Tag: vijay tv

  • விஜய் டிவிக்கு என்னதான் ஆச்சு? டிஆர்பியில் தொடர் மொக்கை வாங்கும் நிலைமையா?

    விஜய் டிவிக்கு என்னதான் ஆச்சு? டிஆர்பியில் தொடர் மொக்கை வாங்கும் நிலைமையா?

    Serial TRP: சின்னத்திரை சீரியல்களுக்கு இடையே நடக்கும் டிஆர்பி போட்டியில் இந்த முறை பெரிய அளவில் அடி வாங்கி இருக்கிறது விஜய் டிவி. அதிலும் இந்த வாரம் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    விஜய் தொலைக்காட்சியில் பல மாதங்களாக முதலிடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை கடந்த சில வாரங்களாகவே அந்த இடத்தினை தக்க வைத்து கொள்ள முடியாமல் போராடி வருகிறது. அதிலும் இந்த முறையும் விஜய் டிவியில் இரண்டாம் இடமும், மொத்தமாக ஏழாவது இடமே கிடைத்து இருக்கிறது. 

    சரியாக கதைக்களம் அமையாததே இந்த தொய்வுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. விறுவிறுப்பான கதையால் விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக மாறி இருக்கிறது அய்யனார் துணை. எப்போதும் போல இல்லாமல் இந்த சீரியல் நான்காம் இடத்திற்குள் வந்துள்ளது. 

    விஜய் டிவியின் மற்ற சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ் எட்டாம் இடத்திலும், பத்தாம் இடத்தில் சின்ன மருமகள் சீரியலும் இருக்கிறது. எப்போதும் போல இந்த முறையும் சன் டிவியின் கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு சீரியலே டாப் 3 இடத்தில் இருக்கிறது. 

    பல மாதங்களாகவே விஜய் டிவியால் சன் டிவிக்கு சரியான போட்டியாக அமைய முடியவில்லை என கிசுகிசுக்கப்படுகிறது. விஜய் டிவியின் சீரியல்களின் கதையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இந்த பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்படலாம் என நம்பப்படுகிறது. 

  • மீனா ப்ளானால் தப்பிய மனோஜ்!… ஆனா ரோகிணி திட்டத்தால் எல்லாம் போச்சே!

    மீனா ப்ளானால் தப்பிய மனோஜ்!… ஆனா ரோகிணி திட்டத்தால் எல்லாம் போச்சே!

    Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொடரான சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.

    மனோஜை ஃப்ராடு கேஸில் போலீஸ் அழைத்து சென்று இருக்கின்றனர். இது தெரிந்து அங்கு வரும் ரோகிணி ஃபைனான்சியரை பார்க்க செல்கிறார். அவரிடம் கெஞ்சி மனோஜுக்கு ஒன்னும் தெரியாது. இதுவெல்லாம் அவருடைய அம்மா வேலையாக இருக்கும் என்கிறார். 

    சிந்தாமணியிடம் பைனான்சியர் பேச அவர் 10 லட்சம் கேட்க சொல்கிறார். ரோகிணியும் முடிந்த வரை ரெடி செய்து எடுத்து வருவதாக ஓடுகிறார். கிரிஷின் பெரியப்பா குடும்பத்தை பார்த்து தன் நிலையை சொல்லி கெஞ்ச அவர்கள் தற்போது 10 லட்சம் முடியாது. 

    5 லட்சம் ரெடி செய்து தருவதாக சொல்கின்றனர். மீனா சிந்தாமணியை தன் வழிக்கு எடுத்து வர திட்டமிட்டு அவர் ஏரியாவில் பெண்களுக்கு அவர் செய்த கொடுமைகளை புகாராக எழுதி வாங்குகிறார். அதை எடுத்துக்கொண்டு சிந்தாமணியை மிரட்டுகிறார். 

    இந்த புகாரை நானும் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்தால் உன் நிலைமை என்னவாகும் தெரியுமா? ஒழுங்கா அவரை வெளில விட்ரு என மிரட்டி விட்டு செல்கிறார். ரோகிணியும் அந்த நேரத்தில் அதை வாங்கிக்கொண்டு சிந்தாமணியை பார்க்க செல்கிறார். 

    காசு இல்லையே என சிந்தாமணி நடிக்க அதெல்லாம் வேண்டாம். என்னிடம் 5 லட்சம் இருக்கு. அதை வாங்கிக்கிட்டு கேஸை வாபஸ் வாங்க சொல்லுங்க. நீங்க சொன்னா அவர் கேப்பாரு எனக் கெஞ்ச மீனாவின் மிரட்டலால் தான் படிந்ததாக இருக்க கூடாது. 

    ரோகிணிக்கு செஞ்சது போல இருக்கட்டும் என பைனான்சியரிடம் பேசி சொல்ல அவரும் போலீஸ் ஸ்டேஷன் வந்து கேஸை வாபஸ் வாங்கிக்கிறேன். அவர் பொண்டாட்டி காதலுக்காக இதை ஒப்புக்கொள்வதாக பேச முத்து, மீனா அதிருகின்றனர். 

    மனோஜும் ரோகிணியிடம் பேச வருகிறார். இதையடுத்து விஜயா பேச்சை கேட்காமல் மறுபடியும் ரோகிணி பக்கமே மனோஜ் சாய வாய்ப்பு இருக்கலாம். உள்ளே வந்து விஜயாவுடன் ரோகிணி பஞ்சாயத்தை தொடரலாம் என்றும் கூறப்படுகிறது. 

  • முத்துனாலே இளிச்சவாயன் தானா? 45 லட்சத்த 30 நாளுல அடைக்கணுமா? நியாயம் வேணாமா?

    முத்துனாலே இளிச்சவாயன் தானா? 45 லட்சத்த 30 நாளுல அடைக்கணுமா? நியாயம் வேணாமா?

    Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் முத்து மற்றும் மீனாவுக்கு அழகாக அடுத்த பிரச்சனையை பார்சல் செய்து வந்து இருக்கின்றனர். இதுகுறித்த அப்டேட்கள்.

    மனோஜ் பைனான்சியரிடம் கடன் வாங்கிய செய்தியை சரியாக சிந்தாமணி போட்டு கொடுக்க கோபத்தில் இருக்கிறார் அண்ணாமலை. பைனான்சியர் அண்ணாமலையை குறை சொல்ல முத்து கடுப்பில் நான் இந்த கடனை அடைக்கிறேன் என வாக்கு கொடுக்கிறார். 

    தனக்கு ஒரு வருஷம் அவகாசம் வேணும் எனக் கேட்க ஆனால் அவரோ இன்னும் 30 நாளுல அடைக்கணும். இல்ல வீட்ட ஏலம் விட்ருவேன் எனக் கூறிவிட அதிர்ச்சியில் இருக்கின்றனர் குடும்பத்தினர். அவர் கறாராக சொல்லிவிட்டு செல்கிறார்.

     விஜயா நான் 48 லட்சம் கடன் வாங்கலையே என சிந்தாமணியிடம் கேட்க எனக்கு தெரியாது எனக் கூறும் சிந்தாமணி, நீங்க ஃப்ராடு கையெழுத்து போட்டு என்ன கேட்குறீங்க என சமாளித்துவிட்டு செல்கிறார். விஜயா பேசப் போக கடுப்பில் அவரை அடித்து விடுகிறார் அண்ணாமலை. மனோஜையும் திட்டிக்கொண்டு இருக்கிறார். 

    இப்போ உங்களால கடன் அவன் மேல விழுந்துட்டு என மனசு உடைஞ்சு பேசிட்டு உள்ளே சென்று விடுகிறார். விஜயா அவரை சமாதானம் செய்ய ஆனால் அண்ணாமலை உன்னை முழுசா நம்பினேன். நீ என் நம்பிக்கையை மொத்த உடைச்சிட்ட என்கிட்ட பேசாத. நான் எதுவும் செஞ்சிப்பேன் எனச் சொல்லிவிட்டு செல்கிறார். 

    முத்து கடனை அடைக்க என்ன செய்யலாம் என யோசித்து கொண்டு இருக்க மீனா தன்னுடைய புது செயினை விற்று விடலாம் என்கிறார். இதை கேட்டு முத்து அதிர்ச்சியாக பார்க்கிறார். இனிமேல் ஹீரோ ஹீரோயின் ஜோடியாக கடனை அடைச்சிட்டு மீண்டும் கஷ்டப்படுவாங்க. 

    மனோஜ் அவர் ஷோரூமில் ஜாலியா இருந்துட்டு விஜயா வாய் பேசிட்டு திரிவாங்க. லாஜிக்கே இல்லாம என்னப்பா கதை எடுக்குறீங்கனு ரசிகர்கள் கடுப்படிக்க ஆரம்பித்துவிட்டனர். என்ன டிஆர்பி பத்தை தாண்டுனா கூட ஆச்சரியமில்லை என்பது தான் உண்மை. 

  • ஆண்டி ஹீரோ ஸ்டைல சம்பவம் செய்யும் கதிர்… பாண்டியன் ஸ்டோர்ஸ்ல மூணாவது வில்லனா?

    ஆண்டி ஹீரோ ஸ்டைல சம்பவம் செய்யும் கதிர்… பாண்டியன் ஸ்டோர்ஸ்ல மூணாவது வில்லனா?

    Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் பெரிய அளவில் வில்லத்தனம் இல்லாத சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் ஹீரோவாக பார்க்கப்பட்ட கதிர் செய்திருக்கும் வில்லத்தனம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    முதல் சீசன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது சீசனில் அப்பா, மகன் பாசத்தை மையமாக வைத்து கதை நகர்ந்து வருகிறது. அந்த வகையில் இரண்டாவது சீசன் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    கடந்த சில வாரங்களாகவே கதை இல்லாமல் காமெடி செய்து வந்த தயாரிப்பு குழு ஒரு வழியாக தேறும் கதைக்களத்தினை உருவாக்கி வைத்துள்ளனர். ஒரு பக்கம் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் வீட்டுக்கு தெரிந்து விட்டது. 

    ஆனால் சரவணன் தன்னுடைய முதல் காதலியை சந்தித்து அவரை கட்டிக்கொள்வதாக சத்தியம் செய்து விட்டார். வீட்டினர் மயிலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இது ஒரு புறமிருக்க, ராஜீயின் அப்பா வெற்றிவேலுக்கு கேன்சர் இருப்பதாக கதை கொண்டு செல்லப்படுகிறது. 

    அவருடைய சிகிச்சை நடந்து கொண்டு இருக்கும் நிலையில் அம்மாவுடன் இருக்க வேண்டும் என வெற்றிவேல் விரும்புகிறார். இதனால் உண்மையை சொல்லாமல் அப்பத்தாவை வெளியேத்த ஏசி இருக்க வீட்டுக்கு போங்க இங்க ஏன் இருக்கீங்க எனத் திட்டி வீட்டை விட்டு அனுப்புகிறார். 

    இதனால் சரவணன், செந்திலை தொடர்ந்து கதிருக்கும் ரசிகர்களிடம் கெட்ட பெயர் உருவாக போகும் வாய்ப்பே அதிகம் இருப்பதாக ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர். ஹீரோயினுக்காக ஹீரோவை எல்லாம் காலி செய்ய பாக்குறாங்களே என பலரும் கலாய்த்து வருகின்றனர். 

  • Siragadikka Aasai: மனோஜ் விஜயாவின் கேடி வேலையை மாட்டிவிட்ட சிந்தாமணி!… போச்சா?

    Siragadikka Aasai: மனோஜ் விஜயாவின் கேடி வேலையை மாட்டிவிட்ட சிந்தாமணி!… போச்சா?

    Siragadikka Aasai: முத்து கண்டுபிடித்த உண்மையால் அடுத்த சிக்கலில் சிக்க இருக்கும் விஜயா மற்றும் மனோஜ். இனி ஆட்டம் செம சூப்பரா இருக்கும் போலயே!

    திடீரென வீட்டுக்குள் வரும் முத்து  மீனாவை கத்தியால் குத்தியவனை கண்டுபிடித்து போலீஸில் கொடுத்துவிட்டேன். அவன் சாட்சியத்தால் இப்போ சிந்தாமணியை அரெஸ்ட் செய்து விட்டனர் எனக் கூறிக்கொண்டு இருக்கிறார். விஜயா இருந்தும் அதை நம்பாமல் திமிராக பேசுகிறார். 

    பின்னர் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் சிந்தாமணியை காப்பாற்ற அவர் கணவர் வக்கீலுடன் வருகிறார். அப்போ ரோகிணி வந்து இது எப்படி நடந்தது. நான் உங்களை காப்பாத்துறேன் எனக் கூற சிந்தாமணி தேவையில்லை. என் வீட்டுக்காரர் வந்துவிடுவார் என்கிறார். 

    பின்னர் சிந்தாமணி பழி வாங்கும் நோக்கத்தில் விஜயா வீட்டுக்கு செல்ல முத்து என்ன ஓடி வந்துட்டீயா எனக் கேட்க நான் தப்பே செய்யலை. நான் ஏன் போகணும் ஜெயிலுக்கு? அதற்கான ஆள் வந்து சரண் அடைஞ்சிட்டான் என்கிறார். 

    பின்னர் தேர்தலில் நான் தோத்துட்டதால என் மேல மரியாதையே இல்ல. காசு கொடுத்தவன்லாம் என்கிட்ட காசு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அதான் இங்க வந்தேன் என்கிறார். குடும்பத்தினர் எல்லாம் புரியாமல் பார்க்க அப்போ பைனான்சியர் உள்ளே வருகிறார். 

    இதில் விஜயா, மனோஜ் திரு திருவென முழிக்கின்றனர். அவரை பார்த்த அண்ணாமலை வாங்குன காசுக்கு வட்டி வருதுல அப்புறம் என்ன எனக் கேட்க பேங்க்ல இருந்த பத்திரத்த எடுத்துட்டு வந்து என்கிட்ட அடகு வச்சி 60 லட்சம் வரை கடன் வாங்கிருக்காங்க. 

    நான் கையெழுத்து போடலையே எனக் கேட்க நீங்க சைன் போட்ட பத்திரத்தினை உங்க வைஃப் தான் எடுத்துட்டு வந்தாங்க என்கிறார். இதில் குடும்பமே என்ன செய்வது எனத் தெரியாமல் அதிர்ச்சியில் நிற்கின்றனர். இனிமேல் கதை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  • ஹீரோயினை விட அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ!… மகாநதி சீரியல் சம்பள விவரம் தெரியுமா?

    ஹீரோயினை விட அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ!… மகாநதி சீரியல் சம்பள விவரம் தெரியுமா?

    Mahanadhi: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு கொடுக்கும் சம்பளம் குறித்த ஆச்சரிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. 

    பெரும்பாலும் சீரியல்களில் ஹீரோயின் ரோலுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். சில சீரியல்கள் மட்டுமே இதில் முரண்பட்டு ஹீரோக்கு நல்ல ரோலை கொடுத்து, வித்தியாசமாக ஹீரோயிசம் செய்ய வைக்கவும் வாய்ப்பு உண்டு. 

    அந்த வகையில் சன் டிவி சீரியல்களின் ப்ரைம் டைமில் இதை போன்ற சீரியல்களை பார்த்து கொண்டு இருந்த நிலையில் விஜய் டிவியின் மகாநதி அந்த இடத்தினை தற்போது பிடித்துள்ளது. இதில் ஹீரோவாக நடிக்கும் விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். 

    அந்த கேரக்டரில் நடிக்கும் சுவாமிநாதனுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இவரின் முதல் சீரியலும் இதை போன்ற வரவேற்பையே இவருக்கு கொடுத்த காரணத்தால் தற்போது நடிக்கும் மகாநதிக்கு இவருக்கு ஒரு நாள் சம்பளமாக 15 ஆயிரம் வரை கொடுக்கப்படுகிறது.

    ஆனால் ஹீரோயின் காவேரி ரோலில் நடிக்கும் லட்சுமிபிரியாவுக்கு வெறும் 10 ஆயிரம் மட்டுமே சம்பளமாக தருவதாக கூறப்படுகிறது. இன்னொரு ஹீரோவாக நிவின் கேரக்டரில் நடிக்கும் ருத்ரனுக்கும் 10 ஆயிரம் சம்பளமாகவும், கங்கா கேரக்டரில் நடிக்கும் ஹெப்சிபாவுக்கும் 6 ஆயிரம் வரை தருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

  • மாட்டிக்கினாரு ஒருத்தரு இல்ல இரண்டு பேரு! சூடு பறக்கும் சிறகடிக்க ஆசை

    மாட்டிக்கினாரு ஒருத்தரு இல்ல இரண்டு பேரு! சூடு பறக்கும் சிறகடிக்க ஆசை

    Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

    ரோகிணியின் பார்லருக்கு வரும் ஹரிணியிடம் தெளிவாக ஸ்கெட்ச் போட்டு மனோஜை தன்னுடைய கணவர் என்பதை சொல்லிவிடுகிறார். அது மட்டுமல்லாமல் விவாகரத்து வழக்கில் நடந்த விஷயங்களையும் போட்டு கொடுக்கிறார். 

    25 ஆயிரம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்பதில் தொடங்கி அவருடன் தான் வாழ வேண்டும். என்னை காசுக்காக கல்யாணம் பண்ணி ஏமாத்திட்டாங்க. மாமியார் கொடுமை என ஒன்னுக்கு இரண்டாக போட்டு கொடுக்க ஹரிணி அதிர்ச்சியில் அங்கிருந்து செல்கிறார். 

    இன்னொரு பக்கம் முத்துவை பார்க்க வரும் மீனா அம்மா சத்யா காதலை வேண்டாம் என அழுது சொல்லிக்கொண்டு இருக்கிறார். வீட்டிற்கு வரும் முத்து இதை ஏன் அவங்களிடம் சொன்ன எனக் கேட்க அவரும் சத்யா காதல் வேண்டாம் என்றே சொல்கிறார். 

    பின்னர் மீனாவுக்கு செயின் வாங்கி வந்து கொடுக்க அவர் சந்தோஷப்படுகிறார். வீட்டில் எல்லாரும் அதை பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டு இருக்க விஜயா ஒரு செயினுக்கே ஒரு வருஷம் ஆச்சு. மனோஜ் பொண்டாட்டி 500 பவுனுடன் வருவா என்கிறார். 

    அந்த நேரத்தில் ஹரிணி ஃபேமிலியுடன் வந்து திட்ட துவங்குகிறார். ரோகிணியை பார்த்த விஷயத்தை சொல்ல தொடங்க அங்கிருந்தவர்களே அதிர்ச்சி அடைகின்றனர். அண்ணாமலையையும் திட்ட முத்து கோபத்தில் நிற்கிறார். விஜயாவுக்கு அப்பு கன்பார்ம் போல.. இந்த வாரம் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது போலயே!

  • டிஆர்பில நம்பர் ஒன் இடமே போச்சு! அரைத்த மாவை அறைக்கும் சிறகடிக்க ஆசைக்கு வந்த சோதனை!

    டிஆர்பில நம்பர் ஒன் இடமே போச்சு! அரைத்த மாவை அறைக்கும் சிறகடிக்க ஆசைக்கு வந்த சோதனை!

    Serial TRP: சின்னத்திரை சீரியல்களுக்கு வழங்கப்படும் டிஆர்பி லிஸ்ட்டின் இந்த வார அப்டேட்டில் பல ஆச்சரிய மாற்றம் நடந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

    டிஆர்பியில் முதல் 10 இடத்தினை எப்போதுவுமே சன் டிவி தான் பெறும். ஆனால் கடந்த சில மாதங்களாக சன் டிவிக்கு செம போட்டியாக விஜய் டிவி அமைந்துவிட்டது. முதல் இடத்தை கூட பிடித்துக்கொண்டு மாஸ் காட்டி வந்தது. 

    ஆனால் சன் டிவி விடாமல் போராடிய நிலையில் டாப் இடத்தினை மீண்டும் பிடித்துவிட்டது. கிட்டத்தட்ட டாப் 5 இடத்தினை கூட யாருக்கும் விட்டு கொடுக்காமல் சன் டிவி சீரியல்களே இடம் பிடித்து இருக்கிறது. அந்த வகையில் மூன்று முடிச்சு, கயல், சிங்கப்பெண்ணே முதல் மூன்று இடங்களில் இருக்கிறது. 

    நான்காவது இடத்தில் மருமகள் சீரியலும், ஐந்தாவது இடத்தில் அய்யனார் துணை சீரியலும் இருக்கிறது. விஜய் டிவியின் டாப் ஒன் சீரியலாக இருந்த சிறகடிக்க ஆசை சீரியல் ஆறாவது இடம் பெற்றது மட்டுமல்லாமல் விஜயின் டாப் ஒன் பொசிஷனை இழந்துவிட்டது. 

    ஏழாவது இடத்தில் அன்னம் சீரியலும், எட்டாவது இடத்தில் எதிர்நீச்சல் சீரியலும் இருக்கிறது. கடைசி இரண்டு இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் சின்ன மருமகள் சீரியல் இடம் பெற்றுள்ளது. விஜய் டிவி சீரியல்கள் பல வாரம் தாண்டி பாதி இடங்களை பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • சிறகடிக்க ஆசை ஒரே எபிசோட்டில் எத்தன ட்விஸ்ட்டு அப்பப்பா!! அடுத்து என்ன நடக்க போகுதோ?

    சிறகடிக்க ஆசை ஒரே எபிசோட்டில் எத்தன ட்விஸ்ட்டு அப்பப்பா!! அடுத்து என்ன நடக்க போகுதோ?

    Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த ஆச்சரிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. 

    சிந்தாமணியின் மகள் ரேகாவை சத்யா காதலித்து வருகிறார். ஆனால் மீனா மற்றும் சிந்தாமணிக்கு இருக்கும் பிரச்சனையால் ரேகா இதுவரை இந்த உண்மையை வெளியில் சொல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் ஒருவழியாக அந்த உண்மையை சத்யாவிடம் சொல்லிவிட்டார்.

    இதை தொடர்ந்து இருவரும் மீனா மற்றும் முத்துவை பார்த்து இந்த உண்மையை சொல்ல இருக்கின்றனர். அப்போது அவர்களிடம் நாங்கள் காதலிக்கிறோம் எனக் கூற முத்து எங்களுக்கு இது முன்னவே தெரியும் என்கிறார். மீனா உங்க வீட்டுல இதுக்கு ஒத்துப்பாங்களா எனக் கேட்க அம்மா தான் பிரச்சனை என்கிறார் ரேகா.

    மீனா நான் வந்து பேசுகிறேன் எனக் கூற நீங்க வந்தா ஒத்துக்கவே மாட்டாங்க எனக் கூறி அவர் சிந்தாமணி மகள் என்ற உண்மையை சொல்லிவிடுகிறார். இதில் அதிரும் மீனா சத்யாவிடம் இந்த காதல் வேண்டாம் எனக் கூறிவிடுகிறார். 

    ஆனால் முத்து இவர்கள் உண்மையிலேயே பாசமாக இருக்கிறார்கள். ஏன் அப்படி சொல்ற ரேகாவிடம் உங்க வீட்டை எதிர்த்துவருவியா எனக் கேட்க வந்துவிடுகிறேன் என்கிறார். இதனால் அடுத்தடுத்த எபிசோட்டில் சிந்தாமணியை எதிர்த்து இந்த ஜோடி கல்யாணம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இது மட்டுமல்லாமல் மனோஜ் ஜோடியாக டேட்டிங் செல்ல வசமாக ரோகிணியிடம் சிக்கிவிடுகிறார். ஹரிணிக்கு வாந்தி வர அவரை நிறுத்திவிட்டு சோடா வாங்க செல்கிறார். அப்போது அவரிடம் பேச்சு கொடுத்து நிச்சயம் நடந்த உண்மையை தெரிந்து கொள்கிறார்.

    இதனால் இனி ரோகிணியின் ஆட்டம் பலமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதால் ரோகிணியின் வில்லத்தனமே இந்த ரூட்டில் செமையாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

  • யார் இந்த ஸ்வேதா புருஷன்? தொடரும் குற்றச்சாட்டுகள்… சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு!

    யார் இந்த ஸ்வேதா புருஷன்? தொடரும் குற்றச்சாட்டுகள்… சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பு!

    Chinna Marumagal: சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா மற்றும் அவர் காதல் கணவருக்கு இடையேயான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இருவரும் மாறி மாறி வீடியோ போட்டு வைரலாகி வருகின்றனர்.

    சின்ன மருமகள் ஸ்வேதா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் காதலரை முகம் காட்டாமல் வீடியோ போட்டு வந்தார். திடீரென அந்த வீடியோக்களையும் நீக்கினார். அதை தொடர்ந்து ஆதி என்பவர் தான் தான் அவர் கணவர் என வீடியோ போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

    அதுவே பெரிய சிக்கலை ஏற்படுத்திய நிலையில் சீரியல் நடிகை தாமரை தன்னிடம் நகை வாங்கி ஏமாற்றியதாக பல ஆதாரங்களுடன் வீடியோ வெளியிட்டார். அதை தொடர்ந்து வைஷு தன்னுடைய 3 லட்ச புடவைகளை ஏமாற்றிவிட்டதாக அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார். 

    டிடிஎஃப் வாசன் உள்ளிட்ட பலரும் ஆதி பெரிய ஏமாற்று பேர்வழி அவர் பல லட்சங்களை ஏமாற்றியதாக வீடியோ வெளியிட்டனர். இதை தொடர்ந்து ஸ்வேதா அவர் கல்யாண வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகளையும் தன்னை ஆதி ஏமாற்றி விட்டதாகவும் அழுது வெளியிட்ட வீடியோ தான் நேற்று வைரலாக இருந்தது.

    இந்நிலையில் ஆதி ஸ்வேதாவின் வீடியோக்கு விளக்கம் அளிக்கும் விதமாக நான் எல்லா இடத்துக்கும் அவரை தேடி சென்றேன். அவர் வீட்டை விட்டு வெளியேறிய காரணத்தை சொல்ல முடியுமா? நான் செய்யாத புகாரையெல்லாம் என் மீது போட்டு 50 லட்சம் ஜீவனாம்சம் கேட்டால் எப்படி என்னால் தர முடியும் என பேசி இருக்கிறார். 

    தொடர்ந்து இந்த பிரச்சனைகள் வெடித்து வரும் நிலையில் ஆதி கைது செய்யப்பட கூட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கிறது.