Category: photos

  • ஸ்டைலிஷ் லுக்கில் ரசிகர்களை மயக்கிய ராஷி கன்னா… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

    ஸ்டைலிஷ் லுக்கில் ரசிகர்களை மயக்கிய ராஷி கன்னா… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

    நடிகை ராஷி கன்னா, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அவர், தற்போது வெளியிட்டுள்ள புதிய கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.

    rasi

    மாடலிங் துறையின் மூலம் தனது பயணத்தை தொடங்கிய ராஷி கன்னா, பின்னர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்க மறு’, ‘அயோக்யா’, ‘சர்தார்’, ‘அரண்மனை 3’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தனது இயல்பான நடிப்பு, கவர்ச்சியான திரை தோற்றம் மற்றும் பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் திறமையால் தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

    rashi

    தற்போது ராஷி கன்னா, நடிகர் ரஜினிகாந்துடன் ‘தர்மன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார்.

    rk

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘தர்மன்’ திரைப்படம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், ஸ்டைலிஷ் தோற்றத்தில் வெளியான ராஷி கன்னா  புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை குவித்து வருகின்றனர். “கார்ஜியஸ்”, “பியூட்டிஃபுல்”, “குயின்” என பலரும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

  • சோக்கா இருக்காரே சோபிதா துலிபாலா!.. அந்த ஷேப்புக்கே நாக சைதன்யா ஃபிளாட்டு!..

    சோக்கா இருக்காரே சோபிதா துலிபாலா!.. அந்த ஷேப்புக்கே நாக சைதன்யா ஃபிளாட்டு!..

    நாக சைத்தன்யாவின் இரண்டாவது மனைவியான நடிகை சோபிதா துலிபாலா, தனது புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் மீண்டும் சமூக வலைதளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஃபேஷன் மற்றும் சினிமா என இரு துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள அவர், இந்த முறை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன.

    தங்க நிற வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட ஆடையில் சோபிதா தோன்றியுள்ள இந்த போட்டோஷூட்டில், முதுகு திறந்த வடிவமைப்பு, நுணுக்கமான எம்பிராய்டரி அலங்காரங்கள், இடுப்பை ஒட்டிய ஆபரணங்கள் மற்றும் நீளமாக விரிந்த கூந்தலுடன் அவர் காட்சியளித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    shobi

    மாடலாக தனது பயணத்தைத் தொடங்கிய சோபிதா துலிபாலா, அனுராக் கஷ்யப் இயக்கிய ‘ராமன் ராகவ் 2.0’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சோபிதா, அதன் பின்னர் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் பெற்றார். மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

    dulipala

    அமேசான் பிரைம் வீடியோவின் ‘Made in Heaven’ வெப் தொடரில் தாரா கண்ணா கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றது. அதேபோல் ‘The Night Manager’, ‘Major’, ‘Kurup’ மற்றும் ஹாலிவுட் திரைப்படமான ‘Monkey Man’ ஆகிய படைப்புகளிலும் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

    சினிமாவில் மட்டுமல்லாமல், ஃபேஷன் உலகிலும் தொடர்ந்து புதிய தோற்றங்களால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் சோபிதா துலிபாலாவின் இந்த புதிய போட்டோஷூட் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

  • கோல்ஃப் கிளப்பில் போட்டோஷூட் நடத்திய Om ஹீரோயின்!

    கோல்ஃப் கிளப்பில் போட்டோஷூட் நடத்திய Om ஹீரோயின்!

    ‘கிஸ்’ என்ற கன்னட படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ஶ்ரீலீலா. அதன் பிறகு கன்னடம் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்தார்.

    Sreeleela 1

    குறிப்பாக விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தின் ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷனான ‘பகவந்த் கேசரி’-யில் இவர் தான் மமிதா பைஜு கேரக்டரில் நடித்திருந்தார்.

    Sreeleela 2

    சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ மூலம் கோலிவுட்டிலும் ஶ்ரீலீலா என்ட்ரி ஆனார். இப்போது இவர் ‘ஓம்’ என்ற தமிழ் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

    Sreeleela 3

    இதில் ஹீரோவாக தனுஷ் தான் நடிக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இன்று ஶ்ரீலீலா கோல்ஃப் கிளப்பில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார்.

    Sreeleela 4

  • கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஜன நாயகன் ஹீரோயின்!

    கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஜன நாயகன் ஹீரோயின்!

    தமிழில் ‘ரெட்ரோ, பீஸ்ட், முகமூடி’-ன்னு குறைவான படங்களில் நடித்திருந்தாலும் பூஜா ஹெக்டேவுக்கு ஃபேன்ஸ் அதிகம் தான். அதற்காகவே இவரை ரஜினியின் ‘கூலி’ படத்தில் ‘மோனிகா’ என்ற ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட வைத்தார்கள்.

    Pooja hegde 1

    பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியான படம் ‘ஜன நாயகன்’. இதில் இவர் ‘தளபதி’ விஜய்-க்கு ஜோடியாக நடித்துள்ளார். 

    Pooja hegde 2

    இது இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்திருக்கும் இரண்டாவது படம். ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜன நாயகன்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

    Pooja hegde 3

    இதையடுத்து பூஜா ஹெக்டே துல்கர் சல்மானின் ‘ஶ்ரீ ஶ்ரீ’ படத்தில் நடித்து வருகிறார். இன்று இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை லைக்ஸ் போட வைத்துள்ளார்.

    Pooja hegde 4

    Pooja Hegde 5

    Pooja Hegde 6

    Pooja Hegde 7

  • சொக்க வைக்கும் பேரழகில் ‘சேயோன்’ பட ஹீரோயின்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

    சொக்க வைக்கும் பேரழகில் ‘சேயோன்’ பட ஹீரோயின்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

    ஹிந்தியில் 2 படங்களில் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்த நடிகை பாக்யஶ்ரீ போர்ஸ், 2024-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘Mr.பச்சன்’ என்ற படம் மூலம் ஹீரோயினாக நடித்தார்.

    Bhagyashri Borse 1

    இதில் ஹீரோவாக ரவி தேஜா நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பாக்யஶ்ரீ போர்ஸ், விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ மற்றும் துல்கர் சல்மானின் ‘காந்தா’ ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

    Bhagyashri Borse 2

    இப்போது இவர் சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் தான் இயக்கி வருகிறார். 

    Bhagyashri Borse 3

    இதன் படப்பிடிப்பு டாப் கியரில் நடந்து வருகிறதாம். தற்போது, பாக்யஶ்ரீ போர்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டிருக்கிறார். 

    Bhagyashri Borse 4

  • புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் ‘புஷ்பா’ பட நடிகை!

    தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் அனசுயா பரத்வாஜ். அங்கு ‘க்ஷனம், காயத்ரி, ரங்கஸ்தலம், யாத்ரா’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

    Anasuya bharadwaj 1

    முன்னணி தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் – இயக்குநர் சுகுமார் காம்பினேஷனில் வெளியான ‘புஷ்பா 1 & 2’ ஆகிய இரண்டு படங்களிலும் அனசுயா பரத்வாஜ் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

    Anasuya bharadwaj 2

    இவர் சந்தீப் கிஷன் – ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இணைந்து நடித்த தமிழ், தெலுங்கு பைலிங்குவல் படமான ‘மைக்கேல்’-லிலும் நடித்திருந்தார்.

    Anasuya bharadwaj 3

    தற்போது, அனசுயா பரத்வாஜ் கைவசம் மூன்று படங்களை வைத்திருக்கிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டிருக்கிறார்.

    Anasuya bharadwaj 4

    Anasuya bharadwaj 5

    Anasuya bharadwaj 6

  • இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… இளசுகளிடம் அதிக லைக்ஸ் அள்ளும் ‘BLAST’ ஹீரோயின்!

    இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… இளசுகளிடம் அதிக லைக்ஸ் அள்ளும் ‘BLAST’ ஹீரோயின்!

     

    ‘ஓம் பீம் புஷ்’ என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி முகுந்தன். அதன் பிறகு தமிழில் ‘பிக் பாஸ்’ கவின் நடித்த ‘ஸ்டார்’ மூலம் என்ட்ரி ஆனார்.

    சமீபத்தில், ப்ரீத்தி முகுந்தன் நடித்த ‘பிளாஸ்ட்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ரிலீஸ் ஆனது. இதில் ப்ரீத்தி முகுந்தனுக்கு அப்பாவாக ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அம்மாவாக அபிராமி நடித்திருந்தனர்.

    அறிமுக இயக்குநர் சுபாஷ்.கே.ராஜ் இயக்கிய இந்த ஆக்ஷன் படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால், OTT-யில் பார்த்தவர்கள் புலம்பத்தான் செய்தார்கள்.

    அடுத்ததாக ப்ரீத்தி முகுந்தன் கைவசம் நான்கு படங்கள் வைத்திருக்கிறார். தற்போது, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார்.

     

    Blast Preity Mukhundhan 1

    Blast Preity Mukhundhan 2

    Blast Preity Mukhundhan 3

    Blast Preity Mukhundhan 4

    Blast Preity Mukhundhan 5

    Blast Preity Mukhundhan 6

  • ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த த்ரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

    ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த த்ரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

    43 வயதானாலும் இன்னும் நடிகை த்ரிஷா தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறார். அவருக்கு உலகமெங்கும் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. 

    ஆரம்பத்தில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த த்ரிஷா, இடையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை டிக் அடித்து நடித்தார். ஆனால், அப்படங்கள் அவர் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

    பின், இவர் தெலுங்கில் நடித்து, தமிழ் மொழியில் டப் செய்யப்பட்ட ‘பிருந்தா’ என்ற வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பாராட்டை குவித்தது. சமீபத்தில், இவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த ‘கருப்பு’ படம் வெளிவந்து ஹிட்டானது.

    தற்போது, நடிகை த்ரிஷா கோவாவில் இருக்கிறார். அங்கு ஒரு சூப்பரான போட்டோஷூட்டும் நடந்திருக்கிறது. அந்த ஸ்டில்ஸை இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

    Trisha 1

     

    Trisha 2

     

    Trisha 3

     

  • த்ரிஷாவுடன் ரோஜா பட ஹீரோயின் மதுபாலா!.. குஷ்பு மகள் திருமணத்தில் கலக்கல் போஸ்!..

    த்ரிஷாவுடன் ரோஜா பட ஹீரோயின் மதுபாலா!.. குஷ்பு மகள் திருமணத்தில் கலக்கல் போஸ்!..

    நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவின் திருமண விழா சமீபத்தில் குடும்பத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    madu

    அந்த வகையில், நடிகை த்ரிஷாவும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அவருடன் ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகை மதுபாலாவும் கலந்து கொண்டார்.

    roja

    திருமண விழாவில் த்ரிஷா மற்றும் மதுபாலா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இருவரும் பாரம்பரிய உடையில் புன்னகையுடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

    roja

    குறிப்பாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு மதுபாலாவை த்ரிஷாவுடன் ஒரே நிகழ்ச்சியில் பார்த்த ரசிகர்கள், “இரண்டு தலைமுறையின் அழகிய நடிகைகள் ஒரே ஃபிரேமில்”, “ரோஜா ஹீரோயின் இன்னும் அதே அழகில் இருக்கிறார்” என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    குஷ்புவின் குடும்ப விழாவில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், த்ரிஷா மற்றும் மதுபாலாவின் ஸ்டைலான தோற்றமும் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

  • மணமகள் அலங்காரத்தில் அசத்திய அவந்திகா சுந்தர்… குஷ்பு பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்!

    மணமகள் அலங்காரத்தில் அசத்திய அவந்திகா சுந்தர்… குஷ்பு பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்!

    நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர் சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகா சுந்தர் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. கோவாவில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    அவந்திகா, சென்னைச் சேர்ந்த ஸ்ரவண் ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது காதல் மற்றும் குடும்ப சம்மதத்துடன் நடைபெற்ற திருமணம் என கூறப்படுகிறது. ஸ்ரவண், மெர்சண்ட் நேவி அதிகாரியாக பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    avan

    அவந்திகா, நடிகை குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியின் மூத்த மகள். வெளிநாட்டில் படிப்பை முடித்த அவர், கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் ஆர்வம் காட்டி வந்தார்.  மேலும், அவந்திகா சுந்தர் தமிழில் தனுஷின் மருமகனான பவிஷுடன் அட்டக்கர் படத்தில் நடித்து வருகிறார்.

    avant

    திருமணத்திற்கு முன்னதாக, குஷ்பு மற்றும் சுந்தர் சி குடும்பத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கிய புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    தற்போது வெளியாகியுள்ள திருமண புகைப்படங்களில் பாரம்பரிய உடையில் மணமக்கள் இருவரும் அழகாக காட்சியளிக்கின்றனர். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், குஷ்பு குடும்பத்தின் இந்த மகிழ்ச்சியான தருணம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.