Category: photos

  • குட்டிப்பாப்பா தோத்துடும்!.. குட்டி கவுனில் பிக் பாஸ் பிரபலம் பண்ணும் அட்ராசிட்டி!.

    குட்டிப்பாப்பா தோத்துடும்!.. குட்டி கவுனில் பிக் பாஸ் பிரபலம் பண்ணும் அட்ராசிட்டி!.

    நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்டுள்ள புதிய க்ளாமர் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஸ்டைலிஷ் மற்றும் மாடர்ன் தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர். பலரும் அவரது அழகையும், ஃபிட்னஸையும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    aish

    மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா தத்தா, தமிழ் சினிமாவில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘பாயும் புலி’, ‘ஆறாது சினம்’, ‘சத்ரியன்’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’, ‘மிலிர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    aish

    இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது விஜய் டிவியின் ‘பிக் பாஸ் தமிழ்’ சீசன் 2 நிகழ்ச்சிதான். அந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட அவர்,  இறுதிப்போட்டி வரை முன்னேறி ரன்னர்-அப் இடத்தைப் பிடித்ததும் அவரது திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

    datta

    பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் போட்டோஷூட்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா தத்தா, சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது கவர்ச்சியான மற்றும் ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

  • ஐயோ!.. எவ்ளோ க்யூட்டா பர்த்டே கொண்டாடியிருக்காரு அஞ்சலி!.. வைரலாகும் போட்டோஸ்!..

    ஐயோ!.. எவ்ளோ க்யூட்டா பர்த்டே கொண்டாடியிருக்காரு அஞ்சலி!.. வைரலாகும் போட்டோஸ்!..

    தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகையான அஞ்சலி, நேற்று தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய நிலையில், அந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘கலகலப்பு’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் அஞ்சலி. கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நடிகையாக அறியப்படும் அவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறார்.

    anja

    சமீபத்தில் பல்வேறு மொழித் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வரும் அஞ்சலி, கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது இயல்பான நடிப்பும், எளிமையான தோற்றமும் ரசிகர்களிடையே தனித்த வரவேற்பை பெற்றுள்ளது. 

    இந்நிலையில், அஞ்சலி தற்போது நடிகர் விஷாலுடன் நடித்துக்கொண்டிருக்கும் மகுடம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது. மேலும், வெகு நாளாக வெளியாகமல் இருக்கும் ஏழு கடல் ஏழு மலை படம் இந்த வருடமாவது வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    anjal

    கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களுடன் அவர் வெளியிட்ட பதிவில், “என் பிறந்தநாளில் நீங்கள் காட்டிய அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நீங்கள் அனைவரும் என் நாளை இன்னும் சிறப்பானதாக மாற்றிவிட்டீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அஞ்சலியின் இந்த பதிவு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

    anjali

    பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அஞ்சலியின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவரது புதிய திரைப்பட அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  • துள்ளுவதோ இளமை ஷெரின் இப்போ எப்படி இருக்காரு பாருங்க!.. கிளாமர் ரொம்பவே தூக்கல்!..

    துள்ளுவதோ இளமை ஷெரின் இப்போ எப்படி இருக்காரு பாருங்க!.. கிளாமர் ரொம்பவே தூக்கல்!..

    பிக் பாஸ் பிரபலமான நடிகை ஷெரினுக்கு படங்கள் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் இணையத்தில் படு அக்டிவாக இருந்து வருகிறார். மேலும்,தற்போது அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

    இந்திய மாடல் மற்றும் நடிகையான ஷெரின், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002-ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்த ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தின் வெற்றி அவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து ‘விசில்’, ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘உற்சாகம்’, ‘பூவா தலையா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். 

    sherin

    2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ் தமிழ் சீசன் 3’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். நிகழ்ச்சிக்குப் பிறகும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஷெரின், தனது புகைப்படங்கள் மற்றும் பயண அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

    இந்த நிலையில், சமீபத்தில் கபிபாராக்களுடன் (Capybaras) எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் அவர் பதிவிட்டுள்ள கருத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    sher

    அந்த பதிவில், “அவர்கள் என்னைப் பற்றிக் கவலைப்படவோ அல்லது என் மீது கவனம் செலுத்தவோ இல்லை என்றாலும், அது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. கபிபாராக்களால் புறக்கணிக்கப்பட்டது கூட ஒரு மாயாஜால உணர்வைத் தந்தது” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

    ஷெரினின் இந்த பதிவு மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவரது பதிவுக்கு லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர்.

  • உச்சகட்ட கவர்ச்சியில் பேச்சுலர் ஹீரோயின்!.. கோட் மோடுக்கு போன திவ்ய பாரதி!..

    உச்சகட்ட கவர்ச்சியில் பேச்சுலர் ஹீரோயின்!.. கோட் மோடுக்கு போன திவ்ய பாரதி!..

    ஜி.வி. பிரகாஷ் குமாருடன் செம போல்டாக பேச்சுலர் படத்தில் நடித்து முதல் படம் மூலமாகவே சென்சேஷனலை கிளப்பிய திவ்ய பாரதி, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள தனது புதிய புகைப்படங்களால் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

    பல்வேறு புகைப்படங்கள் மற்றும் ஃபேஷன் பதிவுகள் மூலம் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திவ்ய பாரதி, தனது புதிய தோற்றத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.

    divya

    மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கிய திவ்ய பாரதி, நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த ‘பேச்சுலர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான அவர், தனது முதல் படத்திலேயே கவனிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

    திரைப்படங்களுடன் இணைந்து விளம்பரங்கள், பிராண்ட் புரமோஷன்கள் மற்றும் போட்டோஷூட்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் திவ்ய பாரதி, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

    bharathi

    சமீப காலமாக புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், திவ்ய பாரதி பகிர்ந்துள்ள இந்த புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் பலரும் புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகின்றனர்.

  • பாரதிராஜாவின் நினைவிடத்தில் குழந்தைகளுடன் சினேகன்!

    பாரதிராஜாவின் நினைவிடத்தில் குழந்தைகளுடன் சினேகன்!

    இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மறைவுக்குப் பிறகு அவரை அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்திற்கு அவரது ரசிகர்கள் நேரில் சென்று பிரார்த்தனை செய்து வணங்கி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமான பாடல் ஆசிரியராக இருந்து வரும் சினேகன் தனது மனைவி கன்னிகா மற்றும் இரட்டை பெண் குழந்தைகளுடன் சென்று பாரதிராஜாவை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் .

    snehan kannika

    அப்போது தனது இரு குழந்தைகளையும் கும்பிட வைத்து அவர்களுக்கு பாரதிராஜாவின் அடக்கம் செய்யப்பட்ட மண்ணை நெற்றியில் திலகம் இட்டு வணங்கி கும்பிட்டனர்.  இதுக்கு முன்னர் பாரதிராஜா உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது கூட அவரை நேரில் சென்று கன்னிகாவும் சினேகனும் பார்த்துவிட்டு நலம் விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

  • டைவர்ஸுக்கு பிறகு ஆளே டேக் டைவர்ஷன் எடுத்து அசத்துறாரே!.. ஹன்சிகாவின் செம மாற்றம்!..

    டைவர்ஸுக்கு பிறகு ஆளே டேக் டைவர்ஷன் எடுத்து அசத்துறாரே!.. ஹன்சிகாவின் செம மாற்றம்!..

    தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஹன்ஷிகா, தற்போது திரைப்படங்களுடன் சமூக வலைதளங்களிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன.

    சமீபத்தில் ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வண்ணமான உடையில் ஸ்டைலான தோற்றத்தில் அவர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேபோல் கடந்த சில வாரங்களாக தனது பயண அனுபவங்கள், நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தருணங்களை உள்ளடக்கிய பல பதிவுகளையும் அவர் பகிர்ந்து வருகிறார்.

    hansi

    திரைப்படங்களைப் பொறுத்தவரை, ஹன்சிகா தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். வணிக ரீதியான கதாபாத்திரங்களிலும், வித்தியாசமான கதைகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அவர், தனது நடிப்பு பயணத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சமீபத்திய பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

    6.8 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஹன்சிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கம், அவரது ரசிகர்களுக்கு தினசரி அப்டேட்களை வழங்கி வருகிறது. அழகிய புகைப்படங்கள், உடற்பயிற்சி பதிவுகள், பயண தருணங்கள் என பல்வேறு உள்ளடக்கங்களை பகிர்ந்து வரும் அவர், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறார்.

    hansu

    இதனால் ஹன்சிகாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் ஏராளமான லைக்குகள் மற்றும் கருத்துக்களை பதிவிட்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

  • ரோஸ் ரோஸ் ரோஸ்!.. அழகான ரோஸு நீ!.. ராய் லக்‌ஷ்மி பார்த்து சூடான இணையம்!..

    ரோஸ் ரோஸ் ரோஸ்!.. அழகான ரோஸு நீ!.. ராய் லக்‌ஷ்மி பார்த்து சூடான இணையம்!..

    தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான ராய் லக்‌ஷ்மி, தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள புதிய கவர்ச்சியான புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள ராய் லக்‌ஷ்மி தமிழில் கற்க கசடற, தாம் தூம், மங்காத்தா, அரண்மனை, சௌகார் பெட்டை, நீயா 2 உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். குறிப்பாக அஜித் நடித்த மங்காத்தா திரைப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பெரும் கவனத்தை பெற்றது. அதன்பிறகு பல்வேறு மொழிகளில் தொடர்ந்து பிஸியாக நடித்துவருகிறார்.

    rai

    சமீபகாலமாக திரைப்படங்களுடன் இணைந்து சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ராய் லக்‌ஷ்மி, தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் பயண அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் அடிக்கடி வைரலாகி வருகின்றன.

    laksh

    பின்க் நிறத்தில் உள்ள ஸ்டைலான உடையில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. ரசிகர்கள் பலரும் அவரது அழகு, உடலமைப்பு மற்றும் இளமையான தோற்றத்தை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    rl

    மேலும், தற்போது வெளியாகியுள்ள அவரது புதிய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் “வயது ஏற ஏற அழகு கூடிக்கொண்டே செல்கிறது” என்று கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

  • அட்ராசக்க!.. ஐஸ்வர்யா ராஜேஷ் என்னம்மா கிளாமர் தூக்கலா இருக்காரு!..

    அட்ராசக்க!.. ஐஸ்வர்யா ராஜேஷ் என்னம்மா கிளாமர் தூக்கலா இருக்காரு!..

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள புதிய கவர்ச்சியான புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

    தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளையும், வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீப காலங்களில் பெண்களை மையப்படுத்திய பல படங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் பாராட்டுகளை பெற்றுள்ளார். மேலும், 2025-ஆம் ஆண்டு வெளியான வெங்கடேஷ் நடித்த சங்காரந்திகி வஸ்துனம் திரைப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    rajesh

    ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல முக்கியமான திரைப்படங்களில் நடித்துவருகிறார். அவற்றில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் துருவ நட்சத்திரம். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்த உளவு த்ரில்லர் திரைப்படத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ள நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

    பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் சில புதிய படங்களிலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    aishw

    தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் அவரது அழகு மற்றும் ஸ்டைலை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும்,  அவர் நடித்துள்ள அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகளையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

  • பிக் பாஸ் வர்ஷினியா இது?.. ஜிம்மில் சும்மா வெறித்தனமா போஸ் கொடுத்து இருக்காங்களே!..

    பிக் பாஸ் வர்ஷினியா இது?.. ஜிம்மில் சும்மா வெறித்தனமா போஸ் கொடுத்து இருக்காங்களே!..

    பிக் பாஸ் மூலம் பிரபலமான வர்ஷினி வெங்கட் தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் ஜிம்மில் எடுத்த புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர், இந்த புகைப்படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார்.

    ஜிம்மில் எடுத்த இந்த லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு முகத்தைக் காட்டாமல் போஸ் கொடுத்துள்ள வர்ஷினியின் தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகள் குவிந்துள்ளன.

    venkat

    வர்ஷினி முதலில் தொகுப்பாளராகவும், மாடலாகவும் தனது பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட வாய்ப்புகள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். குறிப்பாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் வர்ஷினி, தனது தினசரி வாழ்க்கை, பயணம், ஃபேஷன் மற்றும் உடற்தகுதி தொடர்பான பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். குறிப்பாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், உடற்பயிற்சியையும் ஊக்குவிக்கும் பதிவுகள் அவரது பக்கங்களில் அதிகம் இடம்பெறுகின்றன.

    varsh

    திரையுலகிலும் தனது இடத்தை வலுப்படுத்தும் முயற்சியில் இருக்கும் வர்ஷினி, புதிய திரைப்பட மற்றும் இணையத் தொடர் வாய்ப்புகளுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவரது அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

    தற்போது ஜிம்மில் இருந்து வெளியான இந்த புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “ஃபிட்னஸ் கோலில் கலக்கும் வர்ஷினி” என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

  • விவாகரத்துக்குப் பிறகு ஃப்ரீயா டிரெஸ் போடும் ஹன்சிகா!.. எவ்ளோ ஃப்ரீன்னு நீங்களே பாருங்க!..

    விவாகரத்துக்குப் பிறகு ஃப்ரீயா டிரெஸ் போடும் ஹன்சிகா!.. எவ்ளோ ஃப்ரீன்னு நீங்களே பாருங்க!..

    கணவரை பிரிந்து விவாகரத்து செய்த நிலையில், ஹன்சிகா மோத்வானி மீண்டும் தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களால் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளார். 

    குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தைத் தொடங்கிய ஹன்சிகா, பின்னர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். தமிழ் ரசிகர்களுக்கு “எங்கேயும் காதல்”, “வேலாயுதம்”, “ஒரு கல் ஒரு கண்ணாடி”, “சிங்கம் 2”, “அரண்மனை” உள்ளிட்ட படங்கள் மூலம் மிகவும் பரிச்சயமான முகமாக மாறியுள்ளார்.

    hansika

    தற்போது ஹன்சிகா தனது திரைப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில மாதங்களில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான செய்திகள் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டாலும், அதுகுறித்து விரிவாக விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தனது வேலை மற்றும் தனிப்பட்ட அமைதிக்கே முன்னுரிமை கொடுத்து வருவதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    மேலும், விவாகரத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் நேர்மறையான பதிவுகளை பகிர்ந்து வந்த ஹன்சிகா, அமிர்தசரஸில் உள்ள Golden Temple கோவிலுக்குச் சென்று ஆன்மிக தரிசனம் செய்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். அந்த பதிவுகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

    இந்நிலையில், சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் வெள்ளை நிற  சட்டையுடன் குட்டை டவுசர் அணிந்து ஸ்டைலான தோற்றத்தில் வெளியிட்டுள்ள  அவரது புதிய ஸ்டைலிஷ் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. திரைத்துறையிலும் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா, தனது அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.