Tag: vijay tv

  • கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

    கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

    Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

    பல மொழிகளில் டப் செய்த சீரியலை ஒளிபரப்பி வந்த விஜய் டிவி முதல்முறையாக ஒரிஜினல் எடுத்து ஹிட் அடித்த சீரியல் லிஸ்ட்டில் முக்கிய இடம் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு உண்டு. அண்ணன் தம்பிகளின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. 

    எந்தவித வில்லத்தனமும் இல்லாமல் சாதாரண மக்களின் கதையாக அமைக்கப்பட்டது. அந்த வகையில் சூப்பர்ஹிட்டான இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. தொடர்ந்து தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் நடந்து வருகிறது. 

    இந்த முறை அப்பா மகனுக்கு இடையேயான கதையை வைத்து உருவாக்கி இருக்கின்றனர். பாண்டியன் மற்றும் அவர் மூன்று மகன்களின் கதையை பேசி வருகிறது. இதில் முதல் மகன் சரவணனுக்கு தங்கமயிலை அப்பா பாண்டியன் பாத்து கட்டி வைத்து இருப்பார். 

    ஆனால் மயில் குடும்பம் வயதில் இருந்து நகை வரை எல்லாத்தையும் பொய் சொல்லி கட்டி வைத்து இருக்க அந்த உண்மை உடைந்து விட்டது. இந்நிலையில் சரவணன் தற்போது தன்னுடைய முன்னாள் காதலியுடன் பழகி வருகிறார். இதனை கேட்ட பாண்டியனும் விவகாரத்து வரை அமைதியாக இருக்க சொல்லி இருக்கிறார். 

    இந்நிலையில் மயிலின் அம்மாவாக நடிக்கும் பாக்கியம் மற்றும் சைவம் ரவி ஒரு இண்டர்வியூவில் கலந்துக்கொண்ட நிலையில் அவர்களிடம் மயில் உங்களால் தான் கஷ்டபடுறாங்க. உங்க ரெண்டாவது பொண்ணு சுடர் அவங்க இஷ்டப்படி திருமணம் செய்து கொண்டதாக ஒரு போட்டோவை காட்ட அதில் மாப்பிள்ளை கோலத்தில் சிம்பு இருக்கிறார். 

    ஒருவேளை கதை இல்லாமல் இப்படியும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 கதை திரும்புமா என கிசுகிசு கிளம்பிய நிலையில் இல்லை இது வெறும் ஏஐ போட்டோ தான் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

  • குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

    குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

    Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில் OG ஆங்கர் ஒருவர் புதிதாக வர இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் அவர் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் துவங்கப்பட இருக்கிறது. எந்த நிகழ்ச்சிக்கும் இல்லாத வரவேற்பு சமையல் நிகழ்ச்சிக்கு உண்டு. அந்த வகையில் முதல்முறையாக காமெடியை இணைத்து ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 1 செம ஹிட் அடித்தது.

    முதல் சீசன் தொடங்கி அடுத்தடுத்த சீசன் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. நான்கு சீசன் வரை ஹிட்டடித்த நிலையில் ஐந்தாவது சீசன் பெரிய சிக்கலில் சிக்கியது. தயாரிப்பு நிறுவனம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். அவர்களை தொடர்ந்து நடுவர் வெங்கடேஷ் பட்டும் வெளியேற நடுவர் தாமு மட்டும் அந்த நிகழ்ச்சியிலேயே தொடர்ந்தார். 

    ஆனால் ஐந்தாவது சீசன் பெரிய பிரச்சனையை சந்தித்தது. பாசிட்டிவ் மட்டுமே இருந்த நிகழ்ச்சிக்குள் முகம் சுழிக்க செய்யும் காமெடிகள் கடுப்பை கிளப்பியது. தன்னுடய வேலையில் தலையிடுகிறார் என தொகுப்பாளினி மணிமேகலை நேரடியாக பிரியங்கா மீது பழி சொல்லி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். ஆனாலும் கடைசியில் பிரியங்காவிற்கே டைட்டிலை கொடுத்தார்கள்.

    தொடர்ந்து கடந்த சீசனில் மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்சனை பெரிய சிக்கலை உருவாக்கியது. இந்நிலையில் வரும் சீசனில் இதுவரை பிரச்சனையே இல்லாமல் வருமா என எதிர்பார்த்து இருந்த நிலையில் மொத்த கான்செப்ட்டை மாத்தி ஜோடியாக போட்டியாளர்கள் களமிறக்க இருக்கின்றனர்.

    மேலும், நான்காவது நடுவராக ரோஜா வர இருக்கிறார். மேலும் தற்போது தொகுப்பாளர் ரக்‌ஷனுக்கு பதில் OG ஆங்கர் மாகா பா ஆனந்த் இந்த முறை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

  • Siragadikka Aasai: ரோகிணிக்கு செம செக் வைத்த முத்து, மீனா… இதாவது ஜெயிக்குமா?

    Siragadikka Aasai: ரோகிணிக்கு செம செக் வைத்த முத்து, மீனா… இதாவது ஜெயிக்குமா?

    Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்டில் ரோகிணிக்கு எதிராக சரியான காயை முத்து மற்றும் மீனா நகர்த்து இருக்கும் நிலையில் அடுத்து நடக்க இருக்கும் நிகழ்வு பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ரோகிணி மற்றும் மனோஜ் இடையேயான விவாகரத்து வழக்கு தான் தற்போதைய சிறகடிக்க ஆசை சீரியலின் மெயின் கண்டெண்ட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் ரோகிணியே அவருக்கு வாதாடி சொல்லும் பொய்யை நீதிபதியே நம்பிவிடுகிறார். 

    இதில் மீனாவை வீட்டை விட்டு வெளியேற்ற சிந்தாமணி பொய் சாமியாரை செட்டப் செய்து நாடகம் போட அவரோ சீதாவின் செயினை பறித்த சம்பவத்தால் வசமாக முத்து மீனாவிடமே மாட்டி கொள்கிறார். ஒரு கட்டத்தில் சிந்தாமணி சொன்னது போல அந்த பொய்யையும் ரோகிணி மீதே போட்டு விடுகிறார். 

    இதனால் கடுப்பான விஜயா, மனோஜை வைத்து ரோகிணிக்கு சவுக்கடி கொடுக்க பிரச்சனை மனித உரிமை ஆணையம் வரை சென்று விடுகிறது. இதனால் ரோகிணிக்கு அவர்கள் ஆதரவாக பேசி விவாகரத்தை தர முடியாது. அவர் இந்த வீட்டில் வாழ்வார் எனக் கூறி விட்டார். 

    இதில் அதிர்ச்சியான விஜயா காசு கொடுக்க போக அவரும் ஜெயில் செல்ல கூடும் என்ற சிக்கலும் உருவாகி விட்டது. இதனால் முத்து மற்றும் மீனா சரியாக யோசித்து மனோஜை அந்த ஆணைய அதிகாரியிடம் ரோகிணியின் மொத்த உண்மையையும் உருக்கமாக பேச வைத்து விடுகின்றனர். 

    இதில் அவரும் ரோகிணியிடம் பொய் இருப்பதாக கூறி வெளியே போக சொல்லிவிடுகிறார். இதனால் வழக்கில் ரோகிணிக்கு இது முதல் பின்னடைவாக இருக்கலாம். மனோஜுக்கு ரோகிணியுடன் விவாகரத்து நடக்கும் பட்சத்தில் அவர் வில்லத்தனம் அதிகரிக்கும் என்றே நம்பப்படுகிறது. 

    இதனால் இன்னும் சீரியல் கதைக்களம் சூடு பிடிக்கும். அவர் வாழ்க்கை போனதற்கு முத்து மீனாவை இறங்கி பழி வாங்கலாம் என்பதால் அந்த காட்சி களம் நன்றாக இருக்கலாம் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • பண மோசடி வழக்கில் முதல்முறையாக வாய் திறந்த சின்ன மருமகள் நடிகை ஸ்வேதா!! தாமரைக்கு பதிலடியோ?

    பண மோசடி வழக்கில் முதல்முறையாக வாய் திறந்த சின்ன மருமகள் நடிகை ஸ்வேதா!! தாமரைக்கு பதிலடியோ?

    Chinna Marumagal: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா தன் பற்றி பரவி வரும் வதந்திக்கு முதல்முறையாக வாய் திறந்து விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

    நடிகை ஸ்வேதா கணவர் தன்னுடைய 3 பவுன் நகையை வாங்கி ஏமாற்றியதாக ஓபனாக பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். இது தொடர்ந்து ஸ்வேதா விவாகரத்து வழக்கு தன் மீது போட்டு இருப்பதாக ஆதி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். 

    இந்நிலையில் ஸ்வேதா இந்த விஷயம் குறித்து வாய் திறந்து முதல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில், நான் முன்னாடியே சொன்னபடி நாங்கள் காதலித்து ரிஜிஸ்ட்டர் மேரேஜ் செய்து கொண்டோம். அப்போது எனக்கு 20 வயது தான். அதனால் எனக்கு எதுவும் தெரியாமல் இருந்தேன். 

    அவர் தன் மீது ஒரு வழக்கு இருப்பதாக சொன்னார். சரி செய்து விடலாம் எனக் கூறி நிறைய செலவை செய்தேன். பின்னர் தான் தெரிந்தது அவர் மீது நிறைய வழக்கு இருக்கிறது. அதனால் அந்த உறவை தொடராமல் விலகி என் குடும்பத்துடன் வந்து சேர்ந்துவிட்டேன்.

    அவர் என்னுடைய பணம், நகை என பலவற்றையும் ஏமாற்றிவிட்டார். நானும் காதலித்ததால் ஏமாந்தேன். அவர் மீது விவாகரத்து வழக்கு தொடர்ந்து இருக்கேன். அது நீதிமன்றத்தில் நடந்து வருவதால் அமைதியாக இருக்கேன். ஆனால் இப்போ தான் அவர் எவ்வளவு மோசமான ஆள் என்பதை தெரிந்து கொண்டேன்.

    அவரை நான் ரொம்ப காதலித்ததால் மேடைகளில் அவர் பெயரை சொல்லி வந்தேன். அவர் என் காதலுக்கு தகுதியற்றவர். அவரை நம்பி யாரும் மோசம் போக கூடாது. ஏற்கனவே பல முறை நான் அவரை நம்ப வேண்டாம் எனக் கூறியும் இன்னும் பலர் அவரை நம்பி கொண்டு பணம், நகையை ஏமாறுகின்றனர். 

    நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது வேலைகளை கூட நிம்மதியாக செய்ய முடியவில்லை. சமூக ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்படைந்து இருக்கிறேன். வழக்கு தொடர்ந்தும் அவர் என்னை தொந்தரவு செய்கிறார். 

    அவரை நம்பி போட்டோஷூட், ப்ரோமோஷன் பணிகளுக்கு அழைக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்கிறேன். நம்மால் முடிந்ததை செய்வோம். இனிமேல் கடவுள் பார்த்து கொள்வார். காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்தால் ரொம்ப நல்லது எனவும் கோரிக்கை விடுத்து இருக்கிறார். 

    ஸ்வேதா இன்ஸ்டா பதிவு: https://www.instagram.com/p/DWivO1UgXpx/?utm_source=ig_embed&ig_rid=10421434-04c5-4936-9efb-a57c071d4da6&img_index=1

  • குக் வித் கோமாளி சீசன் 7 அடுத்த ஜோடி இவர்களா? என்ன செய்ய போறாங்களோ?

    குக் வித் கோமாளி சீசன் 7 அடுத்த ஜோடி இவர்களா? என்ன செய்ய போறாங்களோ?

    cook with comali 7: விஜய் தொலைக்காட்சியின் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த சீசன் புது விதமாக ஒளிபரப்பப்பட இருக்கும் நிலையில் அதன் போட்டியாளர்கள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. 

    குக் வித் கோமாளி இந்த சீசனில் இருந்து ஜோடியாக போட்டியாளர்கள் களமிறங்க இருக்கின்றனர். அந்த வகையில் ரியல் கணவன் மனைவியே போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புரோமோ வெளியானது. 

    இந்த சீசனில் எப்போதும் போல இல்லாமல் மூன்று நடுவர்களுக்கு பதில் நான்கு நடுவர்கள் வர இருக்கின்றனர். அந்த வகையில் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் கௌஷிக் மட்டுமல்லாமல் நடிகை ரோஜாவும் இந்த சீசனில் களமிறங்க இருக்கின்றனர். 

    மேலும் இதுவரை நான்கு போட்டியாளர் ஜோடி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனர். சம்யுக்தா அவர் கணவர் அனிருதா, வினோத் மற்றும் பாக்கியா, அரவிந்த் – சங்கீதா, இதுமட்டுமல்லாமல் குக் வித் கோமாளி முதல் சீசன் தொகுப்பாளினியாக இருந்த நிஷா அவர் கணவர் ரியாஸ்கான் கலந்துக்கொள்ள இருக்கின்றனர். 

    இந்நிலையில் குக் வித் கோமாளியின் அடுத்த போட்டியாளர்களாக பாடகர் மனோ மற்றும் அவர் மனைவி ஜமீலா கலந்து கொள்ள இருக்கின்றனர். இதனால் இந்த முறை போட்டியை விட கலாட்டா அதிகமாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது. 

    இன்னும் சில ஜோடிகள் அறிமுகமாகலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு சீசன்களாக இறங்கி இருந்த டிஆர்பி இந்த முறையாது அதிகரிக்கும் என்றே நம்பப்படுகிறது. 

  • Siragadikka Aasai: ரோகிணியை மாட்டிவிட ப்ளான் போடும் மனோஜ்!… என்ன நடக்க போகுதோ?

    Siragadikka Aasai: ரோகிணியை மாட்டிவிட ப்ளான் போடும் மனோஜ்!… என்ன நடக்க போகுதோ?

    Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 

    இந்த வார டிஆர்பி லிஸ்ட்டில் சிறகடிக்க ஆசை விஜய் தொலைக்காட்சியின் நம்பர் ஒன் லிஸ்ட்டிலும் மொத்த சீரியல் லிஸ்ட்டில் 6வது இடமும் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் மீனா வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். 

    ஆனால் சீதா தாலி செயின் திருட்டு போன விவாகரத்தினை கண்டுபிடிக்க முத்துவுடன் அவர் களமிறங்கி இருந்தார். அதில் தன்னை பற்றி சொன்ன ஜோசியர் ஒரு திருடி என்பதை தெரிந்து கொண்டார். அதையடுத்து அவரை ப்ளான் செய்து பிடித்து கொடுத்து விட்டனர்.

    ஜோசியக்கார பெண்ணை அழைத்து வந்து விஜயாவிடமும் சொல்ல வைத்துவிட்டனர். இதனால் மீண்டும் மீனாவை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வரும் நிலைக்கு வந்துவிட்டார் விஜயா. இதனால் அவர் கடும் கோபத்தில் இருக்கிறார். 

    மீனா வீட்டுக்கு வந்துவிட்டதால் விருந்து நடக்கிறது. அப்போது மீனா முத்து காப்பாற்றிய நகையை பெற்ற ஜோடி பரிசுடன் அவர்களை பார்க்க வந்து நகையை கொடுத்துவிட்டு செல்கின்றனர். இதில் விஜயா வெறுப்பாகி அந்த மீனாவிடம் அசிங்கப்பட்டுவிட்டேன்.

    இதற்கு காரணம் ரோகிணி தான் என திட்டிக்கொண்டு இருக்கிறார். இதனையடுத்து மனோஜ் அவளை மாட்டிவிட நான் ப்ளான் போடுகிறேன் என்கிறார். இதனையடுத்து ரோகிணிக்கு கால் செய்து பேச வேண்டும் எனக் கூற ரோகிணியும் சந்தோஷத்தில் கிளம்புகிறார். 

    ஆனால் திடீரென மனோஜ் கால் செய்து வர சொல்லியதை சந்தேகப்படுகிறார். ப்ளான் செய்து மாட்ட வைக்க பாக்கிறானா எனவும் யோசித்து கொண்டு இருக்கிறார். இந்த முறையாது ரோகிணி சிக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • நான் இனிமே விஜய் டிவியில் இல்லை! பாக்கியலட்சுமி கோபியின் அதிர்ச்சி வீடியோ!!

    நான் இனிமே விஜய் டிவியில் இல்லை! பாக்கியலட்சுமி கோபியின் அதிர்ச்சி வீடியோ!!

    Bakkiyalakshmi: விஜய் தொலைக்காட்சியில் இன்னொரு சீரியல் மூலம் வர இருப்பதாக சதீஷ் அறிவித்து இருந்த நிலையில் அவர் வெளியிட்டு இருக்கும் புது வீடியோவில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார். 

    வீட்டு பெண்ணின் போராட்டங்களை மையமாக வைத்து ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. அதில் பாக்கியா கேரக்டர் பாசிட்டிவ் விதத்தில் ரீச் கொடுத்தது என்றால் வில்லனாக நடித்த கோபி வேறு விதமாக லைக்ஸ் குவித்தார். 

    அவரின் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது இல்லாமல் வில்லனுக்கே ரசிகர் கூட்டம் கூடியது. கதையே இல்லாமல் இந்த கேரக்டர்களுக்காகவே சீரியலை இழு இழுவென இழுத்து மூடி வைத்தனர். ஆனால் தற்போது கோபி பாக்கியா ஜோடி மீண்டும் ஒரு சீரியலில் களமிறங்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. 

    ஆதலால் காதல் செய்வீர் என டைட்டில் வைக்கப்பட இருக்கும் இந்த சீரியலின் ஹீரோவாக அருண் பிரசாத் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் சதீஷ் இந்த கேரக்டரில் இனி நடிக்க மாட்டார் என அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

    இதுகுறித்து அவர் பேசி இருக்கும் வீடியோவில், சில விஷயங்கள் நம்மை விட்டு போகும் போது கஷ்டமாக இருக்கும். ஆனால் பின்னால் அது நன்மையாக மாறும் என்றும் எல்லாரும் என்னை மன்னிசுட்ங்க எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு ரசிகர்கள் சீக்கிரம் நீங்க விஜய் டிவிக்கு வருவீங்க என ரசிகர்கள் ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர். சுசித்ராவுக்கு ஜோடியாக இனி யார் வருவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

  • மகாநதி சீரியலுக்கு மூடுவிழா வைக்க போகிறதா விஜய் டிவி?

    மகாநதி சீரியலுக்கு மூடுவிழா வைக்க போகிறதா விஜய் டிவி?

    Mahanathi: விஜய் தொலைக்காட்சியின் காதல் சீரியல் என ரசிகர்களால் விமர்சிக்கப்படும் மகாநதி சீரியல் எண்ட் கார்ட் போடும் அளவுக்கு கதை நகர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

    சுவாமிநாதன் லட்சுமி பிரியா ஜோடியாக நடிக்கும் திரைப்படம் மகாநதி. மகள்களின் வாழ்க்கை கதையாக தொடங்கி பின்னர் காவேரியின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அவர் கணவராக விஜய் அறிமுகம் லைக்ஸ் குவித்தது.

    இதை தொடர்ந்து இருவரின் காதல் கல்யாணம் வாழ்க்கை மட்டுமே முக்கிய எபிசோட்களாக மாறி இருக்கிறது. இருவரும் காண்ட்ராக்ட் கல்யாணம் செய்து அடித்து பிடித்து கொண்டு காதலிக்க தொடங்கினார். இருவரும் ஒன்றாக வாழலாம் என முடிவெடுக்கும் போது குடும்பத்துகே விவரம் தெரிந்து இருவரையும் பிரித்தனர். 

    பின்னர் காவேரி கர்ப்பமாகி குடும்பமே ஒப்ப்ய்க்கொண்டு வாழ வைக்க முடிவெடுக்கும் போது ராகவ் ஆக்ஸிடெண்ட் செய்ததில் காவேரிக்கு பழைய வாழ்க்கையெல்லாம் மறந்தது. இதை தொடர்ந்து சீரியல் 5 வருடம் கடந்து தற்போது இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. 

    காவேரி உயிரோடு இருப்பது தெரிந்து தற்போது விஜய் அவருக்கு பழைய நினைவுகள் வருவதற்காக போராடி கொண்டு இருக்கிறார். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒருமுறை இருவருக்கும் கல்யாணம் செய்து வைக்க ப்ளான் போட்டு வருகின்றனர். அது முடிந்ததும் சில மாதம் காவேரிக்கு நினைவு வராமல் இழுத்தடிப்பார்கள்.

    பின்னர் அவர் சரியானால் கதையை முடிக்க வேண்டியது தான். வேறு ட்ராக்கே இல்லாமல் கதை சென்று கொண்டு இருக்கிறது. இப்படி அரைத்த மாவையே இழுத்தடித்து கொண்டு இருந்தால் கஷ்டமப்பா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 

  • பிக்பாஸ் தாமரையிடம் நகையை வாங்கிய ஏமாற்றிய சீரியல் நடிகை கணவர்!

    பிக்பாஸ் தாமரையிடம் நகையை வாங்கிய ஏமாற்றிய சீரியல் நடிகை கணவர்!

    விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர் நடிகை தாமரை. பிக்பாஸில் சாதாரண மக்களிடம் இருந்து வந்து சில போட்டியாளர்களை உள்ளே இறக்குவார்கள்.

    அந்த வகையில் முதல் சீசனில் வந்த ஜூலி காயத்ரியுடன் சேர்ந்து பேசியது வைரலான நிலையில் அவருக்கு நெகட்டிவ் விமர்சனமே குவிந்தது. தனலட்சுமிக்கும் இதே நிலை தான் எலிமினேட் ஆக வேண்டும் என கோரிக்கை வரை எழுந்தது.

    இதில் விதி விலக்கு என்னவோ தாமரை தான். உள்ளே வந்தது முதல் நல்ல கண்டெண்ட் கொடுத்து ரசிகர்களை குவித்தார். ஃபைனல் வரை செல்வார் என நம்பப்பட்டது. இருந்தும் அவர் டாப் 5 கூட செல்லாமல் வெளியேறினார். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்தது. சின்னத்திரையில் சில சீரியல்களிலும் நடித்து வருகிறார். 

    இந்நிலையில் இவர் சமீபகாலமாக தொடர்ந்து வீடியோ மூலம் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகிறது. சின்ன மருமகள் சீரியல் ஸ்வேதா கணவர் ஆதி நல்லது செய்வது போல இருக்கிறது. 

    அவர் என் வீட்டில் தங்கி இருந்தார். அவர் அவசரமாக என்னிடம் காசு கேட்டார். அதற்கு என்னுடைய 3 பவுன் நகையை அவர் ஏரியாவில் அடகு வைத்தோம். அங்கு அதிகமாக இருக்கும் எனக் கூறியதால் அவர் பெயரில் அவர் ஏரியாவில் வைத்தோம். 

    ஆனால் அதை மூணே நாளில் திருப்பி விற்றுவிட்டார். இப்போ என்ன செய்வது என்றே தெரியவில்லை. நகை வாங்கிய ரசீது கூட என்னிடம் இருக்கிறது. தற்போது நான் என்ன செய்ய போகிறேன் என தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

  • மீண்டும் பாக்கியா – கோபி கூட்டணி… ஹீரோவாக பிக்பாஸ் பிரபலம்… என்ன நடக்க போகுதோ?

    மீண்டும் பாக்கியா – கோபி கூட்டணி… ஹீரோவாக பிக்பாஸ் பிரபலம்… என்ன நடக்க போகுதோ?

    Vijay tv: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களிடம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. 

    பொதுவாக முதலில் விஜய் டிவி வட இந்திய சீரியல்களை தமிழில் டப் செய்து வெளியிடுவார்கள். அதற்கு ரசிகர்கள் இருந்தாலும் ஒரிஜினல் கதைக்கு அனைவௌர்ம் சன் டிவி பக்கமே செல்லும் நிலை இருந்தது. 

    அந்த நேரத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல்கள் தொடங்கியது. இதில் ஒரு சாதாரண அம்மாவின் கதையை மையமாக வைத்து உருவான இந்த சீரியல் அதிகமாக ஹிட் அடித்தது. 

    ஹீரோ பாக்கியா நடிப்பால் ஒரு ஹிட் கொடுத்தாலும் வில்லன் வேடத்தில் கோபியாக நடித்த சதீஷ் ஒரு பக்கம் வாவ் சொல்ல வைத்தார். அந்த அளவு இந்த ஜோடிக்கு ரசிகர்களிடம் ஹிட் அடித்தது.

    இந்நிலையில் அந்த சீரியல் முடிந்து மீண்டும் இந்த ஜோடி புதிய சீரியல் மூலம் மீண்டும் வர இருப்பதாக கூறப்படுகிறது. ஆதலால் காதல் செய்வீர் சீரியல் பெயரில் உருவாகும் இதில் ஹீரோவாக பாரதி கண்ணம்மா அருண் நடிக்க இருக்கிறார். 

    இவரும் ஹீரோவாக பல மாதம் கழித்து கம்பேக் கொடுக்க இருப்பதால் இந்த சீரியலுக்கு இப்போதே வரவேற்பு குவிந்து வருகிறது. ஷூட்டிங் தொடங்கி இருக்கும் இந்த சீரியல் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகலாம் எனக் கூறப்படுகிறது.