Author: சிவா

  • எம்.ஜி.ஆர் எனக்கு விட்ட சாபம் அது!.. சிவக்குமார் ஓப்பனா சொல்லிட்டாரே!…

    எம்.ஜி.ஆர் எனக்கு விட்ட சாபம் அது!.. சிவக்குமார் ஓப்பனா சொல்லிட்டாரே!…

    80களில் முக்கிய நடிகராக இருந்தவர் சிவக்குமார். அதற்கு முன்பு 60,70களில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி படங்களில் இவர் நடித்திருக்கிறார். சினிமா துறையில் இருந்தும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத விரல் விட்டு எண்ணக் கூடிய நடிகர்களில் சிவக்குமாரும் ஒருவர். அதோடு தேக ஆரோக்கியத்திலும், ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். யோகாவை தொடர்ந்து செய்து வருபவ்வர். கடந்த பல வருடங்களாகவே ஆன்மீக சொற்பொழிவு மற்றும் இளைஞர்களுக்கான அறிகுறிகளை தொடர்ந்து சொல்லி வருகிறார்..

    கதாநாயகனாக நடித்து வந்த சிவக்குமார் ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார். ஒரு கட்டத்தில் நடிப்பது போதும் என்று நிறுத்திவிட்டார். சிவக்குமார் செயலும், பேச்சும் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தும். சமீபத்தில் கூட சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்பு ‘எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மதுபான கடைகளை மூட வேண்டும்.. குடிமக்களை குடிகார மக்களாக அரசு மாற்றியிருக்கிறது’ என பகிரங்கமாக பேட்டி கொடுத்தார்..

    இந்நிலையில், பத்மஸ்ரீ அவ்வை சண்முகத்தின் 114வது பிறந்தநாள் விழாவில் பேசிய சிவகுமார் ‘என்னுடைய நூறாவது படத்தில் சாகும் வரை இளமையாக இருப்பான் சிவக்குமார்’ என்று எம்ஜிஆர் சாபம் விட்டு சென்றார்.. எம்ஜிஆர் சொன்னது போலவே இப்போதும் நான் இளமையாக இருக்கிறேன். எனக்கு 85 வயதாகிறது.. ஆனால் என்னை பார்த்தால் அப்படியா தெரிகிறது’ என்று சிவக்குமார் பேசியிருக்கிறார்.

  • டீ குடிச்சே வாழ்க்கைய ஓட்டினேன்.. சாப்பாடெல்லாம் கனவுதான்!.. சூரி சொன்ன ஃபிளாஷ்பேக்!..

    டீ குடிச்சே வாழ்க்கைய ஓட்டினேன்.. சாப்பாடெல்லாம் கனவுதான்!.. சூரி சொன்ன ஃபிளாஷ்பேக்!..

    மதுரையிலிருந்து சினிமாவில் நடிகராக வேண்டும் என்று ஆசையில் சென்னை வந்தவர்தான் சூரி. துவக்கத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே சுண்ணாம்பு அடிப்பது, பெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட பல வேலைளை சூரி செய்திருக்கிறார். லைட் பாய் முதல் மெக்கானிக் என சினிமாவிலும் இவர் செய்யாத வேலைகள் இல்லை.

    ஒருவழியாக திரைப்படங்களில் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து நடிக்க தொடங்கினார். வெண்ணிலா கபடிக் குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார் அதன் பின் பரோட்டா சூரியாக மாறினார். தொடர்ந்து பல படங்களிலும் நடித்து முன்னணி நடிகர்கலின் படங்களில் காமெடி நடிகராக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.

    விடுதலை திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக நடிக்க தொடங்கிய சூரி அதன்பின் நடித்து வெளியான விடுதலை 2, மாமன், கருடன் ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. தற்போது மண்டாடி என்கிற படத்தில் நடிக்க முடித்திருக்கிறார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய சூரி தனது பழைய வாழ்க்கையை நினைவு கூர்ந்தார். ‘சாப்பாடுன்னா என்னன்னு யோசிச்ச காலமெல்லாம் இருக்கு.. என் வாழ்க்கையில் பாதி டீ குடிச்சிதான் வாழ்ந்தேன்.. டீ தான் எனக்கு சாப்பாடு.. கால சாப்பாடு, மதிய சாப்பாடு டைம் எதுவும் தெரியாது. நான் எப்ப சாப்பிடறானோ அதுதான் டைம்.. அது காலை சாப்பாடா இருக்கலாம்.. நைட்டு சாப்பாடா இருக்கலாம்.. சென்னைக்கு வந்து நான் நினைச்சது நடக்கிற வரைக்கும் நான் வேலை செஞ்சிக்கிட்டேதான் இருந்தேன். நான் பார்க்காத வேலையே கிடையாது’ என கூறியிருக்கிறார்.

  • Jananayagan: அப்புறம் சொல்றோம்!. சென்சார் அதிகாரிகள் பதிலால் தயாரிப்பாளர் அப்செட்..

    Jananayagan: அப்புறம் சொல்றோம்!. சென்சார் அதிகாரிகள் பதிலால் தயாரிப்பாளர் அப்செட்..

    கே.வி.என் புரடெக்‌ஷன் தயாரிப்பில் விஜய், மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உருவான திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்தை பொங்கலை முன்னிட்டு கடத்த ஜனவரி 9ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியிட முடியவில்லை..

    ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்பு படம் மீண்டும் மறுதணிக்கை செய்யப்பட வேண்டும் என தணிக்கை அதிகாரிகள் சொன்னதால் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறிமாறி வழக்கு சென்றும் தயாரிப்பாளருக்கு ஆதரவாக தீர்ப்புக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து தயாரிப்பாளர் வழக்கை வாபஸ் பெற்றார். தற்போது படம் மறுத்தணிக்கையில் இருக்கிறது..

    எப்படியும் படம் மே மாதமே வெளியாகும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு திரைப்படமும் இணையத்தில் லீக் ஆனது. ஜனநாயகன் படத்தின் எடிட்டிங்கில் வேலை செய்த ஒருவர் பணத்திற்காக படத்தை திருடி வேறொரு நபரிடம் கொடுக்கப்பட்டு அது இணையத்தில் அப்லோட் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    எனவே படத்தை வேகமாக ரிலீஸ் செய்யும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியிருக்கிறது. இந்நிலையில் இன்று படம் பார்த்த தணிக்கை அதிகாரிகள் நாளை அதாவது திங்கட்கிழமை தங்களின் முடிவை சொல்கிறோம் என கூறியிருக்கிறார்கள். படத்துக்கு இன்று தணிக்கை சான்றிதழ் கிடைத்து விடும்.. வருகிற 30-ஆம் தேதி படத்தை வெளியிடலாம் என தயாரிப்பாளர் திட்டமிட்டிருந்த நிலையில், தணிக்கை அதிகாரிகளின் இந்த முடிவு அவரை அப்செட்டாகி ஆகிகியிருப்பதாக சொல்லப்படுகிறது.

  • நண்பர்களுக்கு திருமண நாள் பார்ட்டி கொடுத்த அஜித்!.. வைரல் போட்டோ…

    நண்பர்களுக்கு திருமண நாள் பார்ட்டி கொடுத்த அஜித்!.. வைரல் போட்டோ…

    30 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடித்து வருபவர் அஜித்குமார். அமராவதி படத்தில் அறிமுகமாகி அதன்பின் பல படங்களிலும் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஒருகட்டத்தில் ஆக்சன் ரூட்டுக்கு மாறி தீனா, பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாகவும் மாறினார். விஜய்க்கு பின் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராகவும் அஜித் இருக்கிறார்.

    கடந்த சில வருடங்களாகவே அஜித் தொடர்ந்து கார் ரேஸில் ஈடுபட்டு வருகிறார். குட் பேட் அக்லி படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியும் அடுத்த படம் வெளியாகவில்லை. அடுத்த படத்திற்கு அஜித் 185 கோடி சம்பளம் கேட்பதால் படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை.

    சமீபத்தில் கார் ரேஸுக்காக பெல்ஜியம் சென்றிருந்த அஜித் ஓட்டு போடுவதற்காக சென்னை வந்தார். அதிகாலை 6.45 மணிக்கே திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தமிழ்நாட்டிலேயே முதல் ஆளாக அஜித் வாக்களித்தார். வெள்ளை நிற கோட், சூட், கருப்பு நிற கண்ணாடி அணிந்து ஸ்டைலாக அவர் வந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில், ஏப்ரல் 24ம் தேதியான நேற்று அஜித் தனது 26வது திருமண நாளை கொண்டாடினார். இதையடுத்து, தனக்கு நெருக்கமான நண்பர்களான இயக்குனர்கள் ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு பார்ட்டி கொடுத்திருக்கிறார். அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

  • ஜனநாயகன் லீக்!. படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் நீக்கம்!.. ஆக்சன் எடுத்த எடிட்டர் சங்கம்!..

    ஜனநாயகன் லீக்!. படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் நீக்கம்!.. ஆக்சன் எடுத்த எடிட்டர் சங்கம்!..

    விஜய் அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் கடைசியாக நடித்த திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. ஒருமாத காலம் இந்த படம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே வழக்கை வாபஸ் பெற்றதோடு மறுத்தணிக்கைக்கும் தயாரிப்பாளர் விண்ணப்பித்தார். ஆனால் தற்போது வரை இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை..

    அந்நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் சில இணையதளங்களில் லீக் ஆனது. எனவே தயாரிப்பாளர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து உமாசங்கர் என்பவரை கைது செய்தனர். முதலில், அவர் ஒரு பிரிலேன்ஸ் வீடியோ எடிட்டர் எனவு சொல்லப்பட்டது. அதன்பின் உமா சங்கர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர்.. ஒரு ஃபிரிலேன்ஸ் எடிட்டர் படத்தை திருடி உமாசங்கரிடம் விற்றுள்ளார். உமா சங்கர் இணையதளத்தில் அப்லோடு செய்திருக்கிறார் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆனது தொடர்பாக அப்படத்தின் படத்தொகுப்பாளர் பிரதிப் ராகவ் எடிட்டர் சங்கத்திலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கத்திலிருந்து பிரதீப் ராகவ் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    படம் கசிந்தததற்கு பிரதீப் ராகவ் நேரடியாக காரணம் இல்லை என்றாலும் அவரது கவனக்குறைவுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சங்கத்தின் விதிகளை மதிக்காமல் சங்க உறுப்பினர் அல்லாத ஒருவரை உதவியாளராக அவர் பயன்படுத்தியுள்ளார் என எடிட்டர் சங்கம் அவர் மீது குற்றம் சுமத்தியிருக்கிறது.

  • Thalaivar173: கமல் கேமியோ. ஷங்கர் வில்லன்.. எல்லாம் ரஜினி கையில் இருக்கு!..

    Thalaivar173: கமல் கேமியோ. ஷங்கர் வில்லன்.. எல்லாம் ரஜினி கையில் இருக்கு!..

    கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினியின் 173 வது படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் திடீரென அந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகினார். அதன்பின் அந்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு போஸ்டரும் வெளியானது..

    ஆனால் திடீரென சிபி சக்கரவர்த்தியும் இந்த படத்திலிருந்து இருந்து விலகவிருப்பதாகவும் அவருக்கு பதில் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது. அதன்பின் சில நாட்களில் அந்த கதையில் சில மாற்றங்களை ரஜினி செய்ய சொல்லியிருப்பதகவும், சிபி அதற்காக வேலையி ஈடுபட்டிருக்கிறார் எனவும் சொல்லப்பட்டது. கதையை மாற்றியபின் ரஜினிக்கு அது பிடித்திருந்தால் சிபியே இயக்குனதாக தொடர்வார்.. இல்லையெனில் அஸ்வத் மாரிமுத்து உள்ளே வருவார் எனவும் சொல்லப்பட்டது.

    ரஜினியை வைத்து தான் இயக்கவிருந்த படத்தில் கமல்ஹாசனை ஒரு கேமியோ வேடத்திலும், இயக்குனர் ஷங்கரை வில்லனாகவும் நடிக்க வைக்கலாம் என சிபிராஜ் சொல்ல கமல், ஷங்கர் இருவரிடம் பேசி ஒப்புதலையும் வாங்கி வைத்திருந்தார்களாம். அதேநேரம், ரஜினியின் 173வது படத்தை சிபி இயக்கினால் மட்டுமே இது நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..

  • ஓட்டு போட வந்து செல்பி எடுத்த அஜித்!. செல்போனில் விலை இவ்ளோதானா?!..

    ஓட்டு போட வந்து செல்பி எடுத்த அஜித்!. செல்போனில் விலை இவ்ளோதானா?!..

    நடிகர் அஜித் மிகவும் நாகரிகமானவர் என்கிற இமேஜ் எப்போதும் அவர் மீது உண்டு. சாலை விதிகளை சரியாக கடைபிடிப்பார், பெண்களிடம் மிகவும் நாகரிகமாக நடந்துகொள்வார், யாரிடம் பேசினாலும் அவரின் பேச்சிலும், செயலிலும் நாகரிகமாகமும், அடக்கமும் இருக்கும் என பலரும் சொல்வார்கள்.

    ஒருபக்கம் ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் போது உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சென்னைக்கு வந்து தவறாமல் வாக்களிப்பதை அஜித் வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் கார் ரேசுக்காக பெல்ஜியத்தில் இருந்த அஜித்தை விமான மூலம் சென்னை வந்தார்.

    இன்று காலை 6.45 மணிக்கே திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து அவர் வாக்களித்தார். அப்போது வெள்ளை நிற கோட் சூட் மற்றும் கருப்பு கண்ணாடி அணிந்திருந்தார். வழக்கமாக கையில் செல்போன் எடுத்து வராத அஜித் இந்த முறை கருப்பு நிற கலரில் ஒரு செல்போனை வைத்திருந்தார். அதோடு தன்னை சுற்றி கூட்டம் இருக்கும் போது அதை செல்பி வீடியோவாகவும் அஜித் எடுத்தார்.

    இந்நிலையில், அஜித் கையில் வைத்திருப்பது இல்ல Samsung S21FE மாடல். இதன் விலை 33 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரம் மட்டுமே. இவ்வளவு கோடி சம்பளம் வாங்கும் நடிகர் மிகவும் குறைவான விலையில்தான் செல்போனை பயன்படுத்துகிறார்.. இதிலும் அஜித் எளிமைதான் போல’ என்று பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

  • ஜனநாயகன் லீக்!. கை மாறிய பணம்!.. அப்லோட் செய்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்..

    ஜனநாயகன் லீக்!. கை மாறிய பணம்!.. அப்லோட் செய்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்..

    கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்து உருவான ஜனநாயகன் திரைப்படம் தற்போது வரை தியேட்டரில் வெளியாகவில்லை.. அதற்கு காரணம் தற்போது படம் மறு தணிக்கையில் இருக்கிறது.. தமிழக சட்டசபை தேர்தல் ரிசல்ட் வெளியான பின்னரே இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் சில இணையதளங்களில் லீக் ஆகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

    இது தொடர்பாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தனர். இது தொடர்பான விசாரணையில் உமாசங்கர் என்கிற ஃபிரிலான்ஸ் வீடியோ எடிட்டர்தான் இந்த தவறை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

    ஆனால் எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என தொடர்ந்து உமாசங்கர் கூறி வருகிறார்.. அதோடு அவர் ஜாமினுக்கும் விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு ஜாமின் அளிக்க கேவிஎன் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது . இந்நிலையில்தான், போலீசாரின் விசாரணையில் ஒரு புதிய தகவல் தெரிய வந்திருக்கிறது.

    ஜனநாயகன் படத்தை ஆன்லைனில் அப்லோட் செய்ததாக கூறப்படும் உமாசங்கர் வீடியோ எடிட்டர் அல்ல.. அவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் என காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். வேறு திரைப்பட பணிகளுக்காக வந்த ஃபிரிலேன்ஸ் எடிட்டர் பிரசாத் என்பவர் ஜனநாயகன் பட காட்சிகளை காப்பி எடுத்து பெரும் தொகைக்காக உமா சங்கரிடம் விற்றது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது..

  • கர படத்துக்கு ஆப்பு வைக்குமா ஜனநாயகன்?!.. அப்செட்டில் தனுஷ் ஃபேன்ஸ்!..

    கர படத்துக்கு ஆப்பு வைக்குமா ஜனநாயகன்?!.. அப்செட்டில் தனுஷ் ஃபேன்ஸ்!..

    போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் கர. ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் மற்றும் மலையாள நடிகர் சுராஜ் வஞ்சரமுடு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. மேலும் இந்த படத்தின் டிரைலர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தேவைக்காக தனுஷ் வங்கிகளில் கொள்ளையடிக்கும் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றிருந்தது..

    அதோடு இந்த படத்தை பார்த்துவிட்டு ‘விக்னேஷ் ராஜா. நீங்கள் ஒரு ஜீனியஸ்’ என தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த படம் வருகிற ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து விட்டது. ஆனால் இந்த படத்திற்கு போட்டியாக ஜனநாயகன் களமிறங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது..

    வருகிற 24-ஆம் தேதி ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் எனவும் அனேகமாக அதற்கு அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 29 அல்லது 30ம் தேதி ஜனநாயகன் படத்தை வெளியிட படத்தின் தயாரிப்பாளர் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது. ஒருவேளை, ஏப்ரல் 29 அல்லது 30-ல் ஜனநாயகன் வெளியாவது உறுதியானால் தனுஷின் கர திரைப்படம் அந்த படத்தோடு போட்டி போடுமா இல்லை ரிலீஸ் தள்ளி போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அல்லது ஜனநாயகன் மே முதல் வாரத்தில் தள்ளிப்போகும் எனவும் சொல்லப்படுகிறாது.

  • இனிமே அவர்தான் மியூசிக் டைரக்டர்!.. சிம்பு எடுத்த முடிவில் ஷாக்கான யுவன்!…

    இனிமே அவர்தான் மியூசிக் டைரக்டர்!.. சிம்பு எடுத்த முடிவில் ஷாக்கான யுவன்!…

    சிம்புவின் சினிமா வாழ்வில் அவருக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தது யுவன் சங்கர் ராஜா என்றுதான் சொல்லவேண்டும். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் சிம்பு நடித்து வெளியான மன்மதன் உள்ளிட்ட பல படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்தான். எனவேதான் தனது படங்களில் யுவனை தொடர்ந்து இசையமைக்க வைத்தார் சிம்பு.

    அதோடு யுவனுக்கு மிகவும் நெருக்கமான நண்பராகவும் இருக்கிறார்
    . அனிருத் பல படங்களில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக மாறிய பின்னரும் கூட சிம்பு அனிருத் பக்கம் செல்லவில்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அசுரன் படத்தில் மட்டுமே அனிருத் இசையமைக்கிறார்.

    சமீப காலமாக நடிகர் சிம்பு சாய் அபயங்கருடன் நெருக்கமானவராக மாறியிருக்கிறார். பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பது உறுதியானது. இதையடுத்து துபாயிலிருந்த சிம்பு சாய் அபயங்கரையும், ராம்குமாரையும் துபாய்க்கு வரவழைத்து மூவரும் சேர்ந்து சில பாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள்..

    ஆனால் படம் டிராப் ஆகிவிட்டதால் அந்த பாடல்களை பயன்படுத்த முடியவில்லை. இதையடுத்து தான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து சாய் அபியங்கரையே இசையமைக்க வைக்கலாம் என சிம்பு திட்டமிட்டிருக்கிறாராம். அந்த படங்களில் துபாயில் உருவாக்கிய அந்த பாடல்களை பயன்படுத்தவும் அவர் திட்டமிட்டிருக்கிறாராம்.