்சம் நிவாரண தொகையாகவும் வழங்கினார் விஜய். இப்படி அரசியல் சார்ந்த பணிகளை கவனித்து வரும் விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார்.

    அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்து எப்படியாவது இவர் இந்த நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என மக்கள் கூறி வருகிறார்கள் .இன்னொரு பக்கம் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் என மாணவர்களையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார் .இப்படி அரசியலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒவ்வொன்றாக மேற்கொண்டு வருகிறார் விஜய்.

    இந்த நிலையில் ஜன நாயகன் படத்தை பற்றிய கேள்விக்கு நடிகை பிரியாமணி சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். ஜனநாயகன் திரைப்படத்தில் பிரியாமணி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் தற்போது குட் வைஃப் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டு பேசியபோது அவரிடம் ஜனநாயகன் படத்தில் என்ன மாதிரியான கேரக்டர் என்று கேட்டனர்.

    அதற்கு பிரியாமணி அது இப்போது கூறமுடியாது. ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றது. அதை ஜனநாயகன் படத்தை பற்றி பேசும்போது நான் கூறுகிறேன் என கூறினார் .அந்தப் படம் பகவந்த் கேசரி திரைப்படத்தின் ரீமேக்கா என்ற கேள்விக்கு இந்த கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் .படத்தின் இயக்குனர் எச் வினோத்திடம் கேளுங்கள். நான் சொல்ல முடியாது என கூறினார் .

    vijay

    vijay

    உங்களுடைய கேரக்டர் பற்றி ஒரு டிப்ஸ் ஆவது சொல்லுங்களேன். என்ன மாதிரி நடிக்கிறீங்க என்று மறுபடியும் நிரூபர் கேட்டதற்கு அருகில் இருந்த நடிகர் ஆரி ‘ஜனநாயகன் படத்தில் என்னவா நடிக்கிறாங்க? அது தானே உங்களுக்கு தெரியணும் .அவர் ஒரு ஆர்டிஸ்ட்டாக நடிக்கிறார்’ என்ற மொக்கை ஜோக்காக பதில் கூறினார்.

  • ‘சூதாடி’ படம் ஸ்டாப் ஆனதுக்கு தனுஷ் காரணமில்ல.. மீண்டும் நண்பேன்டானு நிருபிச்ச வெற்றிமாறன்

    தற்போது வெற்றிமாறன் பல youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அதில் தனுஷை பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். ஒருவேளை அவரும் சிம்புவும் இணையும் திரைப்படத்தில் தனுஷ் என்ஓசி தருவதற்கு 20 கோடி கேட்டார் என்ற ஒரு தவறான தகவல் வெளிவந்து தனுஷின் பெயரை சமூக வலைதளங்களில் டேமேஜ் செய்து வருகிறார்கள் .அதனால் அதை எப்படியாவது ஸ்டாப் பண்ண வேண்டும் என்பதற்காக கூட இந்த மாதிரி தனுஷை பற்றி உண்மையில் என்ன நடந்தது என்பதற்காக கூட வெற்றிமாறன் பேட்டி கொடுத்து வருகிறாரோ என்னவோ தெரியவில்லை என பல பேர் கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஏற்கனவே தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் சூதாடி படம் உருவாக இருந்தது. ஆனால் அந்தப் படம் எதிர்பாராத விதமாக டிராப் செய்யப்பட்டது. அதற்கான காரணம் என்ன என்பதை இப்போது கூறி இருக்கிறார் வெற்றிமாறன். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன் ஆடுகளம் வடசென்னை அசுரன் போன்ற வெற்றி படங்கள் வெளியாகி உள்ளன. அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து சூதாடி மற்றும் தேசிய நெடுஞ்சாலை என்ற இரண்டு படங்களை அறிவித்திருந்தார்கள்.

    ஆனால் சில காரணங்களால் அந்த இரண்டு படங்களுமே கைவிடப்பட்டன. அப்போதைய காலகட்டத்தில் சூதாடி படம் கைவிடப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை பற்றி வெற்றிமாறன் கூறியிருந்தார். அதில் தனுஷ் ஒரு இந்தி படத்தில் உடனடியாக நடிக்க வேண்டி இருந்தது என்றும் அதற்காக நான்கு மாதங்கள் அவர் ஒதுக்க வேண்டி இருந்தது என்றும் கூறியிருந்தார். அந்த இடைவெளியில் தான் வெற்றிமாறன் வேறொரு படத்தை இயக்கத் தொடங்கினார் என்றும் செய்திகள் வெளிவந்தன .

    ஆனால் இப்போது அவர் கூறும் போது விசாரணை படத்தை எடுக்க நினைக்கும் போது சூதாடி திரைப்படத்தை நிறுத்த வேண்டும் என வெற்றிமாறனுக்கு தோன்றியதாம். ஏற்கனவே சூதாடி படத்தில் ஐந்து நாட்கள் தனுஷ் நடித்து கொடுத்தாராம் .அதன் பிறகு தனுஷை அழைத்து வெற்றிமாறன் ‘இதை என்னால் தொடர இயலாது. நான் வேறு ஏதாவது செய்ய வேண்டும்’ என்று கூறினாராம் வெற்றிமாறன்.

    dv

    dv

    உடனே தனுஷ் ‘ஓகே சார் உங்களுக்கு உண்மையிலேயே இந்த படத்தை எடுக்க வேண்டும் என நினைத்தால் எடுங்கள்,’ என கூறினாராம். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து தனுஷை சந்தித்த வெற்றிமாறன் ‘இதுதான் ஐடியா. இதுதான் அந்த படத்தின் கதை. இதுதான் நான் உருவாக்க போகிறேன்’ என கூறுகிறார். உடனே தனுஷ் ‘கதை எல்லாம் என்னிடம் சொல்ல வேண்டாம். அந்தக் கதை எனக்கு பிடித்திருந்தால் அதில் நான் நடிக்கிறேன். எவ்வளவு பணம் வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள் அந்த படத்தை எடுப்பதற்கு. நான் கொடுக்கிறேன் ’என கூறினாராம் தனுஷ். இந்த ஒரு நம்பிக்கை தான் விசாரணை என்ற படத்தை எடுக்க உதவியாக இருந்தது என வெற்றிமாறன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். அதன் பிறகு விசாரணை திரைப்படத்தை வெற்றிமாறனும் தனுஷும் இணைந்து தான் தயாரித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • நான் ஏன் அடுத்து மேரேஜ் பண்ணல? தெளிவாத்தான் இருக்காங்க வனிதாக்கா..

    ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி அதன் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களால்தான் மிகவும் பிரபலமானார். தன்னுடைய முதல் திருமணம் ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆளாகி அந்த திருமண வாழ்க்கையில் இருந்து வெளிவந்தார். அதன் பிறகு லிவிங் ரிலேஷன்ஷிப் ,இரண்டாவது திருமணம் என அடுத்தடுத்து அவர் மீது பல சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்தன. இதற்கிடையில் தான் விஜய் டிவியில் மிகவும் பாப்புலரான நிகழ்ச்சியான பிக் பாஸில் கலந்து கொண்டு தன்னை மேலும் பிரபலப்படுத்திக் கொண்டார்.

    அதிலிருந்து அவரை வனிதா அக்கா என்றே தான் அனைவரும் அழைத்து வந்தனர். அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பாப்புலர் அதே தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு அவருக்கு வந்தது. இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்ட வனிதா ஒரு தவிர்க்க முடியாத பிரபலமாகவே மாறினார். தற்போது படங்களில் நடித்து வரும் வனிதா ஒரு படத்தையும் இயக்கி இருக்கிறார். மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படம் நாளை ரிலீஸ் ஆக இருக்கின்றது.

    இந்த படத்தின் மூலம் தன்னுடைய மகளை தயாரிப்பாளராகவும் அறிமுகப்படுத்துகிறார் வனிதா. மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் வனிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்திருக்கிறார். ஏற்கனவே இவர்கள் ரிலேஷன்ஷிப் இருந்து அதன் பிறகு பிரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .மீண்டும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள் என்றதும் மறுபடியும் இவர்கள் திருமணம் செய்யப் போகிறார்கள் என்ற ஒரு சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தன. ஏனெனில் இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி அப்படி ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது அது ஒரு திரைப்படத்தின் போஸ்டர் என்று.

    இந்த நிலையில் அடுத்து ஏன் நான் கல்யாணம் பண்ணவில்லை என்பதற்கான காரணத்தை வனிதா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் .ஒரு தடவை எனக்கு கல்யாணம் ஆனது. சந்தர்ப்பம் சூழ்நிலை விவாகரத்து ஆகிவிட்டது. அதன் பிறகு இரண்டு பேரும் ஒன்றாக இல்லை. அடுத்து உடனடியாக திருமணம் செய்ய வேண்டும் யாரும் நினைக்க மாட்டார்கள். லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பார்கள் அல்லது ஒரு டேட்டிங் வாழ்க்கையில் போக வேண்டும் என நினைப்பார்கள். கல்யாணம் என்பது ஒரு பெரிய கமிட்மெண்ட் .கண்டிப்பாக சுதந்திரம் என்பது இருக்கவே இருக்காது. என்னதான் நாம் ஒரு நட்பாக பழகி ஒரு பார்ட்னருடன் பழகினாலும் கடைசியில் திருமணம் என்பது திருமணம் தான்.

    mister

    mister

    கண்டிப்பாக சில கண்டிஷன்ஸ் என்பது இருக்கும். இதையெல்லாம் தாண்டி நான் ஏதாவது ஒன்னு பண்ண வேண்டும் என்று நினைத்தது தான் என்னுடைய டிரெடிஷன். எனக்கு அது அமையவில்லை என்பது எனக்கு ஒரு வருத்தமாக இருக்கும். எனக்கும் ஒரு தனிமை இருக்கும். எல்லாமே இருக்கும் .ஆனால் ஒரு சில பேருக்கு அது அமைந்து விடுகிறது. அவ்வளவுதான். ஏன் எனக்கு திருமணம் என்பது ஒரு பேச்சு பொருளாக மாறியது என்றால் நான் இப்போது வரைக்கும் எந்த ஒரு ரிலேஷன்ஷிப்பிலும் இல்லை .

    கடந்த ஐந்து ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் நான் இல்லை. ஏனெனில் என்னுடைய மனதில் ஓடுவது என்னுடைய கமிட்மெண்ட்ஸ். என்னுடைய மைண்ட் செட் மேரேஜ். எனக்கு இந்த டைம் பாஸுக்கு லவ் பண்ணுவது ,டைம் பாஸுக்கு டேட்டிங் பண்ணுவது. இந்த மைண்ட் செட் எனக்கு கிடையாது. அதுதான் எனக்கு பெரிய பிரச்சனையும் கூட .ஒரு கட்டத்தில் அதுவும் நாம் அடிபட்ட பிறகு இன்னொருத்தரை நம்ப முடியாது. அப்படி ஒரு ஆள் அமைவதும் ரொம்ப கஷ்டம் என வனிதா கூறி இருக்கிறார்.

  • தேடுதல் வேட்டையில் சிக்கிய அடுத்த இயக்குனர்.. சிவகார்த்திகேயனின் சாய்ஸ் வேற லெவல்

    சில தினங்களாக சிவகார்த்திகேயன் தனுஷ் இடையே இருக்கும் பிரச்சனை அவர்களுக்கு இடையே எப்படி கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பதை பற்றி பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சிவகார்த்திகேயனை இந்த சினிமாவில் அறிமுகப்படுத்தியதே தனுஷ் தான். இது பல பேருக்கு தெரியும். விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து மிமிக்ரி போன்ற காமெடி நிகழ்ச்சிகளையும் நடத்தி மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றார் சிவகார்த்திகேயன்.

    அவருடைய ஹியூமர் காமெடி தனத்தை எல்லாம் பார்த்த தனுஷ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் .தான் ஹீரோவாக நடித்த 3 திரைப்படத்தில் அவரை இரண்டாவது ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்த முதல் திரைப்படம் மெரினா. அந்தப் படத்தில் அவருடைய ஹியூமருடன் சேர்ந்த நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    தொடர்ந்து காமெடியை மையப்படுத்தி வந்த படங்களில் ஹீரோவாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி இன்று ஒரு ஆக்சன் ஹீரோவாக மாஸ் ஹீரோவாக விஜய் அஜித்துக்கு அடுத்தபடியான ஒரு நிலையில் இருக்கிறார் .அதுவும் அமரன் திரைப்படத்திற்கு பிறகு அவருடைய மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது. அந்தப் படம் 350 கோடி வசூல் பெற்று பெரும் சாதனை படைத்தது .

    அதன் பிறகு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு அவர் கமிட்டான இயக்குனர்கள் அனைவருமே சினிமாவில் கைதேர்ந்த இயக்குனர்கள். பல நல்ல நல்ல படங்களை கொடுத்தவர்கள். இப்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி திரைப்படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார் .

    இதற்கு அடுத்தபடியாக சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியானது. இன்னொரு பக்கம் வெங்கட் பிரபு இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இன்னொரு இயக்குனரும் சிவகார்த்திகேயன் லிஸ்டில் இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்திருக்கின்றன.

    pushkar

    pushkar

    அவர் வேறு யாருமில்லை. விக்ரம் வேதா என்ற ஒரு தரமான படத்தை கொடுத்த புஷ்கர் காயத்ரி இவர்களுடன் பேச்சு வார்த்தையில் சிவகார்த்திகேயன் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது நடந்து விட்டால் இவர்கள் கூட்டணி மிகவும் எதிர்பார்க்கப்படும் கூட்டணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

  • அஜித் பண்ணும் அட்டகாசம்.. விஜய் ரஜினியே மேல்! புலம்பும் கோலிவுட்

    கடந்த இரண்டு நாட்களாக அஜித் ஆதிக் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் பற்றிய செய்தி தான் வந்து கொண்டே இருந்தன. அதாவது அஜித் ஆதிக் கூட்டணியில் உருவாகும் படத்தை தயாரிக்க யாரும் முன் வரவில்லை என்றும் அதற்கு அஜித் போட்ட சில கண்டிஷன்கள் தான் காரணம் என்றும் சொல்லப்பட்டது. அதாவது தயாரிப்பாளர்களிடம் அஜித் தரப்பிலிருந்து முன் பணமாக பெருந்தொகையை அஜித் கேட்பதாகவும் மீதி பணத்தை போஸ்ட் டேட்டட் செக்காக தர வேண்டும் என்றும் கண்டிசனை போட்டாராம் .

    அது மட்டுமல்ல ஷூட்டிங் முடிந்ததும் உடனே அவருடைய சம்பளத்தை மொத்தமாக கொடுத்து விட வேண்டும் என்றும் அந்த கண்டிஷனில் குறிப்பிட்டு இருந்ததாம். இதில் இன்னொரு கண்டிஷன் என்னவெனில் தயாரிப்பாளர்களிடமிருந்து வரும் சம்பளம் சென்னையில் உள்ள வங்கி அக்கவுண்டுக்கு இல்லாமல் துபாயில் இருக்கும் அக்கவுண்டில் தான் போட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறாராம்.

    அப்படி துபாய் அக்கவுண்டுக்கு இங்குள்ள தயாரிப்பாளர்கள் போடும் பட்சத்தில் அது தயாரிப்பாளர்களுக்குத்தான் பெரும் பிரச்சனையாகிவிடும் என்பதனால் தான் அவர் படத்தை தயாரிக்க யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. இதை அறிந்த ஒரு சில தயாரிப்பாளர்கள் அஜித்துக்கு விஜய் ரஜினியே பரவாயில்லை. தயாரிப்பாளர்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதுதான் அவர்களின் முதல் நோக்கமாக இருக்கும்.

    அஜித் மாதிரி இப்படி எல்லாம் கண்டிஷன் போட மாட்டார்கள் என்றும் புலம்பி வருகிறார்கள் .தற்போது ரஜினி கூலி திரைப்படத்திற்காக 120 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாகவும் தகவல் சொல்லப்படுகிறது. கூலி படத்தை பொருத்தவரைக்கும் படத்தின் வியாபாரம் நினைத்ததை விட பெரிய அளவில் போய்க்கொண்டிருக்கிறதாம். அதற்கு ரஜினி மட்டும் காரணம் இல்லை.

    லோகேஷும் காரணம். ஏனெனில் லோகேஷ் இதற்கு முன் எடுத்த பெரிய பெரிய படங்கள் தான். கூலி படத்தின் வியாபாரத்தை வைத்து ஜெயிலர் 2 படத்திற்கு ரஜினி 250 கோடி சம்பளம் கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. இவருடைய சம்பளத்தை கேட்டதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கொஞ்சம் வருத்தத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

  • எப்படிலாம் யோசிச்சு அடிக்குறாங்க? 3BHK படத்தின் கனவு இல்லத்தை பந்தாடிய நெட்டிசன்கள்

    ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி ஆகியோரின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் 3 பி ஹெச் கே. சராசரி மனிதனாக ஒவ்வொருவருக்கும் இருக்கும் கனவு எப்படியாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான். மாத வருமானம் பெறும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சொந்த வீடு பற்றிய கனவு இருக்கத்தான் செய்யும். எவ்வளவு நாள் தான் வாடகை வீட்டிலேயே இருக்கிறது .எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் சரி போராட்டமாக இருந்தாலும் சரி அந்த போராட்டங்களுக்கு மத்தியில் எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள்.

    அப்படிப்பட்ட ஒரு படமாக தான் இந்த 3 bhk திரைப்படம் அமைந்திருக்கிறது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சரத்குமார் தன்னுடைய மனைவி தேவயானி மகன் சித்தார்த், மகள் மேத்தா ரகுநாத் ஆகியோருடன் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். மூன்று படுக்கையறை கொண்ட சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான் சரத் குமாரின் நீண்ட நாள் கனவாக இருக்கிறது. எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் செலவுகளை மீறி சேமிக்க முடியாத வகையாக அவருடைய வாழ்க்கையில் போராட்டமாகவே இருக்கிறது .

    இதை அடுத்து தந்தையின் கனவை எப்படியாவது நிறைவேற்றும் முயற்சியில் சித்தார்த்தும் மீத்தா ரகுநாத்தும் களமிறங்குகிறார்கள். இருவரும் உழைத்து பணம் சேமிக்கிறார்கள். ஆனால் சேமிக்கும் பணம் ஏதோ ஒரு சூழ்நிலையில் செலவாகி போகிறது .அதனால் அப்பாவின் கனவை நிறைவேற்றினார்களா இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை. இதில் சரத்குமாரின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது .அவருக்கு இணையான நடிப்பை வழங்கி இருக்கிறார் தேவயானி. இந்தியன் 2 படம் வரைக்கும் சித்தார்த்தை கழுவி ஊற்றிய ரசிகர்கள் இந்த படத்தில் அவரின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள்.

    அதனால் படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை பற்றி வழக்கம்போல நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வச்சு செய்து வருகின்றனர். இந்த படத்தின் கதை சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான். ஆனால் பொதுவாக பார்க்கும் பொழுது ஒரு வீடு வாங்குகிறோம் அல்லது ஒரு நிலத்தை வாங்கி வீடு கட்டுகிறோம் என்றால் அதற்கான செலவு போக ஜிஎஸ்டி என்பதுதான் நம் கண் முன்னே வந்து அச்சுறுத்துகிறது.

    ஜிஎஸ்டி எனும் போது நம் நினைவுக்கு முதலில் வருபவர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம். ஒவ்வொரு ஆண்டும் அவர் பட்ஜெட் போடும்போது அனைவருமே திக் திக் பயத்துடன் தான் இருப்பார்கள் .எதை விலை உயர்த்தி இருக்கிறார் எதை விலையை குறைத்து இருக்கிறார் என்பதை பார்க்க ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் காத்திருப்பார்கள். அப்படி ஒரு வீடு வாங்க வேண்டும் என்று நீங்க நினைச்சா மட்டும் போதாது நான் நினைக்க வேண்டும் என நிர்மலா சீதாராம் கூறியதைப் போல காமெடியாக அந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வருகின்றனர் .அதுதான் இப்போது சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகின்றது.

  • நாயகன் படத்துக்கு கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அட அவரே சொல்லிட்டாரே!

    1987ல் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சரண்யா, ஜனகராஜ், நாசர், டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்த படம் நாயகன். இளையராஜாவின் இசையில் படம் மிக நேர்த்தியாக இருந்தது. பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

    நான் சிரித்தால் தீபாவளி, நீ ஒரு காதல் சங்கீதம், அந்தி மழை மேகம், நிலா அது வானத்து, தென்பாண்டிச் சீமையிலே ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. அந்த நேரத்தில் படம் தமிழ் மட்டும் அல்லாமல் இந்தி, ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியானது. படத்தை தயாரித்தவர் முக்தா சீனிவாசன்.

    மும்பை தாதாவான வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்கிறார்கள். சிறுவன் முதல் வயதானவர் வரையிலான கெட்டப்பில் கமல் படத்தின் கேரக்டர் வேலுநாயக்கராகவே தத்ரூபமாக வாழ்ந்து காட்டியிருப்பார். படத்தின் காட்சி அமைப்புகள் கொஞ்சம் கூட சலிக்காது.

    கதையோடு பொருந்திய பாடல்கள். கூர்மையான வசனங்கள் என படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. 3 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.

    கமல் பீக்கில் இருந்த காலகட்டம் அது. அந்த நேரத்தில் கமலுக்கு நாயகன் படத்தில் நடிக்க சம்பளம் எவ்வளவு கொடுத்தார்கள் என்று தெரியுமா? வாங்க பார்க்கலாம்.தமிழ்சினிமாவில் ஒரு முக்கியமான தயாரிப்பாளர், இயக்குனர் முக்தா சீனிவாசன். இவர் தயாரிக்கவும் செய்துள்ளார். இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

    இவரது தயாரிப்பில் வெளியான முக்கியமான படம் நாயகன். இந்தப் படத்துக்கு கமல் வாங்கிய சம்பளம் எவ்வளவு என இவரது மூத்த மகன் முக்தா ரவி சொல்கிறார். வாங்க என்ன விவரம்னு பார்க்கலாம்.

    நாயகன் படம் பெரிய லாபத்தைக் கொடுக்கல. நஷ்டத்தைக் கொடுத்தது. ஆனா விநியோகஸ்தர்களுக்கு லாபம். நார்த் ஆற்காடு, சௌத் ஆர்காடு விநியோகஸ்தர்கள் எல்லாம் பேர் சொல்லும் பிள்ளை என்ன ரேட் போயிருக்கோ அதுல 10 பர்சன்டோ, 5 பர்சன்டோ பார்த்துக் கொடுத்துட்டாங்க. கமலுக்கு மார்க்கெட் இருக்கும்போது 20 லட்சம் சம்பளமா கொடுத்தாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • ஏழைகளின் இளையராஜா யார் தெரியுமா? மேடையில் நடந்த கலகல சம்பவம்!

    சத்ய சிவா எழுதி இயக்கி வரும் படம் ப்ரீடம். சசிக்குமார், லிஜோமல் ஜோஸ், சுதேவ் நாயர், போஸ் வெங்கட், மாளவிகா அவினாஷ், மு.ராமசாமி, சரவணன், ரமேஷ் கண்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இது ஒரு ஆக்ஷன் படம். பாண்டியன் பரசுராமன் தயாரித்துள்ளார்.

    இந்தப் படத்துக்கான ப்ரஸ்மீட் சமீபத்தில் நடந்தது. அதில் சசிக்குமார், லிஜோமல் ஜோஸ், படத்தின் இயக்குனர் சத்யாசிவா, ஜிப்ரான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒரு படம் நல்லா ஓடினபோதும் கூட தன்னோட சம்பளத்தை உயர்த்தாதவர்னா அது சசிக்குமார்தான் என்றும் தெரிய வந்தது.

    அவரே பல தடவை இதைக் குறிப்பிட்டு சொல்லிருக்காரு. டூரிஸ்ட் ஃபேமிலி படம் வசூலை வாரிக்குவித்தது. அது தயாரிப்பாளர்களுக்குத் தான் லாபம். எனக்கு பேசினபடி சம்பளம் தந்தாலே போதும்னுதான் நான் நினைக்கிறேன் என்கிறார் சசிக்குமார்.

    பெரும்பாலான கேள்விகளுக்கு சசிக்குமார் பதில் அளித்தார். காலேஜ்ல போய் என்னோட படத்தை நான் விளம்பரப்படுத்தி அவங்களை மிஸ்யூஸ் பண்ண விரும்பல. அவங்க படிக்கத்தான் வந்துருக்காங்கன்னு சொல்லி இருக்கிறார் நடிகர் சசிக்குமார்.

    ஜிப்ரானிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார். உங்களை ஆர்.கே.செல்வமணி சார் ஏழைகளின் இளையராஜான்னு சொன்னாரு. இளையராஜான்னா 2 கருத்து இருக்கு. மியூசிக்லயும் சிறப்பு. ஆக்டிவிட்டீஸ்லயும் சிறப்பு. நீங்க எப்படி இருப்பீங்கன்னு கேட்டார். அதற்கு ஜிப்ரான் பதில் சொன்னது இதுதான்.

    அவரு சொன்னது பெரிய வார்த்தை. யார் நடிச்சிருக்காங்கன்னு பார்க்கறதை விட எனக்கு ஸ்கிரிப்ட், டைரக்டர் தான் முக்கியம். இதுல கூட நாகராஜ்னு ஒரு டைரக்டர் ஆக்ட் பண்ணிருக்காங்க. எனக்கு ரொம்ப பிடிச்சது. பிடிச்ச உடனே இந்தப் படத்துல நாம இருக்கணும்னுதான் வாரேன். நான் அந்தப் படத்தோட கமிட் ஆகிறதுக்கு என்னோட சினிமாவுல இருக்குற லவ் மட்டும்தான். வேற எந்தக் காரணுமுமே இல்லை என்கிறார் ஜிப்ரான். ப்ரீடம் படம் வரும் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

  • 2வது நாளில் பறந்து போ, 3பிஎச்கே வசூல்… 8வது நாளில் மார்கன் வசூல்… முதலிடம் யாருக்கு?

    கடந்த வாரம் தமிழ்த்திரை உலகில் வெளியான 4 படங்களில் பறந்து போ, 3பிஎச்கே படங்கள் சக்கை போடு போட்டு வருகின்றன. அஃகேனம், ஃபீனிக்ஸ் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    மிர்ச்சி சிவா நடித்த பறந்து போ படம் பிக்கப் ஆகி வருகிறது. தந்தை, மகனுக்கு இடையே உள்ள உறவை அலசுகிறது படம். எப்போ பார்த்தாலும் வேலை வேலைன்னு அலையும் பெற்றோர்களுக்கு இது ஒரு பாடம். பிள்ளைகளையும் கொஞ்சம் கவனிங்க.

    அவங்களுக்குன்னு தனி உலகம் இருக்கு. அதுக்கு அழைச்சிட்டுப் போங்கன்னு சொல்கிறது படம். கடன் என்பது எல்லாருக்கும் இருக்கத்தான் செய்யும். அதற்காக அதையே நினைத்து வாழ்க்கையைத் தொலைச்சிடாதீங்க. பிள்ளைகளையும் கவனிங்க. அதுக பாவம் என்று சொல்கிறது படம்.

    படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து படம் வெளியான நாளில் அதாவது முதல் நாள் மாலை, இரவுக் காட்சிகள் எல்லாம் அதிகரித்துள்ளன. அதே போல 3பிஎச்கே படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

    சரத்குமார், தேவயாணி நடித்த இந்தப் படத்துல மிடில் கிளாஸ் ஃபேமிலி படும் கஷ்டங்களைத் தோலுரித்துக் காட்டி இருக்கிறார்கள். ஒரு வீடு கட்டுவதற்குள் என்ன பாடு படுகிறார்கள்? எப்படி பணத்தை சேமிப்பது? எப்படி கடனை அடைப்பதுன்னு படம் நம் வாழ்க்கையிலும் நடப்பதைப் போலவே காட்சிகளாக விரிகிறது.

    முதல் இரு படங்களையும் ஒப்பிடும் போது 3பிஎச்கே படம் தான் வசூலில் முதலிடத்தில் உள்ளது. அதே நேரம் விஜய் ஆண்டனி நடித்த மார்கன் 8 நாள் ஆகியும் வசூலில் 3பிஎச்கேவைத் தொட முடியவில்லை. வாங்க என்ன விவரம்னு பார்க்கலாம்.

    பறந்து போ படத்தின் 2வது நாள் வசூல் 1.3 கோடி. 3 பிஎச்.கே. படத்தின் 2வது நாள் வசூல் 2.5 கோடி. மார்கன் படத்தின் 8 நாள் வசூல் 2.2 கோடி.

  • 90களில் வசூலில் கல்லா கட்டிய டாப் 25 படங்கள்… முதலிடம் அவரு படமா?

    90களில் தமிழ்த்திரை உலகில் அதிகளவு கலெக்ஷனை அள்ளிய படங்களில் முதல் 25 இடங்களைப் பெற்றவை எவை என்று பார்ப்போமா… லிஸ்ட் இதோ…

    25வது இடத்தில் இருப்பது உலகம் பிறந்தது எனக்காக படத்தில் சத்யராஜ் 2 வேடங்களில் நடித்துள்ளார். எஸ்.பி.முத்துராமன் இயக்கியுள்ளார். அதிகபட்சமாக 50லட்சம் வசூல் ஆகியுள்ளது. 24வது இடத்தில் அவசர போலீஸ் ௧௦௦. பாக்கியராஜ் படம். இது 55 லட்சம் வசூல். 23வது இடத்தில் ராஜா கைய வெச்சா. படத்தில் பிரபு, ரேவதி, கவுதமி உள்பட பலர் நடித்துள்ளனர். சரத்குமார் தான் வில்லன். இது 60 லட்சம் கலெக்ஷன் பண்ணியது. 22வது இடத்தில் ஊருவிட்டு ஊருவந்து. படத்தில் ராமராஜன், கவுதமி, செந்தில், கவுண்டமணி உள்பட பலர் நடித்துள்ளனர். கங்கை அமரன் இயக்கியுள்ளார். 60 லட்சம் வசூலை அள்ளியுள்ளது.

    21வது இடத்தில் உள்ளது கார்த்திக் நடித்த இதயதாமரை. ரேவதி கதாநாயகி. இந்தப் படம் 65 லட்சத்தை வசூலித்துள்ளது. 20வது இடத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து இயக்கிய படம் புதுப்பாடகன். அமலா, சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 75 லட்சம் கலெக்ஷன் பெற்றுள்ளது.

    19வது இடத்தில் இருப்பது துர்கா. நிழல்கள் ரவி, வாகை சந்திரசேகர் உள்பட பலர் நடித்துள்ளனர். பேபிஷாலினி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ராமநாராயணன் இயக்கியுள்ளார். 75 லட்சத்தை வசூலித்த படம்.

    18வது இடத்தில் மனைவி ஒரு மாணிக்கம் என்ற படம் உள்ளது. அர்ஜூன், ராதா உள்பட பலர் நடித்துள்ளனர். 80 லட்சம் கலெக்ஷன் பெற்றுள்ளது. சந்திரமுகி படமே இதைப் பார்த்துத் தான் காபி பேஸ்ட் பண்ணினாங்களோன்னு தோணும். 17வது இடத்தில் சத்யராஜ், கவுதமி, சரத்குமார், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்த படம் வேலை கிடைச்சிடுச்சு. 85 லட்சம் வசூல் கொடுத்த படம். 16வது இடத்தில் பிரபு, ரேவதி நடித்த அரங்கேற்ற வேளை உள்ளது. பாசில் இயக்கியுள்ளார். இந்தப் படம் 90 லட்சம் கலெக்ஷனைப் பெற்றுள்ளது.

    15வது இடத்தில் கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் முதலாவதாக வந்த படம் புரியாத புதிர். ரகுவரன், ரேகா, நிழல்கள் ரவி, சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். 1.1கோடி கலெக்ஷனை அள்ளியது. 14வது இடத்தில் மனோஜ்குமார் இயக்கத்தில் ராம்கி, நிரோஷா நடித்த படம் மருதுபாண்டி. 1.2 கோடி கலெக்ஷனை அள்ளியது.

    14வது இடத்தில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படம் இந்திரன் சந்திரன். கமல் இரட்டை வேடம். விஜயசாந்தி ஹீரோயின். 1.2 கோடி கலெக்ஷன். 13வது இடத்தில் மது இயக்கத்தில் மம்முட்டி, அமலா, சரத்குமார் உள்பட பலர் நடித்த படம் மௌனம் சம்மதம். இந்தப் படத்தின் கலெக்ஷன் 1.3கோடி.

    12வது இடத்தில் ராதா பாரதி இயக்கத்தில் பிரசாந்த் நடித்த படம் வைகாசி பொறந்தாச்சு. தேவா இசையில் சூப்பர்ஹிட் பாடல்கள். இது பிரசாந்துக்கு முதல் படம். 1.5கோடி வசூல். 11வது இடத்தில் கேளடி கண்மணி வசந்த் இயக்கத்தில் வெளியான முதல் படம். எஸ்.பி.பி., ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். 2 கோடி வசூலை அள்ளியது. டாப் 10ல் உள்ள படம் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்த அதிசய பிறவி. கலெக்ஷன்ல 2.2 கோடி.

    9வது இடத்தில் இருப்பது இணைந்த கைகள். இயக்கம் என்.கே.விஸ்வநாதன். கதை ஆபாவாணன். ராம்கி, அருண்பாண்டியன் இணைந்து நடித்த படம். நாசர் வில்லன். ஸ்ரீவித்யா, நிரோஷா உள்பட பலர் நடித்துள்ளனர். 2.5கோடி கலெக்ஷன்.

    டாப் 8ல் உள்ள படம் நடிகன். சத்யராஜ், குஷ்பு, கவுண்டமணி, மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். பி.வாசு இயக்கிய காமெடி படம். 2.6கோடி கலெக்ஷன். டாப் 7ல் உள்ள படம் மணிரத்னம் இயக்கத்தில் வந்த அஞ்சலி. ரகுவரன், பிரபு, பேபி ஷாமிலி உள்பட பலர் நடித்துள்ளனர். 2.75 கோடி கலெக்ஷன்.

    டாப் 6ல் வெளியானது புதுவசந்தம். விக்ரமன் இயக்கியுள்ளார். முரளி, சித்தாரா உள்பட பலர் நடித்துள்ளனர். 2.8 கோடி கலெக்ஷன். டாப் 5ல் உள்ள படம் கார்த்திக் நடித்த கிழக்கு வாசல். ஆர்.வி.உதயகுமார் இயக்கியுள்ளார். ரேவதி, குஷ்பு உள்பட பலர் நடித்துள்ளனர். 3 கோடிக்கு மேல் கலெக்ஷன்.

    டாப் 4ல் விஜயகாந்த் நடித்த சத்ரியன். கே.சுபாஷ் இயக்கியுள்ளார். பானுப்பிரியா, ரேவதி, விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். 4 கோடிக்கு மேல் கலெக்ஷன். டாப் 3ல் ரஜினி நடித்த பணக்காரன். பி.வாசு இயக்கியுள்ளார். கவுதமி, ஜனகராஜ், ராதாரவி உள்பட பலர் நடித்துள்ளனர். 4.75 கோடி கலெக்ஷன்.

    டாப் 2ல் உள்ளது விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை. ஆர்.கே.செல்வமணி இயக்கிய முதல் படம். 4.78 கோடிவரை வசூல். டாப் 1ல் உள்ளது கமல் 4 வேடத்தில் நடித்த மைக்கேல் மதன காமராஜன். குஷ்பூ, ஊர்வசி உள்பட பலர் நடித்துள்ளனர். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியுள்ளார். இந்தப் படம் 5 கோடிக்கு மேல் கலெக்ஷனை அள்ளியுள்ளது.