Author: sankaran v

  • பாக்யராஜ் வில்லனாக நடித்த படம்… கையில் கிடைத்தால் கசாப் போட நினைத்த ரசிகர்கள்

    பாக்யராஜ் நடித்த படங்கள் என்றாலே அவை தாய்மார்களைப் பெரிதும் கவர்வதாகவே இருக்கும். அவர் எல்லாப் படங்களிலும் ஹீரோவாகவே நடிப்பார். ஆனால் தப்பித்தவறி கன்னிப்பருவத்திலே என்ற படத்தில் வில்லனாக நடித்து விட்டார். படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவர் மீது கோபம் கொண்டு கண்டம் துண்டமாக வெட்ட நினைத்தார்களாம். கதை, திரைக்கதை வசனம் எழுதியவர் பாக்யராஜ் தான். சங்கர் கணேஷ் இசை அமைத்து இருந்தார். இந்தப் படத்தின் கதை இதுதான்.

    ராஜேஷ் மஞ்சுவிரட்டில் காளையை அடக்குவார். அவரிடம் மனதைப் பறிகொடுக்கிறார் வடிவுக்கரசி. இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். முதலிரவின்போது ராஜேஷ் மனைவியிடம் நெருங்குகிறார். ஆனால் அவளுக்கோ நெஞ்சுவலி வருகிறது. டாக்டரிடம் சென்று பார்த்தால், மாடு முட்டியதால் தான் இந்த விளைவு என்கிறார். மேலும் மனைவியிடம் சேராமல் இருப்பது தான் நல்லது என்கிறார்.இதனால் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

    KP
    KP

    இந்த நிலையில் ராஜேஷின் நண்பராக வரும் பாக்யராஜ் ஊரிலிருந்து கிராமத்திற்கு வருகிறார். நண்பனின் மனைவி என்ற முறையில் வடிவுக்கரசியிடம் பழகுகிறார். ஒரு முறை ஒரு சம்பவத்தால் இருவரும் கட்டிப்பிடிக்கும் நிலை உண்டாகிவிடுகிறது. அதில் இருந்து பாக்யராஜ் வடிவுக்கரசி மீது சபலம் கொண்டு அவரை அடைய நினைக்கிறார்.

    அதே நிலையில் ராஜேஷ் ஆண்மை இல்லாதவர் என்று தெரிந்து விடுகிறது. பாக்யராஜ் இதை வைத்து வடிவுக்கரசியை டார்ச்சர் செய்கிறார். மறுபக்கம் இன்னொரு திருமணம் செய்து கொள் என்கிறார் ராஜேஷ். கதை இப்படி போகிறது. வடிவுக்கரசி என்ன செய்கிறார் என்பது தான் கதை.

    இதையும் படிங்க… விஜயகாந்த் சாப்பாடு தான போட்டு இருக்காருனு யோசிச்சீங்கனா… அப்போ இத படிங்க.. சிலிர்க்கும்..!

    பட்டுவண்ண ரோசாவாம், நடைய மாத்து, ஆவாரம் பூமணி ஆகிய பாடல்கள் சூப்பர்ஹிட்டானவை. படத்தில் பாக்யராஜ் நெகடிவ் ரோலில் நடித்தாலும் 100 நாள்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்று விட்டது. படத்தில் ராஜேஷின் நடிப்பு அபாரமானது. எஸ்.ஏ.ராஜ்கண்ணு இந்தப் படத்தைத் தயாரித்தார். பாலகுரு இயக்கினார்.

  • அப்படின்னா அவ்வளவும் காப்பிதானா?.. மணிரத்னம் படங்களைத் தோலுரித்துக் காட்டிய பிரபலம்..

    ரீமேக், டப்பிங், காப்பிகேட், இன்ஸ்பிரேஷன் என்று பல வகைகளில் ஒரு படம் இன்னொரு படமாக உருமாற்றம் அடைகிறது. அந்த வகையில் காப்பிகேட் என்ற வகை படங்களில் ஒரு சிலவற்றை இப்போது பார்ப்போம்.

    தமிழ்த்திரை உலகில் காப்பி அடித்து எடுக்கப்பட்ட படங்கள் பல உள்ளன. அவற்றில் அட்லியை சொல்வார்கள். ஆனால், மணிரத்னம் எடுக்கப்பட்ட செக்கச்சிவந்த வானம் படம் நியூ வேர்ல்டு என்ற கொரியன் படத்தில் இருந்து அப்படியே காப்பி அடித்து எடுக்கப்பட்டது.

    அண்ணாவின் முதல் படம் ஓர் இரவு. இந்தப் படத்தின் கதையையே அப்படி யாரும் யோசிக்கவில்லை. மொத்த படமும் சாயங்காலம் 6 மணிக்கு ஆரம்பித்து விடியகாலை 6 மணிக்குள் என்ன நடந்ததுன்னு எடுக்கப்பட்ட படம். 50களில் இப்படிப்பட்ட வித்தியாசமான படம் என்று எதுவும் வரவில்லை.

    SSV
    SSV

    அதே போல கலைஞர் ஒரு டெம்ப்ளேட்டாக பராசக்தியைக் கொடுத்து அவருக்கு செட்டாக்கி விட்டார். அண்ணன் தங்கை என்றாலே பராசக்தியில் ஆரம்பித்து பாசமலர் வரை சிவாஜிக்கும் மட்டும் தான் என்ற அளவில் வந்துவிட்டார். அப்படி எம்ஜிஆருக்கே ஒரு சென்டிமென்ட் கிடைக்கவில்லை. அதனால் அவர் அம்மா பிள்ளை சென்டிமென்ட்டுக்குப் போய்விட்டார். அம்மா, பிள்ளை சென்டிமென்ட் என்றாலே அது எம்ஜிஆர் படம் தான். அதே போல அண்ணன், தங்கை பாசம் என்றால் அது சிவாஜி படம் தான் என்று ஆகி விட்டது.

    The God father
    The God father

    தி காட் பாதர் படமும், ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா என்ற 2 ஆங்கிலப் படங்களையும் காப்பி அடித்து எடுக்கப்பட்டது தான் நாயகன் படம். தி காட் பாதர் படத்தில சிசிலி என்ற தீவில் ஹீரோ சிறுவனாக இருந்த போது போலீஸ் அதிகாரியைக் கொன்னுட்டு, வேற ஒரு ஊருல போயி டான் ஆகி விடுவார். அதே போல நாயகன் படத்துல தூத்துக்குடியில் உள்ள ஒரு போலீஸ் ஆபீசரைக் கொன்னுட்டு மும்பையில் போய் டான் ஆகி விடுவார் கமல்.

    மேற்கண்ட தகவலை பிரபல எழுத்தாளர் கிருஷ்ணவேல் என்பவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • ஒரே பாடலில் ஒட்டு மொத்த சேட்டைகளையும் செய்த ஜானகி… 80களில் தெறிக்கவிட்ட பாடல்..

    தமிழ்த்திரை உலகில் பிரபல பாடகி ஜானகியின் குரலுக்கு ஒரு சிறப்பு உண்டு. குழந்தை, வயதானவர், சிணுங்கல், காமம் என அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்துவார் ஜானகி.

    80களில் அடித்தட்டில் உள்ள ஒரு கிராமத்துப் பெண்ணுக்கு உரிய நிலைமையை அப்படியே அவரது உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தார் ஜானகி. பூட்டாத பூட்டுக்கள் என்ற படம். மகேந்திரன் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் ஜெயன் நடித்தார். முதலில் மகேந்திரன் ரஜினியிடம் தான் இந்தக் கதையைச் சொன்னாராம். அந்தக் கதை தனக்குப் பொருந்தாது என்று சொன்னதால் ஜானி படத்தில் நடிக்க வைத்தாராம் மகேந்திரன்.

    இதையும் படிங்க… ஹீரோவை தேடித்தேடி ஓய்ந்து போன பாரதிராஜா!.. விபத்து மூலம் கிடைத்த ஹீரோ.. இது நவரச நாயகன் கதை!..

    இந்தப் படத்தில் வந்த ஒரு பாடல் தான் இது. ஆண்டிப்பட்டி மாரியப்பன் பொண்டாட்டி என்று தொடங்குகிறது அந்தப் பாடல். இந்தப் பாட்டுக்கு இடையிலேயே ஒப்பாரியும் வருகிறது. வசனமும் வருகிறது. பாடலை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம். அந்தக் காலகட்டத்தில் கிராமத்தில் இருந்த வழக்குச் சொற்களை வைத்து எழுதியுள்ளார்.

    பாடலில் வெள்ளிமூக்குக் கழுதை, ஓட்டக்காலு, நொள்ளக்கண்ணு என கிண்டலுக்கு அளவே இல்லை. இளையராஜா நாட்டுப்புற இசையுடன் அதில் தன்னோட வித்தையையும் கலந்து இருந்தார். பாடலுக்கு இடையில் கங்கை அமரனும் வசனம் பேசுகிறார்.

    அந்தவகையில் இந்தப்பாடல் . ஆண்டிப்பட்டி மாரியப்பன் பொண்டாட்டி… நான் இதுக்கு மேல என்னத்த சொல்ல அண்ணாச்சி… ஆசையோட தான் வாக்கப்பட்டேனே… ஆறு மாசம் ஆன பின்னே ஏச்சிப்புட்டானே… என ஆரம்பிக்கிறது

    PP
    PP

    ஒரு கிராமப்பெண் தனது நிலையை அழுகை, ஒப்பாரி மூலம் 2 நபர்களிடம் முன்வைக்கிறாள். அதில் அண்ணாச்சி என்றதும் அவர்களுக்குள் கோபம் வருகிறது. நான் அண்ணன்லாம் இல்லன்னு ஒருவருக்கொருவர் மோதிக்கொள்கிறார்கள்.

    பாடலுக்கு இடையில் குருத்துவாளை கன்னு போல குமரிப்பொண்ணு நானிருக்கேன். கூறுகெட்ட அத்தைமகன் வேறொருத்தி சகவாசம், அடுத்து மிளகா குழம்போட நானிருக்க, மூதேவி அத்தை மகன் முண்டச்சி சகவாசம்… என பாடல் பட்டையைக் கிளப்புகிறது. இந்தப் பாடலில் பாடகி ஜானகி பல்வேறு உணர்வுகளைக் குரலில் கொண்டு வந்து மாயாஜாலம் காட்டியிருப்பார்.

    மேற்கண்ட தகவலை ஆலங்குடி வெள்ளைச்சாமி காணொளி ஒன்றில்
    தெரிவித்துள்ளார்.

  • நிஜத்திலும் கர்ணனாக வாழந்த நடிகர் திலகம்!.. ஆனா படத்துக்கு வந்ததுதான் சோகம்…!

    சிவாஜியைப் பொருத்தவரை அவர் தான, தர்மம் என எதுவும் செய்தது இல்லை என்று சொல்வார்கள். ஆனால் அவர் செய்த உதவி அளவில் பெரியது. ஆனால் வெளியே தெரியாமல் விளம்பரப்படுத்தாமல் செய்ததால் அது யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. இதற்கான ஆதாரப்பூர்வமான தகவல்களும் உள்ளனவாம். இவற்றைப் பற்றிப் பார்க்கலாமா…

    சிவாஜி பெரிய கொடைவள்ளல். ஆனால் அவை எல்லாம் வெளியே தெரியவில்லை. 1953ம் ஆண்டு ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் மருத்துவமனை கட்ட ரூ.25 ஆயிரம் கொடுத்துள்ளார். இதற்காக என் தங்கை என்ற நாடகம் போட்டு அந்த வசூலைக் கொடுத்தாராம். அவர் சினிமாவுக்கு வந்ததே 1952ல் தான்.

    Sivaji

    1959ல் சென்னை மேயரின் ஏழைக் குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்திற்கு அன்றைய பிரதமர் நேருவிடம் ரூ.1லட்சம் கொடுத்துள்ளார். அதன்பிறகு சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவனைக்கு குழந்தைகள் மருத்துவத்திற்காக ரூ.2000 நிதி உதவியாகக் கொடுத்துள்ளார்.

    1960ல் புயல் வந்தபோது 1 லட்சம் உணவுப் பொட்டலங்களும், குழந்தைகளுக்காக 1000 பவுண்டு பால் பவுடரும், 800 அரிசி மூட்டைகளும் அன்றைய காங்கிரஸ் அரசின் முதல் அமைச்சர் காமராஜரிடம் அளித்தார். அன்றைய மதிப்பு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம். அப்பவே இவ்ளோ தொகையைக் கொடுத்து இருக்கிறார் என்பது பெரிய விஷயம்.

    இதையும் படிங்க… அப்பா கொடுத்த சொத்தை ஏழைகளுக்கு கொடுத்த விஜயகாந்த்!.. அதன்மதிப்பு இவ்வளவு கோடியா?!..

    கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜீவானந்தம் விவசாய நலனுக்காக நிதி திரட்டுகிறார் என்றதும், அவருக்கு ரூ.5லட்ச ரூபாயை அன்பளிப்பாகக் கொடுத்தாராம். இந்த தொகையைப் பெற வீதி வீதியாக வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தைப் போட்டு வசூல் செய்தாராம். இது தன் கட்சியின் எதிரியான கம்யூனிஸ்ட் கட்சிக்கேக் கொடுத்துள்ளார்.

    sivaji
    sivaji

    அது மட்டுமல்லாமல் மகாராஷ்டிராவில் உள்ள ஏழைக்குழந்தைகளின் படிப்புக்காக ரூ.5லட்சம் கொடுத்துள்ளார். 1961 ல் சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை கட்டட நிதிக்கு ரூ.1லட்சத்தை அன்றைய பிரதமர் நேருவிடம் கொடுத்தார் சிவாஜி.

    பாசமலர் படத்தின் இந்திப்பதிப்பு மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. அவை அனைத்தையும் இந்திய சீனப்போருக்காக நேருவிடம் கொடுத்தாராம். மதுரை பாத்திமா காலேஜில் ஒரு பில்டிங் கட்டுவதற்காக ரூ.25 ஆயிரம் கொடுத்தாராம்.

    இதையும் படிங்க… திடீரென தேவைப்பட்ட பாட்டு!.. மேஜிக் செய்த இசைஞானி!. ஒரே நாளில் எடுக்கப்பட்ட ரஜினி பாட்டு!..

    வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை நடத்தி அந்த வசூல் தொகை ரூ.32 லட்சத்தையும் கல்லூரிகள், பள்ளிகள் மேம்பாட்டிற்காக அன்றைய காங்கிரஸ் அரசிடம் அப்படியே கொடுத்தாராம். இதுவரை எந்த சினிமா நடிகரும் கல்வி, விவசாயம், மருத்துவத்திற்காக யாரும் செய்ததே இல்லையாம்.

    மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலை அமைக்க ரூ.1லட்சம் நன்கொடையாகக் கொடுத்தார். மதுரை சரஸ்வதி பள்ளி 64ல் இடிந்து பாதிக்கப்பட்டது. அதற்கு ரூ.1லட்சம் நிதியைக் கொடுத்தார்.

    கர்ணன் படப்பிடிப்பின்போது தஞ்சை அரண்மனை சென்றபோது அங்குள்ள பள்ளியைப் பார்வையிடுகிறார். அங்கு கழிவறை வசதிக்காக ரூ.10 லட்சம் நன்கொடையைக் கொடுத்துள்ளார். 1964ல் மகாராஷ்டிராவில் கொய்னா என்ற அணை உடைந்து விட்டது. அதை சரிசெய்ய அம்மாநில முதல்வர் ஒய்.பி.சவானிடம் ரூ.13 லட்சத்தைக் கொடுத்துள்ளார்.

    Sivaji, Nehru
    Sivaji, Nehru

    1967ல் பட்டியல் சமுதாயத்தினருக்காக காரைக்குடி பகுதியில் 2.5 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தாராம். இது போல தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் யுத்த நிதி ரூ.1லட்சம், சென்னை தீவிபத்து, திருச்சி ஜவான் முகமது கல்லூரி ரூ.1.38 லட்சம் என பல்வேறு நன்கொடைகளைக் கொடுத்துள்ளார். இவர் 1950 முதல் 1967ம் ஆண்டு வரை செய்த நன்கொடையின் மொத்த மதிப்பு ரூ.210 கோடியே 75 லட்சம். 1968 முதல் 1973 வரை கொடுத்த தொகை ரூ.33.28 கோடியும் கொடுத்துள்ளார்.

    ஆக இப்படியே வாழ்நாள் முழுவதும் நன்கொடை கொடுத்துள்ள சிவாஜி ஒட்டுமொத்தமாக ரூ.310.34 கோடி கொடுத்துள்ளார். ஆனால் இவ்வளவு செய்த சிவாஜியின் கப்பலோட்டிய தமிழன் படத்துக்கு வரி விலக்குக் கூட அன்றைய காங்கிரஸ் அரசு தரலயாம். அதன்பிறகு அண்ணாவின் ஆட்சியில் தான் வரிவிலக்கு தந்தார்களாம்.

  • எம்ஜிஆர் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த வி.எஸ்.ராகவன்… ஏன்னு தெரியுமா?

    பொதுவாக எம்ஜிஆர் படங்களில் நடிகர், நடிகையரை தேர்வு செய்யும் பொறுப்பைத் தயாரிப்பாளர் அவரிடமே விட்டு விடுவார்களாம். அவரது படங்களில் முக்கியமாக இடம்பெறுபவர் வி.எஸ்.ராகவன். எம்ஜிஆரின் 100வது படத்தில் தான் அவருக்கு எம்ஜிஆருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    எங்கள் தங்கம், உரிமைக்குரல், சங்கே முழங்கு உள்பட எம்ஜிஆரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை பல படங்களில் வி.எஸ்.ராகவன் நடித்தார். டெக்னீஷியன்கள், துணை நடிகர்களும் எம்ஜிஆர் படம்னா நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். காரணம் மற்ற படங்களை விட இங்கு கூடுதல் சம்பளம். இதற்கும் மேலாக எம்ஜிஆரே எல்லோருக்கும் சம்பளம் பேசியபடி வந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வாராம்.

    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் நடித்த விஎஸ்.ராகவனுக்கு சம்பளம் முதலில் ஒரு தொகை பேசப்பட்டதாம். அதன்பிறகு சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளும்படி தயாரிப்பு தரப்பில் இருந்து கூறினார்களாம். இது அவருக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கியதாம். உடனே கவிஞர் வாலியிடம் தன் நிலைமையைக் கூற, அவரும் ஒரு யோசனை கூறினாராம்.

    இதையும் படிங்க… என்னம்மா இந்த ரேஞ்சில இறங்கிட்ட!.. கவர்ச்சி நடிகை போல மாறிய விஜே பார்வதி…

    அதே போல, வி.எஸ்.ராகவனும் தயாரிப்பு தரப்பில் இப்படி பேசினாராம். என் சம்பளம் எம்ஜிஆரின் ஒப்புதலோடு பேசி முடிவு செய்யப்பட்டது. அவர் நான் குறைவாக வாங்கிக் கொண்டால் வருத்தப்படுவார். அவருக்கு நான் என்ன பதில் சொல்வது என்று கேட்டாராம். மறுபேச்சில்லாமல் ஏற்கனவே அவருக்குப் பேசிய சம்பளம் கிடைத்ததாம்.

    ராகவனின் தாயார் உடல்நலம் குன்றியதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது தான் இயல், இசை, நாடகத்திற்கு எம்ஜிஆர் அவரைக் கௌரவ செயலாளராக நியமித்தார். அந்த சமயத்தில் எம்ஜிஆரின் உதவியாளர் ஒருநாள் திடீரென ராகவனின் வீட்டுக்கு வந்தார். ஒரு பெரும் தொகையைக் கொடுத்து எம்ஜிஆர் உங்கள் தயாரைக் கவனித்துக் கொள்வதற்காகத் தந்து அனுப்பினார் என்றார்.

    இதையும் படிங்க… மீண்டும் திரையில் விஜயகாந்த்!.. விரைவில் வெளியாகும் ஊமை விழிகள் 2.. குட் நியூஸ் சொன்ன இயக்குனர்…

    அதற்கு நன்றி தெரிவித்த ராகவன், இந்தப் பணத்திற்கு இப்போது அவசியமில்லை என்று திருப்பிக் கொடுத்து அனுப்பினார். இது எம்ஜிஆருக்கு வருத்தம் தந்தது. அதன்பின் ஒரு நாள் ராகவன் எம்ஜிஆரிடம் இப்படி சொன்னார். உங்களுக்குத் தெரியாதது இல்லை. என் தாயார் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி விட்டார்.

    அந்த சமயத்தில் நீங்கள் மருத்துவ செலவுக்கு என்று பெரிய தொகையக் கொடுத்து அனுப்பினீர்கள். அப்போது அது தேவைப்படவில்லை. நான் வாங்குவதும் முறையாக இருக்காது. அதனால் தான் திருப்பி அனுப்பினேன் என்றார். அவரது விளக்கத்தைப் பொறுமையாகக் கேட்ட எம்ஜிஆர் அவரை மனதாரப் பாராட்டினாராம்.

     

  • ஹீரோவை தேடித்தேடி ஓய்ந்து போன பாரதிராஜா!.. விபத்து மூலம் கிடைத்த ஹீரோ.. இது நவரச நாயகன் கதை!..

    அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு பாரதிராஜா ஹீரோ கிடைக்காமல் தேடித் தேடி அலைந்தாராம். அப்போது அவருக்கு கிடைத்தவர் தான் நவரச நாயகன் கார்த்திக். எப்படி கிடைத்தார்னு பிரபல சினிமா தயாரிப்பாளர் சித்ரா லெட்சுமணன் சொல்ல கேட்போம்.

    பாரதிராஜாவைப் பொருத்தவரை ஒருவரைப் பார்த்தாலே போதும். அவர் எந்த அளவு நடிப்பார் என்பது அவருக்குத் தெரிந்து விடும். நவரச நாயகன் என்றாலே கார்த்திக் தான். பைலட் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். பாரதிராஜாவின் 10வது படம் அலைகள் ஓய்வதில்லை.

    பாரதிராஜா 16 வயதினிலே எடுத்த போது நான் பத்திரிகையாளனாக இருந்தேன். அவரும் நானும் நெருங்கிய நண்பர்கள். அலைகள் ஓய்வதில்லை எடுத்த போது என்னை உதவி இயக்குனராக வருகிறாயா எனக் கேட்டார். அப்போது எனக்கு வருமானம் நல்லா வந்தபோதும், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன்.

    இதையும் படிங்க… ஃபர்ஸ்ட் படமே அப்படி யாராலும் பண்ண முடியாது! தனுஷ் படத்தை பற்றி சிவகார்த்திகேயனா இப்படி சொன்னது?

    பாரதிராஜாவின் 7வது படம் நிழல்கள். எல்லோரும் புதுமுகங்கள். அது தோல்வி அடைந்தது. நிழல்கள் படத்திற்கு கதை வசனம் எழுதியவர் மணிவண்ணன். அந்தப் படம் தோல்வி அடைந்த போதும் அவரது கதையையே அடுத்த படமான அலைகள் ஓய்வதில்லைக்கும் தேர்ந்தெடுத்தார்.

    படத்தில் கதாநாயகியாக நடிக்க அம்பிகாவின் தங்கை ராதாவைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் கதாநாயகன் கிடைக்கவில்லை. படப்பிடிப்பு நாள் நெருங்கிக் கொண்டு இருந்தது. அந்த சூழலில் தான் ராயப்பேட்டையில் பள்ளியில் படித்த மாணவனை தேர்ந்தெடுத்தார். என்னிடம் அந்த மாணவனைக் காட்டினார். எனக்கு அவன் ஹீரோவுக்கு சரியாக இருப்பான் என்று தோன்ற வில்லை. என்னுடைய கருத்தை சொன்னேன்.

    இன்னும் எவ்வளவு நாள் தான் தேடுவது என்றார். இன்னும் ஒரு நாள் மட்டும் தேடுவோம். கிடைக்கவில்லைன்னா இந்தப் பையனையே அழைத்துச் செல்வோம் என்றேன். ஒவ்வொரு கல்லூரியாக தேட ஆரம்பித்தோம். எவ்வளவு தேடியும் கதாநாயகன் கிடைக்கவில்லை. அப்போது அட்லாண்டிக் ஓட்டலுக்கு காபி சாப்பிட சென்றார்களாம். அப்போது அவர்களுடன் குரு, டிக் டிக் டிக் படங்களைத் தயாரித்த ஆர்.சி.பிரகாஷ்சும் வந்திருந்தார்.

    இதையும் படிங்க… மீண்டும் திரையில் விஜயகாந்த்!.. விரைவில் வெளியாகும் ஊமை விழிகள் 2.. குட் நியூஸ் சொன்ன இயக்குனர்…

    பாரதி ராஜா அப்போது தான் தனது காரை ஓட்ட ஆரம்பித்தாராம். அப்போது ஒரு மாணவன் மீது காரை மோதி விட்டார் பாரதிராஜா. அந்த மாணவனுக்கு ஆஸ்பிட்டலில் ட்ரீட்மென்ட் கொடுத்தோம். அப்போது முத்துராமன் வீடு வழியாக கார் சென்றது. அங்கு அவரது மகன் முரளி பேட்மிட்டன் விளையாடிக் கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் காரைத் திருப்பிக் கொண்டு வரும்படி பாரதிராஜா சொன்னார். இப்போது பேட்மிட்டன் ஆடிக்கொண்டு இருந்த பையனையே பார்த்தார். அந்தப் பையன் யாருன்னு கேட்டார்.

    AO
    AO

    அது முத்துராமனின் மகன் என்றேன். உடனே அந்தப் பையனை அழைத்துப் பேசுங்கள் என்றார். அவனிடம் நான் பேசிக் கொண்டு இருந்தேன். பாரதிராஜா அந்தப் பையனையே பார்த்துக் கொண்டு இருந்தார். முத்துராமன் எங்கே என்று கேட்டதற்கு படம் பார்க்க சென்றதாக அந்தப் பையன் கூறினான். அன்று இரவு முத்துராமனைப் போனில் தொடர்பு கொண்டு நேரில் சந்தித்தார். உங்க பையன் தான் என்னோட அலைகள் ஓய்வதில்லை படத்துக்குக் கதாநாயகன் என்றார்.

    முத்துராமன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதன்பிறகு படப்பிடிப்புக்கு கிளம்பினோம். அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின்போது தான் அந்தப் பையனோட பேரு கார்த்திக்னு மாற்றப்பட்டது. அந்தப்படத்தின் தெலுங்கு பதிப்பிலும் கார்த்திக்கே நடித்தார். படம் வெளியானதும் கார்த்திக், ராதா ஜோடிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

    மேற்கண்ட தகவலை பிரபல சினிமா இயக்குனரும், யூடியூபருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

  • சிக்கலில் இருந்து தப்பிக்க மாற்றி அமைக்கப்பட்ட எம்ஜிஆரின் சூப்பர்ஹிட் பாடல்… என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?

    பொதுவாகவே எல்லாப் படங்களுக்கும் தணிக்கை உண்டு. அது பாடல்களுக்கும் உண்டு. அப்படி தணிக்கையில் சிக்காமல் வரிகளை மாற்றியதால் தப்பித்த பாடல் தான் இது. பார்ப்போமா…

    1965ல் வெளியான படம் எங்க வீட்டுப் பிள்ளை. மாபெரும் வெற்றி பெற்ற படம். பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் கூட இந்தப் படத்தை 100 தடவைக்கும் மேலாகப் பார்த்துள்ளார். அந்தப் படத்தில் ஒரு சூப்பர்ஹிட் பாடல் ஒன்று உண்டு.

    இதையும் படிங்க… கலைஞர் வரிகளை பாட மறுத்த கே.பி.சுந்தராம்பாள்!… அவருக்காக தனது கொள்கையையே மாற்றிய கருணாநிதி…

    நான் ஆணையிட்டால் என்று தொடங்கும் இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. டிஎம்.சௌந்தரராஜன் பாடியுள்ளார். அந்தப் பாடலில் முதலில் நான் அரசனென்றால், என் ஆட்சியென்றால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார். இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன். ஒரு தலைவன் உண்டு. அவன் கொள்கை உண்டு என்று எல்லாம் எழுதப்பட்டதாம்.

    அதன்பிறகு சென்சார் போர்டில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால் என்று மாற்றப்பட்டது. மேலும் காக்கைகள் கூட்டம் என்றால் அது அந்த சமயம் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸைக் குறித்து விடும் என்பதால், இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் என்று மாற்றினார்களாம்.

    இதையும் படிங்க… இப்ப கூட நான் ரெடிதான்… ஷகிலா கொடுத்த ஓபன் டாக்… அடக்கொடுமையே!…

    ஒரு தலைவன் உண்டு என்றால் அது அப்போது கட்சி தலைவராக இருந்த அண்ணாவைக் குறிக்கும் என்பதால் ஒரு கடவுள் உண்டு என்று மாற்றினார்களாம். ஒரு கடவுள் உண்டு. அவன் கொள்கை உண்டு என்றும் மாற்றினார்களாம். அப்படித் தான் அந்தப் பாடல் வெளியாகி படத்தை சக்கை போடு போடச் செய்தது. இன்னும் எம்ஜிஆரின் கொள்கைப் பாடல் என்றாலே இதுதான் முதலாவதாக வந்து நிற்கிறது.

    எம்ஜிஆர் பாடல் என்றாலே இந்தப் பாடல் ஒலிக்காமல் இருக்காது. இன்னும் கிராமங்களில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடினால் முதலாவதாக ஒலிபரப்பப்படும் பாடல் இதுவாகத் தான் இருக்கும்.

  • எம்ஜிஆர், சிவாஜிக்கே டஃப் கொடுத்த அந்த கட் அவுட்.. இப்படி எல்லாமா நடந்துச்சு…

    இரு பெரிய நடிகர்களுக்குள்ளும் சண்டை இருப்பது போல காட்டிக் கொண்டால் தான் அவர்களது படம் போட்டிப் போட்டுக் கொண்டு ஓடும். இது காலாகாலமாகவே நடந்து வருகிறது.
    இது திட்டமிட்ட வேலை தான்.

    அந்தக் காலத்தில் தமிழ்த்திரையுலகில் தியாகராஜ பாகவதருக்கும், பி.யு.சின்னப்பாவுக்கும் கடும் போட்டி நடந்தது என்பார்கள். சின்னப்பாவுக்கு பாட வரும். நடிக்க வரும். நல்லா சண்டை பண்ணுவாரு. பார்க்க நல்லா இருக்க மாட்டாரு.

    இதையும் படிங்க… 2023ல் இந்திய அளவில் அதிக வசூலை குவித்த டாப் 10 திரைப்படங்கள்!.. கெத்து காட்டும் ‘ஜெயிலர்’..

    அதே நேரம் பாகவதர் நல்லா பாடுவாரு. தகதகன்னு மின்னுற கலர். கவர்ச்சியா இருப்பாரு. ஆனா நடிக்க வராது. இரண்டு பேருக்கும் போட்டி வரும். இதுல பாகவதர் எம்ஜிஆர்னா, சின்னப்பா சிவாஜி. அதன்பிறகு வந்த எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினி கமல், அஜீத், விஜய் இவர்களது படங்கள் ஒரு போட்டி மயமாகவே வந்தவண்ணம் உள்ளன.

    உண்மையில் பார்க்கப் போனால் எம்ஜிஆர், சிவாஜி ரொம்பவே நட்புள்ளவர்கள். ஒரே வீட்டில் சாப்பிட்டவர்கள். இப்படி முன்னணி நடிகர்களுக்குள் போட்டி நிலவுவதைப் போல ஒரு வேலையைச் செய்வார்களாம். அப்போது தான் ரசிகர்களுக்குள் ஒரு ஈடுபாடு இருக்கும். ஒரு கெத்து இருக்கும். அந்த நாயகர்களின் படத்தையும் பார்க்க ஆர்வம் வரும். சிவாஜிக்கு 50 அடி கட்வுட்னா, எம்ஜிஆருக்கு 60 அடி கட் அவுட் வைப்பார்கள். இப்படி பேனர் போட்டி நடக்கும்போது டி.ஆர்.சந்துரு இருவரையும் கிண்டல் செய்தாராம்.

    இதையும் படிங்க… எங்க ரெண்டு பேரையும் இருட்டுல இருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த படம் இதுதான்… இயக்குனர் எஸ்ஏசி

    அவர் தான் தமிழ்நாட்டுலயே கட் அவுட் கலாசாரத்தைக் கொண்டு வந்தவர். ஆரவல்லி என்ற படத்தில் நடித்தது ஈஸ்வர் என்ற புதுமுக நாயகன். கதாநாயகி ஜீவா லட்சுமி. இவருக்கு 60 அடி உயரத்துல கட் அவுட். மோகனா என்ற இன்னொரு கதாநாயகிக்கு 50 அடி உயரம். இப்படி நடிகைகளுக்குக் கட் அவுட் வைத்து எம்ஜிஆர், சிவாஜியைக் கிண்டல் செய்தாராம்.

    மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், டாக்டர் காந்தாராஜ் தெரிவித்துள்ளார்.

     

     

  • 10 ஆண்டுகளில் வெளியான சூப்பர்ஹிட் த்ரில்லர் படங்கள் – ஒரு பார்வை

    தமிழ்ப்படங்களில் இதுவரை வெளிவராத முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்கள் தான் இவை. எப்போ பார்த்தாலும் வேலை வேலைன்னு டென்சனோடு ஓடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல ரிலாக்ஸ் தரும் படங்கள் இவை.

    துப்பறியும் திறன் எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் வந்துவிடாது. அதற்கென்று கொஞ்சமாவது மெனக்கிட வேண்டும். சரி. நம்மால் தான் முடியவில்லை. படங்களைப் பார்த்தாவது கற்றுக் கொள்வோமே… வாங்க கடந்த 10 ஆண்டுகளில் வெளியான துப்பறியும் படங்களைப் பார்க்கலாம்.

    துருவங்கள் 16

    டி16 என சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப் படத்தை இயக்கியவர் கார்த்திக் நரேன். 2016ல் வெளியானது. ரகுமான் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்த படம் இது.

    மெட்ரோ

    Metro
    Metro

    2016ல் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம். ஸ்ரீஷ், பாபிசிம்ஹா, சென்ட்ராயன் உள்பட பலர் நடித்துள்ளனர். திருடர்களிடமிருந்து பெண்கள் எப்படி தப்பிப்பது என்பதை சொல்லித் தரும் ஒரு விழிப்புணர்வு படம்.

    8 தோட்டாக்கள்

    2017ல் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளியான படம். வெற்றி, அபர்ணா பாலமுரளி, எம்.எஸ்.பாஸ்கர், நாசர், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    யுத்தம் செய்

    2011ல் மிஷ்கின் இயக்கிய படம் யுத்தம் செய். சேரன், ஒய்.ஜி.மகேந்திரன், லட்சுமி, ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். சேரன் நடித்த ஒரே த்ரில்லர் படம் இது. கொஞ்சம் ரூட்டை மாற்றித் தான் பார்ப்போமே என்று நடித்தார். ஆனால் படம் பிளாப் ஆகிவிட்டது. அதனால் தன் வழக்கமான பாதைக்கே திரும்பவும் சென்றுவிட்டார்.

    நான்

    2012ல் வெளியான படம். ஜீவா சங்கர் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி நடித்து இசை அமைத்துள்ளார். சித்தார்த், வேணுகோபால் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியை வித்தியாசமாகக் காட்டிய படம்.

    குற்றமே தண்டனை

    2016ல் எம்.மணிகண்டன் இயக்கத்தில் வெளியான படம். விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் நாயகி கொல்லப்படுகிறாள். அந்தக் கொலைகாரன் யார் என்பதைக் கண்டறியும் படம்.

    ஈரம்

    2009ல் அறிவழகன் இயக்கத்தில் வெளியான படம். ஆதி, நந்தா, சிந்து மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். தண்ணீர் எப்படி பழிவாங்குகிறது என்பது தான் கதை. படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

    தெகிடி

    2014ல் ரமேஷ் இயக்கிய படம். அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். கொலையை மையமாகக் கொண்டு துப்பறியும் படம். படத்தின் தலைப்பே புரியாத புதிராக உள்ளதே என்ற கோணத்தில் என்ன தான் படத்தில் எடுத்திருக்கிறார்கள் என்பதப் பார்ப்பதற்காகவே பலரும் திரையரங்கிற்கு வந்தனர். அந்த வகையில் யாரையும் ஏமாற்றாமல் பலரையும் ரசிக்க வைத்தது இந்தப் படம்.

    இதையும் படிங்க… விஜய் ஒன்னும் கேக்கவும் இல்ல.. கேப்டனை பார்க்க ஆசைப்பட வும் இல்ல! பிரேமலதா சொன்ன அந்த விஷயம்

    அதே கண்கள்

    2017ல் ரோகினி வெங்கடேசன் இயக்கியுள்ளார். ஆக்ஷன் திரில்லர் படம். கலையரசன், ஜனனி உள்பட பலர் நடித்துள்ளர். இதே தலைப்பில் பழைய த்ரில்லர் படம் ஒன்றும் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    காளிதாஸ்

    படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை கண் இமைக்காமல் பார்க்கச் செய்யும் படம். கணவன் மனைவியுடன் நேரத்தை கொஞ்சமாவது ஒதுக்கி செலவழிக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற மன அழுத்தம் தான் உண்டாகும். இதில் பரத்தின் நடிப்பு பட்டையைக் கிளப்பும்.
    இவை தவிர, சத்யா, வெள்ளை பூக்கள், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், அந்தகாரம், கொலைகாரன், குரங்கு பொம்மை ஆகிய படங்களும் இந்த லிஸ்டில் உண்டு.

     

  • எங்க ரெண்டு பேரையும் இருட்டுல இருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த படம் இதுதான்… இயக்குனர் எஸ்ஏசி

    சட்டம் ஒரு இருட்டறை விஜயகாந்தின் திரையுல வாழ்க்கையில் ஒரு மைல் கல். அந்தப் படத்தின் அனுபவங்கள் குறித்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா…

    நான் வாஹினி ஸ்டூடியோவுல விஜயகாந்த் மோட்டார் சைக்கிள்ல போறதைப் பார்த்தேன். நான் அங்கே வேற ஒருத்தரோட நின்னு பேசிக்கிட்டு இருந்தாரு. அப்போ என்னையும் அறியாத ஒரு எண்ணம்… அவரோட பவர்புல்லான கண்ணைப் பார்த்த உடனே எனக்குத் தேவையான ஹீரோ இவருதான்னு நினைச்சேன்.

    அப்போ அந்த புரொடக்ஷன் மேனேஜரை விட்டு இவரைப் பத்தி விசாரிச்சேன். அவரு சொன்னாரு. இவர் தூரத்து இடி முழக்கம் என்ற படத்துல நடிச்சிக்கிட்டு இருக்காருன்னு சொன்னாங்க. உடனே அவரை வரவழைத்து நேருக்கு நேரா பார்க்கும்போது முழுமையான ஒரு திருப்தி வந்தது.

    அவரோட கண்கள் தான் எனக்குப் பிடிச்சிருந்தது. அவரோட உடற்கட்டும் நான் நினைச்ச மாதிரியே இருந்தது. உடனே அவரை பிக்ஸ் பண்ணினோம். அவரு ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோவா வருவாரு. ஏன்னா அது ஒரு அழுத்தமான கதை.

    இதையும் படிங்க… விஜயகாந்த்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த வராத வடிவேலு… இதுதான் காரணமாம்… முத்துக்காளை சொல்லும் புதுத்தகவல்

    அதுக்கு ஏத்த மாதிரி அவரும் ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சாரு. அந்தப் படம் சிறந்த வெற்றியைக் கொடுத்துச்சு. அந்த வெற்றி அவருக்கு மட்டுமல்ல. எனக்கும் கிடைச்சது. சட்டம் ஒரு இருட்டறை என்ற அந்த இருட்டறையில் இருந்து நாங்க ரெண்டு பேரும் வெளிப்பட்டுட்டோம்.

    மேற்கண்ட தகவலை படத்தின் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    1981ல் வெளியான விஜயகாந்தின் சூப்பர்ஹிட் ஆக்ஷன் படம் சட்டம் ஒரு இருட்டறை. பூர்ணிமா, சங்கிலி முருகன் உள்பட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இது இரண்டாவது படம். சட்ட அமைப்பைப் பற்றிய படம் என்பதால் அனைத்துத் தரப்பினராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. சட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எழச் செய்தது. இந்தப் படத்தில் விஜயகாந்துக்கு வாய்ஸ் கொடுத்தவர் எஸ்.என்.சுரேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க... பணத்துக்காக மார்கெட் லெவலையும் குறைத்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ்! அம்மணிக்கு என்ன கஷ்டமோ?

    இவர் தான் மோகனின் வெள்ளி விழா படங்களுக்குக் குரல் கொடுத்தவர். இந்தப் படத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்தனராம். ஆனால் தயாரிப்பாளர் எஸ்.சிதம்பரம் ரொம்பவே உறுதியாக இருந்தாராம். இந்தப் படத்திற்குப் பிறகு விஜயகாந்துக்கு ஆக்ஷன் படவாய்ப்புகள் ஏராளமாக வந்தன.