Category: home

  • அதனால தான் அது ’மொத ராத்திரி’!.. சிரிப்பலையில் ஒரு சீரியஸ் ஃபர்ஸ்ட் நைட்!..

    அதனால தான் அது ’மொத ராத்திரி’!.. சிரிப்பலையில் ஒரு சீரியஸ் ஃபர்ஸ்ட் நைட்!..

    ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.

    திருமணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வழக்கமான காதல் அல்லது குடும்பக் கதையாக இல்லாமல், இரவில் அடுத்தடுத்து நிகழும் எதிர்பாராத சம்பவங்கள் கதைக்களத்தைக் கொண்டுள்ளது. திருமணக் கொண்டாட்டமாகத் தொடங்கி அந்த இரவு குழப்பம் மற்றும் பல திருப்பங்களுக்குள் செல்கிறது என்பதே படத்தின் முக்கிய அம்சமாக கூறப்படுகிறது.

    மேலும், இப்படத்தில் சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். 

    ‘மொத ராத்திரி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதே தேதியில் ரியோ ராஜ் நடிக்கும் ‘ராம் இன் லீலா’ திரைப்படமும் வெளியாக இருப்பதால், இரு படங்களுக்கும் இடையே திரையரங்கு போட்டி உருவாகியுள்ளது.

    இதனால் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் ட்ரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள நிலையில், திருமண இரவில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆகஸ்ட் 21-ம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  • அதிக நேரம் போன் யூஸ் பண்ணா இப்படித்தான் ஆபரேஷன் பண்ணனும்!.. எச்சரித்த ஷகீலா!..

    அதிக நேரம் போன் யூஸ் பண்ணா இப்படித்தான் ஆபரேஷன் பண்ணனும்!.. எச்சரித்த ஷகீலா!..

    நடிகை ஷகீலா கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையில், அதற்கான காரணத்தயும் பொதுமக்களுக்கு விழிப்புனர்வும் ஏற்படுத்தும் வகையில் அவர் விளக்கமளித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

    மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகையான ஷகீலா, சமீபத்தில் உடல்நலப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்காக சுமார் ரூ.3 லட்சம் செலவானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது மற்றும் வீட்டில் கழுத்து காலர் அணிந்து ஓய்வெடுப்பது போன்ற காட்சிகளையும் அவர் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    தனது உடல்நிலை குறித்து பேசிய ஷகீலா, நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்தியதாலும், குறிப்பாக மொபைலில் அதிக நேரம் கேமிங் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாலும் கழுத்துப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

    மேலும், தேவைக்கு அதிகமாக செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்றும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் செல்போன் அதிக நேரம் பயன்படுத்துவதை பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவரது இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

  • தாய் கிழவி, பராசக்தி எல்லாம் பஞ்சர் தான் போல!.. 4 நாட்களில் ‘டிசி’ அதிகாரப்பூர்வ வசூல் இதோ!..

    தாய் கிழவி, பராசக்தி எல்லாம் பஞ்சர் தான் போல!.. 4 நாட்களில் ‘டிசி’ அதிகாரப்பூர்வ வசூல் இதோ!..

    லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாகியுள்ள ‘DC’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.50 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் நான்கு நாட்களில் சுமார் ரூ.30 கோடி வசூலை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக வாமிகா கபி நடித்துள்ள இப்படத்தை அருள் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் காதல், ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 

    dc

    முதல் நாளில் இந்தியாவில் ரூ.4.40 கோடி வசூல் செய்த ‘DC’, இரண்டாம் நாளில் ரூ.7 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.9.55 கோடியும் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை வசூலில் ஏற்பட்ட உயர்வு, படத்திற்கு கிடைத்த நேர்மறையான வரவேற்பை காட்டுவதாக கூறப்படுகிறது.

    இயக்குநராக பல வெற்றிகளை பதிவு செய்த லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் கவனம் பெற்றுள்ள நிலையில், ‘DC’ திரைப்படத்தின் வசூல் அவருடைய திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக மாறியுள்ளது.இதே வேகத்துடன் டிசி படம் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடினால், தாய் கிழவி, பராசக்தி படங்களின் வசூலை எல்லாம் பின்னுக்குத்தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • தில்லான மோகனாம்பாளை டச் பண்ண பால் டப்பா!.. அடடா பாடல் அசத்துதே!..

    தில்லான மோகனாம்பாளை டச் பண்ண பால் டப்பா!.. அடடா பாடல் அசத்துதே!..

    பிரபல ராப் பாடர்களான கில்லா கே மற்றும் பால் டப்பா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து உருவாக்கியுள்ள புதிய பாடல் ‘அடடா’ வெளியாகியுள்ளது. டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

     தமிழ் திரைப்படமான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்திலிருந்து உத்வேகம் பெற்றுள்ள ‘அடடா’, அந்தப் படத்தின் காட்சிகளை தற்போதைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கச்சேரி அரங்கம் ராப் அரங்கமாக மாறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இசை வீடியோவில், பழமையும் புதுமையும் சுவாரஸ்யமாக இணைக்கப்பட்டுள்ளன.

    கூர்மையான வரிகள், துள்ளலான இசை மற்றும் எளிதில் மனதில் பதியும் ஹூக்ஸ் ஆகியவை பாடலின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. மேலும், இருவரின் இயல்பான கெமிஸ்ட்ரி மற்றும் நகைச்சுவை கலந்த கதை சொல்லல் பாடலுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

    தமிழ் மொழி, உள்ளூர் வாழ்க்கை முறை மற்றும் சினிமா பாரம்பரியத்தை தங்களது இசையில் தொடர்ந்து பிரதிபலித்து வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா, ‘அடடா’ மூலம் பாரம்பரியத்தையும் சமகால ஹிப்ஹாப்பையும் இணைத்துள்ளனர்.

    தமிழ் கலாச்சாரத்தின் வேர்களை கொண்டாடும் அதே நேரத்தில், நவீன இசை ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகியுள்ள ‘அடடா’, இசை உலகளாவிய ரசிகர்களிடம் சென்றடைய முடியும் என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

  • பியார் பிரேமா கல்யாணம் டிரைலர் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. இயக்குநர் இளன் லோகேஷ் போல கலக்குவாரா?

    பியார் பிரேமா கல்யாணம் டிரைலர் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. இயக்குநர் இளன் லோகேஷ் போல கலக்குவாரா?

    பியார் பிரேமா காதல், ஸ்டார் போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் இளன், தற்போது ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்ற புதிய படத்தை இயக்கி, நடிகராகவும் அறிமுகமாகிறார். மேலும், இப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இப்படத்தில் குடும்பஸ்தன் பட நடிகை சான்வீ மேக்னா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ‘Crazy Love’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

    முதலில் திரையரங்க வெளியீட்டை எதிர்பார்த்திருந்த நிலையில், இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வெளியாகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 21, 2026 முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் ஸ்ட்ரீமாக காத்திருக்கிறது. அடுத்த வாரம் ஓடிடி ரசிகர்கள் வீட்டில் இருந்தபடியே புதிய படத்தை பார்த்து விடலாம். 

    காதல் கதையைத் தொடர்ந்து திருமண வாழ்க்கையை மையமாக வைத்து இளன் உருவாக்கியுள்ள இந்த புதிய முயற்சி எப்படி இருக்கப்போகிறது என்பதற்கான எதிர்பார்ப்பை நாளை வெளியாகும் ட்ரெய்லர் மேலும் அதிகரிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

  • ஃபேவரைட் பாய்ஸுடன் சன் டே ஜமாய்த்த கீர்த்தி சுரேஷ்!.. என்ன பண்ணாருன்னு பாருங்க!..

    ஃபேவரைட் பாய்ஸுடன் சன் டே ஜமாய்த்த கீர்த்தி சுரேஷ்!.. என்ன பண்ணாருன்னு பாருங்க!..

    தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தனது செல்ல நாய்களுடன் செலவிட்ட இந்த வார சன் டேவின் அழகிய தருணங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

    படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைத்த ஓய்வு நாளை தனது செல்ல நாய்களுடன் செலவிட்ட கீர்த்தி சுரேஷ், வீட்டில் அவர்கள் அளித்த அன்பான வரவேற்பை மிகவும் மன மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மழை பெய்த ஞாயிற்றுக்கிழமையில் தனது செல்ல நாய்களுடன் இருந்த தருணங்களை பகிர்ந்த அவர், “என் பாய்ஸுடன் ஒரு ரெயினி சன் டே” என்ற கேப்ஷனை வெளிப்படுத்தியுள்ளார்.

    ks

    மேலும், தனது ஞாயிற்றுக்கிழமை காலை உணவுடன் வீட்டில் ஓய்வெடுத்தபடி ‘House of the Dragon’ தொடரையும் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, தனது செல்ல நாய்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்,  கடற்கரையில்  தனது கணவருடன் இருந்த சில மகிழ்ச்சியான தருணங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    ks

    கீர்த்தி சுரேஷ் தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் முக்கியமானது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள டோரத்தி. இப்படத்தின் டீசர் சமீபத்தில் நடிகர் தனுஷ் வெளியிட்டு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. டோரத்தி திரைப்படம் செப்டம்பர் 25, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ks

    தொடர்ச்சியான படப்பிடிப்புகளுக்கு மத்தியில் கிடைக்கும் ஓய்வு நேரத்தை தனது செல்ல நாய்களுடன் மகிழ்ச்சியாக செலவிட்டு வரும் கீர்த்தி சுரேஷின் இந்தப் புகைப்படங்கள், அவரது ரசிகர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான சண்டேவாக ஆக அமைந்துள்ளன.

  • ஒடிசி படத்தை போலவே பிரம்மாண்டமாக ஐமேக்ஸில் ‘டாக்ஸிக்’ படத்தையும் பார்க்க ரெடியா!..

    ஒடிசி படத்தை போலவே பிரம்மாண்டமாக ஐமேக்ஸில் ‘டாக்ஸிக்’ படத்தையும் பார்க்க ரெடியா!..

    கேஜிஃப் படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இப்படம் ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள், வித்தியாசமான உலகம் மற்றும் உயர்தரமான விஷுவல் அனுபவம் ஆகியவற்றுடன் உருவாகியுள்ள டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் அப்ஸ் படத்தை ஐமேக்ஸ் திரையில் காண ரசிகர்களுக்கு செம ஜாக்பாட் அடித்துள்ளது. 

    yashh

    இந்த ஆண்டு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான தி ஒடிஸி படத்தை ஐமேக்ஸ் திரையில் பார்க்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் முண்டியடித்த நிலையில், டாக்ஸிக் படத்துக்கும் ஐமேக்ஸ் திரைகளில் செம கலெக்‌ஷன் இருக்கும் என்கின்றனர். 

    தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினாக நடித்து வந்த கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் யஷுடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை யஷ் மற்றும் வெங்கட் கே. நாராயணா இணைந்து தயாரித்துள்ளனர். 

    படத்தின் டீசர் மற்றும் புரமோஷன் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.  மேலும், டாக்ஸிக் திரைப்படம் ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் படம் வெளியாக உள்ளது. தற்போது ஐமேக்ஸ் வெளியீடும் உறுதி செய்யப்பட்டுள்ளதால், படம் வெளியாகும் நாளை இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

  • ஷோ ஓட்ட ரெடியான தி ஒன் சூர்யா!.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டிக்கெட் புக்கிங் ஆரம்பம் எப்போ?..

    ஷோ ஓட்ட ரெடியான தி ஒன் சூர்யா!.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டிக்கெட் புக்கிங் ஆரம்பம் எப்போ?..

    சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் திரையரங்கு வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று மாலை தொடங்குகிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி படம் வெளியாக உள்ளதால், முன்பதிவு தொடங்கும் நேரத்தை சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

    வெளிநாடுகளில் சில பகுதிகளில் ஏற்கனவே முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்று மாலை சுமார் 6 மணியளவில் டிக்கெட் புக்கிங் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய திரையரங்குகளில் முதல் நாள் காட்சிகளுக்கான முன்பதிவு வேகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  

    சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14-ம் தேதி ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் டிக்கெட் முன்பதிவு, படத்தின் மீதான ரசிகர்களின் வரவேற்புக்கு முதல் சிக்னலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ராஜமெளலி தயாரிப்பில் ஃபஹத் பாசில் நடிக்கும் படம்!.. அட்டகாசமான பாடல் ரிலீஸ் ஆகிடுச்சே!..

    ராஜமெளலி தயாரிப்பில் ஃபஹத் பாசில் நடிக்கும் படம்!.. அட்டகாசமான பாடல் ரிலீஸ் ஆகிடுச்சே!..

    நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் டோண்ட் ட்ரபுள் தி ட்ரபுள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில், தற்போது படத்தின் கேக்கு வாக்கு என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    அறிமுக இயக்குநர் ஷஷாங்க் எலெட்டி இயக்கும் இப்படத்தில் ஃபஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கிறார்.பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி தயாரிக்கும் இப்படத்தை பிரபல இசையமைப்பாளர் கால பைரவா இசையமைத்துள்ளார். 

    ff

    வீடியோவில் ஃபஹத் பாசிலின் தனித்துவமான நடிப்பும், அவரது எனர்ஜியான நடன அசைவுகளும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக அவரது கதாபாத்திரத்தின் தோற்றமும் உடல்மொழியும் ‘ஆவேசம்’ படத்தில் அவர் நடித்த ரங்கா கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகை சாராவும் இந்த இசை வீடியோவில் இடம்பெற்றுள்ளார்.

    ‘Cakeu Walku’ பாடல் வெளியீட்டின் மூலம் படத்தின் இசைப் பணிகளும் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. ஏற்கனவே டீசர் மூலம் கவனம் பெற்ற ‘Don’t Trouble the Trouble’ திரைப்படம், வரும் செப்டம்பர் 11, 2026 அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகி வருகிறது.

  • சிம்புவும் சிவகார்த்திகேயனும் வெறித்தனமா இருக்காங்களே.. அரசனை தொடர்ந்து சேயோனும் செம ஸ்பீடு!

    சிம்புவும் சிவகார்த்திகேயனும் வெறித்தனமா இருக்காங்களே.. அரசனை தொடர்ந்து சேயோனும் செம ஸ்பீடு!

    நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று மதுரையில் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் தான் சிம்புவின் அரசன் படமும் அடுத்தக் கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்தது. இந்த ஆண்டு இறுதியில் சிவகார்த்திகேயன், சிம்பு இருவரும் கம்பேக் கொடுக்க தீயாக வேலை பார்த்து வருகின்றனர். 

    இப்படத்தை தாய் கிழவி எனும் பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்த இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சிவகார்த்திகேயனின் 26-வது படமாக உருவாகி வரும் இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ‘அமரன்’ படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ‘சேயோன்’ திரைப்படம் மதுரையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகி வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்ற நிலையில், அது கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடங்கியுள்ளது.இந்த கட்ட படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

    இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார். மேலும் பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

    ‘சேயோன்’ திரைப்படம் 2026 அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை வேகமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.