Category: jana nayagan

  • Jana Nayagan Box Office : நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும் ஜன நாயகன் வசூல்!

    Jana Nayagan Box Office : நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும் ஜன நாயகன் வசூல்!

    6 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. ‘பீஸ்ட்’ படத்துக்கு பிறகு ‘தளபதி’ விஜய், பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்துள்ள புது படம் தான் ‘ஜன நாயகன்’.

    இதை அஜித்தின் ‘வலிமை’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படம் பல எதிர்ப்புகளைத் தாண்டி கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

    இப்படம் கமிட்டாகும்போது :தளபதி’ விஜய்-யாக இருந்தவர், இப்போது தமிழ்நாட்டின் CM-ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

    படத்தில் ‘தளபதி’-யின் வளர்ப்பு மகளாக நடித்திருக்கிறார் மமிதா பைஜு. பாக்ஸ் ஆபிஸில் நாளுக்கு நாள் இதன் வசூல் குறைந்து கொண்டே போகிறது. கடந்த 6 நாட்களில் உலக அளவில் ரூ.246.07 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறதாம்.

  • தமிழ்நாட்டில் மட்டும் இப்படி ஒரு சாதனையை செய்த ஜன நாயகன்!

    தமிழ்நாட்டில் மட்டும் இப்படி ஒரு சாதனையை செய்த ஜன நாயகன்!

    தமிழ்நாடு முதல்வர் விஜய் தனது கடைசி படமான ஜன நாயகனை கடந்த ஜூலை 23-ஆம் தேதி ரசிகர்களுக்காகவே கமர்ஷியலாக கொடுத்து அப்ளாஸ் வாங்கி வருகிறார்.

    இது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து மெகா ஹிட்டான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் தான். ஆனாலும், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரியும், விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு செட் ஆகும் வகையிலும் ஸ்கிரிப்ட் பண்ணி விட்டார் இயக்குநர் வினோத்.

    விஜய்யின் ரசிகர்கள் தாண்டி, மற்ற ரசிகர்களும், விமர்சகர்களும் இப்படத்தை பாராட்டவில்லை. இருப்பினும் வசூல் ரீதியாக முடிந்த வரை முன்னேறி வருகிறது.

    அந்த வகையில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் ரூ.100 கோடி கல்லா கட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆல்ரெடி லீக்காகி பலபேர் பார்த்த படத்துக்கு இப்படி ஒரு வசூலை யாரும் எதிர்பார்க்கவில்லை. 

  • முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்தது ஜன நாயகனா? இல்ல கூலி, விக்ரமா?

    முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்தது ஜன நாயகனா? இல்ல கூலி, விக்ரமா?

    ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள புதிய படம் தான் ‘ஜன நாயகன்’. இது இப்போது தமிழ்நாடு CM-ஆக இருக்கும் விஜய்யின் திரையுலக வாழ்வில் கடைசி படம்.

    ஹெச்.வினோத் இயக்கியிருந்த இந்த படம் தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வருகிறது. இது பாக்ஸ் ஆபிஸில் கடந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ.233.24 கோடி கல்லா கட்டியுள்ளது.

    ரஜினியின் ‘கூலி’ படத்துடன் இதை கம்பேர் பண்ணி பார்க்கையில், அதெல்லாம் முதல் ஐந்தே நாட்களில் உலக அளவில் ரூ.399.41 கோடி வசூல் செய்து, நிறைய வித்தியாசத்தில் அது முன்னிலையில் இருக்கிறது.

    அடுத்து கமலின் ‘விக்ரம்’ படத்துடன் கம்பேர் பண்ணி பார்க்கையில், அது முதல் ஐந்து நாட்களில் உலக அளவில் ரூ.220.20 கோடி மட்டுமே வசூல் செய்து, வெறும் 13 கோடி வித்தியாசத்தில் ‘ஜன நாயகன்’ முன்னிலையில் இருக்கிறது.

  • Jana Nayagan Box Office : 5 நாட்களில் விஜய்யின் ஜன நாயகன் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

    Jana Nayagan Box Office : 5 நாட்களில் விஜய்யின் ஜன நாயகன் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

    5 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள புதிய படம் தான் ‘ஜன நாயகன்’.

    இவரின் கடைசி படமான இது கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரைக்கு வந்தது. இதை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஹெச்.வினோத் தான் இயக்கியிருக்கிறார்.

    இதில் விஜய்யுடன் சேர்ந்து மமிதா பைஜு, கெளதம் மேனன், பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ், நாசர், சுனில், ரேவதி, ஜி.எம்.சுந்தர், நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், ஏ.எல்.அழகப்பன், ஶ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்த படம் விஜய் ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தாலும், நெகட்டிவ் விமர்சனங்களே அதிகம் வருகிறது. தற்போது, இப்படம் கடந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ.233.24 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

  • Jana nayagan Collection: 5வது நாளில் அடங்கிய வசூல்!.. ஜனநாயகன் கலெக்‌ஷன் அப்டேட்!..

    Jana nayagan Collection: 5வது நாளில் அடங்கிய வசூல்!.. ஜனநாயகன் கலெக்‌ஷன் அப்டேட்!..

    விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஜன நாயகன் திரைப்படம் கடந்த 23ம் தேதி வெளியானது. 2026 ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு இந்த படம் வெளியாகவிருந்த்து.  ஆனால் அப்போது படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படாததால் அப்போது வெளியாகவில்லை.

    தற்போது ஆறு மாதங்களுக்கு ஜனநாயகன் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ஜன நாயகன் படத்தைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாகவே அமைந்துவிட்டது. ஏனெனில் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என்பதால் முழுக்க முழுக்க ஹீரோயிசம் மற்றும் அதிரடியான சண்டை காட்சிகளை மட்டுமே இந்த படம் கொண்டிருந்தது.

    அதோடு படத்திற்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்டது, ஏற்கனவே படம் லீக் ஆகி ஒரு கோடிக்கு மேல் பார்த்தது, 3 மணி நேர நீளம் போன்றவற்றால் எழுந்த விமர்சனங்கள் போன்ற காரணங்களால் நான்கு நாட்களுக்கு மேல் படத்திற்கு பெரிய வசூல் இல்லை என சொல்லப்படுகிறது.

    படம் வெளியாகிய 5 நாட்களில் உலகம் முழுவதும் இந்த திரைப்படம் ரூ.217.48 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும், இந்தியாவில் இந்த படம் ரூ.100 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. அதுவும் 5வது நாளான நேற்று ரூ.10 கோடி முதல் 11 கோடி வரை மட்டுமே இந்த படம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது..

  • விஜய்யின் ஜன நாயகன் Deleted Scenes எப்போது ரிலீஸ்?-ன்னு சொன்ன ஹெச்.வினோத்!

    விஜய்யின் ஜன நாயகன் Deleted Scenes எப்போது ரிலீஸ்?-ன்னு சொன்ன ஹெச்.வினோத்!

    பல போராட்டங்களுக்கு பிறகு விஜய் நடித்துள்ள ஜன நாயகன் கடந்த வாரம் வெளியானது. உலகமெங்கும் தளபதியின் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

    இந்த படம் கடந்த நான்கே நாட்களில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது. இது விஜய்யின் சினிமா கரியரில் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் இது தான் கடைசி முறை என்று அனைத்து ரசிகர்களும் தளபதியை தியேட்டருக்கு சென்று பார்த்து அழுதபடி வெளியே வருகிறார்கள். 

    தற்போது, இயக்குநர் வினோத் கொடுத்துள்ள ஒரு பேட்டியில், இந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் மொத்தம் 6 இருப்பதாகவும், அடுத்த வாரத்தில் இருந்து ஒவ்வொன்றாக இதன் தயாரிப்பு நிறுவனமான ‘KVN புரொடக்ஷன்ஸ்’ வெளியிடும் என்றும் அறிவித்துள்ளார்.

  • கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஜன நாயகன் ஹீரோயின்!

    கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஜன நாயகன் ஹீரோயின்!

    தமிழில் ‘ரெட்ரோ, பீஸ்ட், முகமூடி’-ன்னு குறைவான படங்களில் நடித்திருந்தாலும் பூஜா ஹெக்டேவுக்கு ஃபேன்ஸ் அதிகம் தான். அதற்காகவே இவரை ரஜினியின் ‘கூலி’ படத்தில் ‘மோனிகா’ என்ற ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட வைத்தார்கள்.

    Pooja hegde 1

    பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான படம் ‘ஜன நாயகன்’. இதில் இவர் ‘தளபதி’ விஜய்-க்கு ஜோடியாக நடித்துள்ளார். 

    Pooja hegde 2

    இது இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்திருக்கும் இரண்டாவது படம். ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜன நாயகன்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

    Pooja hegde 3

    இதையடுத்து பூஜா ஹெக்டே துல்கர் சல்மானின் ‘ஶ்ரீ ஶ்ரீ’ படத்தில் நடித்து வருகிறார். இன்று இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை லைக்ஸ் போட வைத்துள்ளார்.

    Pooja hegde 4

    Pooja Hegde 5

    Pooja Hegde 6

    Pooja Hegde 7

  • பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்த விஜய் படங்களின் லிஸ்ட்!

    பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்த விஜய் படங்களின் லிஸ்ட்!

    விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ.217.48 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    Jana nayagan mersal bigil

    இதுவரை விஜய் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்த படங்களின் லிஸ்ட்டை பார்ப்போம். அட்லீ இயக்கத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘மெர்சல்’ மற்றும் 2019-ஆம் ஆண்டு வெளியான ‘பிகில்’.

    Sarkar beast varisu

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2018-ஆம் ஆண்டு வெளியான ‘சர்கார்’. நெல்சன் இயக்கத்தில் 2022-ஆம் ஆண்டு வெளியான ‘பீஸ்ட்’. வம்சி பைடிபல்லி இயக்கத்தில் 2023-ஆம் ஆண்டு வெளியான ‘வாரிசு’.

    Master leo the goat

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021-ஆம் ஆண்டு வெளியான ‘மாஸ்டர்’ மற்றும் 2023-ஆம் ஆண்டு வெளியான ‘லியோ’. வெங்கட் பிரபு இயக்கத்தில் 2024-ஆம் ஆண்டு வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்).

  • Jana Nayagan Box Office : 4 நாட்களில் விஜய்யின் ஜன நாயகன் செய்த வசூல் இத்தனை கோடியா?

    Jana Nayagan Box Office : 4 நாட்களில் விஜய்யின் ஜன நாயகன் செய்த வசூல் இத்தனை கோடியா?

    4 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு’ என படங்கள் பண்ணியவர் இயக்குநர் ஹெச்.வினோத்.

    இவரை அழைத்து தனது 69-வது படம், அதுவும் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து ஹிட்டான ‘பகவந்த் கேசரி’ படத்தை ரீமேக் பண்ண சொன்னார் விஜய். வினோத்தும் ஓகே சொல்லி அவர் ஸ்டைலில் கொஞ்சமும், ‘தளபதி’-யின் மாஸுக்கு தகுந்த மாதிரியும் மாற்றி பண்ண படம் தான் ‘ஜன நாயகன்’.

    இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகி விட்டதால், இது தான் சினிமாவில் அவருக்கு கடைசி படம். இதை இயக்கிய பெருமை வினோத்துக்கே சேரும்.

    கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான இப்படத்தில் மமிதா பைஜு, பாபி தியோல், கெளதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். விமர்சன ரீதியாக இந்த படம் பாராட்டை குவிக்கவில்லை என்றாலும், பாக்ஸ் ஆபிஸில் கடந்த 4 நாட்களில் உலக அளவில் ரூ.217.48 கோடி வசூல் செய்திருக்கிறது.

  • வேட்டையன் படத்தின் முதல் 3 நாட்களின் வசூலையாவது தாண்டியதா ஜன நாயகன்?

    வேட்டையன் படத்தின் முதல் 3 நாட்களின் வசூலையாவது தாண்டியதா ஜன நாயகன்?

    ‘தளபதி’ விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ கடந்த ஜூலை 23-ஆம் தேதி தான் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இந்த படம் ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் லீக் ஆகிவிட்டது.

    இருப்பினும் விஜய்யின் படம், அதுவும் அவரின் கடைசி படம் என்பதால் திரையரங்கிற்கு சென்று ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். ஆனாலும், பாக்ஸ் ஆபிஸில் கடந்த மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.171.84 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

    ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கூலி’-யெல்லாம் முதல் 3 நாட்களிலேயே ரூ.318.16 கோடி வசூல் செய்து மாஸ் காட்டியது. ஆனால், ரஜினியின் முந்தைய படமான ‘வேட்டையன்’ முதல் மூன்று நாட்களில் ரூ.149.84 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது.

    இந்த படத்தை இயக்குநர் த.செ.ஞானவேல் தான் இயக்கியிருந்தார். ‘கூலி’ பக்கம் தான் நெருங்க கூட முடியல, அட்லீஸ்ட் ‘வேட்டையன்’ வசூலையாவது தாண்டிட்டோமே என்று விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.