Category: jana nayagan

  • Jana Nayagan Box Office : 11 நாட்களில் ஜன நாயகன் செய்த வசூல் இவ்ளோ தானா?

    Jana Nayagan Box Office : 11 நாட்களில் ஜன நாயகன் செய்த வசூல் இவ்ளோ தானா?

    11 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. தெலுங்கில் ஹிட்டடித்த பாலய்யாவின் ‘பகவந்த் கேசரி’ படத்தின் பட்டி டிங்கரிங் வெர்ஷன் தான் ‘ஜன நாயகன்’.

    இதில் ஹீரோவாக தமிழ்நாடு CM விஜய் நடிக்க, இதை ‘தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை’ போன்ற தரமான படங்களை கொடுத்த இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

    இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே, வில்லன் கதாபாத்திரங்களில் பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளார்கள். ‘தளபதி’-யின் வளர்ப்பு மகள் ரோலில் மலையாள நடிகை மமிதா பைஜு வலம் வந்துள்ளார்.

    கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்தது. தற்போது, இப்படம் கடந்த 11 நாட்களில் உலக அளவில் ரூ.295.92 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

  • Jana Nayagan Box Office : 10 நாளாகியும் 300 கோடியை தொட முடியாத ஜன நாயகன்!

    Jana Nayagan Box Office : 10 நாளாகியும் 300 கோடியை தொட முடியாத ஜன நாயகன்!

    10 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டின் முதல்வரும், முன்னணி நடிகருமான ‘தளபதி’ விஜய் – இயக்குநர் ஹெச்.வினோத் காம்பினேஷனில் உருவாகியுள்ள புதிய படம் தான் ‘ஜன நாயகன்’.

    கடந்த ஜூலை 23-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆன இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கெளதம் மேனன், மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ், நரேன், நிழல்கள் ரவி, பிரியாமணி, பாபி தியோல், ஶ்ரீமன் நடித்துள்ளனர்.

    இந்த படத்துக்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதை ‘KVN புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் வெங்கட்.கே.நாராயணா தயாரித்திருக்கிறார்.

    விஜய்யின் சினிமா கரியரில் இது கடைசி படம் என்பதால், படம் நன்றாக இல்லையென்றாலும் ‘தளபதி’க்காக அவரின் ரசிகர்கள் திரையரங்கு சென்று பார்த்து வருகிறார்கள். தற்போது, இப்படம் கடந்த 10 நாட்களில் உலக அளவில் ரூ.280.50 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

  • பாராட்டு, விமர்சனம் ரெண்டையும் லாவகமாகக் கையாண்டவர் ஜன நாயகன் வினோத்!

    பாராட்டு, விமர்சனம் ரெண்டையும் லாவகமாகக் கையாண்டவர் ஜன நாயகன் வினோத்!

    ஒவ்வொரு படத்திலும் மக்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொல்ல வேண்டும் என்று நினைப்பவர் இயக்குநர் ஹெச்.வினோத். ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு’ ஆகிய ஐந்து படங்களுக்கு பிறகு வினோத் இயக்கியுள்ள ஆறாவது படம் தான் ‘ஜன நாயகன்’. 

    இதில் கதாநாயகனாக நடிகரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் நடித்துள்ளார். கடந்த வாரம் திரைக்கு வந்த இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    ஹெச்.வினோத் குறித்து அவரது நண்பரும், ‘கத்துக்குட்டி, உடன்பிறப்பே’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநருமான இரா.சரவணன் 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் ரிலீஸான நாள். இயக்குநர் ஹெச்.வினோத்தும் நானும் கடற்கரையோரம் அமர்ந்திருந்தோம்.

    Era saravanan theeran valimai

    ஒரே வாழ்த்து மழை. அடித்துக்கொண்டே இருந்தது அவர் போன். எதையும் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் இயற்கை, மரம், மழை எனப் பிரசங்கம் பேசிக் கொண்டிருந்தார் வினோத். தீரனைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இரவு நெடுநேரம் ஆனதால், கடற்கரையோரம் காவல் துறை வாகனம் வந்தது.

    யார் என அதட்டியவர்கள் தீரன் பட இயக்குநர் எனத் தெரிந்து கைகுலுக்கினார்கள். போலீஸ் பட்ற சிரமங்களை அழுத்தமா சொல்லி இருக்கீங்கன்னு பேசுறாங்க சார்… என்றார்கள். அப்போதும் படம் குறித்தோ கதை குறித்தோ வினோத் எதுவும் பேசவில்லை. 

    அஜீத்குமாரின் ‘வலிமை’ ரிலீஸான நேரம். அதேபோல் வினோத்துடன் அமர்ந்திருந்தேன். மாற்று விமர்சனங்கள் கும்மியடித்துக் கொண்டிருந்தன. அப்போதும் இன்றைய அரசியல், இயற்கை, மரங்கள் எனப் பேசிக் கொண்டிருந்தார் வினோத். பாராட்டு, விமர்சனம் என எதையும் இவ்வளவு லாவகமாகக் கையாண்ட ஒருவரை இதுவரை நான் பார்த்ததில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

  • Jana Nayagan Box Office : ஜன நாயகனுக்கு போய் பாக்ஸ் ஆபிஸில் இப்படி ஒரு நிலைமையா?

    Jana Nayagan Box Office : ஜன நாயகனுக்கு போய் பாக்ஸ் ஆபிஸில் இப்படி ஒரு நிலைமையா?

    9 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. அரசியல் என்ட்ரிக்கு முன் விஜய்யின் கடைசி படத்தை இயக்க பல இளம் இயக்குநர்கள் கதை சொன்னார்கள்.

    ஹெச்.வினோத்தே முதலில் வேறு ரெண்டு கதைகளை தான் சொன்னார். ஆனால், விஜய்யோ பாலகிருஷ்ணாவின் தெலுங்கு படமான ‘பகவந்த் கேசரி’-யை தான் சொல்வது போல் மாற்றம் செய்து எடுத்துக் கொடுக்க அன்பு கட்டளையிட்டார்.

    வினோத்தும் விஜய்யை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு, அதுவும் கடைசி படம் என்பதால் ஓகே சொல்லி கதையில் விஜய் சொன்ன விஷயங்களையும், தன்னுடைய ஸ்டைலில் சில விஷயங்களையும் சேர்த்து எடுத்த படம் தான் ‘ஜன நாயகன்’. படம் வெளியாவதற்குள் விஜய் தமிழ்நாட்டின் CM ஆகி விட்டார்.

    கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றியது. பாக்ஸ் ஆபிஸிலும் கடந்த 9 நாட்களில் உலக அளவில் ரூ.268.45 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

  • மீண்டும் தள்ளிப்போகிறதா டாக்ஸிக்?… பாவம்யா ஜன நாயகன் தயாரிப்பாளர்!

    மீண்டும் தள்ளிப்போகிறதா டாக்ஸிக்?… பாவம்யா ஜன நாயகன் தயாரிப்பாளர்!

    ‘தளபதி’ விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை வெங்கட்.கே.நாராயணா தனது ‘KVN புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்தார். இதை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார்.

    இப்படம் பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த ஜூலை 23-ஆம் தேதி தான் ரிலீஸ் ஆனது. வெங்கட்.கே.நாராயணா தயாரித்துள்ள புதிய படம் ‘டாக்ஸிக்’. 

    யாஷ் அப்பா, மகன் என 2 வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். ஆல்ரெடி பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது.

    கடைசியாக வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்தனர். தற்போது, இதன் சாட்டிலைட் மற்றும் OTT ரைட்ஸை இன்னும் யாரும் வாங்கவில்லையாம். இதனால் மீண்டும் படத்தின் ரிலீஸை தள்ளி வைக்கப்போவதாக தகவல் கிடைத்திருக்கிறது.

  • ஜன நாயகன் வசூலை முறியடித்ததா Spider Man Brand New Day?

    ஜன நாயகன் வசூலை முறியடித்ததா Spider Man Brand New Day?

    தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் ‘தளபதி’ விஜய் நடித்த கடைசி படமான ‘ஜன நாயகன்’ கடந்த ஜூலை 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

    ஹெச்.வினோத் இயக்கியிருந்த இந்த படத்தின் முதல் நாள் வசூல் இந்தியாவில் மட்டும் ரூ.50.28 கோடி. இந்த வசூலை ஹாலிவுட் படமான ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) கண்டிப்பாக முறியடித்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    டாம் ஹாலண்ட் ஸ்பைடர் மேன் ரோலில் நடித்திருக்கும் இப்படம் நேற்று (ஜூலை 30-ஆம் தேதி) தான் இந்தியாவில் வெளியானது.

    டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கிய இந்த படத்தின் முதல் நாள் வசூல் இந்தியாவில் மட்டும் ரூ.72.44 கோடியாம். இதன் மூலம் விஜய்யின் ‘ஜன நாயகன்’ வசூலை ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ முறியடித்து மாஸ் காட்டியுள்ளது.

  • Jana Nayagan Box Office : 8-வது நாளில் வெறும் 4.62 கோடி வசூலித்த ஜன நாயகன்!

    Jana Nayagan Box Office : 8-வது நாளில் வெறும் 4.62 கோடி வசூலித்த ஜன நாயகன்!

    8 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. தெலுங்கில் 2023-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் ‘பகவந்த் கேசரி’. 

    இதில் கதாநாயகனாக பாலகிருஷ்ணா நடித்திருந்தார். இதை பிரபல இயக்குநார் அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். இப்படம் டோலிவுட் ரசிகர்களிடையே அமோக வரவேற்பினை பெற்றது.

    இதன் தமிழ் ரீமேக் ரைட்ஸை கைப்பற்றி தான் ‘ஜன நாயகன்’ படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். ‘KVN புரொடக்ஷன்ஸ்: நிறுவனம் தயாரித்துள்ள இதில் ஹீரோவாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடித்துள்ளார்.

    கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான இப்படத்தில் முக்கிய வேடங்களில் பாபி தியோல், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். தற்போது, இந்த படம் கடந்த 8 நாட்களில் உலக அளவில் ரூ.260.25 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

  • Jana Nayagan Box Office : 300 கோடியை நெருங்கிறதுக்கே தள்ளாடும் ஜன நாயகன்!

    Jana Nayagan Box Office : 300 கோடியை நெருங்கிறதுக்கே தள்ளாடும் ஜன நாயகன்!

    7 நாட்களில் ‘ஜன நாயகன்’ செய்த வசூல் தெரியவந்துள்ளது. வெங்கட் பிரபுவின் ‘தி கோட்’ படத்துக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க ஒப்பந்தமான படம் ‘ஜன நாயகன்’.

    இது தான் தனது கடைசி படம் என அப்பவே சொல்லிவிட்டார் இப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். இப்படம் சென்சார் பிரச்சனையில் மாட்டி 6 மாதங்களுக்கு பிறகு கடந்த ஜூலை 23-ஆம் தேதி தான் திரைக்கு வந்தது.

    அதிலும் இது ஆல்ரெடி ஆன்லைனில் லீக்கான படம் என்பதால், பல ரசிகர்கள் இதை பார்த்து விட்டனர். விஜய்-க்காக தான் சிலர் திரையரங்கு சென்று பார்த்து வருகிறார்கள். 

    முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.78.27 கோடி வசூல் செய்தது. அதன் பிறகு எப்படியோ 200 கோடியை தாண்டியது. ஆனால், 300 கோடியை தாண்டுவது கஷ்டம் தான் போல. ஏனெனில், கடந்த 7 நாட்களில் உலக அளவில் ரூ.255.63 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

  • கேரளாவில் இதுவரை ஜன நாயகன் செய்துள்ள வசூல் இவ்ளோவா?

    கேரளாவில் இதுவரை ஜன நாயகன் செய்துள்ள வசூல் இவ்ளோவா?

    கேரளாவில் உள்ள முன்னணி நடிகர்களான மம்மூட்டி, மோகன்லாலுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அதேபோல் தான் அங்கு ‘தளபதி’ விஜய்-க்கும்.

    இவரது படங்கள் அங்கு வெளியானால் FDFS பார்த்து ரசித்து கொண்டாடுவார்கள் ரசிகர்கள். இதனால் கேரளாவிலும் விஜய் படங்கள் அதிக வசூல் செய்வது வழக்கம்.

    கடந்த வாரம் ஜூலை 23-ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ படம் வெளியானது. இந்த படத்தை ‘வலிமை’ இயக்குநர் வினோத் தான் இயக்கியுள்ளார்.

    இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக பாபி தியோலும் நடித்திருக்கிறார்கள். இப்படம் இதுவரை கேரளாவில் மட்டும் ரூ.14.25 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

  • தெலுங்கில் தோல்வியை சந்தித்த ஜனநாயகன்

    தெலுங்கில் தோல்வியை சந்தித்த ஜனநாயகன்

    தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக வெளிவந்துள்ளது ஜனநாயகன். ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜயுடன் போஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த பொங்கலுக்கே வெளியாக வேண்டிய இப்படம் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் காலதாமதாகி கடந்த வாரம் 23ம் தேதி வெளியானது. பொதுவாகவே விஜௌ படங்கள் வெளியானால் ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழாவாக கொண்டாடுவார்கள். அதிலும் ஜன நாயகன் கடைசி படம் என்றால் சொல்லவா வேண்டும்? . தமிழகமெங்கும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியானது. தமிழில் இதுவரை ரூ. 220 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கேரளவிலும் இப்படம் நல்ல வசூலை பெற்றுள்ளது. ஆனால் தெலுங்கில் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.  ஜனநாயகன் தெலுங்கில் பெரிய வெற்றியை பெற்ற பாலகிருஷ்ணா நடித்த பகவத் கேசரி படத்தின் ரீமேக் என்பதால் ஆந்திர  ரசிகர்கள் படத்தினை பார்க்க பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறுகிறார்கள்.