Tag: Santhanam

  • விஜய்யோட அந்த படம் ரிலீஸ் தள்ளிப்போக காரணமே நான் தான்!.. ஓபனாக ஒத்துக்கொண்ட சந்தானம்!..

    நடிகர் விஜய்யை முதன்முறையாக அரசியலில் இழுத்து விட்டதே நான் தான் என நடிகர் சந்தானம் டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். ஆர்யா தயாரிப்பில் ஹீரோவாக டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்துள்ள சந்தானம் திரும்பும் பக்கம் எல்லாம் சர்ச்சைகள் வெடிப்பது போல வெடிக்க ஆரம்பித்துள்ளது.

    எல்லாமே படத்தின் புரமோஷனுக்காக பயன்படும் என செய்கிறாரா இல்லை அவரை சுற்றி நடக்கிறதா என்றே தெரியவில்லை. கிஸ்ஸா பாடலில் “கோவிந்தா கோவிந்தா” என சுப்ரபாதம் ட்யூன் இடம்பெற்றுள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையானை சந்தானம் சதாய்க்கிறார் என எடப்பாடி பழனிசாமியிடம் பவன் கல்யாண் கட்சியான ஜன சேனா கட்சி நிர்வாகிகள் புகார் அளிக்கும் அளவுக்கு பிரச்னை பெரிதாகி வருகிறது.

    உதயநிதி ஸ்டாலின் அழைத்தால் பிரச்சாரம் செய்ய போவேன் என சந்தானம் சொன்னதால் அதிமுகவினர் சந்தானத்தின் மீது கொலை வெறியில் உள்ளனர். இந்நிலையில், கோவிந்தா சர்ச்சையும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்துக்கு சிக்கலை உண்டாக்கும் என தெரிகிறது.

    இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தொடர்ந்து பல யூடியூப் சேனல்கள், மீடியாக்கள் என தன்னை நம்பி நண்பன் ஆர்யா பணம் போட்ட நிலையில், புரமோஷனில் பிசியாகி வருகிறார் சந்தானம். அப்படி ஒரு பேட்டியில் சந்தானத்திடம் விஜய்யின் தலைவா படத்தில் அவர் பேசிய வசனம் பற்றி கேட்கும் போது, தலைவா படம் ரிலீஸ் தள்ளிப்போகவே காரணம் நான் பேசிய வசனம் தான்னு விஜய் சொன்னார் எனக் கூறியுள்ளார்.

    தலைவா படம் ஏன் தளபதி சொன்ன டேட்ல ரிலீஸ் ஆகலன்னு தெரியாம கேட்டுட்டேன், நீ பாட்டுக்கு போற போக்கில், “அரசியல்வாதியாக அனைத்து தகுதியும் உன்கிட்ட இருக்குன்னு டயலாக் பேசிட்ட” அது சிலருக்கு பிடிக்காமல் தான் பஞ்சாயத்து என்றார். விஜய்யை முதல் முதலாக அரசியலில் இழுத்து விட்டது நான் தான்னு நினைக்கிறேன் என சிரித்துக் கொண்டே கூறினார்.

  • தெரிஞ்சா அப்பவே உஷார் பண்ணியிருப்பேன்.. சமந்தா – சந்தானத்திற்கு இப்படியொரு ப்ளாஷ்பேக்கா?

    தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சமந்தா. தமிழில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதற்கு முன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் துணை நடிகையாக நடித்திருப்பார். அதே விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கில் ரீமேக் ஆகும் போது தெலுங்கில் ஹீரோயினாக நடித்தது சமந்தா தான்.

    சென்னையில் உள்ள பல்லாவரம் தான் அவருடைய ஏரியா. அதனால் அவரை பல்லாவர பொண்ணு என்று தான் ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். இங்கு பல்லாவரத்தில் பிறந்தவரா இன்று ஒரு பேன் இந்தியா நடிகையாக மாறி இருக்கிறார் என அவரைப் பார்த்து ஆச்சரியப்படுபவர்களும் ஏராளம். குறிப்பாக சென்னைவாசிகள் அவரை கையில் வைத்து தாங்குகிறார்கள்.

    அந்த அளவுக்கு சென்னையில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் அவருக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் அவருடைய திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனையும் அவர் மீது கூடுதல் அக்கறை கொள்ள காரணமாக இருந்தது. திருமண விவாகரத்துக்கு பிறகு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அவர் நடித்தார். அந்த படம் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை கொடுத்தது.

    அதற்கு முன் புஷ்பா படத்தில் அவர் ஆடிய ஆட்டம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதிலிருந்து இப்பொழுது தொடர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகிறார் சமந்தா. அதோடு அவருக்கு உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்சனை என ரசிகர்கள் அவருக்காக அழாத நாட்களே கிடையாது. இந்த நிலையில் சமந்தா சந்தானம் ஆகியோர் பேசிய ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.

    பழைய பேட்டி ஒன்றில் சந்தானத்தை பற்றி பேசும்பொழுது ‘நண்பர்களுடன் சேர்ந்து எங்க ஏரியா பக்கத்தில் தான் சுற்றிக் கொண்டிருப்பார் . போற வர பெண்களை எல்லாம் சைட் அடிப்பார்’ என சமந்தா கூறியிருந்தார் .இப்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் இதைப் பற்றி கேட்ட பொழுது சந்தானம் கூறியது என்னவெனில் எனக்கும் அந்த ஏரியா தான். நானும் சமந்தாவும் ஒரு தடவை பேசும் பொழுது தான் இதைச் சொன்னார்.

    நான் அந்த ஏரியாவில் தான் என் நண்பர்களுடன் சேர்ந்து சைட் அடிச்சுக்கிட்டு இருப்பேன். அப்பவே தெரிஞ்சிருந்தா உஷார் பண்ணி இருப்பேன். இப்ப அவங்க எப்படி வளர்ந்துட்டாங்க. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. இருந்தாலும் இதெல்லாம் இப்ப சொல்லக்கூடாது .எனக்கும் பேமிலி இருக்கு. பார்த்துகிட்டு இருப்பாங்க .அவங்களுக்கும் இருக்கு என ஜாலியாக பேசினார் சந்தானம்.

  • என்னோட பையன்தான் எனக்கு இன்புட்… விலாவரியா சொல்லிட்டாரே சந்தானம்…!

    தமிழ்த்திரை தற்போது ஏற்பட்டுள்ள காமெடி பஞ்சத்திற்கு சரியான தீனியைப் போடுபவர் நடிகர் சந்தானம்தான் என்றால் மிகையில்லை. இந்த ஆண்டு துவக்கத்தில் அவர் விஷாலுடன் இணைந்து நடித்த மதகஜராஜா வெளியாகி சக்கை போடு போட்டது. சுந்தர்.சி.யின் இயக்கத்தில் சில பொருளாதார சிக்கல்களால் 12 நாள்களாக பெட்டிக்குள் முடங்கிக்கிடந்த படம் மீண்டும் எழுந்து வந்து அதிரிபுதிரி ஹிட் அடித்தது.

    அந்தப் படத்தின் வெற்றி சந்தானத்தை மீண்டும் ஹீரோவில் இருந்து காமெடிக்குக் கொண்டு வர வைத்துவிட்டது. சிம்புவின் 49வது படத்தில் அவருடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படம் நாளை மறுநாள் (16ம் தேதி) வெளியாகிறது.

    இதனால் பல மீடியாக்களுக்கு புரொமோஷன் கொடுக்கும் வகையில் பேட்டி அளித்து வருகிறார். டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் வரும் கோவிந்தா கோவிந்தா பாடல் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கும் ஒரு பதில் கெத்தா சொல்லிருக்காரு சந்தானம். என்னன்னு பாருங்க. நிறைய பேர் நிறைய விஷயங்கள் சொல்வாங்க.

    பாக்குறவங்க அவங்க அவங்க கருத்துகளைச் சொல்வாங்க. அது எல்லாத்தையும் நாம எடுத்துக்கிட்டு வாழ முடியாது. போறவங்க வர்றவங்க சொல்றதை எல்லாம் கேட்க முடியாது. கோர்ட், சென்சார் சொல்றதை மட்டும் கேட்டா போதும். அதைத்தான் சினிமாவில் பண்ண முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

    அந்த வகையில் தனது மகன் குறித்தும் ஒரு சில கருத்துகளை முன்வைத்துப் பேசியுள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

    பசங்க எல்லாமே இப்போ வளர்ந்துட்டாங்க. அதுவும் நல்ல விஷயம்தான். ஏனென்றால் அவங்க கிட்ட இருந்து நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கிறது. என்னுடைய பையன் இப்ப பிளஸ் டூ படிச்சிக்கிட்டு இருக்காரு. அடுத்தது காலேஜ் முடிச்சு டைரக்ஷன் பண்ணனும்னு சொல்றாரு. இவங்க எல்லாம் வீட்டிலேயே கிரிஞ்ச்சா இருக்கு, பூமர் மாதிரி இருக்குன்னு சொல்றாங்க. அதுவே நமக்கு இப்ப ஒரு அப்டேட் தான் என்கிறார் நடிகர் சந்தானம்.

  • வடிவேலுவா? சந்தானமா?!. சிம்பு எடுத்த அந்த முடிவு!.. ஒரு பிளாஷ்பேக்!…

    சினிமாவில் வாய்ப்பு என்பது மிகவும் முக்கியம். யாரேனும் ஒருவர் ஒருவரை நம்பி வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒருவர் வாய்ப்பு கொடுக்காமல் இன்னொருவர் மேலே வரமுடியாது. ஒரு நடிகரோ, இயக்குனரோ இல்லை தயாரிப்பாளரோ ஒரு நடிகரை நம்பி வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் திறமை இருந்தாலும் நிரூபிக்க முடியாது.

    சினிமா பின்னணியில் இருந்து வந்தால் வாய்ப்புகள் சுலபமாக கிடைத்துவிடும். ஆனால், பின்னணி இல்லாமல் வருபவர்கள் போராட வேண்டும். வாய்ப்பு என வரும்போது சினிமாவில் நிறைய போட்டிகள் உண்டு. ஒருவருக்கு கொடுக்கப்படும் வாய்ப்பை தட்டிப்பறிக்க பலரும் காத்திருப்பார்கள். அதையெல்லாம் மீறியே சினிமாவில் வாய்ப்பை பெற்று சாதித்து காட்ட வேண்டும்.

    இப்போது சினிமாவில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் சந்தானம் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சிகளில் நடித்துக்கொண்டிருந்தார். அப்படியே சினிமாவில் நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறினார்.

    ஆர்யா, ஜீவா, சிம்பு உள்ளிட்ட பல இளம் நடிகர்களின் படங்களிலும் காமெடி நடிகராக நடித்திருக்கிறார் சந்தானம். விஜய், அஜித்துடனும் சில படங்களில் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் ஹீரோவாக நடிப்பது என முடிவெடுத்தார். அதனால் அவரின் வழக்கமான காமெடியை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்தார்கள்.

    கடந்த 10 வருடங்களாக காமெடி நடிகராக சந்தானத்தை ரசிகர்கள் பார்க்கவில்லை. அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஆனால், அந்த படங்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஒருவழியாக மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பது என்கிற நல்ல முடிவுக்கு வந்துள்ளார் சந்தானம். சிம்புவின் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

    மன்மதன் படத்தில் சந்தானத்தை காமெடியனாக அறிமுகம் செய்து வைத்தவர் சிம்புதான். இதற்கு பின்னணியில் ஒரு பெரிய கதை இருக்கிறது. சிம்பு லொள்ளு சபா நிகழ்ச்சியின் பெரிய ரசிகர். ஷூட்டிங்கில் இருந்தாலும் அந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகும்போது ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு நிகழ்ச்சியை பார்த்து ரசித்துவிட்டுதான் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொள்வாராம்.

    மன்மதன் படத்தில் யாரை காமெடியனாக போடலாம் என யோசித்தபோது உதவி இயக்குனர்கள் வடிவேலுவை சொல்லி இருக்கிறார்கள். ஆனால், சிம்புவோ லொள்ளு சபா நிகழ்ச்சியில் வரும் சந்தானத்தை போடலாம் என சொல்லி இருக்கிறார். இதில் யாருக்குமே விருப்பம் இல்லை. ஆனால், சிம்பு அதில் உறுதியாக இருந்திருக்கிறார். அந்த நன்றி உணர்ச்சியில்தான் இப்போது சிம்புவுடன் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சந்தானம்.

  • நாளைக்கு டிடி நெக்ஸ்ட் லெவல் படம் ரிலீஸ்… உஷாராக சந்தானம் சொன்ன விஷயம்!

    ஆர்யா தயாரிப்பில் எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கி சந்தானம் நடித்துள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்தப் படத்தில் சந்தானத்தின் ஜோடியாக கீதிகா த்வேரி நடித்துள்ளார். செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் , நிழல்கள் ரவி, கஸ்தூரி சங்கர், ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொல்லு சபா மாறன் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

    2016ல் தில்லுக்கு துட்டுன்னு சந்தானம் ஹீரோவான படம் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2019ல் தில்லுக்கு துட்டு 2 வெளியானது. தொடர்ந்து 2023ல் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படம்; வெளியானது. அதன் வெற்றியைத் தொடர்ந்து டிடி நெக்ஸ்ட் லெவல் படம் நாளை வெளியாக உள்ளது. சுந்தர்.சி.யின் அரண்மனை படமும் 4 பாகங்களாக வெளியாகி சக்கை போடு போட்டது. அது போல சந்தானம் படமும் ஹிட் அடிக்கும் என்று தெரிகிறது.

    இந்தப் படத்தில் ‘கோவிந்தா கோவிந்தா’ பாடல் சர்ச்சையாக இருந்தது. இந்த நிலையில் பாடல் பக்தர்களை அவமதிக்கிறது என இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்;ந்து ஆந்திர மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பானுபிரகாஷ் ரெட்டி பாடலுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் 100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தநிலையில் சர்ச்சைக்குரிய பாடல் நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தொடர்ந்து படத்தின் ஹீரோ சந்தானம் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதைப் பார்க்கும்போது நாளை வெளியாக உள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை யாரும் விமர்சனம் செய்றேன்னு பொளந்து கட்டி விடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கையாக சொல்லி இருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. சரி. என்ன சொன்னாருன்னு பார்க்கலாமா…

    ஒரு படத்தினுடைய கிரிட்டிக் அந்தப் படத்துக்கு துடுப்பு மாதிரி இருக்கணும். தடுப்பாக இருக்கக்கூடாது. நம்மளே படங்களை தடுக்கக்கூடாது. அது துடுப்பு மாதிரி கூட்டிட்டுப் போயிட்டே இருக்கணும். எந்த ஒரு விமர்சனமும் அந்தப் படத்தையும் அந்தப் படம் பண்ணவங்களையும் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அது இல்லாம, அவங்க மன அழுத்தத்துல போய் மாட்டிக்கிட்டு இதுக்கு அப்புறம் சினிமாவே வேண்டாம்னு போற விஷயமாக இருக்கக் கூடாது என்கிறார் சந்தானம்.

  • சினிமாவே வேண்டாம்னு ஓட வைப்பது விமர்சனமா?!.. புளூசட்டையை பொளந்த சந்தானம்!…

    முன்பெல்லாம் சினிமா விமர்சனம் என்பது நியாயமாக இருந்தது. விமர்சனம் பற்றி ஒருமுறை கருத்து சொன்ன நடிகர் திலகம் சிவாஜி ‘ஒரு காட்சி சரியாக எடுக்கப்படவில்லை என்று சொன்னால் அது விமர்சனம். நாமும் அதிலிருந்து கற்றுக்கொண்டு நம்மை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், கழுத்தை நெறிப்பது போல கருத்து சொன்னால் அது விமர்சனம் இல்லை’ என சொல்லி இருந்தார்.

    விமர்சனம் என்பது படத்தில் இருக்கும் குறைகளை யாரையும் காயப்படுத்தாமல் சொல்ல வேண்டும். முன்பெல்லாம் புதுப்படங்கள் வெளியானால் அந்த படத்தில் விகடன் வார இதழ் எப்படி விமர்சனம் செய்கிறார்கள்?. எவ்வளவு மதிப்பெண் கொடுக்கிறார்கள் என பார்ப்பார்கள். அதிக மதிப்பெண் கொடுத்தால் அதையே போஸ்டரில் போட்டு விளம்பரத்திற்கு பயன்படுத்துவார்கள்.

    ஆனால், யுடியூப் சேனல்களில் பலரும் புதிய படங்களை விமர்சனம் செய்ய துவங்கிய பின் விமர்சனங்களின் தரமே தாழ்ந்துவிட்டது. ஏனெனில் எல்லோருமே நியாயமான விமர்சனத்தை செய்வது இல்லை. காசு வாங்கிக்கொண்டு மொக்கை படத்தையும் நன்றாக இருப்பதாக கூட சிலர் வீடியோ விமர்சனம் போடுகிறார்கள்.

    இதில் புளூசட்டமாறன் வேற ரகம். இவருக்கு நல்ல கதையம்சம் கொண்ட கலைப்படங்கள் மட்டுமே பிடிக்கும். ஆனால், 95 சதவீதம் மசாலா படங்கள்தான் வெளியாகிறது. ஏனெனில், மசாலா படங்கள்தான் வசூலை அள்ளி எல்லோருக்கும் லாபம் கொடுக்கும். ஆனால், மசாலா படங்களை மாறன் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்வார். இவரின் யுடியூப் சேனலை சில லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.

    எனவே, படங்களை திட்டுவதையே விமர்சனமாக பேசி கல்லா கட்டி வருகிறார் மாறன். இவர் மீது பல இயக்குனர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவங்களும் நடந்தது. விஜய், ரஜினி, அஜித் என யாருடைய படங்களாக இருந்தாலும் சகட்டுமேனிக்கு நக்கலடித்து விமர்சனம் செய்து புளூசட்டமாறனின் ஸ்டைல். நடிகர்களின் தோற்றம் பற்றியும் விமர்சனம் செய்வார். வலிமை படம் வெளியானபோது அப்படத்தில் அஜித் ‘பஜன்லால் சேட்’ போல இருக்கிறார் என நக்கலடித்தவர் இவர்.

    இந்நிலையில், டிடி நெக்ஸ்ட் லெவல் பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சந்தானம் ‘ஒரு படத்தின் விமர்சனம் என்பது அப்படத்திற்கு துடுப்பு மாதிரி இருக்க வேண்டுமே தவிர தடுப்பாக இருக்கக் கூடாது. துடுப்பு போல படத்தை அழைத்து போக வேண்டுமே தவிர படத்தை தடுக்கக் கூடாது. ஒரு விமர்னம் ஒரு திரைப்படத்தையும், அதை உருவாக்கியவர்களையும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டுமே தவிர அவங்களை மன அழுத்தத்தில் தள்ளி இனிமே சினிமாவே வேண்டாம்னு போற விஷயமாக இருக்கக் கூடாது’ என சொல்லியிருக்கிறார்.

  • கமலால்தான் அந்த படம் ஓடல.. சந்தானத்தின் திமிர் பேச்சு!. புரமோஷன் டைம்ல இது தேவையா?!..

    Santhanam: என் கேரக்டரின் கமல்ஹாசன் போல எடுக்காத காரணத்தால் தான் படம் தோல்வியில் முடிந்ததாக சந்தானம் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

    சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி ரோலில் நடித்து வந்தார். அவருக்கு திடீரென வாய்ப்புகள் வர தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். பெரிய அளவில் ஹிட் இல்லை என்றாலும் அப்படங்கள் நல்ல வரவேற்புகளை பெற்று வருகிறது.

    பெரும்பாலும் பேய் படங்களில் காமெடி ரோலை எடுத்து நடிப்பதையே சந்தானம் தன்னுடைய ஸ்டைலாக வைத்து இருக்கிறார். அவரின் அடுத்த திரைப்படமான டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸாக இருக்கும் நிலையில் தொடர்ந்து பேட்டிகளும் கொடுத்து வருகிறார்.

    தொடர்ந்து தன்னுடைய படங்கள் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை பேசி வருகிறார். அவர் பேசும்போது, பொல்லாதவன் படத்தில் என்னை இயக்குனர் வெற்றிமாறன் நிராகரித்து விட்டார். தயாரிப்பாளர் வற்புறுத்தலால் மட்டுமே ஓகே செய்தார்.

    அப்படத்தில் என்னுடைய பஞ்ச் லைன்களை நானே சேர்த்தேன். அதுபோலவே, ராஜமெளலி எனக்கு நான் ஈ படத்துக்கு வாய்ப்பு கொடுக்கும் போது எந்த டயலாக்கும் இல்லை எனவும் சொல்லி இருந்தார். நான் டப்பிங்கில் அதை மாற்றினேன். ராஜமெளலி என்னை பாராட்டி இருந்தார்.

    அதுபோல, எனக்கு ஒரு படத்துக்குள் போன பின்னர் தான் அந்த படம் கண்டிப்பாக பிளாப் ஆகிவிடும் என்று தெரிந்தது. அதுதான் கார்த்தி நடிப்பில் ராஜேஷ் இயக்கிய ஆல் இன் ஆல் அழகுராஜா படம். அப்படத்திற்குள் போன உடனே இந்த கதை தோல்வி அடையும் என இயக்குனரிடம் சொல்லி விட்டேன்.

    ஏனெனில் அந்த படத்தில் என் கேரக்டர் தான் மெயினாக இருக்கிறது. அதற்கு மேக்கப் அவ்வை சண்முகி லெவலில் செஞ்சிருக்க வேண்டும். அப்போ தான் ரசிகர்களும் நம் உழைப்பை பார்த்து படத்தின் மீது நம்பிக்கை வைப்பார்கள். அது இல்லாமல் போனதால் தான் படம் பிளாப் ஆகியது.

    நான் அட்வான்ஸ் வாங்கி ஏற்கனவே படத்திற்கு கையெழுத்து போட்டு விட்டதால் அதிலிருந்து என்னால் விலக முடியவில்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் ஏன் சார் நீங்க நடிச்ச படம் பிளாப் ஆகும் என உங்களுக்கு நடிக்கும் போது தெரியலையா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • சந்தானம் படத்தைப் பார்த்துட்டு வலைப்பேச்சு அந்தனன் சொன்ன விஷயம்… அதுதான் பயமாம்!

    சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்தில் ‘கோவிந்தா கோவிந்தா’ பாடல் சர்ச்சையைக் கிளப்பியது. பெருமாளைத் திட்டும் விதத்தில் இருந்ததாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப் பாடலுக்கு வந்த எதிர்ப்பைத் தொடர்ந்து படத்தில் இருந்து பாடலை நீக்கிவிட்டனர்.

    இன்று படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சொல்லப்போனால் இந்தப் படம் சூரியின் மாமன் படத்தை விட சூப்பராக உள்ளது என்றும் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் படத்தில் வலைப்பேச்சு டீமையும் கலாய்த்துள்ளார்களாம். வீண் பேச்சு என்று படத்தில் காட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வலைப்பேச்சு அந்தனன் சந்தானத்தின் படம் குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

    டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தைப் பார்த்து விட்டு நெஞ்சைப் பிடித்து விட்டுத்தான் உட்கார்ந்துள்ளாராம் அந்தனன். இதைப்பற்றி வலைப்பேச்சுல பேசுவோம் என்றும் தெரிவித்துள்ளார். கோவிந்தனைத் திட்டுனேல்ல. பெருமாளைக் கிண்டல் பண்ணி உன் படம் வச்சேல்ல.

    அதனால்தான் உன் படம் இப்படி ஆச்சு என்றும் இன்று மத்தியானத்துல இருந்தே கிளம்பிடுவாங்க. அதுதான் எனக்கு பயமா இருக்கு என்றும் அந்தனன் தெரிவித்துள்ளார். முதல் ஷோ பார்த்துட்டு வெளியில வர்றவங்க கட்டாயம் கம்பலையும், கதறலுமாகத்தான் வருவாங்க. உனக்கு நல்லா வேணும். இதை விட மோசமா எல்லாம் உன் படம் ஆகிடும்னு திட்டுவாங்க. அதுதான் எனக்குப் பயம் என்றும் அவரது வலைப்பேச்சு சேனலில் தெரிவித்துள்ளார்.

    காமெடிக்குப் பஞ்சமாக உள்ள இந்தக் காலகட்டத்தில் வடிவேலு காமெடி கூட எடுபடவில்லை. சமீபத்தில் வெளியான கேங்ஸ்டர் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. சூரி காமெடியில் இருந்து விலகி ஆக்ஷன், சென்டிமென்ட் பக்கம் போய் விட்டார். யோகிபாபு வேறு பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. மிச்சம் இருப்பது சந்தானம் தான். அவரது காமெடி அதனால் தான் எடுபடுகிறது. அது தவிர கவுண்டர் கொடுப்பதில் அவர் கில்லாடி. அதனால் தான் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு வரவேற்பு இருக்கிறது. அதே நேரம் படத்தில் வலைப்பேச்சு டீமைக் கலாய்த்துள்ளதால் அந்தனன் படத்திற்கு இப்படி விமர்சனம் சொல்கிறாரோ என்ற கேள்வியும் எழுகிறது.

  • சூரியின் மாமனை ஓவர்டேக் செய்த சந்தானம்!.. செகண்ட் ஹாஃப் செம காமெடி.. டிடி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்!

    தியேட்டருக்கு வரும் ரசிகர்களை கண் கலங்க வைத்து செல்ல சூரி இந்த வாரம் மாமன் படத்தைக் கொடுத்துள்ள நிலையில், அதற்கு நேர்மாறாக தியேட்டருக்கு வரும் ரசிகர்களை மட்டுமின்றி விமர்சகர்களையும் திருப்திப்படுத்தும் படமாக சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தைக் கிஸ்ஸாவாக கொடுத்துள்ளார்.

    தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 பாணியில் ஹாரர் படங்களை ஸ்பூஃப் செய்யும் படமாகவே இந்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம் உருவாகியிருக்கிறது. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் ஏகப்பட்ட பேய் காட்சிகளை வைத்து அடுத்த அடுத்த ரவுண்டுக்கு செல்ல வைத்து சிரிப்பு மூட்டிய பிரேம் ஆனந்த் இந்த முறை விமர்சகர் மற்றும் அவரது குடும்பத்தையே ஹிட்ச்காக் இருதயராஜாக வரும் நம்ம செல்வராகவன் தூக்கிக் கொண்டு போய் ஒரு படத்துக்குள் போட அங்கே இருந்து ஹீரோ எப்படி எஸ்கேப் ஆகிறார் என்பதையும் தனது குடும்பத்தையும் காதலையும் காப்பாற்றினாரா என்பதையும் கதையாக வடிவமைத்துள்ளார்.

    படத்திற்குள் ஹீரோவாக வரும் கெளதம் மேனன், ஹீரோயினாக வரும் யாஷிகா ஆனந்த் ரொமான்ஸ் எல்லாமே செம காமெடி. கஸ்தூரி வழக்கம் போல அதிகமாகவே பேசிக் கொண்டிருக்கிறார். நிழல்கள் ரவி எல்லாம் எப்பேர்பட்ட வில்லன் தெரியுமா? அவரையும் சந்தானம் தேவயானி புருஷன் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டார்.

    சந்தானம் மற்றும் மொட்டை ராஜேந்திரன் காம்பினேஷன் தில்லுக்கு துட்டு படத்தில் இருந்து டிடி நெக்ஸ்ட் லெவல் வரை பக்காவாக வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. லொள்ளு சபா மாறனை டிக்கிலோனா படத்தில் பயன்படுத்தியளவுக்கு இதில் பெரிதாக பயன்படுத்தவில்லை. ரெடின் கிங்ஸ்லி ஃபேனில் சுற்றுவது, தலைகீழாக நடப்பது என கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.

    முதல் பாதியில் இந்த படமும் கதையை நோக்கி நகர்வதால் இடைவேளைக்கு முன்பு தான் மஞ்சுமெல் பாய்ஸ் காமெடியை வைத்து ஓட்டிய இயக்குநர், இரண்டாம் பாதியில் மீண்டும் டிடி ரிட்டர்ன்ஸ் ரூட்டை கையிலெடுத்து ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்துகிறார். அதிலும், அந்த ஸ்லோமோஷன் சீனெல்லாம் செம மேட்டர்.

    நடிகர் ஆர்யா நண்பன் சந்தானத்தை நம்பி போட்ட காசு கோவிந்தா சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னம் ஆகாமல் தப்பித்து விடும் என்றே தெரிகிறது. மொத்தத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் சம்மருக்கு ஏற்ற சிரிப்பு சரவெடி.

    ரேட்டிங்: 3.25/5

  • என்னங்க இப்படி பண்ணிட்டீங்க? டிடி நெக்ஸ்ட் லெவலுக்குப் பட்டும் படாமலும் ஒரு ரிவியு

    பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தில் சந்தானத்துடன் யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், நிழல்கள் ரவி, கௌதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தைப் பற்றி பாசிடிவான விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இது குழந்தைகளை கவரும் வகையில் உள்ளது. காமெடி அட்டகாசம். செகண்ட் ஆஃப் சூப்பர் என்றெல்லாம் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

    ஒரு படத்தை எவ்வளவோ கஷ்டப்பட்டு கோடிக்கணக்கில் முதலீடு போட்டு தயாரிப்பாளர் எடுக்குறாரு. அதை ஈசியா விமர்சனம் செய்து விட்டு படத்தை ஓட விடாமலும் சிலர் செய்கிறார்கள். அதே நேரம் எந்த விமர்சகர்களாலும் நல்லா இருக்குற படத்தை ஓட விடாமல் செய்ய முடியாது. அதே நேரம் நல்லா இல்லாத படத்தை ஓடவும் செய்ய முடியாது. அப்படின்னு பலமாக இந்தப் படத்தில் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

    இந்தப் படத்தில் சந்தானம் தான் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார். படத்தில் நிழல்கள் ரவி காமெடி எல்லாம் பெரிதாக எடுபடவில்லை. கௌதம் மேனனை உயிரின் உயிரே பாடலுக்கு ஆட விட்டுருக்கிறார்கள். காமெடியும், ஹாரரும் படத்தில் ஒட்டவில்லை. அப்படியே படத்தின் கதை ஜம்ப் ஆகியபடியே இருக்கிறது.

    சின்ன சின்ன கேரக்டர்களில் கவனம் செலுத்தவில்லை. குறிப்பாகச் சொல்லணும்னா வடக்குப்பட்டி ராமசாமியில் கூல் சுரேஷின் கேரக்டர் கூட சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருக்கும். அந்த வகையில் படத்தில் அது மிஸ் ஆகி உள்ளது. மற்றபடி டெக்னிக்கல் லெவலில் சூப்பர். படத்தின் கதை கேட்க பிரமாதம். எடுக்கப்பட்ட விதத்தில் தான் படத்தின் வெற்றி இருக்கிறது.

    தப்பு தப்பாக ரிவியு சொல்லும் விமர்சகர்களை ஒரு தியேட்டர் ஓனர் பேயாக வந்து பழிவாங்கும் கதை. படத்தில் செல்வராகவன் தான் தியேட்டர் ஓனர். அவர் விமர்சகர்களை எல்லாம் திட்டுறாங்க. அவரையும் ஒரு கட்டத்தில் கொன்று விடுகிறார்கள். செல்வராகவன் பேயாக மாறி விமர்சகர்களுக்கு அழைப்பு கொடுக்கிறார்.

    அதில் ஒருவர் சந்தானம். அது ஒரு பாழடைந்த தியேட்டர். அங்கு போனதும் சந்தானத்தின் ஃபேம்லி என்ன ஆகிறது? படத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவராக காலியாகிறார்கள். தாக்குப்பிடித்தால் அவர்கள் தப்புவார்கள் என்பதுதான் கதை. ஓடாத படத்தை எந்த ரிவியூவராலும் ஓட வைக்கவே முடியாது.

    ஓடும்னு இருந்தா அதை இன்னும் கொஞ்சம் பூஸ்ட் பண்ணி ரிவியூவர்ஸ் ஓட வைக்கலாம். இந்தப் படம் ஜாலியாக சிரித்து விட்டு வர வைத்ததா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மேற்கண்ட தகவலை பிரபல விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.