Author: sankaran v

  • கண்ணதாசனுக்கு சவால் விட்ட இயக்குனர்… கவியரசருக்கு இதெல்லாம் சாதாரணமப்பா…!

    கவியரசர் கண்ணதாசன் தமிழ்த்திரை உலகில் மனது மறக்காத வகையில் பல காதல் மற்றும் தத்துவப்பாடல்களை எழுதியுள்ளார். இவை எல்லாமே சூப்பர்ஹிட்டுகள் தான். இவர் பாடல் எழுதினார் என்றாலே படமும் சூப்பர்ஹிட்டாகத் தான் இருக்கும். அந்த வகையில் இவர் தமிழ்த்திரை உலகில் ஆளுமையுடன் வலம் வந்தார். இயக்குனர் ஸ்ரீதர் உடன் இணைந்து கண்ணதாசன் ஒரு படத்துக்கு பாடல் எழுதும்போது ஒரு வித்தியாசமான சம்பவம் அரங்கேறியது.

    அது சிவாஜி, முத்துராமன் இணைந்து நடித்த சூப்பர்ஹிட் படம் நெஞ்சிருக்கும் வரை. இந்தப் படத்தில் கே.ஆர்.விஜயா, கீதாஞ்சலி உள்பட பலரும் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் 1967ல் வெளியானது. அந்தக் காலத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது. பாடல்கள் எல்லாமே முத்து முத்தாக இருக்கும். ஒரு பாடல் மட்டும் வாலி எழுதினார். மற்ற எல்லாவற்றையும் கவியரசர் தான் எழுதினார்.

    இந்தப் படத்தில் முத்துக்களோ கண்கள் என்று ஒரு பாடல் உண்டு. இதை டிஎம்.சௌந்தரராஜனும், பி.சுசீலாவும் இணைந்து பாடினர். அந்தப் பாடலை இப்போது கேட்டாலும் நம்மை மெய்மறக்கச் செய்யும். இந்தப் பாடலுக்கு சிவாஜி மேக்கப்பே போடாமல் நடித்து இருந்தாராம்.

    பாடலுக்கான கம்போசிங் நடந்தது. அப்போது பாடலுக்கான சிச்சுவேஷனை இயக்குனர் ஸ்ரீதர் கண்ணதாசனிடம் சொல்கிறார். ‘இந்தப் பாடலில் காதலை இரண்டே வரிகளில் சொல்ல வேண்டும்’ என்றும் நிபந்தனை விதித்தாராம். கண்ணதாசனுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம். கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை.

    nenjirukkum varai

    nenjirukkum varai

    அவர் கவியரசர் அல்லவா. வார்த்தைகள் சரளமாக வந்து கொட்டின. ‘முத்துக்களோ கண்கள்… தித்திப்பதோ கன்னம்’ என்றாராம். அதற்கடுத்த வரிகளில் ஸ்ரீதருக்கோ இன்ப அதிர்ச்சி. என்னன்னு பாருங்க. ‘சந்தித்த வேளையில், சிந்திக்கவே இல்லை. தந்துவிட்டேன் என்னை…’ அடடா இப்படியும் ஒரு கவிஞரா என்று வியந்தே போனாராம் ஸ்ரீதர்.

    ஸ்ரீதரைப் பொருத்தவரை அவரே பெரிய இயக்குனர். எம்ஜிஆர், சிவாஜி என பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியது மட்டும் அல்லாமல் அத்தனை ஹிட்டுகளைக் கொடுத்தவர் அவர். ஆனால் அவரே வியந்து விட்டார் கவியரசரின் இந்த இரு வரிகளில். ஆனாலும் அந்தப் பாடல் உருவாகும் போது ஸ்ரீதர் செய்த வேலை தான் உச்சக்கட்டம். அதாவது முதல் வரியான ‘முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்’ என்று சொன்னதும் கவியரசரிடம் உடனே அது பிடித்துவிட்டது என்று சொல்லி விடக்கூடாது என்று பிடிக்காத மாதிரி ரியாக்ஷன் கொடுத்தாராம்.

    ஆனால் அடுத்த வரியில் ‘சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை. தந்துவிட்டேன் என்னை’ என்று கண்ணதாசன் சொன்னதும் அசந்துபோனாராம். அப்போது அருகில் எழுதிக் கொண்டு இருந்த கண்ணதாசனின் உதவியாளர் மதுரை ஜிஎஸ்.மணி அப்படியே கண்ணதாசனின் காலில் விழுந்து தெய்வமே என்று வணங்கினாராம். மேற்கண்ட தகவலை கண்ணதாசனின் மகன் கோபி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  • பத்திரிகையாளர்களை நட்டாற்றில் விட்ட தயாரிப்பாளர்… ஜெய்சங்கர் செய்த அந்த உதவி

    தமிழ்சினிமா உலகில் மக்கள் கலைஞர் என்று போற்றப்படுபவர் ஜெய்சங்கர். அந்த வகையில் அவருக்கு அந்தப் பெயர் கிடைப்பதற்கு காரணம் பல உண்டு. அவற்றில் ஒரு முக்கியமான காரணத்தை இந்த நிகழ்வின் மூலம் பிரபலம் ஒருவர் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

    ஜெய்சங்கரை இன்று வரை மக்கள் கலைஞர்னு ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் அதுக்கு பல காரணங்கள் இருக்கு. கடமை நெஞ்சம் என்ற படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஜெய்சங்கர் காரிலேயே சென்னைக்குப் புறப்பட்டு விட்டார். பத்திரிகையாளர்களுக்கு பெங்களூருவில் இருந்து டிரெயினில் டிக்கெட் போடப்பட்டு இருப்பதாகவும் அங்குள்ள ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்து தயாரிப்பாளரே அவருக்குக் கொடுப்பார் என்றும் சொல்லப்பட்டது.

    ஆனால் மறுநாள் தயாரிப்பாளர் வரவே இல்லை. இந்தப் பத்திரிகையாளர்களுக்கு எல்லாம் என்ன செய்றதுன்னே தெரியலை. கையில இருக்குற பணத்தை வச்சி சென்னைக்குப் பஸ்ல போயிடலாம்னு முடிவு எடுத்தாங்க.

    அந்த நேரத்துல தான் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார். நீங்க திரும்புறதுக்கு டிக்கெட் போடலைங்கற விவரம் இப்போ தான் தெரிந்தது. நான் நண்பர் ஒருவர்கிட்ட பேசிருக்கேன். நீங்க அவர் சொல்ற ஓட்டல்ல தங்கிக்கோங்க. காலையில டிக்கெட் போட்டுத் தர்ரேன். அதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்றேன்னு சொன்னார். மறுநாள் அவர்கள் சென்னை செல்ல ரெயில்வே ஸ்டேஷன்ல காத்துக்கிட்டு இருந்தாங்க.

    கடமை நெஞ்சம்

    அவர்கள் பயணிக்கும்போது தேவையான உணவுப்பொட்டலங்களை ஒருவர் தயாராக வைத்துக் கொண்டு இருந்தார். அப்போது ஜெய்சங்கர் செய்த உதவியை எந்தக் காலத்திலும் என்னால் மறக்க முடியாது என்று அப்போது சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலே ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு இருந்த ராமமூர்த்தி கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

    நடிகர் ஜெய்சங்கர் படத்தில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையில் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். அவரது படங்களில் அவருடைய எதார்த்தமான நடிப்பு மக்களை ரொம்பவே கவர்ந்தது. அவர் துப்பறியும் படங்களில் நடித்ததால் தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்டு என்றும் அழைக்கப்பட்டார். அந்த வகையில் அவரது பெரும்பாலான படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன. இன்றும் அவரது படங்களைப் பார்ப்பது என்றால் ப்ரஷ்ஷாகவே இருக்கும்.

  • Pushba 2: புஷ்பா 2 படத்தின் 4ம் நாள் வசூல்… இந்தி பாக்ஸ் ஆபீஸில் முதலிடம்

    புஷ்பா 2 படம் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுகிறது. சமூக வலைதளங்களிலும் ரொம்ப பாசிடிவான விமர்சனங்களே இருந்து வருகிறது.

    அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா இருவரும் ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்கள். பாடல்களிலும் சிறப்பான நடனம் பட்டையைக் கிளப்புகிறது. பல்வேறு தரப்பு ரசிகர்களும் இதை வரவேற்றுள்ளனர். குறிப்பாக கோரியோகிராபரை மிகவும் பாராட்ட வேண்டும்.

    பைட்டும் மாஸாக உள்ளது. இந்தப் படம் செம்மரக் கடத்தை மையமாகக் கொண்டு புதுமையாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. ஐதராபாத்தில் உள்ள திரையரங்கில் அல்லு அர்ஜூன் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க வந்துள்ளார்.

    அப்போது அதிமாக கூட்ட நெரிசல் இருந்தது. அந்த நெரிசலில் சிக்கி 32 வயதான பெண் ஒருவரும், அவரது 9 வயது மகனும் சிக்கித் தவித்தனர். இதில் அந்தப் பெண் பலியானார். அந்த சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். இது அல்லுவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தக் குடும்பத்திற்கு உண்டான அனைத்து செலவுகளையும் பார்ப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

    தமிழகத்தில் படம் காண்பித்து வரும் திரையரங்க உரிமையாளர்கள் சிலர் புஷ்பா 2 படம் மாஸ் தான். ஆனால் முதல் பாகத்தைப் போல இல்லை என்றே சொல்கின்றனர். அதே நேரம் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கடந்த 2 நாள்களாக விடுமுறை தினம் என்பதால் கலெக்ஷன் நல்லா இருந்தது. அந்த வகையில் இன்று (திங்கள் கிழமை) முதல் படத்திற்கான வசூல் சற்று குறைய ஆரம்பிக்கும். தற்போது கடந்த 4 நாள்களில் படத்தின் வசூல் விவரம் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.

    கடந்த 3 நாள்களில் இந்திய அளவில் மட்டும் 387.95 கோடியை வசூலித்துள்ளது. 4வது நாளில் மட்டும் 141.50 கோடியை இந்தியாவில் வசூலித்துள்ளது.4வது நாளில் புஷ்பா 2 அனைத்து மொழிகளிலும் சேர்த்து மொத்தமாக 141.50 கோடியை வசூலித்துள்ளது. அந்தவகையில் மொத்தம் 529.45 கோடியை இதுவரை வசூலித்துள்ளது.

    அதிலும் இந்தியில் டப்பிங்கான இந்தப் படம் நேற்று மட்டும் 85 கோடியை வசூலித்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. பாக்ஸ் ஆபீஸ் இந்தியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை நிகர லாபம் மட்டும் 150 கோடி.

  • இளையராஜா அந்த ஒரு விஷயத்துக்காக சம்பளமே வாங்காம இசைத்தாராம்… என்ன படம்னு தெரியுமா?

    இளையராஜா என்றாலே அவருக்கு இசைஞானி, ராகதேவன் என்றெல்லாம் பலவிதமான அடைமொழிகள் உண்டு. தமிழ்சினிமா உலகில் இசையால் அவர் செய்த அபார சாதனைகள் பலப்பல உண்டு. இன்று வரை இவரது பாடல்களைக் கேட்டாலே அது மனதுக்கு இதமாக இருக்கும். எவ்வளவு துயரமான நிலை நமக்கு வந்தபோதும், இளையராஜாவின் பாடலைக் கேட்டாலே போதும். அது நமக்கு பல தருணங்களில் மாமருந்தாகவும் அமைவதுண்டு.

    பிரதிபலன் கருதாமல் இசைஞானி இவ்வளவு அற்புதமான இசையைத் தருகிறார் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் அவருடைய இந்த இசைக்கு எத்தனை கோடிகள் கொடுத்தாலும் தகும் என்பதே அவரது தீவர ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

    80களில் இவர் இசை அமைத்த பாடல்களைக் கேட்டால் நம் செவியில் தேன் வந்து பாய்வது போலவே இருக்கும். அந்தவகையில் அப்போது அவர் பீக்கில் இருந்த காலகட்டம். அப்படி என்றால் அவர் தான் அதிகமாக சம்பளம் வாங்க வேண்டும். ஆனால் ஒரு படத்துக்கு சம்பளமே வாங்காமல் இசை அமைத்துள்ளார். அது என்ன படம்? என்ன காரணத்துக்காக அப்படிச் செய்தார்னு பார்ப்போம்.

    1981ல் இவர் இசை அமைத்த பன்னீர் புஷ்பங்கள் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் சுரேஷ், சாந்தி, பிரதாப் போத்தன், வெண்ணிற ஆடை மூர்த்தி, அர்ச்சனா உள்பட பலர் நடித்துள்ளனர்.

    இந்தப் படத்துக்குத் தான் இளையராஜா சம்பளமே வாங்காமல் இசை அமைத்துள்ளார். ஏன்னா இந்தப் படத்தின் இயக்குனர்கள் சந்தான பாரதி, பி.வாசு. இவர்கள் தான் இளையராஜாவுக்கு ஸ்ரீதர் இயக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது படத்துக்கு இசை அமைக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்களாம்.

    அதனால் தான் இந்தப் படத்துக்கு இளையராஜா சம்பளமே வாங்கவில்லையாம். இந்தப் படத்தில் கோடைகால காற்றே, ஆனந்தராகம், பூந்தளிர் ஆட, வெங்காய சாம்பாரும் ஆகிய இனிய பாடல்கள் உள்ளன.

    ௮௧ வயதாகும் இளையராஜா தற்போதும் கூட கொஞ்சமும் சோர்வில்லாமல் தனது இசைப்பணியைத் தொடர்கிறார் என்றால் ஆச்சரியம் தான். விடுதலை 2 படத்திற்கு இசை அமைத்துள்ளார். அதுதவிர தமிழகத்தின் பல ஊர்களில் மேடைக்கச்சேரியும் செய்து வருகிறார். வரும் ஜனவரி 17ம் தேதி நெல்லையில் அவரது மாபெரும் இன்னிசைக் கச்சேரி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் சென்னை, மதுரை, தஞ்சாவூரில் கச்சேரியை நடத்தி உள்ளார்.

  • கார்த்திக் படத்தைப் பார்த்து விட்டு சில்க்கைப் புகழ்ந்த எம்ஜிஆர்… என்ன காரணமா இருக்கும்?

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சில்க் நடித்த ஒரு படத்தில் அவரது அபாரமான நடிப்பைக் கண்டு புகழ்ந்துள்ளார் அது என்ன படம்னு தெரியுமா? கார்த்திக் படத்தைப் பார்த்து விட்டு சில்க்கைப் பாராட்டினார் என்றால் அது என்ன படமாக இருக்கும்? அப்படி என்றால் சில்க் அந்தப் படத்தில் எப்படி நடித்திருப்பார் என்ற எண்ணம் எழுகிறது அல்லவா? வாங்க பார்க்கலாம்.

    தமிழ்சினிமாவின் பொற்காலம் என 80களைத் தான் சொல்வார்கள். இன்றும் தமிழ்ப்பட பாடல்கள் என்றால் 80ஸ் ஹிட்ஸ்களைத் தான் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

    அந்த வகையில் அப்போது எல்லா நடிகர்களின் படங்களும் ஹிட் ஆகும். கதை தான் அங்கு பேசும். அந்தவகையில் 1981ல் இரு சூப்பர்ஹிட் காதல் படங்கள் வெளியாயின. அவற்றில் ஒன்று கார்த்திக், ராதா அறிமுகமான அலைகள் ஓய்வதில்லை. இதை பாரதிராஜா இயக்கினார். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்தில் தியாகராஜன், சில்க் ஸ்மிதா முக்கிய கேரக்டர்களில் நடித்து இருந்தனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் ரகங்கள்.

    அலைகள் ஓய்வதில்லை படத்துக்காக பாரதிராஜாவிடம் மணிவண்ணன் உதவியாளராக இருந்தார். பெண்களுக்கு மிகவும் பிடித்த படங்கள். குறிப்பாக இளம் பெண்களைக் கவரக்கூடிய படங்கள் தான் இவை

    அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக், ராதா இருவரும் காதலில் கசிந்து உருகி நடித்து இருப்பார்கள். படத்தில் உண்மையான காதல் ஜோடிகளாகவே வாழ்ந்து இருப்பார்கள். இந்தப் படத்தில் இன்னொரு முக்கியமான வேடம் நடிகை சில்க் ஸ்மிதா ஏற்று நடித்து இருப்பார். தியாகராஜனின் மனைவியாக படத்தில் வருவார். ராதாவின் மதம் மாறிய காதலுக்கும், தன் கணவருக்கும் இடையில் இவர் போராடும் உணர்ச்சி பூர்வமான நடிப்பு அற்புதமாக இருக்கும்.

    அலைகள் ஓய்வதில்லை படத்தின் முதல் காட்சியை எம்ஜிஆர் பார்த்து விட்டு சில்க் ஸ்மிதாவின் நடிப்பை மிகவும் பாராட்டினார். இந்தப் படத்தில் சில்க் கவர்ச்சியைக் காட்டவே இல்லை. சேலை மட்டும் உடுத்தி குடும்பப்பாங்கான ரோலை ஏற்று நடித்து இருந்தார். இந்தப் படம் 200 நாள்கள் வரை ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

    இந்தப் படத்தை ஒரே நேரத்தில் தெலுங்கிலும் வெளியிட்டார்கள். இளையராஜாவின் இசையில் ஆயிரம் தாமரை, தரிசனம் கிடைக்காதா, காதல் ஓவியம், புத்தம் புது காலை, சரிகமப, தோத்திரம் பாடியே, வாடி என் கப்ப கிழங்கே, வாழ்வெல்லாம் ஆனந்தமே, விழியில் விழுந்து ஆகிய பாடல்கள் உள்ளன.

  • மதுரையில் வைகைப்புயலுக்கு பிரம்மாண்டமான பேலஸ்… குடும்பத்தினருக்காக கட்டியது இத்தனை வீடுகளா?

    வைகைப்புயல் என்றாலே வடிவேலு தான். இன்றைக்கும் நாம் அவரது படங்களைப் பார்த்தால் மனம் விட்டு, வாய்விட்டுச் சிரித்து மகிழ்வோம். அந்தளவுக்கு அவர் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டார். பாடி லாங்குவேஜ்ல சிரிப்பு காட்ட அவரை மிஞ்ச ஆளே கிடையாது. அது தான் அவருக்கு மூலதனம். கடுமையான உழைப்பால் படிப்படியாக முன்னேறியவர். இவர் மதுரை மற்றும் சென்னையில் எத்தனை வீடுகளைக் கட்டியுள்ளார்? மதுரையில் அவரது பிரம்மாண்ட பேலஸ் எங்குள்ளதுன்னு பார்ப்போமா…

    எளிய குடும்பத்தில் பிறந்தவர் வைகைப்புயல் வடிவேலு . மதுரையில் வைகை சிட்டி என்ற பெயரில் ஒரு பேலஸ் கட்டியுள்ளார். இவருக்கு மதுரை மற்றும் சென்னையில் 25 வீடுகள் சொந்தமாக உள்ளன. பொதுவாக வடிவேலுவுக்கு உதவும் குணம் இல்லை என்பார்கள். ஆனால் இவர் உடன் பிறந்த சகோதரர்கள், மனைவி உடன் பிறந்த சகோதரர்கள் அனைவருக்குமே வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.

    madurai vadivelu palace

    madurai vadivelu palace

    தான் எப்படி பிரம்மாண்டமாக வாழ்கிறாரோ அதே போன்ற வசதிகளுடன் கூடிய வீட்டைத்தான் அவர்களுக்கும் கட்டிக் கொடுத்துள்ளார். மதுரையில் தான் தனது முதல் வீட்டை கட்டியுள்ளார். அவருக்கு மட்டும் அல்லாமல் அவருடைய சகோதரர்களுக்கும் சேர்த்தே கட்டியுள்ளார். இங்கு தான் அவரது தாயார் கடைசி வரை வாழ்ந்துள்ளார். எங்கு இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு தடவை பொங்கல் விழாவுக்கு இங்கு வந்துவிடுவார்.

    வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனுக்காக ஒரு வீடு கட்டியுள்ளார். ஆனால் இங்கு யாரும் இப்போது தங்கவில்லை. அவரது மகன் கருப்பாயூரணியில் வடிவேலு கட்டிக்கொடுத்த வீட்டில் இருக்கிறாராம். வடிவேலு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை போட்டோ பிரேமுக்குக் கண்ணாடியைக் கட் பண்ற வேலையைச் செய்து வந்தார். அவரது சகோதரர்களும் அதே வேலையைப் பார்த்து வருகிறார்கள்.

    வடிவேலுவின் சகோதரி, இளைய சகோதரருக்கும் பிரம்மாண்டமாக வீடு கட்டிக் கொடுத்துள்ளார். மதுரையில் இருந்து மானாமதுரை போகிற வழியில் கீழடியைத் தாண்டியதும் பைபாஸ்லயே வைகை சிட்டி என்ற பெயரில் பேலஸ் கட்டியுள்ளார். இங்கு மிகப்பெரிய ஆர்ச் இருக்கும். இதுதான் வடிவேலுவுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம். இங்கு நடுவுல தான் இந்த பேலஸ்சைக் கட்டி இருக்காரு வடிவேலு.

    அந்த பேலஸ்சுக்கு வடிவேலு மட்டும் தான் எப்போவாவது வந்து போவாராம். வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. குடும்ப உறுப்பினர்கள் கூட அந்த பேலஸ் கட்டின புதிதில் தான் வந்து போனார்களாம். வெள்ளைக் கலரில் பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக உள்ளது. இது மதுரைக்கார்களுக்கே தெரியாதாம். வடிவேலுவுடன் நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பர்களே அவரை ஏமாற்றியுள்ளார்களாம். இவர் வாங்கிய பல வீடுகளை இவரை ஏமாற்றி எழுதி வாங்கிவிட்டார்களாம்.

    vadivelu son house

    vadivelu son house

    மதுரை பக்கத்தில் உள்ள சிறிய ஊரில் ஒரு கூலித்தொழிலாளியின் மகளைத் தான் தனது மகன் சுப்பிரமணியனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தார் வடிவேலு. கருப்பாயூரணியில் தான் இவரது வீடு உள்ளது. இதே ஏரியாவில் தான் அவரது 3 மகள்களில் ஒருவருக்கு வீடு உள்ளது. மற்ற மகள்களுக்கு அவர்களைக் கட்டிக் கொடுத்த ஊரிலேயே வீட்டையும் கட்டிக் கொடுத்துள்ளார். வடிவேலு மதுரைக்கு எப்போ வந்தாலும் அவர் தங்கும் வீடு இந்த மகளின் வீடு தானாம்.

    வடிவேலுவுக்கு சென்னை சாலிகிராமத்தில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டில் தான் தற்போது வடிவேலு வசித்து வருகிறார். இந்த வீடு முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வீட்டுக்கு நேர் எதிரில் உள்ளது. இதே ஊரில் வடிவேலுவுக்கு இன்னொரு வீடும் உள்ளது. இதுவும் முதல் வீடு மாதிரியே இருக்கும். கதவு, வீட்டோட கலர் எல்லாமே அப்படியே இருக்கும். நடிகர் வடிவேலு தனது அலுவலகமாக தற்போது இந்த வீட்டைப் பயன்படுத்தி வருகிறாராம்.

  • ஓ மை காட்: ரஜினி ரொம்ப தெளிவானவரு… இப்ப இல்ல… அப்பவே..! பிரபலம் சொல்வது என்ன?

    திருவண்ணாமலை நிலச்சரிவில் 7 பேர் பலியானது குறித்து உங்களோட கருத்து என்னன்னு நிருபர்கள் கேட்கும்போது பலியா? ‘ஓ மை காட்’னு ரஜினி சொன்னது இப்போது சர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்றாருன்னு பாருங்க…

    ரஜினி ஜெய்ப்பூரில் கூலி படப்பிடிப்புக்காக சென்றுள்ளார். அப்போது நிருபர்கள் திருவண்ணாமலை நிலச்சரிவில் 7 பேர் பலியானார்கள். அதுபற்றி உங்க கருத்து என்னன்னு கேட்குறாங்க. ஓ மை காட் எனக்குத் தெரியாதுன்னு சொல்லி விட்டார். அந்த வகையில் ரஜினி ஏன் தெரியாதுன்னு சொல்லிருக்காரு என்பது யோசிக்க வேண்டியுள்ளது.

    என்னன்னா ரஜினி இப்போது திருவண்ணாமலையில் நடந்த விஷயம் தெரியும்னு சொன்னாருன்னா நீங்க நேரடியா போயிக்கலாமே. அறிக்கைக் கொடுத்து இருக்கலாமேன்னு கேள்வி வரும். ரஜினி அண்ணாமலையாரின் தீவிர பக்தர். அண்ணாமலைன்னு ஒரு படம் எடுத்ததே அதுக்காகத் தான். இப்படி ஒரு மழை, வெள்ளம், புயல் திருவண்ணாமலையில அடிச்சிருக்கு.

    அதுமாதிரி விஜய் பனையூரில் வைத்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுத்தாரு. அதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு விஜய் சம்பந்தமான கேள்வியும் வரும். அப்புறம் சீமான் சம்பந்தமான கேள்வி வரும். நீங்களும், சீமானும் சந்தித்தீர்களே அது என்ன விஷயம் என்றும் கேட்பார்கள். அதற்காகத் தான் எந்த ஒரு சிக்கலையும் சந்தித்துவிடக்கூடாது என்று மிகத் தெளிவாக ‘ஓ மை காட்’னு பதில் சொல்லி நழுவி இருக்கிறார்

    இதுதான் ரஜினி. கூலி படத்தில் அமீர்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரை நடிப்பு ராட்சசன் என்றே சொல்லலாம். சுருதிஹாசனையும் நடிக்க வைத்துள்ளார். அதே நேரம் அமீர்கானை வைத்து பில்டப் கொடுக்க வேணாம். அவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஸ்கிரீன் ஸ்கோப் கொடுக்கணும் என்றும் உறுதியாகச் சொல்லிவிட்டாராம் ரஜினி.

    அதே நேரம் ரஜினி இப்போ இல்ல. முன்னாடியே ரொம்ப தெளிவா இருந்தாரு. நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ‘வச்சிக்கவா ‘ பாடலில் உடல் எல்லாம் சீரியல் லைட்டைக் கட்டி ஆடுவாங்க. அப்போ நிறைய கலர் டிவியில் படம் ஓடிக்கிட்டு இருக்கும். அதுல கோடு கோடா விழுந்தது. இதுக்கு என்ன பண்ணலாம்னு எல்லாரும் யோசிக்கும் போது ரஜினி ஒரு நபரைப் பற்றி சொல்கிறார்.

    அவர் வந்தால் இதை சரிசெய்து விடுவார்னு சொல்றாரு. அது வேறு யாருமல்ல. தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்தான். அவர் வந்ததும் ரஜினி சொன்னது போலவே அவரும் சரிசெய்து கொடுக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • 2024ல் டாப் 10 மொக்கைப் படங்கள்… அதுலயும் ஒரே ஹீரோவுக்கு ரெண்டு படமா?

    2024ல் வெளியான டாப் 10 மொக்கைப் படங்கள் பற்றிப் பார்ப்போம். இந்தப் படங்கள் பட்ஜெட், வசூல் மற்றும் ரெகவரியின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் 10வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்குப் போகலாமா…

    இந்த வரிசையில் 10வது இடத்தில் உள்ள படம் கடைசி உலகப்போர். இந்தப் படம் கதையிலும், திரைக்கதையிலும ;கோட்டை விட்டதால் மக்கள் அதிகம் ரசிக்கவில்லை. 9வது இடத்தில் ப்ளடி பெக்கர். நெல்சன் இயக்கத்தில் கவின் நடித்த படம். இது தீபாவளி ரேஸில் அமரன் கூட விட்டாங்க. படம் மண்ணைக் கவ்வியது.

    8வது இடத்தைத் தீபாவளிக்கு வெளியான பிரதர் படம் பிடித்துள்ளது. எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்தது. இதுக்கு பெரிய ஹைப் இருந்தும் படம் பெரிய அளவில் வசூலைக் குவிக்கவில்லை.

    7வது இடத்தை விஷால் நடித்த ரத்தினம் படம் பிடித்துள்ளது. ஹரி இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு வசூல் குறைவு தான். இந்த வரிசையில் 6வது இடத்தைப் பிடித்ததும் ஜெயம் ரவி படம் தான். சைரன். இதுல ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தின் வசூலும் குறைவு தான்.

    5வது இடத்தை சூப்பர்ஸ்டார் ரஜினியின் லால் சலாம் பிடித்துள்ளது. இந்தப் படத்தோட ஹார்டு டிஸ்க் தொலைந்து போனது. 21 நாள் சூட் பண்ணின காட்சிகள் இடம்பெறவில்லை என்று சொன்னாங்க. படத்துக்கு 50 கோடி பட்ஜெட். இதுக்கு தியேட்ரிகல் ரைட்ஸ் 35 கோடிக்கு வாங்கிருக்காங்க. இந்தப் படத்துக்கு 48 பர்சன்ட் தான் ரெகவரியே ஆகியிருக்கு.

    4வது இடத்தைத் தங்கலான் பிடித்துள்ளது. 130 கோடி பட்ஜெட். ரஞ்சித் இயக்கியுள்ளார். இது மிகப்பெரிய பிளாப் தான். இந்தப் படத்துக்கு ரெகவரி 67 பர்சன்ட் தான். 3வது இடத்தைப் பிடித்துள்ள படம் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2.

    250 கோடி பட்ஜெட். 60 பர்சன்ட் ரெகவரி பண்ணியது. இந்த வரிசையில் 2வது இடத்தைப் பிடித்தது ரஜினி நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கிய படம் வேட்டையன். 310 கோடி பட்ஜெட். இது கிட்டத்தட்ட 85 பர்சன்ட் ரெகவரி பண்ணியுள்ளது.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் 350 கோடி பட்ஜெட்ல எடுத்த படம் கங்குவா. சூர்யா நடித்தது. இந்தப் படத்துக்கு 34 பர்சன்ட் தான் ரெகவரி. இதே தயாரிப்பாளரின் மற்றொரு படம் தான் தங்கலான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த லிஸ்டில் ஒரே ஹீரோவின் 2 படம் என்று சொன்னோம் அல்லவா. அது யாருன்னா ஜெயம் ரவி தான். அந்த வகையில் 2 படங்களை ஒரே தயாரிப்பாளர் தயாரித்துள்ளார். அது ஞானவேல் ராஜா. ரஜினிக்கும் 2 படங்கள் லிஸ்டில் வந்தாலும் லால் சலாமில் கௌரவ வேடத்தில் தான் ரஜினி நடித்துள்ளார் என்பதால் அதைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

  • அஜீத்தைக் கடும் கோபத்துக்கு ஆளாக்கிய இயக்குனர்… டுவிஸ்ட் வைத்த தயாரிப்பாளர்

    ஆஸ்கர் மூவீஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அஜீத் குறித்தும் அவரது கோபம் பற்றியும் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு.

    அஜீத் அந்த பிரபல இயக்குனரோட பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க ஒரு ஹோட்டலுக்கு வர்றாரு. அப்போ அங்கு பல பிரபலங்களும் வந்துருக்காங்க. அங்கே உள்ளவங்க கிட்ட அந்த இயக்குனர் பிசியா பேசிக்கிட்டு இருந்துருக்காரு. அப்போ அஜீத் சார் அங்கு வந்து அந்த இயக்குனரோட அசிஸ்டண்டுக்கிட்ட நான் வந்துருக்கேன்னு சொல்லுன்னு சொல்றாரு.

    அப்போ அவரு உள்ளே போய் சொல்லிட்டு வந்துடறாரு. ஆனா ரொம்ப நேரம் உட்கார்ந்து பார்த்த அஜீத் திரும்பவும் அந்த அசிஸ்டண்டு கிட்ட சொல்லி விடுறாரு. ஏற்கனவே நீங்க வந்ததை சொல்லிட்டேன் என்றவர் மீண்டும் அஜீத் சொன்னதற்காக இயக்குனரின் அறைக்கதவை திறந்து சொல்லிட்டு வர்றாரு. வந்ததும் அஜீத்திடம் சென்று சார் இப்ப கொஞ்சம் பிசியா இருக்காரு. இன்னொரு நாள் உங்களை சந்திப்பாராம்னு சொல்லிடறாரு.

    அதைக் கேட்டதும் அவரோட முக ரியாக்சனே மாறிடுது. அஜீத்துக்கு முகத்துல அவ்ளோ கோபம் இருந்ததை நான் அன்னைக்குத் தான் பார்த்தேன். நானே மிரண்டுட்டேன். அப்போ ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னாரு. அவரு அந்தக் கோபத்தைப் பக்குவமா தான் வெளிக்காட்டுனாரு. ‘ஒன் டே வில் கம்’னு சொல்லிட்டுப் போயிடறாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    அந்த டைரக்டர் அஜீத் சார் பெரிய ஆளா ஆனதுக்குப் பிறகு பல தடவை அவருக்கிட்ட வந்து வாய்ப்புகள் கேட்குறாரு. ஆனா அவரைப் பக்கத்துலயே அஜீத் சார் நெருங்க விடல. அஜீத் சாருடன் வேலை பார்க்குறவங்களுக்கு எல்லாம் வீடு கட்டிக் கொடுத்துருக்காரு. அவர் சொல்ல வேண்டிய கருத்தைத் தைரியமாகச் சொல்பவர். அவருக்கு தல தலன்னு பட்டத்தை வேணாம்னு இன்னைக்கும் ஒதுங்கி இருக்காரு.

    அந்த வகையில அந்த இயக்குனர் யாரு என்பதை பேட்டியின் கடைசியில் ஒரு க்ளூ கொடுத்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சொல்லி முடிக்கிறார். அவர் டேம் பேர்ல படம் எடுத்த ஒரு டைரக்டர் என்று சொல்கிறார். அவர் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது அமராவதி படம் என்று தெரிகிறது.

    அமராவதி என்பது ஒரு அணையின் பெயர் தான். அந்தப் படத்தை இயக்கியவர் செல்வா. அந்தப் படத்தில் அஜீத்துக்கு சங்கவி ஜோடியாக நடித்தார். கல்யாண் குமார், கவிதா, நாசர், சார்லி, தலைவாசல் விஜய் உள்பட பலரும் நடித்துள்ளனர். ஜீத் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 1993ல் வெளியானது.

  • சூப்பர்ஸ்டாரையே பயமுறுத்திய ராமராஜன்… அதுபற்றி மக்கள் நாயகன் என்ன சொல்றாருன்னு பாருங்க…

    தமிழ்சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இன்று வரை வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது படங்களை ஆறிலிருந்து 60 வயது வரை உள்ள ரசிகர்களும் ரசிப்பார்கள். அந்த வகையில் ரஜினிக்கு இப்போது வயதானாலும்கூட அந்த அழகும் ஸ்டைலும் மாறவே இல்ல. இன்னும் அப்படியே இருக்குன்னு படத்துல வர்ற டயலாக் போல அசத்திக் கொண்டு வருகிறார்.

    தற்போதும் இளம் நடிகர்களுக்குப் போட்டியாக இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதே வேகம். அதே சுறுசுறுப்பு என ரஜினி நடிப்பது இன்னும் பிரமிப்பாகவே உள்ளது. அப்படிப்பட்ட ரஜினிக்கே ஒரு முறை கிலி கொடுத்துள்ளார் ராமராஜன். அது பற்றி பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்றாருன்னு பாருங்க…

    ரஜினிகாந்தைப் பற்றி ஒரு தடவை ராமராஜன் சொல்லிக்கிட்டு இருந்தாரு. ஒரு தடவை கமல், ரஜினி, கார்த்திக், பிரபு எல்லாரும் பீக்ல இருக்கும்போது ரஜினியைத் தாண்டி ராமராஜன் சம்பளம் வாங்கிட்டாரு. அந்த நேரம் இவரைப் பேட்டி எடுக்குறவங்க நீங்க ரஜினியையே பயமுறுத்தினீங்களாமேன்னு கேட்குறாங்க.

    அப்போ ராமராஜன் பதில் சொல்றாரு. ஒரு வகுப்புல ஒரு மாணவன் தொடர்ந்து பர்ஸ்ட் ரேங்க் எடுத்துக்கிட்டு வர்றான். இன்னொரு பையன் செகண்ட் ரேங்க் எடுத்துக்கிட்டு வர்றான். திடீர்னு செகண்ட் ரேங்க் எடுக்குறவன் பர்ஸ்ட் ரேங்க் எடுக்குறான். அப்படி அவன் பர்ஸ்ட் ரேங்க் எடுத்துட்டான்னா ஏற்கனவே பர்ஸ்ட் ரேங்க் எடுத்துக்கிட்டு இருந்தவனுக்கு ஒரு பயம் வந்துடும்.

    என்னன்னா அவங்க அப்பா கூப்பிட்டுத் திட்டுவாங்க. அடிப்பாங்க. ஏன்டா உனக்கு அடுத்த ரேங்க் வாங்கினவன் இன்னைக்கு உன் ரேங்குக்கு வந்துட்டான்னு திட்டுவாங்க. அந்த மாதிரி பயம் ரஜினிக்கும் கண்டிப்பா இருந்தது. அது ஒண்ணும் தவிர்க்கவே முடியாது.

    ஏன்னா அந்த இடத்தை அப்படியே வச்சிக்கிட்டு வர்றாரு பாருங்க. அந்த இடத்தில் யாராக இருந்தாலும் பயம் வரத்தான் செய்யும். அதைத்தாண்டி 90கள்ல இது நடந்தது. அதன்பிறகு என்னுடைய சினிமா கெரியர் எப்படி இருந்ததுன்னு உங்களுக்கு எல்லாம் தெரியும். முடிஞ்சிப் போச்சு.

    ஆனாலும் இன்றைக்கும் லைம் லைட்ல இருக்கக்கூடியவர் வந்து ரஜினிகாந்த் தான். இன்னைக்கும் நான் பார்த்தன்னா சூட்டிங் போறதா இருக்கட்டும். ஏர்போர்ட் போகறதா இருக்கட்டும். ஒரு நிகழ்ச்சிக்கு வர்றதா இருக்கட்டும்னு ஓபனா சொன்னாரு ராமராஜன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அந்த சுறுசுறுப்பு மாறல. இத்தனை வயசுல. அது உண்மையிலேயே காட் கிப்ட். அது ரசிகர்களோட அருள்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.