Author: சிவா

  • ஃபகத் பாசிலுடன் மீண்டும் இணையும் வடிவேலு!.. சூப்பர் குட் பிலிம்ஸின் தெறி அப்டேட்!..

    Fahadh paasil: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மலையாள நடிகர் ஃபகத் பாசில், வடிவேலு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் மாமன்னன். இந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. வழக்கம்போல் இந்த படத்திலும் மாரி செல்வராஜ் சாதிய பிரச்சனையை கையாண்டிருந்தார்.

    தாழ்த்தப்பட்ட சாதியினர் அரசியலில் ஒரு நல்ல பதவியில் இருந்தாலும் அதே கட்சியில் அவருக்கு மேலே இருக்கும் நபர்கள் அவரை அப்படி நடத்துகின்றனர் என்பதை தோலுரித்து காட்டியிருந்தார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் இப்படத்திற்கு பெரிய பலமாக இருந்தது.

    இதையும் படிங்க: அது உங்க பிரச்சனை!.. என்னால முடியாது!. கறாரா சொன்ன அஜித்?!.. என்னவாகுமோ விடாமுயற்சி!…

    குறிப்பாக வடிவேலுவை இதுவரை காமெடி காட்சிகளில் மட்டுமே பார்த்த ரசிகர்கள் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் அப்பாவாக, சாதிய அடக்குமுறைகளுக்கு அடங்கிப்போகும் மனிதராக அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பை பார்த்து அசந்துபோனார்கள். இப்படம் மூலம் தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதையும் காட்டியிருந்தார்.

    fahadh

     

    இப்படத்தில் சாதிவெறி பிடித்த வில்லனாக ஃபஹத்பாசில் நடித்திருந்தாலும் தமிழகத்தில் இருக்கும் பல சாதி வெறியர்களின் ஹீரோவாக மாறினார். இதைத்தொடர்ந்து சாதிவெறிபிடித்த பலரும் அவரை தங்களின் ஹீரோவாக கொண்டாடினர். இது எந்த நோக்கத்தில் அந்த படத்தை மாரி செல்வராஜ் எடுத்தாரோ அந்த நோக்கமே சிதைந்து போனது.

    இதையும் படிங்க: விசித்ரா சொல்ற மாதிரிலாம் இல்ல!.. பாலகிருஷ்ணா எவ்வளவு நல்ல மனுஷன் தெரியுமா? பகீர் கொடுத்த பிரபலம்..!

    இந்நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் பஹத் பாசிலும் வடிவேலுவும் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளனர். தமிழ் திரையுலகில் பல புதிய இயக்குனர்களை அறிமுகம் செய்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இது இந்நிறுவனத்தின் 98வது திரைப்படமாகும். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார்.

    இப்படத்தை வி கிருஷ்ண மூர்த்தி என்பவர் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மாமன்னன் படத்திற்கு பின் ஃபஹத் பாசிலும், வடிவேலுவும் மீண்டும் இணைந்து நடிக்கவிருப்பது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    super

  • ஒரு போட்டா போட்டு டிரெண்டிங்கில் வந்த சமந்தா!. புது வருசத்துக்கு செம ட்ரீட்டுதான்!..

    Samantha: சென்னையை சேர்ந்த சமந்தா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என உச்சம் தொட்டது என்பது சாதாரண வளர்ச்சி இல்லை. அதுவும் ஆணாதிக்கம் நிறைந்துள்ள திரைப்பட உலகில் ஒரு பெண் பெரிய கதாநாயகி ஆக வேண்டுமெனில் அழகு, நடிப்பு திறமை மட்டுமல்ல. தாக்குப்பிடிக்கும் திறமை இருக்க வேண்டும்.

    தோல்வியின் போது துவளாமல் இருக்க வேண்டும். இது எல்லாமே சமந்தாவிடம் இருந்தது. அறிமுகமானது தமிழ் படம் என்றாலும் அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் சென்று திறமை காட்ட துவங்கினார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

    samantha

    விஜயுடன் கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்தார். மேலும், சூர்யா, தனுஷ், விஷால் என பலருடனும் நடித்தார். தெலுங்கில் நடித்தபோது நாக சைத்தன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால், சில வருடங்களில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

    samantha

    அதன்பின் வழக்கம்போல் சினிமாவில் நடிப்பதில் மட்டும் சமந்தா கவனம் செலுத்தி வருகிறார். ஒருபக்கம், தோல் வியாதியாலும் அவர் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வருகிறது. அவ்வப்போது வெளிநாடு சுற்றுலா செல்லும் சமந்தா அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

    samantha

    சிலசமயம் மோசமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையே கூச்சப்பட வைக்கிறார். இந்நிலையில், வெளிநாட்டில் புதுவருடத்தை கொண்டாடிய சமந்தா அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார். இந்த ஒரு போட்டோவை போட்டு டிவிட்டரில் டிரெண்டிங்கில் வந்துவிட்டார்.

    samantha

  • விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!.. வெளியானது கோட் செகண்ட் லுக் போஸ்டர்…

    Goat: லியோ படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் அதை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் தனது அடுத்த பட வேலையை உடனே துவங்கினார். மங்காத்தா, மாநாடு ஆகிய ஹிட் படங்களை இயக்கிய வெங்கட்பிரபுதான் இயக்குனர் என அறிவிப்பும் வெளியானது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தயாரித்து வருகிறது.

    இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் எனவும் அதில் ஒன்று மிகவும் இளமையான, வயது குறைந்த விஜய் எனவும் சொல்லி இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்கள். மேலும், பல வருடங்களுக்கு பின் விஜயுடன் ஜோதிகா நடிக்கிறார் என சொன்னார்கள். ஆனால், அதன்பின் அவர் நடிக்கவில்லை சினேகா நடிக்கிறார்கள் என சொல்லப்பட்டது.

    இதையும் படிங்க: விஜயகாந்த் சாப்பாடு தான போட்டு இருக்காருனு யோசிச்சீங்கனா… அப்போ இத படிங்க.. சிலிர்க்கும்..!

    மேலும், சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகியான மீனாட்சி சவுத்ரி நடிப்பததாக அறிவித்தார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் பட பாணியில் ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜயை இளமையாக காட்ட வெங்கட்பிரபு முடிவெடுத்தார். அதன்படி ஹாலிவுட் கலைஞர்களும் இப்படத்தில் பணிபுரிய துவங்கினர்.

    இது ஒரு ஆங்கில பாடம்.. அந்த படம்.. இந்த படம் என பல்வேறு செய்திகளும் வெளியானது. ஆனால், வெங்கட்பிரபுவோ வாயை திறக்கவில்லை. லியோ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்ற நிலையில், இப்படம் பற்றி எந்த அப்டேட்ட்டையும் வெளியிட வேண்டாம் எந்ன விஜய் சொல்லிவிட்டார் என சொல்லப்பட்டது.

    goat

    படம் பாதிமுடிந்த விட்ட நிலையில் புதுவருடம் பிறக்கும் நிலையில் நேற்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்திற்கு கோட் எனவும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரிடல் விஜய் இரட்டை வேடத்தில் இருந்தார். போஸ்டரை பார்க்கும்போது அவர் அப்பா – மகன் வேடங்களில் நடிப்பதாக தெரிகிறது.

    இந்நிலையில்தான், இன்று இப்படத்தின் செக்ண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. டபுள் விஜய் போல இப்படத்திற்கு டபுள் போஸ்டர் வெளியாகியிருப்பது விஜய் ரசிகர்களுக்கு புது வருட விருந்தாக அமைந்துள்ளது.

    goat

  • இப்படி ஹேப்பி நியூர் சொன்னா தினமும் பாப்போம்!.. ஃபுல் ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா..

    Dharsha gupta: விஜய் டிவி சீரியல் நடிகையாக நெட்டிசன்களிடம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. சில சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடித்தபோதே சைனிங் உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருவாக்கினார். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் சும்மா அள்ளும்.

    dharsha

    சினிமாவில் ஹீரோயின் ஆக வேண்டும் என்பதுதான் தர்ஷாவின் ஆசை. ஆனால், நல்ல வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரையில் காலத்தை ஓட்டினார். 3 சீரியல்களில் நடித்துவிட்டு விலகினார். விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பிரபலமாகிவிட்டால் குக் வித் கோமாளிக்கு போவார்கள்.

    dharsha

    அப்படி சென்றவர்களில் தர்ஷா குப்தாவும் ஒருவர். ஆனால், அதன்மூலம் அவர் எதிர்பார்த்தது போல சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பல கட்ட முயற்சிகளுக்கு பின் ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் கிளிக் ஆகவில்லை. அதன்பின் ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் திறமை காட்டினார்.

    dharsha

    அந்த படமும் ஓடவில்லை. ஆனாலும், மனம் தளராமல் கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

    dharsha

    அந்தவகையில், படுகவர்ச்சியான உடையில் தாரள கவர்ச்சி காட்டி அவரின் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தை தர்ஷா கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

    dharsha

  • பலகோடி மதிப்புள்ள சொத்தை ஏழைகளுக்கு தானமாக கொடுத்த விஜயகாந்த்!.. அந்த மனசுதான் கடவுள்!..

    Vijayakanth: வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி.. மக்களின் மனதில் நின்றவர் யார்?.. என்கிற கண்ணதாசனின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் வெகு சிலர் மட்டுமே. காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், சிவாஜி, அப்துல் கலாம், பின்னணி பாடகர் எஸ்.பி., நகைச்சுவை நடிகர் விவேக், மயில்சாமி, பின்னணி பாடகர் பாலசுப்பிரமணியம் என வெகு சிலரின் இறப்பு மட்டுமே மக்களை அதிகம் பாதித்தது.

    இதில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது குரலால் மக்களின் மனதில் இடம்பிடித்தார் என்றால் மற்ற அனைவரும் மக்களின் நலன் பற்றி யோசித்தவர்கள். மயில்சாமி தன்னால் முடிந்த உதவிகளை எல்லோருக்கும் செய்து வந்தவர். அவரை பற்றி கேள்விப்பட்டே மக்களுக்கு அவர் மீது அன்பு ஏற்பட்டது.

    இதையும் படிங்க: அம்மாடியோவ் இவ்ளோ சொத்துக்களுக்கு அதிபதியா கேப்டன்? கேட்டா வாயடைச்சு போய்டுவீங்க

    அந்தவகையில் விஜயகாந்தின் மரணம் மக்களை பாதித்தது எனில் அது அவரின் எளிமையான மற்றும் மற்றவர்களுக்கு உதவிய அவரின் குணம்தான். விஜயகாந்த் தான் சம்பாதித்த பணத்தில் மட்டுமல்ல, அவரின் எதிர்காலத்திற்காக அவரின் அப்பா வாங்கி வைத்திருந்த சொத்தையும் மக்களுக்கே கொடுத்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. அதை எப்போதும் எங்கேயும் அவர் சொல்லிக்கொண்டதும் இல்லை.

    திருப்பரங்குன்றம் பெரிய ஆலங்குளம் எனும் இடத்தில் கிருஷ்ணன் என்பவரிடம் விஜயகாந்தின் அப்பா அழகர் சாமி 7 ஏக்கர் நிலத்தை மகனின் எதிர்காலத்திற்காக வாங்கினார். விஜயகாந்த் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்ததும் அந்த இடத்தை ஏழைகளுக்கு அரசு மூலம் தானமாக கொடுக்க முடிவு செய்தார்.

    இதையும் படிங்க: மீண்டும் திரையில் விஜயகாந்த்!.. விரைவில் வெளியாகும் ஊமை விழிகள் 2.. குட் நியூஸ் சொன்ன இயக்குனர்…

    1998ம் வருடம் அந்த இடம் மாவட்ட கலெக்டர் மூலமாக ஏழைகளுக்கு கொடுக்கப்பட்டது. அதன் இன்றைய மதிப்பு 21 கோடியாகும். அந்த இடத்தில் குடியிருக்கும் சோனைமுத்து, துரைப்பாண்டி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன்பே இந்த இடத்தை எங்களுக்கு கொடுத்தார். அதில்தான் நாங்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம்.

    அவர் இப்போது மறைந்துவிட்டாலும் அவர் எங்களுக்கு இருப்பிடம் கொடுத்த வாழ்வளித்த கடவுளாகவே காட்சி அளிக்கிறார்’ என மிகழும் நெகிழ்ச்சியுடன் பேசினர். இப்படி வெளியே தெரியாமல் விஜயகாந்த் பலருக்கும் உதவி இருக்கிறார். பலரை படிக்கவும் வைத்திருக்கிறார். இதைப்பற்றியெல்லாம் எங்கேயும், எப்போதும் அவர் பெருமையாக பேசிக்கொண்டதே இல்லை’ என்பது குறிப்பிடத்தக்கது.

    image

  • திடீரென தேவைப்பட்ட பாட்டு!.. மேஜிக் செய்த இசைஞானி!. ஒரே நாளில் எடுக்கப்பட்ட ரஜினி பாட்டு!..

    70களின் இறுதியில் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தனது இசைப்பயணத்தை துவங்கியவர்தான் இளையராஜா. இவரின் முதல் படமான அன்னக்கிளி-யில் ராஜா போட்ட பாட்டுக்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்து, ‘அட யார் இந்த இசையமைப்பாளர்?’ என ஆச்சர்யப்பட வைத்தது.

    அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் ராஜாவின் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. 80களில் இசையுலகில் முடிசூடா மன்னனாக இருந்தார் இளையராஜா. அவரை நம்பியே பல திரைப்படங்கள் உருவானது. ஹீரோவின் கால்ஷீட்டை விட இளையராஜாவைத்தான் முதலில் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்தனர்.

    இதையும் படிங்க: அம்மாடியோவ் இவ்ளோ சொத்துக்களுக்கு அதிபதியா கேப்டன்? கேட்டா வாயடைச்சு போய்டுவீங்க

    இளையராஜாவின் இசையை நம்பியே பல இயக்குனர்கள் படங்களை எடுத்தனர். இளையராஜாவும் பல படங்களை தனது இசையால் ஓடவைத்தார். சிறப்பான, இனிமையான பாடல்களை கொடுத்து படங்களை ஓட வைத்தது ஒருபுறம் என்றாலும், ஒருபக்கம் ஒரு நாளில் இரண்டு, மூன்று படங்களுக்கு ராஜா இசையமைத்துவிடுவார்.

    80களில் பல வெற்றிப்படங்களை கொடுத்து பெரிய இயக்குனராக இருந்தவர் ராஜசேகர். இவரின் இயக்கத்தில் ரஜினி, சிவாஜி, அம்பிகா என பலரும் நடித்த திரைப்படம்தான் படிக்காதவன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து எல்லா வேலையும் முடிந்து படம் ரெடியாகிவிட்டது. ரிலீஸுக்கு ஒன்னும் ஒரு வாரம்தான் இருந்தது.

    இதையும் படிங்க: இந்த படத்துக்கு விஜயகாந்த் வேண்டாம்!.. இயக்குனரிடம் மோதி ஹிட் படத்தை மிஸ் பண்ண ஏவிஎம்!..

    படத்தை பார்த்த இயக்குனர் ராஜசேகர் தனது தம்பியால் ஏமாற்றப்பட்டதை ரஜினி உணரும் அந்த காட்சியில் ஒரு பாட்டு இருக்க வேண்டும் என சொல்லிவிட்டார். கதாசிரியர் பஞ்சு அருணாச்சலமும் அதே கருத்தை சொல்லிவிட்டார். ஆனால், பாடலும் கையில் இல்லை. அதேபோல், ரஜினி, அம்பிகா இருவரும் மும்பையில் வேறு படத்தின் படப்பிடிப்பில் இருந்தனர்.

    rajini
    rajini

    இளையராஜாவிடம் இதை சொல்லி காலையில் பாடல் கம்போஸ் செய்து மதியம் ஒலிப்பதிவு செய்து அன்று இரவே படப்பிடிப்பு என முடிவானது. ரஜினியும், அம்பிகாவும் வந்துவிட அன்று இரவே பாடலுக்கான ஷூட்டிங்கை நடத்தினார். அப்படியே உருவான பாடல்தான் ‘ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்.. உலகம் தெரிஞ்சிக்கிட்டேன்’ பாடலாகும். வைரமுத்து பாடல் எழுதி யேசுதாஸ் பாடிய அந்த பாடல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பாடலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: மீண்டும் திரையில் விஜயகாந்த்!.. விரைவில் வெளியாகும் ஊமை விழிகள் 2.. குட் நியூஸ் சொன்ன இயக்குனர்…

  • இந்த படத்துக்கு விஜயகாந்த் வேண்டாம்!.. இயக்குனரிடம் மோதி ஹிட் படத்தை மிஸ் பண்ண ஏவிஎம்!..

    Vijayakanth: பொதுவாக ஏவிஎம் போன்ற பெரிய நிறுவனங்கள் ஒரு திரைப்படத்தை துவங்குவதற்கு முன் நன்றாக திட்டமிட்டு வேளையில் இறங்குவார்கள். எல்லாம் சரியாக அமைந்தால் பட்டுமே படத்தை தயாரிக்க வருவார்கள். குறிப்பாக படத்தின் பட்ஜெட் மற்றும் ஹிரோ இவர்தான் என்பதில் அவர்கள் எந்த காம்பரமைஸும் செய்து கொள்ளமாட்டார்கள்.

    அதேபோல், தயாரிப்பு செலவையும் பார்த்து பார்த்து செய்வார்கள். 50 பேருக்கு சாப்பாடு எனில் 50 பேருக்கு மட்டும்தான் சாப்பாடு வரும். 5 பேர் சேர்த்து வந்துவிட்டால் சாப்பாடு இருக்காது. இப்படி எல்லா விஷயத்திலும் கறாராக இருந்ததால்தான் பல பெரிய இயக்குனர்களும், நடிகர்களும் அவர்கள் பக்கம் செல்வதில்லை.

    இதையும் படிங்க: மீண்டும் திரையில் விஜயகாந்த்!.. விரைவில் வெளியாகும் ஊமை விழிகள் 2.. குட் நியூஸ் சொன்ன இயக்குனர்…

    இந்த காரணத்தால்தான் கடந்த பல வருடங்களாக ஏவிஎம் நிறுவனம் படங்களே தயாரிப்பதில்லை. 50,60களில் இந்த நிறுவனம் பீக்கில் இருந்த போதும் எம்.ஜி.ஆர் கூட ஒரே ஒரு படம்தான் இவர்களின் தயாரிப்பில் நடித்தார். படத்தின் முடிவில் அவருக்கும், அந்த நிறுவனத்திற்கும் சில உரசல்களும் வந்தது.

    80களில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ஆர்.சுந்தரராஜன். இவர் இயக்கிய ‘நான் பாடும் பாடல்’ படம் ஹிட் அடிக்கவே சுந்தர் ராஜனை தேடி பல தயாரிப்பாளர்கள் வந்தனர். அப்போது, எனக்கு சொந்த வீடு வாங்கி கொடுக்கும் தயாரிப்பாளருக்கு மட்டுமே நான் படம் இயக்குவேன் என அவர் சொல்ல ஏவிஎம் நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்தது. மேலும், 2 லட்சம் அட்வான்ஸும் கொடுத்துவிட்டனர்.

    இதையும் படிங்க: குழந்தைக்காக ஷூட்டிங்கை நிறுத்திய விஜயகாந்த்!.. நடிகர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்..

    அந்த பணத்தை வீடு வாங்குவதற்கு அட்வான்ஸாக சுந்தர்ராஜன் கொடுத்துவிட்டார். வைதேகி காத்திருந்தாள் கதையையும் உருவாக்கினார். யார் ஹீரோ? என ஏவிஎம் கேட்க, சுந்தர்ராஜன் சொன்ன பெயர் விஜயகாந்த். ஆனால், ஏவிஎம் நிறுவனத்திற்கு இதில் உடன்பாடு இல்லை. ‘விஜயகாந்த் வேண்டாம்.. சிவக்குமாரை போடுங்க’ என சொல்ல, சுந்தர்ராஜனோ விஜயகாந்த் மட்டுமே இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார்’ என சொல்லிவிட்டார்.

    அதில் உடன்பாடு இல்லாத ஏவிஎம் ‘எங்களுக்கு இதில் விருப்பமில்லை. வாங்கிய 2 லட்சத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள்’ என சொல்லிவிட சுந்தர்ராஜன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் தூயவன் என்கிற பத்திரிக்கையாளர் மூலம் பஞ்சு அருணாச்சலத்தை சந்தித்து பேச, அவருக்கு கதை பிடித்துப்போய் உடனே 2 லட்சத்தை சுந்தர்ராஜனிடம் கொடுக்க அந்த பணத்தை ஏவிஎம் நிறுவனத்திடம் சுந்தர்ராஜன் திருப்பி கொடுத்துவிட்டார். தூயவன் தயாரிப்பில் வெளியான வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: அழ ஆரம்பித்த அஜித் ரசிகர்கள்!.. புத்தாண்டுக்கு ஒரு அப்டேட் கூட இல்லையே.. ரொம்ப பாவம்ப்பா!..

  • என்னம்மா இந்த ரேஞ்சில இறங்கிட்ட!.. கவர்ச்சி நடிகை போல மாறிய விஜே பார்வதி…

    vj parvthy: பத்திரிக்கையாளராக இருந்து ஊடகவியாளர் மற்றும் மாடலிங் என மாறியவர்தான் இந்த விஜே பார்வதி. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் மதுரையில் பத்திரிக்கை தொடர்பான படிப்பை முடித்தார். அதன்பின் ஆனந்த விகடனில் சில மாதங்கள் பணி புரிந்தார். ஆனால், யுடியூப் பிரபலமாக துவங்கியதும் அந்த பக்கம் போனார்.

    parvathy

    இளசுகளிடம் ஏடாகூடமாக கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி நெட்டிசன்களிடம் பிரபலமானவர் இவர். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்திருக்கிறார். சில டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட விஜே பார்வதி சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

    parvathy

    விஜய் டிவி டிடி-யை போல பிரபலமாக வேண்டும் என்பது இவரின் ஆசை. எனவே, பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார். இதற்கு நெட்டிசன்களிடம் நல்ல வரவேற்பும் ஒருக்கிறது. ஒருபக்கம், சுற்றுலா செல்வதிலும் ஆர்வமுள்ள பார்வதி அங்கு கவர்ச்சி உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

    parvathy

    ஒருபக்கம், மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள விஜே பார்வதி நடிகைகளை போல விதவிதமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். சில சமயம் கவர்ச்சி உடைகளையும் அணிந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டி வருகிறார்.

    parvathy

    அந்தவகையில், திடிரென கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு அழகை காட்டி விஜே பார்வதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ஃபாலோயர்ஸ்களை ஜில்லாக்கியுள்ளது.

    parvathy

  • மீண்டும் திரையில் விஜயகாந்த்!.. விரைவில் வெளியாகும் ஊமை விழிகள் 2.. குட் நியூஸ் சொன்ன இயக்குனர்…

    Oomai vizhigal: 80களில் விஜயகாந்தின் நடிப்பில் வந்த பெரும்பலான திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து பெரிய ஹிட் அடித்தது. அவரின் பல திரைப்படங்கள் 150 நாட்களுக்கும் மேல் ஓடி நல்ல வசூலை பெற்றது. ஹீரோவாக நடிக்கும்போது விஜயகாந்த் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க தயங்கியதே இல்லை.

    அவர் நடித்த பல படங்களில் அவருக்கு அப்பாவாக அவரே நடித்திருக்கிறார். ஊமை விழிகள், செந்தூரப்பூவே உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். அவர் கெஸ்ட் ரோலில் நடித்த படங்களும் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: குழந்தைக்காக ஷூட்டிங்கை நிறுத்திய விஜயகாந்த்!.. நடிகர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்..

    இதில் ஊமை விழிகள் படம் முக்கிய படமாகும். திரைப்படக்கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய இப்படத்தை அரவிந்த்ராஜ் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் டி.எஸ்.பி தீனதயாளன் எனும் வேடத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். அதிரடி சண்டை காட்சிகளோ சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாகியிருந்தது. மேலும், சந்திரசேகர், அருண் பாண்டியன், ஜெய்சங்கர், செந்தில், சரிதா, கார்த்திக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

    ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்ட ஒருவன் அழகான பெண்களை வேட்டையாடும் திரில்லர் கதை. இப்படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருந்தது. இப்படி ஆக்‌ஷன் கலந்த சூப்பர் திரில்லரை தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திருக்கவே இல்லை. ஊமை விழிகள் சூப்பர் ஹிட் அடிக்கவே இப்படத்தின் தொடர்ச்சி போல ‘மூங்கில் கோட்டை’ என்கிற படம் உருவானது.

    அரவிந்தராஜ் இயக்கிய இப்படத்திலும் விஜயகாந்த் நடித்திருந்தார். சுமார் 70 ஆயிரம் அடி பிலிம் சூட் செய்த நிலையில் இப்படம் அப்படியே நிறுத்தப்பட்டது. இதே டீம் அப்படியே ‘உழவன் மகன்’ படத்தில் இணைந்ததால் மூங்கில் கோட்டை படம் டிராப் ஆனது. அதன்பின் அதை அப்படியே விட்டுவிட்டார்கள்.

    சமீபத்தில் விஜயகாந்த் உடநலக்குறைவால் காலமானார். இந்நிலையில், இந்த படத்தை ரிலீஸ் செய்யும் வேலையில் அரவிந்தராஜ் இறங்கியுள்ளார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘மூங்கில் கோட்டை படத்தில் இன்னும் எடுக்கப்படாத காட்சிகளில் ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயகாந்தை கொண்டு வந்து எடுக்க திட்டமிட்டிருக்கிறேன். அது சாத்தியம்தான். அதேபோல், இந்த படத்திற்கு பின் முழுக்க முழுக்க ஏஜிங் தொழில்நுட்பத்தில் ஒரு முழு விஜயகாந்த் படத்தை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறேன்’ என சொன்னார்.

    இதையும் படிங்க: கே. ராஜனிடம் கோபப்பட்டு கத்திய விஜயகாந்த்!.. அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்!…

  • குழந்தைக்காக ஷூட்டிங்கை நிறுத்திய விஜயகாந்த்!.. நடிகர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்..

    Vijayakanth: நடிகர் விஜயகாந்த் ஒரு நடிகராக மட்டும் இருந்திருந்தால் இந்த அளவுக்கு புகழ் அடைந்திருக்க மாட்டார். சினிமா துவங்கியது முதல் எத்தனையோ நடிகர்களை இந்த திரையுலகமும், ரசிகர்களும் பார்த்திருக்கிறார்கள். ஆனால், எல்லோர் மனதிலும் சிம்மாசனம் போட்டு எத்தனை பேர் அமர்ந்தார்கள் என்பதுதான் வரலாறு.

    அப்படி பார்த்தால் எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பின் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் விஜயகாந்த் என்றே சொல்லலாம். அதற்கு காரணம் பாகுபாடு பார்க்காமல் எல்லோரிடமும் பழகிய விதம், சக மனிதனுக்காக துடிக்கும் அந்த மனசு, தன் முன்னால் யாரும் பசியோடு இருக்கக் கூடாது, யாரும் அவமானப்படக்கூடாது என நினைக்கும் அந்த உயர்ந்த எண்ணம், மற்றவர்களுக்கு உதவும் குணம், எல்லோரிடமும் சகஜமாக, எளிமையாக பேசும் அவரின் சுபாவம் ஆகியவைத்தான்.

    இதையும் படிங்க: கே. ராஜனிடம் கோபப்பட்டு கத்திய விஜயகாந்த்!.. அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்!…

    கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் ஆக்டிவாக இல்லாமல் இருந்து வந்தார். அதோடு, பேச முடியாமலும், நடக்க முடியாமலும் இருந்து வந்தார். சில சமயம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட உணர முடியாமலும் இருந்தார்.

    கடந்த 28ம் தேதி அவர் மறைந்தார். அவர் இறந்தபின்னர் திரையுலகை சேர்ந்த பலரும் அவருடன் பணிபுரிந்த அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். சத்ரியன், ஏழை ஜாதி ஆகிய படங்களில் அவருடன் நடித்த வின்சண்ட் ராய் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ஏழை ஜாதி படத்தில் ஒரு காட்சியில் சைதாப்பேட்டை பாலத்தை அவர் கடந்து செல்வது போல காட்சி. அது மதிய வெயில் நேரம். அப்போது ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே படப்பிடிப்பை நிறுத்த சொன்னார். விசாரித்ததில் அது ஒரு துணை நடிகையின் குழந்தை. அந்த பெண்ணை அழைத்து ‘வெயில்ல எதுக்குமா குழந்தையோடு வந்தீங்க?’ என கேட்டார்.

    இதையும் படிங்க: இதுவும் திருட்டு ஆடு தானா!.. ஓடிடியில் இருந்து உருவிட்டாராம் வெங்கட் பிரபு!.. விஜய் படம் இவரோட கதையா?

    350 கொடுப்பதாக சொன்னார்கள் அதனால் வந்தேன் சார் என அப்பெண் சொல்ல, உடனே புரடெக்‌ஷன் மேனேஜரை அழைத்து ‘இந்த பொண்ணுக்கு தினமும் 1000 ரூபாய் கொடுங்கள்’ என்றார். மேலும் அவரின் கைப்பையில் இருந்த பையில் இருந்த பிஸ்கட், ஜூஸ் ஆகியவற்றை அந்த பெண்ணுக்கு கொடுக்க சொன்னார். இந்த அம்மாவ நிழல் இருக்க இடமா பாத்து தங்க வை’ என சொல்ல்விட்டு படப்பிடிப்பை மீண்டும் நடத்த சொன்னார்.

    viincent

    படப்பிடிப்பின்போது துணை நடிகர்கள், நடிகைகள் என யாருக்கேனும் பிரச்சனை எனில் உடனே படப்பிடிப்பை நிறுத்திவிடுவார். அவர்களின் பிரச்சனையை சரி செய்த பின்னரே மீண்டும் நடிப்பார். சினிமாவில் எந்த நடிகரும் இப்படி இருக்க மாட்டார்கள்’ என வின்செண்ட் ராய் கூறியிருந்தார்.