Author: adminram

  • ”முதலமைச்சர்” டைட்டில் கார்டு வருமா?.. ஜன நாயகன் ரிலீஸ் தேதி இதுதானாம்?.. நம்பலாமா?

    ”முதலமைச்சர்” டைட்டில் கார்டு வருமா?.. ஜன நாயகன் ரிலீஸ் தேதி இதுதானாம்?.. நம்பலாமா?

    விஜய் நடித்த “ஜன நாயகன்” திரைப்படம் மத்திய தணிக்கை வாரியத்தின் சான்றிதழுக்காக காத்திருக்கிறது. இன்று அல்லது நாளைக்குள் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், படம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

    முதலில் ஏப்ரல் 30ஆம் தேதி படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதே நாளில் தனுஷின் “கர” திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட உள்ளதால், அந்த தேதியில் “ஜன நாயகன்” வெளியாவதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதற்கிடையில், சூர்யா நடித்த “கருப்பு” திரைப்படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் “ஜன நாயகன்” மற்றும் “கருப்பு” திரைப்படங்கள் மோதுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், மே 4ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. விஜய் நல்ல முன்னிலை பெறுவார் என்ற பேச்சுகள் பரவி வரும் நிலையில, இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்ததுள்ளார்.

    “ஜன நாயகன்” படம் முழுவதும் இணையத்தில் கசிந்ததால் தயாரிப்பு தரப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தணிக்கை சான்றிதழ் தாமதமாகிக் கொண்டிருப்பது குறித்து கேள்விகள் எழுகின்றன. விரைவில் சான்றிதழ் கிடைக்கும் எனக் கூறப்படுகின்றது.

    புதிய தகவல்களின் படி, மே 8ஆம் தேதி ஜனநாயகன் படம் வெளியாக நிறைய வாய்ப்புகள் அதிகம் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், தேர்தல் முடிவிற்கு பிறகு படம் வெளியாவதில் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது எனக் கூறப்படுகிறது. தேர்தலில் கிடைத்த வரவேற்பை விட படத்தில் அதிகமான வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    தணிக்கை குழு சென்சார் சர்டிபிகேட் கொடுத்த உடன் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக ஜன நாயகன் படக்குழு அறிவிக்கும் என்கின்றனர். ஒருவேளை மேலும் தாமதமானால் கருப்பு படத்துடன் மோத அதிக வாய்ப்புகள் ஏற்படும் என்கின்றனர்.

  • ”கருப்பா கூட வா”.. ரசிகர்களை சாமியாட வைக்கப் போகும் சூர்யா!.. ஆர்ஜே பாலாஜி அப்டேட்!

    ”கருப்பா கூட வா”.. ரசிகர்களை சாமியாட வைக்கப் போகும் சூர்யா!.. ஆர்ஜே பாலாஜி அப்டேட்!

    ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு படம் வருகின்ற மே 14ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இன்று மாலை அப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகப் போவதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள கருப்பு படத்தில் சூர்யா, த்ரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், நடராஜன் சுப்பிரமணியம், ஷிவதா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இப்படத்தில் அவரே வில்லனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு எ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருந்த நிலையில் அவர் விலகியதால் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    மேலும், கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் நடப்பெற்ற நிலையில், படக்குழு அனைவரும் பங்கேற்றனர். ஆனால், ஹீரோயின் த்ரிஷா இசை வெளியீட்டு விழாவுக்கு போகவே இல்லை. இப்படம் முழுக்க முழுக்க கம்ர்ஷியல் படமாக இருக்கும் என் தெரிவித்தார் ஆர்.ஜே.பாலாஜி. பின்னர் நடிகர் சூர்யா இந்த படத்தில் நான் ஹீரோ இல்லை கருப்பு சாமி தான் ஹிரோ என பேசியிருந்தார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் சில படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வந்த நிலையில் இப்படமாவது வெற்றி படமாகுமா என ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.

    இந்நிலையில் இன்று ஆர்.ஜே.பாலாஜி கருப்பு படத்தின் பாடல் ஒன்று வெளியாக உள்ளதாக போஸ்டை பகிர்ந்துள்ளார். சாய் அபயங்கர் இசையில் ”கருப்பா கூட வா” எனும் பாடல் கருப்புசாமியை நம்பும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் முக்கியமான பாடலாக இருக்கப் போகும் என்ற பதிவையும் பதிவிட்டுள்ளார். இப்பாடலை எப்போது கேட்டாலும் புல்லரிக்க வைப்பதாக கூறியுள்ளார்.

  • விஜய் மீண்டும் நடிக்க வரணும்!.. அவரோட கனவு நனவாகலைன்னா!.. ஃபேவரைட் டைரக்டர் கோரிக்கை!..

    விஜய் மீண்டும் நடிக்க வரணும்!.. அவரோட கனவு நனவாகலைன்னா!.. ஃபேவரைட் டைரக்டர் கோரிக்கை!..

    நடிகர் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என 2 வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் பேரரசு விஜய் மீண்டும் நடிக்க வரவேண்டும் என பேசியுள்ளார். இந்த வாரம் அஜித் – ஷாலினியின் திருமண நாளை முன்னிட்டு அமர்க்களம் திரைப்படம் வெளியானது.

    அந்த படத்துக்குப் போட்டியாக விஜய், அசின், பிரகாஷ் ராஜ் நடித்த சிவகாசி படத்தை ரீ ரிலீஸ் செய்தனர். தேர்தல் பிசியில் ரசிகர்கள் இந்த வாரம் பெரிதாக தியேட்டர் பக்கமெல்லாம் போகவே இல்லை. அதனால், 2 படங்களும் பெரிதாக வசூல் அள்ளவில்லை என்கின்றனர்.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பேரரசு, விஜய் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுவிட்டால் அவர் அரசியலில் தொடரட்டும். ஆனால், ஒருவேளை அவரது கனவு நனவாகவில்லை என்றால் மீண்டும் நடிக்க வரவேண்டும்.

    அரசியலில் விஜய்க்கு இவ்வளவு மக்கள் அவர் சென்ற இடத்துக்கெல்லாம் ஆதரவு கொடுக்க காரணமே அவரது சினிமா வாழ்க்கையும் அவர் நடித்த படங்களும் தான். அந்த ரசிகர்களை அவர் எப்போதுமே கைவிட்டு விடக் கூடாது என பேரரசு பேசியுள்ளார்.

    அரசியலுக்கு வந்த பிறகும் கமல்ஹாசன், பவன் கல்யாண், சீமான் உள்ளிட்ட பலர் நடித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். விஜய்யும் அரசியலுக்கு வந்தாலும் சினிமாவில் தொடர வேண்டும் என்றும் ஜன நாயகன் படம் லீக் ஆன நிலையில், கேவிஎன் நிறுவனத்துக்கு இன்னொரு படம் பண்ணித் தர வேண்டும் என்றும் ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

  • ஒண்ணும் தெரியாது!.. விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு.. ஒரே போடாக போட்ட மம்மூக்கா!..

    ஒண்ணும் தெரியாது!.. விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு.. ஒரே போடாக போட்ட மம்மூக்கா!..

    நடிகர் விஜய் அரசியலில் நுழைந்தது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. விஜயின் அரசியல் குறித்து பலரும் பல விதமாக தங்களது கருத்துக்களை முன் வைத்த நிலையில் தற்போது மலையாள நடிகர் மம்மூட்டியிடம் மைக்கை நீட்டி கேள்விக் கேட்க அவர் சொன்ன வார்த்தை வைரலாகி வருகிறது.

    2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக கட்சி தனியாக போட்டியிட்டது. கடைசி வரை கூட்டணிக்கு முயன்றும் யாரும் வரவில்லை. திமுக பல கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வைத்திருந்தது. ஆனாலும், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி திமுக மற்றும் அதிமுக என்ற பாரம்பரிய போட்டிக்கு மூன்றாவது பெரிய போட்டியாக மாறியது. இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களிடையே விஜய்க்கு அதிக ஆதரவு காணப்பட்ட நிலையில் அவரது ரசிகர் மன்றம் அரசியல் அமைப்பாக மாறி வலுவான அடிப்படை உருவாக்கியுள்ளது.

    தேர்தலுக்குப் பிறகு, இது ஆரம்பமே என்று தெரிவித்துள்ள விஜய் உண்மையில் ஆட்சியை பிடிப்பாரா அல்லது கிங்மேக்கராக இருப்பாரா? என்பது வரும் தேர்தல் முடிவுகளால் தான் தெளிவாகும்.

    இந்நிலையில், தனுஷ் படத்தில் நடித்து வரும் மம்மூட்டி படப்பிடிப்பு வேலைக்காக சென்னை வந்திருந்த நிலையில், செய்தியாளர்கள், தமிழக தேர்தல் சூழல், கேரள அரசியல் நிலைமை மற்றும் விஜயின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதிலளித்த மம்மூட்டி, “ஒண்ணும் தெரியாது” என்று சுருக்கமாக கூறி, சிரித்தபடியே அங்கிருந்து விலகினார்.

    அவரின் இந்த குறுகிய பதில் எந்தவித அரசியல் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தாததாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் பல்வேறு விளக்கங்களுடன் பரவி வருகிறது. சிலர் இதை நேரடியாக கருத்து தெரிவிக்காமல் நுணுக்கமாகத் தவிர்த்த பதிலாகக் கருத, மற்றவர்கள் விஜயின் அரசியல் குறித்து கருத்து சொல்ல விரும்பாத அணுகுமுறையாகவும் பார்க்கின்றனர். விஜய்க்கு ஒண்ணும் தெரியாது என மம்மூட்டி கூறிவிட்டார் என்றும் திமுகவினர் கிளப்பி வருகின்றனர்.

  • ஜன நாயகன் லீக் பிரச்சனை.. தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியது என்ன?

    ஜன நாயகன் லீக் பிரச்சனை.. தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியது என்ன?

    தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பாளர் சங்க பொதுக்கூட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலை பற்றி பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

    1980–90களில் பல வெற்றி படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர் சமூக பிரச்சினைகள், அரசியல், இளைஞர் கருத்துகள் போன்றவை அவரது படங்களில் அதிகம் இடம்பெறும். புதிய நடிகர்களை அறிமுகப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தவர். கேப்டன் விஜயகாந்தை வைத்து பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தி பல படங்களையும் இயக்கினார்.

    சமீப ஆண்டுகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் விஜய் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாக செய்திகள் வெளியாகின. மேலும், சந்திரசேகர் அரசியல் கட்சி தொடங்கியபோது, விஜய் அதிலிருந்து தன்னைத் தூரப்படுத்திக் கொண்டதாகவும் இருவரும் தனித்தனியாக அரசியல் மற்றும் தொழிலில் செயல்பட ஆரம்பித்ததாக கூறப்பட்டது.

    விஜயின் சினிமா பயணத்தின் அடித்தளத்தை அமைத்தவர் அவர் தந்தை அதன் மேல் தனது முயற்சியால் வளர்ந்தவர் விஜய். இயக்குநர் , தந்தை , வழிகாட்டி என்ற மூன்று நிலைகளிலும் முக்கியமான பங்களித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய் தற்போது நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் உருவெடுத்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வரலாறு காணாத வாக்கு எண்ணிகைக்கு காரணமாகவும் விஜய் அமைந்துள்ளார் என தவெகவினர் கூறுகின்றனர்.

    இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த தேர்தலில் மக்கள் எவ்வளவு விழிப்புணர்வாக இருந்தார்களோ அதே போல் நீங்களும் இருக்க வேண்டும். முதலில் பொதுக்கூட்டத்தில் எல்லாரும் கலந்துக்கொள்ள வேண்டும். மேலும், தங்களின் அறிக்கைகளும், திட்டங்களும் வார்த்தை வடிவில் மட்டுமல்லாமல் செயல் வடிவிலும் இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

    ஜன நாயகன் படம் இணையத்தில் திருட்டுத் தனமாக லீக் ஆன விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கை என்ன என்பது குறித்த கேள்விக்கு படத்தின் எடிட்டர் ராகவ் பிரதாப்பை இடைக்கால நீக்கம் செய்துள்ளதாக சங்க நிர்வாகிகள் பதில் அளித்தனர்.

    ஓடிடி நிறுவனங்களின் தலையீடு, நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பது போன்ற பல விசயங்கள் இந்த சங்க கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. லாபத்தில் வரும் ஷேர் அடிப்படையிலேயே முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற தீர்மானமும் மற்ற மாநில தயாரிப்பாளர்களுக்கு பதில், தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டது.

  • மூடிட்டு வந்து நடிக்க சொல்லுடா ம*று.. எருமை சாணி விஜய் மனைவி செய்த மோசடி.. கதறி அழும் ரெசார்ட் நடிகை

    மூடிட்டு வந்து நடிக்க சொல்லுடா ம*று.. எருமை சாணி விஜய் மனைவி செய்த மோசடி.. கதறி அழும் ரெசார்ட் நடிகை

    எருமை சாணி என்ற யூடியூப் சேனலின் மூலம் பிரபலமான விஜயகுமார் நடிப்பில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் ரெசார்ட் வெப் சீரிஸ் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த சீரிஸில் நடித்து வரும் ஒரு நடிகை தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஹாட்ஸ்டாரில் வார வார வெள்ளிக்கிழமையன்று நான்கு எபிசோடுகளாக ஒளிப்பரபாகிகொண்டிருக்கும் ரெசார்ட் சீரிஸ் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த சீரிஸ், ஒரு லக்சுரி ரிசார்ட்டில் வேலை செய்யும் சாதாரண ரூம் சர்வீஸ் பணியாளரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.
    கதாநாயகன் படிக்காமல் ரூம் சர்வீஸ் பாயாக வேலை செய்துக்கொண்டிருக்கிறார் ஆனால் அவர் ஒரு பெரிய ஷெஃப் ஆக வேண்டும் என்ற கனவை அடைய முயற்சிக்கிறார். அதனால் ரிசார்ட்டின் கடுமையான சமையலறை அரசியல் மற்றும் மேலாளர் எதிர்ப்பு போன்ற சவால்களை எதிர்கொள்கிறார்.

    இது “சாதாரண மனிதன் , பெரிய கனவு , கடின உழைப்பு” என்ற பயணத்தை ரசிக்க வைக்கும் ஒரு ஃபீல் குட் சீரிஸாக உள்ளது. இந்த வெப்சீரிஸில் தலைவாசல் விஜய், மஹிமா நம்பியார், அபிநயா நேத்ரன், லல்லு, தன்யா பல்லத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

    கேரளாவின் ஒரு சிறிய கிராமத்த்தில் இருந்து சினிமாவில் முன்னேற வேண்டும் என்ற கனவுடன் இந்தத் துறைக்குள் வந்தத நடிகை அனுகிரகா நம்பியார் ஹீரோயின் வாய்ப்பு தருவதாக கூறி, ரெசார்ட் வெப் சீரிஸில் அவரை நடிக்க வைத்ததாகவும், ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்து பெறப்பட்டதால், வேறு எந்த வேலைகளிலும் ஈடுபட முடியாத நிலைக்கு தன்னை கட்டுப்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டுகிறார். ஆனால் கடந்த ஏழு மாதங்களாக படப்பிடிப்பிற்கு அழைப்புகள் மிகக் குறைவாகவே வந்துள்ளதால், தன்னை ஏமாற்றியதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அப்போது தனது நண்பர் தயாரிப்பு தரப்பிடம் நிலுவை தொகையை கேட்டபோது, அவர்களிடம் இருந்து அவமதிப்பான பதில் வந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, தயாரிப்பு தரப்புடன் தொடர்புடைய விஜயகுமாரின் மனைவியான நக்‌ஷத்திரா அநாகரீகமாக பேசியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
    இந்த சம்பவங்களைப் பற்றி அவர் சமூக வலைதளங்களில் லைவ் வீடியோவில் பகிர்ந்து, தனக்கு ஏற்பட்ட மனவேதனையால் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .
    இவரது குற்றச்சாட்டுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் ராஜேந்திரன் என்ன பதில் சொல்லப் போகின்றனர் என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கேள்விகளை எழுப்பி விளாசி வருகின்றனர். இதற்கு மேல், இண்டஸ்ட்ரியை விட்டுப் போனாலும் பரவாயில்லை இதற்கு ஒரு முடிவு தெரிய வேண்டும் என அனுகிராகா ஆவேசமாகி உள்ளார்.

  • சாய் பல்லவி அதுக்கு சம்மதிக்கல!.. இல்லைன்னா பிரியா பவானி சங்கரே வந்து இருக்க மாட்டாங்க!..

    சாய் பல்லவி அதுக்கு சம்மதிக்கல!.. இல்லைன்னா பிரியா பவானி சங்கரே வந்து இருக்க மாட்டாங்க!..

    மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் அடுத்ததாக ’29’ எனும் படம் உருவாகி வருகிறது. வரும் மே 8ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக சமீபத்தில் லோகேஷ் கனகராஜை வைத்து ஒரு ப்ரோமோ வீடியோவையும் ரத்னகுமார் வெளியிட்டு இருந்தார்.

    வைபவ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானர். அதன் பின்னர் அமலா பாலை வைத்து அவர் பண்ண ‘ஆடை’ சம்பவத்தை ஒட்டுமொத்த திரையுலகமும் மறக்கவே மறுக்காது.

    சந்தானத்தை வைத்து ’குலு குலு’ படத்தை இயக்கினார். அந்த படமும் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. லோகேஷ் கனகராஜின் நண்பரான ரத்னகுமார் மாஸ்டர், லியோ படங்களுக்கு அவருடன் இணைந்து கதை மற்றும் வசனத்தில் பங்காற்றினார்.

    லியோ வெற்றி விழாவில் அவர் ரஜினிகாந்துக்கு எதிராக பேசிவிட்டார் என்கிற பஞ்சாயத்து வெடித்த நிலையில், கூலி படத்தில் ரத்னகுமார் பணியாற்றவில்லை.

    இந்நிலையில், 29 படத்தை இயக்கி ரிலீசுக்கு கொண்டு வந்துள்ளார் ரத்னகுமார். இந்த படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில், அளித்த பேட்டி ஒன்றில் சாய் பல்லவியை தான் மேயாத மான் படத்தில் நடிக்க வைக்க முதலில் அணுகியதாகவும், ஆனால், திருமணத்துக்கு முன்னதாக க்ளோஸ் ரிலேஷன் காட்சிகள் இருந்த நிலையில், சாய் பல்லவி நடிக்க மறுத்துவிட்டார் என்றார்.

    தொடர்ந்து கவர்ச்சியாக நடிக்காமலே பாலிவுட்டில் ரன்பீர் கபூர் ஜோடியாக பிரம்மாண்ட ராமாயணா படத்தில் சீதையாகவே நடித்து வருகிறார் சாய் பல்லவி. அமீர்கான் மகன் படமான ’ஏக் தின்’ படமும் விரைவில் அவர் நடித்து வெளியாக உள்ளது.

  • மொத்தமா அடிவாங்கிய ஆர்யன்!.. விஷ்ணு விஷாலுக்கு வெற்றியை கொடுப்பாரா ’வெள்ளிச்சுடரே’ மமிதா பைஜு!..

    மொத்தமா அடிவாங்கிய ஆர்யன்!.. விஷ்ணு விஷாலுக்கு வெற்றியை கொடுப்பாரா ’வெள்ளிச்சுடரே’ மமிதா பைஜு!..

    2018ல் வெளியான ராட்சசன் படத்துக்குப் பிறகு 4 வருடங்கள் வெற்றிக்காக போராடிய விஷ்ணு விஷாலுக்கு கட்டா குஸ்தி படம் மூலம் வெற்றி கிடைத்தது. 2022ல் ஐஸ்வர்யா லட்சுமியுடன் இணைந்து நடித்த அந்த படம் கமர்ஷியல் ரசிகர்களையும் கிராமத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

    அதன் பின்னர், விஷ்ணு விஷால் நடித்த படங்கள் எல்லாம் தொடர்ந்து சொதப்ப ஆரம்பித்தன. கடந்த ஆண்டு செல்வராகவன் உடன் அவர் நடித்த ஆர்யன் திரைப்படம் வித்தியாசமாக இருந்தாலும், அதையே காரணம் காட்டி படத்தை படுதோல்வி அடைய செய்துவிட்டனர்.

    தனது தம்பியை ஹீரோவாக அறிமுகம் செய்யலாம் என தானே சொந்த பணத்தில் ஓஹோ எந்தன் பேபி எனும் படத்தை எடுத்தார். அதுவும் ஓடவில்லை. இந்நிலையில், 96 படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடித்துள்ள இரண்டு வானம் படம் விஷ்ணு விஷாலுக்கு ஒரு ஃபீல் குட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

    விஜய், சூர்யா, பிரதீப் ரங்கநாதன், தனுஷ், ஜி.வி. பிரகாஷ் என தொடர்ந்து தமிழ் சினிமா நடிகர்களுடன் பல படங்களில் வரிசை கட்டி நடித்து வருகிறார் மமிதா பைஜு. வரும் வாரம் தனுஷின் கர படத்திலும் மமிதா பைஜு தான் ஹீரோயின். விஜய்யின் ஜன நாயகன் படத்தில் வளர்ப்பு மகளாக நடித்துள்ள மமிதா பைஜு, சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.

    https://youtu.be/SA0IwQ53azw?si=TcW5_0ugWoppiZ1y

    விஷ்ணு விஷாலுக்கு முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்கள் என 2 வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹாட்ரிக் வெற்றியை பெற மீண்டும் இணைந்துள்ளார். திபு நிணன் தாமஸ் இசையில் உருவான “வெள்ளிச்சுடரே” பாடல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஃபிரேமிலும் மமிதா பைஜுவின் க்யூட்னஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த படம் கண்டிப்பாக விஷ்ணு விஷாலுக்கு வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டா குஸ்தி 2 படத்திலும் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். அந்த மோகன்தாஸ் படம் தான் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

  • மே 4ம் தேதி த்ரிஷா பிறந்தநாளை கொண்டாட விஜய் வெளிநாடு போறாரா?.. சிடிஆர் நிர்மல் ஒரே அடி!..

    மே 4ம் தேதி த்ரிஷா பிறந்தநாளை கொண்டாட விஜய் வெளிநாடு போறாரா?.. சிடிஆர் நிர்மல் ஒரே அடி!..

    தேர்தல் முடிந்த கையோடு உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் துபாய்க்கு கிளம்பிச் சென்றுவிட்டார். அடுத்ததாக கோடை வெயிலை சமாளிக்க கொடைக்கானலுக்கு ஸ்டாலினும் தனது மனைவியுடன் கிளம்பிச் சென்றுவிட்டார்.

    இந்நிலையில், வரும் மே 4ம் தேதி தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வரும் நாளில் தவெக தலைவர் விஜய் வெளிநாட்டுக்கு டூர் கிளம்பிச் செல்லப் போகிறாரா? என செய்தியாளர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு தவெகவை சேர்ந்த சிடிஆர் நிர்மல் குமார், இதெல்லாம் பென் மீடியாவின் நரேட்டிவ் தான் என்றும் விஜய் எங்கேயும் போகவில்லை, அனைத்தும் பொய்யாக கிளப்பப்படும் வதந்திகள் மட்டுமே எனக் கூறியுள்ளார்.

    தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் வரும் மே 4ம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதே நாளில் தான் நடிகை த்ரிஷாவின் பிறந்தநாளும் மே 4ம் தேதி வரவுள்ள நிலையில், நடிகை த்ரிஷாவுடன் விஜய் வெளிநாட்டுக்கு கிளம்பிப் போக போகிறார் என சோஷியல் மீடியாவில் சில வதந்திகள் பரவத் தொடங்கி உள்ளன.

    ஆரம்பத்தில் இருந்தே விஜய்க்கு எதிரான போலியான செய்திகளை தொடர்ந்து திமுக தரப்பு பரப்பி வருவதாக கூறுகின்றனர். விஜய் அதிமுகவில் இணைந்து விடுவார், பாஜகவின் பி டீம், தேர்தலில் போட்டியிட மாட்டார், அவரது வேட்பு மனு செல்லாமல் போய்விடும், சங்கீதா விஜய் மீடியாக்கள் முன்பாக பேட்டிக் கொடுத்து விஜய் அரசியலுக்கே வேட்டு வைப்பார் என பல விதமான போலியான செய்திகளை திமுகவின் ஆதரவு ஊடங்களே பரப்பின எனக் கூறுகின்றனர்.

    வரும் மே 4ம் தேதி விஜய் எந்தளவுக்கு வாக்கு சதவீதத்தை பெறுகிறார் என்பதை காண ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  • காட்டுத்தனமாக கவர்ச்சி காட்டும் டாப் குயின்கள்!.. மிருணாள் தாக்கூர் முதல் ருக்மினி வசந்த் வரை!..

    காட்டுத்தனமாக கவர்ச்சி காட்டும் டாப் குயின்கள்!.. மிருணாள் தாக்கூர் முதல் ருக்மினி வசந்த் வரை!..

    இந்திய சினிமாவில் திடீரென கவர்ச்சிக்கு கூட வறட்சி வந்தது போல கடந்த சில ஆண்டுகளாக நடிகைகள் ரொம்பவே அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். சாய் பல்லவியின் எழுச்சிக்குப் பிறகுதான் இப்படியெல்லாம் நடக்கிறது என்றனர்.

    நடிகை ராஷ்மிகா மந்தனா கூட புஷ்பா 2வுக்குப் பிறகு பெரிதாக கிளாமர் ரோல்களை தவிர்த்து விட்டு, சிக்கந்தர், கேர்ள் ஃபிரெண்ட் என நடிக்க ஆரம்பித்துவிட்டார். திருமணம் ஆன நிலையில், விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்து வரும் படங்களிலும் கிளாமர் இல்லை.

    நயன்தாரா, அனுஷ்கா எல்லாம் அந்த காலத்தில் காட்டிய கவர்ச்சியில் சமீப காலமாக நடிகைகள் யாருமே காட்டுவதில்லையே என நினைத்த ரசிகர்களுக்கு நாங்க இருக்கோம், எங்க கிட்ட வாங்க என சமீபகாலமாக மிருணாள் தாக்கூர், பூஜா ஹெக்டே, மாளவிகா மோகனன் மட்டும் காந்தாரா ஹீரோயின் ருக்மினி வசந்த் என வரிசையாக கிளாமர் காட்டி அசத்துகின்றனர்.

    தமிழ், தெலுங்கு சினிமாவை விட பாலிவுட்டில் ஒரு பட வாய்ப்புக் கிடைத்தால் கூட பல கோடி ரூபாய் சம்பளம் கிடைத்து வரும் நிலையில், நடிகைகள் தற்போது அடிக்கடி மும்பையில் முகாமிட்டு வருவதாகவும் அதனாலே கூடுதல் கவர்ச்சி காட்டி போட்டிப் போட்டு வருகின்றனர் என்றும் கூறுகின்றனர்.

    நடிகைகளின் பின்னழகை பாப்பராஸிக்கள் போட்டோக்களாக எடுத்தும் வீடியோக்களாகவும் எடுத்தும் ஏகப்பட்ட ரீல்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.

    சமீபத்தில், காந்தாரா 2 நடிகை ருக்மினி வசந்த் சிகப்பு நிற உடை அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டது வேறலெவலில் வைரலாகி வருகிறது. மேலும், நடிகை மாளவிகா மோகனன் உள்ளாடை அணியாமல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாரா என கேள்விகள் கிளம்பி உள்ளன.

    நடிகை மிருணாள் தாக்கூர் சமீபத்தில், பேக் போஸ் காட்ட மாட்டேன் என்றும் சொன்னதும் வைரலானது. மிருணாள் தாக்கூர் மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே வருண் தவான் உடன் செம கிளாமராக நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.