Tag: latestcinemanews

  • அந்த படத்தில் நடித்ததால் லாட்ஜில்… ஓபனாக சொல்லிக்கொண்டு இருக்கும் நம்பர் நடிகை

    தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மாஸ்நாயகியாக வலம் வந்த அந்த நம்பர் நடிகை தற்போது மிகப்பெரிய தொய்வை சந்தித்து வருகிறார். ரவுடி இயக்குனரை கல்யாணம் செய்து நான்கே மாதத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்து இருப்பதாக அறிவித்தார்.

    இது பெரிய அளவில் சர்ச்சையானது. நாயகி குறித்து பல யூகங்கள் வெளியானது. இது அவருடைய சினிமா கேரியரில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அம்மணி நடித்த 11 க்கும் அதிகமான திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் நம்பர் நடிகையை தங்களுடைய படங்களில் ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

    இதனால் நடிகை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரொம்பவே ஆக்டிவாக வலம் வருகிறார். தன்னுடைய பிசினஸ் ப்ரோமோஷன்களையும் செய்து தான் இருக்கிறேன் என்பதை அடிக்கடி தற்போது ரசிகர்களிடம் காட்டி வருகிறார். ஒரு காலத்தில் பட ப்ரொமோஷனுக்கே வராதவர். தற்போது பல இடங்களில் காணப்படுகிறார்.

    இந்நிலையில் அம்மணி தன்னுடைய ஆரம்ப காலத்தில் இந்தியாவுக்கு எதிராக 18 முறை படையெடுத்த அந்த முகமது படத்தில் நடித்தது தவறான முடிவு எனக் இருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தனக்கு சொன்ன கதை வேறு. ஆனால் தான் நடித்த கதை வேறு எனவும் தெரிவித்திருக்கிறார்.

    அப்படத்தில் தன்னை கிளாமராக காட்டி தன்னுடைய கேரியர் ஆரம்பத்திலேயே பெரிய தப்பை செய்து விட்டேன் எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது. அப்படத்தின் படப்பிடிப்பு சமயத்திலேயே அம்மணி படத்தை முடித்துவிட்டு லாட்ஜில் தன்னுடைய ரூமில் ஒவ்வொரு நாளும் அழுததாகவும் தற்போது தகவல்கள் கசிந்து வருகிறது.

  • சிம்புவோட மார்கெட்டே போயிருக்கும்! நல்லவேளை அந்த நடிகர் நடிக்கல.. மாநாடு படத்தில் நடிக்க இருந்த நடிகர்

    சிம்புவின் ரீ எண்டிரிக்கு ஒரு காரணமாக அமைந்த திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு பொலிட்டிக்கல் ஆக்சன் திரில்லர் படமாக அமைந்தது தான் இந்த மாநாடு திரைப்படம். இந்த படத்தில் கூடுதல் அம்சமாக பேசப்பட்ட ஒரு விஷயம் என்னவெனில் லூப்பிங் கான்செப்டில் இந்த கதை அமைந்தது. இது ரசிகர்களை மிகவும் கவர்ந்த வண்ணம் இருந்தன.

    அதுவரை சிம்பு நடித்த எந்த படமும் மக்கள் மத்தியில் சரியான ஒரு வரவேற்பை பெறாததால் சிம்புவின் மார்க்கெட் மிகவும் குறைந்து இருந்தது. அதன் பிறகு தன் உடல் எடையை குறைத்து ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாநாடு திரைப்படத்தின் மூலம் சரியான கம்பேக் கொடுத்திருந்தார் சிம்பு. படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய நிலையில் 100 கோடி கிளப்பிலும் இந்த படம் இணைந்தது.

    பெரிய அளவில் பேசப்பட்ட இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்புவே இல்லையாம். இதைப் பற்றி வெங்கட் பிரபு ஒரு வீடியோவில் பேசியது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கார்த்தியுடன் இணைந்து பிரியாணி என்ற படத்தை எடுத்திருந்தார் வெங்கட் பிரபு. ஆனால் பிரியாணி படம் எடுப்பதற்கு முன்பாக இந்த மாநாடு திரைப்படத்தை தான் கார்த்தியை வைத்து எடுக்க நினைத்தாராம்.

    ஆனால் அந்த சமயத்தில் லூப்பிங் கான்செப்ட் இல்லாமல் ஒரு அரசியல் படமாகவே கார்த்தியை வைத்து எடுக்கலாம் என நினைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. ஆனால் அந்த நேரத்தில் தான் கார்த்தி சகுனி திரைப்படத்தில் நடித்திருந்தார். சகுனி திரைப்படம் ஒரு பொலிடிக்கல் சார்ந்த கமர்சியல் படமாக இருந்தது.

    அதனால் ஏற்கனவே பொலிடிகல் கான்செப்டில் நடித்த விட்டதாகவும் இந்த படத்தில் நான் நடிக்க முடியாது எனவும் கார்த்தி கூறிவிட்டாராம். அதன் பிறகு தான் கதையை மாற்றி பிரியாணி என்ற பெயரில் புதிய ஒரு கதையை தயார் செய்து கார்த்தியை நடிக்க வைத்திருக்கிறார். இருந்தாலும் மாநாடு திரைப்படத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்த வெங்கட் பிரபுவுக்கு சிம்பு மனதில் பட சிம்புவை வைத்து அந்த படத்தை எடுத்திருக்கிறார்.படமும் பெரிய அளவில் பேசப்பட்டது.

  • அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் பாட்டு உருவான ரகசியம்… அட இளையராஜா அப்படியா சொன்னாரு..?

    இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு மயங்காத ரசிகர்களே இருக்க முடியாது. அவர் 80களில் கிட்டத்தட்ட வருடத்திற்கு 50 முதல் 60 வரையிலான படங்களுக்கு இசை அமைத்துக் கொடுப்பாராம்.

    ஒரே வாரத்தில் 2 அல்லது 3 படங்கள் வரை இசை அமைத்துக் கொண்டு இருப்பாராம். அந்த மாதிரி நேரங்களில் அவருக்கும் இருக்குற காலகட்டம் ரொம்பவே குறைவு என்பதால் எஸ்.பி.பி., சித்ரா, மனோ, எஸ்.ஜானகி, ஜேசுதாஸ் என தனக்கு மிகவும் பரிச்சயமான பாடகர்களுக்குத் தான் அதிகளவில் சான்ஸ் கொடுப்பாராம்.

    பிற புதுப் பாடகர்கள் என்றால் அவர்களுக்கு ஒவ்வொன்றாக சொல்லித்தர வேண்டியிருக்கும். அதற்கான நேரமும் இருக்காது என்பதால் தவிர்த்து விடுவாராம்.

    சமீபத்தில் சென்னையில் நடந்த இளையராஜாவின் இசைக்கச்சேரியில் சுவாரசியமான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார் இளையராஜா. அது இதுதான்.

    இளையராஜாவிடம் இயக்குனர்கள் மணிரத்னம், மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா ஆகியோர் தான் சூழ்நிலையை மட்டும் சொல்லிவிட்டு நீயே எப்படி வேணாலும் பாட்டு போட்டுக்கோன்னு சொல்லிவிடுவார்களாம்.

    எனக்கு இப்படித்தான் பாட்டு வேணும்னு கேட்க மாட்டார்களாம். அதில் முதலாமவர் மணிரத்னம். சூழு;நிலையை மட்டும் சொல்லி விட்டு அதுக்குப் பொருத்தமா பாட்டுப் போடுன்ன சொல்லிவிடுவார்.

    பாரதிராஜாவிடம் ‘இந்த இடம் கண்றாவியா இருக்குய்யா… இதுல ஒரு பாட்டு வையுய்யா’ன்னு சொன்னுன். ‘அப்படியா போட்டுவிடு’ன்னு சொல்வாரு. அப்படித்தான் ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ பாட்டு ரெடியானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ஒவ்வொரு பாடலுக்கும் விளக்கம் சொல்லணும்னா அதுக்கு நேரம் பத்தாது. சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு பாடலுக்குப் பின்னாடியும் அவ்வளவு விஷயம் இருக்கு என்கிறார் இசைஞானி. தமிழ்த்திரை உலகில் இசைப்புரட்சியை செய்தவர் அவர் தான். ஏன்னா அதிகளவில் சூப்பர்ஹிட்டான பாடல்களைக் கொடுத்தவர் அவராகத் தான் இருக்கும். உதாரணத்திற்கு தோல்விப்படங்களாக இருந்தாலும் அதில் இளையராஜா இருந்தால் பாடல் இனிமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • என்ன ரஜினிக்கு அந்த சூப்பர்ஹிட் படத்தில் டப்பிங் பேசியது பாடகர் மனோவா?

    ரஜினி ரசிகர்கள் மனதில் ஸ்பெஷலான இடம்பிடித்திருக்கும் படம் படையப்பா. பஞ்ச், எமோஷன், ஹீரோயிஸன் என பக்கா கமர்ஷியல் படமாக 1999-ல் வெளியாகி, அந்த டைமில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கலெக்‌ஷனை ஈட்டிய படம் என்ற புகழ்பெற்றது படையப்பா.

    கே.எஸ்.ரவிக்குமார் – ரஜினி – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி முத்துவுக்குப் பிறகு சொல்லியடித்த படம். இதில், ரஜினி தவிர்த்து சிவாஜி, லட்சுமி, சௌந்தர்யா, நாசர், மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கியமான ரோல்களில் நடித்திருந்தனர். குறிப்பாக, வில்லியாக நீலாம்பரி ரோலில் ரம்யாகிருஷ்ணன் மிரட்டியிருப்பார்.

    உலகம் முழுக்க 210 பிரிண்டுகள் போடப்பட்டு, 7 லட்சம் ஆடியோ கேசட்டுகளுடன் வெளியான முதல் தமிழ் படம் என்கிற பெருமையும் படையப்பாவுக்கு உண்டு. சௌந்தர்யா நடித்திருந்த வசுந்த்ரா கேரக்டரில் நடிக்க சிம்ரன், மீனா உள்ளிட்டோரின் பெயர்கள் ஆரம்பத்தில் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல், ரஜினியின் சகோதரியாக சித்தாரா நடித்திருந்த கேரக்டரில் நடிக்க ஷாலினியையும் யோசித்திருக்கிறார்கள்.

    ரஜினிக்கு சொந்தமாக ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் கிளைமேக்ஸ் காட்சியோடு ஷூட்டிங்கைத் தொடங்கியிருக்கிறார்கள். அதேபோல், நீலாம்பரியின் அறிமுகக் காட்சியில் அவர் வந்திறங்கும் டொயோட்டா சியாரா கார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்குச் சொந்தமானது. படம் 19 ரீல்கள் கொண்டதாக இருந்தபோது, இரண்டு இடைவேளைகளை விடலாம் என்று கே.எஸ்.ரவிக்குமாருக்கு ரஜினி ஆலோசனை சொன்னதும் நடந்தது. ஆனால், கே.எஸ்.ரவிக்குமாருக்கு அதில் விருப்பமில்லை.

    ரம்யா கிருஷ்ணன் கேரக்டர் பரவலான பாராட்டுகளைப் பெற்ற நிலையில், சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதும் அவருக்குக் கிடைத்தது. அதேபோல், தமிழ்நாடு அரசின் விருதுப் பிரிவில் 5 விருதுகளையும் படம் வென்றது. இந்தப் படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அங்கும் பெரிய வெற்றியைக் குவித்தது.

    தெலுங்கில் ரஜினிக்கு வாய்ஸ் கொடுத்தது பிரபல பிண்ணனிப் பாடகரான மனோ. படத்தில் வரும் பிரபலமான `அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும்…’ டயலாக்கை தெலுங்கில் பாடகர் மனோ டப் செய்துகொண்டிருந்தபோது அங்கே ரஜினி வந்திருக்கிறார். மனோவுக்கு ரஜினியைப் பார்த்ததும் பதட்டமும் அதிகமாகவே, பேசவே சிரமப்பட்டிருக்கிறார்.

    `சார், உங்களைப் பார்த்தா எனக்குக் கொஞ்சம் பதட்டமா இருக்கு’ என எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் ரஜினி அங்கிருந்து கிளம்பவில்லையாம். `நல்லா வருது மனோ.. பண்ணுங்க.. பண்ணுங்க’ என ஊக்கப்படுத்தியிருக்கிறார். அவரின் டயலாக் டெலிவரியை ரசித்த ரஜினி அங்கேயே தொடர்ந்து பாராட்டவும், ஒரு வழியாக சமாளித்து அந்த டயலாக்கை பேசி அசத்தினாராம் மனோ.என்ன ரஜினிக்கு அந்த சூப்பர் ஹிட் படத்தில் டப்பிங் பேசியது பாடகர் மனோவா? இது நம்ம லிஸ்ட்டிலயே இல்லயே!..

  • முடிவுக்கு வந்த நீயா நானா போட்டி! அசால்ட்டா தூக்கிய சிவகார்த்திகேயன்.. என்ன தனுஷ் இப்படி ஆச்சே?

    புறநானூறு திரைப்படத்திலிருந்து சூர்யா விலக அதன் பிறகு அந்த படத்தில் ஒரு பக்கம் தனுஷ் நடிப்பதாகவும் இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகிக் கொண்டே இருந்தது. சுதா கொங்கராவுடன் ஏற்கனவே தனுஷ் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதனாலையே புறநானூறு திரைப்படத்தில் அவர் நடிப்பார் என்றும் செய்தி பரவி வந்தன.

    ஆனால் இந்தப் பக்கம் சிவகார்த்திகேயனும் சுதா கொங்கரா உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் அந்தப் படத்தின் கதையே புறநானூறு படத்தின் கதைதான் என்றும் ஒரு தகவல் வெளியானது. ஆக மொத்தம் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தான் செய்திகள் வெளியாகி வந்தன.

    ஆனால் இப்போது வந்த தகவலின் படி புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக உறுதியாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர்கள் யாரேனும் தயாரிப்பார்கள் என்று எண்ணியிருந்த நிலையில் திடீரென ஒரு புது தயாரிப்பாளரை இந்த படத்தின் மூலம் அறிமுகம் செய்கிறார்கள் புறநானூறு பட குழு.

    இவர் பெயர் ஆகாஷ் கிருஷ்ணன். இவர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவராம். ஏற்கனவே லைக்காவுடன் இணைந்து ஆதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்கி இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் இவருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே ஒரு நெருக்கமான நட்பும் இருந்து வருகிறதாம்.

    அக்ரீமெண்ட் வரை இதனுடைய பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறதாம். விரைவில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள். ஏற்கனவே புறநானூறு படத்தில் சூர்யா நடிக்க அவருடைய 2d நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது.

    ஆனால் கதையில் ஏற்பட்ட ஒரு சிறு கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா இந்த படத்தில் இருந்து விலக அதன் பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷை வைத்து இந்த படத்தை எடுக்கலாம் என்ற முயற்சியில் சுதா கொங்கரா நினைத்திருந்தார்கள். கடைசியில் சிவகார்த்திகேயன் தான் இந்தப் படத்திற்கு கமிட்டாகி இருக்கிறார். ஆக மொத்தம் சிவகார்த்திகேயன் லைன் அப்பில் வரிசையாக பல நல்ல நல்ல படங்கள் இருந்து வருகின்றன. கூடிய சீக்கிரம் அவருடைய அந்த இலக்கை அடைந்து விடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

  • கேம் சேஞ்சராவது மண்ணாங்கட்டியாவது.. ஒட்டுமொத்தமா ஷங்கரை காலி பண்ண அக்கடதேசம்

    இந்தியன் 2 படத்தின் ரிசல்ட் ஷங்கர் மீது இருந்த ஒரு நம்பிக்கையை தலைகுப்பற கவிழ்த்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இது நாள் வரை சங்கரை இந்திய சினிமாவின் பிரம்மாண்டம் என்று மிகப் பெருமையாக பேசி வந்த நிலையில் இந்த ஒரு படம் அத்தனை பெருமையையும் ஒரேடியாக சாய்த்து விட்டது. ஷங்கர் கெரியரில் வசூலில் மண்ணை கவ்விய திரைப்படமாக இந்தியன் 2 திரைப்படம் அமைந்ததாக சொல்லப்படுகிறது.

    அவருடைய படங்களை பொருத்தவரைக்கும் விமர்சன ரீதியாக பார்ப்பதை விட வசூலில் மிகப்பெரிய சாதனையை தான் இதுவரை ஷங்கரின் படங்கள் செய்து வந்தன. ஆனால் இந்தியன் 2 படத்தை பொருத்தவரைக்கும் வசூலில் பெரும் ஏமாற்றத்தையே சந்தித்திருக்கின்றன. இதுவரைக்கும் சங்கர் படத்தை யாரிடமும் போட்டுக் காட்டவில்லையாம். அவருடைய ஒரு பழக்கமும் இதுதான் என சொல்லப்படுகிறது.

    தன் படத்தை ரிலீஸ் – க்கு முன்பு யாரிடமும் இதுவரை போட்டு காட்டியதே இல்லையாம். அது மட்டுமல்லாமல் படத்தில் இருக்கும் ஒரு பெரிய குறையாக பார்க்கப்பட்டது படத்தின் நீளம். அதையும் எடிட்டில் கட் செய்ய மாட்டேன் என்றும் பிடிவாதமாக இருந்திருக்கிறார். அதன் பிறகு ரசிகர்கள் பார்த்து தயவுசெய்து நீளத்தை குறையுங்கள் என சொன்ன பிறகே படத்தின் நீளத்தை குறைக்க சம்மதம் தெரிவித்தாராம்.

    அதிலும் ஒரு 20 நிமிட காட்சியை குறைத்தால் ஓரளவு படம் தேரும் என்று கூறிய நிலையிலும் 11 நிமிடங்கள் மட்டுமே கட் செய்து இருக்கிறாராம் ஷங்கர் .இதில் எந்த ஒரு பெரிய மாற்றமும் நிகழ்ந்து விடாது என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க ஆந்திராவில் ராம் சரணை காலி செய்ய காத்திருக்கும் தமிழ் இயக்குனர் என பத்திரிகைகளில் செய்தி வந்து கொண்டே இருக்கின்றதாம்.

    அதற்கு காரணமும் இந்த இந்தியன் 2 திரைப்படத்தின் ரிசல்ட் தான். ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் ஆகிய இரு படங்களை எடுத்து வந்த நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் இந்தியன் 2 ரிலீஸ் ஆன பிறகு ஆந்திராவில் ராம்சரனின் ரசிகர்களும் பெரும் கலக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    அந்தப் படத்தை தயாரிப்பது தில் ராஜு. அதனால் கண்டிப்பாக படம் ரிலீஸ் ஆவதற்கு முன் கேம் சேஞ்சர் படத்தை தில் ராஜு போட்டுக் காட்டும் படி சொல்லுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என தில்ராஜு சொன்ன நிலையில் அதற்கு சங்கர் சம்மதிக்கவே இல்லையாம். நான் சொல்லாமல் ரிலீஸ் செய்தியை அறிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டாராம் சங்கர்.

    ஆனால் இந்தியன் 2 படத்தின் ரிசல்ட்டுக்கு பிறகு ஷங்கரின் பேச்சு அங்கு எடுபடாது என்பதை போல ஒரு செய்தி வந்து கொண்டிருக்கிறது. ஆக மொத்தம் இந்தியன் 2 திரைப்படம் ஷங்கரின் ஒட்டுமொத்த புகழையும் உடைத்து விட்டதாகவே தெரிகிறது.

  • விஜயே கதினு இருந்தவருக்கு லம்பா ஒரு ஆஃபரை கொடுத்த அஜித்! இனிமேதான் பாக்க போறோம் ஆட்டத்த

    தமிழ் சினிமாவில் விஜய் அஜித் என இரு பெரும் நடிகர்கள் இந்த கோலிவுட்டையே கலக்கி வருகிறார்கள். எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என இந்த மாபெரும் நட்சத்திரங்களுக்கு அடுத்த நிலையில் இவர்கள் இருவரும் தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இருவருக்குமே இணையான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர்.

    விஜய் அஜித் படங்கள் ரிலீஸ் சமயத்தில் ரசிகர்களின் ஆட்டத்திற்கு ஒரு அளவே இல்லை. அந்த அளவுக்கு ஒரு திருவிழாவைப் போல இவர்களின் படங்களை மிக விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். தொழில் முனையில் இவர்களுக்கு இடையில் ஒரு பலமான போட்டி இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் இருவரும் நண்பராகவே பழகி வருகிறார்கள்.

    ஆரம்பத்தில் இருந்தே இப்போது வரைக்கும் இவர்களும் சரி இவர்களுடைய குடும்பங்களும் சரி ஒரு நண்பர்களைப் போலவே பழகி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் இந்த படத்தின் மீது அதிக அளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏற்கனவே அருண் விஜயின் மார்க்கெட் சரிந்த நிலையில் அவருக்கு ஒரு நல்ல படத்தை கொடுத்து அருண் விஜயை மீட்டுக் கொடுத்தவர் மகிழ்திருமேனி என்பது அனைவருக்கும் தெரியும்.

    அப்படிப்பட்டவருக்கு அஜித் போன்ற மாபெரும் நடிகர்கள் கையில் கிடைத்தால் எப்பேர்ப்பட்ட படத்தை கொடுப்பார்கள் என அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள். ஆனால் அருண் விஜயின் படத்தை பார்த்த விஜய் மகிழ்திருமேனியிடம் நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என சொன்னதாகவும் விஜய்யிடம் இரண்டு கதைகளை மகிழ் திருமேனி சொன்னதாகவும் வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

    அந்த இரு கதைகளும் விஜய்க்கு பிடித்து போக அதில் ஏதாவது ஒரு கதை நாம் எடுத்து பண்ணலாம் என விஜய் கூறினாராம். ஆனால் அந்த நேரத்தில் மகிழ்திருமேனி உதயநிதியை வைத்து கழகத் தலைவன் என்ற படத்தில் கமிட்டாக விஜயுடன் சேர்ந்து படம் பண்ணாமல் போனது. விஜயை வைத்து ஒரு நல்ல வாய்ப்பு வந்த நிலையில் இப்படி மிஸ் ஆகிவிட்டதே என வருத்தத்தில் இருந்த மகிழ்திருமேனிக்கு ஒரு பெரிய ஆஃபராக வந்தது தான் அஜித்தை வைத்து எடுக்க போகும் விடாமுயற்சி திரைப்படத்தின் கதை.

    ஆனால் மகிழ்திருமேனியை முதலில் லைக்காதான் அழைத்து பேசியிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் சுமூகமான பேச்சு வார்த்தை வளர அதன் பிறகு தான் அஜித்தை அனுகியிருக்கிறார்கள். இவ்வாறு வலைப்பேச்சு அந்தணன் அந்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

  • நீங்களாச்சும் காப்பாத்துங்கப்பா… தனுஷின் ராயன் டிரைலர் எப்போ தெரியுமா? ரிலீஸ் அப்டேட்..

    சமீப காலங்களாகவே கோலிவுட் திரைப்படம் பெரிய அளவில் ஒரு திரைப்படத்தின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. 2024 இரண்டாம் பகுதியில் எக்கச்சக்கமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அந்த வரிசையில் இந்தியன் முதல் படமாக திரையரங்குக்கு வந்தது.

    ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் அப்படம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் மீண்டும் ரசிகர்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தனுஷின் ராயன் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படம் இந்த மாதம் 26ந் தேதி திரையரங்குக்கு வர இருக்கிறது.

    இப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கிறார். வடசென்னையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது.

    இப்படத்தின் கடைசிகட்ட பணிகள் முடிந்து படத்தின் சிங்கிள் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை(16 ஜூலை) திரைக்கு வர இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் ரிலீஸாகி இருக்கிறது.

    ஏற்கனவே ஜனவரியில் கேப்டன் மில்லர் ரிலீசான நிலையில் அப்படம் சுமாரான விமர்சனங்கள் மட்டுமே பெற்றது. இதனால் தனுஷ் ரசிகர்களும் ராயன் ரிலீஸுக்கு பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். வடசென்னை படத்துக்கு பின்னர் தனுஷின் இப்படமும் ஏ சான்றிதழ் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • அந்த படத்தில் நடித்ததால் லாட்ஜில்… ஓபனாக சொல்லிக்கொண்டு இருக்கும் நம்பர் நடிகை

    தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மாஸ்நாயகியாக வலம் வந்த அந்த நம்பர் நடிகை தற்போது மிகப்பெரிய தொய்வை சந்தித்து வருகிறார். ரவுடி இயக்குனரை கல்யாணம் செய்து நான்கே மாதத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்து இருப்பதாக அறிவித்தார்.

    இது பெரிய அளவில் சர்ச்சையானது. நாயகி குறித்து பல யூகங்கள் வெளியானது. இது அவருடைய சினிமா கேரியரில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அம்மணி நடித்த 11 க்கும் அதிகமான திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் நம்பர் நடிகையை தங்களுடைய படங்களில் ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

    இதனால் நடிகை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரொம்பவே ஆக்டிவாக வலம் வருகிறார். தன்னுடைய பிசினஸ் ப்ரோமோஷன்களையும் செய்து தான் இருக்கிறேன் என்பதை அடிக்கடி தற்போது ரசிகர்களிடம் காட்டி வருகிறார். ஒரு காலத்தில் பட ப்ரொமோஷனுக்கே வராதவர். தற்போது பல இடங்களில் காணப்படுகிறார்.

    இந்நிலையில் அம்மணி தன்னுடைய ஆரம்ப காலத்தில் இந்தியாவுக்கு எதிராக 18 முறை படையெடுத்த அந்த முகமது படத்தில் நடித்தது தவறான முடிவு எனக் இருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தனக்கு சொன்ன கதை வேறு. ஆனால் தான் நடித்த கதை வேறு எனவும் தெரிவித்திருக்கிறார்.

    அப்படத்தில் தன்னை கிளாமராக காட்டி தன்னுடைய கேரியர் ஆரம்பத்திலேயே பெரிய தப்பை செய்து விட்டேன் எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருவதாக கூறப்படுகிறது. அப்படத்தின் படப்பிடிப்பு சமயத்திலேயே அம்மணி படத்தை முடித்துவிட்டு லாட்ஜில் தன்னுடைய ரூமில் ஒவ்வொரு நாளும் அழுததாகவும் தற்போது தகவல்கள் கசிந்து வருகிறது.

  • என்னது… ரஜினியே சாமியாராப் போகப்போறேன்னு சொன்னாரா? இது புதுசால்ல இருக்கு!

    சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்னு ஒரு பாட்டு உண்டு. அந்தப் பாடலில் இருந்தே தமிழ்த்திரை உலகில் ரஜினிகாந்துக்கு எவ்வளவு மவுசு இருக்குன்னு தெரிந்து கொள்ளலாம். அவர் ஆரம்பத்தில் கமல் நடித்த படங்களில் வில்லனாகவே நடித்து வந்தார்.

    ஒரு காலகட்டத்தில் அவருக்கு என்று உள்ள தனிப்பட்ட ஸ்டைல், டயலாக் எல்லாம் தனி ஒரு ரசனையைக் கொண்டு வந்து சேர்த்தது. அதுவே அவருக்குக் காலப்போக்கில் ஏராளமான ரசிகர்கள் வட்டாரத்தையும் கொண்டு வந்தது. ரஜினியின் நடிப்பில் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி அதைத் தன்னோட தனித்துவமாகவே மாற்றிக்கொண்டார்.

    தன் ஆருயிர் நண்பர் கமலின் அறிவுரைப்படி தனியாக நடிக்க ஆரம்பித்தார். வளர வளர அவருடைய படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன. வசூலை வாரிக்குவித்தன.

    அதே வேளையில் சூப்பர்ஸ்டார் ஆன்மிகத்திலும் ஈடுபாடுடன் இருந்தார். ஒவ்வொரு படம் முடியும் போதும் இமயமலைக்குச் சென்று ஓய்வெடுப்பார்.

    அந்த வகையில் ஒரு வித்தியாசமான கேள்வி யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் ரஜினியைப் பற்றி அலசப்பட்டது. அது இதுதான். வாங்க பார்க்கலாம்.

    ‘ஒரு காலகட்டத்துல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறதை விட்டுவிட்டு சாமியாரா ஆக முடிவு பண்ணினார் என சொல்றாங்களே… அது எந்த வருஷம்? பாலசந்தர் சொல்லியும் கேட்காத ரஜினிகாந்த்தை கமல் தான் பேசி நடிக்க வைத்தார் என்று சொல்கிறார்களே அது உண்மையா?

    அப்படி இருந்தா சிறந்த நட்பின் இலக்கணம் என அதை எடுத்துக்கலாமா’ என நேயர் ஒருவர் இயக்குனரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் என்ன பதில் சொன்னார்னு பாருங்க…

    ஒரு காலகட்டத்தில் இந்தத் திரையுலகை விட்டு விலக வேண்டும் என ரஜினிகாந்த் முடிவு எடுத்தது உண்மை தான். அப்போது அவரிடம் பேசி சரி செய்ததில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்றார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.