Author: sankaran v

  • ரஜினிகாந்துடன் நேரடியாக மோதிய 25 பாக்யராஜ் படங்கள்… ஜெயித்தது யாரு தெரியுமா?

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுடன் 25 முறை நேரடியாக பாக்யராஜ் படங்கள் மோதியுள்ளன. ஜெயித்தது யாருன்னு பார்க்கலாமா…

    நினைத்தாலே இனிக்கும் – புதிய வார்ப்புகள்

    1979 தமிழ்ப்புத்தாண்டு அன்று ரஜினிக்கு நினைத்தாலே இனிக்கும் படமும், பாக்யராஜிக்கு புதிய வார்ப்புகள் படமும் வெளியானது. இதில் ரஜினி, கமல் நடித்த படம் தான் சூப்பர்ஹிட். புதிய வார்ப்புகள் படமும் ஹிட். 22 நாள்களில் எடுக்கப்பட்ட படம் இது. 1979 செப்டம்பரில் பாக்யராஜ் நடித்த கன்னிப்பருவத்திலே படமும், ரஜினியின் ஆறிலிருந்து அறுபது வரை படமும் ரிலீஸானது. இவற்றில் ரஜினி படம் தான் ஹிட்.

    அன்னை ஓர் ஆலயம் – சுவர் இல்லாத சித்திரங்கள்

    1979 அக்டோபரில் ரஜினிக்கு அன்னை ஓர் ஆலயம் படமும், பாக்யராஜிக்கு சுவர் இல்லாத சித்திரங்கள் படமும் ரிலீஸ். இரு படங்களுமே சூப்பர்ஹிட். 1980 ஜூனில் ரஜினிக்கு அன்புக்கு நான் அடிமை படமும், பாக்யராஜிக்கு பாமா ருக்மணி படமும் ரிலீஸ். இதுல ரஜினி படம் தான் ஹிட்.

    காளி – ஒரு கை ஓசை

    1980 ஜூலையில் ரஜினிக்கு காளி படமும், பாக்யராஜிக்கு ஒரு கை ஓசை படமும் ரிலீஸ். இதுல பாக்யராஜ் படம் தான் ஹிட். 1980 தீபாவளிக்கு ரஜினிக்கு பொல்லாதவன் படமும், பாக்யராஜிக்கு குமரிப்பெண்ணின் உள்ளத்திலே படமும் ரிலீஸ். இதுல ரஜினி படம் தான் சூப்பர்ஹிட். ஆரம்பத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய படங்களில் இதுவும் ஒன்று.

    1981 ஜனவரியில் ரஜினிக்கு தீ படமும், பாக்யராஜிக்கு மௌன கீதங்கள் படமும் ரிலீஸ். பாக்யராஜ் படம் வெள்ளி விழா கொண்டாடியது. அவர் தான் வின்னர். 1981 மார்ச்சில் பாக்யராஜிக்கு இன்று போய் நாளை வா படமும், ரஜினிக்கு கழுகு படமும் ரிலீஸ். இதுலயும் பாக்யராஜ் தான் வின்னர்.

    1981 மே மாதம் ரஜினிக்கு தில்லு முல்லு படமும், பாக்யராஜிக்கு விடியும் வரை காத்திரு படமும் ரிலீஸ். இதுல ரெண்டுமே ஜெயித்தாலும் ரஜினி படம் தான் ஒரு படி மேல். அதனால் அவர் தான் வின்னர். 1981 தீபாவளிக்கு பாக்யராஜிக்கு அந்த 7 நாள்கள் படமும், ரஜினிக்கு ராணுவ வீரன் படமும் ரிலீஸ். இதுல பாக்யராஜ் தான் வின்னர். அவர் படம் வெள்ளிவிழா கொண்டாடியது.

     ரங்கா – தூறல் நின்னு போச்சு 

    TNP- Ranga
    TNP- Ranga

    1982 தமிழ் புத்தாண்டுக்கு ரஜினியின் ரங்கா படமும், பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு படமும் ரிலீஸ். இதுல பாக்யராஜ் தான் வின்னர். 300 நாள்களைக் கடந்து ஓடி மாபெரும் வெற்றி பெற்றது அவரது படம்.

    1982 ஆகஸ்டில் ரஜினிக்கு எங்கேயோ கேட்ட குரல் படமும், பாக்யராஜிக்கு பொய் சாட்சி படமும் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். 1982 அக்டோபரில் ரஜினிக்கு மூன்று முகம் படமும், பாக்யராஜிக்கு டார்லிங் டார்லிங் டார்லிங் படமும் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். 1983 ஜூலையில் பாக்யராஜிக்கு முந்தானை முடிச்சு படமும், ரஜினிக்கு அடுத்த வாரிசு படமும் ரிலீஸ். இதுல பாக்யராஜ் படம் வெள்ளி விழா கொண்டாடி மாபெரும் வெற்றி பெற்றது.

     நல்லவனுக்கு நல்லவன் – தாவணிக் கனவுகள்

    1984 செப்டம்பரில் ரஜினிக்கு நல்லவனுக்கு நல்லவன் படமும், பாக்யராஜிக்கு தாவணிக் கனவுகள் படமும் ரிலீஸ். இதுல இரண்டு படமும் ஹிட். 1985 தீபாவளிக்கு ரஜினியின் படிக்காதவன் படமும், பாக்யராஜிக்கு சின்னவீடு படமும் ரிலீஸ். இதுல ரஜினி படம் தான் ஒரு படி அதிகமான வெற்றி. 1988 ஆகஸ்டில் பாக்யராஜிக்கு இது நம்ம ஆளு படமும், ரஜினிக்க தர்மத்தின் தலைவன் படமும் ரிலீஸ். இதுல பாக்யராஜ் படம் தான் ஒரு படி அதிகமான வெற்றி.

    1989 ஏப்ரலில் ரஜினிக்கு சிவா படமும், பாக்யராஜிக்கு என் ரத்தத்தின் ரத்தமே படமும் ரிலீஸ். இதுல ரெண்டுமே பிளாப். 1989 அக்டோபரில் ரஜினிக்கு மாப்பிள்ளை படமும், பாக்யராஜிக்கு ஆராரோ ஆரிராரோ படமும் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். 1991 அக்டோபரில் ரஜினிக்கு நாட்டுக்கு ஒரு நல்லவன் படமும், பாக்யராஜிக்கு ருத்ரா படமும் ரிலீஸ். இதுல பாக்யராஜ் தான் வின்னர்.

    இதையும் படிங்க… கரண் மார்க்கெட்டை இழந்தது ஏன்னு தெரியுமா? பின்னணியில் இத்தனை விஷயங்களா?

    1992 பொங்கலுக்கு ரஜினியின் மன்னன் படமும், பாக்யராஜின் சுந்தர காண்டம் படமும் ரிலீஸ். இதுல ரெண்டுமே ஹிட். 1992 ஜூன்ல ரஜினிக்கு அண்ணாமலை படமும், பாக்யராஜிக்கு அம்மா வந்தாச்சு படமும் ரிலீஸ். இதுல வெள்ளிவிழா கொண்டாடிய ரஜினி தான் வின்னர். 1992 தீபாவளிக்கு ரஜினியின் பாண்டியன் படமும், பாக்யராஜிக்க ராசுக்குட்டி படமும் ரிலீஸ். இதுல பாக்யராஜ் தான் வின்னர்.

    பாட்ஷா – ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி 

    1995 பொங்கலுக்கு ரஜினியின் பாட்ஷா படமும், பாக்யராஜிக்கு ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படமும் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். 2023ல் ரஜினிக்கு ஜெய்லர் படமும், பாக்யராஜிக்கு 3.6.9 படமும் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர்.

  • அந்த விஷயத்துல அந்த நடிகையை அடிச்சிக்கவே முடியாது!.. புகழ்ந்து தள்ளிய கண்ணதாசன்…

    குட்டுப்பட்டாலும் மோதிர விரலால் குட்டுப்பட வேண்டும் என்று சொல்வார்கள். அந்த மோதிர விரலுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமல்ல. இயக்குனர் சிகரம் பாலசந்தர் தான். அவரது பட்டறையில் இருந்து யார் வந்தாலும் அவர்கள் சிறந்த நடிகர்களாகத் தான் ஒளிவீசுவார்கள். அதே போல அந்தக் காலத்தில் கவியரசர் கண்ணதாசன் சாதாரணமாக யாரையும் புகழ்ந்து விட மாட்டார். ஆனால் ஒரு நடிகையை புகழ்ந்து இருக்கிறார். அவர் யாரென்று பார்க்கலாமா…

    கவியரசர் கண்ணதாசன் என்றாலே காதல், சோகம், காமெடி, நம்பிக்கை, துரோகம் என எந்த சூழலுக்கும் ஏற்ப பாடல்களை எழுதுபவர் தான். அந்த நடிகை வேறு யாருமல்ல. 1957ல் வெளியான  முதலாளி என்கிற படத்தில் அறிமுகமான தேவிகா. ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டாலும் தமிழை அருமையாக உச்சரிப்பார். நடிகை கனகாவின் தாயார் தான் தேவிகா.

    கண்ணதாசன் தயாரித்த ‘மங்கல மங்கை’ என்ற படத்தில் தேவிகா நடித்தாராம். அதில் ஒரு பாடலில் விரகதாபத்துடன் நடித்து இருந்தாராம் தேவிகா. அதைப் பார்த்த கண்ணதாசன் அவரைப் போல இதுவரை எவருமே நடித்ததில்லை என்று புகழ்ந்து தள்ளினாராம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மங்கல மங்கை படம் பாதியிலேயே நின்று போனது.

    தயாரிப்பாளர்களுக்கு சங்கடத்தைக் கொடுக்கும் நடிகைகள் பலர் உண்டு. அதே நேரம் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த நடிகைகளும் உண்டு. அவர்களில் இரண்டாம் ரகம்தான் தேவிகா.

    Actress Devika
    Actress Devika

    இவர் தயாரிப்பாளர்களுக்கு ஒரு நஷ்டம் என்றால் கைகொடுத்து உதவுவார். இன்றைய நடிகைகளை விட அவர் அன்றே அருமையாக நடித்தார். அவர் செய்த ஒரே தவறு. வாழ்க்கையை ஒழுங்காகத் தேர்ந்தெடுக்காதது தான். இதை மட்டும் அவர் ஒழுங்காகச் செய்திருந்தால், அவரது குணத்துக்கும், நடத்தைக்கும் எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அவருக்கு அமைந்திருக்கும்.

    ‘உங்க படங்களில் தேவிகாவை விட்டால் வேறு நடிகைகள் கிடைக்கவில்லையா?’ என்பார்கள். எந்தக் குடை மழை, வெயிலில் இருந்து என்னைக் காப்பாற்றுகிறதோ அதைத் தான் தேர்ந்தெடுப்பேன் என்பேன். சில நேரங்களில் நான் திட்டிவிட்டால் அழுவார். ஆனால் ஒருபோதும் என் மீது அவர் கோபம் கொண்டதே இல்லை என்றார் கண்ணதாசன்.

  • தை பொறக்கும் நாளை… விடியும் நல்ல வேளை! பண்டிகைன்னாலே ராஜா ராஜாதான்!..

    தமிழ்த்திரை உலகில் பண்டிகைக் காலங்களுக்கு ஏற்ப துள்ளல் மிக்கப் பாடல்களைப் போட்டு ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்துபவர் இசைஞானி இளையராஜாவுக்கு நிகர் அவர் தான்… என்னென்ன பாடல்கள் என்று பார்க்கலாமா…

    பொங்கலுக்காக இளையராஜா போட்ட பாடல் இன்று வரை நம்மால் மறக்க முடியாது. பண்டிகைகள் காலம் என்றாலே அவரது இசையில் ஒரு துள்ளல் வந்து விடும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேருமே அந்த இசைக்கு அடிமை தான். அப்படி உருவான ஒரு பாடல் தான் மகாநதி படத்தில் வருகிறது.

    தைப்பொங்கலும் வந்தது. பாலும் பொங்குது என்ற இந்தப் பாடல் தான் ஆண்டுதோறும் வரும் பொங்கல் நாளில் டிவி, ரேடியோ, செல் போன் என அனைத்து சாதனங்களிலும் ப்ரோமாவாகவும், ரிங் டோனாகவும் களைகட்டுகிறது.

    Mahanadhi
    Mahanadhi

    பண்டிகைகளுக்கு ஏற்ப பாடல் கொடுப்பதில் இளையராஜா என்றுமே ராஜாதான். புது வருடம் பூத்தால் போதும். சகலகலாவல்லவன் படத்தில் இளமை இதோ இதோ என்று இளம் உள்ளங்களைத் துள்ளச் செய்து விடுவார். அதே போல போகிப்பண்டிகையான இன்றைய தினத்தில் அவரது சிறப்பு பாடல் ஒன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    தளபதி படத்தில் வரும் மார்கழி தான் ஓடிப்போச்சு… போகியாச்சு ஹோய்… என்ற இந்தப் பாடல் செம மாஸ். அதே படத்தில் காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாடலில் இடையே போகிப்பண்டிகையைக் கொண்டாடும் விதமாக ஒரு வரி வரும்.

    போடா எல்லாம் விட்டுத் தள்ளு, பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு என்று அற்புதமாக இருக்கும். அதே போல தை பொறக்கும் நாளை… விடியும் நல்ல வேளை… பொங்க பாலு வெள்ளம் போல பாயலாம்… அச்சுவெல்லம், பச்சரிசி, வெட்டி வச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிற நாள் தான் என பொங்கலை உற்சாகமாக வரவேற்கும் வகையில் இந்தப் பாடல் அமைக்கப்பட்டு இருக்கும். அதே போல தீபாவளி என்றால் நாயகன் படத்தில் வரும் நான் சிரித்தால் தீபாவளி பாடல் தான் நம் நினைவுக்கு வரும்.

  • கரண் மார்க்கெட்டை இழந்தது ஏன்னு தெரியுமா? பின்னணியில் இத்தனை விஷயங்களா?

    நடிக்கும்போது கண்களால் பேசுபவர்கள் ஒரு சில நடிகர்கள் தான் உண்டு. அவர்களைப் பார்த்தாலே ரொம்பவும் திறமை வெளிப்படும். அவர்களது நடிப்பும் வெகு சுவாரசியமாக இருக்கும். அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர்தான் கரண். அவர் 90களில் தமிழ்சினிமா உலகில் கொடிகட்டிப் பறந்தார். அதன்பிறகு அவரது மார்க்கெட் சரிந்தது ஏன் என்று பார்க்கலாமா…

    நடிகர் கரண் எப்போதுமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர். இவர் சில சமயங்களில் ஹீரோவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி விடுவார். நம்மவர் படத்தில் அப்படிப்பட்ட நடிப்பு தான். கமலுக்கு வில்லனாக வந்து அசத்தியவர் கரண். இவரது நடிப்பு மிகவும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும்.

    Karan, Kamal
    Karan, Kamal

    அதே போல அஜீத் நடித்த படங்களிலும் இவரது நடிப்பு அபாரமாக இருக்கும். ஒரு காலத்தில் இவருக்கு மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது தனக்கு எந்த கேரக்டர் வந்தாலும் ஓகே சொல்லிவிடுவாராம். அந்தக் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்று கூட பார்க்காமல் ஓகே சொல்வாராம். விஜய், அஜீத், கார்த்திக், முரளி படங்களில் 2வது கதாநாயகனாக நடித்து அசத்தியுள்ளார். அதே போல வில்லனாகவும் நடித்துள்ளார்.

    சொல்லாமலே படத்தில் லிவிங்ஸ்டன் தான் ஹீரோ. அவருக்காக இந்தப் படத்தில் 2வது கதாநாயகனாக கரண் நடிக்க சம்மதித்தார். அவருக்கு எப்போதும் வருமானம் வந்து கொண்டே இருந்தது. ஒரே நேரத்தில் 12 செக் வரை டெபாசிட் செய்வாராம்.

    2000களின் ஆரம்பத்தில் அவர் அஜீத், விஜய் ஆகியோரை விட உடல் எடையை அதிகரித்து விட்டார். கரண் 9 படங்கள் வரை கதாநாயகனாகவே நடித்துப் பார்த்தார். அதில் சம்பாதித்த பணம் முழுவதையும் இழந்து நஷ்டமானார். அந்த வகையில் விவேக் ஒரு சமயம் அவரது கஷ்டங்களைப் புரிந்து கொண்டு அவரது படங்களில் சம்பளம் இல்லாமல் நடித்தார்.

    சத்யராஜூம் கரணின் சூழ்நிலையால் சம்பளம் வாங்காமலே நடித்தார். அவர் திரும்பவும் பீல்டுக்குள் வருவதற்குள் வயதாகி விட்டது. அவர் தேர்ந்தெடுத்த கதைகளும் சொல்லும்படியாக இல்லை. இதனால் தான் மிகவும் திறமைவாய்ந்த நடிகரான கரண் தனது மார்க்கெட்டைத் தக்க வைக்க முடியாமல் பீல்டு அவுட் ஆனார்.

  • என்கிட்ட எல்லாரும் பயப்படுவாங்க!. ஆனா சிவாஜி வேறலெவல்!. அப்போதே சொன்ன பானுமதி..

    1957ல் பானுமதி நடித்த படங்கள் 4. அவை அனைத்திலும் நடிகர் திலகம் சிவாஜி தான் நடித்திருந்தார். பிப்ரவரி 27ல் மக்களைப் பெற்ற மகராசி படம் வெளியானது. இதுதான் தமிழ்சினிமாவின் முதல் வட்டார மொழி படம். கொங்கு நாட்டு பாஷை பேசும் செங்கோடனாக சிவாஜியும், அவரது முறைப்பெண் பொன்னுரங்கமாக பானுமதியும் நடித்தனர். போறவளே போறவளே பொன்னுரங்கம் பாடலை டிஎம்எஸ்.சுடன் பானுமதி இணைந்து பாடி பட்டையைக் கிளப்பி இருந்தார்.

    பானுமதி அசோகனை ஹீரோவாக்கி மணமகன் தேவை படத்தைத் தொடங்கினார். இது காமெடி படம். அவரை மையப்படுத்தியே திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு அசோகனை விலக்கி விட்டு ஹீரோவாக சிவாஜியை நடிக்க வைத்தார். சந்திரபாபு, டி.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரும் படத்தில் நடித்தனர். சிவாஜியுடன் நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவமாக பானுமதிக்கு இருந்தது. சொக்கா போட்ட நவாபு, வாங்க மச்சான் வாங்க என பல சூப்பர்ஹிட் குத்துப்பாடல்கள் இந்தப் படத்தில் இருந்தது.

    ஆரூர்தாஸின் ஆசான் தயாரிப்பு ராணி லலிதாங்கி. பிரபல நடிகர் ஒருவர் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து ஆண்டவனே இல்லையே தில்லைத்தாண்டவனே உன்போல் ஆண்டவனே இல்லையே என பாடி நடிக்க வேண்டும் என மூடநம்பிக்கைக் கருத்துக்கள் வருகின்றன.

    Ambikapathi
    Ambikapathi

    திமுக கொள்கைகளுக்கு விரோதமாக நடிக்க மாட்டேன் என்று அந்த பிரபல நடிகர் விலகி விட்டார். ஆனால் அதே படத்தை சிவாஜியை வைத்து எடுத்து முடித்து வெற்றி கண்டார் தஞ்சை ராமையா தாஸ். இவர் ஜெயிக்க ஒத்துழைத்தவர் யார் தெரியுமா? பானுமதி தான். லலிதாங்கியாக நடித்தவர் பானுமதி. இவரைத் தவிர வேறு யாரும் நடித்து இருந்தால் அந்த பிரபல நடிகருக்குப் பயந்து நடிக்காமல் போயிருப்பார்களாம்.

    பானுமதியும், நடிகர் திலகமும் நடித்த படம் அம்பிகாபதி. இந்தப் படத்தில் இருவருக்கும் சண்டையே வந்துவிட்டதாம். என்ன காரணமோ தெரியவில்லை. ஆனால் படத்தில் நடித்த ஒரு சில காதல் காட்சிகளுக்கு உயிர் ஊட்டுவதற்காக தனது சின்ன சின்ன சண்டைகளை மறந்து அருமையாக நடித்தார்களாம்.

    இதையும் படிங்க…அந்த ஹீரோவால் மார்க்கெட்டை இழந்த நடிகை ஹீரா!.. இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?

    நடிகர் திலகத்துடன் பானுமதி 10 படங்களில் இணைந்து நடித்துள்ளார். கள்வனின் காதலி, தெனாலி ராமன், ரங்கோன் ராதா, மக்களைப் பெற்ற மகராசி, மணமகன் தேவை, ராணி லலிதாங்கி, அம்பிகாபதி, சாரங்கதாரா, ராஜபக்தி, அறிவாளி என்ற படங்கள் தான் அவை. நடிகர் திலகம் குறித்து பானுமதி ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    நான் எத்தனையோ நடிகர்களுடன் நடித்துள்ளேன். எல்லா ஹீரோக்களும் என்னை நெருங்க பயப்படுவார்கள். சிவாஜி போல திறமையான நடிகரை நான் பார்த்ததே இல்லை. அவர் ஒரு பிறவி நடிகர். மாறுபட்ட உணர்ச்சிகளை மின்னல் வேகத்தில் மாற்றி வெளிக்காட்டக்கூடிய அபூர்வ ஆற்றல் பெற்றவர் என்றாராம்.

  • லீவு கொடுக்காத மேனேஜர்!.. நாகேஷ் செய்த அலப்பறை!.. மனுஷன் அப்பவே அப்படித்தான்!..

    தமிழ்ப்பட உலகில் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர் நாகேஷ். இவரைப் போல வேறு எந்த நடிகருக்கும் பாடி லாங்குவேஜ் வராது. மனிதர் டைமிங் காமெடியிலும் பின்னி விடுவார். எம்ஜிஆர், சிவாஜி படங்களில் பெரும்பாலும் காமெடியனாகக் கொடி கட்டிப் பறந்தவர் நாகேஷ் தான்.

    இவரது ஏடாகூடமான பேச்சு பார்க்கும் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தி விடும். இதே உணர்வு நிஜத்திலும் இவருக்கு இருந்ததாம். தனது வெகுளித்தனமான கேள்விகளால் பலரின் கோபத்தையும் சம்பாதித்துள்ளார்.

    இதையும் படிங்க: சுந்தர் சி-யிடம் வாய்ப்பு கேட்ட நாகேஷ்!. அதுவும் எப்படி தெரியுமா?.. இப்படியெல்லாம் நடந்துச்சா!…

    இவரது ஆரம்பகாலத்தில் நாடகங்களில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். பள்ளி, கல்லூரி படிப்பை முடித்ததும் அலுவலகத்தில் பணியாற்றியுள்ளார். அங்கு இருந்து கொண்டே இதற்கான வாய்ப்பைத் தேடினார். ஒரு முறை அலுவலகம் சென்ற போது மறுநாள் நாகேஷுக்கு மேனேஜரிடம் நாடக ஒத்திகைக்கு லீவு கேட்க வேண்டி இருந்தாம்.

    என்ன செய்வது என்று யோசித்தார். மளமளவென கடிதம் ஒன்றை எழுதினார். மேனேஜரிடம் கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த மேனேஜர் நாகேஷைத் திட்டி லீவெல்லாம் கிடையாது. நாளைக்கு ஆபீஸ் கண்டிப்பா வரணும்னு சொல்லிவிட்டாராம்.

    இதையும் படிங்க… தனுஷ் ஒன் மேன் ஷோ!. எபிக் பிளாக்பஸ்டர்!.. கேப்டன் மில்லர் டிவிட்டர் விமர்சனம்…

    இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற நாகேஷ் அதை மேனேஜரிடம் காட்ட முடியாமல் அவரை ஒரு வழி பண்ண வேண்டும் என்று நினைத்தாராம். மறுநாள் ஆபீசுக்கு டவுசர், பனியனுடன் வந்தாராம். இதைப் பார்த்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம். மேனேஜர் கோபம் கொண்டு ‘ஏன் இந்த டிரஸில் வந்துருக்கே?’ என கேட்டாராம்.

    Nagesh
    Nagesh

    எனக்கு இருப்பதோ 2 பேண்ட், 2 சர்ட் தான். ஒண்ணு நேற்று தான் போட்டேன். இன்னொன்னு மழையில் நனைந்து விட்டது. அதைப் போட்டால் எனக்கு ஜலதோஷம் பிடிக்கும். அதனால் தான் இப்படி வந்தேன். இதை வெளியே சொல்ல முடியாத காரணத்தினால் தான் லீவு கேட்டேன் என்று சொல்ல அதன்பிறகு லீவு கிடைத்தாம். நாடக ஒத்திகைக்கும் போய் விட்டாராம்.

  • அந்த ஹீரோவால் மார்க்கெட்டை இழந்த நடிகை ஹீரா!.. இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?

    90களில் இதயத்தில் ரசிகர்களைத் தொலைத்த ஹீரோயினாக வலம் வந்தவர் ஹீரா. பேண்ட்மாஸ்டர், திருடா திருடா போன்ற படங்களின் மூலம் தனக்கான தனியிடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

    சதீலீலாவதி படத்தில் இருந்து தான் அவருக்கு மார்கெட் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்ததாம். படத்தில் ரமேஷ் அரவிந்த்துக்கு இவர் தான் ஜோடி. கமலிடம் ரமேஷ் அரவிந்த் கன்னடத்தில் இருந்து தெரியாத யாரையாவது தனது ஜோடியாகக் கொண்டு வர வேண்டும் என்றார்.

    இந்த ரோலில் நடிக்க கௌதமி, சங்கீதா, சுஹாசினி உள்பட பலரும் மறுத்து விட்டார்களாம். கடைசியாக ஹீரா இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாராம். 90களின் மத்தியில் வந்த மீனா, தேவயாணி, சுவலட்சுமி ஆகியோர் புடவைகளில் வந்து ரசிகர்களை சுண்டி இழுத்தனர். இந்த இழுப்பால் ஹீராவின் மார்க்கெட் முடிந்து போனது.

    KK
    KK

    அதன் பிறகு அவருக்கு பெரிய பிரேக் கொடுத்த படம் திருடா திருடா. இந்தப் படத்தில் இவரது நடிப்பு மாஸாக இருந்தது. காதல் கோட்டையில் அஜீத்துடன் அவரது கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட்டானது. அவ்வை சண்முகியில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். அஜீத்துடன் ஹீராவுக்கு பயங்கரமான காதல் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் அதை அலட்சியம் செய்தாராம். அதைத் தொடர்ந்து பெங்களூருவுக்கு சென்று விட்டார். அங்கு கன்னடம், தெலுங்கு படங்களில் 2வது கதாநாயகியாக நடித்தார்.

    கே.எஸ்.ரவிகுமார் அவரை அழைத்து சுயம்வரத்தில் நடிக்க வைத்தார். தொடர்ந்து கார்த்திக் நடித்த பூவேலி பட வாய்ப்பும் கிடைத்தது. அந்த நேரத்தில் சரத்குமார் ஹீராவை விரும்புகிறார் என கூறப்பட்டது. ஆனால் கல்யாணம் முடிந்தவர் என்ற காரணத்திற்காக அதிலிருந்து மீண்டு வந்தாராம் ஹீரா. சூர்யவம்சம், நட்புக்காக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது அந்தக் காரணத்திற்காகவே மறுத்துவிட்டாராம். அதன்பிறகு அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக படங்கள் வரவில்லை. சதிலீலாவதியில் கள்ளக்காதலி வேடத்தில் நடித்ததால் ஹீராவின் மார்க்கெட் சரிந்து போனதாம்.

  • 17 வயதிலேயே தற்கொலை செய்து கொண்ட ஷோபா… மண்ணில் புதைந்த ரகசியம் இதுதான்!..

    கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை ஷோபா. இவரது இயற்பெயர் மகாலட்சுமி மேனன். நடிகைகளில் இளம் வயதிலேயே இறந்தவரும் இவர் தான். 80களில் தமிழ்ப்பட உலகில் கோலோச்சிய நடிகை. அதனால் யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. இவர் தனது 3வது வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

    1978ல் பாலசந்தர் இயக்கத்தில் நிழல் நிஜமாகிறது படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார். தொடர்ந்து முள்ளும் மலரும், கோலங்கள், மூடுபனி என அவர் நடித்த படங்கள் எல்லாமே முத்திரை பதித்தன. நடிப்பில் இவர் ஒரு ராட்சசி என்றே சொல்லலாம். 1978ல் வெளியான பசி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

    MM Shoba
    MM Shoba

    இதற்காகவே அவருக்கு தேசிய விருது கிடைத்தது. தனது 16வது வயதிலேயே இயக்குனர் பாலுமகேந்திராவைத் திருமணம் செய்து கொண்டார். அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அவர்களுக்குள் ஒரு நெருக்கமான காதல் இருந்தது தான் இதற்குக் காரணம்.

    தேசிய விருது பெற்றிருந்த ஷோபாவுக்கு பாராட்டு விழாவுக்காக ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அந்த நாளில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். என்ன காரணம் என பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. திருமணமாகி 2 ஆண்டுகள் கூட முழுமையாக வாழவில்லை. அப்புறம் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது புரியாத புதிராகவே இருந்தது.

    முள்ளும் மலரும் படத்தில் கேமராமேனாக பணியாற்றியவர் பாலுமகேந்திரா. அப்போது தான் இருவருக்கும் காதல் அரும்பியது. ஷோபாவின் அழகில் மயங்கி விட்டாராம் பாலுமகேந்திரா. இந்தக் காதல் இருவருக்குள்ளும் மலரத் தொடங்கியது.

    shoba2
    shoba2

    பசி படத்தின் இயக்குனர் துரை தேசிய விருது விழாவை பெரிதாகக் கொண்டாட முடிவு செய்தார். ஆனால் அதே நேரம் ஷோபாவின் தற்கொலை என்றதும் பலரும் பேரதிர்ச்சி அடைந்தனர். பாலுமகேந்திராவுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருந்ததாம். திருமணத்திற்குப் பிறகும் பாலுமகேந்திரா முதல் மனைவியுடன் இருந்ததுதான் இந்தத் தற்கொலைக்குக் காரணம் என அப்போது செய்திகள் வெளிவந்தன. அப்போது பாலுமகேந்திரா எங்கள் இருவருக்கும் உள்ள உறவு எங்களுக்கு மட்டுமே தெரியும்.

    அவள் தற்கொலைக்கு யார் காரணம் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அதை நான் சொல்லப் போவது இல்லை என்று அப்போது கூறினாராம். ஆனால் அந்த ரகசியத்தை தனது காலம் முடியும் வரையும் கூறாமலேயே இந்த மண்ணை விட்டுப் பிரிந்து விட்டார் பாலுமகேந்திரா.

     

  • ஹீரோ பெயரை பாடல் வரிகளில் சொருகிய வாலி!.. இதுல செம கில்லாடி அவருதான்!..

    கேரளாவில் தமிழர்களை பாண்டி என்று அழைப்பார்கள். அது இழிவான சொல்லாக அங்கு நினைப்பார்கள். ஆனால் கவிஞர் வாலி பாண்டி என்ற சொல்லை மிகவும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தியுள்ளார். அதுவும் கமல் படம் தான். 1996ல் வெளியானது. அவ்வை சண்முகி. கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ளார்.

    படத்தில் கமலின் பெயர் பாண்டி. இவர் திரைப்பட நடன இயக்குனர். எப்படியோ பணக்கார பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் மீனாவை திருமணம் செய்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் கமலுக்கும், மீனாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர். கமல் எப்படியாவது முன்னாள் மனைவியான மீனாவுடன் பழக முயற்சிக்கிறார்.

    இதையும் படிங்க… அடுத்தடுத்து 3 படங்கள்!.. ரஜினிக்கு உதவும் மந்திரங்கள்.. சீக்ரெட்டை வெளியே சொன்ன பிரபலம்…

    அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தையை சாக்காக வைத்து வீட்டில் ஒரு வேலைக்காரி போல ஆன்ட்டி தோற்றத்துடன் நுழைகிறார் கமல். அங்கு நடக்கும் கலவரங்களே படத்தின் கதை. மீண்டும் இணைந்தார்களா என்பதை வெள்ளித்திரையில் காணலாம்.

    Avvai Shanmughi
    Avvai Shanmughi

    கமல் ஆன்ட்டி கேரக்டரில் செம மாஸாக மேக் அப் போட்டு அச்சு அசலாக மாமி போலவே நடித்து அசத்தியுள்ளார். படத்தில் அந்தக் கெட்டப்பின் பெயர் அவ்வை சண்முகி. இவர் பெண் குரலில் ஒரு பாடலைப் பாடுகிறார். அதை எழுதியவர் கவிஞர் வாலி.

    ருக்கு ருக்கு ருக்கு என ஆரம்பிக்கும் இந்தப் பாடலின் இடையில் தூணுக்குள்ளும் இருப்பான்டி, துரும்பிலும் இருப்பான்டி, நம்பியவர் நெஞ்சில் நிற்பான்டி, குங்குமத்தை வைப்பான்டி, கொஞ்சி கொஞ்சி நிற்பான்டி.. என பாண்டி பாண்டி என வரும் அளவில் அந்தப் பெயரையும் இடையில் லாவகமாக சொருகியிருப்பார் கவிஞர் வாலி.

    இதன் மூலம் மீனாவுக்கு தனது முன்னாள் கணவரான கமலை மறைமுகமாக நினைவூட்டுகிறார் கவிஞர் வாலி. இந்தப் பாடல் பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஜோடி சேர ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

  • அந்த விஷயத்தில் ரஜினியை விட உயர்ந்தவர் கேப்டன்தானாம்… எப்படின்னு தெரியுமா?

    ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகில் சூப்பர்ஸ்டாராகக் கொண்டாடி வருகிறார்கள். அதே நேரம் மறைந்த விஜயகாந்தை புரட்சிக்கலைஞராகக் கொண்டாடினார்கள். இவருவருக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. பெயரில் காந்த் உள்ளது. அதே போல தர வரிசை மற்றும் சம்பளம், பான் இந்தியா நடிகர் என்ற அளவில் பார்த்தால் அது சூப்பர்ஸ்டார் தான்.

    அனைத்து மொழிகளிலும் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். அந்த வகையில் அவர் பெரிய நடிகர் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதே நேரம், ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். 90களில் விஜயகாந்தின் மார்க்கெட் ரஜினியை விட குறைவாக இருந்தது.

    இதையும் படிங்க…லியோவுக்கு ‘No’ அயலானுக்கு மட்டும் Yes… செம கடுப்பில் விஜய் ரசிகர்கள்…

    அதே நேரம் விஜயகாந்தின் படம் இந்தியா முழுவதும் ரீமேக் செய்யப்பட்டது. சட்டம் ஒரு இருட்டறை படத்தின் இந்தி ரீமேக்கில் ரஜினி நடித்தார். தயாரிப்பாளர்களுக்கான லாபத்தில் முன்னணியில் இருப்பவர் விஜயகாந்த் தான். எடுத்துக்காட்ட வேண்டும் என்றால், ரஜினி நடித்த சிவாஜி படத்தின் பட்ஜெட் ரூ.80 கோடி. லாபம் ரூ.100 கோடி. விஜயகாந்தின் வானத்தைப் போல படத்தின் பட்ஜெட் ரூ.3 கோடி. லாபம் ரூ.25 கோடி. ரஜினி ரூ.1 கோடி சம்பளம் வாங்கும்போது, விஜயகாந்த் ரூ.48 லட்சம் தான் சம்பளம் வாங்கினார்.

    Vanathai pola
    Vanathai pola

    ரஜினியின் தமிழ்ப்படங்கள் ரீமேக்கில் வெற்றி பெறவில்லை. அவரது தமிழ்ப்படங்கள் ரீமேக்கில் பெரிய அளவிலான வெற்றியைப் பெறவில்லை. விஜயகாந்த் படத்திற்கு பட்ஜெட் குறைவு. சண்டைக்கலைஞர்களின் சம்பளம் அதிகம். சிறிய நடிகர்களின் சம்பளம் அதிகம். சாப்பாட்டு விஷயத்தில் பாரபட்சமில்லை.

    தானம் கொடுப்பதில் விஜயகாந்த் தான் எம்ஜிஆருக்குப் பிறகு நடிகர்களில் முன்னணியில் இருந்தார். அவரது அலுவலகத்தில் பல முறை கறி சோறு தானாம். மட்டன் விலை அதிகம் என்றாலும் போடத் தயங்குவதில்லையாம். அதே போல தையல் எந்திரம், சைக்கிள் ரிக்ஷா என அவ்வப்போது பல நலத்திட்ட உதவிகள் செய்வாராம்.இதனால் மக்களின் மனதில் உயர்ந்துள்ளார் கேப்டன்.