Tag: Santhanam

  • படத்துல என்னென்னமோ பண்றாங்க சிரிப்பு தான் வரல…! டிடி நெக்ஸ்ட் லெவல ரெண்டா பொளந்த புளூசட்டைமாறன்

    பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து நேற்று வெளியான படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இது ஒரு ஹாரர் காமெடி படம். தில்லுக்கு துட்டு சீரியஸின் 4வது படமாக வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் கீர்த்திகா திரிவேதி ஜோடி. தவிர லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், கௌதம் மேனன், நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் பாடல்கள் சுமார்தான். இந்தப் படம் எப்படி இருக்குன்னு பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

    இது ஒரு பேய் படம். பேய் படம்னா வழக்கமா ஊருக்கு ஒதுக்குப்புறத்துல பாழடைஞ்ச பங்களா இருக்கும். அங்கு தேவையா இருந்தாலும், தேவையில்லன்னாலும் நாலு பேர் போவாங்க. அவங்களை அந்தப் பேய் பாடாப்படுத்தும். அந்தப் பேய்க்கு ஒரு பிளாஷ்பேக் சொல்வாங்க. அது என்ன? அந்தப் பேய்க்கிட்ட இருந்து தப்பிச்சி வந்தாங்களாங்கறது தான் கதையா இருக்கும்.

    படத்தோட ஹீரோ சந்தானம் மொக்கை படங்களை எல்லாம் பார்த்துட்டு கழுவி கழுவி ஊத்துற ரிவியூவர். இன்னொரு பக்கம் இந்த ரிவியூவர்களை எல்லாம் ஒரு இடத்துக்கு வரவழைச்சி பழிவாங்குற பேய். நீ படங்களை எல்லாம் கழுவியா ஊத்துற? உன்ன என்ன பண்ணுறேன் பாருன்னு ஹீரோவையும், அவரு ஃபேம்லியையும் அந்தப் படத்துக்குள்ள தள்ளி விட்டுருது.

    அந்தப் படத்துல ஒரு பாழடைஞ்ச பங்களா இருக்கு. அங்கு ஒரு பேய் ஒவ்வொருத்தரையா பழிவாங்குது. தமிழ்சினிமாவுக்குள்ள சினிமாவுக்குள்ள சினிமான்னு படம் எடுப்பாங்க. அது ஓடுனது இல்லை. இந்தப் படத்துல சினிமாவுக்குள்ள சினிமா எடுப்பாங்க. அதுல வர்ற டெக்னிகல்லான விஷயங்களை வச்சி காமெடி பண்ணுவாங்க.

    அது எல்லாருக்கும் புரியாது. சினிமாவைத் தெரிஞ்சவங்களுக்குப் புரியும். மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, லொள்ளுசபா மாறன் காமெடி நல்லாருக்கும். போன படம் டிடி ரிட்டர்ன்ஸ்ல லாஜிக் முடிஞ்சளவு பண்ணிருப்பாங்க. எல்லா கேரக்டர்சுக்கும் முக்கியத்துவம், காமெடி இருக்கும். ஆனா இதுல மெய்ன் கேரக்டர் சந்தானம் பண்றதே சிரிப்பு வரல. செல்வராகவன் பேய் கேரக்டர்ல வர்றாரு. அதுக்கு என்னதான் நோக்கம்னு தெரியல.

    என்னென்னமோ காமெடி பண்ண முயற்சிக்கிறாங்க. சிரிப்புதான் வரல. எலி காமெடி, சந்திரகிரகணம் காமெடி எல்லாம் ரசிக்கற மாதிரி இருக்கு. டெக்னிக்கல், மேக்கிங் நல்லாருக்கு. படத்துல நல்ல கதை. ஆனா இதை இன்னும் கொஞ்சம் காமெடியா எடுத்துருக்கலாம். இதுல சிரிப்பு வருதுன்னாலும் குபீர் சிரிப்பு வரல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • காமெடியன் டூ ஹீரோ… சூரி vs சந்தானம்… இவர்கள் பயணத்தின் மிஸ் பண்ணக்கூடாத தகவல்கள்..

    Soori vs Santhanam: தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களாக இருந்த இருவருமே தற்போது ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் நிலையில் இவர்களுடைய கேரியர் பயணத்தின் முக்கிய அம்சங்கள் குறித்த தொகுப்புகள் இது.

    சந்தானம் முதலில் சின்னத்திரையில் ஹிட் கொடுத்தவர். விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான லொள்ளு சபாவில் நடிகராக அறிமுகமானார். பிரபல படங்களை நக்கலடித்து ஸ்பூவ் கதை உருவாக்க அவருக்கென ஒரு கூட்டம் இருந்தது.

    அதே சமயம் சூரி சன் டிவியின் பிரபல தொடரான திருமதி செல்வத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். பின்னர் தமிழ் படங்களில் சின்ன சின்ன வேலைகளில் தொடங்கினார். வின்னர், ஜீ, தீபாவளி உள்ளிட்ட படங்களில் சின்ன வேடங்களிலும் நடித்திருந்தார்.

    2002ம் ஆண்டே தன்னுடைய நண்பர் சிம்புவின் காதல் அழிவதில்லை படத்தில் அறிமுகமான சந்தானம் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி தனக்கான இடத்தினை உருவாக்கி வந்தார். 2008ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழுவில் ஒரே காமெடியால் புகழ் பெற்றார் சூரி.

    ஆனால் சந்தானத்தின் பெரிய வெற்றி என்றால் 2009ம் ஆண்டு வெளியான சிவா மனசுல சக்தி திரைப்பட காமெடிகள் தான். அதே சமயம் சூரிக்கு தொடர் வெற்றி படங்கள் அமைந்தது. மனம் கொத்தி பறவை, சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என வரிசையாக ஹிட் படமாக நடித்தார். மாடர்ன் காமெடிகளில் சந்தானமும், கிராமத்து காமெடிகளில் சூரியும் கலக்கி வந்தனர்.

    அந்த சமயத்தில் சந்தானம் 2013 ஆண்டு தானே தயாரித்து ஹீரோவாக நடித்த படம் தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா. மிகப்பெரிய வெற்றி கொடுத்த படத்தால் தொடர்ந்து ஹீரோவாகவே நடித்தார். அதிலும் அவர் நடிப்பில் தில்லுக்கு துட்டு வசூல் வேட்டை நடத்தியது. இதனாலே இன்றளவும் டிடி படத்தின் அடுத்தடுத்த பாகங்களை மிஸ் பண்ணாமல் எடுக்கிறார் சந்தானம். ஆனால் சூரிக்கு ஹீரோ ஆசையே இல்லை.

    விடுதலை கதையில் சூரி தான் ஹீரோ என அவர் உறுதியாக இருக்கவே இந்த பாதைக்கு வந்திருக்கிறார். இன்றளவும் தனக்கான படங்களில் நடிக்காமல் கதைக்காக நடித்து ஆச்சரியப்படுத்துவதில் சூரி கில்லாடி தான். அவரின் மாமன் படம் சமீபத்திய எடுத்துக்காட்டாகி இருக்கிறது. இருவரையுமே காமெடி உலகம் மிஸ் பண்ணவது தான் உண்மை.

  • மாமன் படத்துக்குப் போட்டி சந்தானம் படம் கிடையாதாம்…. எங்கேயோ போயிட்டாரே சூரி..!

    கடந்த வாரம் 3 காமெடி நாயகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகி திரையுலகினரையே வியப்புக்குள்ளாக்கியது. சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல், சூரி நடிப்பில் மாமன், யோகிபாபு நடிப்பில் ஜோரா கையைத் தட்டுங்க. இந்த 3 படங்களில் முதல் 2 படங்களுக்கு இடையே தான் போட்டி.

    மாமன் படத்தைப் பொருத்தவரை ஒரே சென்டிமென்ட் தான். தியேட்டருக்குள்ள போனா அழாம வரமாட்டீங்க. அதே மாதிரி சூரி நடிப்புல பின்னிட்டாரு. அதே மாதிரி டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தோட செகண்ட் ஆஃப் ஃபுல்லா காமெடிதான். சந்தானம் பின்னிப் பெடல் எடுக்கிறாரு. வசூல் ரீதியாக இவரது படம்தான் முன்னிலையில் இருக்கு.

    ஆனால் 3வது நாள் வசூலில் சந்தானம் படத்தை விட சூரி படம் முன்னிலையில் உள்ளது. நாலரை கோடியை வசூலித்துள்ளது. அதே நேரம் சந்தானம் படம் 3.30 கோடியைத் தான் வசூல் செய்துள்ளது. அந்தவகையில் சூரியிடமே உங்க படத்துக்கு யாரு போட்டி? சந்தானம் படமான்னு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சூரி சொன்ன பதில் தான் அல்டிமேட். சந்தானம் உங்களுக்குப் போட்டியா என நிருபர் கேட்க, சூரி சொன்ன பதிலைப் பாருங்க.

    எனக்கு யாரும் போட்டியே கிடையாது… எனக்கு போட்டி நான் எந்தெந்த மாதிரி படங்கள் பண்ணனும்? எப்படி அதை மக்கள்கிட்ட சேர்க்கணும் என்பதுதான். காசு கொடுத்து வர்றவங்க சந்தோஷமா போற மாதிரி என்ன மாதிரி படங்கள் நான் தேர்ந்தெடுக்கணும் என்பதுதான் என் கவனம் எல்லாம். விடுதலை ஹிட் ஆச்சு.

    அடுத்தது கருடன் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்போ மாமன் படமும் மிகப்பெரிய ஒரு வெற்றி அடைந்திருக்கு. அடுத்தது மண்டாடி அதுவும் உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். மாமன் படத்துக்கு போட்டி மண்டாடி தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • சூரி, சந்தானம் படங்களே பரவாயில்லை!.. விஜய் சேதுபதியின் ஏஸ் பாக்ஸ் ஆபீஸில் வேஸ்ட் பீஸ்!..

    ’ஏஸ்’ என்கிற படம் வந்ததே மக்களுக்குத் தெரியவில்லை என மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மைக்கை பிடித்து புலம்பும் அளவுக்கு அந்த படத்தின் வசூல் அதளபாதாளத்தில் உள்ளது. கடந்த வாரம் வெளியான சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் மற்றும் சூரியின் மாமன் படங்கள் கூட வசூலில் ஓரளவுக்கு வெற்றியை பெற்றது என்றும் மகாராஜா படம் கொடுத்த விஜய் சேதுபதிக்கா இந்த கதி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்திக்க வேறு வழியில்லாமல் தான் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், ஷாருக்கான் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க ஆரம்பித்தார்.

    நித்திலன் சாமிநாதன் புண்ணியத்தால் விஜய் சேதுபதிக்கு பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல படம் வெளியானது. அதை மக்கள் அந்தளவுக்கு கொண்டாடினார்கள். சீனாவில் கூட மகாராஜா படத்தை மக்கள் கண்கலங்கி பார்த்தனர்.

    ஆனால், ஏஸ் படத்தை மலேசியா மக்கள் கூட சகித்துக் கொண்டு பார்க்க முடியாத அளவுக்கு படத்தை விஜய் சேதுபதி கொடுத்து விட்டார் என அனைத்து விமர்சகர்களும் கிழித்துத் தொங்கவிட்ட நிலையில், பொதுமக்களுக்கும் படம் பிடிக்காமல் போய் விட்டது.

    முதல் நாள் வெறும் 1 கோடி வசூல் செய்த அந்த படம் சனிக்கிழமை 1.62 கோடி ரூபாயும், ஞாயிற்றுக்கிழமை இதுவரை 1.11 கோடி என மொத்தமாகவே 3.73 கோடி அளவுக்குத்தான் வசூல் செய்துள்ளதாம். இதே ரூட்டில் மீண்டும் விஜய் சேதுபதி சென்றால் பழையபடி வில்லனாக நடிக்க வேண்டியது தான் என்கின்றனர்.

    நடிகர் சூரியின் மாமன் திரைப்படம் 25 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகவும், சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் 15 கோடி வரை வசூல் செய்துள்ளன.

  • மதகஜராஜா சூப்பர் ஹிட்!. சந்தானம் எடுத்த புது முடிவு!.. இதத்தானே நாங்க எதிர்பார்த்தோம்!…

    Madhagajaraja: விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தவர் சந்தானம். குறிப்பாக ஹிட் அடித்த திரைப்படங்களை நக்கலடிக்கும் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நிறைய நடித்திருக்கிறார். இவரின் டைமிங் சென்ஸை பார்த்த சிம்பு தனது மன்மதன் படத்தில் அவரை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் நிறைய படங்களில் நடித்தார்.

    சந்தானம் காமெடி: ஒருகட்டத்தில் கோலிவுட்டின் நம்பர் ஒன் காமெடி நடிகராக மாறினார். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் சந்தானத்தின் காமெடி ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் ஹீரோக்களுடன் எப்போதும் உடனிருக்கும் நண்பராக படம் முழுக்க வந்தார் சந்தானம்.

    ஆனால், இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்கிற தவறான முடிவை எடுத்தார். அப்படி அவர் முடிவெடுத்த நடித்த படங்களில் தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, டிடி ரிட்டன்ஸ் ஆகிய 3 படங்கள் மட்டுமே நல்ல வசூலை பெற்றது. மற்ற படங்களெல்லாம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

    ஹீரோ சந்தானம்: ஆனாலும், ‘நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்’ என்பதில் சந்தானமும் இன்னமும் உறுதியாக இருக்கிறார். வடிவேலு முன்பு போல நிறைய படங்களில் நடிப்பதில்லை. விவேக்கும் இறந்துவிட்டார். சூரியும் ஹீரோவாக நடிக்க போய்விட்டார். இப்போது யோகிபாபுவின் காட்டில் மட்டுமே மழை. ஆனால், அவரின் கமெடிகள் ரசிகர்களை சிரிக்கவைப்பதில்லை.

    மதகஜராஜா: எனவே, சந்தானம் ஹீரோவாக நடிக்க போனதிலிருந்தே தமிழ் படங்களில் காமெடி வறட்சி நிலவுகிறது. சந்தானம் மீண்டும் காமெடி நடிகராக நடிக்க வேண்டும் என பல வருடங்களாக ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். இந்நிலையில்தான், 12 வருடங்களுக்கு முன்பு விஷாலுடன் இணைந்து சந்தானம் நடித்த மதகஜராஜா திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது.

    இந்த படத்தில் காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு பின் ‘சந்தானம் மீண்டும் காமெடி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த படம் தொடர்பான புரமோஷன் விழாவில் பேசிய சுந்தர் சியும் அந்த கோரிக்கையை வைத்தார்.

    இந்நிலையில், டபுள் ஹீரோ சப்ஜெக்ட் கதைகளை தேர்ந்தெடுத்து அதில் காமெடி செய்யலாம் என்கிற முடிவை சந்தானம் எடுத்திருக்கிறாராம். எனவே, விரைவில் இது தொடர்பான அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். சந்தானத்தின் இந்த முடிவு ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறது. உதயநிதி மற்றும் ஆர்யாவுடன் இணைந்து சில படங்களில் சந்தானம் டபுள் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • மீண்டும் பழைய டிராக்கிற்கு திரும்பும் சந்தானம்… இத்தனை படங்களா?

    Santhanam: நடிகர் சந்தானம் மதகஜ ராஜா படத்தின் வெற்றிக்கு பின்னர் தன்னுடைய பழைய டிராக்கிற்கு திரும்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    தமிழ் சினிமாவின் காமெடியன்களில் முக்கிய இடம் பிடித்தவர் சந்தானம். இவர் வருவதற்கு முன்னர் முக்கிய காமெடியன்களாக இருந்த வடிவேலு மற்றும் விவேக் இருவரும் தங்களுக்கென்ற தனி டிராக்கை படத்தில் உருவாக்கி அதில் தான் நடிப்பார்கள்.

    ஆனால் சந்தானம் காமெடி படத்துடனே பயணம் செய்யும். அதுவே சந்தானத்தின் முதல் வெற்றியாக திரையுலகில் அமைந்தது. 2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார் சந்தானம்.

    அதைத்தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தாலும் சம்திங் சம்திங் திரைப்படத்தில் தான் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பிடித்தார். அதைத்தொடர்ந்து, வல்லவன், ரெண்டு, அழகிய தமிழ் மகன், பொல்லாதவன் உள்ளிட்ட திரைப்படங்களில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

    தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கும்போது சந்தானம் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். முதல் சில திரைப்படங்கள் அதுவும் அவருக்கு வெற்றியாக அமைய தன்னுடைய டிராக்கை ஹீரோவாகவே மாற்றிக்கொண்டார். ஆனால் நாளடைவில் அது சந்தானத்தின் ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஏமாற்றமாக தான் அமைந்தது.

    இருந்தும் சந்தானத்தின் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்தாலும் அது அவரின் காமெடிக்கு கிடைத்த வரவேற்பு கூட கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. இந்த நேரத்தில்தான் சமீபத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நடிப்பில் உருவான மதகஜ ராஜா திரைப்படம் ரிலீஸ் ஆனது.

    இப்படத்தில் நடிகர் விஷாலின் நடிப்பிற்கு இணையாக சந்தானத்தின் காமெடியும் பாராட்டுகளைப் பெற்று இருக்கிறது. அதனால் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதை தற்போது சந்தானமும் ஏற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரவிமோகன், ஆர்யா மற்றும் விஷால் உள்ளிட்டோரின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடியும் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் இடையில் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அந்தப் படத்தின் செகண்ட் பார்ட்டில் நடிக்க ஆர்வம் காட்டும் நயன்.. இதெல்லாம் நடக்குமா?

    முன்னணி நடிகை: தமிழ் சினிமா உலகில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படும் நயன்தாரா தற்போது வுமன் சென்ட்ரிக் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

    சிங்கப்பெண்மணி:திருமணத்திற்கு பிறகு சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பில் தான் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார் நயன்தாரா. குழந்தைகளை அடிக்கடி வெளியில் அழைப்பு போவது, வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வது என அவர்களுக்கான தன் நேரத்தை செலவழித்து வருகிறார் நயன்தாரா. அது மட்டுமல்ல சினிமாவில் குடும்பம் குழந்தை நடிப்பு அதையும் தாண்டி தனியாக பிசினஸ் என ஒரு பிசியான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா.

    சந்தானத்திற்கு அமோக வரவேற்பு: இந்த நிலையில் நயன்தாராவை பற்றி சந்தானம் ஒரு பேட்டியில் கூறிய தகவல் இப்போது வைரலாகி வருகின்றது. ஒரு சமயம் படம் சம்பந்தமாக விக்னேஷ் சிவனை பார்க்க சென்றிருந்தாராம் சந்தானம். அந்த சமயத்தில் நயன்தாரா தன் இரு குழந்தைகளிடமும் மாமா வந்திருக்காரு பாருங்க என சொல்லி அறிமுகப்படுத்தினாராம்.

    தங்கச்சி நயன்தாரா: உடனே சந்தானம் நான்தான் உன்னுடைய மகன்களுக்கு தாய் மாமன் என கூறினாராம். இவர் வருகிறார் என்று தெரிந்ததும் பல வகையான உணவுகளை தயாரித்து வைத்திருந்தாராம். சினிமாவில் தங்கச்சி என்ற வகையில் பழகும் நடிகை நயன்தாரா தான் என சந்தானம் கூறினார். வல்லவன் திரைப்படத்திலிருந்து அவர் எனக்கு பழக்கம் என்றும் தொடர்ந்து அவருடன் பல படங்களில் நடித்திருக்கிறேன் என்றும் சந்தானம் கூறினார்.

    பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அல்லது அந்த மாதிரி ஒரு படத்தின் கதையில் நான் சந்தானம் ஆகியோர் காம்போவில் நடிக்க அழைத்தார்கள் என்றால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என நயன்தாரா இயக்குனர் ராஜேஷிடம் கூறி இருக்கிறாராம்.

  • அவன் கூட ஏன் நடிச்ச?!. சிங்கமுத்துவிடம் சீறிய வடிவேலு!.. வைகைப்புயலின் கோரமுகம்!…

    Actor vadivelu: மதுரையை சேர்ந்த வடிவேலு சினிமாவில் நடிக்கும் ஆசையில் ராஜ்கிரணிடம் அடைக்கலம் தேடினார். அவரும் தனது அலுவலகத்தில் ஆபிஸ் பாய் போல வைத்திருந்தார். அங்கு காப்பி, டீ வாங்கி கொடுக்கும் எடுபிடி வேலைகளை செய்து வந்த வடிவேலுவை ராஜ்கிரண் தான் தயாரித்து நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் கவுண்டமணியுடன் சில காமெடி காட்சிகளில் நடிக்க வைத்தார்.

    அதன்பின் சின்னக்கவுண்டர், தேவர் மகன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து மக்களிடம் பிரபலமானார் வடிவேலு. ஒருகட்டத்தில் கிராம படங்கள் என்றாலே ‘காமெடிக்கு வடிவேலுவை கூப்பிடு’ என்கிற நிலை கோலிவுட்டில் உருவானது. வடிவேலும் தனது உடல்மொழி மற்றும் மதுரை பாஷையை பேசி ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

    இவருக்கு வைகைப்புயல் என்கிற அடைமொழியும் கொடுக்கப்பட்டது. ஒருகட்டத்தில் கவுண்டமணி போல பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் செகண்ட் ஹீரோ போலவே நடிக்க துவங்கினார் வடிவேலு. நம்பர் ஒன் காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலுவை நம்பி பல சின்ன சின்ன காமெடி நடிகர்கள் இருந்தார்கள். அவர்களில் தேவைப்படும் நடிகர்களை மட்டும் வடிவேலு பயன்படுத்தி வந்தார்.

    மக்களை சிரிக்கவைக்கும் கலைஞனாக வடிவேல் இருந்தாலும் அவரின் நிஜமுகம் குரூரமானது. யாரையும் வளரவிட மாட்டார். வளர்த்தும் விடமாட்டார். தன்னுடன் நடிக்கும் காமெடி நடிகர்களுக்கு இயக்குனர் பத்தாயிரம் சம்பளமாக கொடுக்க வந்தால் ‘அவனுக்கு எதுக்கு அவ்வளவு சம்பளம்?. 2500 கொடுங்க போதும்’ என சொல்பவர்தான் வடிவேலு. அவ்வளவு நல்ல மனது அவருக்கு.

    அதேபோல், தன்னுடன் நடிக்கும் காமெடி நடிகர்கள் வேறு காமெடி நடிகர்களுடன் நடித்தால் வடிவேலுவுக்கு பிடிக்காது. அப்படி யாரேனும் சென்று விவேக், சந்தானம் போன்றவர்களுடன் இணைந்து நடித்துவிட்டால் அவர்களை ஓரம் கட்டிவிடுவார். அதன்பின் அவர்களுக்கு வடிவேலு வாய்ப்பே கொடுக்கமாட்டார்.

    வடிவேலுவுடன் பல படங்களிலும் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்திருந்த சிங்கமுத்து ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘வடிவேலு அவன் கூட நடிக்கிறவங்க வேறு யார் கூடயும் நடிக்கக்கூடாதுன்னு சொல்லுவான். நான் சந்தானத்துடன் நடித்தபோது என்ன கூப்பிட்டு ’அவன்கூட ஏன் நடிச்ச?. நம்ம டெக்னிக்கை நீ அவன்கிட்ட சொல்லிட்டியா?’ எனக்கேட்டான். சந்தானம்கூட எனக்கு காமெடி செட் ஆகுது. அதனால நடிப்பேன்னு சொன்னேன். அதுல வடிவேலுவுக்கு என் மேல் கோபம் இருந்தது’ என சொல்லியிருக்கிறார்.

    பின்னாளில் தன்னிடம் சிஙக்முத்து நில மோசடி செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வடிவேலு. மேலும், தன்னைப் பற்றி ஊடகங்களில் சிங்கமுத்து பேசக்கூடாது என தடையும் வாங்கி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கேரவனில் ஒரு குளுகுளுதான்.. நடிகையின் பிறந்த நாளுக்கு சந்தானம் கொடுத்த சர்ப்ரைஸ்

    காமெடியனாக ஜொலித்த சந்தானம்: தமிழ் சினிமாவில் மன்மதன் திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் சந்தானம். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு அவரை வெள்ளி திரைக்கு அழைத்து வந்தவர் சிம்பு. மன்மதன் திரைப்படத்திற்கு பிறகு சிம்புவின் பெரும்பாலான படங்களில் சந்தானம் காமெடியனாக நடித்து வந்தார் .

    ஹீரோ அவதாரம்: ஆரம்பத்தில் சந்தானத்திற்காக சினிமாவில் நடிக்க சிம்பு ஏகப்பட்ட உதவிகளை செய்து இருக்கிறார். எஸ் ஜே சூர்யா நடித்த அன்பே ஆருயிரே படத்தில் காமெடியனாக சந்தானம் நடித்ததற்கு சிம்பு தான் காரணம். தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சந்தானம் ஒரு கட்டத்திற்கு பிறகு இனிமேல் நான் காமெடியனாக நடிக்க மாட்டேன் .நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார் .

    12 ஆண்டுகளுக்கு பிறகும் ஜொலித்த சந்தானம்: அவர் ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் மக்களை ஈர்த்தது. ஆனால் சமீப காலமாக ஹீரோவாக நடித்த எந்த படங்களும் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இப்போது ஹீரோவாக நடித்து வந்தாலும் 12 வருடங்களுக்கு முன் காமெடியனாக நடித்த மதகஜராஜா திரைப்படம் இப்போது வெளியாகி சந்தானத்தின் காமெடியை மக்கள் அனைவரும் மீண்டும் ரசித்து வருகிறார்கள்.

    ரசிகர்களின் கூக்குரலை ஏற்ற சந்தானம்: மீண்டும் சந்தானம் காமெடிக்கு வர வேண்டும் என அவருக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர் .ஏனெனில் காமெடி என்பதற்கு இப்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிடம் இருக்கத்தான் செய்கிறது. அதை சந்தானம் வந்தால் தான் பூர்த்தி செய்ய முடியும் என அனைவரும் நம்பி இருக்கின்றனர். அனைவரின் வேண்டுகோளும் சந்தானத்தின் காதில் விழுக மீண்டும் காமெடியனாக நடிக்கிறேன் என சம்மதித்திருக்கிறார் சந்தானம் .

    சுந்தர் சி மற்றும் விஷால் மீண்டும் ஒரு படத்தில் இணைய போவதாகவும் அந்த படத்தில் சந்தானமும் நடிக்க போவதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதைப்போல சிம்பு நடிக்கும் ஒரு படத்திலும் சந்தானம் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சந்தானத்தின் ஒரு வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அவர் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு இடையில் நடிகை கஸ்தூரி தன்னுடைய பிறந்தநாளை சந்தானத்துடன் இணைந்து கேரவேனில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.

    இதோ அந்த வீடியோ லிங்க்:https://www.instagram.com/reel/DF-dIeKyyuf/?igsh=MWJ1YWxyMWJsYnBxMw==

  • இளையராஜாவையே கலாய்ச்ச சந்தானம்… பாட்டை அப்படி பாடி இப்படி அடி வாங்கிட்டாரே!

    இளையராஜா பாடல்கள்தான் அந்தக் காலத்தில் அதாவது 80களில் எங்கு போனாலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு நாம் ஒரு படத்தைத் தியேட்டருக்குப் பார்க்கச் சென்றால் படம் விட்டு வெளியே வரும்போது தியேட்டரின் அருகில் உள்ள எல்லா கடைகளிலும் படத்தில் உள்ள பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த மாதிரி ரசிகர்கள் இளையராஜாவின் இசையில் லயித்துப் போய் இருந்தனர்.

    2023ல் நடந்த இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சந்தானம் பேசியது கலகலக்க வைத்தது. சிரிக்காதவர்களும் இதைக் கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். என்ன சொல்றாருன்னு பாருங்க…

    மனசு தடுமாறும்: ராஜா சார் சாங்கை லவ் பண்றோமோ இல்லையா கண்டிப்பா அவரோட பாட்டைக் கேட்டுட்டு ஒரு பொண்ணை லவ் பண்ணுவோம். ஒரு பாட்டுல ஒரு சரணம் வரும். அது வந்துட்டு ‘மனசு தடுமாறும். அது நினைச்சா இடம் மாறும்’. அந்த மாதிரி வரும். அது ஜன்னல் இங்க இருக்கும்.

    இங்க டைப்ரைட்டிங் கிளாஸ் எல்லாம் இருக்கும். அதை ஓப்பன் பண்ணினா அந்தப் பொண்ணு தெரியும். நான் ஒரு லைன் பாடுறேன். அது நிக்கிறது வீட்ல. யாரும் இல்லன்னு தெரிஞ்சிடுச்சு. தனியா இருக்குன்னு…. ‘தெளிசி தெளியந்தா… இது தெளிசிக்க ஜருகிந்தா’ன்னு அப்படியே தெலுங்குல பாடுறேன்.

    அற்புதமான ஆச்சரியம்: அவங்க அப்பன் என்டர் ஆகிறான். ‘எப்படே ஜருகிந்தா அது இப்படே தெளிந்தானு’ ன்னு ஜன்னல் வழியாவே கொம்பு விட்டு அடிக்கிறான் . நான் எதுக்கு இந்த விஷயத்தைச் சொல்றேன்னா எனக்கு லாங்குவேஜே தெரியாது. ராஜா சார் பாட்டை ஒரு தடவை கேட்ட உடனேயே தெலுங்கு வந்துடுச்சு. அப்படிப்பட்ட ஒரு அற்புதமான ஆச்சரியம் ரேடியோவைக் கண்டுபிடிச்சவர் மார்கோனி.

    லவ் பண்றது: ஆனா இளையராஜா இல்லன்னா அந்த ரேடியோவுக்கே வேலை இல்லை. ஏன்னா 24 மணி நேரமும் இளையராஜா இசைதான் ஓடிக்கிட்டே இருக்கு. கடைசியில இளையராஜா முத்தாய்ப்பாக சொன்ன விஷயம் இதுதான். ‘லவ் பண்றதெல்லாம் அவங்க. பழி என்மேல’ன்னாரு. அரங்கில் கரகோஷம் அதிர ஆரம்பித்தது.