Tag: vijay tv

  • சூப்பர் சிங்கர் 10 டைட்டில் வின்னர் இவர் தானா?.. டாப் 2 இடத்தை பிடித்த பெண் போட்டியாளர்கள்!..

    விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாமே ரசிகர்களை கவரும் விதமாக மட்டுமின்றி அதிகப்படியாக மக்களை மேடையேற்றி அழகு பார்க்கும் நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பாகி வருகின்றன. பிக் பாஸ், சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் என அனைத்துமே மக்கள் ஓட்டுப் போட்டு வெற்றியாளரை தேர்வு செய்யும் விதமே உருவாக்கப்பட்டுள்ளதால் ஏகப்பட்ட பார்வையாளர்கள் விஜய் டிவியின் ஃபேனாக உள்ளனர்.

    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வருடா வருடம் நடைபெற்று வரும் நிலையில், 10வது சீசன் கிராண்ட் ஃபினாலே இன்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இன்று மாலை 3 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நிறைவு பெற்றது.

    இதையும் படிங்க: அந்த நடிகையுடன் 15 நாள் பண்ணை வீட்டில் ஜாலி!.. கிலோ கணக்கில் நகை கொடுத்த நடிகர்..

    விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையாக ஒளிபரப்பும் செய்யப்பட்டது. பிரியங்கா மற்றும் மாகாபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், மனோ, அனுராதா ஸ்ரீராம், சுஜாதா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வந்த நிலையில், கிராண்ட் ஃபினாலேவில் சூப்பராக பாடி வந்த ரசிகர்களை ஹேப்பி ஆக்கினர்.

    சூப்பர் சிங்கர் சீசன் 10ன் டைட்டில் வின்னராக ஜான் ஜெரோம் வெற்றிப் பெற்றார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு முதல் பரிசாக வழங்கப்பட்டது. ரன்னர் அப்பாக வைஷ்ணவி தேர்வான நிலையில், அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

    இதையும் படிங்க: விஜய் அப்படி நடிச்சதே மோசமான விஷயம்!… படம் ஒரு ஆணியும் புடுங்கப்போறது இல்ல… விளாசும் பிரபலம்

    2வது ரன்னர் அப்பாக ஜீவிதா தேர்வானார். அவருக்கு 5 லட்சம் பரிசும் 4வது மற்றும் 5வது இடங்களில் வெற்றியை நழுவ விட்ட போட்டியாளர்களுக்கும் தலா 3 லட்சம் ரூபாய் பரிசுகளை வழங்கி அவர்களையும் ஆனந்தமாக்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

  • புடவை இவ்வளவு கம்மியா?!.. சீரியல் நடிகை அனிஷிதாவின் ஷாப்பிங் வீடியோ!…

    250 ரூபாய்க்கு சூப்பர் புடவை.. எல்லாமே நல்லா இருக்கு என்று ஷாப்பிங் செய்துள்ளார் செல்லம்மா சீரியல் நடிகை.

    velavan

    தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் செல்லம்மா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் அன்ஷிதா. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வரும் இவர் தற்போது வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

    velavan

    இந்த கடையில் 250 ரூபாய் முதல் அழகழகான புடவைகள் அளவில்லாத ஆஃபரில் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். அதேபோல் மூன்று சுடிதார் 500 ரூபாய் என்றும் நான்கு புடவை ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.

    velavan

    அதேபோல் சின்ன குழந்தைகளுக்கான டிரஸ் 3 செட் 500 ரூபாய் எனது தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • பிக்பாஸ் அர்ச்சனாவின் காதலர் இவர்தானா?… புகைப்படம் உள்ளே!

    பிக்பாஸ் டைட்டிலை வென்ற விஜே அர்ச்சனாவின் காதலர் யாரென்பது தான் சின்னத்திரை வட்டாரங்களின் ஹாட் டாபிக்.

    பிக்பாஸ் 7-வது சீசனில் வைல்டுகார்டு என்ட்ரியாக உள்ளே வந்து டைட்டில் வென்றவர் விஜே அர்ச்சனா.

    சொல்லப்போனால் 7-வது சற்றே விறுவிறுப்பாக செல்ல அர்ச்சனா, விஷ்ணு இருவருமே காரணம். இல்லை என்றால் சீசன் மொத்தமாக படுத்திருக்கும்.

    உள்ளே நேருக்கு நேராக அர்ச்சனா போட்ட சண்டைகள் அவருக்கு வெளியில் ஏகப்பட்ட ரசிகர்களை குவித்தது. இதனால் தான் விஜய் டிவியும் டைட்டிலை தூக்கி தாராளமாக அவரின் கைகளில் கொடுத்தது.

    வெளியில் வந்து ஆரம்பத்தில் வீட்டுக்கு உள்ளேயே இருந்த அர்ச்சனா தற்போது சுற்றுலா, தனியார் நிகழ்ச்சிகள் என பொது இடங்களில் தலைகாட்டி வருகிறார்.

    இதற்கிடையில் நீண்டநாட்களாக அர்ச்சனாவின் காதலர் யாரென்பது குறித்து அரசல்புரசலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    அந்தவகையில் பாரதி கண்ணம்மா புகழ் நடிகர் அருண் பிரசாத் தான் அர்ச்சனாவின் காதலர் என்று கூறப்படுகிறது. இதை உறுதி செய்வதுபோல அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.

    முன்னதாக இருவரும் சேர்ந்து ஏற்காடு சுற்றுலா சென்றனர். அதில் அருணின் புகைப்படத்திற்கு லைக் போட்ட அர்ச்சனா பின்னர் அதனை அகற்றி விட்டார்.

    சமீபத்தில் அருணின் புகைப்படம் ஒன்றிற்கு, ”என்னுடைய ஹீரோவை ஷூட் செய்ததற்கு நன்றி”, என அர்ச்சனா கமெண்ட் செய்திருந்தார்.

    இந்தநிலையில் லேட்டஸ்டாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் அருண் பிரசாத் – அர்ச்சனா ஜோடியாக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்துள்ளனர்.

    இதனால் விரைவில் இருவரும் தங்களது காதல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • அதுல நம்பிக்கை இல்ல… பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய… விஜே விஷாலின் முதல் பதிவு!

    தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து, யாரும் எதிர்பாராதவிதமாக விஜே விஷால் வெளியேறி இருக்கிறார்.

    விஜய் டிவிக்கு அதிக டிஆர்பியை பெற்றுத்தரும் சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. கடந்த 2௦19-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலுக்கு ஆண்களும் மிகப்பெரிய ரசிகர்களாக இருக்கின்றனர்.

    இதில் நாயகியான பாக்கியாவின் மகன் எழிலாக அவருக்கு சப்போர்ட் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே எழில்.

    கலகலப்பான இளைஞராக நடித்து வந்த எழிலுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம். நன்றாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலில் இருந்து தற்போது விஷால் விலகி இருக்கிறார்.

    அவருக்குப் பதிலாக இந்த சீரியலில் தற்போது நவீன் நடித்து வருகிறார். அவர் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

    விஷால் என்ன காரணத்தினால் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகினார் என்பது மர்மமாகவே உள்ளது. இந்த நிலையில் திடீரென தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷால் பதிவொன்றை போஸ்ட் செய்துள்ளார்.

    அதில், ” சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் முடிவுகளை எடுக்கிறேன். பிறகு அவற்றை சரி செய்கிறேன்,” என தெரிவித்து இருக்கிறார்.

    இதைப்பார்த்த ரசிகர்கள் பிரச்சினை காரணமாக விஷால் விலகினாரா? இல்லை விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி போன்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வதற்காக இந்த சீரியலை விட்டு விலகினாரா? என கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

    இதன் காரணத்தை விஷால் தான் விளக்கம் வேண்டும் என்பதால் அதுவரை நாம் சற்று அமைதியாக காத்திருக்கத் தான் வேண்டும்.

  • சோனியா அகர்வால் என்ட்ரி!.. குக் வித் கோமாளியை ஒரே எபிசோடில் ஓரங்கட்டிய டாப் குக் டூப் குப்!..

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் புதிதாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார். மேலும், புகழ், குரேஷி, யூடியூபர் இர்ஃபான், திவ்யா துரைசாமி என பல பிரபலங்கள் பங்கேற்றுள்ள அந்த நிகழ்ச்சி ரொம்பவே டல் அடித்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் சன் டிவியில் அதற்கு போட்டியாக வெளியான டாப் குக் டூப் குக் நிகழ்ச்சி முதல் எபிசோடில் பிக்கப் ஆகியுள்ளதாக ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர். சோனியா அகர்வால், சைத்ரா ரெட்டி, மோனிஷா பிளஸ்ஸி, தீபா, சிங்கம் புலி, தீனா உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ள இந்த காமெடி குக் ஷோ நிகழ்ச்சி தூள் கிளப்புவதாக ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: Ajith: இயக்குநர்களின் வாழ்க்கையில் தொடர்ந்து விளையாடும் அஜித்?… ஒரு தீவிர அலசல்!

    விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கடந்த நான்கு சீசனாக நடத்தி வந்த மீடியா மேசன் நிறுவனம் தான் தற்போது சன் டிவியில் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் உள்ள ஒரிஜினாலிட்டி தான் இந்த ஷோ விஜய் டிவியில் பாக்ஸ் ஆபிஸ் தீன் நடத்தி வரும் நிகழ்ச்சியை விட சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    வெறும் அப்பளம் சாப்பிடுவதை வைத்து ரசிகர்களை அளவுக்கு சிரிக்க வைக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளனர் என்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் நிச்சயம் குறைந்துவிடும் என்றும் கூறுகின்றனர்.

    இதையும் படிங்க: 12 வயலின்.. 10 ஆயிரம் சம்பளம்!.. இளையராஜா போட்ட கிளாசிக் பாடல்கள்!.. அட அந்த படமா?!…

    டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியை நடுவராக செஃப் வெங்கடேஷ் பட் தொகுத்து வழங்குகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஒரிஜினல் இயக்குநர் தான் சன் டிவியில் இந்த நிகழ்ச்சியை இயக்கி வருகிறார் என்பதால் இது ரசிக்கும் படியாக உள்ளது என்கின்றனர். விஜய் டிவி இதற்கு போட்டியாக நிச்சயம் பெரியளவில் ஏதாவது செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • குக் வித் கோமாளி நடந்த பிரச்னை என்ன? எதுக்காக வெளியேறினார் வெங்கடேஷ் பட்… ஷாக் தகவல்…

    Cookwithcomali: பிரபல ரியாலிட்டி ஷோக்களில் ஹிட்டடித்த குக் வித் கோமாளி தொடங்கி விட்டாலும் பலருக்கு கவலையாகவே இருக்கிறது. நிகழ்ச்சியின் ஹிட்டுக்கு முக்கிய காரணமாக இருந்த வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார். தற்போது அவர் கலந்து கொள்ளும் டாப் குக்குக்கு  டூப் குக்கு நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

    இந்த நிகழ்ச்சியை சன் டிவி, விஜய் டிவியிடம் இருந்து காப்பி அடித்து விட்டதாகவே ஒரு பஞ்சாயத்து சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக வருகிறது. அப்படி பார்த்தால் சன் டிவியில் வந்த சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியை தான் சூப்பர் சிங்கர் என்ற பெயரிலும், தில்லானா தில்லானா நிகழ்ச்சியை ஜோடி நம்பர் ஒன் என்ற பெயரில் விஜய் டிவி ஒளிபரப்பு செய்தது.

    இதையும் படிங்க: இளையராஜாவுடன் உடனே நடந்தது… அந்த பிரபலத்துக்காக மூன்று மாதம் காத்திருந்த ஏ.ஆர்.ரஹ்மான்!…

    கடந்த வருடம் விஜய் டிவி நிர்வாகம் மீடியா மேசன்ஸ் தயாரிப்புக் குழுவை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கியது. குக் வித் கோமாளி மட்டும் நீங்கள் இயக்கினால் போதும் எனக் கூறப்பட்டிருந்தது.  இதனால், அந்த கம்பெனியில் வேலை செய்த அனைவருக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை உருவாகியது.

    அந்த நேரத்தில் சன் டிவியில் ஒரு ஈவென்டிற்காக மீடியா மேசன்ஸ் இணைய அவர்களே தங்களுக்கு ரியாலிட்டி ஷோ பண்ணிக் கொடுக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் விஜய் டிவியில் சில மனக்கசப்புகள் உருவாக நிர்வாகம் மொத்தமாக டிவியில் இருந்து வெளியேறியது. இந்த திடீர் வெளியேற்றும் காசுக்காக இல்லை. பாலிடிக்ஸ் பிரச்சனையை கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: அந்த நடிகையை இன்ஸ்பிரேஷனா வச்சுதான் போட்டேன்! லேடி கெட்டப் ரகசியத்தை பகிர்ந்த கவின்

    முதலில் வெங்கடேஷ் பட்டுடன் தாமுவும் வெளியேறுவதாக அறிவித்தார். ஆனால் ஒரு சில மணி நேரங்களில் அந்த பதிவை நீக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவி நிர்வாகம் தாமுடன் பேசி அவரை குக் வித் கோமாளியில் தக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த சீசனில் விடிவி கணேஷிற்கு தான் மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டிருக்கிறதாம். சன் டிவி ஷோவில் ஒரு நாள் கெஸ்ட்டாக வரும் வடிவேலுவிற்கு 45 லட்ச ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறதாம்.   வெங்கடேஷ் பட்டும் சம்பளத்திற்காக சன் டிவி நிகழ்ச்சிக்கு மாறவில்லை.

     1999 ஆம் ஆண்டிலிருந்து மீடியா மேசன் டீம்முடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார்.  முதலில் ரொம்பவே கறாராக பேசும் வெங்கடேஷ் பட் கேமராவுக்கு பின்னால் ரொம்பவே கலகலப்பானவர் என கூறப்படுகிறது. இதை அறிந்து கொண்ட டீம் அவரை குக் வித் கோமாளியில் இறக்கி பிரபலமாக்கினர். தனக்கு ரொம்பவும் நெருக்கமான அந்த டீமை விட முடியாமல் தான் வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் இருந்து விலகினார் என்றே கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: கமலுக்கு பிடிக்காத 3 வார்த்தை!. சொன்னா செம கடுப்பாயிடுவாரு!.. பிரபலம் சொன்ன தகவல்!..

  • விடிய விடிய பார்த்தாலும் சலிக்காது!.. ஒன் சைட் அழகை மூடாம காட்டும் கேப்ரியல்லா!…

    Gabriella: விஜய் டிவி மூலம் நெட்டிசன்களிடம் பிரபலமான ஒருவர்தான் கேப்ரியல்லா. சிறுமியாக இருக்கும்போதே அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சில போட்டிகளில் வெற்றி பெற்று பரிசும் வாங்கி இருக்கிறார். சிறுமியாகவே 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

    gabriella

    டீன் ஏஜை எட்டிய பின் சினிமாவில் வாய்ப்பு தேடினார் ஆனால் கிடைக்கவில்லை. விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு போன சிவகார்த்திகேயனுக்கு நூல் விட்டு பார்த்தார். பார்ப்பதற்கு நீ பச்ச மண்ணு மாதிரி இருக்க. இன்னும் கொஞ்சம் நாளாகட்டும் என எஸ்.கே. எஸ்கேப் ஆக மீண்டும் விஜய் டிவிக்கு போனார்.

    gabriella

    அப்போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பல நாட்கள் அந்த வீட்டில் இருந்தும் அவரால் வெற்றி பெறமுடியவிலலில் பல வாரங்கள் தாக்கு பிடித்த கேப்ரியல்லா திடீரென 5 லட்சம் பெட்டி ஆஃபரை ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

    gabriella

    அதன்பின் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேட்ட ஒன்றும் நடக்கவில்லை. எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் போனார். ஈரமான ரோஜாவே சீசன் 2-வில் வாய்ப்பு கிடைத்தது. அழுமூஞ்சியாக பல எபிசோட்களிலும் நடித்தார். தொடர்ந்து சில சீரியல்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    gabriella

    அவ்வப்போது கொழுக் மொழுக் அழகை கும்மென காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் வளைத்து வருகிறார். இந்நிலையில், புடவையில் கும்தா அழகை காட்டி கேப்ரியல்லா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் அவரின் ஃபேன்ஸ்களை கிறுகிறுக்க வைத்திருக்கிறது.

    gabriella

  • பட்டுப் புடவையில் பை ஒன் கெட் ஒன் ஃஃபாரா?.. விஜய் டிவி நடிகை செய்த பர்ச்சஸ் வீடியோ!…

    பட்டுப்புடவையில் பை ஒன் கெட் ஒன் ஆஃபரா என ஆடைகளை வாங்கி குவித்துள்ளார் விஜய் டிவி நடிகை.

    தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று மகாநதி. இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார் ராகினி.

    velavan

    இவர் தற்போது தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது அந்த லிஸ்டில் ராகினியும் இணைந்துள்ளார்.

    velavan

    வேலவன் ஸ்டோர்ஸில் எப்போதும் தள்ளுபடி விற்பனை உண்டு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில் ஷாப்பிங் செய்யப்போன ராகினி ஒரு பட்டுப் புடவை எடுத்தால் இன்னொரு பட்டுப் புடவை ஃப்ரீயா? மூணு புடவை ஆயிரம் ரூபாயா? என்ன ஆஃபர் லிஸ்ட்டை கேட்டு அசந்து போய் உள்ளார்.

    இவருடைய ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

  • KPY பாலாவின் திருமணத்திற்கு வந்த திடீர் சிக்கல்!.. அட இவருக்கா இப்படி நடக்கணும்!..

    விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் பாலா. கல்லூரி படிப்புக்கு பின் டிவி நிகழ்ச்சிக்கு போனவர். தன்னிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு இதுதான் சரியான முடிவு என முடிவெடுத்தவர் இவர். இவருக்கு வெட்டுக்கிளி பாலா என்கிற பெயரும் உண்டு.

    ஆங்கர் அமுதவாணன் மூலம் சென்னை வந்த இவர் விஜய் டிவிக்குள் புகுந்தார். கலக்கப் போவது யாரு 6வது சீசன் வின்னராகவும் பாலா மாறினார். சூப்பர் சிங்கர் 7 சீசன் நிகழ்ச்சியிலும் காமெடி செய்து வந்தார். பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை மிகவும் பிரபலப்படுத்தியது.

    இதையும் படிங்க: அக்‌ஷய் குமாருக்கு இந்த முறையும் வசூலில் பலத்த அடி!.. அடுத்து சூர்யா படம் என்ன ஆகப்போகுதோ..

    இதன் காரணமாக சினிமாவில் நடிக்க துவங்கினார் பாலா. ஜுங்கா, தும்பா, லாபம், ஃபிரண்ட்ஷிப், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட பல படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். சம்பாதிப்பதில் பெரும் பங்கு மற்றவர்களுக்கு உதவுவதில் செலவழித்து வருகிறார். இதுதான், இவரை ஒரு மனிதநேயமிக்க இளைஞராக மக்களிடம் அடையாளம் காட்டி இருக்கிறது.

    bala

    மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு வண்டி வாங்கி கொடுப்பது, கஷ்டப்படும் பெண்களுக்கு ஆட்டோ வாங்கி கொடுப்பது என பல உதவிகளையும் பாலா தொடர்ந்து செய்து வருகிறார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களையும் தனது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

    இதையும் படிங்க: அடடா மழைடா!.. தமன்னா எப்படி இருக்காரு பாருங்க!.. பையா 2 ஸ்டார்ட் பண்ற வழிய பாருங்க லிங்குசாமி!..

    வெள்ளம் வந்து சென்னையில் பல பகுதியில் நீரில் மூழ்கிய போது சில பகுதிகளுக்கு சென்று உதவிகள் செய்தார். தனது வங்கி கணக்கில் இருந்த எல்லா பணத்தையும் எடுத்து வீட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்தார். தற்போது நடிகர் லாரன்ஸுடன் இணைந்து பல உதவிகளை செய்து வருகிறார். பாலாவின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், இப்போது இதுவே அவருக்கு சிக்கலை கொண்டு வந்திருக்கிறது.

    கடந்த சில வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறார் பாலா. விரைவில் இவருக்கு திருமணமும் நடக்கவிருந்தது. ஆனால், ‘சம்பாதிப்பதை எல்லாம் மற்றவர்களுக்கு கொடுக்கும் இந்த பையன் நம்ம பொண்ணை எப்படி காப்பாத்துவான்?’ என்கிற கேள்வி பெண் வீட்டில் எழுந்துள்ளதாம். இதனால், என்ன முடிவெடுப்பது என்பதை யோசித்து வருகிறார்களாம். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் பாலா ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

  • ஜாக்கெட் எங்கேம்மா காணோம்!.. காவியாவை பார்த்து கலாய்த்து தள்ளும் ஃபேன்ஸ்!.. இவங்கதான் இந்திராணியாம்!

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமானபாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்க ஆரம்பித்த காவியா அறிவுமணி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாறு நடித்துக்கொண்டிருந்த விஜே சித்ரா உயிரிழந்த நிலையில், அவருக்கு பதிலாக புதிய முறையாக அந்தத் தொடரில் அறிமுகமானார்.

    அதன் பின்னர் காவியா அறிவு மணிக்கு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. விஜய் டிவியில் தலை காட்டி விட்டாலே போதும் தமிழ் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு தேடி வந்து விடும் என்பது போல ஏகப்பட்ட இளம் நடிகைகளுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஆனால் அதனை ஒரு சிலர் மட்டுமே சரியாக பயன்படுத்தி தொடர்ந்து நடித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: விக்ரமை வைத்து எஸ்.ஜே.சூர்யா சொன்ன கதை!.. ஆட்டைய போட்ட அஜித்!.. அட அந்த படமா?!..

    பல நடிகைகள் ஒரு சில படங்களுக்குப் பிறகு ஆல் அட்ரஸை தெரியாமல் காணாமல் போய்விட்டனர். ஒரு சில சீரியல்களில் நடித்த உடனே காவிய அறிவுமணிக்கு உடனடியாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2022 ஆம் ஆண்டு வெளியான மிரள் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் கடந்த ஆண்டு மாஸ்டர் மகேந்திரன் நடித்து வெளியான ரிப்பப்பரி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். கவின் உடன் ஒரு படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    காவியா அறிவுமணிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.5 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். அடிக்கடி ரசிகர்களுக்காக விதவிதமான போட்டோஷுட்டுகளை நடத்தி படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, ஜாக்கெட் அணியாதது போல சேலை அணிந்து கொண்டு தேவலோகத்தை கன்னி போல போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: கோலிவுட்டுக்கு இதைவிட அசிங்கம் வேற தேவையில்லை!.. பாலிவுட்டும் செஞ்சுரியா அடிக்கிறாங்களே.. இப்ப யாரு?

    மேலும் அதற்கு கேப்ஷன் ஆக இந்திராணி உங்கள் இதய சிம்மாசனத்தில் எனக் குறிப்பிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு காவியாவை கலாய்த்து வருகின்றனர்.

    சின்னத்திரை நடிகையாக இருந்தபோது பலருக்கும் தெரிந்த நீங்கள் சினிமாவுக்கு சென்ற பின்னர் யார் கண்ணுக்கும் தெரியாதது ஏன் என்று கேட்டு பங்கம் பண்ணி வருகின்றனர்.