Author: sankaran v

  • கட்டிய புருஷனே சொல்லிட்டாரு… இனி அந்த மாதிரி சீன்ல வெளுத்து வாங்கப் போகும் ஆனந்தி

    பொதுவாக தென்னிந்திய நடிகைகள் திருமணம் ஆகி விட்டால் போதும். சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவார்கள். ஒரு சில நடிகைகள் அத்திப் பூத்தாற்போல ஏதாவது இரண்டொரு படங்களில் தலையைக் காட்டுவார்கள். மற்றபடி முன்னணி நடிகைகள் பெரும்பாலும் நடிப்பதில்லை. அப்படியே நடித்தாலும் கவர்ச்சியாக நடிப்பதில்லை. ஆனால் இவர் கொஞ்சம் விதிவிலக்கு. யார் என்று பார்க்கலாமா…

    குடும்பப்பாங்கான கேரக்டரில் நடிக்கும் ஹீரோயின்கள் பெரும்பாலும் கவர்ச்சி பக்கம் வருவதில்லை. ஆனால் எப்போதாவது இது போன்று நடிக்கும் சம்பவங்கள் நடப்பதுண்டு. தமிழ்ப்படங்களில் பிரபலமான தெலுங்கு நடிகை ஆனந்தி. இவர் ஒரு பாரம்பரியப் பெண்ணாக இருந்தாலும் விரைவில் வர உள்ள மங்கை என்ற படத்தில் தைரியமாக பல காட்சிகளில் நடித்துள்ளாராம். அதே போல டயலாக்குகளையும் பேசி இருக்கிறாராம்.

    Kayal Aanandhi
    Kayal Aanandhi

    ஆனால் முதலில் இந்தப் படத்தில் நடிக்க மறுத்தாராம். ஆனால் அவரது கணவர் படத்திற்கு அவசியம் என்றால் தைரியமாக நடி என்று ஊக்கம் கொடுத்தாராம். அதன்பிறகு தான் அந்தப் படத்தில் அதுபோன்ற காட்சிகளில் எளிதாக நடிக்க முடிந்தது என்கிறார்.

    இவர் தெலுங்கானா வாரங்கல் பகுதியைச் சேர்ந்தவர். அங்கு மார்க்கெட் சரிய ஆரம்பித்ததும், சென்னைக்குக் குடிபெயர்ந்து விட்டார். இவருக்கு தமிழில் பல நல்ல படங்கள் கிடைத்தது. அதனால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார். 2021ல சாக்ரடீஸ் என்ற இணை இயக்குனருடன் திருமணம் நடந்தது.

    இதையும் படிங்க… என்னமோ செய்யப்போறாங்க!. துபாயில் பரிதாபங்கள் கோபி – சுதாகருடன் சிவகார்த்திகேயன்!. வைரல் வீடியோ..

    தமிழில் கயல் படத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு கயல் ஆனந்தி என்ற பெயரே நிலைத்து விட்டது. பொறியாளன் படத்தில் அறிமுகம் ஆனார். விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, மன்னர் வகையறா, பரியேறும் பெருமாள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

  • கேப்டன் சினிமாவில் நிலைத்து நின்றதற்கு இதுதான் காரணமா? இளரவசு சொல்லும் ரகசியம்…!

    மறைந்த கேப்டன் விஜயகாந்த் தமிழ்சினிமாவின் ஒரு பொக்கிஷமாக இருந்தார். இப்போது அவர் மறைந்தாலும் அவர் விட்டுச் சென்ற படங்கள் பொக்கிஷமாகவே நமக்கு இருக்கின்றன. அவரைப் பற்றி நடிகரும், ஒளிப்பதிவாளருமான இளவரசு என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

    88ல சந்தனக்காற்று என்ற படத்தில் டி.சங்கர் ஒளிப்பதிவாளர். நான் அசோசியேட் கேமராமேனாக இருந்தேன். மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த், கௌதமி நடித்துள்ளனர். ஊட்டில கேத்தி என்ற கிராமத்தில் தான் சூட்டிங். மூன்றாம்பிறை படத்தில் வந்த ரெயில்வே ஸ்டேஷன் வரும் ஊர். அங்க தான் சூட்டிங்.

    இதையும் படிங்க… தமிழ்சினிமாவை டிஜிட்டல் உலகிற்குக் கொண்டு வந்த படம் இதுதான்… இயக்குனரை அறிமுகப்படுத்திய கேப்டன்!

    மேல தான் ரயில்வே ஸ்டேஷன் இருக்கும். அது சாயங்காலம் 6 மணிக்கு முடிச்சிட்டு நைட் 8 மணிக்கு மேட்டுப்பாளையத்துல எங்கிட்ட மோதாதே சூட்டிங். அங்க விடியகாலம் 4 மணி வரை நடக்கும். திருப்பி ஊட்டிக்கு காலைல சூட்டிங் வரணும்.

    அப்போ சூப்பர் சுப்பராயன், விஜயகாந்த் கூட்டணியில் பைட் செம மாஸா இருக்கும். ரஜினி சார் ஒரு பக்கம் பயங்கர ஃபீட்ல இருக்காரு. அந்த மரத்துல ஏறி ஒவ்வொரு ஸ்டெப்பாக போட்டு இடுப்பை வளைத்து திருப்பி கீழே விழுந்து ஃபைட் பண்ணும் ஆக்ஷன் சீன். விஜயகாந்த் ஏறி அப்படி அடிக்கும்போது தோள்பட்டை, கைகளில் பலத்த காயம். அப்புறம் சூப்பர் சுப்பராயன் தோள்களை பிடித்து விட்டு சரிசெய்தாராம். அப்போது ஒரு சொடக்கு விழுமாம். 10 நிமிஷத்துல வலி குறைந்ததும், அடுத்த ஷாட் எடுக்கலாமான்னு விஜயகாந்த் கேட்பாராம்.

    இதையும் படிங்க… 25 வருடமாக கேப்டன் நினைவாக சூர்யா செய்யும் செயல்! இதுவரைக்கும் தெரியாத ஒரு விஷயம்

    சின்ன புரொடியூசர் என்றெல்லாம் பார்க்க மாட்டார். அவராகவே தயாரிப்பாளர் செய்ய வேண்டிய வேலையையும் சேர்த்து செய்வார். இதனால் தான் சினிமாவில் நிலைத்து நின்றார். இப்படி இருந்ததால் தான் இவர் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமானார். இவ்வாறு இளவரசு தெரிவித்துள்ளார்.

    சண்டைக்காட்சிகளில் பெரும்பாலும் டூப் போடாமல் ரியலாக நடிப்பவர் கேப்டன் விஜயகாந்த். இவர் பல முறை கீழே விழுந்து காயம்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

     

  • தமிழ்சினிமாவை டிஜிட்டல் உலகிற்குக் கொண்டு வந்த படம் இதுதான்… இயக்குனரை அறிமுகப்படுத்திய கேப்டன்!

    தமிழ் சினிமாவை டிஜிட்டலுக்குக் கொண்டு வந்தவர் ஆபாவாணன். கருப்பு ரோஜா என்ற படத்தை டிஜிட்டலுக்குக் கொண்டு வருகிறார். நம்மைச் சுற்றி குதிரைகள் ஓடுவது மாதிரியான ஒரு எபெக்ட் அந்தப் படத்தில் வரும். படத்தில் பெரிய ரோலர் உருண்டு வரும். இவர் முதன் முதலில் விஜயகாந்த் படத்தைத் தான் தயாரித்தார். அது தான் ஊமைவிழிகள்.

    இதற்கான ஸ்கிரிப்டை எழுதியவர் அரவிந்த்ராஜ். இவர் திரைப்படக்கல்லூரி மாணவர். உழவன் மகன் படமும் இவரது ஸ்கிரிப்ட் தான். செந்தூரப்பூவே, காவியத்தலைவன் படமும் இயக்கியவர் ஆபாவாணன் தான்.

    OV
    OV

    ஆபாவாணன் இயக்குனர் மட்டுமல்ல. சிறந்த பாடல் ஆசிரியரும் கூட. இவர் ஊழைவிழிகள் படத்தில் எழுதிய தோல்வி நிலையென நினைத்தால் பாடல் செம மாஸ் ஆனது. அதே போல அதே படத்தில் குடு குடுத்த கிழவனுக்கு பாடலையும் எழுதியுள்ளார். இரண்டு பேர் என்ற படத்தில் வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே என்ற சூப்பர்ஹிட் பாடலை எழுதியுள்ளார். ஆனால் இந்தப் படம் என்ன காரணத்தினாலோ வெளிவரவே இல்லை.

    இவர் அழைத்து வந்த இசை அமைப்பாளர் மனோஜ் கியான். இவர் இசை அமைத்த பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். இவர் இசை அமைத்த செம்மறி ஆடே செம்மறி ஆடே பாடல் உழவன் மகன் படத்தில் தான் வருகிறது.

    இதையும் படிங்க… என் கண்ணு உங்க மேல தாங்க போகுது… ரஜினி சொன்னது ராக்கிங் மாதிரி இருந்தது.. பெப்சி உமா சொன்ன ஷாக் தகவல்..!

    ஆபாவாணன் இயக்குனர் மட்டுமல்ல. சிறந்த பாடல் ஆசிரியரும் கூட. இவர் ஊழைவிழிகள் படத்தில் எழுதிய தோல்வி நிலையென நினைத்தால் பாடல் செம மாஸ் ஆனது. அதே போல அதே படத்தில் குடு குடுத்த கிழவனுக்கு பாடலையும் எழுதியுள்ளார்.

    இரண்டு பேர் என்ற படத்தில் வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே என்ற சூப்பர்ஹிட் பாடலை எழுதியுள்ளார். இந்தப்பாடல் பள்ளி ஆண்டுவிழாவில் தவறாமல் இடம்பெறும். மாணவர்களை உற்சாகமாக நடனமாட வைத்த பாடல் இது.  ஆனால் இந்தப் படம் என்ன காரணத்தினாலோ வெளிவரவே இல்லை.

  • புலமைப்பித்தன் போட்ட வார்த்தையை மாற்ற வைத்த எம்ஜிஆர்… என்ன நடந்ததுன்னு தெரியுமா?

    1975ல் வெளியான படம் இதயக்கனி. மக்கள் திலகம் எம்ஜிஆர், ராதாசலுஜா உள்பட பலர் நடித்துள்ளனர். இது மாபெரும் வெற்றிப்படம். அறிஞர் அண்ணா எம்ஜிஆரை என் இதயக்கனி என்று சொன்னார். அதுவே படத்தின் டைட்டில் ஆனது.

    எஸ்டேட் முதலாளி ஒரு அனாதைப் பெண்ணைத் திருமணம் செய்கிறார். மனைவி மேல் ஒரு கொலைப் பழி விழும். கடைசியில் எம்ஜிஆர் அந்தப் பழிக்கான காரணத்தைக் கண்டறிகிறார். அதுதான் கதை. அரசியலில் எம்ஜிஆர் மிகவும் வேகம் எடுத்த காலம்.

    இதையும் படிங்க… ஒரே படத்தோடு காணாமல் போன நடிகர் இவர் தான்… அப்புறம் என்ன ஆனார் தெரியுமா?

    அதனால் தான் இந்தப் படத்தில் நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற என்ற பாடல் கூட இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல் பிற்காலத்தில் அவரது கொள்கைப் பரப்பும் பாடலாகவே அமைந்துவிட்டது.

    படத்திற்கு இசை அமைத்தவர் எம்ஸ்.விஸ்வநாதன். பாடலைப் பாடியவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இந்தப் பாடலில் புல்லாங்குழல், சாக்ஸபோன் ஆகிய கருவிகளின் இசை ரொம்பவே சூப்பராக இருக்கும். எம்ஜிஆரை எட்டாவது வள்ளல் என்று பலரும் சொன்ன காலம். சர்க்கரைப் பந்தல் நான்… தேன்மழை சிந்தவா… சந்தன மேடையும் இங்கே.. சாகச நாடகம் எங்கே…? இதுதான் புலமைப்பித்தன்.

    இதையும் படிங்க… கலைஞர் நூற்றாண்டு விழாவில் அஜித்? புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த தல

    தொடர்ந்து தேனொடு பால்தரும் செவ்விள நீர்களை ஓரிரு வாழைகள் தாங்கும்… தேவதை போல் எழில் மேவிட நீ வர நாளும் என் மனம் ஏங்கும்… என்று அழகாக சரணத்தை எழுதி முடித்திருப்பார் புலமைப்பித்தன்.

    அன்றைய காலகட்டத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆரைப் பொறுத்தவரை அவருக்குத் தெரியாமல் அவர் நடித்த படத்தில் எந்த ஒரு விஷயமும் நடக்காது. புலமைப்பித்தன் எம்ஜிஆருடன் முரண்பட்டவர். ஆனாலும் அவரது தமிழ்ப்புலமை எம்ஜிஆருக்கு மிகவும் பிடிக்கும். புலமைப்பித்தன் ரொம்பவே குறும்பானவர். முதலில் இன்பமே உந்தன் பேர் ஆண்மையோ என்று தான் எழுதினாராம். எம்ஜிஆருக்கு இந்த வரியில் உடன்பாடில்லை. இந்த ஆண்மைக்குப் பதிலாக வேறு ஒரு சொல்லைக் கேட்டாராம். கடைசியில் வள்ளல் என்ற வார்த்தை போடப்பட்டதாம்.

    மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

     

     

  • ஒரே படத்தோடு காணாமல் போன நடிகர் இவர் தான்… அப்புறம் என்ன ஆனார் தெரியுமா?

    1977ல் பாரதிராஜாவின் கைவண்ணத்தில் உருவானது 16வயதினிலே படம். கமல், ரஜினி இணைந்து நடித்தனர். இதில் கமல் சப்பாணியாகவும், ரஜினி பரட்டையாகவும் நடித்து இருந்தனர். படத்தின் டைட்டில் கார்டுலேயே அவர்களது கேரக்டர்கள் பெயர் தான் இடம்பெற்றன.

    மயிலாக நடித்த ஸ்ரீதேவியின் நடிப்பும், கமல் நடிப்பும் படத்தில் பல ரசிகர்களையும் கவர்ந்தன. ரஜினி பரட்டைத்தலையுடன் இது எப்படி இருக்கு என பஞ்ச் டயலாக் பேசும்போது செமயாக நடித்து இருந்தார். அதே போல் படத்தில் டாக்டராக வரும் கேரக்டரில் சத்யஜித் நடித்தார். இவருக்கும் இந்தப் படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது.

    16 வயதினிலே படத்தில் டாக்டராக வந்து மயிலை மயக்கி தன் வலையில் வீழ்த்தியவர். அந்த ஒரு படத்தில் இவர் பேசும் நுனி நாக்கு ஆங்கிலம் அப்போதைய காலகட்டங்களில் அவரை பிரமிப்பாக பார்க்க வைத்தன. அந்த டாக்டராக நடித்தவர் தான் சத்யஜித். இவரைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

    இதையும் படிங்க… அண்ணனை போல யாரும் இல்ல! விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா! வைரலாகும் புகைப்படம்

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். 1959ல் பிறந்த இவருக்கு சிறுவயதிலேயே கலைகள் மீது அதீத ஈடுபாடு உண்டு. பள்ளி, கல்லூரிகளின் கலைநிகழ்ச்சிகளில் தனது திறமையை நிலைநாட்டியுள்ளார்.

    1977ல் சிவாஜி, கமல் நடித்த நாம் பிறந்த மண் படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்தார். அதே நேரம் திரைப்பட பயிற்சி கல்லூரியிலும் படித்து அசத்தியுள்ளார். அங்கு தங்கப்பதக்கம் பெற்றாராம். அவ்ளோ படிப்பு. அந்த செய்தி அன்றைய காலத்தில் பேப்பரில் வெளிவந்ததாம். அதைப் பார்த்த இயக்குனர் பாரதிராஜவுக்கு தான் கற்பனை செய்து வைத்திருந்த கேரக்டருக்கு அவரது உருவம் கச்சிதமாகப் பொருந்தியதாம். உடனே அவரை நடிக்க வைத்து விட வேண்டியது தான் என்று முடிவு செய்தார்.

    அந்த வகையில் பாரதிராஜா தனது 16 வயதிலே படத்தில் அவரை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். இந்தப் படத்தைப் பார்த்ததும் அன்றைய பத்திரிகைகள் அவர் தமிழ்சினிமாவில் கொடிகட்டிப் பறப்பார் என்று எழுதினார்களாம். ஆனால் துரதிர்ஷ்டம். அவருக்கு அந்தப் படத்திற்குப் பிறகு எந்தவிதமான படங்களும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. டிவி சீரியல்களிலும் நடித்துப் பார்த்தார்.

    இதையும் படிங்க… மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு முதன் முதலில் தீனி போட்ட படம்! வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்தாதான

    அதன்பிறகு சத்யஜித் ஏழாவது மனிதன், அறுவடை நாள், பிக்பாக்கெட் என்று ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதன்பின் சத்யஜித் தமிழ்த்திரை உலகில் காணாமல் போனார். 2022ல் கன்னடப் படத்தை இயக்கி வருவது பற்றி பேசினார். அதுகுறித்து அவர் கூறும்போது என் கனவு நனவாகும் நேரம் வந்துவிட்டது என்றாராம்.

  • விஜயகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடியதே இதற்குத்தான்….40 வருட நண்பர் சொன்ன தகவல்…

    தமிழ்ப்பட உலகில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்குப் பிறகு கருப்பு எம்ஜிஆர் என்ற பெயரில் தன்னிகரற்ற தலைவராக உருமாறி விட்டார் விஜயகாந்த். அதிலும் அவர் இறந்தபிறகு நாளுக்கு நாள் அவரைப் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இவ்வளவு நல்ல விஷயங்கள் செய்திருக்கிறாரா கேப்டன் என்ற ஆச்சரியமான செய்திகள் சமூகவலை தளங்களில் அவ்வப்போது உலாவி வருகின்றன.

    அந்த வகையில் அவரைப் பற்றி சக நடிகர்கள், துணை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்பட மீடியா சார்ந்த பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பார்த்தசாரதியும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இதைக் கேட்கும்போதே நமக்கு மெய்சிலிர்க்கிறது. இப்படி இனி ஒரு நடிகர் வருவதற்கு வாய்ப்பே இல்லை என சொல்லத் தோன்றுகிறது.

    இதையும் படிங்க: விஜயகாந்துக்கு வராமல் நியூ இயர் பார்ட்டியில் குத்து டேன்ஸ்!.. அஜித்தை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்…

    40 வருடமாக கேப்டனுடன் பயணித்தவர் தேமுதிக துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி. இவர் விஜயகாந்த் உடனான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். பார்க்கலாமா…

    1989ல் எனக்கு திருமணம் செய்து வைத்தார். எனக்கு 2 மகன்கள். விஜயராஜ், யுவராஜ். பெயர் வைத்தது கேப்டன் தான். எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்க வைத்தது கேப்டன் தான். தமிழ்நாடு முழுவதும் மன்றத்தின் மூலமாக இப்படிப் படிக்க வைத்தார். 87ல் ஸ்கூலுக்கு வந்து தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றங்களுக்குக் கடிதம் கொடுத்தார். மே மாதம், ஜூன் மாதம் பள்ளிக் கட்டணம் செலுத்த மன்றத்தின் மூலம் உதவி செய்தார்.

    vijayakanth

    இந்த உதவியானது மன்றத்தோடு மட்டும் நிற்காமல் கஷ்டப்பட்ட வெளி ஆள்களுக்கும் போய்ச் சேர்ந்தது. உதாரணமாக நாம் மதுரையில் மாட்டுத்தாவணியில் இருந்தால் அங்குள்ள மன்றத்தின் மூலமாக படிக்க வைத்தார் கேப்டன். என்னோட பசங்க வந்து அவர் மேல அவ்ளோ பாசமா இருப்பாங்க. தையல் மெஷின், காது கேளாதோர் கருவி, ஊனமுற்றோர் வண்டி என பல சிறப்பம்சங்களை தனது பிறந்தநாள் விழாவில் செய்தார்.

    முதலில் பிறந்தநாளை கொண்டாட கேப்டனுக்கு விருப்பமில்லை. ஆனால், மக்களுக்கு நல்லது செய்கிறீர்கள் என்றால் நான் வருகிறேன் என சொல்லி பிறந்த நாளை கொண்டாட ஒத்துக்கொண்டார்’ என பார்த்தசாரதி கூறினார்.

  • விழுந்து விழுந்து சிரிக்க வைத்த காமெடி படம்… பெண்களுக்கான சூப்பர் மேட்டரையும் அப்பவே சொல்லிருக்காங்கப்பா..!

    தமிழ்ப்பட உலகில் பழைய படம்னாலே ஒரே சோகமயமாகத் தான் இருக்கும்னு சொல்வார்கள். ஒரு சிலர் ‘படம்னாலே பொழுது போக்கு தான். நாம அழறதுக்கா தியேட்டருக்கு வந்துருக்கோம்… நல்ல காமெடி படமா பார்க்கலாம்’னு வருவாங்க. ஆனா, காமெடி படத்திலயும் எங்கேயாவது ஒரு மூலையில் சென்டிமென்ட் என்ற பெயரில் அழும் காட்சி வந்து விடும்.

    ஆனால் இவற்றை எல்லாம் கடந்து முழுக்க காமெடியாக வந்தது ஒரு படம். அதுவும் 1941ல். ஏவிஎம் தயாரிப்பில் வெளியான சபாபதி தான் அந்தப் படம். இது பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகம் தான் திரைப்படமாகி உள்ளது. கதை இதுதான்.

    இதையும் படிங்க… வடிவேலு மட்டும் மதுரை வந்தா வெட்டுறதுல தப்பே இல்ல… கொதித்தெழுந்த விஜயகாந்த் மேனேஜர்..

    பணக்காரரான மாணிக்க முதலியாருக்கு ஒரே மகன் சபாபதி. பள்ளி படிப்பில் பெயில் ஆகி விடுகிறான். பரீட்சையில் பெயில் ஆனதும் தூக்கு போடுவதை போல நடித்து அப்பாவோட கோபத்தில் இருந்து தப்பிக்கிறான் சபாபதி. அதே நேரம் அவரது வீட்டின் வேலைக்காரன் பெயரும் சபாபதி தான். இவனோ அப்பாவி. சோடா உடைத்து வா என்றால் பாட்டிலை உடைத்து எடுத்து வந்து விடுவான்.

    முதலாளி சபாபதி சீட்டு கட்டு விளையாட ஆளைக் கூட்டி வா என வேலைக்காரன் சபாபதிக்கு ஆர்டர் போட, அவனோ தமிழ்வாத்தியாரை கூட்டி வந்து விடுகிறான். அப்புறம் ஒரே அலப்பறை தான்.

    இதையும் படிங்க… அதுக்கு மட்டும் உங்களுக்கு டைம் இருக்கா?… அஜித்குமாரை கழுவி ஊற்றும் பிரபலம்…

    அந்தக் காலத்திலேயே தமிழ் ஆசிரியரை டம்மி பீஸ் போல காட்டியுள்ளார்கள். மாணவர்கள் அவரைத் தான் கிண்டல் செய்வார்கள். அவர் வகுப்பில் தூங்குகிறார். மீசை வரைகிறான் மாணவன். அவனுக்கு பெண் பார்க்கிறார்கள். படித்த சிவகாமு கிடைக்கிறாள்.

    அதே போல வேலைக்காரன் சபாபதிக்கு பெண் பார்க்கிறார்கள். அவனுக்கோ குண்டுமுத்துவை திருமணம் செய்ய நேரிடுகிறது. அவனது வீட்டு வேலைக்காரி குண்டுமுத்து. அவள் தூங்கும்போது தாலி கட்டி விடுகிறான். அதற்கு அடியும் வாங்குகிறான். அதற்கு ஐடியா கொடுப்பதோ முதலாளியான சபாபதி.

    Sababathi2
    Sababathi2

    படத்தில் வேலைக்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல பெண்கல்வியும் பெரிதாகக் காட்டப்பட்டுள்ளது. அந்தக்காலத்திலேயே பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படத்தை எடுத்ததற்காகவே பாராட்டலாம். படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் சபாபதியாக வந்து கலக்குகிறார். காளி என்.ரத்னம் தமிழ் வாத்தியாராக வருகிறார்.

    இந்தப் படத்தோட சில காட்சிகளை இப்போது யூடியூப்பில் பார்த்தாலும் நாம் மெய்மறந்து சிரித்துவிடுவோம். வாய்ப்பு கிடைத்தால் பார்த்து ரசியுங்கள்.

  • எனக்கு காய்ச்சல்.. இன்னைக்கு நடிக்கமாட்டேன்!. எஸ்கேப் ஆன மன்சூர் அலிகானை மடக்கிய கேப்டன்…

    விஜயகாந்தின் மேனேஜர் ராஜேந்திரன் கேப்டனுடனான தனது அனுபங்களைப் பகிர்ந்து கொள்கிறார். என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

    கேப்டன் விஜயகாந்த் ஒரு குழந்தை மாதிரி தான். அவர் கோபப்படுவதாக சொல்வார்கள். ஆனால் நாகரிகமாகத் தான் கோபப்படுவார். அதில் ஒரு நியாயம் இருக்கும். அடுத்த நிமிஷமே அதை மறந்து அவர்களிடம் சகஜமாகப் பழகி விடுவார். எதையும் மனதில் வைத்துக் கொள்ள மாட்டார்.

    ராவுத்தர், விஜயகாந்த் ரெண்டு பேருமே எனக்கு அண்ணன் தான். இரண்டு பேரும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை போட்டு வந்தாலே களையா இருக்கும். அவங்க ஏன் பிரிஞ்சாங்கன்னே தெரியல. ஆஸ்பிட்டல்ல இப்ராஹிம் அண்ணன் உடம்பு சரியில்லாம இருக்கும்போது கேப்டனை பார்க்கணும் பார்க்கணும்னு சொன்னாரு.

    IB V
    IB V

    ஆனா அந்த டைம்ல பார்க்கல. அவங்களுக்குள்ள என்ன சண்டை, என்ன பிரச்சனைன்னு தெரியல. அப்போ அவரு ஆஸ்பத்திரிக்குப் போயி பார்த்திருந்தாருன்னா நட்பா இருந்துருக்கலாம்.

    கேப்டன் அரசியலுக்கு வந்தபிறகு தான் அரசியல், வீடு, சினிமான்னு நிறைய பஞ்சாயத்துகள், எல்லாவற்றையும் தாண்டி அரசியலில் எதிர்க்கட்சியாக வந்ததும் அவரை விட்டு எல்லா எம்எல்ஏ.க்களும் வெளியே போனதும் அவர் மனதளவில் உடைந்து போனார்.

    கேப்டன் தேர்தலில் ஜெயித்ததும் சால்வை போடப் போனேன். அப்போது ‘யார்றா நீ?’ன்னு கேட்டார். எனக்கு ஒரே அதிர்ச்சி. ‘ஏன்டா இது 300 ரூபாயா?…. நீ என் தம்பி, ஏன்டா இப்படி செலவு பண்றே?’ இது தேவையா? அப்படி திட்டினாரு. அதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் அவருக்கு மாலையோ, சால்வையோ போட மாட்டேன்.

    இதையும் படிங்க… இந்தியன் 2 படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இவ்வளவு கோடி செலவா? லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்…

    தாயகம் என்ற படத்தில் மேக் அப் போடுறதுக்கே 3 மணி நேரம் ஆச்சு. படத்துல மன்சூர் அலிகானோட முகத்தையே மாத்திருப்பாங்க. அதனால காலைல 3 மணிக்கே எழுப்பி விடுவாங்க. டெய்லி இப்படியே எழுப்பும்போது அவருக்கு கோபம் வந்து டென்ஷன் ஆகிட்டாரு. ஒருநாள் எனக்கு ஜூரம் வர்ற மாதிரி இருக்குன்னு எழுந்து போயிட்டாரு.

    உடனே கேப்டன் ‘அவனை விட்டுறாத. பொய் சொல்றான். நீயும் அவன் கூடவே போயிடு’ன்னு சொன்னாரு. அப்புறம் கேப்டனே கூப்பிட்டு ‘வேணாம். ஒழுங்கா படத்தைப் பாரு… 2 ஹெலிகாப்டர் வெயிட்டிங், பைட்டர்ஸ் இருக்காங்க. ஜூனியர் ஆர்டிஸ்ட் இருக்காங்க. இவ்ளோ ஆளுங்க இருக்காங்க. ஒழுங்கா நடி’ன்னு சொன்னாரு.  அப்புறம் மன்சூர் அலிகான்  நார்மலுக்கு வந்துட்டாரு’ என ராஜேந்திரன் கூறினார்.

  • வடிவேலு மட்டும் மதுரை வந்தா வெட்டுறதுல தப்பே இல்ல… கொதித்தெழுந்த விஜயகாந்த் மேனேஜர்..

    கேப்டன் விஜயகாந்தின் மேனேஜர் ராஜேந்திரன் விஜயகாந்த் பற்றிய பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றில் முக்கியமாக கேப்டனின் இறுதி அஞ்சலியில் பங்கேற்காத வடிவேலுவுக்கு சாட்டையடி கொடுத்துள்ளார். அதுபற்றி பார்ப்போமா…

    வடிவேலு ஒரு விஷப்பாம்பு. அவரு பத்திப் பேசக்கூடாது. அவரு குடும்பம். அவருக்குப் பணம் வரணும். அதை மட்டும் தான் பார்ப்பாரு. மக்களுக்கு ஒரு ஸ்பீச் கூட கொடுக்க மாட்டாரு. சர்க்கரை தேவன் படத்துல காமெடியா வர்றாரு வடிவேலு. மாற்றுத்துணி கிடையாது. இன்னைக்குப் போட்டா நாளைக்கு போடுறதுக்கு துணி கிடையாது. எல்லாமே கேப்டன் வாங்கிக் கொடுத்தது தான். 6 வேஷ்டி 6 சட்டை வாங்கிக் கொடுத்தாரு.

    அவருக்கு சாப்பாடு போட்டு அழகு பார்த்தது கேப்டன். இன்னைக்கு அவரு வரல. சினிமான்னா எல்லாரும் வரணும். நல்லதுக்கும், கெட்டதுக்கும் வரணும். பணத்தை மட்டும் பார்க்கக்கூடாது. வடிவேலு மட்டும் இதுவரைக்கும் ஒண்ணுமே பண்ணல. லட்டரோ, இல்லேன்னோ போன் பண்ணியோ அண்ணி இது மாதிரி வர முடிலன்னு சொல்லிருக்கலாம். ஏதாவது ஒரு பொய் சொல்லி பண்ணிருக்கலாம். அப்புறம் மக்கள் கொஞ்சம் மறந்து அவரை ஏத்துக்கிட்டு இருப்பாங்க.

    இதையும் படிங்க… கொலைமிரட்டல் விட்ட தயாரிப்பாளர்.. பயந்து கண்ணீர்விட்ட நடிகர்… கேப்டன் செஞ்ச தரமான சம்பவம்..

    இப்ப அது சாத்தியமில்ல. ஒருத்தர் மதுரையில இருந்து சொல்றாரு. நீ வாடா மதுரைக்கு உன்னை வெட்டுறேங்குறாரு. மதுரைக்காரங்கள் எல்லாம் அவ்ளோ பாசமானவங்க. வா மச்சான்…னு சொன்னா போதும். என்ன மாப்ளேன்னு கேட்பாங்க. அந்த உடனே சட்டையைக் கழட்டிருவாங்க. அந்த மாதிரி பாசத்துக்குக் கட்டுப்பட்டவங்க.

    இதுல எப்படியோ தப்பித்தவறி வடிவேலு பொறந்து வந்து சினிமாவுக்கு வந்துட்டாரு. அதுவும் கேப்டன் மூலமா வரணும்னு இருந்துருக்கு. அந்த நன்றி மதுரைக்காரங்களுக்கு நிறைய பேருக்கு இருக்கு. ஆனா அவருக்கு அது இல்ல.

    இதையும் படிங்க… இந்தியன் 2 படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இவ்வளவு கோடி செலவா? லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்…

    கேப்டனுக்கு இன்னைக்கு இவ்ளோ புகழ் இருக்குன்னா அதுக்குக் காரணம் அவரோட குணம். ஒருத்தர் தூங்கிக்கிட்டு இருந்தா அவரை எழுப்பாதேன்னு சொல்லுவாரு. அந்த இடத்துல காரை விட வேண்டியிருக்கு. எழுப்பித்தான் ஆகணும்னு டிரைவர் எழுப்பினாலும் அவருக்கு அடி தான். நான் தான் அவனை எழுப்ப வேணாம்னு சொன்னேன்லன்னு சொல்வாரு. அதே மாதிரி, அவரு வரும்போது சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்கன்னா எழுந்து நிக்கக்கூடாது. சாப்பிடும்போது எழுந்திருக்கக்கூடாதுன்னு சொல்வாரு. உன்னை எழுந்துரிக்க சொன்னேனா…. உட்கார்றான்னு திட்டுவாரு.

  • இந்தியன் 2 படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இவ்வளவு கோடி செலவா? லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்…

    1996ல் வெளியான இந்தியன் படத்தின் பிரம்மாண்டமான வெற்றியின் தொடர்ச்சியாக 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 வர உள்ளதால், இந்தப் படத்தின் மீது ஏகப்பட்ட எதிபார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்தியன் படத்தில் தாத்தாவாக வரும் கமல் மேக்அப்பில் மிரட்டியிருப்பார். அதே போலத் தான் இந்தியன் 2லும் மிரட்ட உள்ளார்.

    இதையும் படிங்க… சந்தானம் படத்தில் அட்ஜெஸ்மெண்ட் கேட்ட அப்பா வயது இயக்குனர்!.. பகீர் கிளப்பும் யாஷிகா ஆனந்த்…

    இந்தியன் படத்தில் பின்னணி இசையிலும், பாடல்களிலும் ஏ.ஆர்.ரகுமான் சக்கை போடு போட்டு இருந்தார். அதே போல இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசை அமைந்துள்ளதாம். இந்தியன் 2 படத்தில் மறைந்த நகைச்சுவை ஜாம்பவான் விவேக்கும், வில்லனாக நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து இருப்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.

    இந்தியன் 2 படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு படத்தின் துவக்க நாளில் இருந்தே வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இப்போது படம் எப்போது திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கோடை விருந்தாக வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

    Sh-Ani
    Sh-Ani

    அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. படத்தின் பட்ஜெட்டில் பெரும்பாலான செலவு இதற்குத் தானாம். இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் ஷங்கர் வெளியீட்டு தேதியைப் பற்றி அறிவிப்பாராம்.

    தொடர்ந்து இந்தியன் 3 படத்திற்கான வேலையும் நடந்து வருவதால், அந்தப் படமும் இந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் உள்பட பலர் உலகநாயகனுடன் சேர்ந்து நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் ஸ்டூடியோவுடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.

    அதே போல அனிருத்தின் இசை படத்திற்கு பக்கபலமாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது. விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமலுக்கு வரும் படம் என்பதால் கமலும் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்கமான நம்பிக்கையுடன் செயலாற்றி வருகிறார். அதே போல் மணிரத்னத்துடன் கைகோர்க்கும் கமல் தக் லைஃப் படத்திற்கும் விரைவில் படப்பிடிப்புத் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.