Author: sankaran v

  • அலார்ட்டா இருக்கும் தளபதி!.. விஜய்க்காக எல்லாத்தையும் தியாகம் செய்யும் வெங்கட்பிரபு!..

    கோட் படத்திற்கான தாய்லாந்து, சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஸ்ரீலங்கா, ராஜஸ்தான், இஸ்தான்புல் ஆகிய இடங்களிலும் இதற்கான படப்பிடிப்பு நடைபெற உள்ளது. வரும் மே மாதம் படத்தின் ரிலீஸ் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, ஜெயராம், பார்வதி நாயர், அஜ்மல் அமீர், பிரேம்ஜி, வைபவ், ஆகாஷ் அரவிந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் யுவன் சங்கர் ராஜா.

    GOAT
    GOAT

    விஜய் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். அதனால் தானோ படத்திற்கு பெயரே கோட் அதாவது (கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்பதன் சுருக்கமாக) என்று வைக்கப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

    படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு. இவரைப் பற்றியும், படத்தைப் பற்றியும் பிரபல யூடியூபர் அந்தனன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

    தளபதி விஜய் கோட் படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார். இது விஜய்க்கு 68வது படம். இதற்கான பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அந்தப் படத்திற்கான வேலைகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறாராம் வெங்கட்பிரபு.

    இதையும் படிங்க… ரைட்டு! தக் லைஃபில் நடிக்க இருக்கும் பிரபல நடிகை! திரிஷா ஆசையில மண்ணப்போட்டீங்களேப்பா!

    இந்தப் படத்திற்கு முன்பு வரை அவருக்குத் தினமும் சாயங்காலம் பார்ட்டியில் தான் இருப்பார். அவரோட பார்ட்டில விஜய் கலந்துக்கவே இல்லை. ஆனால் வெங்கட் பிரபு கோட் படத்திற்குப் பிறகு மாசத்திற்கு ஒரு பார்ட்டி என்று போய் விட்டார்.

    விஜய் அரசியலுக்கு ஆயத்தமாகி விட்டார். வருங்காலத்தில் அரசியல் தலைவராகவும் மாறப் போகிறார். அதனால எங்கேயாவது ஒரு ஸ்டார் ஓட்டல்ல குடித்து விட்டு ஆட்டம் போட மாட்டார். அது பின்னாளில் பெரிய பிரச்சனையை உருவாக்கும். புதுசா ஒரு பாட்டில் வந்ததுன்னா இன்னிக்கு சரக்கு இதுதான்னு டுவிட்டர்ல போஸ் கொடுப்பாராம் வெங்கட்பிரபு.

    மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், சினிமா விமர்சகருமான அந்தனன் தெரிவித்துள்ளார்.

     

  • அடுத்தடுத்து 3 படங்கள்!.. ரஜினிக்கு உதவும் மந்திரங்கள்.. சீக்ரெட்டை வெளியே சொன்ன பிரபலம்…

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். வரும் கோடைகாலத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் வெளிவர உள்ளது. தொடர்ந்து அவருக்குப் பல படங்கள் வர உள்ளன. இதுபற்றி பிரபல யூடியூபரும், சினிமா விமர்சகருமான அனந்தன் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். பார்ப்போமா…

    ரஜினிக்கு லால்சலாம், வேட்டையன், தலைவர் 171 என தொடர்ந்து படங்கள் வர உள்ளன. அவர் எப்போதும் உற்சாகமாகவே இருப்பாராம். அதற்குக் காரணம் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் நாட்டமாக இருக்கிறார். பொது மேடைகளில் பேசும் போது முத்திரைகள் மற்றும் தியானம் குறித்து பேசுவார். அப்போது எந்தெந்த முத்திரைகளில் இருந்தால் என்னென்ன பலன்கள், புத்துணர்ச்சி கிடைப்பதற்கு என்ன முத்திரை, தியானம் என பேசுவார். அதை எல்லோரும் செய்தால் பலன் கிடைக்கும் என்றும் சொல்லி ஊக்கப்படுத்துவார்.

    இதையும் படிங்க… சைனிங் கன்னத்தை குளோசப்பில் காட்டி மயக்கும் ரம்யா பாண்டியன்!. எக்கச்சக்கமா குவியுது லைக்ஸ்…

    அவருடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்த பலரும் இதைத் தான் சொல்வார்களாம். தற்போது வேண்டுமானால் அவருக்கு ஓய்வு தேவைப்படலாம். படப்பிடிப்பைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து விட்டு கிளம்பி விடுவார். ஆனால் ஒரு காலத்தில் நைட் 12 மணி வரை சூட்டிங் நடக்குமாம். அப்போது கூட 1 மணிக்கு கிளம்பி விட்டு அதிகாலை 4 மணிக்கு சூட்டிங் வைத்தாலும் ப்ரஷாக வந்து நிற்பாராம் ரஜினி. இதற்குக் காரணம் அவர் செய்து வரும் முத்திரைப் பயிற்சியும், தியானமும் தானாம். இதை நீண்டகாலமாகவே செய்து வருகிறாராம்.

    இதையும் படிங்க… வாய்ப்புக்காக அஜித்திடம் போராடிய இயக்குனர்!… சொல் பேச்சு கேட்கலைல வாய்ப்பே கிடையாது!…

    அவர் உடலில் பல சர்ஜரிகள் நடந்து இருந்தாலும் இன்னும் சுறுசுறுப்பாகவும் உ ற்சாகமாகவும் அவர் நடந்து வருகிறார் என்றால் அதற்குக் காரணமே இந்த ஆன்மிகப் பயிற்சிகள் தானாம். இப்படியே அவர் தொடரும்பட்சத்தில் இன்னும் 10 ஆண்டுகள் வரையிலும் கூட அதே சுறுசுறுப்பாக நடித்தாலும் ஆச்சரியமில்லை. தற்போது காலத்திற்கு ஏற்பவும், தனது வயதிற்கு ஏற்றவாறும் நடிக்கத் தொடங்கி விட்டார் ரஜினி. இப்போது மாரி செல்வராஜ் உடன் கதை கேட்டு ஓகே சொல்லி விட்டாராம். ஆனால் இந்தப் படம் வர இன்னும் 2 வருஷமாகி விடும்.

    மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் அனந்தன் தெரிவித்துள்ளார்.

  • பாலசந்தரைக் கண்ணீர் விட்டு அழ வைத்த கண்ணதாசன்… அந்தப் பாடல் தான் காரணம்.!

    முதன்முதலாக இயக்குனர் சிகரம் பாலசந்தர் கவியரசர் கண்ணதாசனுடன் கைகோர்த்த படம் இது. படத்தின் பெயர் பாமா விஜயம். 1967ல் பாலசந்தர் இயக்கிய படம். இது அவருக்கு 4வது படம். முதல் படம் நீர்க்குமிழி. இது 1965ல் வெளியானது.

    பாமாவிஜயம் படத்தைப் பொறுத்தவரை வரவுக்கு மீறி செலவு செய்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது தான் கதை. படத்தில் முத்துராமன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், சௌகார் ஜானகி, காஞ்சனா மற்றும் ராஜஸ்ரீ உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் பாடல்கள் அனைத்தையும் கண்ணதாசன் எழுதியுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். எல்லாமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    படத்தை முதலில் 13 ஆயிரம் அடி வரை எடுத்து விட்டார் பாலசந்தர். ஆனாலும் அவருக்கு அதிருப்தி. நினைத்த மாதிரி வரவில்லை. ஏதோ ஒன்று குறைகிறது. படத்தில் முக்கியமாக கேரக்டரில் பாலையா நடித்துள்ளார்.

    BV
    BV

    தனது உதவியாளர்களை அழைத்து இதுபற்றி பேசினார். அப்போது பாலையா வரவுக்கு மீறி செலவு செய்யும் பெண்ணுக்கு அதை உணர்த்துவது போன்று ஒரு பாடலைப் போட்டால் நன்றாக இருக்கும் என்றனர். அதற்கு கண்ணதாசன் தான் பொருத்தமானவர் என்றும் ஆலோசனை கூறினர். உடனே பாலசந்தர் கண்ணதாசனை சந்தித்தார். அவருக்கு படத்தின் முழு கதையையும் சொன்னார். அது மட்டுமல்லாமல் எடுத்தவரை அத்தனை படத்தையும் போட்டுக் காட்டினார்.

    கதையை தெரிந்து கொண்ட கண்ணதாசன், வருமானத்திற்கு அதிகமாக செலவு பண்றாங்க. வரவு எட்டணா செலவு பத்தணா, அதிகம் ரெண்டனா, கடைசியில் துண்டனா என்ற டயலாக்கை சொல்கிறார். இதைக் கேட்ட பாலசந்தர் தனது படத்தை ரெண்டே வரிகளில் கவிஞர் சொல்லிவிட்டாரே என ஆச்சரியப்பட்டார். இதையே பாடலாக்கிக் கொடுத்து விடுங்க. அது போதும் என்கிறார்.

    இதையும் படிங்க… ஆசையாய் கமலை இயக்க போன ஹெச்.வினோத்!… இதெல்லாம் கதையா? கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா?

    இன்னும் நான் பாடல் எழுதவே இல்லை. இது கதை போகிற போக்கில் நான் சொன்னது என்றார். இதுதான் படத்திற்குப் பொருத்தம். அப்படியே இருக்கட்டும். முழுப்பாடலைக் கொடுங்க என்று பாலசந்தர் கேட்டாராம். அடுத்து முழுப்பாடலையும் கண்ணதாசன் எழுதிக் கொடுத்துள்ளார். இதைப் படித்துப் பார்த்த பாலசந்தர் கண்களில் கண்ணீர் வந்ததாம். அந்த அளவு அவருக்கு அதுவும் முதல் சந்திப்பிலேயே பெரிய டச்சைக் கொடுத்துள்ளார் கவியரசர் கண்ணதாசன்.

  • 80களில் குடும்பப் பாங்கான படங்களில் தெறிக்க விட்ட விசு… எப்படி நடந்ததுன்னு தெரியுமா?

    நடிகர் விசு ஒரு சிறந்த நடிகர், இயக்குனர், எழுத்தாளர், பேச்சாளர். இவரது படங்கள் என்றாலே அதில் குடும்பங்களின் அன்றாடம் நடக்கும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வும் தான் வரும். அதனால் விசு படங்களுககு தாய்க்குலங்களின் பேராதரவும் இன்று வரை உண்டு. அவர் படங்களைளப் பார்த்தே குடும்பங்களில் நடந்த பல சிக்கல்கள் தீர்ந்துள்ளனவாம்.

    மணல் கயிறு, குடும்பம் ஒரு கதம்பம், வேடிக்கை என் வாடிக்கை, டௌரி கல்யாணம், சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி போன்ற படங்களைப் பார்த்தாலே தெரிந்து விடும்.

    இதையும் படிங்க… வறுமையில் வாடும் விஜயகாந்த் சகோதரர்கள்! ஊருக்கே உதவியவர் – அவர் தம்பிகளுக்கு இப்படி ஒரு நிலைமையா?

    விசு படங்களின் உள்ள இன்னொரு சிறப்பு என்னவென்றால் அவரது கதாபாத்திர தேர்வு ரொம்பவே அருமையாக இருக்கும். கதைகளத்துடன் ஒன்றிப்போகும் கதாபாத்திரங்களாகவே நடிகர்கள் மாறிவிடுவர். இன்னொன்று வசனம். அவரது படங்களில் வசனங்கள் ஆணி அடித்தாற் போல நச் ந்சென்று இருக்கும்.

    பெண்கள் பற்றி அவர் படம் எடுக்கும்போது ஒரு தந்தை மகளைப் பார்க்கும் பார்வையில் தான் எடுப்பார். விசுவால் எப்படி சராசரி குடும்பத்துக்குள் நடக்கும் சுவாரசியமான விஷயங்களைக் கொண்டு வர முடிகிறது? இதற்கு அவரே ஒரு பேட்டியில் பதில் தெரிவித்துள்ளார்.

    நான் கதையை சுவாரசியமாக்க இரு நேரெதிர் கேரக்டர்களைக் கொண்டு வருவேன். ஒரு அடங்காப்பிடாரி பணக்கார மருமகளுக்கு ஜோடி ஒரு அப்பாவி. பயந்த நல்ல ஏழையான மாமியார் ஒரு பக்கம் என்றால் அவருக்கு அடக்கமான குணமான மருமகள். ஆனால் அவருக்கோ பணத்திமிர் பிடித்த மோசமான மாமியார். இந்த நால்வரையும் இணைக்கும் கதாபாத்திரத்தில் தான் விசு வருவார்.

    இதையும் படிங்க… யார்கிட்ட இருந்து வேணுனா தப்பலாம்! ப்ளூ சட்டை மாறன்கிட்ட முடியுமா? சிவகார்த்திகேயனை கிழித்து தொங்கவிட்ட பதிவு

    கதையில் ஒரு எக்ஸ்ட்ரா கேரக்டர் கூட வைப்பார். அந்த கேரக்டர் படத்தின் சக்ஸஸ் காரணமாகவே சேர்க்கப்பட்டு இருக்கும். உதாரணத்திற்கு சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வரும் மனோரமா கதாபாத்திரத்தைச் சொல்லலாம்.

    80களில் தமிழ்நாட்டில் குடும்பங்கள் எப்படி இருந்தன என்பதை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார் விசு. நடுத்தர வர்க்கத்து அண்ணன் தங்கைக்கு கல்யாணம் செய்து வைக்கும் கதை. இப்போது பெண்கள் கண்டிஷன் போடுவது போல அந்தக்காலத்தில் கல்யாணத்திற்கு ஆண்கள் கண்டிஷன்கள் போட்டார்கள். திருமணத்திற்குப் பிறகு நடக்கும் களேபரங்கள் தான் கதை. இவ்வாறு தெரிவித்துள்ளார் விசு.

  • எம்ஜிஆரை கவனிக்காமல் கால் மேல் கால் போட்டு இருந்த நடிகை… அப்புறம் நடந்தது இதுதான்!..

    ஹீரோயின்களில் பலர் சினிமா சான்ஸ் கிடைப்பதற்கு முன்பே நடிப்பதற்கு ஆர்வம் காட்டியவர்களாகத் தான் இருப்பார்கள். அவர்கள் தான் நடிப்பிலும் ஜொலிப்பார்கள். ஆர்வமே இல்லாமல் எந்த ஒரு வேலையையும் திறம்பட செய்ய முடியாது என்பதே உண்மை. ஆனால் இவர் கொஞ்சம் விதிவிலக்கு. சினிமாவே பார்த்தது இல்லையாம். நடிப்பது என்றால் என்ன என்பதே தெரியாதாம். ஆனால் எல்லோரும் சொல்வதைக் கேட்டு நடிக்க வந்து விட்டார். களத்தில் குதித்ததும் நடிப்பும் தானாக வந்துவிட்டது.

    அவர் வேறு யாருமல்ல. அந்தக்கால நடிகை பாரதி. இவர் உயர்ந்த மனிதன், நாடோடி, அவளுக்கென்று ஒரு மனம், மாயமோதிரம், தங்கச்சுரங்கம் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். பார்ப்பதற்கு அச்சு அசலாக வைஜெயந்திமாலா மாதிரியே இருப்பார். அவர் பேச்சும், நடையும் நளினமானது. தனது சினிமா அனுபவங்களை இப்படி சொல்கிறார்.

    இதையும் படிங்க… சிவாஜி கட்டிய தாலியை ரொம்ப நாளா மறைத்து வைத்திருந்த பத்மினி…. அப்புறம் நடந்தது தான் ஹைலைட்..!

    நான் காலேஜில் படிக்கும் போது நிகழ்ச்சிகளில் நடனமாடுவேன். அந்தப் போட்டோக்களை நோட்டீஸ் போர்டில் ஒட்டி இருப்பார்கள். நடிகர் கல்யாண்குமார் அப்போது புதுமுகம் தேடிக்கொண்டு இருந்தார். என்னை நடிக்க அழைத்தார்கள். எனக்குப் பிடிக்கவில்லை.

    எங்க குடும்பத்தில் படம் பார்க்க கூட தியேட்டருக்கு அழைத்துப் போக மாட்டார்கள். எனக்கு நடிப்பதற்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. என் கல்லூரி ஆசிரியர்கள் என்னை நீ நல்லா அழகா இருக்க. நல்லா நடனம் ஆடுறே. வந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாத. நடின்னு சொன்னாங்க. அப்புறம் நடிக்க ஆரம்பிச்சேன்.

    2 வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தின்னு பல மொழிப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த சமயத்துல அந்தந்த மொழிகளைக் கற்றுக்கொண்டேன். இன்று 8 மொழிகள் எனக்குத் தெரியும்.

    bhaathi22
    bhaathi

    தமிழ்ல என்னோட முதல் படமே உயர்ந்த மனிதன். சிவாஜியுடன் இணைந்து நடித்தேன். அடுத்து எம்ஜிஆருடன் நாடோடி படத்தில் நடித்தேன்.

    தெலுங்கு, கன்னட படங்களிலும் நிறைய ஹிட்டுகளைக் கொடுத்துள்ளேன். முதல்ல நடிக்கும்போது மனதுக்குள் அழுது கொண்டே இருந்தேன். அதன்பிறகு இது கடவுள் கொடுத்த வரம்னு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். இதுதான் தொழில் என்றதும் அதில் கவனம் செலுத்தினேன். பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டில் தான் ஆர்வம். ஒலிம்பிக் கனவுகள் எல்லாம் இருந்தது. ஆனால் விதி வலியது என்பதை பின்னர் தான் தெரிந்து கொண்டேன்.

    இதையும் படிங்க… காதலிக்காக நிஜமாகவே பச்சை மிளகாயைத் தின்று அசத்திய தனுஷ்… அட அவர் அப்பவே அப்படித்தான்!..

    நடிக்க வந்ததும் என் பெயரை மாற்ற வேண்டும் என்று எம்ஜிஆர் சொன்னார். அது எனக்குப் பிடிக்கவில்லை. அப்போது நான் மறுத்துவிட்டேன். கால் மேல் கால் போட்டு உட்கார்வது எனது பழக்கம். மற்றவர்கள் சொன்னதால் எம்ஜிஆர் முன் மட்டும் அப்படி இருக்க மாட்டேன். அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் உடனே கால் மேல் கால் போட்டு விடுவேன்.

    ஒருமுறை நான் இப்படி இருந்தபோது எம்ஜிஆர் கவனித்து விட்டார். உடனே இயக்குனர் பந்துலு அவ சின்னப்பொண்ணு தெரியாம செய்துட்டா என்றாராம்.

  • இளையராஜா இசையில் அற்புதம்… அதிசயம்… ஒரே ராகத்தில் மாறுபட்ட இரு பாடல்கள்…!

    ராகதேவன் என்று தமிழ்ப்பட உலகில் அழைக்கப்படும் இசை மேதை இளையராஜா. இவரது இசையில் அனைத்துப் பாடல்களும் முத்தானவை தான். ஒரே ராகத்திலான இரு வேறு பாடல்களில் இவர் காட்டும் வித்தியாசங்கள் பற்றி ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

    ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த பாடல். கிழக்கே போகும் ரயில். பாரதி ராஜா இயக்கத்தில் இளையராஜா இசை அமைத்த பாடல். கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதியிருந்தார். மலேசியா வாசுதேவன், ஜானகி பாடியுள்ளார். மலர்களே நாதஸ்வரங்கள் பாடல்.

    EPEMT
    EPEMT

    எம்புருசன் தான் எனக்கு மட்டும் தான் படத்தை மனோபாலா இயக்கியுள்ளார். விஜயகாந்த், சுஹாசினி நடித்துள்ளனர். வாலி எழுதிய பாடல். அது என்னன்னா பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா. இந்தப் பாடலும் அதே ஹம்சத்வனி ராகம் தான்.

    இந்த இரு பாடல்களையுமே நாம் கேட்டதும் ரசிக்க ஆரம்பித்து விடுவோம். கிழக்கே போகும் ரயில் படத்தில் மலர்களே பாடல் வைக்கப்படவில்லை. இந்தப் பாடலில் காதலர்கள் இருவருக்கும் திருமணக் கனவு வருகிறது. அதை ஒட்டி எடுக்கப்பட்ட பாடல் இது.

    அதே போலத் தான் பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா பாடலும். இதுவும் திருமணக் கனவு பாடல் தான். இந்தப் பாடலிலும் திருமணம் நடக்கிறது. குழந்தை பிறக்கிறது. அதன் பிறகும் கணவன் சும்மா இருக்காமல் கட்டில் ஒரு பக்கம் இருக்கட்டும். தொட்டில் ஒரு பக்கம் இருக்கட்டும் என்கிறான். நாம அப்படி இப்படி இருப்போம் என்கிறான்.

    KPR
    KPR

    இளையராஜாவும் அந்தப் பாடல்களுக்கு ஏற்றவாறு மலர்களே பாடலில் நாதஸ்வரத்தில் அசத்தியிருப்பார் இளையராஜா. புல்லாங்குழல், ஸ்டிரிங்ஸ் இசையும் கேட்பதற்கு நயமாக இருக்கும். அதே நேரத்தில் பூ முடித்து பாடலில் அதிகபட்சமாக ஸ்ட்ரிங்ஸ்சும், புல்லாங்குழலும் தான் இடம்பெறும்.

    மலர்களே பாடலில் ஜானகி குரலைத் தவழச் செய்து இருப்பார். மலேசியாவும் பாடுவார். அதனுள் ஜானகியின் குரலும் அனாயசமாகப் புகுந்து ராகம் பாடுவது கேட்கவே இதமாக இருக்கும்.

    இரண்டுமே திருமணத்திற்கான பாடல் தான். மலர்களே பாடலில் திருமணத்திற்குப் பிறகு லாலி பாடுவாங்க. அற்புதமாக இருக்கும். அதே நேரத்தில் பூ முடித்து பாடலில் ஐயர் மந்திரம் ஓதும்போது போகிற போக்கில் இடை இசையாக பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. இவை தான் இரு பாடல்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை.

    மலர்களே பாடல் அந்தரத்தில் மிதப்பது போல இருக்கும். ஆரம்பத்தில் ஸ்பீடாகச் செல்லும். ஆனால் ஜானகி இழுத்துப் பிடிச்சி உட்கார வைத்து இருப்பார். அதே நேரத்தில் புல்லாங்குழல் ஸ்ட்ரிங்ஸ் போட்டு ஸ்பீடாகச் செல்லும். ஆனால் பாட்டு வேகமாகப் போவது போல இருக்கும். ஆனால் அது கிடையாது. ரெண்டுமே ஒரே டெம்போ தான். பாடகர்கள் தான் குரலில் ஜாலம் காட்டியிருப்பார்கள். இரண்டு பாடல்களையும் கலந்து கலந்து எப்படி வேண்டுமானாலும் பாடலாம். பாடிப்பார்த்தால் உங்களுக்கேத் தெரியும்.

    மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், சினிமா விமர்சகருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

  • காதலிக்காக நிஜமாகவே பச்சை மிளகாயைத் தின்று அசத்திய தனுஷ்… அட அவர் அப்பவே அப்படித்தான்!..

    தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகம் ஆனார். அப்போது அவரது உடலைப் பார்த்து இவரெல்லாம் ஹீரோவா என ஒரு சிலர் கிண்டல் செய்தனர். தொடர்ந்து அவரது படங்கள் கவர்ச்சியை நம்பி ஓடுவதாக சிலர் தெரிவித்தனர். நடிப்பைப் பொறுத்தவரை அண்ணன் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் இருந்து நடிப்பில் திறமையைக் காட்டத் தொடங்கினார்.

    தொடர்ந்து சிம்புவுடன் போட்டி போடுவதாக ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் தனக்கான இடத்தைப் பிடித்துக் கொண்டார். அதன்பின் அவரது நடிப்பில் பல பரிமாணங்கள் தென்பட்டன. அவரது திறமையை மெருகேற்றி திரையுலகில் தனக்கான ஒரு தனியிடத்தைப் பிடித்து விட்டார்.

    இதையும் படிங்க… ஏங்க வெங்கட் பிரபுக்கு இந்த பழக்கமே இல்ல!… அப்புறம் எப்படி? கோட்டும் காப்பி தான்!

    ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர் செல்வம் நடிகர் தனுஷ் பற்றி படப்பிடிப்பில் நடந்த ஒரு சில சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

    பூபதி பாண்டியன் ஒரு நல்ல எழுத்தாளர். இவருக்கும் நடிகர் தனுஷூக்கும் நல்ல நட்பு இருந்து வந்தது. தனுஷ் இன்று இவ்ளோ பெரிய உயரத்துல இருக்காருன்னா அதுக்கு அவரு பயங்கரமா ஹார்டு ஒர்க் பண்ணிருக்காரு.

    DK
    DK

    தேவதையைக் கண்டேன் படத்துல ஒரு ரியாலிட்டி ஷோ இருக்கும். காதலிக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்னு சொல்வார் தனுஷ். முதலில் பச்சை மிளகாயை சாப்பிடுவது போல ஒரு சீன் வந்தது. பச்சை மிளகாயை சாப்பிடுறதுக்குப் பதிலா பீன்ஸ் சாப்பிடுங்க. அதை நாம மிளகாய் சாப்பிடுற மாதிரி காட்டிரலாம்னு பூபதி சொன்னார்.

    இதையும் படிங்க… திடீரென தனுஷ் படத்தை இயக்க இதான் காரணமாம்!.. அடங்க… நீங்க வெவரம் தானுங்கோ!

    அதெல்லாம் வேணாம். மிளகாயை சாப்பிட்டா தான் அந்த உணர்ச்சி ரியலா இருக்கும். நான் சாப்பிடுறேன். ஒரு தட்டுல சீனியும், இன்னொரு பக்கெட்டுல தண்ணீரும் வைங்கன்னு சொன்னாரு. ஷாட் ரெடின்னதும் டக் டக் டக்னு 15 லருந்து 20 பச்சை மிளகாயை அப்படியே சாப்பிட்டாரு. கண்ணுல இருந்து தண்ணீ…யா வருது. கண்ணெல்லாம் சிகப்பா ஆயிட்டு. நமக்கே வந்து என்ன இப்படி நடிச்சிட்டாரேன்னு ஆச்சரியமா இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதே போல சிவாஜி படத்தில் தனுஷின் மாமனரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் பச்சை மிளகாயை சாப்பிடுவது போல ஒரு காமெடி சீன் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • சிவாஜி கட்டிய தாலியை ரொம்ப நாளா மறைத்து வைத்திருந்த பத்மினி…. அப்புறம் நடந்தது தான் ஹைலைட்..!

    தமிழ்ப்பட உலகில் ரசிகர்கள் பத்மினியை நாட்டியப் பேரொளி என வர்ணித்தார்கள். அதற்கு அவர் 100 சதவீதம் பொருத்தமானவர். கேரளாவில் ஒரு சிற்றூரில் பிறந்தவர் இவர். இவருக்கு லலிதா, ராகினி என இரு சகோதரிகளும் உண்டு. சிறு வயதிலேயே இவர்கள் மயில் போல துள்ளிக்குதித்து நடனமாடி அங்குள்ளவர்களை மகிழ்விப்பார்களாம்.

    ஆனால் இந்த மூன்று பேர்களிலும் முத்தாய்ப்பாக ஜொலித்தவர் நடிகை பத்மினி தான். இவர் நாட்டியத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் மிளிர்ந்தார்.

    இவர் முதன் முதலாக இந்திப்படத்தில் தான் காலடி எடுத்து வைத்தார். அந்தப் படத்தின் பெயர் கல்பனா. அதன்பின் 1949ல் இவர் தமிழ்த்திரை உலகில் ஜொலிக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வாழ்க்கை, பவளக்கொடி, சந்திரலேகா என பல சூப்பர்ஹிட் படங்கள் வந்தது. பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பினார்.

    எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து அசத்தினார். ரசிகர்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் அவர் எந்தப் படத்தில் நடித்தாலும் படம் சூப்பர்ஹிட் தான் என்றாகி விட்டது.

    இதையும் படிங்க… கலைஞர் 100வது விழாவுக்கு ‘நோ’ சொன்ன விஷால்!.. பின்னணியில் இருப்பது அந்த நடிகராம்!…

    அவர் ஜெமினியுடன் நடித்த பல படஙகளுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. எம்.ஆர்.ராதாவுடன் அவர் நடித்த சித்தி படம் மாபெரும் வெற்றியைக் கொடுத்தது. அந்த சமயத்தில் அவரது நடிப்பைப் பத்திரிகைகள் எல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டு புகழ்ந்து தள்ளின.

    எம்ஜிஆருடன் மன்னாதி மன்னன், மதுரை வீரன் என பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தினார். சிவாஜியுடன் ராஜா ராணி, தங்கப்பதுமை, தெய்வப்பிறவி, தில்லானா மோகனாம்பாள், பேசும் தெய்வம், வியட்நாம் வீடு, இருமலர்கள் என 50க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களில் நடித்து விட்டாராம். எந்தக் கேரக்டரைக் கொடுத்தாலும் அதில் திறம்பட நடித்து அசத்தி விடும் ஆற்றல் படைத்தவர் பத்மினி.

    அந்த வகையில் அவருக்கும் சிவாஜிக்கும் தான் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அந்தக் காலத்தில் அழகான ஜோடிப் பொருத்தம் என்றால் சிவாஜி, பத்மினியைத் தான் ஒப்பிட்டு சொல்வார்களாம்.

    TM
    TM

    இந்த ஜோடி குறித்த ஒரு சுவையான தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஒரு யூடியூப் சேனல் ஒன்றில் குட்டி பத்மினி தெரிவித்துள்ளார். ஒரு நாள் சிவாஜி சூட்டிங் முடிந்து கமலாவை திருமணம் செய்ய அவசரம் அவசரமாக புறப்பட்டாராம். அதே நேரத்தில் படப்பிடிப்பு ஒன்றில் பத்மினிக்கு தாலி கட்டும் காட்சியும் எடுக்கப்பட்டதாம். இங்கே தாலி கட்டிய பிறகு அவர் நிஜத்தில் தாலி கட்ட சுவாமி மலைக்குச் சென்றாராம்.

    ஆனால் பத்மினியோ சிவாஜி கட்டிய தாலியை கழட்டவே இல்லையாம். அந்த தாலி மேல் அவருக்கு அவ்வளவு மரியாதை. பல மாதங்களாக ஜாக்கெட்டுக்குள் போட்டு மறைத்து வைத்துக் கொண்டாராம். இதை எப்படியோ ராகினி பார்த்து விட, அம்மாவிடம் சொல்லிக் கொடுத்து விட்டாராம். அவங்களும் அந்தத் தாலியைக் கழுத்தில் இருந்து எடுத்து விட்டார்களாம். ஆனால் அம்மா தாலியைத் தான் எடுத்தாரே தவிர, பத்மினியின் மனதில் இருந்து சிவாஜியை எடுக்கவில்லையாம். இப்படி ஒரு தெய்வீகக் காதலை மனதுக்குள் வைத்து இருந்துள்ளார் அந்த நாட்டியப் பேரொளி.

  • வேற மொழிப்படங்களா?.. நோ நோ.. தமிழ்ப்படங்களில் மட்டுமே கெத்து காட்டிய நடிகர்கள்…

    பிற மொழிப்படங்களில் நடிக்க எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும், தாய்மொழியான தமிழில் மட்டுமே நடிப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று தன் கொள்கையை உறுதியாகக் கடைபிடித்த நடிகர்களும் தமிழ்த்திரை உலகில் உள்ளனர். அவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

     கட்டிய புருஷனே சொல்லிட்டாரு… இனி அந்த மாதிரி சீன்ல வெளுத்து வாங்கப் போகும் ஆனந்தி

    கேப்டன் விஜயகாந்த்

    1979ல் வெளியான இனிக்கும் இளமை படத்தில் கேப்டன் விஜயகாந்த்தை இயக்குனர் எம்.ஏ.காஜா அறிமுகப்படுத்தினார். கேப்டனின் 156வது படம் தமிழன் என்று சொல். விஜயகாந்த் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அவரது அட்டகாசமான பைட் தான். தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர். இவருக்கு எத்தனையே தெலுங்கு பட வாய்ப்புகள் வந்த போதும் மறுத்துவிட்டாராம்.

    எஸ்.எஸ்.ராஜேந்திரன்

    இதையும் படிங்க… விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? ஷாக் கொடுத்த நண்பர்

    அந்தக் காலத்தில் லட்சிய நடிகர் என்ற அடைமொழியுடன் தமிழ்த்திரை உலகில் வலம் வந்தவர் எஸ்எஸ்ஆர். இவர் தாய்மார்களின் மத்தியில் பேராதரவு பெற்றவர். பகுத்தறிவு கொள்கைகளில் பற்று கொண்டவர். அந்த ஒரே காரணத்திற்காக இவருக்கு அதிக சம்பளம் தந்து பக்தி படங்களில் நடிக்க அழைத்தபோதும் மறுத்து விட்டாராம். அதே போல பிற மொழிப்படங்களிலும் நடிக்காத நடிகர் இவர்.

    விஜய்

    தளபதி விஜய் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் விஜய். இவர் இதுவரை பிற மொழிப்படங்களில் நடித்ததே இல்லை. மலையாளத்திரை உலகம் இவரை வா வா என்று வாஞ்சையுடன் அழைத்த போதும் அதற்கு செவிசாய்க்காமல் தமிழை மட்டும் சுவாசிக்கும் வகையில் தமிழ் மொழிப்படங்களில் மட்டுமே நடித்தார். தான் நடித்த படத்திற்குக் கூட தமிழன் என்று தலைப்பு வைத்துள்ளார் என்றால் இவரது தமிழ்ப்பற்றைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    மற்ற நடிகர்களும் தாய்மொழியாம் தமிழை மட்டும் நேசித்து அவர்களது திறமையை இங்கு மட்டும் காட்டினால் இன்னும் தமிழ்சினிமா பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். இது வரும் இளைய தலைமுறைக்கும் ஒரு பாடமாக அமையும் என்றே சொல்லலாம்.

  • பாகுபலி ரேஞ்சில் பார்த்திபன் இயக்க விஜயகாந்த் நடிக்க இருந்த பிரம்மாண்டமான படம்… அப்புறம் என்ன ஆச்சு?

    ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர்செல்வம் விஜயகாந்த் உடனான தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்கிறார்னு பார்க்கலாம்.

    விஜயகாந்த் பல புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். புதுசா வருபவர்களைப் பற்றி இவன் நல்லா பண்ணுவான்னு கூட இருக்குறவங்க சொல்வாங்க. ஆனா யாருன்னே தெரியாத அவருக்கு வாய்ப்பு கொடுக்கணும்ல. கொடுத்தா தான அவன் முன்னுக்கு வருவான்.

    இதையும் படிங்க… அயலானுக்கு பேட்டி வேணுமா? அப்போ இந்த கண்டிஷன் கன்பார்ம்.. சிவகார்த்திகேயனின் தில்லாலங்கடி!

    இன்று புதியவர்களை ஊக்குவிக்க ஆள் கிடையாது. தயாரிப்பாளர்களில் ஆர்.பி.சௌத்ரி சார் 100 படங்களில் 65 பேரை இயக்குனராக அறிமுகப்படுத்தி இருக்கிறார். 30 பர்சன்ட் பெயிலியரா இருக்கலாம். ஆனா புதியவர்கள் ஜெயிக்கும்போது அதுல இருக்குற சந்தோஷமே தனி. அதே மாதிரி நடிகர்களில் விஜயகாந்தைச் சொல்லலாம்.

    தமிழில் கருப்பண்ணசாமி. ஒருவாட்டி நாங்க பார்த்த இடத்துல பூகம்பம் வந்துட்டுது. அது வடகர்நாடகாவின் எல்லை. அது பெரிய பட்ஜெட். கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி. பாகுபலி படத்துக்கு சரிசமமாக உருவாக இருந்த படம். பெரிய பெரிய செட் போட்டு எடுத்தாங்களாம். அதுல 5 பாடல்கள். இளையராஜா போட்டு அசத்தியிருப்பார். சூட்டிங் போறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் நின்று போனது.

    இதையும் படிங்க… புலமைப்பித்தன் போட்ட வார்த்தையை மாற்ற வைத்த எம்ஜிஆர்… என்ன நடந்ததுன்னு தெரியுமா?

    புதிய பாதை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜயகாந்த் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் பார்த்திபனை வைத்து தாலாட்டுப் பாட வா படத்தைத் தயாரித்தார். ஆர்.சுந்தரராஜன் இயக்கிய இந்தப் படம் மெகா ஹிட் ஆனது. அதே போல பார்த்திபனின் முதல் படமான புதிய பாதையைத் துவக்கி வைத்தவரும் விஜயகாந்த் தான் என்பது குறிப்பிடத்தக்கது.