Author: sankaran v

  • விஜயகாந்துக்கும், ரஜினிகாந்துக்கும் போட்டி இருந்ததா? என்ன சொல்றாரு பிரபலம்?

    நடிகர்களில் பெயர்ல காந்தம் உள்ள நடிகர்கள் என்றால் ரஜினிகாந்த், விஜயகாந்த், ஸ்ரீகாந்த், நளினிகாந்த், ரவிகாந்த்னு சிலரைச் சொல்லலாம். ஆனால் அவர்களில் ரஜினிகாந்தும், விஜயகாந்தும் தான் மிகவும் பிரபலமானவர்கள்.

    ஆரம்பத்தில் சினிமா உலகிற்குள் நுழையும்போது இருவருமே சந்தித்த அவமானங்கள் ஏராளம். கருப்பா இருந்து நட்சத்திர அந்தஸ்துக்கு வர்றது அப்போது சாதாரணமான விஷயமல்ல. ஹீரோன்னா வெள்ளையா, சிகப்பா தான் இருக்கணும்னு நினைத்தவர்கள் தான் அப்போது அதிகம் பேர்.

    மாய உலகம்

    அதனால் சினிமா உலகே பலருக்கும் கனவு உலகமானது. அது ஒரு மாய உலகம். நமக்குலாம் வாய்ப்பு கிடைக்குமா என பலரும் ஏங்கித் தவித்தனர். ஆனால் இந்த மாயையை முதலில் உடைத்து கருப்புக்கும் சினிமாவில் இடமுண்டு என நிரூபித்தது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். அதன்பிறகு வந்தவர் தான் விஜயகாந்த்.

    அபூர்வ ராகங்கள்

    பஸ் கண்டக்டராக இருந்து சினிமா மோகத்தில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்தவர் ரஜினி. ஆரம்பத்தில் அவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. கமல் படத்தில் வில்லனாகவே வந்தார். அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் பெரிய கேட்டைத் திறந்து தமிழ்சினிமாவுக்குள் நுழைய வைத்தார் பாலசந்தர்.

    16 வயதினிலே படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போது அவருக்கு பெரிய அளவில் யாரும் சூட்டிங் ஸ்பாட்ல கூட முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கமலுக்கு தான் எல்லா வரவேற்பும் இருந்தது. அவருக்குத் தான் கார் வசதி செய்து கொடுத்தார்கள். படங்களில் அவரது தனித்துவமான ஸ்டைல், வேகமான டயலாக் இவரை சூப்பர்ஸ்டார் ஆக்கியது.

    கருப்பு எம்ஜிஆர்

    அதே போலத்தான் விஜயகாந்தும் பல அவமானங்களை சந்தித்தார். அதுதான் ‘ஏற்கனவே ஒரு காந்த் இருக்காரே… நீ எதுக்கு’ன்னு கேட்டார்களாம். ஆனாலும் தான் யார் என்று காட்டவேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்து முன்னேறி கருப்பு எம்ஜிஆர், புரட்சிக்கலைஞர் என்று தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் தான் விஜயகாந்த்.

    உழவன் மகன் முதலிடம்

    அந்தவகையில் ரஜினி, விஜயகாந்த் படங்கள் ஒன்றாக வந்தாலும் அவர்களுக்குள் போட்டி இருக்காது. ரஜினி, கமல் படங்களுக்குத் தான் போட்டி நிலவும். அதே சமயம் இந்த இருவரது படங்களைக் காட்டிலும் விஜயகாந்த் படங்கள் சில சமயம் முந்திக்கொண்டு முதலிடத்தைப் பிடித்து விடும். அப்படித்தான் 87ல் ரஜினிக்கு மனிதனும், கமலுக்கு நாயகன் படமும் வந்தது.

    ஆனால் பி, சி சென்டர்களில் முந்திக்கொண்டு சென்றது விஜயகாந்தின் உழவன் மகன் படம். அந்த வகையில் அவரது அபாரவளர்ச்சி இருந்தது. இவர்களுக்குப் பிறகு உள்ள 3ம் இடத்தைப் பிடிக்க அப்போதைய முன்னணி நடிகர்கள் பலரும் போட்டிப் போட்டனர். ஆனால் விஜயகாந்த் பிடித்துவிட்டார்.

    நல்ல நட்பு

    அந்த வகையில் இவர்களுக்குள் போட்டி இருந்ததா என பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். விஜயகாந்துக்கும், ரஜினிகாந்துக்கும் எந்தக்காலத்திலும் போட்டி இருந்தது இல்ல. ஆனா நல்ல நட்பு இருந்தது.

  • நான் கஞ்சனா யார் சொன்னா? அதுக்கெல்லாம் கவலைப்படுற ஆளு நான் இல்ல… குமுறும் ராமராஜன் பட நடிகர்

    ராமராஜன் கடைசியாக நடித்த படம் சாமானியன். அதுல முக்கிய வேடத்தில் நடித்தவர் எம்.எஸ்.பாஸ்கர். ஆர்.ராகேஷ் இயக்கத்தில் ராமராஜனுடன் ராதாரவி, எம்எஸ்.பாஸ்கர் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார், போஸ் வெங்கட், மைம் கோபி உள்பட பலரும் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.

    இந்தப் படம் ராமராஜனுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கம்பேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் வந்தது. ஆனால் படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தப் படத்தில் மூக்கையா என்ற கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கர் அருமையாக நடித்துள்ளார். இவர் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் உள்ளார். 1987ல் திருமதி ஒரு வெகுமதி படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்குள் நுழைந்தார்.

    மக்கள் என் பக்கம், காவலன் என் கோவலன் படங்களும் இவருக்கு அதே ஆண்டில் வெளியானது. இவர் சிறந்த குணச்சித்திர நடிகர் என்று சொல்லும் வகையில் யதார்த்தமாக நடிப்பார். இவரது இயல்பான காமெடியும், முகபாவனைகளும் இவருக்கு நடிப்பது போலவே தெரியாது.

    அதுதவிர டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். 2023ல் இவர் நடித்த பார்க்கிங் படம் ரொம்பவே பேசப்பட்டது. இவர் தற்போது நான் கஞ்சன் அல்ல என்றும் நடந்தது இதுதான் என்றும் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.

    நான் ஒரு கஞ்சன். யாருக்கும் காசு கொடுக்க மாட்டேன்னு சொல்வாங்க. ஒருத்தர் சுகர் மாத்திரை வாங்கணும்னு காசு கேட்டாரு. கொடுத்தேன். வாங்கிட்டு நேரா ஒயின் ஷாப்புக்குப் போறாரு. அப்புறாம் நான் எதுக்கு காசு கொடுக்கணும்? பசிக்கிறதா வாங்க சாப்பாடு வாங்கித் தாரேன். மாத்திரை வாங்கணுமா? மெடிக்கல்ஸ் வாங்க.

    வாங்கித் தாரேன். ஸ்கூல் பீஸ் கட்டணுமா? வாங்க நானே கட்டுறேன்னு சொன்னா கையில கொடுங்கன்னு கேட்குறாங்க. நான் கையில பணம் தர மாட்டேன். இதுல என்ன தவறு இருக்கு? இதுக்காக நாலு பேரு என்னைத் திட்டுனா திட்டிட்டுப் போகட்டும். எனக்கு ஒண்ணும் கவலை இல்லை என்கிறார் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

    எம்எஸ்.பாஸ்கரைப் பொருத்தவரை அவர் சொல்வதில் நியாயம் உள்ளது என்றே சொல்லலாம். அவர் சொன்னதுபோல நாமே பலருக்கும் இரக்கப்பட்டு பணத்தைக் கொடுத்து இருப்போம். ஆனால் பெரும்பாலும் அவர்களோ அதை மது அருந்துவதற்குத் தான் பயன்படுத்துகின்றனர். இது நம்மை அவர்கள் ஏமாற்றுவதற்குச் சமம். நாம் அவர்களின் பசியைப் போக்க நினைக்கிறோம்.

    ஆனால் அவர்களோ சாப்பாடு வாங்க மறுக்கிறார்கள். பணமாகக் கேட்கிறார்கள். அப்படி கொடுக்கும் பணம் தவறான காரியத்துக்குப் போகும்போது யாருக்குத் தான் கொடுக்க மனசு வரும்? அதனால் இந்த விஷயத்தில் எம்எஸ்.பாஸ்கர் செய்வதே சாலச்சிறந்தது.

  • சிங்கப்பெண்ணே ஆனந்திக்குப் பிடிச்ச நடிகர் யாருன்னு தெரியுமா? அட அவரா?

    சிங்கப்பெண்ணே ஆனந்தி யாருன்னு தெரியுமா என அவரது யதார்த்தமான வெள்ளந்தியான வெகுளியான அப்பாவித்தனமான நடிப்பைப் பார்த்ததும் பலரும் வலைதளத்தில் தேடத்துவங்கி விட்டனர். இவர் யார் எப்படி இந்த சீரியலுக்குள் வந்தாங்கன்னு பார்ப்போம்.

    இவரோட உண்மையான பேரு மானிஷா. 2001ம் ஆண்டு மார்ச் 29ல் கேரளாவில் பிறந்தவர். அங்குள்ள பத்தினம்திட்டா அருகில் உள்ள அருவிக்குளம் என்ற கிராமத்தில் பிறந்துள்ளார். அவரது தந்தையின் பெயர் மகேஷ். அங்குள்ள குன்னம் என்ற ஊரில் உள்ள அரசுப்பள்ளியில் படித்துள்ளார்.

    மதுரையில் உள்ள அன்னை பாத்திமா காலேஜ்ல பிஎஸ்சி ஏர்லைன்ஸ் முடித்துள்ளார். மதுரையில் படிக்கும்போது நிறைய தமிழ்சினிமாக்களைப் பார்த்துள்ளார். சூர்யாவை ரொம்பவே பிடிக்கும்னு சில இடங்கள்ல பதிவிட்டு இருக்கிறார். காலேஜ் முடிச்சதும் மாடலிங்கில் ஆர்வமாக இருந்துள்ளார். சில விளம்பரப்படங்களிலும் நடித்துள்ளார்.

    டிக்டாக், ரீல்ஸ்னு ரொம்பவே பிரபலமாக இருந்தார். இவருக்கு மலையாளத்தில் படாக பைங்கிளி என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுல அவங்க நடிப்பு ரொம்பவே சூப்பராக இருந்ததாம். 2020ல் கண் என்ற கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகுறாங்க. அது பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்புகிறது. அதே போல மலையாளத்தில் காமெடி ஸ்டார்ஸ் என்ற டிவி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

    இவரது முதல் தமிழ் சீரியல் சிங்கப்பெண்ணே தான். தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் 2வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தத் தொடரில் ஹீரோயின் ஆனந்தி நடிப்பு ரொம்பவே பிரமாதமாக உள்ளது. அதனாலேயே டிஆர்பி எகிறியுள்ளது.

    சிங்கப்பெண்ணே நாடகத்தில் அன்புக்கும், ஆனந்திக்கும் இடையே மலரும் மென்மையான காதலும், அதற்கு சதி செய்யும் மித்ராவின் வேலைகளும் பார்வையாளர்களை அதிகம் ஈர்த்துள்ளன. குறிப்பாக அந்த நாடகத்தில் கம்பெனி எம்டியாக வரும் மகேஷ்சும் ஆனந்தியைத் தீவிரமாகக் காதலித்து வருகிறார். அதே நேரம் ஆனந்தியோ அன்பை உயிருக்கு உயிராகக் காதலித்து வருகிறார்.

    மகேஷின் அம்மாவுக்கு மகேஷ் ஆனந்தியைக் காதலிப்பது பிடிக்கவில்லை. அதே நேரம் கம்பெனியில் முக்கிய நிர்வாகியாக உள்ள மித்ராவுக்கு மகேஷின் மீது காதல் ஏற்படுகிறது. அவளுக்கு கிராமத்துப் பெண்ணான ஆனந்தி இடைஞ்சலாக இருக்கிறார். இப்படி முக்கோண காதல் கதை சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால் டிவியில் அந்த அரைமணி நேரத்துக்குள் பெரிய ஹைப்புடன் முடித்து விடுவதால் தினமும் பார்க்க வேண்டும் என்ற துடிப்பைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

    அதனால் தான் இந்த நாடகம் இப்போது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. தவிர ஒவ்வொருவருடைய நடிப்பும் இயல்பாக உள்ளது. ஆனந்தியின் தந்தை அழகப்பனாக பட்டிமன்ற பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் நடித்துள்ளார்.

  • நடுராத்திரியில் கதவைத் தட்டிய ரஜினி… ஆச்சரியத்தில் உறைந்து போன பிரபுதேவா..!

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பல படங்களுக்கு கோரியோகிராபராக பிரபுதேவா பணியாற்றியுள்ளார். அதுல ஒண்ணுதான் சிவாஜி. ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது படப்பிடிப்பு ஸ்பெயின்ல நடக்க இருந்தது. இதற்காக அங்கு சென்ற போது ஒருநாள் இரவில் தனது உதவியாளர் விஷ்ணுவுடன் ஆலோசனையில் இருந்தார் பிரபுதேவா.

    அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்கவே விஷ்;ணு போய் கதவைத் திறந்து பார்த்துள்ளார். அவருக்கு ஒரே ஆச்சரியம். ‘சார் சார் சார்’னு சொல்லிக்கிட்டே இருந்தாராம். ‘எதுக்கு இத்தனை சார் போடுறாரு…?’ன்னு பிரபுதேவா போய்ப் பார்த்துள்ளார். அங்கு ரஜினி நின்று கொண்டு இருந்தாராம்.

    அப்போது ரஜினி ‘விஷ்ணுவ என்னோட அறைக்கு அனுப்பி வைக்கிறீங்களா… நாளைக்கு என்னோட பாட்டு சூட்டிங் இருக்கு. அதுக்கு ரிகர்சல் பார்க்கணும்’ என்று தெரிவித்துள்ளார். உடனே ‘இதுக்குப் போய் நீங்க ஏன் சார் வந்தீங்க.? ஒரு போன் போட்டுருக்கலாமே… நானே வர்றேன்’னு சொல்லி இருக்கிறார் பிரபுதேவா. ‘இல்ல வேணாம். நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் விஷ்ணுவை அழைச்சிட்டுப் போறேன்’னு சொன்னாராம் ரஜினிகாந்த்.

    இன்று அவரு பெரிய சூப்பர்ஸ்டாரா இருக்காருன்னா அதுக்கு எல்லாம் அவரோட இந்த எளிமை தான் முக்கிய காரணம். அவரு என்னை வந்து அறைக்கு வந்து அழைப்புமணியை அடிச்சிப் பார்க்கணும்கற அவசியமே இல்லை. உதவியாளர்கிட்ட சொல்லி என்னை வரச்சொல்லி இருக்கலாம்.

    sivaji the boss

    sivaji the boss

    இன்னொன்னு மறுநாள் தன்னோட பாடல் காட்சில நல்லா ஆடணுமே என்ற ஆர்வம் வரணும்கறதுக்காக நைட்டா இருந்தாலும் ரிகர்சல் பார்க்கணும்னு அவர் எடுக்குற முயற்சி… இதெல்லாம் சேர்ந்து தான் அவரை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துருக்கு. அவருக்கிட்ட கத்துக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்குன்னு பிரபுதேவா சொன்னாராம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

    2007ல் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் சிவாஜி. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் எல்லாம் மாஸ் ரகங்கள். ரஜினிகாந்துடன் ஸ்ரேயா, சுமன், விவேக், மணிவண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஏவிஎம் தயாரித்த படம். கதையை ஷங்கருடன் இணைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியுள்ளார். கே.வி.ஆனந்தின் ஒளிப்பதிவு அருமை. இந்தப் படத்தில் தான் பல்லேலக்கா, ஸ்டைல், வாஜி வாஜி, அதிரடி, சகானா, த பாஸ் ஆகிய ஸ்டைலிஷான பாடல்கள் உள்ளன.

  • மலையாளப்படங்களில் நடிப்பதில் தனுஷூக்கு என்ன சிக்கல்? நடிச்சாருன்னா வேற லெவல்தான்..!

    நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் நடித்து அசத்தி விட்டார். தமிழில் இவர் நடித்த பல படங்கள் வெற்றிவாகை சூடின. இந்தியில் 2013ல் ராஞ்சனா என்ற படத்தில் நடித்துள்ளார். இவரது நடிப்பு இயல்பானதாக இருக்கும். அதிகம் மிகைப்படுத்தப்பட்டு இருக்காது. ஓவரா பந்தாவும் பண்ணமாட்டார். இதுவே இவருக்கு பிளஸ் பாயிண்ட்.

    dhanush

    dhanush

    நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குனர் என பன்முகத்திறன்களையும் கொண்டவராக தனுஷ் இப்போது வளர்ந்து விட்டார். இவர் தனது திரையுலக வாழ்வில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். குறிப்பாக 14 சர்வதேச விருதுகள், 7 பிலிம்பேர் விருதுகள், 5 விகடன் விருதுகள், 4 தேசிய விருதுகள் என இவர் வாங்கிக் குவித்துள்ளார்.

    தற்போது இட்லி கடை என்ற படத்தில் நடித்து இயக்கி வருகிறார். இதுவரை 4 படங்களை இயக்கி விட்டார். பவர் பாண்டி படத்தை 2017ல் இயக்கினார். இது மாபெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து இந்த ஆண்டு ராயன் படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றார்.

    அதுமட்டும் அல்லாமல் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இது வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. அது தவிர தற்போது இயக்கி வரும் படம் இட்லி கடை. இது அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.இந்தப் படத்துக்கு இப்போது இருந்தே எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பித்துள்ளது.

    தனுஷ் இளையராஜாவின் பயோபிக்கிலும் நடிக்க உள்ளார். நடிப்பிலும் இயக்கத்திலும் பிசியாக உள்ள அவருக்கு சமீபத்தில் நயன்தாராவுடன் பெரிய அளவில் பிரச்சனை வந்தது. அதற்கான வழக்கும் நீதிமன்றத்தில் போய்க்கொண்டு தான் உள்ளது. இந்த சூழலில் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது.

    idli kadai

    idli kadai

    ஆனால் இவரைப் பற்றி நடிகர் ரோபோசங்கர் ஒரு கருத்து சொல்லி இருக்கிறார். அது கவனிக்கப்பட வேண்டியதாகவே உள்ளது. அவருடன் மாரி 2 படத்தில் நடித்துள்ளேன். அவரைப் பொருத்தவரை யாரையும் ஏற்றிவிட்டு அழகு பார்க்கக்கூடியவர் என்று தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் ரோபோ சங்கருடன் பழகும்போது குழந்தையாகவே மாறிவிடுவாராம்.

    தனுஷ் குறித்து வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் ஒரு கேள்வி கேட்டுள்ளார். அது என்னன்னு பாருங்க. தனுஷ் மலையாளப்படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கான்னு அந்த வாசகர் கேட்டுள்ளார். அதற்கு சித்ரா லட்சுமணன் சொன்ன பதில் இதுதான்.

    தனுஷ் இப்போது வாங்கிக் கொண்டு இருக்குற சம்பளத்தைப் பார்க்கும்போது அவர் மலையாளப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொஞ்சம் குறைவாகவே இருப்பதாகவே நான் நினைக்கிறேன். ஆனா மலையாளப்படத்துல நடிச்சாருன்னா நிச்சயமாக தனுஷ் வெற்றிவாகை சூடுவார் என்பதில் சந்தேகமே இல்லை. ஏன்னா தனுஷைப் பொருத்தவரைக்கும் இயற்கையான நடிப்பில் மலையாள நடிகர்களைப் போல நடிக்கிற நடிகர் தான் அவர் என்கிறார்.

  • விஜயைப் படுகுழியில் தள்ளும் முயற்சி நடக்கிறதா? அம்பேத்கர் விழாவில் அனல் பறக்க பேசிட்டாரே…!

    விஜயின் அனல் பறக்கும் பேச்சு குறித்தும், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளாதது குறித்தும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

    விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனே அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தளவுக்கு அவருக்கு ஆளும்கட்சியின் அழுத்தம் இருக்குன்னு பலரும் சொன்னாங்க. இந்த நிலையில் திருமாவளவனே அதற்கு விளக்கம் கொடுத்துவிட்டார். அரசியல் அழுத்தம் எதுவும் இல்லை. அவர் விஜயுடன் இணைந்து மேடையில் பேச ஆரம்பித்தால் கூட்டணியான்னு பிரச்சனைகள் எழும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் வரலன்னும் சொல்லிவிட்டார்.

    விஜய் தனது மாநாட்டில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்றார். இதுவரைக்கும் எந்தக் கட்சியுமே அதற்கு உடன்பாடாக இருந்தது இல்லை. திருமாவளவன் கூட உங்க பலம் என்னன்னு தெரியாம விஜய் இப்படி பேசுவது அவரது அரசியல் முதிர்ச்சி இன்மையைக் காட்டுகிறது என்றார்.

    அதே நேரம் விஜய் அம்பேத்கர் விழாவில் பேசும்போது திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர். அவராலேயே இந்த விழாவுக்கு வர முடியாத நிலைமை. அப்படின்னா அரசியல் அழுத்தம் அவருக்கு எவ்வளவு இருக்கும்? ஆனா இன்னைக்கு அவரோட நினைப்பு முழுவதும் நம்ம பக்கம் தான் இருக்கும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசுனது தான் ஃபயர். இதுதான் நேற்று முழுவதும் பேசுபொருளாக மாறி உள்ளது. ‘கூட்டணி கணக்குகளை மட்டுமே இறுமாப்புடன் 200ஐ வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு நான் விடுக்கும் எச்சரிக்கை… நீங்கள் உங்கள் சுயநலத்துக்காகப் பலவழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே அவரை மைனஸ் ஆக்கி விடுவார்கள்’ என்றார். இப்படி சொன்னது திருமாவளவன் எங்களோடு தான் இணைவார் என்ற நம்பிக்கையில் தான் விஜய் இப்படி பேசி உள்ளார்.

    Thirumavalavan

    Thirumavalavan

    இதே நேரத்தில் விஜயின் பேச்சு பலருக்கும் பிடிக்காமல் போய் உள்ளது. விஜயின் கட்சி திருமாவளவனுடன் இணைவதற்காக அல்ல. இதை முதலில் விஜய் உணர வேண்டும். எல்லாரையும் போல தான் அவரையும் அழைத்துள்ளார். இந்த சூழலில் விசிக இருந்தால் போதும் என விஜய் நினைக்கிறாரோ என எண்ணத்தோன்றுகிறது. தென்மாவட்டங்களில் விஜயின் அரசியல் வருகையை எல்லாரும் விரும்புறாங்க. அப்படிப்பட்டவர்கள் விசிக தான் முக்கியம் என விஜய் நினைப்பதை வேறு மாதிரி நினைக்கிறார்கள்.

    இதை விஜய் எப்படி புரிஞ்சிக்கப் போறாருன்னு தெரியல. இதை பேலன்ஸ் பண்ணினால் தான் விஜய் கட்சியின் மீது தற்போது எழுந்துள்ள விமர்சனம் மெல்ல மறைய வாய்ப்பு இருக்கு. விஜயைக் கவிழ்ப்பதற்கான வேலை நடக்குது. அவர் கூட இருந்து குழிபறிப்பதற்கான வேலை தான் இதெல்லாம். அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விஷயம்தான் இது எல்லாம் எனவும் வெளியில் உள்ள பார்வையாளர் ஒருவர் சொல்கிறார். அரசியல்களத்தில் விஜயகாந்துடன் முதலில் யார் எல்லாம் சேர்ந்தார்களோ அவரை அப்படியே நட்டாற்றில் விட்டுவிட்டார்கள்.

    அப்படி தான் விஜய்க்கும் அம்பேத்கரை வைத்து ஒரு சூழலை வைத்து ஏற்படுத்துகிறார்களோ என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதனால் விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. வெள்ள நேரத்தில் எல்லாரையும் வந்து பார்க்கலன்னும் விமர்சனம் வந்தது. அதற்கும் தண்ணீருல நின்னு சீன் போடுறதுல எனக்கு உடன்பாடு இல்லன்னாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • 2024ல தமிழ்சினிமா வின்னர் யாரு… தியேட்டர் ஓனர்களோட வாய்ஸ்…!

    2024ல வந்த படங்கள்ல எது நல்ல வசூலைக் கொடுத்தது? எது ஏமாற்றியது என திரையரங்கு உரிமையாளர்கள் கலந்துரையாடல் நடந்துள்ளது. அதுல சிகே சினிமாஸ் ரூபன், ரோகினி தியேட்டர் ரேவந்த், வெற்றி தியேட்டர் ராகேஷ், கேசினோ தியேட்டர் அருண், வரதராஜா தியேட்டர் அங்கிதா, வுட்லண்ட்ஸ் வெங்கடேஷ், கமலாசினிமாஸ் விஷ்ணு ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் பேசியவற்றின் தொகுப்பு என்னன்னு பார்க்கலாமா…

    கங்குவா ஹைப் கொடுத்தது. ஆனா படம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. படத்துக்காக சவுண்டை நாங்களே முதல்ல கம்மி பண்ணத்தான் செஞ்சோம். முதல்லயே இதை அவங்க செஞ்சிருந்தாங்கன்னா கொஞ்சம் நல்லாருந்துருக்கும் என்கிறார் கேசினோ தியேட்டர் அருண். கங்குவாவைப் பொருத்த வரை எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லைன்னு தான் சொல்லணும். பெரிய எதிர்பார்ப்புல கொஞ்சம் கம்மியானாலும் அது திருப்தி இல்லாம போயிடும்.

    கோட் படத்துக்கு ஆரம்பத்துல ஹைப்பே இல்லை. கடைசியா பிரேம்ஜி, வெங்கட்பிரபு பேசுனதுக்கு அப்புறம் தான் அந்த ஹைப் ஏறுச்சு என்கிறார் வெற்றி தியேட்டர் ராகேஷ். எதிர்பார்ப்பே இல்லாம படம் பார்த்து நல்லாருந்தா அது ரொம்ப ரீச்சாகிடும். 3 மணிநேரமா தியேட்டர்ல உட்கார முடியல. அதனாலும் படம் பிக்கப் ஆகலை. திருச்சிற்றம்பலம் சிம்பிளான படம். அது ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.

    ரசிகர்களோட பல்ஸ்சைக் கரெக்டா பிடிக்கலன்னா மிஸ் ஆகிடும். மதில் மேல் பூனை மாதிரி ஆகிடும். கங்குவா படத்துக்கு ஸ்டுடியோ கிரின் ஞானவேல் ராஜா 2000 கோடின்னு சொன்னாரு. படத்தோட வெற்றி விழாவுக்கு பாஸ்; பத்திரமா வச்சிருங்கன்னாரு. நான் பத்திரமா வச்சிருக்கேன். நேரு ஸ்டேடியத்துல இதுவரைக்கு கன்பார்ம் பண்ணல. அது எப்போ வருதுன்னு தெரியல… சக்சஸ் மீட்டுக்கு. இந்தப் படம் பார்த்துட்டு வாயைப் பொளப்பீங்கன்னு சூர்யா சொன்னாரு.

    அந்தப் படம் பார்த்துட்டு ஜனங்க பார்க்காமலேயே ஓடிப்போயிட்டாங்க. வாயைத் திறந்துக்கிட்டே போயிட்டாங்க. என்று காமெடியாக சொல்கிறார் வுட்லண்ட்ஸ் தியேட்டர் ஓனர் வெங்கடேஷ். முதல் நாள் முதல் ஷோவுல ஆடியன்;ஸ்கிட்ட என்ன ரீச் வருதோ அதுதான் படம் மாஸாகுறதும், பிளாப் ஆகுறதும் என்கிறார். புஷ்பா 2 ஒரே மாதிரி தான். டியூரேஷன்தான் அதிகம். மற்றபடி பார்ட் 1 சூப்பர்.

    புஷ்பா 2க்கு அவ்ளோ ஹைப் கொடுக்குற அளவுக்கு புக்கிங் பறக்கல. புஷ்பா 1க்கூட கம்பேர் பண்ணும்போது அது சூப்பர் என்கிறார் வரதராஜா தியேட்டர் ஓனர் அங்கிதா. புஷ்பா 2 மூன்றரை மணி நேரம் ஓடுது. அப்போ ஷோ டைம் மாறுது. 11.30, 3, 6.30, 10 மணி காட்சிகள் தான் நார்மலா தியேட்டர்ல உண்டு. இந்தப் படத்துக்கு ரன்னிங் டைம் 3மணி 20 நிமிடம். அதனால ஷோ டைம் மாறும். ஆனா நார்மலா உள்ள டைமிங்ல தான் ஜனங்களோட மைன்ட் செட்டா இருக்கும். அதுவே படத்துக்கு மைனஸ் ஆகிடும் என்கிறார் வுட்லண்ட்ஸ் தியேட்டர் ஓனர் வெங்கடேஷ்.

    கோட், அமரன் என்று முதல் 2 இடங்களைப் பிடித்ததைப் பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் சொல்றாங்க. அடுத்ததாக 3வது இடத்துல மஞ்சுமெல் பாய்ஸ், கில்லின்னு சொல்றாங்க. விடுதலை 2க்கு எதிர்பார்ப்பு இருக்கு. 2025ல் அஜீத்தோட 2 படம் இருக்கு. தளபதி 69 இருக்கு. கூலி படம் இருக்கு. தக் லைஃப் இருக்கு. இதுதான் அடுத்த ஆண்டு மிகவும் எதிர்பார்ப்புல இருக்கு என்கிறார்கள். அதே சமயம் ஒரு சிலர் கூலி, தக்லைஃப்புக்குப் பிறகு குட் பேட் அக்லியை சொல்றாங்க.

  • வடிவேலுவோட காமெடி டிஸ்கஷன்ஸ் எப்படி நடக்கும்னு தெரியுமா? அட இது புது பாணியா இருக்கே..!

    வடிவேலு மக்கள் கொண்டாடக்கூடிய தவிர்க்க முடியாத கலைஞன். குறிப்பா ஆரம்ப காலகட்டத்தில் அஜீத்துடன் வடிவேலு படங்கள்ல நடிச்சாரு. குறிப்பா தொடரும், பவித்ரா, ராசி, ராஜா. கடைசியா நடிச்ச ராஜா படத்துல ஏதோ பிரச்சனை. அதனால தான் தொடர்ந்து அஜீத்தோட நடிக்க முடியாமப் போச்சு என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தான்.

    இது தவிர வடிவேலுவுக்கு வளர்ந்து வந்த கால கட்டத்துல அவரோட மென்டாலிட்டி எப்படி இருந்தது? அவரோட காமெடி டிஸ்கஷன்ஸ் எப்படி நடந்தது என்பது பற்றி பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

    அஜீத்தோட வி.சி.குகநாதனின் படங்களான மைனர் மாப்பிள்ளை, பவித்ரா, ஆனந்த பூங்காற்றே, ராஜாவின் பார்வையிலே என நிறைய படங்கள்ல வடிவேலு நடிச்சாரு. பிற்காலத்தில் அவரை விட்டா வேற காமெடியன் கிடையாதுங்கற மென்டாலிட்டி வடிவேலுவுக்கு வந்துடுச்சு.

    வடிவேலு மாதிரி பாடி லாங்குவேஜ் பின்னி எடுக்குற காமெடி நடிகர் இன்னொருத்தர் பிறந்துதான் வரணும். கவுண்டமணி, செந்தில் பீக்ல இருந்த காலகட்டத்துல வடிவேலு என்ட்ரி ஆகிறார். என் ராசாவின் மனசிலே படத்தில் தான் ராஜ்கிரண் அவரை அறிமுகப்படுத்தினாரு. பணம், புகழைப் பார்க்காத ஒரு கேரக்டர் தான் வடிவேலு.

    vadivelu

    vadivelu

    அவரு சினிமாவுல சின்னக்கவுண்டர்னு நல்ல நல்ல படங்கள்ல நடிச்சி மார்க்கெட்ட பிடிச்சிட்டாரு. அஜீத், விஜய், விஜயகாந்த், சரத்குமார்னு எல்லாருடைய படத்துக்கும் வடிவேலு தேவைப்பட்டார். அதனால நாம இல்லன்னா இந்த சினிமா இல்லங்கற ரேஞ்சுக்குப் போயிட்டாரு. யாரையும் மதிக்கிறது இல்ல. வடிவேலு பீக்ல இருந்த காலகட்டத்துல காரில இருந்து இறங்கும்போது பாரின் விஸ்கியைக் கையில பிடிச்சிக்கிட்டே ஆபீஸ்சுக்குப் போவாரு.

    அங்க பத்து பேரு ரெடியா இருப்பாங்க. அவங்களுக்கு லோக்கல் சரக்கு கொடுப்பாரு. அங்கே காமெடி டிஸ்கஷன் நடக்கும். கடைசியில ரெண்டு பெக் அடிச்சிட்டு மீதியை எடுத்துட்டு காரில ஏறிப் போயிடுவாரு. அப்படி நிறைய பேருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்துருக்காரு. விவேக் கிட்ட நடிச்சா இங்கே வரக்கூடாது. இங்கே நடிக்கிறவரு விவேக், கவுண்டமணிக்கிட்ட போகக்கூடாது. அப்படி சில கண்டிஷன்கள் எல்லாம் வச்சிருந்தாரு. அவரோட டிராவல் பிரமாதமா இருந்ததால அவரு கூடவே நிறைய பேரு இருந்தாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • Pushpa2: புஷ்பா 2 படத்தின் 3வதுநாள் கலெக்ஷன்… சும்மா தெறிக்கவிடுறாங்களே…!

    சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் நடித்து பிரம்மாண்டமாக வெளியான படம் புஷ்பா2. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படம் கடந்த 5ம் தேதி வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

    முதல்நாளே பெரும் கூட்டம். ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு அல்லு அர்ஜூன் படம் பார்க்க சென்றுள்ளார். அவரைப் பார்க்க வேண்டும் என்றும் கூட்டம் திரண்டு ஒரு நடுத்தர வயது பெண் நெரிசலில் சிக்கி பலியானார். அவரது 9 வயது மகனும் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்தார்.

    அந்த பதற்றம் காணாது என்று மும்பை பாந்த்ராவில் உள்ள ஒரு திரையரங்கில் ஸ்பிரே அடித்து கூட்டத்தைக் கலைத்து விட்டார்கள். இந்த நிலையில் பெண் பலியானதற்கு அல்லு அர்ஜூன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

    படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா ஜோடியின் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகியுள்ளது என்றும் பாட்டு, பைட் சூப்பர் என்றும் விமர்சனம் வந்தன. படத்தில் அல்லு பெண் வேடமிட்டு ஆடும் பாடலுக்கு தியேட்டரிலேயே ஒரு பெண் சாமி ஆடி இருக்கிறாள். அந்த வீடியோவும் வைரலானது.

    பாடலுக்கு நடன அசைவுகள் பிரமாதமாக இருப்பதாகவும் ரசிகர்கள் மத்தியில் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத், சாம் சிஎஸ்சின் இசை பிரமாதமாக உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

    இதுவரை இல்லாத வகையில் படம் கலெக்ஷனை அள்ளி வருகிறது. முதல் நாளிலேயே பாகுபலி2, கேஜிஎப்2, காந்தராவின் வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது புஷ்பா2. அந்த வகையில் கடந்த 3 நாள்களாக படத்தின் வசூல் விவரத்தைப் பார்ப்போமா…

    முதல் நாளில் 164.5 கோடியும், 2ம் நாளில் 93.8 கோடியும், 3ம் நாளில் 115 கோடியும் என 388 கோடியாக உள்ளது. படக்குழுவின் கூற்றுப்படி உலகம் முழுவதும் 500 கோடியை வசூலித்துள்ளது.

  • தேவாவின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கலாமா..! மனுஷனை என்னா பாடு படுத்திருக்காங்கன்னு பாருங்க..!

    தேவா… இந்த இரண்டெழுத்து மியூசிக் டைரக்டர் காதல் கோட்டை வந்த நேரத்தில் தமிழ்சினிமாவுல தவிர்க்க முடியாத இசை அமைப்பாளர்களில் ஒருவர். முக்கியமாக கானா பாடல் என்றால் அசத்தி விடுவார். இவரது குரலும் அத்தகைய பாடலுக்கு கனகச்சிதமாகப் பொருந்திப் போகும். விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி என்ற ஒரு பாடலே போதும். இவரது சிறப்பை எடுத்துச் சொல்ல.

    ரஜினிக்கு பாட்ஷா, அண்ணாமலை போன்ற சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் திரை உலகை மட்டுமல்லாமல் இந்தியத்திரை உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தால். சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு டைட்டில் கார்டு மியூசிக் போட்டு தெறிக்க விட்டார். அன்று முதல் ரஜினியின் படங்களில் தவறாமல் இடம்பெற்று வருகிறது. தீப்பொறி பறக்கும் வகையில் இவர் இசைக்கும் மாஸ் படங்கள் நம்மையே அசர வைத்து விடுகின்றன.

    இப்படி எல்லாம் இசை அமைக்க முடியுமா என்று. ஆனா என்ன காரணத்தாலோ குறுகிய காலம் மட்டுமே தமிழ்சினிமாவில் நிலைத்தார். அதற்குப் பிறகு வந்த பல புது இசை அமைப்பாளர்கள் இவரது இடத்தைக் காலி செய்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும்.

    எல்லாமே கணினிமயமாகி விட்டது. அதனால் மியூசிக்கும் தற்போது ஒரே இரைச்சல் தான் வருகிறதே தவிர இதமான பாடல்கள் வருவதில்லை. தேவாவின் இசை ஏன் பிடிக்கவில்லையா என்றால் ரொம்பவே பிடிக்கும்னு தான் சொல்றாங்க. அந்த வகையில் தேவா என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

    சினிமாவுல நமக்கு வரும் வாய்ப்பை தட்டி விடுவதற்கு நிறைய பேர் இருப்பாங்க. எனக்கும் அந்த மாதிரி நிறைய நடந்துருக்கு. வச்சு செய்வாங்க. ஆரம்ப கால கட்டத்தில் ஒரு படத்திற்காக மெலடியா மியூசிக் போட்டேன். அந்தப் படத்தோட புரொடியூசர் இல்லப்பா என்னோட ரசிகர்களுக்கு எல்லாம் டப்பாங்குத்து தான் பிடிக்கும் என்று சொன்னார்.

    உடனே நானும் அந்த மாதிரி ஒரு பாட்டை போட்டேன். அவருக்கும் பிடித்துப் போய் ஓகே சொல்லிவிட்டார். ஒரு நாலு நாளுக்கு அப்புறம் அங்கே போய் பார்த்தா நான் கமிட்டான படத்தோட கம்போசிங் நடந்துட்டு இருக்கும். எப்படியோ பேசி வாய்ப்பு வாங்கிட்டாங்க. இப்படி நிறைய நடக்கும். இதை நான் சிரிச்சிக்கிட்டே சொல்றேன். நம்ம இந்த இடத்துக்கு வந்ததால காமெடியா இருக்கு. ஆனா அந்த வலி இருக்கே என்கிறார் தேவா நிதானமாக.