Author: adminram

  • ரஜினிகாந்த் மகளால் கடுப்பானாரா சுந்தர். சி?.. கமல்ஹாசன் – ரஜினிகாந்த் படத்தை கைவிட்டது ஏன்?

    ரஜினிகாந்த் மகளால் கடுப்பானாரா சுந்தர். சி?.. கமல்ஹாசன் – ரஜினிகாந்த் படத்தை கைவிட்டது ஏன்?

    ரஜினிகாந்த் – கமல்ஹாசனை இயக்கப் போகிறார் சுந்தர். சி என அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் இந்த படம் அருணாச்சலம் மாதிரி வருமா? அல்லது அன்பே சிவம் மாதிரி வருமா? என ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பினர். ஆனால், யார் கண் பட்டதோ படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வேண்டாம் என வெளியேறிவிட்டார் சுந்தர். சி.

    மேலும், சட்டமன்ற தேர்தலில் அதிரடியாக வேட்பாளராக மதுரையில் பிடிஆரை எதிர்த்து போட்டியிட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் படத்தை ஏன் இயக்கவில்லை என்கிற கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

    30 வருஷத்துக்கு முன்பாக ரஜினிகாந்த் சாரை அருணாச்சலம் படத்தில் இயக்கும் போது நிலைமை வேறு. அவருக்கு நான் சொன்ன குடும்ப பாங்கான காமெடி படத்தின் கதை ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால், இன்றைய சூழலில் அவருக்கு வேறு விதமான படம் பண்ன வேண்டிய நிலை உள்ளது.

    அதிக பிரஷர் காரணமாகவே படத்தில் இருந்து விலகிவிட்டேன். கண்டிப்பாக படம் எடுக்க ஆரம்பித்தாலும், பாதியில் வெளியேறும் சூழல் ஏற்பட்டால் அது நல்லா இருக்காதுன்னு நினைச்சுத்தான் வெளியேறினேன். வெளியேறுவதற்கு முன்பாக ரஜினி சாரிடம் என்னோட நிலைப்பாட்டை சொன்னேன். அவர் நீங்க எப்போ சொன்னாலும் உங்க கதையை பண்ணலாம் என சொல்லிவிட்டார் என்றார்.

    சுந்தர். சிக்கு ரஜினிகாந்தின் மகள்களில் ஒருவர் தான் அழுத்தம் கொடுத்ததாக வதந்திகள் பரவிய நிலையில், அதெல்லாம் வதந்தி தான் என்பது சுந்தர். சியின் பதில் மூலம் தெரிந்துள்ளது. வரும் மே 4ம் தேதி சுந்தர். சி வெல்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  • S நடிகரா?.. P நடிகரா?.. விஜய்க்காக அஜித் பார்த்த வேலை!.. நண்பன்னா இப்படி இருக்கணும்!..

    S நடிகரா?.. P நடிகரா?.. விஜய்க்காக அஜித் பார்த்த வேலை!.. நண்பன்னா இப்படி இருக்கணும்!..

    அஜித்தின் அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஒரு பிரபலத்தை ஆதிக் ரவிச்சந்திரன் புக் செய்து வைத்திருந்தார் என்றும் ஆனால், விஜய் பற்றி மோசமாக அந்த பிரபலம் பேசிய நிலையில், அவரை நீக்கிடுங்க என அஜித் அதிரடியாக ஆர்டர் போட்டுள்ளதாக பத்திரிகையாளர் பிஸ்மி பரபரப்பு கருத்தை தெரிவித்து திரையுலகை ஷாக் ஆக்கியுள்ளார்.

    அஜித் நடித்த கடைசி படமான குட் பேட் அக்லி படத்திலேயே ஐ எம் வெயிட்டிங் என விஜய்யின் வசனத்தை அஜித் பேசியிருந்தார். தேர்தல் அன்று காலையிலேயே முதல் நபராக வந்து வாக்கு செலுத்தி சென்றார். விஜய் போலவே மீடியாக்களை அவர் சந்திப்பதை தவிர்த்தார். ஆனால், மாற்றம் வேண்டாம் என அஜித் சொன்னதாக சில மீடியாக்கள் செய்தியாக்கி அதை மு.க. ஸ்டாலினிடம் சொல்லி செய்தியாக்கினர்.

    மு.க. ஸ்டாலினும் அந்த செய்தியை விசாரிக்காமல் அதை தேர்தல் தினத்துக்கு சாதகமாக பயன்படுத்தினார். ஆனால், அஜித் உடனடியாக தனது மேனேஜர் சுரேஷ் சந்திராவை வைத்து அறிக்கை வெளியிட்டு அது முற்றிலும் பொய் என்றார்.

    அஜித் குமார் தனக்கு பிடித்த ரேஸ் பக்கம் சென்ற நிலையில், விஜய் மக்களுக்காக சேவை செய்ய அரசியலுக்கு இறங்கியிருப்பது அஜித்துக்கு ரொம்பவே பிடித்துள்ளது என்றே கூறுகின்றனர். கருணாநிதிக்கு நடைபெற்ற பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலைஞர் முன்பாகவே அஜித் பேசியதும் ரஜினிகாந்த் கை தட்டியதும் மறக்கவே முடியாது.

    அஜித் குமாரின் பிறந்தநாளுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து சொல்லாமல் இருக்க காரணமும் அதுதான் என்கின்றனர்.

    இந்நிலையில், விஜய்க்கு எதிராக பிரகாஷ் ராஜ் மற்றும் சத்யராஜ் திமுகவுக்கு ஆதரவாக விஜய்யை அட்டாக் செய்து பேசிய நிலையில், அஜித் தற்போது விஜய்க்கு எதிராக பேசிய நடிகர் வேண்டாம் எனக் கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போஸ் வெங்கட் கூட தொடர்ந்து விஜய்க்கு எதிராக பேசி வருவதால் ஒருவேளை அவராக இருக்குமா என்றும் கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

    அஜித்துடன் சத்யராஜ் பகைவன் எனும் படத்தில் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் உடன் ஆசை, ராசி, பரமசிவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

  • திமுகவை விட ரஜினி தான் கடும் அப்செட்டில் இருக்காராம்!.. ஒருவேளை விஜய் சிஎம் ஆகிட்டா?

    திமுகவை விட ரஜினி தான் கடும் அப்செட்டில் இருக்காராம்!.. ஒருவேளை விஜய் சிஎம் ஆகிட்டா?

    வைகோ, திருமாவளவன், பிரேமலதா என தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் எக்ஸிட் போல் ரிசல்ட்டுக்குப் பிறகு தங்கள் பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், அறிவாலயத்திலும் ஆனந்த அலை இல்லை என்கின்றனர்.

    திமுகவுக்கு ஆதரவான நிர்வாகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகளை தாண்டி ஆக்சிஸ் மை இந்தியா ஆப்பு வைத்த நிலையில், விஜய்யின் எழுச்சி நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கிய நிலையில், ரஜினிகாந்துக்கு அது கடும் அப்செட்டை கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசத் தொடங்கி விட்டனர்.

    ரஜினிகாந்த் தைரியமாக அரசியலுக்கு அறிவித்ததை போல வந்திருந்தால் கூட திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் விஜய்க்கு கொடுத்த அளவுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் எல்லாம் விஜய் அளவுக்கு பொறுமையாகவும் வலிமையாகவும் கையாண்டு இருப்பாரா என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

    இது ஒரு பக்கம் இருக்க விஜய் ஒருவேளை சிஎம் ஆகிவிட்டால், அதை எல்லாம் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறோம் என ரஜினிகாந்த் இப்பவே அப்செட் ஆகிவிட்டார் என்கின்றனர். எப்படி இருந்தாலும் மே 4ம் தேதி வரும் உண்மையான ரிசல்ட்டை பார்க்க பலரும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

    விஜய்க்கு எதிராக செயல்பட்ட பலரும் ஒரு வித பயத்திலேயே தற்போது தங்களது பேச்சுக்களை மாற்றி பேச ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனர். விஜய் தோற்றாலும், ஜெயித்தாலும் விஜய்யின் கட்ஸ் இந்தியளவில் பாராட்டப்பட்டு வருவதும் சூப்பர் ஸ்டாரை பாதித்திருக்கும் என்கின்றனர்.

  • லெஜண்ட் சரவணாவின் ’லீடர்’ ஓடிடி ரிலீஸ் எப்போ?.. வெளியான சூடான தகவல்!..

    லெஜண்ட் சரவணாவின் ’லீடர்’ ஓடிடி ரிலீஸ் எப்போ?.. வெளியான சூடான தகவல்!..

    தொழிலதிபராக இருந்து நடிகராக மாறிய லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவான புதிய திரைப்படம் ‘லீடர்’ சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த படம், அவரின் இரண்டாவது முக்கியமான திரைப்படமாகும். இந்நிலையில், லீடர் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், ஓடிடியில் வெளியாகவில்லை. மேலும், லீடர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

    எதிர்நீச்சல், கொடி, பட்டாஸ், காக்கி சட்டை, கருடன் படங்களை இயக்கிய ஆர்,எஸ். துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். 2024-ல் தொடங்கிய படப்பிடிப்பு 2025-ல் நிறைவடைந்தது. தூத்துக்குடி, சென்னை, ஊட்டி, ஜார்ஜியா போன்ற பல இடங்களில் படமாக்கப்பட்டது. 2026 ஏப்ரல் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த படம், ஆக்ஷன் மற்றும் திரில்லர் வகையாக இருந்தது.

    இந்த படத்தில் சரவணன் “சக்திவேல்” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஆண்ட்ரியா, ஷாம், ஐஸ்வர்யா, பாயல் ராஜ்புத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதைப்படி, சாதாரண மனிதராக இருக்கும் நாயகன் குற்றக் குழுக்கள் மற்றும் சட்ட அமலாக்கத்திற்கிடையில் சிக்கி, தனது குடும்பத்தை பாதுகாக்க போராட வேண்டிய சூழ்நிலையில் மாட்டிக்கொள்வது போல கதை செல்கிறது.

    சமூக வலைத்தளங்களில் படம் கலவையான விமர்சனங்களை பெற்று ஆக்ஷன் காட்சிகள் மற்றும் இரண்டாம் பாதி பாராட்டப்பட்டுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் ஆரம்பத்தில் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் ஒரு அளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது.

    ‘லீடர்’ திரைப்படம் மூலம், தனது முதல் படம் தி லெஜண்டுக்கு பின், நடிகராக தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்துள்ளார் லெஜண்ட் சரவணன். இந்த படம் முழுமையான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், ஒரு கமர்ஷியல் எண்டர்டெயின்மண்டாக ரசிகர்களிடம் பேசுபொருளாக உள்ளது.

    மேலும், லீடர் திரைப்படம் மே 1ம் தேதி ப்ரைம் விடியோ ஒடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் வெளியாகி 4 வாரங்கள் ஆன பின்னரும் ஓடிடியில் வெளியாகவில்லை. வரும் மே 15ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் லீடர் வெளியாகும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  • தனுஷின் ‘கர’ படம் எப்படி இருக்கு?.. தாறுமாறா?.. டைம் வேஸ்ட்டா?.. ஹானஸ்ட் விமர்சனம் இதோ!..

    தனுஷின் ‘கர’ படம் எப்படி இருக்கு?.. தாறுமாறா?.. டைம் வேஸ்ட்டா?.. ஹானஸ்ட் விமர்சனம் இதோ!..

    தனுஷ் நடித்துள்ள படம் என்பதை விட போர் தொழில் பட இயக்குநர் படம் என்கிற நம்பிக்கையில் தான் முதல் நாளில் தனுஷின் ‘கர’ படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்றனர். ராயன், இட்லி கடை, தேரே இஷ்க் மெயின் என தனுஷ் தொடர்ந்து வச்சு செய்து வரும் நிலையில், இந்த முறையும் ரசிகர்களை தலைவலிக்க செய்தே அனுப்புகிறார்.

    ராமநாதபுரத்தில் ஈராக் போரின் போது கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நடந்த காலக்கட்டத்தில் வங்கிகளில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு கதையை தனுஷுக்கு உருவாக்கியுள்ளார் விக்னேஷ் ராஜா.

    படத்தில் மமிதா பைஜுவே ஒரு 3 சீனுக்குத்தான் அதிக பட்சம் வருகிறார். இட்லி கடை படத்தில் தனுஷ் ஊருக்கு வந்த உடனே அப்பா ராஜ்கிரண், அம்மா இறந்துவிடுவார்கள். அதே போலத்தான் இந்த படத்திலும் தனுஷ் ஊருக்கு வந்த உடனே அப்பா கே.எஸ். ரவிக்குமார் இறந்துவிடுகிறார்.

    போலீஸ் ஸ்டேஷனிலேயே சுராஜ் வெஞ்சரமூடுவை அடித்துவிட்டு தனுஷ் எஸ்கேப் ஆகிவிடுகிறார். அவரை துரத்தி பிடிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் கொஞ்சம் ரசிக்க வைக்கின்றன. வங்கி மேனேஜராக வரும் ஜெயராம் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.

    வேலியே பயிரை மேயும் கதையாக பேங்க் மேனேஜரே பக்கா திருடனாக இருக்க, திருட்டுத் தொழில் செய்து வரும் தனுஷ் அவரது வலையில் சிக்குகிறாரா? அல்லது தனுஷ் வலையில் ஜெயராம் சிக்குகிறாரா? போலீஸ் அதிகாரியான சுராஜ் வெஞ்சரமூடு தனுஷை பழி வாங்கினாரா? என்பது தான் படத்தின் கதை.

    ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசை தரமாக உள்ளது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் கூரை வீடுகளும், ராமநாதபுரம் வறட்சியும் கண்களை கனக்க வைக்கிறது.

    கருணாஸ் எல்லாம் தனக்கு விருது கிடைக்கும் என்றார். ஆனால், அவருடைய கதாபாத்திரம் பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. படத்தில் வரும் அந்த கல்ட் கிளாசிக் படத்தின் காட்சி ரசிகர்களுக்கு செம ட்ரீட்.

    கர படத்தின் கதையை ஒரே நேர்கோட்டில் கொண்டு செல்லாமல், எங்கெங்கோ கொண்டு சென்று கடைசியில், வங்கியில் இருந்து பணத்தை திருடி வங்கிகளிலேயே பணத்தைக் கட்டி மக்களின் நிலத்தை மீட்டுக் கொடுக்கும் கரசாமியாக மாறுகிறார் தனுஷ்.

    கர – கரை சேரவில்லை!

    ரேட்டிங்: 2.25/5.

  • சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் எல்லாம் வேண்டாம்!.. யூத் ஹீரோவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!..

    சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் எல்லாம் வேண்டாம்!.. யூத் ஹீரோவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!..

    விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி 400 கோடி வசூல் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு இன்னமும் தனது அடுத்த படத்தை இயக்க முடியாமல் தவித்து வருகிறார். சிவகார்த்திகேயனை வைத்து சயின்ஸ் ஃபிக்‌ஷன் எடுக்கலாம் என அமெரிக்காவுக்கு எல்லாம் போய் வேலை பார்த்தார்.

    ஆனால், பெரிய பட்ஜெட் படம் இப்போதைக்கு வேண்டாம் நான் சேஃப்டி ஜோனில் சேயோன் படம் பண்ணுறேன் என சிவகார்த்திகேயன் கமல் தயாரிப்பில் தாய் கிழவி இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிக்க கிளம்பி விட்டார்.

    துப்பாக்கி கொடுத்த டைரக்டருக்கு டாட்டா காட்டியது தான் மிச்சம். இதற்கு மேல் அவர்கள் இணைந்து பணியாற்றுவார்களா என்பது இப்போதைக்கு சந்தேகம் தான்.

    சிவகார்த்திகேயன் போனால் என்ன அந்த சயின்ஸ் ஃபிக்‌ஷனை பிரதீப் ரங்கநாதனை வைத்து பண்ணலாமே என லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் வெற்றிக்கு காத்திருந்த வெங்கட் பிரபுவுக்கு விக்னேஷ் சிவன் பெரிய ஆப்பாக அடித்து விட்டார்.

    இந்நிலையில், சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் என இருவருமே வேண்டாம். யூத் படத்தை இயக்கி 80 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய கென் கருணாஸை வைத்து தனது ஸ்டைலில் இன்னொரு ஜாலியான படத்தைக் கொடுத்து பார்ட்டி கொண்டாடலாம் என வெங்கட் பிரபு முடிவு செய்துவிட்டார் என்கின்றனர். வெற்றிமாறன் படத்தை சீக்கிரமே முடித்து விட்டு கென் கருணாஸ் வெங்கட் பிரபு பக்கம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • விக்ரமை நம்பி சம்பளம் எல்லாம் தர முடியாது!.. அதிரடி நடவடிக்கை!.. வெங்கட் பிரபுவுக்கும் ஆப்பு?

    விக்ரமை நம்பி சம்பளம் எல்லாம் தர முடியாது!.. அதிரடி நடவடிக்கை!.. வெங்கட் பிரபுவுக்கும் ஆப்பு?

    தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பலர் ஏவிஎம் உட்பட இருந்த இடமே தெரியாமல் காணாமல் போக காரணமே முன்னணி நடிகர்கள் ஓவர் பில்டப்பில் பெரிய சம்பளத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஃப்ளாப் படங்களை கொடுத்தது தான் என ரொம்பவே லேட்டாக லைகா வந்து திவால் ஆன பிறகே புரிந்துக் கொண்டனர்.

    இதில், வேடிக்கை என்னவென்றால், கோலிவுட் நடிகர்களை நம்பி பணம் போட்ட பிற மாநில தயாரிப்பாளர்களும் சமீப காலமாக பட்டை நாமத்துடன் வலம் வருகின்ற்னர். இந்நிலையில், இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா என தயாரிப்பாளர்கள் சங்கத்தை கூட்டி இனிமேல் முன்னணி நடிகரா இரு பின்னணி பாடகியா இரு சம்பளம் எல்லாம் தர முடியாது லாபத்தில் பங்கு மட்டுமே என்கிற முடிவுக்கு வந்துள்ளனர்.

    சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்க சியான் விக்ரம் நடிக்கும் படத்துக்கு இதை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் லாபத்தில் சியான் விக்ரமுக்கு 35 சதவீதம் ஷேர் என்கிற அடிப்படையில் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சியான் விக்ரம் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில், வெற்றிப் பெற்றால் காசு, தோல்வி அடைந்தால் ஹீரோவுக்கும் லாஸ் என்கிற புதிய யுக்தியை தயாரிப்பாளர்கள் கையில் எடுத்துள்ளனர்.

    ஹீரோவுக்கு மட்டுமின்றி இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட டைரக்டர்களுக்கும் இனிமேல் இதுதான் நிலைமை என்கின்றனர். கற்பனை குதிரைகளை பறக்கவிட்டு பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணுகிறேன் என உப்புமா படங்களை கொடுத்தால் அத்துடன் சம்பளமும் கிடைக்காது என்கிற நிலை உருவாகி விடுமாம்.

  • மக்களை அவமானப்படுத்துகிறாரா விஜய்?.. கோயிலுக்குப் போறது குத்தமா?.. பிரபலம் என்ன இப்படி பேசுறாரு?

    மக்களை அவமானப்படுத்துகிறாரா விஜய்?.. கோயிலுக்குப் போறது குத்தமா?.. பிரபலம் என்ன இப்படி பேசுறாரு?

    தேர்தலுக்கு முன்னதாக எம்மதமும் சம்மதம் என நடிகர் விஜய் பல்வேறு கோயில்களுக்கு சென்றுள்ளார். விஜய் கிறிஸ்துமஸ் விழாவுக்கு செல்கிறார், சர்ச்சில் போய் மண்டியிடுகிறார், ரம்ஜான் நோன்பு திறப்புக்கு செல்கிறார் என சர்ச்சையை கிளப்பினர். அம்மன் கோயில் முதல் திருச்செந்தூர் முருகன் கோயில், ஷீரடி சாய் பாபா கோயில் என தற்போது இந்து மக்களை மொத்தமாக கவர முயற்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில், பத்திரிகையாளர் பிஸ்மி தனது எக்ஸ் தள பக்கத்தில், தற்போது, ”நேற்று திருச்செந்தூர் முருகன் கோவில். இன்று ஷீரடி சாய்பாபா கோவில். தேர்தல் முடிந்த பிறகு கோவில் கோவிலாக சென்று கொண்டிருக்கிறார் விஜய். ஒருவேளை… தேர்தலில் தவெக வெற்றியடைந்தால், அதற்கு காரணம் விஜய்யின் பிரார்த்தனையா? அல்லது அவருக்கு வாக்களித்த மக்களா? கோவிலுக்கு சென்றதே வெற்றியைத் தேடிக்கொடுத்ததாக விஜய் நினைத்தால், அது அவருக்கு வாக்களித்த மக்களை அவமானப்படுத்துவதாகத்தானே அர்த்தம்?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இந்தியா மதச்சார்பற்ற நாடாகவே உள்ளதே தவிர, மதங்களோ, கோயில்களோ அல்லாத நாடு கிடையாது. மேலும், எந்த கோயிலுக்குச் செல்வது, என்ன சாமி கும்பிடுவது, கும்பிடாமல் இருப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.

    விஜய் கோயிலுக்குச் சென்று வழிபடும் போது அங்குள்ளவர்களிடம் தனக்கு ஓட்டுப் போடுங்க என்றோ தவெக கட்சிக்கு வந்து சேர்ந்துடுங்கோ என்று பிரச்சாரம் செய்தால் தான் தவறு.

  • கேஜிஎஃப் ஹீரோவுக்கு என்ன ஆச்சு?.. மீண்டும் டாக்ஸிக் ரிலீஸை தள்ளிப்போட்டுட்டாரே?.. போச்சு!..

    கேஜிஎஃப் ஹீரோவுக்கு என்ன ஆச்சு?.. மீண்டும் டாக்ஸிக் ரிலீஸை தள்ளிப்போட்டுட்டாரே?.. போச்சு!..

    நடிகர் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படம் வருகிற ஜூன் 4ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், அந்த வெளியீட்டு தேதி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யஷ் அறிவித்துள்ளார். புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இயக்குநர் கீது மோகன்தாஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் யஷ், தாரா சுதரியா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். கோவாவில் நடைபெறும் போதைப்பொருள் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், அதிரடி கேங்ஸ்டர் திரைப்படமாகும். பல மொழிகளில் உருவாகி, பான்-இந்தியா படமாக வெளியாக உள்ளது. மேலும், இது வெறும் ஆக்ஷன் படம் மட்டுமல்லாமல், சைக்காலஜிக்கல் த்ரில்லர் அம்சங்களையும் கொண்டுள்ளது.

    இந்தப் படத்தில் ஹாலிவுட் ஆக்ஷன் நிபுணர்களும் பணியாற்றியுள்ளனர். டீசர் வெளியான 24 மணி நேரத்தில் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றது. அதில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து சர்ச்சைகளும் எழுந்தன. “female gaze” என்ற கருத்து தொடர்பாக ஏற்பட்ட விவாதத்திற்கும் யஷ் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை கேவிஎன் தயாரிப்பு மற்றும் மான்ஸ்டர் மைண்ட் க்ரியெஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    “நாம் உருவாக்கும் சில திரைப்படங்கள், சினிமாவை ஏன் காதலிக்கத் தொடங்கினோம் என்பதைக் மீண்டும் நினைவூட்டுகின்றன,” என்று யஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்திய சினிமா உலகளாவிய மேடையில் தனது குரலை வலுவாக வெளிப்படுத்தும் இந்த காலத்தில், தரத்தை உயர்த்தும் பொறுப்பு நமக்குள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

    டாக்ஸிக் திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்துவிட்டன. தற்போது உலகளாவிய விநியோகம் மற்றும் புதிய விநியோகஸ்தர்களுடன் ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், வெளியீட்டு தேதியை மறுபரிசீலனை செய்ய தீர்மானித்துள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • யாரு அந்த மியூசிக் டைரக்டரு?.. பிரபல பாடகிக்கு பாலியல் துன்புறுத்தல்.. காமக் கொடூரன்!..

    யாரு அந்த மியூசிக் டைரக்டரு?.. பிரபல பாடகிக்கு பாலியல் துன்புறுத்தல்.. காமக் கொடூரன்!..

    பிக் பாஸ் பிரபலமான மாயாவின் உடன்பிறந்த சகோதிரியான பாடகி ஸ்வாகதா தான் இசைதுறையை விட்டு விலகி இருப்பதற்கான காரணத்தை தற்போது வெளிப்படையாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்வாகதா தன் மூன்றாம் வயதிலிருந்து இசையை கற்றுக்கொண்டு சுமார் 15 ஆண்டுகளாக் முன்னணி பாடகியாக வலம் வந்தார். இவர் இஸ்பேட் ராஜா இதய ராணி, வஞ்சகர் உலகம், நோடா, காற்றின் மொழி உள்ளிட்ட பல படங்களில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மியூசிக் ப்ரொடியுசர் மற்றும் மியூசிக் இன்ஜினியர் ஆக சென்னையில் வேலைப் பார்த்திக்கொண்டிருந்த ஸ்வாகதா தற்போது அனைத்தையும் விட்டு விட்டு ரிஷிகேஷில் ஒரு தொழிலதிபராக வாழ்ந்து வருகிறார்.

    இந்நிலையில் சிவசங்கரி டால்க்ஸ் என்ற யூடியுப் சேனலில் ஸ்வாகதா பாடகியில் இருந்து தொழிலதிபராக மாறிய காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரிஷிகேசில் இயற்கை வளங்களை கொண்டு காட்டன் துணிகளை கைகளாலே நெய்து விற்கும் தொழில் செய்யும் ஸ்வாகதா நான்கு பெண்களுடன் பிறந்தவர். ஒரு இசையமைப்பாளரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி அதிலிருந்து தப்பிபதற்காக தான் நான் ரிஷிகேஷ் வந்தேன் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அவர் பெயரை சொல்ல முடியாது அதுக்கென்று ஒரு நாள் வரும் போது நான் கூறுகிறேன். அவர் ஒரு பெரிய இசையமைப்பாளர் என்று பெயர் பெற்றிருந்தாலும், பியானோவை கூட சரியாக வாசிக்கத் தெரியாது. இப்படிப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது எப்படி என எனக்கு புரியவில்லை. அந்த இசையமைப்பாளர் என்னிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட பிறகு, அவர் தொட்ட இடத்தில் இருந்த தோலை நீக்கி, புதிதாக தோல் உருவாகும் சிகிச்சையை கூட மேற்கொண்டேன். எனது மொபைலில் கூட அவரது பெயர் தோன்றாத வகையில் அமைப்புகளை மாற்றி வைத்திருந்தேன்.

    இப்போது அந்த பயமும், மன உளைச்சலும் அனைத்தையும் கடந்து வந்துவிட்டேன். இன்று நான் தைரியமாக நிற்கும் பெண்ணாக மாறியுள்ளேன். என்னுடன் மட்டுமல்லாமல், பல பெண்களிடமும் அவர் இதேபோன்று தவறாக நடந்துகொண்டுள்ளார். அந்த பாதிப்பிலிருந்து வெளியே வர சிலருக்கு நான் உதவியுள்ளேன். இந்த விஷயம் அவரது மனைவிக்கும் தெரியும்; அதனை அறிந்த பின்னரும் அவர் அவருடன் வாழ்ந்து வருகிறார். மிகவும் மோசமான நபர் அவர். சிறிய குழந்தைகள் பாட வரும்போது கூட, சிசிடிவி மூலம் அவர்களை கவனிக்கும் கொடூரமானவர்.

    மேலும், உறுதியான ஆதாரங்களுடன் அந்த இசையமைப்பாளர் யார் என்பதை வெளிப்படுத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன். தற்போது அதற்கான தைரியம் எனக்குக் கிடைத்துள்ளது. இந்த பேட்டிக்குப் பிறகு, அந்த இசையமைப்பாளர் யார் என்று பலரும் யூகித்து பேசத் தொடங்கியுள்ளனர்.