Category: home

  • அல்லு அர்ஜுன் இல்லை!.. முருகராக நடிக்கும் ஜூனியர் என்டிஆர்!… த்ரிவிக்ரம் ராஜமெளலி ஆவாரா?..

    அல்லு அர்ஜுன் இல்லை!.. முருகராக நடிக்கும் ஜூனியர் என்டிஆர்!… த்ரிவிக்ரம் ராஜமெளலி ஆவாரா?..

    தெலுங்கு திரையுலகில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த முக்கிய கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. மக்கள் நாயகன் ஜூனியர் என்டிஆர் மற்றும் முன்னணி இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய வெற்றிப்படமான ’அரவிந்த சமேத வீரராகவா’ வெளியாகி பல ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஜூனியர் என்டிஆர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தை அறிவித்தார். வெளியிடப்பட்ட அறிவிப்பு போஸ்டர், படத்தின் கருவை பற்றிய ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. அதில் திரிசூலம், வேல் மற்றும் டி.என்.ஏ. வடிவமைப்பு இணைக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்க்கிறது. மேலும், “One Spear… One Purpose… One Divine Reckoning” என்ற ஆங்கில டேக்லைன், படம் புராணத் தாக்கத்துடன் கூடிய தெய்வீக கதைக்களத்தை மையமாகக் கொண்டிருக்கும் என்பதை உணர்த்துகிறது.

    தகவல்களின் படி, இந்த திரைப்படம் புராண அம்சங்கள், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதை, மாஸ் ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான உலகக் கட்டமைப்புடன் உருவாகவுள்ளது. இதுவரை திரிவிக்ரம் இயக்கிய படங்களில் இருந்து மாறுபட்ட புதிய முயற்சியாக இந்த படம் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுன் முருகனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், திரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் தான் முருகனாக நடிக்கப் போவது உறுதியாகி உள்ளது. 

    jr

    படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார். சமீப காலங்களில் பல பெரிய படங்களுக்கு இசையமைத்து வெற்றி கண்டுள்ள அனிருத், இந்த திரைப்படத்தின் உணர்ச்சி மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு வலுசேர்க்கும் இசையை வழங்குவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இந்த பிரம்மாண்ட படத்தை ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு) மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் நந்தமூரி கல்யாண் ராம் இணைந்து தயாரிக்கின்றனர். முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும், வெற்றிகரமான நடிகர்–இயக்குநர் கூட்டணியும் ஒன்றிணைவதால், இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதுவரை கதாநாயகி, மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் குழு மற்றும் படப்பிடிப்பு தொடக்க தேதி குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பே ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வைரலாகி, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

  • சூர்யாவுக்கு ஜோடியான கயாடு லோஹர்!.. எஸ் – 48 பட பூஜையே போட்டுட்டாங்களே!..

    சூர்யாவுக்கு ஜோடியான கயாடு லோஹர்!.. எஸ் – 48 பட பூஜையே போட்டுட்டாங்களே!..

    மக்களின் பேராதரவும், ’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில், எல்லா தரப்பு சினிமா ரசிகர்களும் ரசிக்கும் விதமாக அழுத்தமான கதைகளை திரையில் படைக்கும் இயக்குநர் த .செ. ஞானவேல் இயக்கத்தில், இந்திய சினிமா ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கிவரும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், S-48 திரைப்படம் உருவாகிறது.

    s48

    ஸ்டாராவும், சிறந்த நடிகராகவும் விளங்கும் சூர்யாவுடன் இணைந்து இந்திய அளவில் தாக்கத்தை உருவாக்கிய ‘ஜெய்பீம்’ படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் த.செ. ஞானவேல். எல்லா தரப்பு சினிமா ரசிகர்களின்  கவனத்தையும் பெற்று ஆச்சர்யப்பட வைத்த இவர்கள் மீண்டும் இணையும் திரைப்படத்தை, கே.ஜி.எஃப், காந்தாரா, சலார் போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் வெற்றி படங்களைத் தருவதில் புதிய சாதனைகளைப் படைத்து வரும், இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் செய்தி, இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

    s

    வெற்றித்திரைப்படங்களின் முகவரியாக விளங்கும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் இத்திரைப்படம் பற்றி கூறும்போது, ’’தமிழ்நாடு, தென்னிந்தியா கடந்து இந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திர நடிகராக விளங்கும் சூர்யாவை, முப்பது ஆண்டுகளுக்கு மேல் மக்கள் கொண்டாடி வருகின்றனர். வணிக வெற்றியையும், விமர்களின் பாராட்டையும் ஒருசேர பெறுவதில் தனித்து விளங்கும் சூர்யா அவர்களுடன் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறது.

    s48

    இந்தியா கடந்து உலக அளவில் கவனம் ஈர்த்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் அவர்கள், அழுத்தமான கதைகளத்தில் நட்சத்திர நடிகர்களை வெற்றிகரமாக கையாண்டு வெற்றிகளைத் தரக்கூடியவர். மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை கடந்து செல்லும் சிறந்த வெற்றி திரைப்படங்களை உருவாக்குவதில் ஹொம்பாலே பிலிம்ஸ் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்திய அளவில் பெரும் வெற்றியையும், கவனத்தையும் பெறப்போகும் திரைப்படத்தை தயாரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். The one சூர்யா அவர்களையும், இயக்குநர் த.செ. ஞானவேல் அவர்களையும் ஹொம்பாலே பிலிம்ஸ் குடும்பத்தில் இணைய மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

    s

    ஹொம்பாலே பிலிம்ஸ் மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு சிறந்தப்படங்களை தயாரிப்பதிலும், அதை மிகப்பெரிய அளவில் பிரம்மாண்ட வெற்றியடை செய்வதில் ஆர்வமும் கவனமும் செலுத்துகிறது. இந்த  தொலைநோக்கு சிந்தனையோடு உள்ள நடிகர்களையும், இயக்குனர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் இணைப்பதில் எப்போதும் தீவிரம் காட்டி வருகிறது. அதே தொலைநோக்கு சிந்தனை கொண்ட நட்சத்திர நடிகர் சூர்யா அவர்களோடும், இயக்குநர் த.செ. ஞானவேல் அவர்களோடும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைவதில் எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிறார் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்.

    S-48 திரைப்படத்திற்கு, இளைஞர்களின் இசை ரசனையை தற்போது ஆட்சி செய்கிற சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் மிகவும் கவனம் ஈர்த்த கயாது லோகர் கதாநாயகியாக நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, குமரவேல் போன்ற சிறந்த கலைஞர்கள் நடிக்கிறார்கள்.

    எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய, கே. கதிர் தயாரிப்பு வடிவமைப்பிலும், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பிலும், பா. கிருத்திகா திரைக்கதையிலும் பங்களிப்பு செய்கிறார்கள். விரைவில் இத்திரைப்படத்தின் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியாகியுள்ளன. ஜூலை மாதம் 22-ம் தேதி முதல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

  • த்ரிஷாவுடன் ரோஜா பட ஹீரோயின் மதுபாலா!.. குஷ்பு மகள் திருமணத்தில் கலக்கல் போஸ்!..

    த்ரிஷாவுடன் ரோஜா பட ஹீரோயின் மதுபாலா!.. குஷ்பு மகள் திருமணத்தில் கலக்கல் போஸ்!..

    நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவின் திருமண விழா சமீபத்தில் குடும்பத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    madu

    அந்த வகையில், நடிகை த்ரிஷாவும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அவருடன் ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகை மதுபாலாவும் கலந்து கொண்டார்.

    roja

    திருமண விழாவில் த்ரிஷா மற்றும் மதுபாலா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இருவரும் பாரம்பரிய உடையில் புன்னகையுடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

    roja

    குறிப்பாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு மதுபாலாவை த்ரிஷாவுடன் ஒரே நிகழ்ச்சியில் பார்த்த ரசிகர்கள், “இரண்டு தலைமுறையின் அழகிய நடிகைகள் ஒரே ஃபிரேமில்”, “ரோஜா ஹீரோயின் இன்னும் அதே அழகில் இருக்கிறார்” என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    குஷ்புவின் குடும்ப விழாவில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், த்ரிஷா மற்றும் மதுபாலாவின் ஸ்டைலான தோற்றமும் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

  • குட்டிப்பாப்பா தோத்துடும்!.. குட்டி கவுனில் பிக் பாஸ் பிரபலம் பண்ணும் அட்ராசிட்டி!.

    குட்டிப்பாப்பா தோத்துடும்!.. குட்டி கவுனில் பிக் பாஸ் பிரபலம் பண்ணும் அட்ராசிட்டி!.

    நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்டுள்ள புதிய க்ளாமர் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஸ்டைலிஷ் மற்றும் மாடர்ன் தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர். பலரும் அவரது அழகையும், ஃபிட்னஸையும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    aish

    மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா தத்தா, தமிழ் சினிமாவில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘பாயும் புலி’, ‘ஆறாது சினம்’, ‘சத்ரியன்’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’, ‘மிலிர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    aish

    இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது விஜய் டிவியின் ‘பிக் பாஸ் தமிழ்’ சீசன் 2 நிகழ்ச்சிதான். அந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட அவர்,  இறுதிப்போட்டி வரை முன்னேறி ரன்னர்-அப் இடத்தைப் பிடித்ததும் அவரது திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

    datta

    பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் போட்டோஷூட்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா தத்தா, சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சியான மற்றும் ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.