Category: home

  • விஜய் மாமாவின் ’ஜன நாயகன்’ ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகுது குட்டீஸ்!..

    விஜய் மாமாவின் ’ஜன நாயகன்’ ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகுது குட்டீஸ்!..

    நடிகர் மற்றும் முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

    எச்.வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பாபி தியோல், மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘ஜனநாயகன்’ அரசியல் சார்ந்த ஆக்‌ஷன் கதைக்களத்தை கொண்ட படமாக உருவாகியுள்ளது. 

    ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூலை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியீட்டுக்குப் பிறகு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூலைப் பொறுத்தவரை, ரூ.320 கோடியை கடந்துள்ளதாகவும் சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி ZEE5 தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு ஓடிடியில் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த வெளியீடு விஜய்யை மாமா என அழைக்கும் குட்டீஸ் ரசிகர்களுக்கு கூடுதலான மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • சீமான் – சாந்தனுவுக்காக வந்து நின்ற ரஜினி!.. ஒரு கைதியின் டைரி படத்துக்கு பின்னாடி இவ்ளோ இருக்கு!

    சீமான் – சாந்தனுவுக்காக வந்து நின்ற ரஜினி!.. ஒரு கைதியின் டைரி படத்துக்கு பின்னாடி இவ்ளோ இருக்கு!

    சுசீந்திரன் இயக்கத்தில் சீமான் மற்றும் சாந்தனு பாக்யராஜ் இணைந்து நடிக்கும் ஒரு கைதியின் டைரி படத்தின் மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். கண்ணன் ரவி க்ரூப் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

    ‘ஒரு கைதியின் டைரி’ என்ற தலைப்பு 1985-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ராதா, ரேவதி உள்ளிட்டோர் நடிப்பில் இதே பெயரில் திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தின் கதையை கே.பாக்யராஜ் உருவாக்கியிருந்தார்.

    தந்தையின் மறைவுக்குப் பிறகு சாந்தனு தனது சமூக வலைதளப் பதிவுகள் மூலம் அவரை நினைவுகூர்ந்து உருக்கமான பதிவுகளை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், தந்தையின் மறைவுக்குப் பிறகு சாந்தனு நடிக்கவிருக்கும் முதல் படமாக ‘ஒரு கைதியின் டைரி’ அமைவது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    சாந்தனுவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘Balti’ திரைப்படம் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ‘Balti’ படத்தின் மூலம் சாந்தனு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள சினிமாவிலும் மீண்டும் நடித்திருந்தார். 

    இதனைத் தொடர்ந்து தற்போது ‘ஒரு கைதியின் டைரி’ மூலம் சாந்தனு மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றுள்ளார். மேலும், ரஜினிகாந்த் வெளியிட்ட மோஷன் போஸ்டர் என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

  • சித்தா நடிகையின் செம கிரைம் த்ரில்லர் படம்!.. டைரக்ட்டா இந்த ஓடிடியில் வெளியாகுதாம்!..

    சித்தா நடிகையின் செம கிரைம் த்ரில்லர் படம்!.. டைரக்ட்டா இந்த ஓடிடியில் வெளியாகுதாம்!..

    நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள Babita Singh Reporting படத்தின் புதிய அப்டேட்டை பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. கொலை விசாரணையை மையமாகக் கொண்ட இன்வெஸ்டிகேட்டிவ் கிரைம் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தின் நேரடி ஒடிடி ரிலீஸ் தேதியின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    பிரைம் வீடியோ வெளியிட்ட பதிவில், “ஒரு கொலை… அதற்குப் பின்னால் காத்திருக்கும் பல ரகசியங்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு கொலையை விசாரிக்கச் செல்லும் காவல் அதிகாரி, அந்த விசாரணையின் போது சந்திக்கும் பல்வேறு மர்மங்களும் தனிப்பட்ட வாழ்க்கையின் மறைக்கப்பட்ட உண்மைகளும் கதையின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

    bsr

    இந்த படத்தில் நிமிஷா சஜயன் பபிதா சிங் என்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் அன்ஷுமான் புஷ்கர் மற்றும் பருண் சோப்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அம்பீகா பண்டிட் இயக்கியுள்ள நிலையில், ஃபிலிம் ஸ்குவாட் புரொடக்ஷன்ஸ், ஆக்ட் த்ரீ நிறுவனத்துடன் இணைந்து இப்படைப்பை தயாரித்துள்ளது. 

    தற்போது இதன் வெளியீட்டு தேதியாக ஆகஸ்ட் 28, 2026 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் கொலை வழக்கின் இருக்கும் மர்மங்களைத் தேடும் விசாரணை, மறுபுறம் பாபிதா சிங்கின் சொந்த வாழ்க்கையில் மறைந்திருக்கும் உண்மைகள் என இரண்டு வகையான கதை இருப்பதால்,  Babita Singh Reporting படத்தின் மீது கிரைம்-த்ரில்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  • விஜய்யோட பெரிய ரசிகன் நான்!.. விஜய்யை கட்டியணைத்த துருவ் விக்ரம்!.. திடீர் சந்திப்பு ஏன்?

    விஜய்யோட பெரிய ரசிகன் நான்!.. விஜய்யை கட்டியணைத்த துருவ் விக்ரம்!.. திடீர் சந்திப்பு ஏன்?

    முதலமைச்சர் விஜய் குறித்து நடிகர் துருவ் விக்ரம் தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. விஜய் மீதான தனது எண்ணத்தை வெளிப்படுத்திய துருவ் விக்ரம், அவரது பயணத்தையும் அரசியல் சேவைகளையும் பாராட்டியுள்ளார்.

    அதில் அவர் “ஆம், நான் எப்போதும் அவருடைய ரசிகன்தான். அவர் உண்மையான அர்த்தத்தில் ஒரு தொலைநோக்குப் பார்வையாளராகவும், புரட்சியாளராகவும் திகழ்கிறார். அவரது பயணம் மற்றும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை எதிர்கொள்ளும் அவரது உறுதி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் பல தலைமுறையினருக்கும் ஊக்கம் அளித்துள்ளார். அவரால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்” என துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார். 

     

  • சூர்ப்பனகையாக நடிச்சதும் போதும்!.. சும்மா கிளாமர் போட்டோஸா போடுறாரே ரகுல் ப்ரீத் சிங்!..

    சூர்ப்பனகையாக நடிச்சதும் போதும்!.. சும்மா கிளாமர் போட்டோஸா போடுறாரே ரகுல் ப்ரீத் சிங்!..

    நடிகை ரகுல் ப்ரீத் சிங், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற பல மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் பகிர்ந்துள்ள புதிய கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 

    rp

    மாடலிங் துறையின் மூலம் தனது பயணத்தைத் தொடங்கிய ரகுல் ப்ரீத் சிங், பின்னர் தெலுங்கு திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதைதொடர்ந்து தமிழில் என்ஜிகே, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், அயலான், இந்தியன் 2 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். தற்போது இந்தி திரையுலகிலும் தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

    rp

    சமீபத்தில் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது ராமாயணா. நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    rp

    மேலும், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ரகுல் ப்ரீத் சிங், பகிர்ந்துள்ள அப்புகைப்படங்களில் கருப்பு நிற உடையில் ஸ்டைலான தோற்றத்தில் இருக்கும் அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ளிக்கொடுத்து வருகின்றனர்.

  • முந்திக்கொண்ட மகேஷ் பாபு!.. உடனடியாக ட்வீட் போட்ட அல்லு அர்ஜுன்!.. லோகேஷ் கனகராஜ் காட்டுல மழை!..

    முந்திக்கொண்ட மகேஷ் பாபு!.. உடனடியாக ட்வீட் போட்ட அல்லு அர்ஜுன்!.. லோகேஷ் கனகராஜ் காட்டுல மழை!..

    அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்த ‘டிசி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ் பாபு, ‘டிசி’ படத்தை பார்த்துவிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாராட்டை பதிவு செய்துள்ளார்.

    இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் வாரணாசி படத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் நிலையில் அவர் தற்போது பகிர்ந்துள்ள அந்த பதிவில், எவ்வளவு புதுமையான மற்றும் மிகச் சிறப்பான ஒரு திரைப்படம்! மிகவும் அருமையாக இருந்தது. இதன் ஒவ்வொரு பகுதியையும் நான் மிகவும் ரசித்தேன். ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் வாழ்த்துகள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பாராட்டு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

    மகேஷ் பாபுவின் பதிவுக்கு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயனும் ‘DC’ படத்தை பாராட்டியிருந்த நிலையில், தற்போது மகேஷ் பாபுவின் பாராட்டும் படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.

    சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  லோகேஷ் கனகராஜுடன் வாமிகா கபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், 84 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை சாதனை படைத்துள்ளது.

    மகேஷ் பாபு வாழ்த்திய நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ள அல்லு அர்ஜுன் அமைதியா இருக்காரே என ட்ரோல் வந்து விடக் கூடாது என்பதற்காக அல்லு அர்ஜுனும் டிசி படத்தை பாராட்டி கொண்டாடி தீர்த்துள்ளார்.

  • வயசு வித்தியாசம் பிரச்னை.. 2வது கல்யாண பாதிப்பு.. சூர்யாவோட விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம் இதோ!

    வயசு வித்தியாசம் பிரச்னை.. 2வது கல்யாண பாதிப்பு.. சூர்யாவோட விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம் இதோ!

     

    சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், ராஜீவ் மேனன், நாசர், காளி வெங்கட், பவானிஸ்ரீ, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    வாரிசு படம் போல குடும்ப ரசிகர்களை டார்கெட் செய்து சூர்யா நடித்துள்ள இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வாரிசு படத்தை போல கிரிஞ்சாக இல்லாமல் எதிர்பார்த்த அளவுக்கு ஃபீல் குட் படமாகவே வந்துள்ளது.

    துப்பாக்கிச் சுடும் வீரராக விஸ்வநாத் கதாபாத்திரத்தில் அப்படியே அந்த கதாபாத்திரத்தின் எண்ண ஓட்டம், விஸ்வநாத் திருமணத்தை வெறுப்பது ஏன்? கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்தாலும் குடும்ப பந்தயத்தில் இணைய முடியாமல் அவரை எது தடுக்கிறது.

    வாரிசுக்காக அவர் பார்த்த ஒரு வேலையால் அவருக்கும் மமிதா பைஜுவுக்கும் இடையே ஏற்படும் ஒரு உறவு? ஆனால், ரொம்ப ஒட்டாத அப்புறம் வருத்தப்படுவ என அட்வைஸ் சொல்லி மமிதா பைஜுவை அனுப்பி விடுவது என பொறுப்புள்ள ரிச் மேன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார் சூர்யா.

    visawantha and sons

    மரியம் ஜார்ஜ் வரும் அந்த டிவி இண்டர்வியூ சீன் சூர்யா மீது மமிதா பைஜுவுக்கு காதலை வரவைக்கும் காட்சி எல்லாம் ரசிக்கவும் சூர்யாவுக்கு இப்படியொரு சூப்பரான படத்தைக் கொடுத்து விட்டாரே வெங்கி அட்லூரி என்றும் கைதட்ட வைக்கிறது.

    சூர்யா, மமிதா பைஜுவை தாண்டி இந்த படத்தை அதிகம் தாங்கிப் பிடிப்பது நடிகை ராதிகா சரத்குமார் தான். அசால்ட்டாக அவர் வரும் காட்சிகளில் எல்லாம் மொத்த பேரையும் தனது நடிப்பால் காலி செய்து ரசிகர்களை மகிழ்விக்கிறார். 

    2வது பாதியில் அவர் இல்லாதது தான் படத்திற்கு பெரிய குறையாகவே மாறிவிடுகிறது. அப்பாவாக நடித்துள்ள ராஜீவ் மேனன் நடிகை ரவீனா டாண்டனை 2வது திருமணம் செய்துக் கொள்வதால் தான் திருமணத்தையே சூர்யா வெறுக்கிறார் என்பது போன்ற காரணங்கள் ரொம்பவே வலிமையுடன் சொல்லப்பட்டுள்ளது.

    ஆனால், முதல் பாதி படத்துக்கும் 2வது பாதி படத்துக்கும் மார்க் போட வேண்டும் என்றால் முதல் பாதி 80 மார்க்கையும் 2வது பாதி 50 மார்க்குடன் ஜஸ்ட் பாஸ் ஆகிறது.

    குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று இந்த வாரம் பார்க்க ஒரு தரமான படத்தையே சூர்யா கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் இந்த படம் சிறப்பாகவே ஓடும் என்றே தோன்றுகிறது. சூர்யா ரசிகர்களை தாண்டி பொது மக்களையும் நிச்சயம் இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் கவரும்.

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – குட் பாய்!
    ரேட்டிங் – 3.75

  • ஐ லவ் யூ அனிருத்!.. டிசி படம் வேறலெவல்!.. சேயோன் சிவகார்த்திகேயன் பாராட்டு!..

    ஐ லவ் யூ அனிருத்!.. டிசி படம் வேறலெவல்!.. சேயோன் சிவகார்த்திகேயன் பாராட்டு!..

    அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘DC’ திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இப்படத்தை பார்த்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்த சிவகார்த்திகேயன், படக்குழுவினரையும் குறிப்பாக இசையமைப்பாளர் அனிருத்தையும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

    “DC ஒரு அட்டகாசமான சினிமா அனுபவம். லோகேஷ் கனகராஜும் அருண் மாதேஸ்வரனும் இணைந்து பல சிறப்பான தருணங்கள் நிறைந்த வலுவான ஆக்‌ஷன் படத்தை கொடுத்துள்ளனர். படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

     மேலும், தனது நண்பரும் இசையமைப்பாளருமான அனிருத்தின் இசைப் பணியை பாராட்டியுள்ளார். “எனது கனவுகளின் ராக்ஸ்டார், என் நண்பன் அனிருத் மீது பெருமையாக இருக்கிறேன். தனக்கென ஒரு சிம்மாசனத்தை உருவாக்கி, அதில் அமர்ந்து தனக்கே உரிய பாணியில் ஆட்சி செய்து வருகிறார். உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்ற வகையில் அவர் தனது பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

    இதனிடையே சிவகார்த்திகேயனின் 26-வது படமான ‘சேயோன்’ படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ‘அமரன்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் – கமல்ஹாசன் கூட்டணி மீண்டும் இணையும் படம் என்பதால் இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    ஒருபுறம் ‘DC’ படத்தை பாராட்டி சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவு கவனம் பெற்றுள்ள நிலையில், மறுபுறம் அவரது ‘சேயோன்’ படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றிப் பெற வேண்டும் வெங்கடேஸ்வரா!.. மொட்டைப் போட்ட வெங்கி அட்லூரி!

    விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றிப் பெற வேண்டும் வெங்கடேஸ்வரா!.. மொட்டைப் போட்ட வெங்கி அட்லூரி!

    நடிகர் சூர்யா நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றிக்காக இயக்குநர் வெங்கி அட்லூரி திருப்பதி சென்று வேண்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்துள்ளார்.

    படம் வெளியாக இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று மொட்டை போட்டு, சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. படம் வெற்றி பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் அவர் இந்த வழிபாட்டை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சூர்யா மற்றும் மமிதா பைஜு நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    இதனிடையே, படத்தின் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்நிலையில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ வெற்றிக்காக திருப்பதியில் இயக்குநர் வெங்கி அட்லூரி மொட்டை போட்டு வேண்டுதல் நிறைவேற்றியது படக்குழுவினர் மற்றும் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

  • காந்தா கந்தலானது போதாது!.. உஷாரான துல்கர் சல்மான்!.. ஐ ஆம் கேம் புதிய ரிலீஸ் எப்போ தெரியுமா?

    காந்தா கந்தலானது போதாது!.. உஷாரான துல்கர் சல்மான்!.. ஐ ஆம் கேம் புதிய ரிலீஸ் எப்போ தெரியுமா?

    துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐ ஆம் கேம்’  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20-ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படம் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    படத்தை துல்கர் சல்மான் தனது Wayfarer Films நிறுவனத்தின் மூலம் தயாரித்து நடித்துள்ளார். நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படம், துல்கர் சல்மானின் 40-வது திரைப்படமாகும். ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். மேலும், துல்கர் சல்மானுடன் கயாடு லோஹர், ஆண்டனி வர்கீஸ், கதிர், மிஷ்கின், வினய் ஃபோர்ட், பார்த்த் திவாரி உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர்.

    img

    இது குறித்து துல்கர் சல்மான் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘Imgame’ படத்தின் வெளியீடு இப்போது இன்னும் பிரம்மாண்டமான அளவில் அமையவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு இருப்பதை நாங்கள் அறிவோம்; தாமதத்திற்கு வருந்துகிறோம். இருப்பினும், ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகவிருந்த ‘Imgame’, இப்போது செப்டம்பர் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது.
     
    பல்வேறு மார்கேட்டுகளில் இப்படத்தை வெளியிடுவதற்கான விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த புதிய வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது; இதன் மூலம் நாடு முழுவதும் மற்றும் அதற்கு மேலும் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்க அனுபவம் கிடைக்கவுள்ளது.

     ‘Imgame’ படத்திற்குத் தகுதியான பிரம்மாண்டமான வெளியீட்டையும், பரந்த பார்வையாளர் சென்றடைதலையும், சிறந்த திரையரங்க வெளியீட்டு வாய்ப்பையும் உறுதி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருந்தாலும், ‘Imgame’ படம் இன்னும் பிரம்மாண்டமானதாக அமையவுள்ளது.

    ஓணம் ரேஸிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், தற்போது செப்டம்பர் 3-ம் தேதி  ‘ஐ ஆம் கேம்’ ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர். இந்த படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல். கிரிக்கெட் பெட்டிங், காசினோ சூதாட்டம் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.