Author: சிவா

  • விஜயகாந்துக்கு சொன்ன கதையில் நடித்த அஜித்!.. அவர் மட்டும் நடிச்சிருந்தா கன்பார்ம் ஹிட்டு…

    Vijayakanth: சினிமா உலகை பொறுத்தவரை ஒரு நடிகருக்கு சொல்லப்பட்ட கதையில் மற்றொரு நடிகர் நடிப்பது எனவும் மிகவும் சாதாரணமாக நிகழும். ஒரு இயக்குனர் ஒரு கதையை உருவாக்குவார். அந்த கதையை அவர் பல நடிகர்களிடம் சொல்வார். சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு கதை பிடிக்காது. அதுவும் அறிமுக இயக்குனர் எனில் அவரை நம்ப மாட்டார்கள்.

    கதை நன்றாக இருக்கிறது என சில நடிகர் சொன்னாலும் சில வருடங்கள் காத்திருக்க சொல்வார்கள். சில நடிகர்கள் கதையை தனக்கு பிடித்தது போல மாற்ற சொல்வார்கள். இதையெல்லாம் மீறித்தான் ஒரு இயக்குனர் இங்கே உருவாகிறார். ரஜினிக்கு சொன்ன கதையில் கமலும், கமலுக்கு சொன்ன கதையில் பார்த்திபனும், அஜித்துக்கு சொல்லப்பட்ட கதையில் சூர்யாவும், சூர்யாவுக்கு சொல்லப்பட்ட கதையில் அருண்விஜயும் நடிப்பார்கள்.

    இதையும் படிங்க: விஜயகாந்தின் பட வாய்ப்பை தட்டி பறிக்க நினைத்த நடிகர்!.. அது மட்டும் நடந்திருந்தா!…

    இது பல வருடங்களாக நடப்பதுதான். பல நடிகர்கள் நல்ல கதைகளை மிஸ் செய்வார்கள். ஆட்டோகிராப் கதையை எழுதிய சேரன் விஜய், சூர்யா என பலரிடமும் அந்த கதையை சொன்னார். யாரும் நடிக்கமுன்வரவில்லை. எனவேதான், அவரே அப்படத்தில் நடித்தார். இப்படி சில இயக்குனர்களே நடிகராக மாறிவிடுவார்கள்.

    சரவண சுப்பையா இயக்கத்தில் அஜித் நடித்து 2001ம் வருடம் வெளியான படம்தான் ‘சிட்டிசன்’. இந்த கதையை இயக்குனர் பலரிடம் சொல்லி இருக்கிறார். விஜயகாந்திடமும் இந்த கதையை அவர் சொல்லி இருக்கிறார். கதையை கேட்ட விஜயகாந்த் ‘கதையை நன்றாக சொல்கிறீர்கள். இதை அப்படியே எடுத்தாலே படம் நன்றாக வரும். இப்படத்தில் பல கெட்டப்புகள் இருக்கிறது. எனக்கு அதெல்லாம் செட் ஆகாது. ஏனெனில் என்னுடையது கருப்பு தோல். பார்ப்போம்’ என சொல்லி அனுப்பிவிட்டார்.

    இதையும் படிங்க: கலைஞர் 100 விழாவை டீலில் விடும் நடிகர்கள்!.. முழிபிதுங்கும் திரையுலகம்!. இதெல்லாம் தேவையா பாஸ்!..

    அதேபோல், இந்த கதையை கேட்ட கமல் ‘நன்றாக இருக்கிறது. ஆனால், நான் இப்போது ஹேராம் படத்தில் நடித்து வருகிறேன். இப்படம் முடிந்து நான் இதிலிருந்து வெளியே வரவே 2 வருடங்கள் ஆகிவிடும்’ என சொல்லிவிட்டார். அதன்பின்னர்தான் இந்த கதையை அஜித்திடம் சொன்னார் சரவண சுப்பையா. அஜித்துக்கு இந்த கதை பிடித்துப்போக இப்படம் டேக்ஆப் ஆனது.

    citizen

    ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அஜித்தின் கெட்டப்புகள் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகி சொதப்பிவிட்டது. இந்த கதையில் ஒரே கெட்டப்பில் விஜயகாந்த் நடித்திருந்தால் இப்படம் சூப்பர் ஹிட் அடித்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இதையும் படிங்க: உனக்கு 24 எனக்கு 44.. பிரேம்ஜியின் கல்யாணம் உண்மை தானாம்… பலருக்கு ஹார்ட் அட்டாக் கன்பார்ம்!..

  • விஜயகாந்தின் பட வாய்ப்பை தட்டி பறிக்க நினைத்த நடிகர்!.. அது மட்டும் நடந்திருந்தா!…

    Vijayakanth: பொதுவாக எல்லா துறைகளிலும் போட்டி, பொறமைகள் இருந்தாலும் திரையுலகில் அது மிகவும் அதிகம். சினிமா பின்னணி இல்லாமல் வரும் நடிகர்களை வளரவே விடமாட்டார்கள். எந்த அளவுக்கு முட்டுக்கட்டை போட முடியுமோ போடுவார்கள். அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அது எல்லாவற்றையும் செய்வார்கள்.

    ஏனெனில், பிரபலமான சினிமா நடிகர் எனில் பணம், புகழ் என இரண்டும் கிடைக்கும். அதற்காகத்தான் சினிமாத்துறையில் நீடிக்க பலரும் போராடி வருகிறார்கள். வாய்ப்பு கிடைத்து சில படங்களில் நடித்தாலும் நல்ல மனிதர்களின் ஆதரவு இல்லாமல் சினிமாவில் வளர முடியாது. அஜித், விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றவர்களெல்லாம் இப்படி மற்றவர்களால் வளர்ந்தவர்கள்தான்.

    இதையும் படிங்க: கலைஞர் 100 விழாவை டீலில் விடும் நடிகர்கள்!.. முழிபிதுங்கும் திரையுலகம்!. இதெல்லாம் தேவையா பாஸ்!..

    விஜயகாந்த் சினிமாவில் நடிக்க முயற்சி எடுத்தபோது அவர் சந்திக்காத அவமானம் இல்லை. பலவகைகளிலும் அவரை அசிங்கப்படுத்தினார்கள். குறிப்பாக நிறத்தை காட்டியே பலரும் இழிவு படுத்தினர். ஒரு சில படங்களில் நடித்த பின்னரும் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

    vijayakanth

    விஜயகாந்தை ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்து ஒரிரு நாள் மட்டும் நடிக்க வைத்துவிட்டு ‘அவருக்கு நடிப்பு வரவில்லை’ என சொல்லி படத்திலிருந்து அவரை தூக்கினார்கள். சரிதா போன்ற சில நடிகைகளிடம் சென்று ‘உங்களுடன் நடிக்கமாட்டேன் என விஜயகாந்த் சொல்லி விட்டார்’ என சொல்லிவிட்டனர். எனவே, அவர்களும் விஜயகாந்துடன் நடிக்க மறுத்தனர். இந்த சதியெல்லாம் பின்னர்தான் விஜயகாந்துக்கே தெரியவந்தது.

    இதையும் படிங்க: பலகோடி மதிப்புள்ள சொத்தை ஏழைகளுக்கு தானமாக கொடுத்த விஜயகாந்த்!.. அந்த மனசுதான் கடவுள்!..

    விஜயகாந்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்திய திரைப்படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. இப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். இந்த பட வேலைகள் துவங்கியதும் ஒரு தலை ராகம் படத்தில் நடித்த நடிகர் ‘இந்த படத்தில் நான்தான் நடிப்பேன்’ என சொல்லியிருகிறார். ஆனால், ஒரு தமிழன்தான் இப்படத்தில் நடிக்க வேண்டும் என இப்படத்தின் தயாரிப்பாளர் சொல்லிவிட விஜயகாந்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இதை விஜயகாந்தே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

    இப்படி பல தடைகளை தாண்டித்தான் விஜயகாந்த் சினிமாவில் முன்னேறி வந்தார். அவர் பெரிய ஹீரோ ஆனபின் பல தயாரிப்பாளர்களும் அவரை தேடி வந்தனர். அவருடன் நடிக்க மாட்டேன் என சொன்ன நடிகைகளும் அவருடன் நடிக்க ஆசைப்பட்டனர் என்பதுதான் சினிமா வரலாறு.

    இதையும் படிங்க: குழந்தைக்காக ஷூட்டிங்கை நிறுத்திய விஜயகாந்த்!.. நடிகர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்..

  • கலைஞர் 100 விழாவை டீலில் விடும் நடிகர்கள்!.. முழிபிதுங்கும் திரையுலகம்!. இதெல்லாம் தேவையா பாஸ்!..

    kalaignar 100: பொதுவாக ஆளும் கட்சியை குஷிப்படுத்துவதற்காக அவ்வப்போது சில விழாக்களை தமிழ் சினிமா உலகினர் நடத்துவார்கள். எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அதற்கு ஆதரவாக செயல்படுவதுபோல் காட்டிக்கொண்டால் அரசிமிடருந்து திரைத்துறைக்கு நன்மை கிடைக்கும் என்கிற பொதுநலமும் அதற்கு காரணம் என்பதால் அதை வரவேற்கலாம்.

    இதற்கு முன் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என நடத்தினார்கள். அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும் அவரை பாராட்டி விழா எடுத்தார்கள். இது அவ்வப்போது நடக்கும். இந்த விழாவில் ரஜினி, கமல் முதல் பல நடிகர்களும் கலந்து கொள்வார்கள். கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என நெருக்கடியும் நடிகர்களுக்கு இருக்கும்.

    இதையும் படிங்க: விஷாலின் மன உளைச்சலை போக்குமா ‘இந்தியன் 2’ படம்? எப்படியெல்லாம் கணக்குப் போடுறாரு புரட்சித்தளபதி?

    இதுபோன்ற ஒரு விழாவில்தான் கலைஞர் முன்னிலையிலேயே கட்டாயப்படுத்தி விழாவுக்கு வரவைக்கிறார்கள் என ஓப்பான பேசி அதிரவைத்தார் அஜித். அதேபோல், இதுபோன்ற விழாக்களில் நடிகர், நடிகைகள் இணைந்து கலை நிகழ்ச்சி நடத்துவார்கள். நாடகம், நடனம், காமெடி நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெறும்.

    நிகழ்ச்சி துவங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பிருந்தே இதற்காக நடிகர், நடிகைகள் ஒத்திகை பார்ப்பார்கள். இந்தமுறை திமுக ஆட்சியில் இருப்பதால் கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்துவது என இயக்குனர் சங்கரும், தயாரிப்பாளர் சங்கமும் முடிவெடுத்துள்ளது. இந்நிகழ்ச்சி வருகிற 6ம் தேதி மாலை 6 மணிக்கு கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஆனால், நடிகர்களிடமிருந்து சரியான ஒத்துழைப்பு இல்லை என சொல்லப்படுகிறது.

    இதையும் படிங்க: ஆதிக் படத்தில் ராசி நம்பரில் சம்பளம் வாங்கிய அஜித்.. இதுலைலாம் தெளிவா தான் இருக்கீங்க!..

    ரஜினி, கமல் இருவரும் வாக்குறுதி கொடுத்தாலும் அஜித், விஜய் ஆகியோரின் கதை தெரியவில்லை. எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத அஜித் இதில் கலந்துகொள்வாரா என்பது தெரியவில்லை. அதேபோல், இந்த நிகழ்ச்சியில் நடனமாட ஒப்புக்கொண்ட கார்த்திக் கவுதம், அதர்வா போன்ற சில நடிகர்கள் ‘சாரி எனக்கு ஷூட்டிங் இருக்கு’ என சொல்லி மழுப்பி வருகிறார்களாம்.

    ஒருபக்கம், புதுவருடத்தை கொண்டாட வெளிநாடுகளுக்கு சென்ற சூர்யா, விஷால், தனுஷ், சிம்பு, கார்த்தி போன்ற பல நடிகர்கள் எப்போதும் சென்னை திரும்புவார்கள் என்றே தெரியவில்லை. எனவே, திட்டமிட்டபடி இந்நிகழ்ச்சி சிறப்பாக நடக்குமா என இயக்குனர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் முழிபிதுங்கி வருகிறது.

    இதையும் படிங்க: உனக்கு 24 எனக்கு 44.. பிரேம்ஜியின் கல்யாணம் உண்மை தானாம்… பலருக்கு ஹார்ட் அட்டாக் கன்பார்ம்!..

  • க்யூட்னஸ் சும்மா அள்ளுது!.. பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்

    Kaavya arivumani: சென்னையை சேர்ந்த காவ்யாவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், சின்ன பெண்ணாக இருந்ததால் அவரால் சினிமாவில் நுழைய முடியவில்லை. எனவே, சீரியல் பக்கம் வாய்ப்பு தேடினார். அப்படித்தான் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

    kaavya

    அதன்பின் சின்னத்திரை சீரியல் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதற்கு முன் அந்த வேடத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொள்ளவே அந்த வேடம் இவருக்கு கிடைத்தது.

    kaavya

    ஒருபக்கம், மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள காவ்யா கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக சில எபிசோட்களில் நடித்த காவ்யா திடீரென அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்., சினிமாவில் வாய்ப்பு தேடுவதற்காக அவர் சீரியலை விட்டுவிட்டதாக சொல்லப்பட்டது.

    kaavya

    ஆனால், அவர் நினைத்தபடி சினிமாவில் வாய்ப்புகள் இதுவரை அமையவில்லை. சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. எனவே, எப்படியாவது தனது அழகை காட்டி வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருகிறார். அதாவது, கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.

    kaavya

    இந்நிலையில், சுடிதாரில் க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் எக்கச்சக்க லைக்ஸ்களை பெற்று வருகிறது.

    kaavya

  • விஜயகாந்தின் இமேஜை மொத்தமாக மாற்றிய திரைப்படம்!.. அது மட்டும் நடக்கலன்னா!.,.

    Vijayakanth: மதுரையை சேர்ந்த விஜயராஜுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. சொந்தமான ரைஸ் மில் இருந்தும் அந்த தொழிலை விட்டுவிட்டு சென்னை வந்து வாய்ப்பு வாய்ப்பு தேடினார். பல அவமானங்களையும் சந்தித்தார். விதவிதமாக போஸ் கொடுத்து அந்த போட்டோக்களை வைத்து சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கினார்.

    வாய்ப்பு அவருக்கு சுலபமாக கிடைத்துவிடவில்லை. சென்ற இடமெல்லாம் அவமானம்தான் மிஞ்சியது. ஒருவழியாக இனிக்கும் இளமை என்கிற படத்தில் வாய்ப்பு கிடைக்க, அடுத்த சாட்சி என்கிற படத்திலும் நடித்தார். அந்த படங்களில் அவர் விஜயகாந்தாக மாறியிருந்தார். அந்த படங்களை வைத்து வாய்ப்பு தேடினார். ஒன்றும் கிடைக்கவில்லை.

    இதையும் படிங்க: விஜயகாந்த் சாப்பாடுதான போட்டு இருக்காருனு யோசிச்சீங்கனா இத படிங்க.. சிலிர்க்கும்!..

    விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான சட்டம் ஒரு இருட்டறை படத்தின் வெற்றிதான் அவருக்கு வாய்புகளை பெற்று தந்தது. ஆனால், சரியான கதைகளை தேர்ந்தெடுக்க நடிக்க முடியாமல் தடுமாறி தொடர் தோல்விப்படங்களை கொடுத்தார். ஒருகட்டத்தில் சினிமா புரிந்து, ரசிகர்களுக்கு எது பிடிக்கும் என தெரிந்து நடிக்க துவங்கினார்.

    vijayakanth

    விஜயகாந்த் என்றாலே கோபமான ஒரு இளைஞர் கதாபாத்திரம் என்பதுதான் அவரின் இமேஜாக இருந்தது. எல்லா படங்களிலும் அப்படித்தான் நடித்தார். கடைசிவரைக்கும் கூட அவர் கோபக்கார மனிதராகத்தான் திரைப்படங்களில் நடித்தார். கோபமாக முகத்தை வைத்துகொண்டு வசனம் பேசுவார். அதுவே அவரின் ஸ்டைலாகி போனது. ஆனால், சில படங்களில் காமெடி காட்சிகளிலும் நடித்திருக்கிறார். அதற்கெல்லாம் விதை போட்டது ஒரு படம்தான்.

    இதையும் படிங்க: பலகோடி மதிப்புள்ள சொத்தை ஏழைகளுக்கு தானமாக கொடுத்த விஜயகாந்த்!.. அந்த மனசுதான் கடவுள்!..

    அதுதான் ‘நானே ராஜா நானே மந்திரி’ திரைப்படம். இந்த படம் காமெடி கலந்த ஒரு ரொமாண்டிக் கதையுடன் வெளிவந்தது. கவுண்டமணி, செந்திலுடன் சேர்ந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார் விஜயகாந்த். அதிலும், வேலைக்கு ஆள் எடுக்கும் அந்த இண்டர்வியூ காட்சியில் விஜயகாந்த் அதகளம் செய்திருப்பார். மேலும், எழுத படிக்க தெரியாத ஒரு இன்னசண்டான ஒரு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார்.

    vijayakanth
    vijayakanth

    இந்த படம்தான் விஜயகாந்தின் Angry young man என்கிற இமேஜை மாற்றியது. பின்னாளின் பல திரைப்படங்களில் அவர் காமெடி காட்சிகள் நடித்ததற்கு விதை போட்டது நானே ராஜா நானே மந்திரி திரைப்படம்தான். விஜயகாந்தை அப்படி மாற்றியது கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம்தான். இப்படத்தை பாலு ஆனந்த் இயக்கியிருந்தார்.

    இதையும் படிங்க: குழந்தைக்காக ஷூட்டிங்கை நிறுத்திய விஜயகாந்த்!.. நடிகர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்..

  • நடிகரின் காலில் விழுந்த எம்.ஜி.ஆர்!.. அதற்கான காரணம் இதுதான்!.. ஒரு ஆச்சர்ய தகவல்…

    MGR: சிறு வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கி அப்படியே சினிமாவுக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். நடிகர் சிவாஜியும் அப்படித்தான். ஆனால், அவரை போல முதல் படத்திலேயே ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு எம்.ஜி.ஆருக்கு அமையவில்லை. 1937ம் வருடம் வெளிவந்த சதிலீலாவதி படத்தில் எம்.ஜி.ஆர் ஒரு சின்ன வேடத்தில் அறிமுகமானார்.

    அதன்பின் கிட்டத்தட்ட 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவிட்டு 1947ம் வருடம் வெளிவந்த ராஜகுமாரி படத்தில்தான் ஹீரோவாக நடிக்க துவங்கினார். அதன்பின் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேல் தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத சக்தியாகவும், ஆளுமையாகவும் எம்.ஜி.ஆர் இருந்தார்.

    இதையும் படிங்க: பத்மினியிடம் பளாரென அறை வாங்கிய சிவாஜி!.. எம்.ஜி.ஆர் அடித்த கமெண்ட்டுதான் ஹைலைட்

    எம்.ஜி.ஆர் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தபோது எம்.கே.தியாகராஜ பகவதார், டி.ஆர். மகாலிங்கம், எம்.கே.ராதா, ரஞ்சன், கே.ஆர்.ராமசாமி என பல நடிகர்களும் நடித்து வந்தனர். எனவே, அவர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர்தான் எம்.ஜி.ஆர்.

    ஒருமுறை தியாகராஜ பகவாதர் ஹீரோவாக நடித்த அசோக்குமார் என்கிற படத்தில் மன்னனின் உத்தரவுபடி பகவாதரின் கண்களை கம்பியால் குத்தி எம்.ஜி.ஆர் குருடாக்குவது போல் காட்சி. ஆனால், அருகில் சென்ற எம்.ஜி.ஆர் அப்படி நடிக்க முடியாமல் கண்கலங்கி நின்றார். என்னால் அப்படி நடிக்க முடியாது எனவும் சொல்லிவிட்டார். அதன்பின் பகவாதரே அந்த கம்பியை பிடிங்க தனது கண்ணில் குத்தி கொள்வது போல காட்சியை மாற்றி எடுத்தனர்.

    இதையும் படிங்க: எனக்கு ஒன்னும் தர மாட்டீங்களா?!.. எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய ஒரே பரிசு அதுதான்!..

    இதுதான் சீனியர் நடிர்களுக்கு எம்.ஜி.ஆர் எப்படி மரியாதை கொடுப்பார் என்பதற்கு பெரிய உதாரணம். எம்.கே.ராதா என்றொரு நடிகர் இருந்தார். எம்.ஜி.ஆர் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமான சதிலீலாவதி படத்தின் ஹீரோ அவர். பல திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். பெரும்புகழ் பெற்ற சந்திரலேகா படத்திலும் இவர் நடித்திருந்தார்.

    mgr

     

    பின்னாளில் எம்.ஜி.ஆர் பெரிய ஹீரோ ஆனபின்னரும் எம்.கே.ராதாவை ‘அண்ணன்’ என எல்லா அழைத்து மரியாதை கொடுத்துவந்தார். ஒருமுறை ஒரு பொது மேடையில் எம்.கே.ராதாவின் காலில் விழுந்து வணங்கினார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் காலில் விழுந்து வணங்கிய நபர்கள் மிகவும் குறைவு. அதில் ஒருவர் எம்.கே.ராதா என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ரசிகர்களுக்காக படத்தில் பாடலை தள்ளி வைத்த எம்.ஜி.ஆர்!.. அட இப்படியும் ஒரு நடிகரா?!…

  • இயக்குனருடன் போட்ட சண்டை… ஜனகராஜை கமல் ஒதுக்கியதற்கு காரணம் இதுதானாம்!..

    80,90களில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ஜனகராஜ். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் என அப்போதையை முன்னணி நடிகர்கள் பலரின் படங்களிலும் ஜனகராஜ் இருப்பார். இயக்குனர்கள் கதையை எழுதும்போதே ஜனகராஜுக்கு ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி விடுவார்கள்.

    அந்த அளவுக்கு தனது குரல், நடிப்பு மற்றும் உடல் மொழியால் ரசிகர்களை கவர்ந்துவிடுவார் ஜனகராஜ். ரஜினியின் பல திரைப்படங்களில் ஜனகராஜ் நடித்திருக்கிறார். பணக்காரன் படத்தில் ரஜினியின் நண்பராக வந்து சிரிக்கவைத்தார். மேலும், பாண்டியன், ராஜாதி ராஜா, அண்ணாமலை, அருணாச்சலம், பாட்ஷா, வீரா என பல படங்களிலும் ஜனகராஜை பார்க்கலாம்.

    இதையும் படிங்க: நான்லாம் உலக நாயகன் இல்ல!.. அவங்கதான்!.. கமல்ஹாசன் பட்டியலிட்ட திரை பிரபலங்கள்!..

    இதில் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் கலக்கி இருப்பார். அதேபோல், ஒருபக்கம் 90களில் கமலின் பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் ஜனகராஜ் நடித்திருக்கிறார். இதற்கு நாயகன் படமே மிகப்பெரிய சாட்சி. அந்த படத்தில் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக கலக்கி இருப்பார்.

    janagaraj

    அதேபோல், அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசன் செய்யும் கொலைகளை துப்பறியும் போலீஸ் அதிகாரியாக வந்து சிரிக்க வைத்திருந்தார். குணா படத்தில் அவர் செய்த வேடம் அசத்தலாக இருக்கும். ஆனால், அதன்பின் அவர் கமலின் படங்களில் நடிக்கவில்லை. இதுபற்றி யாரும் பெரிதாக யோசிக்கவும் இல்லை. ஆனால், அதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது.

    குணா படத்தை இயக்கியது கமலின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான சந்தானபாரதி. இந்த படத்தின் டப்பிங்கின் போது ஜனகராஜ் அவர் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசினார். ஆனால், ‘இது நல்லா இல்ல.. மறுபடியும் பேசு’ என சந்தானபாரதி சொல்ல, ஜனகராஜ் மீண்டும் பேசினார். ‘இதுவும் நல்லா இல்ல.. மறுபடியும் பேசு’ என சந்தானபாரதி மீண்டும் மீண்டும் சொல்ல ஜனகராஜுக்கு கோபம் வந்துவிட்டது. இருவரும் விளையாட்டாக பேசியது சண்டையாக மாறிவிட்டது.

    இதையும் படிங்க: தேவர் மகனில் சிவாஜிக்கு பதில் அவர்.. ரேவதிக்கு பதில் இன்னொரு நடிகை!.. கடைசியில் கமல் செய்த மாற்றம்!..

    அவர் ஒன்று சொல்ல, இயக்குனர் ஒன்று சொல்ல அந்த அறையிலிருந்து ஜனகராஜ் வெளியே வந்துவிட்டார். தொடர்ந்து அவரிடம் வந்து சந்தானபாரதி சண்டை போட அது கைகலப்பாக மாறிவிட்டது. இது கேள்விப்பட்ட பின்னர்தான் கமல் தனது படங்களில் ஜனகராஜ் நடிப்பதை விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.

    santhana
    santhana

    ஜனகராஜிடம் ஒரு பழக்கம் உண்டு. அவர் நடிப்பது நன்றாக இல்லை என இயக்குனர் சொன்னால் மீண்டும் நடித்து காட்டுவார். ‘சரியில்லை’ என தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தால் மிகவும் கோபப்படுவார். பலமுறை படப்பிடிப்பு தளங்களில் இயக்குனர்களிடம் அவர் சண்டை போட்டிருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ‘ஆளவந்தான்’ பட விஷயத்தில் கமலை திட்டிய தாணு! ஆனா நடந்த சம்பவமே வேற!.. இது தெரியாம போச்சே!..

  • நான்லாம் உலக நாயகன் இல்ல!.. அவங்கதான்!.. கமல்ஹாசன் பட்டியலிட்ட திரை பிரபலங்கள்!..

    Kamalhaasan: 5 வயது முதல் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். முதல் படமே ஏவிஎம் தயாரிப்பில் ஜெமினி கணேசன் – சாவித்ரியின் மகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் அளவுக்கு அதிர்ஷ்டசாலியாக இருந்தார். சினிமாவில் அதிர்ஷடம் என்பது எல்லோருக்கும் சரியாக அமையாது. அது கமலுலுக்கு அமைந்தது. இதை அவரே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார்.

    என்னை சுற்றி அனுபவம் வாய்ந்தவர்களும், திறமைசாலிகளும் இருந்தனர். சிவாஜி ஐயா, ஜெமினி கணேசன் ஐயா, சாவித்ரி, நாகேஷ் போன்ற நடிகர்களின் மடியில் அமர்ந்து விளையாடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. திறமையான இயக்குனர்கள் என் நட்பு வட்டாரத்தில் இருந்தனர். பாலச்சந்தர் என்னை வளர்த்தெடுத்தார். இவர்களால்தான் நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன் என அவர் பேசியிருக்கிறார்.

    இதையும் படிங்க: இப்போ விஜயகாந்த்..? கமல் தப்பினார்.. அடுத்த குறி உங்களுக்கா..? உதயநிதியிடம் பகீர் கிளப்பும் பிரபல இயக்குனர்..!

    அதேநேரம், கமல் தனது தனித்தன்மையால் மற்ற நடிகர்களிடமிருந்து வேறுபட்டிருந்தார். 4 பாட்டு, 3 சண்டை, செண்டிமெண்ட், காமெடி என வெற்றிக்கு தேவையான விஷயங்கள் மட்டுமே இருக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடிக்கவேண்டும் என்பதை ரஜினி உள்ளிட்ட பல நடிகர்கள் பின்பற்றியபோது நல்ல கதைகள், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம், ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் என வேறு மாதிரி யோசித்தவர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்த வேண்டும் என்கிற தாகம் அவருக்கு நிரந்தரமாக இருக்கிறது.

    kamal

    அதனால்தான் பேசும் படம், ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், மகாநதி, குருதிப்புனல், குணா, விருமாண்டி, விஸ்வரூபம், தசாவதாரம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களுக்கு கிடைத்தது. அதனால்தான் ரசிகர்கள் அவரை உலக நாயகன் என்றும் அழைத்தனர். ஆனால், தன்னை அவர் அப்படி நினைப்பது இல்லை என்பது பலருக்கும் தெரியாது.

    இதையும் படிங்க: தேவர் மகனில் சிவாஜிக்கு பதில் அவர்.. ரேவதிக்கு பதில் இன்னொரு நடிகை!.. கடைசியில் கமல் செய்த மாற்றம்!..

    இதுபற்றி அவருடன் நடித்த நடிகர் இளவரசு சொல்லிய போது ‘பாபநாசம் படத்தில் நடித்தபோது, கமல் அப்படியே நடந்து கொண்டிருந்தார். திடீரென ‘என்ன உலகநாயகன்?.. வைகை அணைல தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருந்துட்டு, திடீர்னு ஆர்மோனியத்தை வாசிச்சி இசையை அதுல அடக்குனான் பாருங்க(இளையரஜா).. அவன்தான் உலகநாயகன்.. எங்கையோ தேனில மலேரியாவுக்கு ஊசி போடுற ஒருத்தன் சென்னை வந்து பெரிய டைரக்டரா மாறி சினிமாவையே மாத்துனான் பாருங்க(பாரதிராஜா).. அவன்தான் உலகநாயகன்..

    ilayaraja

    எங்கயோ பெங்களூர்ல பஸ் கண்டக்டரா இருந்த ஒருத்தன் சென்னை வந்து சினிமாவுல நடிச்சி சூப்பர்ஸ்டாரா மாறினான் பாருங்க.. அவன்தான் உலகநாயகன். இதெல்லாம்தான் சாதனை. என்னை உலக நாயகன்னு சொல்றாங்க.. ஆனா நான் சினிமாவுல ஜெயிச்சது பெரிய விஷயமே இல்ல’ என சொன்னார். கமல் தன்னை இப்படித்தான் புரிந்து வைத்திருக்கிறார்’ என இளவரசு சொல்லியிருந்தார்.

    இதையும் படிங்க: ரசிகர்களை மொத்தமா ஏமாற்றிய கமல் – மணிரத்னம்!. நல்லா சிறப்பா செஞ்சிட்டாங்கப்பா?..

  • எம்.ஜி.ஆர் மீது வந்த கோபத்தில் அதிரடி முடிவெடுத்த சின்னப்ப தேவர்!.. உருவான சூப்பர் ஹிட் படம்…

    Actor ranjan: எம்.ஜி.ஆரும், சின்னப்ப தேவரும் சிறுவயது முதலே நண்பர்கள். எம்.ஜி.ஆர் சிறுவயதாக இருக்கும்போது நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது அவரின் குடும்பம் வறுமையில் வாடியது. அப்போதெல்லாம் அவரின் வீட்டுக்கு சின்னப்ப தேவர் அரிசியை கொண்டு வந்து கொடுப்பாராம். அதனால்தான், எம்.ஜி.ஆர் பின்னாளில் பெரிய ஹீரோ ஆனபின் அவரின் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் மட்டும் 16 படங்களில் நடித்தார்.

    மேலும், தேவர் பிலிம்ஸ் படங்களில் சிங்கம், புலி ஆகியவைகளும் முக்கிய காட்சிகளில் நடிக்கும். எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது விபூதியை அள்ளிக்கொண்டு போய் எம்.ஜி.ஆரின் நெற்றியில் பூசிவிட்டு ‘உனக்கு ஒன்னும் ஆகாது முருகா’ என சொன்னவர்தான் தேவர். தேவர் ஒரு தீவிர முருக பக்தர்.

    இதையும் படிங்க: பத்மினியிடம் பளாரென அறை வாங்கிய சிவாஜி!.. எம்.ஜி.ஆர் அடித்த கமெண்ட்டுதான் ஹைலைட்

    சில சமயம் எம்.ஜி.ஆருடன் சண்டையும் போடுவார் தேவர். எம்.ஜி.ஆருக்கு முன்பே பிரபல ஹீரோவாக இருந்த ரஞ்சன் எம்.ஜி.ஆரின் வரவுக்கு பின் ஹிந்தி சினிமா பக்கம் போய்விட்டார். மலைக்கள்ளன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆங்கில படத்திற்கு இணையாக, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு ஒரு ராபின் ஹூட் வகையான படத்தை எடுக்க வேண்டும் என தேவர் ஆசைப்பட்டார்.

    MGR and Chinnappa Thevar
    MGR and Chinnappa Thevar

    அப்படித்தான் நீலமலைத் திருடன் படம் உருவானது. எம்.ஜி.ஆரை நடிக்க வைக்க ஆசைப்பட்டார் தேவர். ஆனால், நாடோடி மன்னன் பட வேலை காரணமாக சில மாதங்கள் காத்திருக்க சொன்ன எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் வளர்ந்துவிட்டதால் தனக்கு கால்ஷீட் கொடுக்க யோசிக்கிறார் என நினைத்த தேவர் பாலிவுட் பக்கம்போய்விட்ட ரஞ்சனை மீண்டும் அழைத்து வந்து நடிக்க வைத்தார்.

    இதையும் படிங்க: எனக்கு ஒன்னும் தர மாட்டீங்களா?!.. எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய ஒரே பரிசு அதுதான்!..

    ஒரு அட்டகாசமான ராபின் ஹுட் ஸ்டைலில் இந்த படம் உருவானது. இப்படத்தில் வழக்கம்போல் மிருகங்களும் நடித்திருந்தது. எம்.ஜி.ஆரை வைத்து என்னென்ன செய்ய வேண்டும் என தேவர் நினைத்தாரோ அது எல்லாவற்றையும் ரஞ்சனை வைத்து செய்தார். படமோ சூப்பர் ஹிட். படத்தின் துவக்க காட்சியில் குதிரையில் வரும் ரஞ்சன் பாடும் ‘சத்தியமே லட்சியமாய் கொள்ளடா’ பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

    neelamalai

    இதனால் தேவர் மீது எம்.ஜி.ஆருக்கு கோபமும் ஏற்பட்டது. ஆனாலும், அதன்பின் அவர்கள் இருவரும் மீண்டும் நண்பர்களாக மாறி பல வெற்றிப்படங்களை கொடுத்தனர்.

  • விஜயகாந்தோடு நடிக்க மறுத்த பிரபல நடிகை!.. வீட்டுக்கே போய் சம்பவம் செய்த கேப்டன்…

    Vijaykanth: 80களில் தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், மோகன் போன்ற சில ஹீரோக்கள் கோலோச்சிக் கொண்டிருந்த போதே அதிரடியாய் நுழைந்தவர்தான் விஜயகாந்த், விஜயராஜ் என்கிற அவரின் பெயர் சினிமாவுக்காக விஜயகாந்த் ஆனது. ஆங்கிலத்தில் Angry young man என சொல்வார்கள். பெரும்பாலான படங்களில் அப்படித்தான் விஜயகாந்த் நடித்தார்.

    மக்களுக்கும் அது பிடித்திருந்தது. இவரின் படங்களில் அநியாயங்களை தட்டி கேட்டும் நபராக வருவார். அதாவது சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற எம்.ஜி.ஆரின் ரூட்டிலும், ரஜினியின் ரூட்டிலும் பயணித்தார். இவரின் படங்களில் சண்டைக்காட்சிகளில் பிரதானமாக இருக்கும் என்பதாலேயே ரசிகர்கள் தியேட்டருக்கு போனார்கள்.

    இதையும் படிங்க: அது உங்க பிரச்சனை!.. என்னால முடியாது!. கறாரா சொன்ன அஜித்?!.. என்னவாகுமோ விடாமுயற்சி!…

    80,90களில் பல சில்வர் ஜூப்ளி படங்களை கொடுத்தவர் இவர். ராதிகா, ராதா, அம்பிகா, ரேகா என பல நடிகைகளுடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். ஆனால், துவக்கத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடிக்க எந்த நடிகையும் முன்வரவில்லை என்பதுதான் நிஜம். இதுபற்றி பேட்டி ஒன்றில் விஜயகாந்த் கூறியது இதுதான்.

    vijayakanth

    சினிமாவில் பல அவமானங்களை சந்தித்திருக்கிறேன். பார்வையின் மறுபக்கம் படப்பிடிப்புக்காக ஊட்டி சென்று காத்து கிடந்தேன்.எனக்கு ஜோடியாக நடிக்கவிருந்த ஸ்ரீபிரியா வரவே இல்லை. விசாரித்ததில், என்னோடெல்லாம் நடிக்க மாட்டேன்னு அவங்க சொன்னதா கேள்விப்பட்டேன். இத ஒருமுறை அவங்ககிட்டயே கேட்டேன். அதேமாதிரி, சரிதாவும் என்னோடு நடிக்கமாட்டேன்னு சொன்னாங்க.

    இதையும் படிங்க: மீண்டும் திரையில் விஜயகாந்த்!.. விரைவில் வெளியாகும் ஊமை விழிகள் 2.. குட் நியூஸ் சொன்ன இயக்குனர்…

    அவங்களோட நான் நடிக்கமாட்டேன்னு சொன்னதா அவங்ககிட்ட யாரோ சொல்லிட்டாங்க. நான் நேரா சரிதா வீட்டுக்குபோனேன். அவங்க அம்மாவும், சகோதரியும் இருந்தாங்க. ’உங்க பொண்ணோட நடிக்கமாட்டேன்னு நான் சொல்லவே இல்லை. மத்தவங்க சொல்றத நம்பாதீங்க. ஏதோ உங்க பொண்ணு கூட நடிச்சாதான் எனக்கு வாழ்க்கைன்னு நினைச்சி இங்க வந்து பேசுறதா நினைக்காதீங்க. கலைஞர்களிடம் உட்பூசல் இருக்கவே கூடாது. அதுக்காகத்தான் வந்தேன்’ அப்டின்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

    saritha1
    saritha1

    ராதிகாவும் அப்படித்தான் என்கூட நடிக்கமாட்டேன்னு சொன்னங்க. ஆனால், அவங்க கூட நடிக்கும்போதுதான் இது அவங்க தப்பு இல்ல. நான் வளரக்கூடாதுன்னு பலபேரு திரைமறை சதிகளை செஞ்சது தெரியவந்தது. சாதாரண பொண்ணுங்களுக்கே எப்பவும் ஒரு பயம் இருக்கும். நடிகைங்களுக்கு அது கண்டிப்பா இருக்கும். எனவே, அவங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்லை. அவமானப்படும்போது எல்லோருக்கும் கோபம் வரும். நாம பஷ்ட கஷ்டத்தை மத்தவங்களும் படணும்கிற எண்ணம் வரும். நல்லவேளையா எனக்கு அப்படி எதுவும் வரல’ என சொல்லியிருந்தார் விஜயகாந்த்.

    இதையும் படிங்க: குழந்தைக்காக ஷூட்டிங்கை நிறுத்திய விஜயகாந்த்!.. நடிகர் சொன்ன நெகிழ்ச்சி சம்பவம்..