Author: adminram

  • நாம எலெக்‌ஷன்ல நின்னா கூட சிஎம் ஆகிடலாம் போல!.. விஜய்க்கு வாழ்த்து சொன்ன மகேஷ் பாபு!..

    நாம எலெக்‌ஷன்ல நின்னா கூட சிஎம் ஆகிடலாம் போல!.. விஜய்க்கு வாழ்த்து சொன்ன மகேஷ் பாபு!..

    தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் சூர்யா, சியான் விக்ரம் உள்ளிட்ட பல நடிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    இந்த தேர்தலில் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளில் முக்கிய வெற்றியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதில், நடிகர் மகேஷ் பாபுவும் சமூக வலைதளத்தின் மூலம் தனது பாராட்டை தெரிவித்தார்.

    மகேஷ் பாபு நடிப்பில் ராஜமௌளி இயக்கத்தில் உருவாகி வரும் வாரணாசி திரைப்படம் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், சுமார் என்பது சதவிதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    திரைப்படங்களுடன் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் மகேஷ் பாபு செயல்பட்டு வருகிறார். அவர் தயாரிப்பில் உருவாகும் ராவ் பஹதூர் திரைப்படம் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவரது பழைய ஹிட் திரைப்படமான அதிதி 4K வடிவில் மீண்டும் வெளியிடப்பட உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் தற்போது தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில் புதிய சாதனைகளைப் படைத்து, பிரமிக்க வைக்கும் வெற்றியைப் பெற்ற விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்,மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இன்றைய நாள் பெருமளவில் பிரதிபலிக்கிறது. இந்த வெற்றி தமிழ்நாட்டிற்கு அர்த்தமுள்ள முன்னேற்றமாக மாறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்ற பதிவை பகிர்ந்துள்ளார்.

    இரு திரையுலக முன்னணி நடிகர்களுக்கிடையேயான இந்த வாழ்த்து பரிமாற்றம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், விஜயின் அரசியல் முன்னேற்றத்திற்கு இது ஒரு புதிய ஊக்கமாகவும் பார்க்கப்படுகிறது.

    ஒக்கடு, போக்கிரி உள்ளிட்ட பல மகேஷ் பாபு படங்களை விஜய் ரீமேக் செய்து தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு பாக்ஸ் ஆபீஸில் பெரிய போட்டியாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் சூர்யாவும் விஜய்யை மனமார வாழ்த்தியுள்ளார். அவர் நடித்த கருப்பு படத்தில் த்ரிஷா தான் ஹீரோயின் என்பது கூடுதல் தகவல்.

  • தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் ஆகிறாரா விஜய்?.. நின்ற 2 தொகுதிகளிலும் மாஸ் வெற்றி!..

    தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் ஆகிறாரா விஜய்?.. நின்ற 2 தொகுதிகளிலும் மாஸ் வெற்றி!..

    2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலில், நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தான் நின்ற பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு உள்ளிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.

    சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட விஜய், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார். இறுதியாக பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்ததாக ஆரம்ப நிலவரங்களில் தெரிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு பகுதிகளிலும் அவரது கட்சி வலுவான முன்னிலை பெற்று வெற்றிப்பெற்றது. மேலும், தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது, பல்வேறு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான ஆதரவை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த வெற்றி, நடிகர் விஜயின் அரசியல் பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. புதிய கட்சியாக இருந்தாலும், மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    வெற்றியைத் தொடர்ந்து, கட்சித் தலைமையகம் மற்றும் விஜயின் இல்லம் முன்பு ஆதரவாளர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், வெற்றி பெற்ற வேட்பாளர்களை நேரில் சந்தித்து வாழ்த்த விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மொத்தத்தில், பெரம்பூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கிடைத்த இந்த வெற்றிகள், தமிழக அரசியலில் புதிய மாற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகின்றன. மேலும், பல திரை பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • சூர்யா ஒதுக்கினாலும்!.. தலைவி த்ரிஷாவுக்கு பர்த்டே விஷ் பண்ண கருப்பு டீம்.. மேடம் செம ஹேப்பி!..

    சூர்யா ஒதுக்கினாலும்!.. தலைவி த்ரிஷாவுக்கு பர்த்டே விஷ் பண்ண கருப்பு டீம்.. மேடம் செம ஹேப்பி!..

    ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் வருகின்ற மே 14 தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இன்று நடிகை த்ரிஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பு நிருவனம் அவருக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளது.

    நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள “கருப்பு” திரைப்படம், தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக உருவெடுத்துள்ளது. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். இந்த படம் ஒரு அதிரடி டிராமாவாக உருவாகியுள்ளது. மேலும், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இந்திரன்ஸ், நடராஜன் சுப்பிரமணியம், ஆர்.ஜே.பாலாஜி, சுவாசிகா, சிவதா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    “கருப்பு” திரைப்படம் ஆரம்பத்தில் 2025ஆம் ஆண்டு வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் வெளியீடு தாமதமானது. பின்னர் படக்குழு அதிகாரப்பூர்வமாக 2026 மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக அறிவித்தது. மேலும், சில தகவல்களில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கலாம் என்றும் பேசப்படுகிறது. டீசர் மற்றும் அப்டேட்கள் வெளியாகியதிலிருந்து சமூக வலைதளங்களில் படத்திற்கான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடிவரும் த்ரிஷாவிற்கு ட்ரீம் வாரியர் தயாரிப்பு நிருவனம் தென்னிந்திய குயின் த்ரிஷா அவர்களுக்கு கருப்பு படக்குழுவினர் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்! என வாழ்த்தி பதிவிட்டுள்ளனர். நடிகை த்ரிஷா தனது நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், அவரின் சாதனைகள் மற்றும் திரையுலகில் அவருடைய நீண்டகால பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த வாழ்த்து சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. த்ரிஷாவின் அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கருப்பு படத்தின் ஹீரோ சூர்யா த்ரிஷாவுக்கு ஏன் வாழ்த்து ஏதும் சொல்லவில்லை என்றும் கருப்பு படத்தின் புரமொஷனில் த்ரிஷாவை ஒதுக்கி வைத்ததும் சூர்யா தானா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • சிஎம் விஜய்க்கு வாழ்த்துகள்!.. சியான் விக்ரம் முதல் சிவகார்த்திகேயன் வரை வரிசை கட்டிட்டாங்களேப்பா!..

    சிஎம் விஜய்க்கு வாழ்த்துகள்!.. சியான் விக்ரம் முதல் சிவகார்த்திகேயன் வரை வரிசை கட்டிட்டாங்களேப்பா!..

    தமிழக அரசியல் களத்தில் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விஜய் மற்றும் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, விக்ரம், சிவகார்த்திகேயன், கவின், விக்ராந்த், காஜல் அகர்வால், ஜீவா உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது பாராட்டுகளை பகிர்ந்து வருகின்றனர். “இது ஒரு புதிய தொடக்கம்”, “உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்” போன்ற வாழ்த்துச் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    நடிகர் சிவகார்த்திகேயன் போட்டியிட்ட முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இந்த வெற்றியை பெற்றிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள் நீங்கள் திரைத்துறையை சார்ந்தவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி, மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சார் என்று பதிவிட்டுள்ளார்.

    நடிகர் விக்ராந்த் வரலாறு படைக்கப்பட்டுள்ளது,உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் மிகவும் மிகவும் மகிழ்ச்சி தமிழ்நாடு மக்கள் உங்கள் மீதும் உங்கள் தொலைநோக்குப் பார்வையின் மீதும் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. உண்மையிலேயே இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்று தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

    “நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்னா மாதிரி” இன்று, மக்கள் அதை முழு நம்பிக்கையுடன் எதிரொலித்துள்ளனர். இந்த அற்புதமான மற்றும் மகத்தான வெற்றிக்கு விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்தத் தருணம் உங்கள் தொலைநோக்குப் பார்வைக்கும், உங்கள் விடாமுயற்சிக்கும், மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்புக்கும் ஒரு உண்மையான சான்றாகும்.
    தமிழ்நாடு மக்கள் உரக்க, தெளிவாக, மிகுந்த பெருமையுடன் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர். இது வெறும் வெற்றி மட்டுமல்ல, கோடிக்கணக்கான மக்களுடன் ஏற்பட்ட ஆழமான, வலிமையான பிணைப்பின் கொண்டாட்டம்.

    உத்வேகம் தரும் இந்த புதிய அத்தியாயத்தில் நீங்கள் அடியெடுத்து வைக்கும்போது, ​​உங்களுக்கு மிகுந்த வலிமையும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறோம். பலரும் எதிர்பார்க்கும் மாற்றத்தை நீங்கள் கொண்டு வருவீர்களாக. இந்த மகத்தான சாதனைக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்! உங்கள் தலைமைத்துவத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், மேலும் மாநிலத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என நம்புகிறேன் என காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    மேலும் நடிகர் ஜீவா விசிலடித்து வாழ்த்து கூறியுள்ளது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் #VijayPoliticalEntry மற்றும் #TVKVictory போன்ற ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

  • விஜயை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளீரகள், நிச்சயம் நல்லது செய்வார்.. விசில் அடித்துக் கொண்டாடிய SAC!

    விஜயை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளீரகள், நிச்சயம் நல்லது செய்வார்.. விசில் அடித்துக் கொண்டாடிய SAC!

    தமிழக அரசியல் களத்தில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் ஆரம்ப கட்டத்திலிருந்தே முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தினரும் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர்.

    சென்னையில் உள்ள விஜயின் இல்லத்தில் அவரது தாய், உறவினர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் கொண்டாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த அரசியல் வெற்றியின் தருணம் இதுவே என்ற உணர்வில், குடும்பத்தினர் உணர்ச்சி வசப்பட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில், இயக்குநரும் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் வீட்டிற்கு வந்தபோது, அங்கு நிலவிய கொண்டாட்ட சூழலைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, குடும்பத்தினரை அணைத்துப் பாராட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அதிகாலைவேளையில் திருத்தணி முருகன் கோவில் சென்று தனது மகன் அரசியல் பயணம் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், விஜயின் அடையாளமாக பார்க்கப்படும் வெள்ளை சட்டை மற்றும் சாண்டல் நிற பேண்ட் அணிவகுப்பை, இன்று அவரது தந்தையும் பின்பற்றியிருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், ஒரு முதலமைச்சரின் தந்தையாகப் போவதில் அவர் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். முதலமைச்சர் என அறிவிக்கும் முன்னதாகவே அவர் வீட்டில் கோண்டாட்டம் தொடங்கிவிட்டதை பார்த்த ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்தியுள்ளது.

  • திருப்பதி தரிசனத்தை முடித்து விட்டு விஜய் வீட்டுக்கு வந்த த்ரிஷா!.. பர்த்டே கிப்ட் பலமா இருக்கே!..

    திருப்பதி தரிசனத்தை முடித்து விட்டு விஜய் வீட்டுக்கு வந்த த்ரிஷா!.. பர்த்டே கிப்ட் பலமா இருக்கே!..

    இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நடிகை த்ரிஷா திருப்பதி கோவில் சென்று ஏழுமலையான் தரிசனை பெற்றுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், தற்போது விஜய் வீட்டுக்கு த்ரிஷா வந்துள்ளார். த்ரிஷாவுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், த்ரிஷா தேர்தலன்று வாக்களித்ததை பற்றி கேள்வி எழுப்பிய போது விஜயுடன் நடித்திருந்த கில்லி பாடலுடன் பதிவு ஒன்றை போட்டி தான் விஜய்க்கே ஒட்டளித்ததாக வெளிப்படையாக சொல்லிவிட்டார். இந்நிலையில் இன்று அவர் தன் பிறந்தநாளுக்காக மட்டுமல்லாமல் விஜயின் அரசியல் வெற்றிக்காகவும் வேண்டிக்கொண்டிருப்பார் என விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

    வரும் மே மாதம் 14ம் தேதி ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் த்ரிஷா சூர்யாவுடன் நடித்து வரும் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்கு த்ரிஷா வராததும் பலரின் மனதில் பல கேள்விகல்ளை எழுப்பியிருந்தது. திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், முக்கியமான நாளில் ஆன்மிகத்தை முன்னிலைப்படுத்திய த்ரிஷாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஆன்மிக முறையில் கொண்டாடியுள்ளார். இதற்காக அவர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி திருமலை வெங்கடேஸ்வரர் கோவில் சென்றார். த்ரிஷாவின் இந்த ஆன்மிக பயணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

    மேலும், பிறந்தநாள் மற்றும் விஜய்யின் வெற்றியை இணைந்து கொண்டாட சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

  • இன்னும் அதே மரமா?.. 11 வருஷமா 3 நாளில் 30 கோடி.. தனுஷ் ட்வீட்டை கலாய்க்கும் ரசிகர்கள்!..

    இன்னும் அதே மரமா?.. 11 வருஷமா 3 நாளில் 30 கோடி.. தனுஷ் ட்வீட்டை கலாய்க்கும் ரசிகர்கள்!..

    கடந்த 2015ம் ஆண்டு கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா தஸ்தூர், கார்த்தி நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படம் 3 நாளில் 30 கோடி வசூலை ஈட்டியதை கொண்டாடி தனுஷ் போட்ட ட்வீட்டை தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

    விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, ஜெயராம், சுராஜ் வெஞ்சரமுடு, கே.எஸ். ரவிகுமார், எம்.எஸ். பாஸ்கர், கருணாஸ் நடித்த கர திரைப்படமும் 3 நாளில் 30 கோடி வசூலை அள்ள போராடி வருகிறது.

    தனுஷின் கர திரைப்படம் கிராமத்து ஹாலிவுட் படம் என்றெல்லாம் பில்டப் விட்டார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. ஆனால், படத்தை பார்த்த ரசிகர்கள் படம் ரொம்பவே போர் அடிக்கிறது என போர் தொழில் இயக்குநரை டேமேஜ் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், தனுஷின் 11 வருட பழைய ட்வீட்டை போட்டு இன்னமும் அதே மரமா என மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். தனுஷ் கண்டிப்பாக இந்த பிரச்னைகளை அடுத்த படத்தில் சரி செய்து கம்பேக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    சிவகார்த்திகேயனை வைத்து அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடித்து வரும் நிலையில், அந்த படம் கண்டிப்பாக விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும் என்கின்றனர்.

  • விஜய் சிஎம் ஆனாருன்னா!.. அதுக்கு காரணம் ரெண்டே பேரு தானாம்!.. கூல் சுரேஷ் யாரை சொன்னாரு தெரியுமா?

    விஜய் சிஎம் ஆனாருன்னா!.. அதுக்கு காரணம் ரெண்டே பேரு தானாம்!.. கூல் சுரேஷ் யாரை சொன்னாரு தெரியுமா?

    விஜய் தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக போகிறார் என தகவல்கள் வெளியாகின்றன. நாளை தேர்தல் முடிவுகள் வந்ததும் உண்மை தெரிந்துவிடும். ஒருவேளை விஜய் சிஎம் ஆனாருன்னா அதுக்கு காரணம் ரெண்டே பேரு தான் என கூல் சுரேஷ் பேசியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த ரஜினிகாந்தை தனது கடினமான உழைப்பால் முந்தியவர் தான் விஜய். அஜித் – விஜய் என்கிற போட்டி தாண்டி ரஜினிகாந்த் – விஜய் என்கிற போட்டி வந்தது. சூப்பர் ஸ்டாரை விட அதிக சம்பளத்தை விஜய் வாங்கியதாக கூறப்பட்டது.

    இதுக்கு மேல் சினிமாவில் சாதிக்க ஒன்றும் இல்லை என நினைத்த விஜய் மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன் என தவெகவை தொடங்கி தைரியமாக தேர்தலையும் பல சோதனைகளை கடந்து சந்தித்து விட்டார்.

    திமுகவுக்கு ஆதரவாக பல எக்ஸிட் போல்கள் வந்தாலும் இந்தியா டுடேவின் ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு விஜய்க்கு அதிக இடங்கள் கிடைக்கும் என கணித்து அரசியல் வட்டாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.

    பலரும் விஜய் தான் முதல்வர் ஆகப் போகிறார் என பேச ஆரம்பித்துள்ளனர். சிலர், விஜய் ஆகவே மாட்டார் என பேசி வருகின்றனர். அந்தளவுக்கு தனது முதல் தேர்தலிலேயே பெரும் ஆளுமையை விஜய் நிரூபித்துள்ளார் என்பது தான் உண்மை.

    விஜய் சிஎம் ஆக மாறினால் அதற்கு ஸ்லீப்பர் செல்லாக இருந்து உதவி இரண்டு பேர் தான் காரணம் என்றும் ஒன்று பிக் பாஸ் ஜூலி, இன்னொன்று சாட்டை துரைமுருகன் தொடர்ந்து விஜய் பற்றி நெகட்டிவாக பேசி பேசியே மக்கள் சப்போர்ட்டை அவருக்கு வாங்கிக் கொடுத்து விட்டனர் என ஒரே போடாக போட்டுள்ளார்.

  • விஜய் தான் காரணமா?.. ‘கருப்பு’ புரமோஷனில் த்ரிஷாவை கழட்டிவிட்ட சூர்யா? அடுத்த ‘கர’ ஆகாம இருந்தா சரி!

    விஜய் தான் காரணமா?.. ‘கருப்பு’ புரமோஷனில் த்ரிஷாவை கழட்டிவிட்ட சூர்யா? அடுத்த ‘கர’ ஆகாம இருந்தா சரி!

    தமிழ் சினிமாவில் ஏப்ரல் மாதம் வெளியான படங்களில் அண்ணாச்சி நடித்த ‘லெஜண்ட்’ படம் மட்டுமே கொஞ்சம் தேவலாம். ஆனால், அந்த படமும் வசூல் ரீதியாக ஓடவில்லை. பரத் நடித்த காளிதாஸ் 2, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா தயாரித்து பிரதீப் ரங்கநாதன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, TN2026, கடைசியாக வெளியான தனுஷின் கர என ஏப்ரல் மாதம் ஒட்டுமொத்தமாக ஒரு படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கவில்லை.

    தேர்தல் தான் முக்கிய காரணம் என்றும் அதெல்லாம் கிடையாது, படங்கள் சிறப்பாக இல்லை என்றும் அதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. மே மாதம் விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியாகுமா என்பது இன்னமும் உறுதியாக தெரியவில்லை. ஆனால், தனுஷின் கர மற்றும் சூர்யாவின் கருப்பு படங்களுக்கு போட்டியாக ஜன நாயகன் வெளியாகாது எனக் கூறுகின்றனர்.

    கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற நிலையில், நடிகை த்ரிஷா அந்த விழாவில் பங்கேற்கவில்லை. த்ரிஷாவை தவிர்த்து படத்தில் நடித்த சுவாசிகா உள்ளிட்ட நடிகைகள் பங்கேற்றனர்.

    மேலும், இதுதொடர்பாக த்ரிஷா தனக்கான இன்வைட் மிஸ் ஆகியிருக்கோமோ என்னமோ என பகிரங்கமாக கலாய்த்த நிலையில், தற்போது படக்குழு த்ரிஷாவின் அறிமுக புரமோவை சவுத் குயின் என்ப் போட்டு வெளியிட்டு சமாளிஃபிகேஷன் செய்து வருகின்றனர்.

    விஜய்யுடன் த்ரிஷா ஜோடியாக வெளியே வந்ததும் விஜய் – த்ரிஷா உறவுகள் குறித்து வலம் வரும் தகவலால் தான் சூர்யா தனது கருப்பு படத்தின் புரமோஷனுக்கு த்ரிஷா வேண்டாம் என முடிவு செய்துவிட்டாரா? என கேள்விகள் அதிகரித்துள்ளன.

    கருப்பு படம் இன்னொரு ‘கர’ படமாக ஆகிவிடாமல் இருக்க வேண்டும் என்பதே கோலிவுட் ரசிகர்கள் குறிப்பாக சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • ’29’ படத்துல தனுஷ் நடிச்சிருந்தா அவருக்கு ஒரு சூப்பர் ஹிட் கிடைச்சிருக்கும்!.. ரத்னகுமார் பளிச்!..

    ’29’ படத்துல தனுஷ் நடிச்சிருந்தா அவருக்கு ஒரு சூப்பர் ஹிட் கிடைச்சிருக்கும்!.. ரத்னகுமார் பளிச்!..

    தனுஷ் நடித்து வரும் படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், சமீபத்தில் இயக்குநர் ரத்னகுமார் அளித்த பேட்டியில் ‘29’ படத்தில் தனுஷ் சார் நடித்திருந்தால் நிச்சயமாக இது அவரோட படமாக சூப்பராக வந்திருக்கும் என்று பேசியுள்ளார்.

    தனுஷ் நடித்த கர படம் வெளியாகி 3 நாட்களில் வாஷ் அவுட் என ரிசல்ட்டுகள் வெளியாகி உள்ள நிலையில், தனுஷ் ஏன் ஒவ்வொரு ஊருக்கு சென்று சோகமான பிரச்னைகளை மட்டுமே படமாக்கி வருகிறார் என கலாய்த்து வருகின்றனர்.

    ரசிகர்கள் கொண்டாடும் படங்களை தனுஷ் எடுக்க தவறி வருவதாகவும் ஃபாஸ்ட் ஃபுட் கடை, இட்லி கடை, ஆந்திரா மெஸ் என ஹோட்டல் நடத்திக் கொண்டிருக்கிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக செஃப் ஆக வேண்டும் என்கிற ஆசை தனுஷுக்கு இருந்த நிலையில், தொடர்ந்து தனது படங்களில் அதனை வலிய திணித்து வருகிறாரா என கேள்விகள் எழுந்துள்ளன.

    மேயாத மான் படத்தின் மூலம் வெற்றியை கொடுத்த ரத்னகுமார், அமலா பாலை நிர்வாணமாக நடிக்க வைத்த ஆடை படத்திற்கு பிறகு பெரிய சர்ச்சையில் சிக்கினார். அதன் பின்னர் அவர் சந்தானத்தை வைத்து இயக்கிய குலு குலு திரைப்படம் ஃப்ளாப் ஆன நிலையில், பல வருடங்கள் கழித்து 29 படத்தை இயக்கியுள்ளார்.

    இந்த படத்தில் முதலில் தனுஷ் சார் தான் நடித்திருக்க வேண்டும். அவரிடம் கதை சொன்னேன். ஆனால், இப்போது இருக்கும் சூழலில் இந்த படம் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார். அவர் பண்ணியிருந்தால் இன்னமும் சூப்பரான படமாக வந்திருக்கும் என்று பேசியுள்ளார்.